ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
சர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படும் நிலை – முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டு 3 Views கிழக்கு முனைய விவகாரத்தில் ஏற்பட்ட சுமூகமற்ற நிலை காரணமாக இந்தியா வழங்கிய கடன் தொகையை உடனடியாக மீளச் செலுத்துமாறு அறிவித்துள்ளது. தற்போது இலங்கையில் உள்நாட்டு நெருக்கடி மாத்திரமின்றி சர்வதேச நெருக்கடிகளும் ஆரம்பமாகியுள்ளன. சர்வதேச அரங்கில் மீண்டும் இலங்கை தனிமைப்படுத்தப்படக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்…
-
- 4 replies
- 504 views
-
-
”வடக்கு, கிழக்கில் பௌத்த விகாரைகள் இருந்த இடங்களிலேயே கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன” : என்கிறார் மேதானந்த தேரர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்பொருளியல் இடங்களில் 99 வீதமானவை பௌத்த விகாரைகளுடன் தொடர்புடையவை என்பதுடன், அங்குள்ள கோயில்களில் பெரும்பாலானவை பௌத்த விகாரைகள் இருந்த இடங்கள் என்று தொல்பொருள் தொடர்பான செயலணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். வடக்கு, கிழக்கில் 99 வீதமான தொல்பொருள் இடங்கள் பௌத்த விகாரைகளுடன் தொடர்புடையவையே, அங்குள்ள மலைகளில் பௌத்த விகாரைகள் இருந்துள்ளன. …
-
- 5 replies
- 1.2k views
- 1 follower
-
-
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பான போராட்டம் எனவும், இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கப்போவதில்லை எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/144907/IMG-20210206-WA0024.jpg யாழ். மாவட்ட கடற்றொழில், நீர் வேளாண்மை தொடர்பாக யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளக் கூடிய வேலைத் திட்டங்கள் மற்றும் புரெவிப் புயல் காரணமாக கடற்றொழில் தரப்பினருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கலந்துரையாடலின் நிறைவில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கு…
-
- 9 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணி திரளவேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி மன்னார் நகருக்குள் சென்றுள்ளதுடன், தற்போது பேரணி மன்னார் மத்திய பேருந்து நிலையத்தைச் சென்றடைந்துள்ளது. இதன்போது, அங்கு கருத்து வெளியிடும் போதே, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். மன்னாரில் கிடைத்த பாரிய ஆதரவு கண்டு தாம் நெகிழ்ச்சியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இது நகைச்சுவையான விடயம் இல்லை எனவும், மக்கள் உணர்ச்சி பெருக்குடன் குறித்த பேரணியில் பங்கேற்க வேண்டும் எனவும் அவர்…
-
- 1 reply
- 588 views
-
-
இலங்கையில் பதிவு செய்யப்படும், .LK என முடியும் சில இணையதளங்கள் மீது இன்று (பிப்ரவரி 06) காலை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக 'டாட் எல்.கே' இணையதள பதிவு நிறுவனம் தெரிவிக்கின்றது. இன்று காலை முதல் .LK இணைய முகவரிகள் பல செயலிழந்ததாக .LK இணையத்தள பதிவாளர் பேராசிரியர் கிஹான் டயஸ் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். சில இணையதளங்களின் முகவரிகளை, வேறு இணையதளங்களுக்கு செல்லும் வகையில் சிலர் மாற்றியிருந்ததாக அவர் கூறுகின்றார். எவ்வாறாயினும், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு, கணினி அவசர பிரிவு ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, நிலைமையை வழமைக்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். இவ்வாறான செயற்பாடுகள் மீண்டும் இடம்பெறாத வக…
-
- 0 replies
- 615 views
-
-
புதிய அரசியலமைப்பிற்கான ஆளும் கட்சியின் யோசனைகள் புதன் கிழமை சமர்பிக்கப்படும்: ஜி.எல் பீரிஸ் (இராஜதுரை ஹஷான்) உத்தேச அரசியலமைப்பில் தேர்தல் முறைமை முழுமையாக மாற்றியமைக்கப்படும். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவு வழங்குவார்கள். புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொதுஜன பெரமுனவின் யோசனைகளை எதிர்வரும் புதன் கிழமை நிபுணர் குழுவிடம் முன்வைக்க எதிர்பார்த்துள்ளோம் என பொதுஜன பெரமுனவின் தவிசாளரும், கல்வி அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார். உத்தேச புதிய அரசியலமைப்பு குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தற்போது நடைமுறையிலுள்ள இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு 42 வருட காலம் பழமையானது. தற்போதைய அரசியல் மற்றும் சமூக மாற்றத்துக்…
-
- 1 reply
- 364 views
-
-
யாழ். பல்கலையில் நினைவுத்தூபி அமைக்க முள்ளிவாய்க்காலில் இருந்து மண் சேகரித்து எடுத்துச் சென்ற மாணவர்கள்! யாழ். பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்காக முள்ளிவாய்க்கால் மண்ணிலிருந்து மண் சேகரிக்கப்பட்டுள்ளது. பொத்துவில் முதல் பொலிகண்டிப் போராட்டம் நேற்று முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் நினைவுத் திடல் வரை சென்றதுடன் போரில் உயிரிழந்த தமிழ் மக்களுக்காக அங்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு நினைவிடத்தின் மண், மாணவர்களால் சேகரிக்கப்பட்டது. இதில், வேலன் சுவாமிகள், கிறிஸ்தவ மதகுரு லியோ ஆம்ஸ்ரோங் மற்றும் சிலர் கலந்துகொண்டனர். யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அ…
-
- 1 reply
- 413 views
- 1 follower
-
-
ஐநா அமைதிபடையிலிருந்து இலங்கை இராணுவம் நீக்கப்பட வேண்டும் - யஸ்மின் சூக்கா கோரிக்கை இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் சுயாதீனம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியன முழுமையாக வீழ்ச்சி கண்டுள்ளதென ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமை பொறுப்பாளர்கள் தெரிவிக்கின்ற நிலையில், ஐக்கிய நாடுகளுக்கான அமைதிப்படையில் இலங்கை இராணுவத்தை இணைத்துக்கொள்வதை நிறுத்த வேண்டும் என சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்றிட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்றிட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சூக்கா நேற்று (03) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை கூறியுள்ளார். ஐநா அமைதிப்படையில் ஒரு இராணுவத்தை …
-
- 2 replies
- 650 views
-
-
கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இனவாத இராஜ்ஜிம் உருவாகியுள்ளது! - மனோ கணேசன் By கிருசாயிதன் February 6, 2021 (குமணன்)கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இனவாத இராஜ்ஜிம் உருவாகியுள்ளது மலையக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.இன்று மன்னார் பேருந்து நிலையத்திற்கு முன்னால் பேரணியில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தமிழரும் முஸ்லீமும் இந்த தேசத்தில் வாழ்வதற்கான உரிமை கொண்டவர்கள். வரலாற்றில் எங்களுக்கும் பங்கு உள்ளது என்பதற்கான குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கின்றது. தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு கோட்டாபய அரசாங்கம் இனவாத இராஜ்ஜியத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.இது கோட்டாபய ராஜபக்ச …
-
- 0 replies
- 338 views
-
-
பிள்ளையானுக்கு ஒரு நீதி அரசியல் கைதிகளுக்கு ஒரு நீதியா :ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா பசீர் வலி மொகமட் என்பவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி 2006 ம் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் இராணுப் பாதுகாப்புப் பிரிவை சேர்ந்த ஏழு இராணுவ அதிகாரிகளுக்கு மரணத்தை ஏற்படுத்தியதுடன் மேலும் பத்து பொதுமக்களுக்கு கடும் காயத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கனகரத்தினம் ஆதித்தன் மற்றும் இருவருக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கனகரத்தினம் ஆதித்தியன் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தனது வாதத்தில், முன்னாள் கிழக்கு மாகா…
-
- 0 replies
- 312 views
-
-
கிழக்கு தொல்பொருள் ஜனாதிபதி செயலணியில் மேலும் 5 பெரும்பான்மையினர் நியமனம் கிழக்கு தொல்பொருள் ஜனாதிபதி செயலணிக்கு மேலும் 5 பேரை அரசாங்கம் நியமித்துள்ளது.புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மூத்த பேராசிரியர் அனுர மானதுங்க, காணி ஆணையர் நாயகம் கீர்த்தி கமகே, சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஆர்.டி.நந்தனா சேனதீர மற்றும் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அசின்சல சேனவிரத்ன ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் பெயர் பட்டியலொன்றினை சமர்ப்பித்திருந்தனர். அந்த பட்டியல் குறித்து அரசாங்கம் இதுவரை கவனம் செலுத்தவி…
-
- 0 replies
- 239 views
-
-
சொந்த நாட்டிற்கு செல்லமுடியாமல் பல நாட்களாக அகதியை போல் கைவிடப்பட்டுள்ள இலங்கை பணிப் பெண்கள்! By கிருசாயிதன் இலங்கைக்கு அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுக்கும் பணிப் பெண்கள் இலங்கை திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.கவனிப்பாரற்ற நிலையில் கொரோனாவினால் தொழில் வாய்ப்பை இழந்து சொந்த நாட்டிற்கு செல்லமுடியாமல் பல நாட்களாக அகதியை போல் வெளிநாட்டு தூதரகங்களுக்கு முன்னால் காத்துக் கிடப்பதாக அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.எனினும், குவைத்திற்கான இலங்கை தூதரகம் இவர்களை கண்டுகொள்ளாது, கைவிட்டு இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.இலங்கையின் பொருளாதாரத்தின் முக்கிய பங்காளிகளான வெளிநாட்டு வீட்டுப் பணிப் பெண்களின் இந்த நிலை…
-
- 1 reply
- 551 views
-
-
எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிலரின் பிரஜாவுரிமையைப் பறிப்பதற்குத் திட்டம் – கரு ஜெயசூரிய 20 Views அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய அடுத்த தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளில் பிரபலமானவர்களின் பிரஜா உரிமையை இல்லாமல் செய்து ஏகாதிபத்தியத்துக்கான வழி அமைப்பதே அரசாங்கத்தின் திட்டமாகும். அத்துடன் முறைப்பாட்டாளர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டி ருப்பதானது, பிரபல்யமாக பேசப்படும் கெகில்லே மன்னரது ஆட்சியில்கூட பதிவானதில்லை என முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிப…
-
- 0 replies
- 446 views
-
-
அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் மலையகம் 33 Views 1000 ரூபாயாக சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/33-1.jpg அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி மலையகத்திலுள்ள பிரதான நகரங்களில் இன்று கடையடைப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி, கொழும்பு, செட்டியார் தெரு வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். https://www…
-
- 0 replies
- 295 views
-
-
எமது பயணத்தினை தடுக்கவே வீதிகளில் ஆணிகள் வைக்கப்பட்டன – சாணக்கியன் by : Benitlas எமது பேரணியினை தடுக்கவே வீதிகளில் ஆணிகள் வைக்கப்பட்டன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெறுகின்ற பேரணியின் மூன்றாவது நாள் இன்று (வெள்ளிக்கிழமை) திருகோணமலையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் பேரணி பயணிக்கும் வீதிகளில் ஆணிகள் எறியப்பட்டு, பேரணியில் பங்கேற்ற வாகனங்களின் டயர்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சிவில் சமூக பிரதிநிதிகள் பயணித்த வாகனம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பயணித்த வாகனம், மேலும் சில வாகனங்களின் ட…
-
- 1 reply
- 559 views
-
-
பொலிகண்டி வரையான பேரணி பருத்தித்துறைக்குள் நுழைய தடை பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் நான்கு நாள்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர். பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பொதுத் தொல்லையை ஏற்படுத்தல், கோவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த விண்ணப்பங்கள் பொலிஸாரால் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன. பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு மூத…
-
- 1 reply
- 530 views
-
-
திருப்பிக் கொடுத்தாயிற்று இந்தியாவிடமிருந்து நாணய மாற்று முறை அடிப்படையில் கடந்த வருடம் பெற்றிருந்த 400 மில்லியன் டொலர்களை மீளச் செலுத்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவிடமிருந்து எவ்விதமான கோரிக்கையும் எழாத போதிலும், சில ஊடகங்கள் தவறான அறிக்கைகளை பிரசுரித்திருந்ததையடுத்து அதனை தெளிவுபடுத்தும் வகையில் இந்த அறிவிக்கை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் தொடர்ந்தும் இவ்வாறான கடன்களை பெற்றுக் கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் வங்கி மேலும் அறிவித்திருந்தது. இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு வழங்கப்பட்ட 400 400 மில்லியன் டொலர்கள் கடனை ம…
-
- 1 reply
- 689 views
-
-
கருணா அம்மான், பிள்ளையானுடன் சந்திப்பினை மேற்கொண்ட துணை இந்திய உயர் ஸ்தானிகர் இலங்கைக்கான துணை இந்திய உயர் ஸ்தானிகர் வினோத். கே. ஜேக்கப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோரை தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பானது கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றுள்ளது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல், மற்றும் மாகாண சபைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானியரகம் தனது டுவிட்டர் பதவில் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/99702
-
- 16 replies
- 1.7k views
-
-
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி எழுச்சி பேரணியில் கலந்துகொண்ட சிவாஜிலிங்கத்தின் வாகனம் மீது தாக்குதல் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்டுள்ள முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இது குறித்து முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளதாவது திருகோணமலை மடத்தடி சந்தியிலேயே வைத்து நானும் அனந்திசசிதரனும் பயணம் செய்துகொண்டிருந்த வாகனத்தின் மீது காடையர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கண்ணாடிகள் உடைத்தெறியப்பட்டுள்ளன. அவர்களுடைய கைகளிலே பெட்ரோல் நிரப்பிய போத்தல்கள் காணப்பட்டன,பொலிஸார் பக்கத்திலே நிற்கின்ற போதுதான் இந்த தாக்குதல் இ…
-
- 0 replies
- 578 views
-
-
இந்தியா இலங்கை ஜப்பான் ஆகியநாடுகள் மத்தியில் கைச்சாத்திடப்பட்ட கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பான உடன்படிக்கையிலிருந்து இலங்கை விலகியிருப்பது ஒருதலைப்பட்சமான வருந்தத்தக்க நடவடிக்கை என ஜப்பான் தெரிவித்துள்ளது. முத்தரப்பு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தப்போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளதை தொடர்ந்து ஜப்பான் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடமிருந்து மேலதிக விபரங்களை எதிர்பார்த்துள்ளதாக புதுடில்லியில் ஜப்பானிய தூதரக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் இது குறித்து ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்து அறிவித்துள்ளமை வருந்தத்தக்க விடயம் என அவர் தெரிவித்துள்ளார். Thinakkural.lk
-
- 3 replies
- 1.1k views
-
-
2019ம் ஆண்டு மே மாதம் இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கை செயற்படுமென எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் வௌிப்படுத்தப்பட்டதாகவும் நாட்டின் தலைமை அது தொடர்பில் அறிவித்திருந்ததாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து இதனை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கையின் அமைச்ச…
-
- 20 replies
- 2.6k views
- 1 follower
-
-
சிங்கள மாணவர்களால் தமிழ் மொழியிலும் தமிழ் மாணவர்களால் சிங்கள மொழியிலும் தேசிய கீதம் பாடி வவுனியாவில் சுதந்திரதினம் அனுஷ்டிப்பு வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (04.02.2021) காலை 7.30 மணியளவில் இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தேசியகீதம் சிங்கள மாணவர்களால் தமிழ் மொழியிலும், தமிழ் மாணவர்களால் சிங்கள மொழியிலும் பாடப்பட்டதுடன் தேசிய கொடியை பிரதம விருந்தினர் ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள், பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கு.திலீபன் கலந்துகொண்டதுடன், வன்னி பிராந்திய படைகளின் பிரதானி, விமானப…
-
- 10 replies
- 976 views
-
-
(ஆர்.யசி) இராணுவ அணிவகுப்புகள், போர் வெற்றியை பறைசாற்றுகின்ற கோஷங்களுடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று கொழும்பு சுதந்திர சதுக்க மண்டப வளாகத்தில் நடைபெற்று முடிந்தது. பிரதமர், அமைச்சர்கள், முப்படை பிரதானிகள், சர்வதேச இராஜதந்திரிகள் என பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர். தேசிய கொடிகளை குறைத்து பெளத்த சிங்கள கொடிகளுடனும், இராணுவ கொடிகளுடனும் சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று காலை 7.15 மணிக்கு தேசபிதா டி.எஸ்.சேனாநாயகவின் உருவச்சிலைக்கு முன்னாள் மலரஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிதிகளின் …
-
- 6 replies
- 866 views
-
-
13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதையே விரும்புகின்றோம் – இந்தியா 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் மாகாண சபைகளை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு குறித்த இந்தியாவின் நீண்டகால மற்றும் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை மீண்டும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜாகோப் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான பிரதி இந்திய உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜாகோப் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவுப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதன் போது பிரதி உயர் ஸ்தானிகர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்ப…
-
- 3 replies
- 796 views
- 1 follower
-
-
அடக்குமுறை அரசு, போராட்டத்தை நோக்கி தமிழ் பேசும் மக்களை தள்ளுகிறது – மனோ கணேசன் 22 Views தமிழ் பேசும் இலங்கையர்களின் தேசிய இருப்பை அழித்தொழிக்கும், ஒடுக்குமுறை ராஜபக்ச அரசு, தமிழ் மொழியை பேசுகின்ற, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மதங்களை கடைபிடிக்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களை ஜனநாயக போராட்டங்களை நோக்கி தள்ளி விட்டுள்ளது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து கலாச்சார அமைச்சருமான மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார். மனோ எம்பி இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது, நடப்பு ராஜபக்ச அரசின் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற என்ற கூச்சல…
-
- 0 replies
- 453 views
-