Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியானது! 2020ம் ஆண்டுக்கான க.பாெ.த உயர்தர (ஏ/எல்) பரீீட்சை முடிவுகள் இன்று (4) சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி சுட்டெண்ணை பயன்படுத்தி தற்போது முடிவுகளை பார்க்க முடியும். அடையாள அட்டை பயன்படுத்தி பார்ப்பவர்கள் காத்திருக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. முடிவை பார்க்க https://newuthayan.com/உயர்தர-பரீட்சை-முடிவுகள்/ 2020 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்­­ படி 64% மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு Digital News Team 2021-05-04T17:33:56 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன. அதன் அடிப்படையில் 64.39 சதவீதமான மாணவர்கள் ப…

    • 20 replies
    • 3.1k views
  2. ஒரே இரவில் கோடிஸ்வரரான இலங்கையர் டுபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை துறையில் பணிபுரிந்த முஹம்மத் மிஷ்பாக் (வயது-36) எனும் இலங்கையர் "Abu Dhabi Big Ticket" சீட்டிலுப்பில் 12 மில்லியன் திர்ஹமை பணப்பரிசாக வென்றுள்ளார். அவர் வெற்றிபெற்ற தொகை இலங்கை ரூபாவின் அடிப்படையில் 64 கோடி ரூபாவாகும் என தெரிவிக்கப்படுகின்றது. குடும்பத்தினருடன் விடுமுறையை கழிக்க இலங்கைக்கு வந்துள்ள அவருக்கு வெற்றி செய்தி தொடர்பான அழைப்பு தன்னுடைய தொலைபேசி ஊடாக வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வெற்றிச்சீட்டுக்காக தனது 20 நண்பர்கள் பங்களித்தாகவும் அதில் தனது பங்கு 600,000 திர்ஹம் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய தந்தையை ஒரு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்த …

    • 4 replies
    • 1.5k views
  3. உலக சுகாதார தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டெட்ரோஸ் அதானோம், (Tedros Adhanom) ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து சூம் (Zoom) தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பலன் கிட்டியுள்ளது. கொவிட் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட நிகழ்ச்சித்திட்டங்களுக்கு உலக சுகாதார தாபனத்தின் பாராட்டுக்களைத் தெரதிவித்த டெட்ரோஸ், அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஜனாதிபதியிடம் கூறினார். முதல் கொவிட் அலைக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்து தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வழங்கிய தலைமைத்துவத்தை டெட்ரோஸ் அதானோம் பாராட்டினார். இதன் போது உலக சுகாதார…

  4. (எம்.மனோசித்ரா) இலங்கையில் நாளாந்தம் இரண்டாயிரத்தை அண்மிக்குமளவில் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். எனினும் தினமும் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது குணமடைந்து வீடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இதனால் வைத்தியசாலைகள் , இடை நிலை பராமறிப்பு நிலையங்களில் சிகிச்சை படுக்கை பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறான நிலையில் இன்றும் ஆயிரத்திற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு , 800 இற்கும் அதிகமானோர் குணமடைந்தனர். கொவிட் அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகள் உள்ளிட்ட சகல கல்வி நிலையங்களையும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேல…

  5. கிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் புதிய கொவிட் 19 மருத்துவ நிலையத்தில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவு தெரிவிக்கின்றது. இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த சிகிச்சை நிலையமானது 230 படுக்கை வசதிகளை கொண்டதாக அமையவுள்ளதாக தெரிவிக்கின்றனர். 200 படுக்கை வசதியுடன் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த கொவிட் 19 சிகிச்சை நிலையமானது இன்று நள்ளிரவு முதல் பணிகளை ஆரம்பிக்கும் நிலையில் தயாராக உள்ளதாகவும், நாளை முதல் நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ச…

  6. -பா.நிரோஸ் கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸே முட்டுக்கட்டையாக இருப்பதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், இந்த விவகாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இராஜதந்திரமாகக் காய் நகர்த்தவே முயற்சிக்குமெனவும் சாடினார். கொரோனா வைரஸ் நிலைமைகள் தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்துரையாற்றிய அவர், “கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என்பது தொடர்பில், 2015 முதலே, பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் உறுதியாக இருக்கிறோம். இதற்காக, மட்டக்களப்பில் பல அமைதிப் போராட்டங்களையும் நடத்தியுள்ளோம்” என்றார…

  7. தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகன் செங்கலடியில் வைத்து ரி.ஐ.டி.யினரால் கைது 32 Views தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் . நேற்றிரவு 8.00 மணியளவில் செங்கலடியில் வைத்து ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் . முகப்புத்தகத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பான பதிவுகள் டக் (tag) செய்யப்பட்டமை – அனுப்பப்பட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். https://www.ilakku.org/?p=48745 ****

  8. இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், ஒரே நாளில் அதிகளவிலான மரணங்கள் கடந்த 4ம் தேதி பதிவாகியிருந்தது. இதன்படி, கடந்த 4ம் தேதியன்று மட்டும் ஒரே நாளில் 13 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இவ்வாறான நிலையில், கடந்த 4 நாட்களில் மாத்திரம் கொரோனா தொற்றினால் 25 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் இரட்டிப்பாக அதிகரித்து வருகின்றது. இலங்கையில் இதுவரை கோவிட் தொற்றினால் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 529 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அ…

  9. மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு நிறுத்தப்படும்! May 6, 2021 முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகார சபையால் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்ட நில சுவீகரிப்பு நிறுத்தப்படும் என துறைசார் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நேற்று (05.05.21) உறுதியளித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் ஏற்பாட்டில் கடந்த மாதம் இடம்பெற்ற சந்திப்பின் அடிப்படையில் நேற்று கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பான விசேட சந்திப்பு நடைபெற்ற போது, மேற்படி விடயமும் பேசப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் அமைச்சர்கள், செயலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு நேரில் சென்று பார்வையிட…

    • 1 reply
    • 858 views
  10. யாழில், உயிரிழந்த முதியவருக்கு... கொரோனா – இறுதிச் சடங்கில் பதற்றம்! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஒருவர் உயிரிழந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ஆராய்ந்து வருவதாக பதில் பணிப்பாளர், மருத்துவர் ச.சிறிபவானந்தராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மாநகரைச் சேர்ந்த 77 வயதுடைய முதியவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு உடனடியாக அன்டிஜன் பரிசோதனை செய்த போது கோரோனா வைரஸ் தொற்று இல்லை என அறியப்பட்டு…

  11. பொய் சொல்லாதவன் என பெயர் எடுத்தவன் நான்-எம்.ஏ.சுமந்திரன் எம்.பி எந்த இடத்திலும் எந்த பொய்யையும் ஒரு தடவை நான் சொன்னது கிடையாது.மக்களுக்கு உண்மையான நிலைமையை கூறுவது என்பது பலருக்கு பலருக்கு என்னை பிடிக்காமல் இருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். மேலும் தனது கருத்தில் சட்டத்தரணி தொழிலிலேயே பொய் சொல்லாதவன் என்ற பெயர் எடுத்தவன் நான் ஆகவே அரசியலில் …

  12. ஆசிய அபிவிருத்தி வங்கி... ஆளுநர் சபையின், தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவாகியுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் 54ஆவது கூட்டம் இன்று (புதன்கிழமை) மெய்நிகர் வழியாக நடைபெற்றது. இதன்போததே, 2021/2022ஆம் ஆண்டுக்கான ஆளுநர் சபையின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஜோர்ஜியாவின் திபிலிசியில் முதலில் நடத்தத் திட்டமிடப்பட்ட வருடாந்த கூட்டம் தற்போதைய கொரோனா தொற்றுநோயால் மெய்நிகர் வடிவத்தில் நடைபெற்றுள்ளது. இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் 55 ஆவது ஆண்டுக் கூட்டம் அடுத்த ஆண்டு கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/20…

    • 3 replies
    • 544 views
  13. நான் புலி என்றால் நீங்கள் நாயா? சாணக்கியன் பதிலடி கிழக்கு மாகாணத்திற்கு பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக்கும் முயற்சிகளில் ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இதன் காரணமாகவே, கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரம் குறைப்பதற்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் சில முஸ்லிம் தலைவர்கள் முயற்சிப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றில் வைத்து நேற்றைய தினம் தெரிவித்துள்ளார். இதேவேளை, அரசாங்கத்தைச் சார்ந்து செயற்படும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் உள்ளிட்ட சில தமிழ் பிரதிநிதிகளும், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் …

    • 4 replies
    • 876 views
  14. முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும் பகுதி மகாவலி அதிகார சபை வசம் 94 Views முல்லைத்தீவு மாவட்டத்தின் சுமார் 10 ஆயிரம் ஏக்கர்களுக்கும் அதிகமான தமிழர்களின் பெரும்பகுதி நிலங்கள், தனிச் சிங்களமயமாகும் அபாயத்தில் உள்ளது. அதாவது முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் 13 கிராம சேவகர் பிரிவுகள் மகாவலி அதிகார சபையின் கீழ் செயல்பட ஏற்பாடு செய்யுமாறு மகாவலி அதிகார சபை வடக்கு மாகாண ஆளுநரிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய வெலிஓயாவில் இருந்து கொக்குளாய் கொக்குத்தொடுவாய், முள்ளியவளை, தண்ணீரூற்று என மாவட்டச் செயலகத்தை அண்மித்த பிரதேசம் வரையில், மகாவலி அதிகார சபைக்கு உட்பட்ட பகுதியென கடந்…

    • 2 replies
    • 624 views
  15. தமிழகத்தின் புதிய ஆட்சிக்கு... சபையில் வாழ்த்துத் தெரிவித்தது கூட்டமைப்பு! தமிழக முதல்வராகப் பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் இலங்கை தமிழ் மக்களின் எதிர்கால இருப்புத் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தி.மு.க. கூட்டணி ஆட்சியமைக்கவுள்ள நிலையில், எதிர்வரும் ஏழாம் திகதி தமிழக முதல்வராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், ஸ்டாலினுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்ப…

    • 1 reply
    • 512 views
  16. யாழ். நகரில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு- முகக்கவசம் அணியாதவர்களுக்கு எச்சரிக்கை! யாழ்ப்பாணம் நகர் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான விழிப்புணர்வுச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோவின் வழிகாட்டுதலில் இந்த நடவடிக்கை இடத்பெற்றது. யாழ். பொலிஸ் நிலையப் பொலிஸார், யாழ். மாநகர சபையின் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி, யாழ். பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்கள் விழிப்புணர்வை மேற்கொண்டிருந்தனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம், தனியார் பேருந்துத் தரிப்பிடம், முச்சக்கரவண்டித் தரிப்பிடம் உள்ளிட்ட இடங்களில் இவ்வாறு கொரோனா விழிப்புணர்வுச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, முகக்கவசம் அணியா…

  17. க.பொ.த. உயர்தரத்தில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியவர்களுக்கு மில்லியன் பெறுமதியான புலமைப்பரிசில்களை வழங்கும் SLIIT 2020 உயர்தரப் பரீட்சையில் பௌதீக விஞ்ஞானம் மற்றும் வர்த்தகத் துறையில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய முதல் மூவருக்கு SLIIT முழுமையான புலமைப் பரிசில்களை வழங்கி கல்விசார் சிறப்பிற்கு வெகுமதியளித்துள்ளது. ஒவ்வொரு புலமைப் பரிசிலும் தலா வருடமொன்றுக்கு கல்விக்கான கட்டணம் மற்றும் வாழ்க்கைக்கான கொடுப்பனவான 160.000 ரூபா வீதம் நான்கு வருடங்களை உள்ளடக்கியதாகவிருக்கும். இந்தப் புலமைப்பரிசில்களின் மொத்தப் பெறுமதி பொறியியல் மாணவர் ஒருவருக்கு 2.6 மில்லியன் ரூபாவும் கணினி மற்றும் வர்த்தகப்பிரிவு மாணவர்களுக்கு 1.72 மில்லியன் ரூபாவுமாகும். வெளிநாட்டு பல்கலைக்…

  18. இலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை http://static2.tamilmirror.lk/assets/uploads/image_2f01cffddc.jpg2021ஆம் ஆண்டில் உலக சிறுநீரக தினத்தில், உலகத்தரம் வாய்ந்த டயாலிசிஸை வழங்க, உலகின் முதற்தர டயாலிசிஸ் நிறுவனத்துடன் இணைந்து கொண்டது. வலமிருந்து இடமாக: டொக்டர் அமல் ஹர்ஷா டி சில்வா (முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், சுகாதார சேவைகள்), பேராசிரியர் ரெஸ்வி ஷெரிப் (ஆலோசகர் நெப்ராலஜிஸ்ட், தலைவர், மேற்கு மருத்துவமனை), டொக்டர் ருஷ்டி நிஜாம் (ஆலோசகர் நெப்ராலஜிஸ்ட், களுபோவில போதனா வைத்தியசாலை) மருத்துவ தாதி குமாரி ராஜபக்ஷ (வெஸ்டர்ன் ஹாஸ்பிடலின் டயாலிசிஸ் பிர…

    • 0 replies
    • 507 views
  19. ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் முதல் தொகுதி இலங்கையை வந்தடைந்தது! ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி இலங்கையை வந்தடைந்துள்ளது. இதன்படி, முதல் தொகுதியில் 15 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் நேற்றிரவு இலங்கையை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இந்தத் தடுப்பூசிகளை பொறுப்பேற்பதற்காக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றிருந்ததுடன் அவரால் பொறுப்பேற்கப்பட்ட தடுபூசிகள் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை நாட்டின் அவசரத் தேவைக்காகப் பயன்படுத்துவதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. இதற்கமைய, ஏழு மில்லியன் த…

    • 0 replies
    • 459 views
  20. வை எல் எஸ் ஹமீட்-எதிர்வரும் 4ம் திகதி கல்முனை உப பிரதேச செயலகத் தரமுயர்த்தல் தொடர்பான கூட்டம் நடைபெற இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பிரஸ்தாபிக்கப்படுவதைக் காணமுடிகிறது. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக திரு சாணக்கியன் பா உ அவர்களும் இந்த விடயம் தொடர்பாக அதீத அக்கறை காட்டுவதை சமூக வலைத்தளங்களில் காணமுடிகிறது.தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்றவகையில் உங்கள் அக்கறையில் யாரும் தவறுகாண முடியாது. அது உங்களது கடமையும்கூட. ஆனால் கல்முனையில் என்ன பிரச்சினை என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? என்பதுதான் எனது இந்த ஆக்கத்திற்கான அடிப்படையாகும்.தாங்கள் கல்முனைத் தமிழ்த்தரப்பினரிடம் இது தொடர்பாக அடிக்கடி கலந்தாலோசனை நடாத்துகின்ற செய்திகளைக் காணமுடிகிறது. அதில் தவறில்லை. ஆனால், அ…

    • 0 replies
    • 525 views
  21. கட்டாய இடமாற்றத்தை ஏற்க வேண்டாம் – தமிழர் ஆசிரியர் சங்கம்! May 3, 2021 ஆசிரிய இடமாற்ற சுற்றறிக்கைக்கு மாறாக ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது சட்டவிரோதமானது. இதனை ஆசிரியர்கள் ஏற்கத்தேவையில்லை என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. அது தொடர்பில் குறித்த ஆசிரியர் சங்கம் தெரிவிக்கையில் , சில வலயக்கல்விப் பணிப்பாளர்கள் தமக்குத் தேவையானவர்களுக்கு அவர்கள் விரும்புகின்ற பாடசாலைகளை வழங்குவதற்காக ஏனைய ஆசிரியர்களை கட்டாய இடமாற்றம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற 2007/20 எனும் இலக்கம் கொண்ட சுற்றறிக்கையிலோ, தாபன விதிக்கோவையிலோ எந்த ஏற்பாடுகளும் இல்லை. இவ்விடயம் பல ஆசிரியர்களுக்கு தெரிந்திராததால் வலயக் கல்விப்பணிப்பாளர்களின் தன்னிச்சை…

    • 1 reply
    • 420 views
  22. காங்கேசன்துறையில்... புத்தர் சிலையை, உடைத்ததாக இளைஞன் கைது! யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் புத்தர் சிலையை உடைத்ததாக இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம், கீரிமலை நல்லிணக்க புரம் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் இருந்த புத்தர் சிலையை உடைத்த இளைஞன் அருகில் காணப்பட்ட பழைய இரும்புகளையும் சேகரித்துள்ளார். புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிந்துகொண்ட காங்கேசன்துறை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதிக்கு விரைந்து சிலையை உடைத்த இளைஞனைக் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட இளைஞன் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். https://athavann…

  23. இணையதளங்களில் கூறப்படும் கொரோனா தொற்றுக்கான ஆயுள்வேத மருந்து வகைகளை பயன்படுத்த வேண்டாம் இணையதளங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கான ஆயுள்வேத மற்றும் சுதேச மருந்து வகைகளை பயன்படுத்த வேண்டாம் என சுதேச வைத்திய மேம்பாட்டு கிராமிய மற்றும் ஆயர்வேத வைத்தியசாலை மற்றும் சமுதாய சுகாதார இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகர வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/104853

  24. பூஜித், ஹேமசிறி ஆகியோருக்கு... எதிராக 800 தகவல்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு! ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர், பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிராகக் கொலை, கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான 800 தகவல்களையே சட்டமா அதிபர் உயர்நீதிமன்றில் முன்வைத்துள்ளார். இந்தத் தகவலை, சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரியும் அரச சட்டவாதியுமான நிஷாரா ஜயரட்ன தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1213924

  25. கடற்பகுதி தீவிர பாதுகாப்பில்- வேறு நாட்டவர்களுக்கு உதவினால் கைது! நாட்டிற்குள் சட்டவிரோத குடியேறிகளைப் படகில் ஏற்றிவரும் இலங்கை மீனவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று நிலையைக் கருத்திற்கொண்டு, இலங்கையின் கடல்பகுதியின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளர். இந்நிலையில், கடல் எல்லையின் ஊடாக இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு வெளிநாட்டவர்களுக்கு உதவி செய்யும் மீனவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என கடற்தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபடும் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வகையான அனுமதிப்பத்திரமும் இரத்துச் செய்யப்படும் எனவும் அந்தத் திணைக்களம் குறிப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.