Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் பணியாற்றிய அதிகாரியை இடமாற்றம் செய்யவேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், துறைசார் அமைச்சரைக் கோரியுள்ளார். மாவட்ட நிர்வாகத்தில் ஏற்கனவே அரசியல் தலையீடு உள்ளது என்றும், திடீர் இடமாற்றங்களின் பின்னணியில் அரசியல் தலையீடு உள்ளது என்றும் தொடர் குற்றச்சாட்டுக்கள் அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டிருந்தன. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் பணியாற்றிய அலுவலரை கொழும்பு மாவட்டத்துக்கு இடமாற்ற வேண்டும் என்று நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன், அரச சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனைக் கோரியுள்ளார்.…

  2. புதிய கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கு விதித்த பயனத் தடையை அரசாங்கம் நீக்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து சுற்றுலா பயணிகளை பிரித்தானியாவில் இருந்து வருவதற்கு அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரித்தானியாவில் இருந்து நாட்டுக்கு வர விதித்த தடை நீக்கம்! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

  3. இலங்கையிலும் பா.ஜ.க.அரசாங்கத்தை அமைக்க திட்டமுள்ளது- அமித்ஷா தெரிவித்ததாக வெளியான கருத்தினால் சர்ச்சை இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு நேபாளத்திலும் இலங்கையிலும் பாரதிஜனதா அரசாங்கத்தினை அமைக்கும் திட்டமுள்ளது என திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் டெப் தெரிவித்துள்ள கருத்தினால் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பிப்லாப் டெப் தெரிவித்ததாக ஈஸ்ட் மொஜொ தெரிவித்துள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த சனிக்கிழமை திரிபுராவிற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உள்துறை அமைச்சர், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிபெற்ற பின்னர் பா.ஜ.க.விற்கு இலங்கையிலும் நேபாளத்திலும் அரசாங்கத்தை அமைக்கும் எண்ணமுள்ளது என குறிப்பிட்டார் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும்…

    • 6 replies
    • 1.4k views
  4. வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் அரசியல் வாதிகளின் எடுபிடிகளாகக் கூடாது-சபா குகதாஸ் 54 Views வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பகுதியில் சிவில் சமூக அமைப்புக்கள் 2009 ஆண்டின் பின்னர் பலமாக இல்லை என்பது பாரிய குறைபாடாக தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் காரணம் மக்களின் ஒன்றிணைந்த குரலை ஒரு திரட்சியாக்கி அரசியல் அரங்கில் அதிர வைப்பதற்கும் பாதிக்கப்பட்ட தரப்புக்களின் குரலை உயர்த்தவும் அதற்கான நீதியை பெற்றுக் கொள்ளவும் பக்க சார்பு அற்ற அமைப்பாக சிவில் சமூக அமைப்பே வழி நடத்த முடியும். இதனால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிவில் சமூக அமைப்புக்கள் ப…

  5. இலங்கை தற்போது முழுமையாக சீனாவின் காலனித்துவ நாடாக மாறிவிட்டது – சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இலங்கை தற்போது முழுமையாக சீனாவின் காலனித்துவ நாடாக மாறிவிட்டது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.இலங்கை தற்போது முழுமையாகச் சீனாவின் காலனித்துவ நாடாக மாறிவிட்டது என்றும் ஆட்சியாளர்கள் நாட்டை சீனாவிடம் தாரை வார்த்துக் கொண்டிருப்பதாக மேலும் தெரிவித்துள்ளார்.மறைந்த விஜயகுமாரதுங்கவின் 33ஆவது நினைவுதின நிகழ்வு சீதுவயில் அமைந்துள்ள விஜயகுமாரதுங்கவின் நினைவுச் சிலைக்கு அருகில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.இதன்போது, முன்னாள் ஜனாதிபதி, விஜயகுமாரதுங்கவின் நினைவுச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்.இதனையடுத்து ஊடகவியலாளர்…

  6. வடக்கில் உள்ள 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தில் மாற்றமில்லை – அரசாங்கம் http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/iland.jpg வடக்கு பகுதியில் உள்ள 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விலைமனு கோரலின் அடிப்படையில் சீன நிறுவனத்திற்கு அதனை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். அந்த அமைச்சரவை தீர்மானத்தை தாமதப்படுத்துவதாகவோ அல்லது இரத்துச் செய்வதாகவோ மின்சக்தி அமைச்சர் அமைச்சரவைக்கு …

  7. கொழும்பு துறைமுக விவகாரம்: இந்தியாவை மீண்டும் எதிர்க்கும் இலங்கை துறைமுக தொழிற்சங்கம் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்திக்கு இந்தியாவையும் ஜப்பானையும் தொடர்புபடுத்துவதற்கு அகில இலங்கை துறைமுக பொது ஊழியர்கள் சங்கம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்திக்காக இந்தியாவினதும் ஜப்பானினதும் முதலீடுகளை தொடர்புபடுத்துவதற்கான அறியப்படுத்தல் இன்று (புதன்கிழமை) மேற்கொள்ளப்படவுள்ளதாக துறைமுகங்கள் அமைச்சின் செயலாளர் யூ.டீ.சீ. ஜயலால் தெரிவித்துள்ளார். குறித்த நாடுகளின் தூதரக காரியாலயங்களுக்கு இந்த அறியப்படுத்தல் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் அவர்களினால் பெயரிடப்படும் முதலீட்டாளர்களுடன் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முன…

  8. சுமந்திரன் என்ற புத்திசாலியை உள்வாங்கியதனால் தான் ஐ.தே.கட்சி அழிந்தது!-கல்முனை மறுமலர்ச்சி மன்ற தலைவர் February 16, 2021 (பாறுக் ஷிஹான்)சுமந்திரன் ஒரு புத்திசாலி.யு.என்.பி சார்பானவர். அவரை டயஸ்போரா தேசிய பட்டியல் கொடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற் கூடாக பாராளுமன்றம் அனுப்புகின்றனர். அவரை உள்வாங்கியதனால் தான் யு.என்.பி அழிந்தது என கல்முனை மறுமலர்ச்சி மன்ற தலைவர் நஸீர் ஹாஜியார் தெரிவித்துள்ளார்.பொத்துவில் -பொலிகண்டி பேரணி கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்துவது தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு திங்கட்கிழமை (15) இரவு கல்முனையில் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு கூறினார்.மேலும் தனது கருத்தில் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்ற கோஷம் பேரணியில் சென்றவ…

  9. யாழ். சித்த மருத்துவபீட மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் 19 Views சித்த மருத்துவ பீட பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு சம்பந்தமான திட்டங்களில், இத்துறையுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ, அரசோ பராமுகமாக உள்ளதனால், தங்களின் முதுநிலை பட்டதாரிகளின் இன்றைய அவலநிலை, தற்போதைய பயிலுனர் மாணவர்களின் எதிர்காலநிலை குறித்த அச்சம், வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறுமோ என்ற பயம், இவற்றையெல்லாம் தங்களுக்குள் அடக்கி மன அழுத்தங்களை உண்டு பண்ணாமல் அவலங்களை வெளிக் கொண்டு வந்து ஓர் நிரந்தர தீர்வை பெறும் நோக்கில் யாழ். சித்த மருத்துவ பீட வளாகத்தின் முன்பாக (கைதடி) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 27 வது அணியினர் இன்னும் வேலையற்ற நிலையில் உள்ளனர். அதன் ப…

  10. சாணக்கியன் ஊடகவியலாளர் சந்திப்பு

  11. கொழும்பு துறைமுக ஒப்பந்தம் இரத்து – அதானிக்கு ஆதரவாக பழைய திட்டத்திற்கு பதில் புதிய திட்டம் 34 Views கொழும்பின் கிழக்கு துறைமுக முனைய வளர்ச்சி பணிகளுக்காக ஐப்பான் – இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை இரத்து செய்வதாக இலங்கை முடிவு செய்துள்ளது. இது குறித்து இந்தியா, சட்ட நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பையும் இழந்திருக்கிறது என தெற்காசிய பல்கலைக் கழகத்தின் சட்டத்துறை துணை பேராசிரியர் பிரபாஸ் ரஞ்சன் கூறியுள்ளார். இலங்கையிலுள்ள கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை (ECT) மேம்படுத்துவதற்கு இலங்கை, ஜப்பான், இந்தியா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கடந்த 2019ஆம் ஆண்டு செய்துகொண்டன…

  12. மாவீர நாளில் முகப் புத்தகங்களின் பதிவிட்டவர்கள் சிறையில் உள்ளார்கள். இவர்களை உசுப்பேத்தியவர்கள் இன்று அரசாங்க பாதுகாப்புடன் திரிகின்றார்கள். ஆனால் இவர்களின் பெற்றோர்கள் கண்ணீருடன் சிறைச்சாலை சென்று வருகின்றார்கள். இப்போது இருக்கும் தலைமுறையாவது நிம்மதியாக சந்தோசமாக இழப்புக்களை சந்திக்காமல் வாழ வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்டமீறாவோடை ஏழாம் குறுக்கு வீதியானது கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்படுவதற்கான ஆரம்ப நிகழ்வில் நேற்று (திங்கட்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ”மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழிற்சாலை…

    • 1 reply
    • 910 views
  13. (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பாராளுமன்ற உரை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது. இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை வருகின்றார். இந்த விஜயமானது இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்தித்து பாக்கிஸ்தான் பிரதமர் கலந்துரையாடவுள்ளார். மேலும் 24 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறும் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளதுடன் ப…

  14. எந்தவொரு நாட்டுக்கும் நான் அடிபணியவில்லை’ இந்தியாவுக்கு கிழக்கு முனையத்தை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தற்போது சீனாவுக்கு எல்லாவற்றையும் வழங்க முனைவதை எதிர்க்காது மௌனம் காக்கின்றனர் என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். தனது ஆட்சின்போது தான் சகல நாடுகளுடனும் இணங்காத வகையிலான கொள்கையை கடைப்பித்ததாகவும் எந்தவொரு நாட்டுக்கும் தான் அடிபணியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், உயிரை பணயம் வைத்து கட்டியெழுப்பப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இன்று சரிவை எதிர்நோக்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Tamilmirror Online || 'எந்தவொரு நாட்டுக்கும் நான் அடிபணிய…

  15. வதந்திகளுக்கு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைபாட்டை கூறமுடியாது வதந்திகளுக்கு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைபாட்டை கூறமுடியாது முடியாது என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், எரிபொருள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இலங்கையில் பாரதிய ஜனதா கட்சியை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படும் கூற்று தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இந்திய பாரதிய ஜனதா கட்சியை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக இந்திய உள்நாட்டலு…

  16. வெள்ளை கொடியை காண்பித்த போதிலும் இலங்கை இராணுவம் அவர்களை சுட்டுக்கொன்றது- நவநீதம் பிள்ளை இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது, வெள்ளை கொடியை காண்பித்தவர்களையும் இலங்கை இராணுவம் சுட்டுக்கொல்வதை பார்த்திருக்கின்றோம் என முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது நவநீதம் பிள்ளை மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி ஆறுமாதங்களும் பலமுறை சர்வதேச தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளன. மேலும் நாங்கள் பயங்கரவாத அமைப்பாக கூறுகி…

  17. வடக்கு மாகாணத்தில் தரம் 1இல் இணையும் மாணவர்கள் எண்ணிக்கை வீழ்ச்சி 16 Views வடக்கு மாகாணத்தில் தரம் 1இல் இணையும் மாணவர்களின் எண்ணிக்கை 2020 ஐ விடவும் 2021இல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வீழ்ச்சி கண்டுள்ளதாக சுட்டிக் காட்டப்படுகின்றது. தமிழ் மக்களின் பிறப்பு வீதம் தொடர்ந்தும் குறைவடைவதாக தெரிவிக்கப்பட்டு வரும்போது தரம் 1இல் இணையும் மாணவர்களின் எண்ணிக்கையும் இதனை உறுதி செய்கின்றது. இதீற்கமைய 2020ஆம் ஆண்டில் வடக்கின் 5 மாவட்டத்திலும் 16 ஆயிரத்து 820 மாணவர்கள் தரம் 1இல் இணைந்தபோதும் 2021இல் 15 ஆயி்த்து 703 மாணவர்களே தரம் 1இல் இணைந்துள்ளனர். இவ்வாறு இணைந்த மாணவர்களில் உச்சபட்ச விழுக்காட்டை கொண்ட மாவட்டமா…

  18. கொரோனா சடலங்களை தகனம் செய்வதில் மாற்றமில்லை: அரசாங்கம் உறுதி..! கொவிட் மரணங்களை தகனம் செய்யும் தீர்மானத்தில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை தகனம் செய்வதற்கு முஸ்லிம் சமூகமும், சர்வதேச ரீதியாகவும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது, கொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை தகனம் செய்யும் தீர்மானத்தில் மாற்றமில்லையென அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே, மேற்படி தீர்மானத்தை அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/100525

    • 1 reply
    • 310 views
  19. பொத்துவில்- பொலிகண்டி பேரணி: யாழ்.மாநகர முதல்வருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை இடம்பெற்ற மக்கள் எழுச்சிப் பேரணியில், நீதிமன்ற கட்டளையை மீறி யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கலந்துகொண்டமையினால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்றில், யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு பதில் நீதவான் முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தவணையிடப்பட்டுள்ளது. ஆரம்பத்திலேயே பேரணிக்கு தடைகோரி ஏ அறிக்கையூடாக மன்னார் பொலிஸ் நிலையத்தினால் தொடரப்பட்ட வழக்கிற்கு நீதிமன்று வழங்கிய தடை உத்தரவு மீறப்…

  20. சிங்கள- பௌத்த தலைவன் என்பதை வெளிப்படுத்த தயங்கமாட்டேன்- சுதந்திர தின உரையில் ஜனாதிபதி நான் சிங்கள பௌத்த தலைவன் என்பதை வெளிப்படுத்துவதற்கு ஒருபோதும் தயங்கமாட்டேன் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுதந்திர சதுக்கத்தில் தற்போது நடைபெற்றுவரும் 73வது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,“ பௌத்த கோட்பாட்டுக்கு அமையவே நான் இந்த நாட்டை ஆட்சி செய்வேன். மேலும் ஏனைய மதங்களுக்கும் இனங்களுக்கும் சமவுரிமை எப்போதும் வழங்கப்படும். இதேவேளை ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு சட்டத்தின் ஊடாக நிச்சயம் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும். மேல…

  21. காயமடைந்தவர்களிற்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தவேளை எறிகணை தாக்குதலிற்கு உள்ளான மருத்துவமனைகளின் மருத்துவர்களின் உதவிக்கான இறுதிஅழுகுரலை நாங்கள் செவிமடுத்திருக்கின்றோம் என முன்னாள் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி ஆறுமாதங்களும் பல முறை சர்வதேச தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளன. நாங்கள் பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் என குற்றம்சாட்டப்படுபவர்களை இலங்கை இராணுவம் அவர்கள் வெள்ளை கொடியை காண்பித்தவேளையிலும் சுட்டுக்கொல்வதை பார்த்திருக்கின்றோம். தமிழ்பொதுமக்கள் மீதான கடுமையான விமான குண்டுவீச்சுகளையும் அவர்களின் வீ…

  22. முஸ்லீம்களின் அபிப்பிராயங்களை கேட்காத தமிழ் கட்சிகளை எவ்வாறு நம்புவது- அஹமட் புர்க்கான் முஸ்லீம்கள் குறித்து அபிப்பிராயங்களை கேட்காத தமிழ் கட்சிகளை நம்பி எவ்வாறு வடக்கு- கிழக்கினை இணைக்க ஆதரவு வழங்குவது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை இணைப்பாளர் அஹமட் புர்க்கான் கேள்வி எழுப்பியுள்ளார். கல்முனையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அஹமட் புர்க்கான் மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்கத்தின் மீதான சிறுபான்மையினரின் தவறான புரிதல் காரணமாகதான், சாணக்கியனுக்கு பின்னால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணிக்கு சகல தரப்பினரும் ஆதரவளித்திருப்பது எ…

  23. கடலுணவு உற்பத்திக்கான கேந்திர மையமாக இரணைதீவு உருவாக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். இரணைதீவில் இன்று(14.02.2021) கடலட்டை ஏற்றுமதிக் கிராமத்தினை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர், இரணைதீவு மக்களின் வாழ்கை செழிப்படைய வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு என்று தெரிவித்ததுடன், கடலட்டை பண்ணையின் இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பித்துள்ள மேலும் பல பேருக்கும் பொருத்தமான பிரதேசங்களை அடையாளப்படுத்தி வழங்குவதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். மேலும் கொடுவா மீன் உற்பத்திப் பண்ணைகளையும் உருவா…

  24. ( எம்.நியூட்டன்) வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட யாழ்ப்பாணத்தின் பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 11 பயிலும் மாணவர்கள் ஆசிரியர்கள் சிலரால் துன்புறுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யபட்டுள்ளது. குறித்த பாடசாலையில் தரம் 11 இல் பயிலும் மாணவன் ஒருவன் உடலில் பச்சை குத்தியுள்ளதாக ஆசிரியர்கள் சிலரால் அண்மையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தரம் 11 இல் பயிலும் 70 ஆண் மாணவர்களை பாடசாலை வளாகத்திலுள்ள மறைவான இடம் ஒன்றுக்கு அழைத்த ஆசிரியர்கள், வலுக்கட்டாயமாக ஆடைகளை களையுமாறு அவர்களை அறிவுறுத்தியுள்ளனர். ஆசிரியர்களின் அறிவுறுத்தலை மீற முடியாமல் தாம் சித்திரவதைக்கு உள்ளாகியதாக மாணவர்கள…

  25. மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள தாராபுரம் கோரக்குளம் பகுதியில் தாராபுரம் கமக்கார அமைப்பினால் செய்கை பண்ணப்பட்ட பெரும் போக நெல் அறுவடையானது இன்று (15.02.2021) காலை 08.00 மணியளவில் நடை பெற்றது. மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் கே.எல்.எம் சுகூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட் ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை கலந்து கொண்டு நெல் அறுவடையை ஆரம்பித்து வைத்தார். மன்னார் நகர்ப்பகுதி முழுவதும் உவர் நீராக கணப்படும் பகுதியில் வெற்றிகரமாக நெற்செய்கை பண்ணப்பட்டு அறுவடைசெய்யப்படுவது தொடர்பாக தாராபுரம் கமக்கார அமைப்பினர் கருத்து தெரிவிக்கும் போது தாராபுரம் கோரக்குளம் பகுதியை அண்டிய விவசாய காணியில் ஏ.ரி.308 என்னும் நெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.