ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கட்டாய இராணுவ பயற்சி என்ற அறிவிப்பு வெறும் முன்மொழிவு மட்டுமே http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/Keheliya.jpg 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயற்சியை வழங்குவது என்ற பொதுப் பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு வெறும் முன்மொழிவு மட்டுமே என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், நாட்டின் அரசியல் பின்னணி, நிர்வாகம் மற்றும் அத்தகைய நடவடிக்கையின் அவசியம் ஆகியவற்றை மதிப்பீடு செய்த பின்னர் இது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இதேவேளை வளர்ந்த மற்றும் ஜனநாயக நாடுகளும் இ…
-
- 0 replies
- 339 views
-
-
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2021 இல் ‘வலுவாக மீளக்கூடியது’ – இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2021 ஆம் ஆண்டில் சுமார் 5 – 6% வளர்ச்சியுடன் ‘வலுவாக மீண்டும் வரும்’ என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் தெரிவித்தார். அரசாங்கமும் மத்திய வங்கியும் சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் இருதரப்பு மற்றும் பலதரப்பு பங்காளிகளுடன் கலந்துரையாடல்களைத் தொடர்கின்றன, இலங்கைப் பொருளாதாரம் தொடர்ந்து மீளெழும் தன்மையைக் காண்பிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இலங்கையின் இறையாண்மை பத்திர விளைச்சல் மற்றும் குறிப்பிடத்தக்கவை பங்குச் சந்தை குறியீடுகளின் உயர்வு உலகளாவிய மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் இலங்கை பொருளா…
-
- 0 replies
- 264 views
-
-
பொதுமக்களின் காணிகள் சுவீகரிப்பு: வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/pro-1-7-720x450.jpg பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு, கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்- வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மண்கும்பான் பிரதேசத்தில் 11 பேருக்கு சொந்தமான 5 ஏக்கர் காணியை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்கும் நோக்கில் நில அளவைத் திணைக்களத்தினால் அளவீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காணி உரிமையாளர்களும் பிரதேச மக்களும் அரசிய…
-
- 0 replies
- 346 views
-
-
நாட்டின் அரைவாசிப் பேருக்கு இலவச தடுப்பூசி வழங்கப்படும் : ஹெகலிய ரம்புக்வெல நாட்டின் மக்கள் தொகையில் 50 வீதமானோருக்கு கொவிட்-19 தடுப்பூசியை இலவசமாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், நாட்டிலுள்ள 11 மில்லியன் மக்களுக்கு இலவச தடுப்பூசி வழங்க அரசாங்கத்திடம் திட்டமுள்ளது என்றார். மார்ச் மாதத்துக்குள் இந்தத் தடுப்பூசி நாட்டுக்குக் கிடைக்கும் என்றும் தற்போது நான்கு தடுப்பூசிகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். Thinakkural.lk
-
- 0 replies
- 368 views
-
-
‘யாழ்.பல்கலையில் வேறு தூபிக்கு இடமில்லை’ எஸ்.நிதர்ஷன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்படுமென்றும் அதைத் தவிர, வேறு எந்தத் தூபியும் அமைப்பதற்கு இடமளிக்க முடியாது என்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில், மாணவர் ஒன்றியத்தால், இன்று (19) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இதன்போது மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்ட பின்னர், அது மீண்டும் புனரமைக்கப்ப…
-
- 0 replies
- 288 views
-
-
முல்லைத்தீவில் ஊடுருவி வட- கிழக்கு நில இணைப்பினை உடைக்கும் சதித்திட்டமே அரங்கேறியுள்ளது- சிறிக்காந்தா http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/srikantha-720x450.jpg வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான நில இணைப்பின் தொடர்ச்சியை, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடுருவி உடைக்கும் சதித்திட்டமே தற்போது பேரினவாதத்தினால் அரங்கேறியுள்ளதென தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறிக்காந்தா தெரிவித்துள்ளார். குருந்தூர் மலை விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே என்.சிறிக்காந்தா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “முல்லைத்தீவு …
-
- 0 replies
- 247 views
-
-
ஜோசப் பரராஜசிங்கம், படுகொலை வழக்கில் இருந்து.. பிள்ளையான் விடுதலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட ஐந்து பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் படுகொலை…
-
- 26 replies
- 4.7k views
-
-
மட்டு. போதனாசாலை தாதியர்கள் பகிஷ்கரிப்பு! மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களால் ஒருமணி நேர பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று (19) காலை முன்னெடுக்கப்பட்டது. அரச தாதியர் சங்கம், ஐக்கிய தாதியர் ஒன்றியம் என்பன இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தன. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள வைத்தியசாலை நிர்வாக கட்டடத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய தாதியர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்தனர். மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் தாதியர் ஒருவர் கொரோனா நோயாளியாக இனங்காணப்பட்ட நிலையில், அவர் சிகிச்சைக்காக காத்தான்குடி வைத்தியசாலையிலுள்ள தாதியர்களுக்கான சிகிச்சைப் பிரி…
-
- 1 reply
- 646 views
-
-
விடுதலைப்புலிகளின் விமானங்களை அழிப்பதற்கு இந்தியா வழங்கிய ஏவுகணைகள் பரிசோதிப்பு 100 Views விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா அரசுக்குமிடையில் போர் உக்கிரமாக இடம்பெற்ற 2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியாவினால் சிறீலங்காவுக்கு வழங்கப்பட்ட 54 இக்லா வகை தரையில் இருந்து வானுக்கு செலுத்தும் ஏவுகணைகளின் ஆயுட்காலத்தை இந்திய அதிகாரிகள் பரிசோதித்து உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்வு நேற்று (16) இடம்பெற்றுள்ளது. 2007 ஆம் ஆண்டு போர் இடம்பெற்ற போது விடுதலைப்புலிகளின் வான்படை பிரிவு கொழும்பு கட்டுநாயக்கா மற்றும் பலாலி விமானத்தளங்கள் மீது வான்தாக்குதல்களை வெற்றிகரமாக நிகழ்த்தியிருந்தனர். சிறீலங்கா வான்படையினரால் விடுதலைப்பு…
-
- 8 replies
- 2k views
-
-
73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் வழமைப் போன்று கம்பீரமாக நடைபெறும் என அறிவிப்பு கொரோனா பரவலுக்கு மத்தியில் இம்முறையும் 73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணர்தன தெரிவித்தார். இலங்கையின் 73 ஆவது சுதந்திரதின கொண்டாட்டங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று (திங்கட்கிழமை) ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அங்கு மேலும் கருத்து வௌளியிட்ட பாதுகாப்பு அமைச்சர், “உலகம் முழுதும் கொரோனா தொற்றுக்கு முகங்கொடுத்துள்ள போதிலும் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 4ஆம் திகதி கொண்டாடப்படுவதைப் போன்று…
-
- 0 replies
- 429 views
-
-
யாழ் – கொழும்பு ரயில் சேவைகள் வழமைக்கு – முன்பதிவுகளையும் மேற்கொள்ள முடியும் 5 Views நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நீண்ட தூர ரயில் சேவைகள், நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு ரயில்கள் நேற்று புறப்பட்டன. காங்கேசன்துறையில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 6.10 மணிக்கு புறப்படும் உத்தரதேவி கடுகதி ரயிலும் காங்கேசன்துறையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து 9.45 மணிக்கு புறப்படும் யாழ்.தேவி ரயில் சேவையும் நேற்று ஆரம்பமாகின. அவ்வாறே கல்கிசையில் இர…
-
- 0 replies
- 361 views
-
-
இணைத்தலைமை குழுவில் இணையப்பேவதில்லை – சிறீலங்கா 17 Views எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை முன்வைப்பதற்கு பிரித்தானியா, மொன்ரோநீக்குரோ, வடமசடோனியா, கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் திட்டமிட்டுள்ள நிலையில், அதில் இணைந்து கொள்ளப் போவதில்லை என சிறீலங்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் தாம் அதனை நிராகரித்து விட்டதாகவும் சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது. நாம் எதிர்க்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக நாம் இணைந்து கொள்வது அரசியலில் சவாலானது என சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம…
-
- 0 replies
- 835 views
-
-
பொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கு மீண்டும் முயற்சி செய்தால் சிவில் நிர்வாகம் முடக்கப்படும் – மண்டைதீவு போராட்டத்தில் சிவாஜிலிங்கம் பொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கான முயற்சிகள் மீண்டும் இடம்பெற்றால் வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகம் முடங்கும் நிலையேற்படும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று மண்டைதீவில் பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டவேளை அதனைக் கண்டித்து பொதுமக்களும் தமிழ் அரசியல்வாதிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் பொதுமக்களி…
-
- 3 replies
- 482 views
-
-
யாழில் கொரொனாவை பரப்பியதாக பிரபல்யமடைந்த சுவிஸ் போதகர் காலமானார் யாழ்ப்பாணத்தில் கொரோனா பரப்பியதாக பெரும் பரபரப்பைக் கிளப்பிச் சென்ற சுவிஸ் போதகர் சற்குணராஜா சற்று முன் சுவிஸ்லாந்தில் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சற்குணராஜாவின் சொந்தப் பெயர் Sivarajah Paul Satkunaraja ஆகும். இவர் 1959ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்.இவரது பூர்வீக சமயம் சைவசமயமாகும். 1980ம் ஆண்டு ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்த சற்குணராஜா 1982ல் சுவிஸ்லாந்தில் திருமணத் முடித்து நிரந்தர வதிவிடத்தைப் பெற்றார். இவர் 1988ம் ஆண்டு தான் ஜேசுவால் ஆசீர்வதிக்கப்பட்டு மதம் மாறியதாக கூறித்திரிந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலதிக தகவல்கள் விரைவில்… https://www.thaarakam.com…
-
- 37 replies
- 4.4k views
-
-
நாட்டில் உளுந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்து, சந்தையில் உளுந்தின் விலை அதிகரித்துள்ளது. உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்கில், கடந்த வருடம் பல பொருட்களுக்கு அரசாங்கத்தினால் இறக்குமதித் தடை விதிக்கப்பட்டது. இதனடிப்படையில், உளுந்து இறக்குமதிக்கும் கடந்த ஜூன் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நாட்டின் உளுந்து விலை அதிகரித்துள்ளதுடன், உளுந்திற்கு பாரிய தட்டுப்பாடும் நிலவுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட காலப்பகுதியில் 300 ரூபாவாகக் காணப்பட்ட ஒரு கிலோ உளுந்து, தற்போது சுமார் 2,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். உளுந்து விலை அதிகரிப்பினால் சைவ உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், உளு…
-
- 2 replies
- 386 views
-
-
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயிற்சி -கோட்டாபய அரசின் திட்டம் வெளியானது நாட்டில் ஒழுக்கமான சமுதாயம் ஒன்றை உருவாக்கும் நோக்கில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயற்சியை வழங்குவது குறித்து கோட்டாபய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான யோசனையை தான் நாடாளுமன்றில் முன் வைக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாட்டில் சட்டத்தை மதிக்கும் சமுதாயத்தை உருவாக்கும் நோக்குடனேயே இந்த திட்டத்தை அமுல்படுத்த எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உலகில் உள்ள சில நாடுகள் இவ்வாறான திட்டத்தை அமுல்படுத்தி சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். …
-
- 4 replies
- 730 views
-
-
தலதா மாளிகையில் எந்தவோர் ஊழியரும் தொற்றுக்காளாகவில்லை; கண்டி பொலிஸார் 21 பேருக்கு கொவிட்-19 கண்டி தலதா மாளிகையில் எந்தவோர் ஊழியரும் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகவில்லை என தலதா மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை வலுப்படுத்தவும் கோவிலுக்குள் கொவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுலில் இருப்பதை உறுதி செய்யவும் கண்டி பொலிஸ் பிரிவின் மேலதிக அதிகாரிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கை கூறுகிறது. அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் வழிகாட்டலின் கீழும் தியவதன நிலமேயின் கடுமையான மேற்பார்வையிலும் நாளாந்த சடங்குகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது. …
-
- 0 replies
- 445 views
-
-
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக யாழ் மாவட்டத்தில் மூடப்பட்டிருந்த பொதுச் சந்தைகள் இன்றையதினம்(18.01.2021) மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த 15 ஆம் திகதி வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு வழிகாட்டல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக வடக்கு மாகாணத்தில் மூடப்பட்டிருந்த பொதுச் சந்தைகள் இன்றையதினம் திறக்கப்பட்டுள்ளன. சந்தைகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியினை பேணி வியாபார நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது சந்தைகளில் காவல்துறையினர், சுகாதாரப் பிரிவினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழில் பொதுச்சந்தைகள் ம…
-
- 0 replies
- 296 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்) மரணிப்பவர்களை அடக்கம் செய்வது பற்றி குர்ஆனில் எங்கும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானதாகும். மரணிப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பாக குர்ஆனில் பத்து இடங்களுக்கும் அதிகம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதனால் அரசியல் தேவைக்காக எந்தவொரு மதத்தையும் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்துள்ளது. முஸ்லிம் ஒருவர் மரணித்தால் எரிக்கக்கூடாது. அடக்கம் செய்யவேண்டும் என குர்ஆனில் எங்கும் தெரிவிக்கப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளித்து அவருக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பதில் பொதுச் செயலாளர் …
-
- 0 replies
- 272 views
-
-
மண்டை தீவில் பதற்ற நிலை - பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.! விருந்தினர் விடுதி ஒன்று அமைப்பதற்காக மக்களின் காணி சுவீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தினர் பொலிஸாரை வரவழைத்துள்ளமையால் மண்டை தீவில் பதற்ற நிலை ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார். முன்னதாக ஒன்று திரண்ட மக்கள் வெளியிட்ட எதிர்ப்பு நிலையை அடுத்து அங்கு சென்றிருந்த நில அளவைத் திணைக்களத்தினர் அங்கிருந்து திரும்பிச் சென்றிருந்தனர். சிறிது நேரத்தில் யாழ்ப்பாணத்தின் பொலிஸ் உயர் அதிகாரிகளும் பொலிஸாரும் மண்டை தீவுக்கு பாதுகாப்புக்கு வந்திருந்த நிலையில் சிறிது நேரத்தில் முன்னர் திரும்பிச் சென்றிருந்த நில அளவைத் திணைக்களத்தினர் அங்கு பிரசன்னமாகியுள்ளனர். இதனை…
-
- 2 replies
- 643 views
-
-
செங்கலடி பிரதேச சபை த.தே.கூட்டமைப்பின் வசமானது! by : Yuganthini http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/prathesa-sabai.jpg மட்டக்களப்பு – ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச சபையின் தவிசாளராக சின்னத்துரை சர்வானந்தன் ஆறு மேலதிக வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டார். மட்டக்களப்பு – ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச சபையின் புதிய தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு, இன்று (திங்கட்கிழமை) கிழக்கு மாகாண உள்ளுளூராட்சி ஆணையாளர் ந.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. 31 பிரதேச சபை உறுபினர்களைக் கொண்ட குறித்த பிரதேச சபையில் ஏற்கனவே தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ந.கதிரவேல் பதவி வகித்தார். இந்நிலையில் …
-
- 0 replies
- 310 views
-
-
முள்ளிவாய்கால் நினைவுத்தூபி அழிப்பு – சிறீலங்காவையும், இந்தியாவையும் உலுக்கிய நிகழ்வு – (செய்தித் தொகுப்பு –பிரபா) 118 Views மகிந்தவிடம் அவசரமாக ஓடிய இந்தியத் தூதுவர் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தது தொடர்பில் அதிர்ச்சி அடைந்த இந்தியத் தூதுவர் சிறீலங்கா பிரதமரை அவசரமாக சந்தித்தன் மூலம் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தாக தெரிவிக்கப்படுகின்றது. நினைவுத்தூபி இடித்ததும் சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபச்சாவை சந்திப்பதற்கு இந்தியத் தூதுவர் கோபால் பக்லே முயன்றபோதும், மகிந்த குருநாகல் பகுதிக்கு சென்றதால் அவரால் சந்திக்க முடியவில்லை. எனினும் கடந்த ஞாயிறு மாலை மகிந்த கொழும்பு திரும்பியதும் உடனடியாக மகிந்தவை அவர…
-
- 1 reply
- 1k views
-
-
பாண் மற்றும் பணிஸ் விலை 10 ரூபாவால் அதிகரிக்கும் - இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் விளக்கம். பேக்கரி தயாரிப்புக்களுக்கான மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பை தொடர்ந்து பாண், பணிஸ் உள்ளிட்டவற்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் வாய்ப்புள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்க தலைவர் எம்.கே.ஜயவர்த்தன கூறியுள்ளார். பார்ம் எண்ணெய்க்கு ஒரு லீற்றருக்கு 250 ரூபா வரி அறவிடப்படும் நிலையில், அதன் விலை 500 ரூபாவாகவும், மாஜரின் ஒரு கிலோவுக்கு 600 ரூபா வரி அறவிடப்படும் நிலையில் 1000 ரூபாவாகவும் உயர்வடைந்துள்ளதால் பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்காமல் இருப்பது சாத்தியமற்றது என தெரிவித்தார். எவ்வாறாயினும் பேக்கரி பண்டங்களின் விலையை அதிகரிக்காமல் இருக்க, சலுகைகளை கோரி ஜனா…
-
- 0 replies
- 261 views
-
-
இலங்கையிலும் இந்தியாவின் “அதானி -அம்பானி” நிறுவனங்களுக்கு எதிராக போராட்டம்.! விவசாயிகளின் உரிமைக்காகவும், காணி சட்டத்தை திருத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை கண்டித்தும் விவசாயிகள் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நாளைமறுதினம் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். இந்தியாவில் அதானி -அம்பானி நிறுவனங்கள் விவசாய நிலங்களை சூறையாடி கொண்டுள்ளதாக தெரிவித்து இந்திய விவசாயிகள் நீண்ட நாட்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதனை அடிப்படையாக கொண்டே இலங்கையிலும் விவசாயிகளின் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக விவசாயிகள் அமைப்புகள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் காணி சட்டத்தில் முக்கிய மூன்று திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதை அடுத்து இ…
-
- 0 replies
- 462 views
-
-
ஐ.நாவைச் சமாளிக்க அரசு கடும் பிரயத்தனம் – குற்றச்சாட்டுக்களை ஆராய ஆணைக்குழு அமைக்க கோட்டா முடிவு.! இலங்கையில் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீண்டும் பரிசீலிக்கவும், இலங்கையின் சார்பில் இம்முறை ஜெனிவா அமர்வில் யோசனை ஒன்றை முன்வைக்கவும் மூவர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கை அரசு மாற்று நடவடிக்கைகளைக் கையாளத் தீர்மானித்துள்…
-
- 0 replies
- 319 views
-