ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
தாமதம் வேண்டாம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 23 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில் இலங்கை தொடர்பாக இரண்டு தினங்கள் விவாதங்கள் நடைபெறவுள்ளன. பூகோள காலக்கிரம மீளாய்வு சம்பந்தமான இலங்கை குறித்த விவாதம் மார்ச் மாதம் 16ஆம் திகதியும் இலங்கை மனித உரிமைகள் நிலைமைகள் மற்றும் ஐ.நா. தீர்மானம் குறித்த விவாதம் 21ஆம் திகதியும் ஜெனிவா மனித உரிமை பேரவையில் நடைபெறவுள்ளன. இதன்போது ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதுடன் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் இலங்கை தொடர்பாக அறிக்கைகளை தாக்கல் …
-
- 1 reply
- 594 views
-
-
’சுமந்திரனுக்கு ஆதரவு வழங்குவது யார்?’ க. அகரன் “தமிழ்ச் சமூகமானது, ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக, பல ஊடகவியலாளர்களைப் பலி கொடுத்திருக்கின்றது. ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் தமிழ் மக்களும் தமிழ் ஊடகவியலாளர்களும் கணிசமான பங்கைச் செலுத்தியிருக்கின்றார்கள். ஆனால், அண்மையில் அரசியலுக்கு வந்த சுமந்திரன், ஊடகங்கள் திருந்த வேண்டும் அல்லது திருத்தப்படுவீர்கள் என்று மிரட்டுவதானது, அதிகாரத்தின் உச்சாணிக் கொப்பிலிருந்து அவர் பேசும் பேச்சாக இருக்கின்றது” என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், இவர் யாருடைய ஆதரவின் பேரில் இத்தகைய மிரட்டல்களை விடுகிறார் எனவும் கேள்வியெழுப…
-
- 0 replies
- 512 views
-
-
தொடர்ச்சியாக தாக்குதல்கள் இடம்பெறவுள்ளது - படைமுகாம்களிற்கு அருகே இருக்க வேண்டாம் - மக்கள் படை வேண்டுகோள் - பாண்டியன் - வுhரசளனயலஇ 20 யுpசடை 2006 19:54 சிங்கள கூலிப்படைக்கு எதிரான எமது தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள தால், சிங்களப் படைகளுக்கு அருகிலோ அல்லது அவர்களது முகாம்களுக்கு அரு கிலோ இருக்க வேண்டாம் என்பதை தயவாக வேண்டுகின்றோம். இவ்வாறு மட்டு - அம்பாறை மாவட்ட பொங்கி எழும் மக்கள் படை வேண்டுகோள் விடுத்துள்ளது. (தவறு திருத்தப்பட்டுள்ளது) எடுத்த சபதம் முடிப்போம் என்ற தலைப்பில் மட்டு அம்பாறை மாவட்ட பொங்கியெழும் மக்கள் படையினால் வெளியிடப்பட்ட அறி;க்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அந்த அறிக்கையில் மேலும் தெரிவி;க்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 957 views
-
-
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 5, 2010 வடமராட்சிக் கிழக்குப் பகுதிகளான அம்பன், குடத்தனை, நாகர்கோவில் பகுதிகளில் தமிழர்களின் தொன்மையை உறுதிப்படுத்தும் புராதனப் பொருட்கள் பலவற்றைக் கண்டெடுத்திருப்பதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொல்லியல்துறை பேராசிரியர் எஸ்.கிருஷ்ணராசா அறிவித்துள்ளார். குறிப்பிட்ட பிரதேசங்களில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்படும் இடங்களில் இத்தகைய பொருட்கள் கண்டெடுக்கப்படுவதாகவும் அவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல்துறை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். அண்மையில் இப்பிரதேசத்தில் பல்வேறு மூலப்பொருட்களால் உருவாக்கப்பட்ட மணிவகைகள், கூரை ஓடுகள், கொல்லர் பட்டறைப் பொருட்கள் போன்ற மரபுரிமைப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 666 views
-
-
சரத் பொன்சேக மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தியதாக குற்றம் சுமத்திய பெண் உயிருடன் இருபதாக அறிவிப்பு. லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடையதாக அறிவிக்கப்பட்ட நபர் உயிருடன் இருப்பதாக குற்றப் புலாய்வாளர் ஒருவரை மேற்கோள்காட்டி லங்கா நியூஸ் என்ற சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. தாக்குதல் நடைபெற்ற இடத்தில் 8 அடையாள அட்டைகள் காணப்பட்டதாகவும் அவற்றில் வவுனியாவைச் சேர்ந்த அனோஜா குகேந்திரராசா என்பருடைய அடையாள அட்டையும் உள்ளங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டைகள் மீட்கப்பட்டதை அடுத்து வவுனியாவுக்கு விரைந்த குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்ட போது தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் பெண் உயிரு…
-
- 1 reply
- 1.4k views
-
-
Oct 12, 2010 / பகுதி: செய்தி / அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கும் இந்து சமுத்திரத்துக்கும் இடையில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கும் இந்து சமுத்திரத்துக்கும் இடையில் இருந்து வந்த நிலப்பகுதி குண்டு வைத்து தகர்க்கப்பட்டு இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நேற்றுக்காலை 8. 30 மணியளவில் இந்த இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. சிறிலங்காவின் தரைப்பகுதிக்குள் அமைக்கப்பட்ட அம்பாந்தோட்டைப் துறைமுகத்துக்குள் வாய்க்கால் ஒன்றின் மூலம் நீர் நிரப்பப்பட்டு வந்தது. இந்தப் பணிகள் முடிவுற்ற நிலையில் கப்பல்களை கொண்டு வரும் வகையில் இந்து சமுத்திரத்துக்கும் துறைமுகத்துக்கும் இடையில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. pathivu
-
- 0 replies
- 733 views
-
-
தேர்தலின் பின்னர் முக்கிய நகர்வுகள்.! ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்பாகவே பொறுப்புக்கூறல் பொறிமுறை குறித்து சில முக்கிய நகர்வுகளை கையாள இலங்கை அரசாங்கம் தயாராகி வருகின்றது. தேர்தல் முடிந்தவுடன் அடுத்தகட்டமாக காணமல்போனோர் சட்டமூலம், பயங்கரவாத திருத்த சட்டம் குறித்து பாராளுமன்றத்தில் ஆராயப்படவுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த வாரம் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் சிவில் அமைப்புகளும், மனித உரிமைகள் குறித்து செயற்பட்டுவரும் நிறுவன தலைவர்கள் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ள நிலையில் ஜெனிவா கூட்டத்தொடரை கையாளும் நகர்வுகள் குறித்து இதில் கலந்துரையாடப்பட்டுள்ளது. தேர்தலின் பின்னர் சில முக்கிய வேலைத்திட்டங்களை கையாளும் வகையிலும் இதில் க…
-
- 0 replies
- 194 views
-
-
ஜெனீவாவை எதிர் கொள்ள... விசேட பொறிமுறையை, தயாரிக்கின்றது அரசாங்கம் – நீதி அமைச்சர். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் கூட்டத்தொடரை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் விசேட பொறிமுறையையொன்றை தயாரித்து வருகின்றது. மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 13ஆம் திகதி ஆரம்பித்து ஒக்டோபர் 7ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் இலங்கையில் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணகத்தை ஏற்படுத்தல் உள்ளிட்ட விடயங்களில் அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் அறிக்கையை சமர்பிக்கவுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுப் பணியகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் …
-
- 0 replies
- 193 views
-
-
இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் மலேசிய மண்ணில் கால்பதிக்க முடியாது. ஏனெனில் அவர் ஒரு ‘துரோகி’ என அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இதுபற்றி மலேசிய இணையத்தளமான ‘பிரீமலேசியாடுடே’ [freemalaysiatoday] என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இது பற்றி கருத்துக்கூறியுள்ள மலேசிய நுகர்வோர் ஆலோசனை சபையைச் சேர்ந்த வரதராசு, ஓராண்டிற்கு முன்னர் 80,000 இலங்கைத் தமிழ் மக்கள் கொல்லப்படுவதில் இந்திய அரசாங்கம் முக்கிய பங்கு வகித்தது. மலேசிய அரசாங்கம் இங்கு மன்மோகன் சிங்கை அழைத்திருக்கக் கூடாது இந்தியப் பிரதமர் கோலாலம்பூரை ஒக்ரோபர் 27 அன்று வந்தடைவார் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவர் அதிகார பூர்வமாக புதிதா…
-
- 0 replies
- 820 views
-
-
Nov 1, 2010 / பகுதி: செய்தி / கொழும்பில் உருவாகின்றது ஈபிள் கோபுரம் பிரான்ஸ் நாட்டின் பெருமைக்குரிய ஈபிள் கோபுரத்தை (Eiffel Tower) போன்ற கோபுரம் ஒன்றை கொழும்பில் அமைப்பதற்கு சிறீலங்கா அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தொலைக்காட்சி அலைவரிசைகளை கடத்தும் முகமாக 350 மீற்றர் உயரமான இந்த கோபுரம் அமுஸ்மன்ற் பூங்காவை அண்மித்த பகுதியில் உருவாக்கப்படவுள்ளதாக சிறீலங்கா அரச தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் இதற்கான அறிக்கை சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாக அவை மேலும் தெரிவித்துள்ளன. இதனிடையே, இது தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒளிபரப்பும் கோபுரம் என சிறீலங்கா அரசு தெரிவித்தாலும், எதிர்காலத்தில் புலனாய்வு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படலாம் என புலம…
-
- 4 replies
- 1.4k views
-
-
துப்பாக்கிப்பிரயோகங்களை கட்டுப்படுத்தாது போராட்டங்களை முடக்க படையினர் குவிக்கப்படுகின்றனர் - சுமந்திரன் By T. SARANYA 01 SEP, 2022 | 09:01 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) ஆங்கிலத்தில் கையெழுத்திட்டுவந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இப்போது சிங்களத்தில் கையெழுத்திடுவதன் மூலம் அவரின் நிலைப்பாடுகளும் மாறி வருவது தெளிவாகின்றது. நாட்டில் தீவிரமடைந்துள்ள துப்பாக்கி பிரயோகங்களை தடுக்க எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மாறாக மக்கள் போராட்டத்தை முடக்க ஆயிரகணக்கில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுப்படுத்தப்படுகிறார்கள் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார். பாரா…
-
- 0 replies
- 162 views
-
-
திங்கட்கிழமை, நவம்பர் 8, 2010 இதுவரை காலமும் தமிழ் மக்கள் தான் மனித உரிமை ஆணைக்குழுவிடம் சென்று வந்துள்ளனர். இந்த மனித உரிமை ஆணைக்குழுவினை பிக்குகளும் சிங்கள அரசியல் வாதிகளும் இதுவரைகாலமும் புறக்கணித்தே வந்துள்ளனர். ஆனால் இப்போ பிக்குகளும் நியாயம் கோரி செல்லும் நிலை வந்துள்ளது. பல்கலைக்கழக பௌத்த பிக்கு மாணவர்கள் முகம்கொடுக்கும் அநீதியான பிரச்சினைகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையரகத்தில் முறைப்பாடொன்றை இன்று காலை சமர்ப்பிக்கவுள்ளதாக கலைப் பீட மாணவர் சங்க செயலாளர் கம்புருபிட்டிய ஞானேஸ்வர தேர தெரிவித்துள்ளார். ஓக்டோபர் 24 ஆம் திகதி பிக்கு மாணவர்களுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்ப்பட்ட பிரச்சினையின் காரணமாக அண்மையில் 17 பிக்கு மாணவர்கள் பல்கலைக்கழ…
-
- 1 reply
- 727 views
-
-
ஐக்கியதேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைக்கிறதா? ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு விலகிச் செல்ல ஜனாதிபதி அனுமதி வழங்க உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்லாட்சி அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிக்கக் கூடாது என சுதந்திரக் கட்சியின் பத்து சிரேஸ்ட அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளனர். அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டமையே கட்சி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படக் காரணமேயாகும் என குறிப்பிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சியில் அமர வேண்டுமென தெரிவி…
-
- 1 reply
- 389 views
-
-
புளொட்டின் யாழ். மாவட்டப் பொறுப்பாளர் சுட்டுக்கொலை யாழ்ப்பாணத்தில் புளொட் அமைப்பின் யாழ். மாவட்டப் பொறுப்பாளர் செபஸ்தியன் இருதயராஜன் (வயது 48 ) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள வீரகேசரி நாளேட்டின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இத்துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளனர். கொல்லப்பட்ட செபஸ்தியன் இருதயராஜன், யாழ். மாட்டின் வீதியைச் சேர்ந்தவர் என்றும் புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினராகவும் செயற்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது நன்றி-புதினம்
-
- 3 replies
- 1.7k views
-
-
-எம்.என்.எம்.ஹிஜாஸ் உலகில் பெண்கள் பல்வேறு சாதனைகள் படைத்துவரும் இக் காலப்பகுதியில் 36 வருடங்களாக பெண்ணொருவர் தனியாக கடலுக்கு சென்று மீன்பிடித்தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றார். புத்தளம், முள்ளிபுரம் கிராமத்தில் வதியும் ஆர். பாத்திமா எனும் 54 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு மீன்பிடித்தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றார். இவர் மாலை 5.00 மணிக்கு கடலுக்கு சென்று, அடுத்த நாள் காலையிலேயே கரை திரும்புவது வழமையாகும். குறித்த பெண் அவருடைய அனுபவம் தொடர்பில் பின்வருமாறு தெரிவித்தார். ''நான் கல்வி கற்கும் போதே மீன்பிடித்தொழிலில் அதிகம் ஆர்வமுடையவளாக இருந்தேன். இதனால் கல்வியில் அதிக அக்கறை காட்டவில்லை. எனது தந்தை மீன்பிடித்தொழில் ஈடுப்பட்டதினால் எனக்கு அத்தொழிலில் அதிக ஆர…
-
- 0 replies
- 508 views
-
-
அண்ணன் ஆதரவு, தம்பி எதிர்ப்பு! நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில் பொதுத் தேர்தல் நடத்துவதே பொருத்தமானது என முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மீயுயர் நீதிமன்றுக்கு இன்று (16) வருகை தந்திருந்தபோது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டுக்காகப் போரிடுவதே தமது கட்சியின் வழக்கமாக இருப்பதாகவும் தொடர்ந்து போரிடத் தயார் என்றும் கூறிய அவர், இந்தச் சூழலில் பொதுத் தேர்தலை நடத்துவதே நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் என்றும் கூறியுள்ளார். முன்னதாக, நாட்டின் நலனை முன்னிட்டு, எதிர்த் தரப்பில் அமர்ந்து அரசுக்கு ஆதரவளிக்கப் போவதாக மஹிந்த ராஜப…
-
- 0 replies
- 442 views
-
-
இலங்கைக்கு எதிராக அணி திரளும் நாடுகள் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான ஆரம்ப பிரேரணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க பல நாடுகள் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஜெர்மன், கனடா, மலாவி, வடக்கு மெசடோனியா மற்றும் மென்டிநிட்ரோ ஆகியவை இந்த நாடுகளில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.adaderana.lk/news.php?nid=165621
-
- 0 replies
- 481 views
-
-
மூன்று கால்களை உடைய தெரு நாய்க்கு அடித்திருக்கும் ராஜ யோகம்! ஞாயிற்றுக்கிழமை, 21 நவம்பர் 2010 09:51 E-mail அச்சிடுக PDF கொழும்பு வீதிகளில் மிகவும் கேவலமான நிலையில் திரிந்து வந்த மூன்று கால்களை மாத்திரம் உடைய தெரு நாய் ஒன்றுக்கு அடித்திருக்கின்றது ராஜ யோகம். அமெரிக்காவை சேர்ந்த பெண் வர்த்தகர்களில் ஒருவர் Tracy Murphy. மிருகங்கள் மீது மிகுந்த காருண்யம் உடையவர். இவரின் வாழ் நாளில் பெரும்பகுதியை மிருகங்களுக்கு உதவி செய்கின்றமையிலேயே செலவு செய்து வருகின்றார். சில வாரங்களுக்கு முன் வர்த்தக விடயமாக கொழும்பு வந்திருக்கின்றார். அப்போது தெருவில் மூன்று கால்களை உடைய இந்நாயை கண்டு இருக்கின்றார். இதன் வயிறு ஒட்டிப் போய் இருந்தது. மிகவும் கேவலமான நிலையில் காட்ச…
-
- 2 replies
- 1.4k views
-
-
ரெலோ மீதான தாக்குதலுக்கு மன்னிப்பு?-காலம் கடந்த ஞானம்! காலம் கடந்த ஞானம் ரெலோ மீதான தாக்குதலுக்கு மன்னிப்புக் கோருகிறேன்! லண்டனில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)வினால் ஒழுங்கு செய்ப்பட்ட கூட்டத்தில் திரு வாசு தேவனின் உரை இந்த மிகவும் முக்கியத்துவமான உரையை மீண்டும் இங்கு பதிவுடுவது அவசியம் என்று கருதுகின்றோம். - த சோதிலிங்கம் ... ரெலோ தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் சக தோழர்கள் புலிகளால் சகோதரப் படுகொலை செய்யப்பட்ட 25வது வருட நினைவஞ்சலிக் கூட்டத்தில் நேுசுனுழு-வாசுதேவன் ஆற்றிய உரை. மகாத்மா காந்தியடிகள் கூறிய ஒரு வாசகம்! கண்ணுக்கு கண் என்பது உலகை குருடாக்கிவிடும். மன்னிப்பு இல்…
-
- 1 reply
- 2.4k views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளரை அலி சப்ரி சந்தித்தார்! அமெரிக்கா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா பொதுச் சபையில் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை சந்தித்து கலந்துரையாடினார். இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும் வலுவான உறவை கட்டியெழுப்புவதாகவும், இதில் முன்னேற்றத்தை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சப்ரி இதன்போது தெரிவித்தார். நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச் சபையின் 77வது அமர்வில் கலந்துகொள்ள சென்றுள்ள அலி சப்ரி, பல நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதன்படி சவுதி அரேபியா, உஸ்பெகிஸ்தான்,…
-
- 0 replies
- 105 views
-
-
-
- 43 replies
- 6.6k views
-
-
கச்சதீவை நோக்கி புறப்பட தயார் நிலையில் உள்ள தமிழக மீனவர்கள் news ராமேஸ்வரத்தில் இருந்து 5000 மீனவ குடும்பங்கள் கச்சதீவு நோக்கி வெள்ளைக்கொடியுடன் தஞ்சம் புக படகுகளுடன் தயார் நிலையில் உள்ளதால் ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பு நிலவி வருகின்றது. யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் சிறைகளில் உள்ள 89 தமிழக மீனவர்களையும், அவர்களுக்குச் சொந்தமான 63 படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ஒகஸ்ட் 2 ஆம் திகதி (இன்று) படகுகளில் வெள்ளைக்கொடி கட்டி குடும்பத்தோடு கச்சத்தீவு செல்ல உள்ளதாகவும் அறிவித்திருந்தனர். இதற்காக, ராமேஸ்வரம் கடற்கரையில் நிறுத்தியுள்ள தங்களது படகுகளில் வெள்ளைக்கொடிகளை…
-
- 0 replies
- 368 views
-
-
யாழில் தனிமையில் வசித்த பெண் மீது தாக்குதல் ; நகைகள் கொள்ளை By DIGITAL DESK 5 28 SEP, 2022 | 10:58 AM யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் தனிமையில் வசித்த பெண்ணொருவரை வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இருவர் தாக்கியதாகவும் , பெண்ணின் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும் வட்டுக்கோட்டை பொலிஸாரின் விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் வீட்டில் தனிமையில் வசித்து வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை (27) அதிகாலை இருவர் வீட்டின் வளாகத்தினுள் பொருத்தப்பட்டு இருந்த சிசிரிவி கமராக்களை உடைத்து சேதப்படுத்திய பின்னர், வீட்டின் பிரதான கதவினை சேதப்படுத்தி வீட்டினுள் அத்துமீறி நுழைந்து பெண் மீது தாக்குத…
-
- 0 replies
- 385 views
- 1 follower
-
-
மகிந்தவிற்கு எதிராக பிரித்தானியாவில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும், சர்வதேச நீதிக்கூண்டில் போர் குற்றங்களுக்காக நிறுத்தப்படவேண்டிய ராஐபக்சவை எந்தவொரு நாட்டிலும் அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் ஜேர்மனி பெர்லினில் அமைந்திருக்கும் பிரித்தானிய தூதரகதுக்கு ஜேர்மன் ஈழத் தமிழர் அவையின் செயற்குழு மனு கொடுப்பதுக்கான ஒழுங்குகள் முன்எடுக்கப்படுகின்றது. யேர்மன் ஈழத் தமிழர் அவையின் அவசர வேண்டுகோள்!!! எம் உயிரினிலும் மேலான புலம் பெயர் தமிழ் ஈழ மக்களே, எம் உரிமைக்கான விடுதலை போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேலான எம் உடன் பிறவா உறவுகளை ஈன இரக்கமின்றி தடை செய்யப்பட்ட குண்டுகளில் இருந்து எரி குண்டுகள், மூலமாக கொன்றழித்து இன்றும் போர் முடிந்து ஒரு …
-
- 0 replies
- 1.4k views
-
-
காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான, இந்திய மருந்துகள் குறித்து சுகாதார அமைச்சின் அறிவிப்பு! காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான கூறப்படும் இந்திய மருந்துகள் இலங்கைக்கு கொண்டுவரப்படவில்லை என்பதில் உறுதியாக உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். காம்பியாவில் கடந்த ஜூலை மாதம் முதல் சிறுநீரக கோளாறு காரணமாக 66 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், இந்திய நிறுவனம் தயாரித்த இருமல் மற்றும் சளிக்கான திரவ மருந்திற்கும் அந்த மரணத்திற்கும் தொடர்பு இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,…
-
- 4 replies
- 820 views
- 1 follower
-