ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
நூருல் ஹுதா உமர் புதிய அரசியல் யாப்பு திருத்தத்துக்காக உலமா கட்சி பல கோரிக்கைகளை பெப்ரல் அமைப்பின் ஊடாக முன்வைத்துள்ளது என அந்த கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் மௌலவி தெரிவித்தார். அவர்களின் கோரிக்கைகளாக தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது தமிழ் , முஸ்லிம் , சிங்கள மக்கள் என்ற முத்தரப்பை கொண்டதாக அமைய வேண்டும், முஸ்லிம்கள் இலங்கையின் தனியான தேசிய இனம் என்பது அரசியல் யாப்பில் தெளிவாக குறிப்பிடுவதுடன், அவர்களின் அரசியல், மத, கலாசார சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும், வடக்கு கிழக்கை இணைக்காமல் வடக்கும் கிழக்கும் தனி மாகாணங்களாக இருக்க வேண்டும். மாகாண சபை முறை நீக்கப்பட்டு தேர்தல் ஊடாக த…
-
- 1 reply
- 592 views
-
-
தமிழ் மொழிக்கு இடமில்லை சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்படும் : கோட்டாபய அரசு சுதந்திரதின நிகழ்வில் தனிச்சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என அறிவித்துள்ளது கோட்டாபய அரசு. அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் உடனான சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சிக் செயலாளர் கமல்குணரட்ன இன்று இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய கீதம் இசைக்கப்படுவது ஜனாதிபதி சுதந்திர தின வைபத்தில் கலந்துக்கொள்ளும் வேலையில் தேசிய கொடியை ஏற்றும் பொழுது தேசிய கீதம் இசைக்கப்படும். சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் இடம்பெறும். கடந்த காலம் முதல் தேசிய கொடி தொடர்பில் உள்ள குறைபாடுகள் குறித்து பேசப்பட்டு வந்தது. இந்நில…
-
- 6 replies
- 630 views
-
-
இலங்கை விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை ஏற்க முடியாது – சீனத் தூதுவர் 5 Views “மனித உரிமைகள் சார்ந்த விடயங்கள், இன முரண்பாடுகளுக்கான தீர்வுகள் போன்ற விடயங்கள் இலங்கையின் உள்ளக விடயங்களாகும்.இதில் மக்கள் சீனக் குடியரசு ஒருபோதும் தலையீடு செய்யாது. ஏனைய நாடுகள் தலையீடு செய்வதையும் விரும்பாது” என இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் அரசியல் பிரிவுத் தலைவரும் ஊடகப் பேச்சாளருமான லு சொங் தெரிவித்தார். அத்துடன் மனித உரிமைகள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது எனவும், இதடினப்படையில் சில நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலின் மார்ச் மாதக் கூட்டத் தொடரில…
-
- 5 replies
- 693 views
-
-
யாழில் தமிழர்களின் மரபுரிமைச் சின்னங்களை பாதுகாப்பது குறித்து கலந்துரையாடல் யாழ். மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட இடங்களிலுள்ள தமிழர்களின் மரபுரிமைச் சின்னங்களை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் தொடர்பாக யாழ். மாநகர முதல்வருக்கும் தொல்பொருள் திணைக்களத்திற்கும் இடையில் முக்கிய கலந்துரையடல் ஒன்று நடைபெற்றது. இதன்போது, தமது வரலாறுகளை அடுத்த சந்ததிக்கு கடத்துவதற்கு ஏதுவான வகையிலும் தங்களுடைய ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள மரபுரிமைச் சின்னங்களை தாமே பாதுகாக்கும் நோக்குடனும் மரபுரிமைச்சின்னங்களை பாதுகாக்கின்ற பராமரிக்கின்ற பொறுப்பினை தமக்கு வழங்கவேண்டும் என்று முதல்வர் தொல்பொருள் திணைக்களத்தினரிடம் கோரிக்கை விடுத்தார். அத்துடன் குறித்த மரபுரிமைச் சின்னங்களை முழ…
-
- 0 replies
- 451 views
-
-
நீங்கள் தமிழன் என்றால் போராட்டத்திற்கு வாருங்கள்! பிள்ளையான் மற்றும் வியாழேந்திரனுக்கும் அழைப்பு அரசியலையும், கட்சியையும் ஓரமாக வைத்துக் கொண்டு தமிழன் என்ற உணர்வுடன் மட்டக்களப்பில் எதிர்வரும் 4ம் திகதி நடைபெறவுள்ள இன அடக்கு முறைக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பிள்ளையான் மற்றும் வியாளேந்திரனுக்கும் அழைப்பு விடுவதாக தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்துள்ளார் எதிர்வரும் 04ம் திகதி மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் மேற்கொள்ளப்படவுள்ள அடக்குமுறைக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் முகமாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சிங்கள பேரினவா…
-
- 5 replies
- 694 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு பதிலாக ‘அமைதித் தூபி’ அமையும் – பல்கலைக்கழகப் பேரவை அதற்கே அனுமதி 115 Views யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடித்தழிக்கப்பட்ட போர்க்கால முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை ‘அமைதித் தூபி’ என்ற பெயரில் மீண்டும் கட்டியெழுப்ப பல்கலைக்கழகப் பேரவை அனுமதி வழங்கியிருக்கிறது. மாதத்தின் இறுதி சனிக்கிழமையான நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவைக் கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது. தூபி விவகாரம் தொடர்பில் நடந்தவற்றை துணைவேந்தர் சிறிசற்குணராஜா நீண்ட அறிக்கை ஒன்றின் மூலம் பேரவை உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தினார். அதன் பின்னர் முன்னைய தூபி இருந்த இடத்தில்…
-
- 6 replies
- 928 views
-
-
சீனா-ரஷிய அரசுகளின் ஆதரவு இருக்கையில் சர்வதேச தடைகள் குறித்து அச்சம் இல்லை.! "சர்வதேச தடைகள் குறித்த அச்சம் காரணமாக நாங்கள் இழைக்காத குற்றங்களை இழைத்ததாக ஏற்றுக்கொள்ளமாட்டோம். தடைகள் ஏதாவது விதிக்கப்படும் என்றால் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையே அதனைச் செய்ய வேண்டும். எனினும், எமக்கு உதவ ரஷ்யாவும் சீனாவும் பாதுகாப்புச் சபையில் உள்ளன." - இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "ஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகிய அரசின் முடிவு புத்திசாலித்தனமானது. தற்போது எங்களால் சுதந்திரமாகப் பதில்களை வழங்க முடியும். அதனையே நாங்கள் செய்கின்றோம். ஐ.நா. மனித உரிமைகள் சபை தீர்மானங்களைக் கொண்டு வரலாம். ஆன…
-
- 2 replies
- 420 views
-
-
யாழ்ப்பாணம் - நெடுந்தூர பயணிகளுக்கான பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது.! யாழ்.குடாநாட்டிலிருந்து நெடுந்தூர பயணிகள் சேவைக்கான பேருந்து நிலையம் இன்று காலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி, கரையோரபாதுகாப்பு, கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா பணிப்பிற்கமைய, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுசரணையில் சுமார் 122 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண நெடுந்தூர பேரூந்து நிலைய திறப்பு விழா, யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இன்றைய நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் அ…
-
- 54 replies
- 4.5k views
-
-
கலாநிதி முத்துக்கிருஸ்ணா சர்வானந்தனை வெளியேற்றியது யாழ்.பல்கலை யாழ்ப்பாண பல்கலைக்கழக பொருளியல் விரிவுரையாளரான கலாநிதி முத்துக்கிருஸ்ணா சர்வானந்தனை பல்கலைக்கழகம் வேலையை விட்டு விலக்கியுள்ளது. முன்னைய மைத்திரி கால அரசியலில் பின்கதவால் யாழ்.பல்கலைக்கழகத்தினுள் நுழைந்தவர்கள் கலாநிதி முத்துக்கிருஸ்ணா சர்வானந்தன் மற்றும் அகிலன் கதிர்காமர். துறை தொடர்பில் எந்தவித பரிச்சயமும் இல்லாத போதும் நல்லாட்சி மைத்திரி சிபார்சில் எவ்வாறேனும் யாழ்.பல்கலையினுள் நுழைந்துவிட வேண்டுமென முனைப்பாக இருந்தவர்கள் இவர்கள் இருவருமே. புலி நீக்க அரசியல் அரசசார்பற்ற அமைப்புக்களை களமிறக்கி கல்லா கட்டுவதென்ற தொழிலில் ஈடுபட்டவர்களுள் முக்கியமாவரான கலாநிதி முத்துக்கிருஸ்ணா சர்வானந்தனை…
-
- 3 replies
- 1.1k views
-
-
டக்ளஸ் - அங்கஜன் அடிபிடியால் வடமாகாணம் முழுவதும் இ.போ.ச சேவைகள் முடக்கம்..! பலர் பாதிப்பு.. டக்ளஸ் - அங்கஜன் இடையிலான போட்டியினால் புதிதாக நியமனம் செய்யப்பட்ட இ.போ.ச வடபிராந்தி முகாமையாளர் நியமனம் நிறுத்தப்பட்டதை கண்டித்து இ.போ.ச பணியாளர்கள் பணி புறக்கணிப்பில் குதித்துள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளராக நியமிக்கப்பட்ட செல்லத்துரை குனபாலச்செல்வனின் நியமனத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நேற்று இரவு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் வடக்கு மாகாணத்தில் இ.போ.ச தொழிற்சங்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றன. வடபிராந்தியத்தில் குறைந்தளவானோரைக் கொண்ட கட்சி ஒன்றின் நடவடிக்கையால் பிராந்திய முகாமையாளர் நியமனம் …
-
- 2 replies
- 1.2k views
-
-
முன்னேற வேண்டுமாயின் முழு இலங்கையையும் விற்பனை செய்ய வேண்டும் என துறைமுக அதிகார சபையின் தலைவரும், முன்னாள் இராணுவ தளபதியுமான தயா ரத்நாயக்க கூறியதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை மாத்திரமல்ல முழு இலங்கையையும் விற்பனை செய்ய வேண்டும் என அவர் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியாளர்களுடன் நாட்டை முன்னேற்றுவது என்பது கஷ்டமான காரியம் என்பதால், முழு நாட்டையும் விற்பனை செய்து விடுவது நல்லது எனவும் தயா ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. https://www.tamilwin.com/politics/01/267611?ref=home-latest
-
- 5 replies
- 1.2k views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் -இறுதி விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு 34 Views 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளது. இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து குறித்த அறிக்கை ஆணைக்குழுவின் தலைவர் உயிர்நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா உள்ளிட்ட உறுப்பினர்களினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாதத் த…
-
- 0 replies
- 294 views
-
-
பதவி உயர்வுகள் கிடைப்பது போன்று தடை உத்தரவுகள் கிடைக்கின்றன’-இரா.சாணக்கியன் 22 Views எதிர்வரும் 3ஆம் திகதி பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலாக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் பங்கேற்பதற்கு நீதின்றத்தினால் தனக்கு தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “மூன்றாம் திகதி முதல் ஆறாம் திகதி வரையிலான போராட்டத்தில் கலந்து கொள்வதனை தடை செய்யுமாறு களுவாஞ்சிக்குடி பொலிஸினால் நீதிமன்றங்களை நாடி பெற்றுக்கொள்ளப்பட்ட உத்தரவு என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் வேடிக்கையான விடயம் என்னவென்றால், இந்த ந…
-
- 0 replies
- 632 views
-
-
யாழ்.மாவட்டத்தில் ஒரு பிரதேச செயலர் பிரிவில் மட்டும் 247 தனியாருடைய காணிகளை சுவீகரிக்க அரசு பிரயத்தனம்..! யாழ்.சங்கானை பிரதேச செயலர் பிரிவில் 247 தனிநபர்களுடைய காணிகளை அமைச்சுக்கள், திணைக்களங்களின் தேவைகளுக்காக சுவீகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு மற்றும் சில அமைச்சுக்களின் தேவைகளுக்காக சுமார் 247 தனிநபர்களின் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான காட்சிப்படுத்தல்களும் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் சங்கானை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி கலந்துரையாடலின் போதே குறித்த விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. குறி…
-
- 0 replies
- 504 views
-
-
குருந்தூர் மலை விடயம் குறித்து இன்று முக்கிய கலந்துரையாடல்.! முல்லைத்தீவு - குருந்தூர் மலை மற்றும் படலைக்கல்லு (கல்யாணிபுர) ஆகிய பகுதிகளில் தொல்பொருள் ஆராய்ச்சிகள் முன்னெடுப்பதற்கான பூர்வாங்கச் செயற்பாடுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அங்கு தமிழ் மக்களின் பூர்வீக அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் தொல்லியல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் விகாரை அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் அபாயமுள்ளது எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளின்போது யாழ்.பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துறைசார்ந்தவர்களையும் இணைத்துக்கொள்ளுமாறு தமிழ் அரசியல், சிவில் பிரதிநிதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில்,…
-
- 0 replies
- 225 views
-
-
குருந்தூர் மலை பகுதியில் அகழ்வாராட்சி ஆரம்பமாகிறது.! குருந்தூர் மலை பகுதிக்கு இன்றைய தினம் அகழ்வாராய்ச்சியில் ஈடுபடுகின்ற அதிகாரிகள் சென்றுள்ளதோடு, பணிக்கு தேவையான உபகரணங்கள் பலவும் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, 28.01.21 முதல் தொடர்ச்சியாக இந்த அகழ்வாராய்ச்சி பணிகளை செய்யப் போவதாக, குறித்த தொல்பொருள் திணைக்களத்தின் அகழ்வாராய்ச்சிக்கு பொறுப்பாக சென்றிருக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் இதேவேளை, இன்றைய தினம் அவர்கள் கொண்டு சென்ற அகழ்வாராய்ச்சிகான பொருள்களில் கட்டிடங்கள் கட்டுவதற்கும், தூண்கள் போடுவதற்கும் பயன்படுத்துகின்ற தூண் பெட்டிகளும் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.…
-
- 1 reply
- 480 views
-
-
UPDATE – வர்த்தகர்களின் எதிர்ப்பினையடுத்து, வர்த்தக நிலையங்களை உடைக்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்! வர்த்தகர்களின் கடும் எதிர்ப்பினையடுத்து, வர்த்தக நிலையங்களை உடைக்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு − செட்டியார் தெரு பகுதியிலுள்ள சில வர்த்தக நிலையங்கள் இன்று காலை உடைக்கப்பட்டதை அடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. குறித்த பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களின் முன்பகுதி ஒன்றரை மீற்றர் அளவிற்கு உடைக்கப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபை ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனை வர்த்தகர்கள் ஏற்றுக்கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. எனினும், இன்றைய தினம் வருகைத் தந்த அதிகாரிகள், வர்த்தக நிலையங்களை முழுமையாக உடைக்க வேண்டும் என கூறியுள்ளனர். …
-
- 0 replies
- 357 views
-
-
ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் வாங்கிக்கட்டிக்கொண்ட இலங்கை – உலக அரங்கில் தொடரும் அவமானம் மாயமான் நந்தசேனர் நாட்டில் இன்னும் மழை பெய்வதாகவில்லை. நாட்டில் மும்மாரி மொழியும், பாலும் தேனும் வழிந்தோடும் என முடிசூடும்போது மகாஜனங்களுக்கு அளித்த வாக்குறுதி பிசு பிசுத்துப்போகுமோ என்று ஐயுறுமளவுக்கு காரியங்கள் நடக்கின்றன. ஐ.நா.சபையின் இலங்கைக்கான தூதுவர் மோஹன் பீரீஸ் தன்னையும், தனது நாட்டையும் நகைப்புக்குள்ளாக்கியிருக்கிறார். வியாழன்று நியூ யோர்க்கில் நடைபெற்ற ஐ.நா.பொதுச்சபைக் கூட்டத்தில் அவர் ஆற்றிய கன்னிப் பேச்சின்போது “ஜெனிவாவிலுள்ள ஐ.நா.மனித உரிமைகள் ஆணையகம் அழித்தொழிக்கப்பட்ட பயங்கர…
-
- 1 reply
- 673 views
-
-
காத்தான்குடியில் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட பகுதி மீள முடக்கப்பட்டது மட்டக்களப்பு- காத்தான்குடியில் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட பகுதியை தேசிய கொவிட்-19 செயலணியின் முடிவு வரும்வரை, உடன் மூடுமாறு மாவட்ட செயலணியில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காத்தான்குடியில் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட 7 கிராம சேவகர் பிரிவையும் தேசிய கொவிட் 19 செயலணியில் இருந்து அறிவித்தல் வரும்வரை உடனடியாக மூடுவதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியினால் தீர்மானிக்கப்பட்டு, முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவு, கடந்த டிசம்பர் 31ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டது. பின்னர் 7 கிராம ச…
-
- 0 replies
- 320 views
-
-
கிழக்கு முனைய விவகாரத்தில் எதிர்ப்புக்கள் அரசின் நாடகமே – ஆளுந்தரப்பை சாடும் ஹிருணிகா 9 Views கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதைப் போன்று ஆளுந்தரப்பின் இரண்டாவது நாடகம் தற்போது அரங்கேறியுள்ளது. துறைமுக தொழிற்சங்கங்களின் போராட்டங்களை முடக்குவதற்காகவே இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. எனவே மக்கள் இதற்கு ஏமாந்துவிடக்கூடாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார். தேசிய சொத்துக்களை வரலாற்றில் எந்த அரசாங்கத்திலும் இல்லாதளவுக்கு இந்தியா, சீனா என அனைத்து நாடுகளுக்கும் பகிர்ந்தளித்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக மக்கள் ஆரம்பத்திலேயே…
-
- 1 reply
- 321 views
-
-
ஜெனீவாவை சமாளிக்க துருப்புச் சீட்டாகும் கிழக்கு முனையம் – அகிலன் 63 Views கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதென அரசாங்கம் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியிலும் முடிவெடுத்தமைக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஜெனீவாவில் உருவாகியிருக்கும் நிலைமைதான் இதற்கு உடனடிக் காரணம். ஜெனீவாவில் நெருக்கடி ஒன்று உருவாகும் என்பதை இலங்கை அரசாங்கம் கணித்திருந்த போதிலும், அது இந்தளவுக்கு மோசமானதாக வரும் என்பதை எதிர்பார்க்கவில்லை. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் பெப்ரவரி 22 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் நிலையில், அதில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் இலங்கை அரசின்…
-
- 1 reply
- 453 views
-
-
இனப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாத இராணுவ பயிற்சி ஆபத்தானது 94 Views இலங்கை இராணுவம் போர் விதிமுறைகளை மீறியுள்ளமை தொடர்பாக நீதி கேட்கும் தமிழர் தரப்பு, அந்தக் குற்றங்களைப் புரிந்தவர்கள் மாணவர்களுக்கு பயிற்சியை வழங்குவதை ஏற்றுக்கொள்வது, குற்றம் இழைத்தவர்களை நாமே பிணை எடுப்பதற்கு நிகரானதாகும் என முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் ரெலோ இளைஞர் அணி செயலாளருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் கட்டாயமாக 18 வயதுக்கு மேற்பட்டோர் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்று வைஸ் அட்மிரல் சரத் வீரசேகர அறிவித்திருந்தார். இந்நிலையில், வைஸ் அட்மிரல் சரத் வீரசேகராவின் இந்த அறிவிப்பு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சபா குகதாஸ், “…
-
- 0 replies
- 351 views
-
-
எமது பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படவேண்டும். இல்லையேல் இம்முறை போராட்டமானது வேறு வடிவில் அமையும் - என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை விடுத்தார். நுவரெலியாவில் இன்று (31) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “இந்த நாட்டில் மாறி, மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் எமது தொப்புள்கொடி உறவுகளை தொடர்ச்சியாக ஏமாற்றியுள்ள…
-
- 1 reply
- 707 views
-
-
என் விரலை கல்லால் காயப்படுத்திய இ.தொ.கா வால் ஒரு வீடு கூட கட்ட முடியாமல் இருக்குறதே – மனோ கேள்வி !! கொட்டக்கலையில் மலையக மக்களின் சம்பள உயர்விற்காக நான் போராடிய போது இ.தொ காவின் அல்லகைகள் என் மீது கல்லை எறிந்தார்கள் , அந்நேரம் எனது இடது கையை தூக்கி தடுக்க முற்பட்ட போது என் விரல் மீது கல் பட்டது. இன்றும் விரல் வருத்தம் தொடர்கிறது, ஆனால் மலையக மக்களின் மன வருத்தம் ஆறியதாக இல்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறினார். தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விவாகாரம், வீடமைப்பு திட்டம் குறித்து ” அண்ணாச்சி செய்தி” சார்பாக கேட்ட போதே இதனை கூறினார். மேலும் அவர் கூறுகையில் தற்போதைய இ.தொ.கா தலைமை சிறுப்பிள்ளை தனமாக பேசுவது எனக்கு கவலையாக இருக்கிறது.…
-
- 0 replies
- 276 views
-
-
மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை – கடும் சீற்றத்தில் கோத்தபாய சண்டே டைம்ஸ் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை குறித்து கடும் சீற்றமடைந்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை கடந்த காலத்தில் வேறு எந்த நாடு குறித்தும் வெளியான அறிக்கைகளை விட உள்ளடக்கத்தில்- தொனியில் முன்னொரு போதும் காணப்படாததாகவும் வழக்கத்திற்கு மாறானதாகவும் காணப்படுகின்றது என ஜனாதிபதியின் ஆலோசகர்கள் அவருக்கு தெரிவித்துள்ளனர். ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு கடும் பதிலை கொடுப்பது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி திங்கட்கிழமை கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். அரசாங்க தரப்பை சேர்ந்த பலர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். மனித உ…
-
- 3 replies
- 589 views
-