ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142713 topics in this forum
-
’திட்டமிட்டவாறு யுத்தத்தை ஒழித்தேன்’ - சரத் பொன்சேகா இராணுவத்தில் புதிய நுட்ப பயற்சிகளை அளித்தமையே யுத்த வெற்றிக்கு காரணமெனத் தெரிவித்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, தான் தனிப்பட்ட முடிவுகளையும் பிரயத்தனங்களையும் மேற்கொண்டதனாலேயே, பயங்கரவாத்தை தோற்கடிக்க முடிந்தது என்றார். தெரிவித்தார். நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் இன்று உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், யுத்தத்தை குறிப்பிட்ட காலத்தில் முடிவுக்கு கொண்டுவருவதாக தான் உறுதியளித்தவாறு அதனை முடிவுக்கு கொண்டுவந்தேன். திட்டமிட்ட செயற்பாடுகளே அதற்குக் காரணம் எனவும் கூறினார். அத்துடன், இறுதி யுத்தத்தின்போது 45000 பொதுமக்கள் கொலைசெய்யப்படடதாக முன்வை…
-
- 12 replies
- 1.6k views
-
-
’தீர்வு காணுவோம்’ -டி.விஜிதா “மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையில் தீர்வு காணுவோம்” என, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர், தமது வேட்புமனுவை யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று (21) காலை 8.30 மணியளவில் தாக்கல் செய்தனர். இதன்போது, யாழ்.மாவட்டத்தில் உள்ள 16 உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்பு மனுவைத் தாக்கல் செய்தப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரி…
-
- 0 replies
- 214 views
-
-
’தீவைத்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை’ கடந்த 9ஆம் திகதிக்குப் பின்னர் தீவைத்தல் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட அனைவருக்கு எதிராகவும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/தீவைத்தவர்களுக்கு-எதிராக-கடும்-நடவடிக்கை/175-296230
-
- 0 replies
- 233 views
-
-
நிதர்ஷன் வினோத் துயிலுமில்லத்தில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற மாவட்ட செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கோரியுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் மாவீரர் துயிலுமில்லங்களில் அதன் வளாகத்துள் தங்குமிடங்கள் அமைத்து நிலை கொண்டுள்ள இராணுவத்தினரால் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நினைவு தின நாட்களிலும் பொது நினைவேந்தல் தினத்திலும் தங்களின் கவலைகள் தீர நினைவு கொள்ள முடியாது துன்பப்படுகின்றனர். யுத்தம் முடிந்து 14 ஆண்டுகள் கடந்தும் நினைவேந்தலில் பூரண சுதந்திரம் கிடைக்காமல் பல்வேறு இராணுவ கெடுபிடிகளுக்குள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அவதியுறுகின்றனர். ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு அமைவாக நினைவேந…
-
- 0 replies
- 344 views
-
-
-மு.தமிழ்ச் செல்வன், எஸ்.என்.நிபோஜன் “ஜனாதிபதித் தேர்தல் ஒரு பொறியாகத் தமிழ் மொழிச் சமூகங்களின் முன்னே நிறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் எவரும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களுடைய உரிமைகளுக்கான உத்தரவாதம், பிரச்சினைகளுக்கான தீர்வு, பாதுகாப்பு, சமூக முன்னேற்றம் போன்றவற்றில் துல்லியமான நிலைப்பாடுகள் எதனையும் இதுவரையில் வெளிப்படுத்தவில்லை. இது இதுவரையான வரலாற்றில் நிகழ்ந்திருக்காத ஓர் அபாயகரமான நிலையாகும்” என, சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார். இது குறித்து, அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “கடந்த காலத்தில் நிகழ்ந்த அத்தனை …
-
- 3 replies
- 1k views
-
-
’தென்பகுதியினருக்கு உதவ யாழ். மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்’ -எஸ்.நிதர்ஷன் “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்கு, யாழ்ப்பாண மக்கள் மற்றும் வணிகர்கள் ஆர்வத்துடன் உதவி பொருட்களை வழங்கி வருகின்றனர்” என, தெரிவித்துள்ள யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண, இந்த உதவிகள் ஊடாக இரு மக்களிடையே நல்லிணக்கம் கட்டியெழுப்படும் என்றார். இது தொடர்பில் நேற்று முன்தினம் கருத்துத் தெரிவித்த அவர், “சீரற்ற கால நிலையால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கு வழங்குவதற்றாக, பொலிஸாரும் நிவாரணப் பொருட்களை திரட்டி வருகின்றனர். வடக்கிலும் …
-
- 13 replies
- 1.7k views
- 1 follower
-
-
சட்டரீதியான சிக்கல் இல்லையாயின் தேர்தலை நடத்துவதவற்கான மற்றொரு திகதியை அறிவிக்கவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சுகாதார வழிமுறைகளுக்கமைய தேர்தலை நடத்த தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/தரதலககன-வற-தகத-அறவககபபடம/175-251199 இறுதி தீர்மானம் நாளை பொதுத் தேர்தல் நடத்தப்படும் திகதியை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா? இல்லையா? என்பது குறித்த உயர்நீதிமன்றத்தின் இறுதி அறிவிப்பு நாளை வெளியிடப்படவுள்ளது. இதற்கமைய நாளை பி.ப 3.00 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்படுமென, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார். மனுக்க…
-
- 1 reply
- 417 views
-
-
’தேர்தலுக்குப் பின் புதிய அரசமைப்பு’ நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்குப் பின்னர், நாட்டுக்கு உகந்த புதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவர எதிர்பார்ப்பதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசமைப்பின் 19ஆவது திருத்தம், நாட்டுக்குள் பல சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது என்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போது இடம்பெறும் பிரச்சினைகளும், இந்தப் 19ஆவது திருத்தம் காரணமாகவே ஏற்பட்டுள்ளதென்றும், அவர் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று (09), ஊடக நிறுவனங்களின் பிரதானிகளைச் சந்தித்துக் கருத்துரைக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்…
-
- 0 replies
- 291 views
-
-
’தேர்தல் வந்தாலே மட்டக்களப்பில் இனவாதம்’ தேர்தல் வரப்போகிறது என்றவுடனே, மட்டக்களப்பு மாவட்டத்தில் இனவாதம், இனத்துவேசங்களைப் பற்றிப் பேசி, மக்களிடத்தில் ஒரு குழப்பதை உண்டுபண்ணும் புற்றுநோய், அரசியல் கட்சிகளிடத்தில் காணப்படுகின்றது என, கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டபத்தடி கிராமத்திலுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த 20 மாணவர்களுக்கு 290,000 ரூபாய் நிதியில், முதற்கட்டமாக சைக்கிள் வழங்கும் நிகழ்வு, மண்டபத்தடி விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் நேற்று (16) நடைபெற்றபோது, மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். …
-
- 0 replies
- 408 views
-
-
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ’நமது ஈழநாடு’ நாளிதழின் அச்சகம் சிறிலங்கா சிறப்பு குற்றப் புலனாய்வுக் காவல்துறையினரால் முத்திரையிட்டு மூடப்பட்டுள்ளதுடன் அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். நாவலர் வீதியில் உள்ள ’நமது ஈழநாடு’ அச்சகம் மற்றும் பணியகமே காவல்துறையினரால் மூடப்பட்டுள்ளது. அதன் உரிமையாளரான பொன்னுத்துரை குருதேவ் சிறப்புக் காவல்துறைக் குழுவினால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். சட்டவிரோத பிரசுரங்களை அச்சிட்டதாகக் கூறியே காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. 2002ம் ஆண்டு ஒக்ரோபர் 01ம் திகதி தொடக்கம் ’நமது ஈழநாடு’ நாளிதழ் யாழ்ப்பாணத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டு வந்தது. 2006 ஓகஸ்ட் 20ம் திகதி…
-
- 0 replies
- 719 views
-
-
’நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக உள்ளோம்’ - சி.வி.கே.சிவஞானம் அரசியலமைப்பில் இருக்கும் 13 ஆவது திருத்தத்தை அமுல் செய்ய வேண்டும் என்று கேட்பதிலே சைக்கிள் கட்சியைத் தவிர நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாகத்தானே இருக்கின்றோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று ஊடக சந்திப்பை நடத்திய போதே சி.வி.கே.சிவஞானம் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழத் தமிழர் விடயத்தில் சர்வதேசம் அதீத அக்கறை எடுக்க வேண்டும் என்று சொன்னாலும் அதில் மிக முக்கியமான பணி இந்தியாவுக்கு உண்டு. இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஊடாக அந்தப் பொறுப்புக் கூட இந்தியாவுக்கு இருக்கின்றது. ஆனால், பொதுவாகவே இந்தியத் தரப்பு ஒரு விடயத்தைத் தி…
-
- 3 replies
- 214 views
- 1 follower
-
-
’நாட்டின் கல்வி மட்டத்தில் கடைசி நிலையிலிருந்து முன்னேறுகிறது வடக்கு’ ஆளுநர் தெரிவிப்பு! ’நாட்டின் கல்வி மட்டத்தில் கடைசி நிலையிலிருந்து முன்னேறுகிறது வடக்கு’ ஆளுநர் தெரிவிப்பு! இலங்கையின் கல்வி மட்டத்தில் வடக்கு மாகாணம் 9ஆவது அதாவது கடைசி நிலையிலிருந்து தற்போது முன்னேறிக்கொண்டிருப்பது அண்மை பரீட்சை முடிவுகளின்படி உறுதியாகியுள்ளது என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது வடக்கு மாகாணத்தின் பல கிராம மட்ட பாடசாலைகளின் பரீட்சை முடிவுகள் மிகப்பெரிய நம்பிக்கையைத் தந்துள்ளது. ஏற்கனவே வெளியாகியிருந்த கல்வி உயர்தரப்பரீட்சை முடிவுகளின் பிரகாரம் ஒன்பதாவது இடத்திலிருந்து வ…
-
- 0 replies
- 288 views
-
-
க.கமல் கொரோனா வைரஸ் பரவலை அரசாங்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதெனத் தெரிவித்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, இந்த நிலைமைகளுக்கு மத்தியில் டயஸ்போரா (புலம்பெயர்ந்த தமிழர்கள்) குழுவினர் நாட்டுக்குள் நுழைய முடியாதெனவும் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், தற்போது சமூகத்துக்குள் தொற்றுள்ளவர்கள் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவித்த அவர், கடற்படையினர், தனிமைப்படுத்தப்படுத்தல் முகாம்களுக்குள் உள்ளவர்கள் மாத்திரமே தொற்றுள்ளவர்களாக அடையாளம் காணப்படுகின்றனர் என்றார். அக்குரணை, புத்தளம், உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தது தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள், தற்போது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்ற…
-
- 0 replies
- 562 views
-
-
வடக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்ற ஜனவரி ஏழாம் திகதி முதல் நான் குடியை விட்டுவிட்டேன். என வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்ற தேசிய போதை தடுப்பு வாரத்தின் வட மாகாண நிகழ்வில் கலந்துகொண்ட விழிப்புணர்வு வாகன பேரணியின் இறுதியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் முன்னர் நான் விருந்துபசாரங்களில் கலந்துகொண்டால் மட்டும் மது அருந்துவதுண்டு. அது எனது நண்பர்களுக்கு தெரியும் ஆனால் எப்பொழுது ஆளுநராக பொறுப்பேற்றேனோ அன்றிலிருந்து எந்தவொரு குடியையும் தனிப்பட்ட ரீதியாகவோ, பிரத்தியேகமாகவோ கையில் எடுத்தது கிடையாது. இதுவொர…
-
- 2 replies
- 808 views
-
-
இன்னும் சில தினங்களில் அரச மற்றும் தனியார் துறை பணிகளை மீண்டும் ஆரம்பித்து நாளாந்த நடவடிக்கைகளை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டுவர வேண்டுமென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். தேசிய பொருளாதாரத்தையும் மக்கள் வாழ்க்கையையும் பாதுகாக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் அடுத்த கட்ட பணிகள் சம்பந்தமாக அமைச்சுக்களின் செயலாளர்களுடன,; நேற்று(15) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட சந்திப்பின்போதே, ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடமைகளை தடையின்றி மேற்கொள்ளக்கூடிய வகையில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. மக்கள் ஒன்றுகூடுவதற்கு இடமளிக்காது, உரிய…
-
- 1 reply
- 316 views
-
-
’நினைவு கூர உரிமையுண்டு ஆனால் மீறமுடியாது’ உயிரிழந்த உறவுகளை நினைவு கூருவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு, ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவை யாரும் மீற முடியாது அவ்வாறு மீறியவர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இவ்வாறு கைது .கைது செய்யுமாறு கூட எவரும் கட்டளை பிறப்பிக்கவில்லை.பொலிஸார் தமது கடமையை செய்துள்ளார்கள் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06 விசேட கூற்றை முன்வைத்த போதே இவ்வாறு தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி,புதிய சட்டத்தை உருவாக்க ம…
-
- 0 replies
- 179 views
-
-
COVID-19 தொற்றுக்குள்ளான சடலங்களை அகற்றும் முறை தொடர்பில், பொதுச் சுகாதாரம், தொற்றுநோயியல், மருத்துவம் தொடர்பான சட்டம், சட்ட, மண் பகுப்பாய்வு போன்ற சம்பந்தப்பட்ட நிபுணர்களை உள்ளடக்கிய அணியொன்றுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜயசிங்கவுக்கு இன்று வரையப்பட்ட கடிதத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளரான வைத்தியர் ஹரித அலுத்கேயால் வரையப்பட்ட இக்கடிதத்தின் பிரதிகள், சுகாதாரமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, ஜனாதிபதியின் செயலாளர், பிரதமரின் செயலாளர்களுக்கும் பிரதியிடப்பட்டுள்ளன. http://www.tamilmirror.lk/செய்திகள்/நிபுணர்களுடன்-கலந்துரையாடுக/175-247915
-
- 1 reply
- 393 views
-
-
’நெருக்கடியிலிருந்து விரைவில் மீள முடியாது’ சர்வதேச நாணய நிதியத்திடம் முன்கூட்டியே சென்றிருந்தால், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து சிக்கலின்றி மீண்டெழ முடிந்திருக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வெளியிலிருந்து உதவிகளை பெற்றுக்கொள்வதை தாமதப்படுத்தியமை தவறு எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை விரைவில் வழமைக்கு திருப்ப முடியாது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார். இலங்கையின் சிறந்த நண்பன் என்ற வகையில் சீனா, ஏனைய கடன் வழங்குநர்களிடமிருந்…
-
- 0 replies
- 209 views
-
-
’பகிடிவதைக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை’ பகிடிவதைகள் தொடர்பான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், சந்தேகநபர் ஒருவருக்கு சுமார் 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளன என்று உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், " பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் புதிய மாணவர்களை இலக்கு வைத்து புரியப்படும் பகிடிவதைகள் தொடர்பில் சட்டரீதியான கவனம் செலுத்தப்படும். கடந்த வருடத்தில் கிடைக்கப்பெற்ற 80 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பகிடிவதையுடன் தொடர…
-
- 0 replies
- 329 views
-
-
’பகிஸ்கரிப்பா அல்லது சிவாஜிலிங்கத்துக்கு ஆதரவா?’ தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து கொடுத்த கோரிக்கைகள் எந்தவொரு வேட்பாளரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்திருந்தும் மக்களிடம் தாங்கள் தேசியத்துக்காக பாடுபடுகின்றோம் என்று நாடகம் ஆடுவதற்காக கொடுக்கப்பட்டவை” என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அறிக்கையொன்றையும் இன்று (21) வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து கொடுத்த கோரிக்கைகள் எந்தவொரு வேட்பாளரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்திருந்தும் மக்களிடம் தாங்கள் தேசியத்துக்காக பாடுபடுகின்றோம் என்று நாடகம் ஆடுவதற்காக கொடுக்கப்பட்டவை. …
-
- 0 replies
- 482 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிர், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவது குறித்து, இதுவரையில் எவ்விதத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அந்தத் தேர்தலில், பசில் ராஜபக்ஷ போட்டியிடப் போவதில்லை என்று கூறினார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று (26) நடத்திய சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், “கோட்டாபய ராஜபக்ஷ வருவார் என தீர்மானிக்கவில்லை. பஷில் வருவார் என்றனர். கோட்டாபய ராஜபக்ஷ வருவார் என்றனர். சமல் ராஜபக்ஷ வருவார் என்றனர். குடும்பத்தில் ஒவ்வொருவர் தொடர்பிலும் மிகப் பெரிய கருத்துக்க…
-
- 1 reply
- 808 views
-
-
’படிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில்’ “கண்டி மாவட்டத்தில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுவந்த வீட்டுதிட்டங்களைக்கூட இந்த அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளமையானது பெரும் அநீதியான செயலாகும்”என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். படிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில் என்பதுபோல்தான் இந்த அரசாங்கத்தின் பயணம் அமைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட செயற்பாட்டாளர்களுடன், கண்ட…
-
- 2 replies
- 1.4k views
-
-
Nirosh / 2022 ஜூலை 28 , பி.ப. 07:09 - 0 - 120 FacebookTwitterWhatsApp அவசரக்காலச் சட்டத்தைப் பயன்படுத்தி வன்முறைகளை ஒடுக்குவதற்குப் பதிலாக, பலிவாங்கள் செயற்பாடுகளை ஆரம்பித்து வன்முறைச் சம்பவங்களை அரசாங்கம் நாட்டில் மீண்டும் தூண்டுவதாக ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். கொழும்பில் இன்று (28) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பின் கதவு வழியாக வந்து தவறான வழியில் தான் ஜனாதிபதியாகிருந்தாலும், அவசரக்காலச் சட்டத்தைப் பயன்படுத்தாது நாட்டு மக்கள் கோர…
-
- 0 replies
- 764 views
-
-
’பணயக் கைதியாக புதிய பிரதமர் ரணில்’ ஜனாதிபதி, இந்த இக்கட்டான காலச் சூழலைத் தாண்டுவதற்கு புதிய பிரதமரை பணயக் கைதியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பாங்கில் செயற்படுகின்ற அரசியல் நடவடிக்கையையே தற்பொழுது காண்கின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 19ஆவது திருத்தத்தின் உண்மையான உள்ளடக்கங்களை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து இன்னும் ஆட்சியில் நீடித்து கொள்வதற்கான கபடத்தனமான இந்த ஆட்சிக்குப் புதிய பிரதமரும் இணங்கிப் போவாராக இருந்தால் அவரது நிலைமையும் விபரீதமானதாக ஆகிவிடும் என்றும் எச்சரித்தார். நாகவில்லு (எருக்கலம்பிட்டி) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவும்,இளைஞர் காங்கிரஸும் இணைந்த…
-
- 3 replies
- 443 views
-
-
’பந்துல ஒரு கோமாளி’ புலம் பெயர் தமிழர்களின் அழுத்தத்தாலேயே ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அலரி மாளிகையில் நடைபெற்றக் கலந்துரையாடலைப் புறக்கணித்தாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் மறுத்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பில் நடைபெற்றக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துக்கொள்வதை புலம் பெயர் தமிழ் அமைப்புக்களால் தடுத்து நிறுத்த முடியவில்லையே. ஆனால் எதிர்க்கட்சிகளை நிறுத்திவிட்டனரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுத் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மன…
-
- 0 replies
- 858 views
-