ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
புலம்பெயர்ந்தோரின் பங்களிப்புடன் சமூகப் பணி ஆற்றும் நபர் 2ஆம் மாடிக்கு அழைக்கப்பட்டார். யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை புலோலி மத்தி பகுதியைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரரும் சமூகச் செயற்பட்டாளருமான சிங்கபாகு சிவகுமார் (பொக்சிங் சிவகுமார்) என்பவர் கொழும்பு 2ஆம் மாடிக்கு விசாரணைக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் அழைக்கப்பட்டுள்ளார். குறித்த விசாரணைப்பிரிவுப் பொலிஸார் அவரை இன்று சந்தித்து வாக்குமூலம் பெற்றிருக்கின்றனர். இதுகுறித்து சிவகுமார் கருத்துத் தெரிவிக்கையில், தான் புலம்பெயர் தேசங்களிலிருந்து கிடைக்கும் பணத்தினைக் கொண்டு இங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிந்துவருவதாகவும் அவ்வாறான உதவிகளுக்கான நிதி எவ்வாறு கிடைக்கப்பெறுகின்ற…
-
- 0 replies
- 346 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) எனக்கான பாதுகாப்பை நான் கேட்காத போதும் எனக்கு பாதுகாப்பு வழங்கிய அரசாங்கம் இப்போது எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை நீக்கியது ஏன் என சபையில் கேள்வி எழுப்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன், ஏதேனும் சூழ்ச்சிகள் மூலமாக எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பினை நீக்குவதன் மூலம் எனக்கு தீங்கு விளைவிக்க காத்திருப்போருக்கு சமிக்ஞை அளிப்பதாக இது இருக்கலாம் என்றார். எனக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுமாயின் அரசாங்கமே அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் அவர் சபையில் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கபட வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை முன்வைத்…
-
- 70 replies
- 4.3k views
- 1 follower
-
-
ஆட்சி மாறினாலும் சிங்கள இனவாதிகளின் நிகழ்ச்சி நிரல் தொடரும் - கருணா கட்சியின் செயலாளர்.! எந்த அரசாக இருந்தாலும் சிங்கள இனவாதிகளின் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலிற்கான கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையை செயற்படுத்துபவர்களாகவே இருப்பார்கள் என கருணா அம்மான் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முண்ணனியின் செயலாளர வ. கமலதாஸ் தெரிவித்தார். கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.... தமிழர் ஐக்கிய சுதந்திர முண்ணனியின் வடமாகாண கிளையின் சந்திப்பு இன்று (நேற்று) இடம்பெற்றது. தமிழ் மக்களின்…
-
- 3 replies
- 457 views
-
-
பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தின் நோக்கம் குறித்து மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள் அமைப்பு கூறுவதென்ன ? (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பதற்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் ஆதரவை நாடுவதே பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தின் நோக்கமாக இருக்கக்கூடும் என்று மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் இலங்கைக்கான விஜயம் மிகவும் முக்கியமான தருணத்தில் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டு மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவத…
-
- 0 replies
- 299 views
-
-
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சியில் பங்கேற்ற இளைஞன் கைதாகி விடுதலை பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நேற்று மதியம் கைது செய்தனர். பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் வடக்கு – கிழக்கில் கைது செய்யப்பட்ட முதலாவது நபர் இவராவார். பருத்தித்துறையைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வ…
-
- 0 replies
- 370 views
-
-
சுகாதார இறுக்கத்துடன் பட்டமளிப்பை நடத்துங்கள்; இல்லையேல் ஒத்திப்போடுங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடாத்துவதில் சிரமங்கள் ஏதாவது இருப்பின் நிகழ்வைப் பிற்போட்டு, கொரோனா நிலைமைகள் சீரடைந்த பின் பிறிதொரு நாளில் நடாத்தலாம் என வடக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 24, 25ம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், பட்டமளிப்பு நிகழ்வை கடுமையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துமாறு கோரி, அந்நடைமுறைகளைப் பட்டியலிட்டு யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே வடக்கு மாகாண சுகாதார சேவைக…
-
- 0 replies
- 253 views
-
-
யாழ்.காரைநகரில் மக்களின் காணிகளை கபளீகரம் செய்யும் முயற்சி முறியடிக்கப்பட்டது..! தீவகத்தில் காணி கபளீகர முயற்சி தீவிரம்.. யாழ்.காரைநகர் - நீலங்காடு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக பொதுமக்களுக்கு சொந்தமான சுமார் 50 ஏக்கர் காணியை சுவீகரிப்பிற்காக அளவீடு செய்யும் நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் தலையீட்டால் நிறுத்தப்பட்டுள்ளது. காணி உரிமையாளர்கள், அரசியவாதிகள் இணைந்து கணியை அளக்க வந்த நில அளவை திணைக்கள அதிகாரிகளை வளிமறித்து போராட்டம் நடத்தியே காணி சுவீகரிப்பு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் ஜே.45 பிரிவுக்கு உட்பட்ட 67 பேருக்கு சொந்தமான 50 ஏக்கர் காணிகளை கடற்படை தமது தேவைகளுக்காக சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இ…
-
- 0 replies
- 298 views
-
-
இலங்கையில் கோவிட் தடுப்பூசி பெற்ற சிலருக்கு கொரோனா.! கோவிட் -19 தடுப்பூசி பெற்ற சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார். ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகாவின் இந்திய தயாரிப்பான கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றுக்கொண்ட ஒருசிலர் அதன் பின்னர் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன எனவும் அவா் குறிப்பிட்டார். இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் காலி மற்றும் கேகாலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றுபதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார். தடுப்பூசி பெற்ற மூன்று வாரங்களின் பின்னரும் உடலில் கொரோனாவுக்கு எதிராக எதிர்ப்பு சக்தி உருவாகவில்லை . இது தடுப்…
-
- 0 replies
- 368 views
-
-
கொழும்பு போர்ட் சிற்றி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சீன நிறுவனமொன்றின் நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வரவேற்பு கட்டிடத்தில் வெறும் சீன மொழி எழுதப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் சிங்கள மொழியில் இந்த வரவேற்பு மற்றும் கட்டிடப் பெயர் வசனங்கள் அற்ற நிலையில், சீன மொழிக்கு முதலிடமும், ஆங்கில மொழிக்கு இரண்டாம் இடமும் வழங்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் தகவல் பரவியுள்ளது. https://www.pearlonenews.com/போர்ட்-சிற்றியில்-சீன-மொ/?fbclid=IwAR1mzGoFPpaJ07n2mk_uOLoBDc2ltlTs9Xj5WDz3q4DKaOZ9iZVR_umvG0c
-
- 15 replies
- 1.3k views
-
-
வடக்கு கிழக்கு போராட்டங்களுக்கு மட்டும் தடை எதற்காக? சபாநாயகரிடம் மனோ கேள்வி 26 Views நாட்டின் பல இடங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு பெறப்படாத தடையுத்தரவுகள், பொத்துவில்-பொலிகண்டி பேரணியில் கலந்துக்கொண்ட எம்பீக்களுக்கு எதிராக மாத்திரம் குறிவைத்து பெறப்பட்டு, நேற்று என்னிடம் இது தொடர்பில் பொலிஸ்துறை வாக்குமூலம் பெற்றது ஏன் என்பது பற்றி பொலிஸ் மாஅதிபரிடம் வினவி எங்களுக்கு அறிவியுங்கள் என நான் இன்று நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் மகிந்த யாபாவிடம் கேள்வி எழுப்பினேன். எனது செயலாளரை தொடர்பு கொண்ட சபாநாயகர் அலுவலகம், பொலிஸ் மாஅதிபருக்கு இதுபற்றிய கடிதம் நாளை அனுப்பப்படும் என தெரிவித்துள்ளது என கொழு…
-
- 0 replies
- 235 views
-
-
இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த புலிகளுக்கு நடந்தது என்ன? அமெரிக்க முன்னாள் உயரதிகாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இலங்கையில் புலிகளின் மீறல் நடவடிக்கைகளுக்காகவும் விசாரணை நடத்தப்படவேண்டும். ஆனால் யுத்தத்தின் இறுதியில் சரணடைந்த முக்கிய புலிகள் எவரும் இல்லை. இதுகுறித்து இன்றைய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச அன்று பாதுகாப்பு செயலராக இருந்தபோது நேரில் நான் அவரிடம் கேட்டேன் அதற்கு அவர் நான் அவர்களைக் கொன்றேன் என்று கூறியது இன்றும் எனது நினைவில் உள்ளது. யுத்தக் குற்றங்கள் தொடர்பில் அமெரிக்காவின் விசேட தூதுவராக இருந்த ஸ்டிபன் ஜே.ராப் இவ்வாறு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். உலகதமிழர் பேரவை மனிதஉரிமைகள் மற்றும் சர்வதேச நீதிக்கான நிலையம் இலங்கையில் நீதி மற்றும் சமாதான…
-
- 14 replies
- 1.3k views
-
-
கொவிட்-19 பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வாக்குறுதியிலிருந்து இலங்கை பின்வாங்குவது குறித்து அமெரிக்க அரசாங்கம் இன்று ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் தனது டுவிட்டரில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ், பாரபட்சமான தகனக் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதில் இருந்து அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்குவதைக் காணும்போது ஏமாற்றமடைகிறது என்று பதிவிட்டுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் என பாராளுமன்றத்தில் முன்னர் அளித்த வாக்குறுதியை அலெய்னா டெப்லிட்ஸ் வரவேற்றதுடன், சர்வதேச பொது சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்பவும், மத சடங்குகளுக்கு மதிப்ப…
-
- 1 reply
- 365 views
-
-
திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகள் மிக விரைவில் இலங்கை வசமாகவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு பெற்றதாகவும் கொலன்னாவையில் இன்று (17) இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் கூறியுள்ளார். 2017ம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களையும் புறந்தள்ளி, தாம் முன்வைத்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதற்கு இந்த பேச்சுவாரத்தையின் போது இணக்கம் காணப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். திருமலை எண்ணெய் தாங்கிகள் எம்வசமாகும் – கம்மன்பில – உதயன் | UTHAYAN (newuthayan.com)
-
- 10 replies
- 844 views
-
-
(ஆர்.யசி) இந்திய பாரதிய ஜனதா கட்சியினால் நேரடியாக இலங்கையில் அரசியல் கட்சியாக உருவாக முடியாது. ஆனால் அவர்களின் பிரதிநிதிகளாக இலங்கையில் ஒரு கட்சி உருவாகி அவர்களின் கொள்கைகளை இலங்கையில் நடைமுறைப்படுத்த எந்த தடைகளும் இல்லை. அனேகமாக பாரதிய ஜனதா கட்சியின் இலங்கை பிரதிநிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உருவாகலாம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். விடுதலைப்புலிகளின் அரசியல் அஸ்திரமாக இன்னமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுகின்றது என்பதில் மாற்றுக்கருத்தில்லை எனவும் அவர் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இந்திய பாரதிய ஜனதா கட்சி இலங்கையிலும் ஆதிக்கம் செய்யும் என அமைச்சர் அமித் சஹா கூறியதாக வெளிவரும் செய்திகளில் உத்தியோகபூர்…
-
- 3 replies
- 565 views
-
-
மாணவர் சமூகம், எமது வளங்களை நிர்ணயிக்கின்ற சக்திகளுள் ஒன்று-கலையரசன் 34 Views மாணவர் சமூகம் என்பது எமது வளங்களை நிர்ணயிக்கின்ற சக்திகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது என தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். மேலும் “கிழக்கு மாகாணத்தில் எமது மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே காணப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த விடயம் எதிர்காலத்தில் எமக்குப் பாரிய சவாலாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். திருக் கோவில் கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரம் கலைப்பிரிவு ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றைய தினம் பாடசாலை அதிபர் டி.இராசநாதன் தலைமயில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவ…
-
- 0 replies
- 393 views
-
-
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இன்று மதியம் அவரை கைது செய்தனர். பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் வடக்கு – கிழக்கில் கைது செய்யப்பட்ட முதலாவது நபர் இவராவார். பருத்தித்துறையைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் பொலிஸார் வாக்குமூலம் பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இளைஞனின் உறவினர்கள் பருத்தித்துறை பொலிஸ் நிலையம் முன்ப…
-
- 0 replies
- 391 views
-
-
தமிழ் மொழியில் பெயர் பலகை வைத்தால் 50 வீதம் வியாபார கழிவு..! யாழ்.மாநகர வர்த்தகர்களுக்கு முதல்வர் அதிரடி அறிவிப்பு.. யாழ்.மாநகரில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கி வர்த்தக நிலையங்களுக்கு பெயர் பலகை வைத்தால் 50 வீதம் வியாபார கழிவு வழங்கப்படும். என யாழ்.மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் தொிவித்திருக்கின்றார். குறித்த விடயம் சபையில் பிரேரணையாக முன்வைக்கப்பட்டு ஏகமனதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இதன்படி புதிதாக தொடங்கும் வியாபார நிலையம் மற்றும் ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கும் வியாபார நிலையங்களில் தாமாகவே விரும்பி தங்களுடைய விளம்பர பதாகைகளில் தமிழுக்கு முன்னுரிமையளித்தால் 50% வியாபாரக்கழிவு வழங்கப்படுமென சபையினால் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு…
-
- 2 replies
- 621 views
-
-
தமிழ் கட்சிகள் மீதான அதிருப்தியே புதிய கட்சி தொடங்கும் எண்ணத்தை உருவாக்கியது..! தமிழ் மக்களின் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பாக தமிழ் கட்சிகளின் செயற்பாடுகள் மீது கொண்டிருந்த அதிருப்தி காரணமாகவே தமிழ் கட்சி ஒன்றை ஆரம்பிக்கும் தீர்மானத்தை தாம் எடுத்துள்ளதாக தொழிலதிபர் ஜெயந்திரன் கூறியுள்ளார். “அகில இலங்கை தமிழ் மக்கள் எழுச்சி கட்சி” என்ற கட்சியை அங்குரார்ப்பணம் செய்து யாழ். ஊடக அமையத்தில் இன்று ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், வடகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பில் தற்போதைய தமிழ் அரசியல் கட்சிகள் அல்லது தலைவர்கள் சரியான பாதையை காட்டாத நிலையில் மக்களின் பிரச்சினைகள…
-
- 1 reply
- 497 views
-
-
பளையிலும் நூற்றுக்கணக்கான காணிகள் சீன நிறுவனத்துக்கு: அம்பலப்படுத்தினார் சுரேஷ் பிரேமச்சந்திரன் யாழ்ப்பாண மாவட்டம் பளை பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை சீன நிறுவனம் ஒன்றிற்கும், சிங்கள வர்த்தகர்களிற்கும் வழங்கும் நடவடிக்கையை கோட்டாபய அரசு முன்னெடுத்துவருவதாகவும் இதனை செய்யும்பொருட்டு பிராந்திய காணி சீர்திருத்த ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் இருந்து அனுராதபுரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். இன்று (18) யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுரேஷ் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பளை பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழு…
-
- 1 reply
- 423 views
-
-
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் உண்மைத் தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் – ஞானசாரர் 4 Views ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் உண்மை தன்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்தும் என்று கருதியே மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தவேண்டும் என பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டுகருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனா…
-
- 2 replies
- 655 views
-
-
வடகிழக்கில் தமிழர்களின் காணிகளை முப்படைகளுக்கு கபளீகரம் செய்யும் நடவடிக்கை தீவிரம்..! இப்போதும் தமிழ் தரப்பு கள்ள மௌனம்.. வடகிழக்கில் முப்படைகளின் பயன்பாட்டிற்காக மக்களின் காணிகளை கபளீகரம் செய்யும் நடவடிக்கைகள் நடந்துவரும் நிலையில் தமிழ் தரப்புக்கள் தொடர்ந்தும் கள்ள மௌனம் சாதிப்பதாக வலி,வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் ச.சஜீவன் கூறியுள்ளார். யாழ்.காரைநகர் இந்து கல்லூரிக்கு உரித்தான 8 பரப்பு காணியை எலறா கடற்படை தளம் அமைப்பதற்கு நில அளவை திணைக்களகத்தால் அளவீடு செய்வது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. காரைநகர் இந்துமகா வித்தியாலயத்துக்குச் சொந்தமான இந்தக் காணியை சுவீகரிப்பதற்கு எதிராக பிரதேச மக்களும், அரசியல் கட்சி பிரதிநிதிகளும் எதிர்ப்பு நடவடிக்கையி…
-
- 0 replies
- 455 views
-
-
தமிழ்த் தரப்பின் ஒற்றுமை நீடிக்குமா..? விக்னேஸ்வரனிடம் கேட்ட சுவிஸ் தூதுவர்.! இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபேர்கலர் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனை இன்று யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேசினார். புதிய சுவிஸ் தூதுவரின் வடக்கை நோக்கிய முதற் பயணம் இதுவாகும். இந்தச் சந்திப்பின்போது எங்களுடைய சரித்திரம் பற்றியும் தற்கால பிரச்சினைகள் பற்றியும் பல கேள்விகளை சுவிஸ் தூதுவர் தன்னிடம் கேட்டறிந்ததாகவும், முக்கியமாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்களின் எழுச்சிப் பவனி சகலரையும் ஒன்று சேர்த்தது என்று கூறி இவ்வாறான ஒற்றுமை வருங்காலத்தில் நிலைக்குமா? என கேள்வி எழுப்பியதாகவும் இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட…
-
- 3 replies
- 584 views
-
-
இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியின் அடக்குமுறைப் போக்கைக் கடுமையாக விமர்சித்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபை "மீண்டும் அச்சத்திற்குள் இலங்கை: புதிய ஆடையில் பழைய பேய்கள்' (Old ghosts in new garb: Sri Lanka return to fear) என அந்த ஆட்சியை குறிப்பிட்டுள்ளது. ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட் டத்தொடரில் இலங்கை விவகாரம் எடுக்கப்படுவதை ஒட்டி இந்த அறிக்கையை மன்னிப்புச் சபையின் கொழும்பில் உள்ள தென்னாசிய அலுவலகம் வெளியிட்டுள்ளது. புதிய ஆடையில் உள்ள பழைய பிசாசு: அச்சத்திற்கு மீண்டும் திரும்பிய இலங்கை' என்ற தலைப்பில் இலங்கை தொடர்பாக பிந்திய அறிக்கை ஒன்றை சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ளது. இலங்கையில் வரலாற்று ரீதியான குற்றங்களுக்கான நீத…
-
- 1 reply
- 729 views
-
-
முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு கசையடி வழங்க வேண்டும் – இம்ரான் மஹ்ருப் தேர்தல் காலங்களில் இஸ்லாமிய நடைமுறைகளை கூறி வாக்குகளை பெற்றவர்கள் அதை மீறிவிட்டு தப்பமுடியாது. எனவே முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களிடம் இஸ்லாமிய தண்டனையான கசையடி வாங்கிக் கொள்ள வேண்டும் என திருகோணலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ருப் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட கல்முனை தொகுதி ஆதரவாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு தனியார் விடுதியில் இடம்பெற்ற போது அங்கு மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 20 ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தம் இடம்பெற்று அதற்கு ஆதரவாக வாக்களித்த பின்னர் நான்கு மாதங்களின் பி…
-
- 2 replies
- 445 views
-
-
கொவிட் மரணங்களை தகனம் செய்யும் தீர்மானத்தில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை தகனம் செய்வதற்கு முஸ்லிம் சமூகமும், சர்வதேச ரீதியாகவும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது, கொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை தகனம் செய்யும் தீர்மானத்தில் மாற்றமில்லையென அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே, மேற்படி தீர்மானத்தை அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொரோனா சடலங்களை தகனம் செய்வதில் மாற்றமில்லை: அரசாங்கம் உறுதி..! | Virakesari.lk
-
- 9 replies
- 730 views
-