ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வு காரணமாக ஏற்பட்ட பாரிய பள்ளங்களில் தற்போது மழை நீர் தேங்கி நிற்பதனால் அவை ஆபத்தான பிரதேசங்களாக மாறியுள்ளன என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். சாதாரண நிலப்பரப்புகளாக காணப்பட்ட பிரதேசங்களில் கடந்த காலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு கண்மூடித்தனமாக இடம்பெற்று வந்துள்ளது. இதனை கண்டித்து அவ்வவ்போது மாவட்டத்தில் போராட்டங்களும் இடம்பெற்றன. இருந்தும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியவில்லை, சட்டத்தை பாதுகாக்கின்றவர்களின் ஒத்துழைப்புடனும், அதிகார மற்றும் அரசியல் தரப்பின் ஆதரவுடனும் சட்டவிரோத மணல் அகழ்வு இன்றும் இடம்பெற்று வருகிறது. சட்டவிரோத மணல் அகழ…
-
- 1 reply
- 487 views
-
-
(நா.தனுஜா) முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் முட்டாள்தனமான தீர்மானத்தின் பின்னணியில் பௌத்த தேரர்கள் இருப்பதாகவே பலரும் கருதுகின்றார்கள். ஆனால் அது உண்மையல்ல என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். 1983 ஆம் ஆண்டில் தமிழர்களுடன் பிரச்சினையொன்றைத் தோற்றுவித்துக்கொண்டதைப் போன்று, மீண்டும் இவ்விவகாரத்தின் ஊடாக பிரச்சினையொன்றைத் தோற்றுவிக்கும் வகையிலேயே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமே தவிர, முஸ்லிம்களின் உரிமைகளைக் குழிதோண்டிப்புதைக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். பொதுபலசேனா அமைப்பி…
-
- 0 replies
- 282 views
-
-
இலங்கைக்கு கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்க ஐ.நா. ஆதரவு – பிரதமருடன் பிரதிநிதி பேச்சு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்குதல் மற்றும் நிர்வகிப்பதற்கான ஆதரவை பெற்றுத் தருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு உறுதி வழங்கியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி வைத்தியர் ராஷியா பெண்டிசே மற்றும் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதி டிம் சுடன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். பல நாடுகள் கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்க ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கைக்கு இத்தடுப்பூசியை வழங்…
-
- 0 replies
- 435 views
-
-
புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 64 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் எம்யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கொழும்பில் உள்ள ஐ.நா உயர்ஸ்தானிகராலயத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகள் 64 பேருக்கு தொற்று! | NewUthayan
-
- 3 replies
- 965 views
-
-
மதநம்பிக்கைகளை பின்பற்றுவது இலங்கை மக்களின் அடிப்படை உரிமை- அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக செயற்படக்கூடாது- உடல்களை தகனம் செய்யும் விவகாரம் குறித்து ரணில் கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்கள் தொடர்பான உணர்பூர்வமான பிரச்சினை குறித்து நாட்டின் அனைத்து சமூகத்தினருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னரே முடிவெடுக்கவேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை என்னசெய்வது என தீர்மானிப்பது மக்களின் உரிமை என குறிப்பிட்டுள்ள முன்னாள் பிரதமர் அனைத்து மதங்களையும் சேர்ந்த மதத்தலைவர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்ட பின்னரே அரசாங்கம் தனது முடிவை எடுத்திருக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டு…
-
- 0 replies
- 226 views
-
-
பலாலி விமான நிலையத்திற்கு தந்தை செல்வாவின் பெயரை சூட்டுமாறு கோரிக்கை by : Dhackshala http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/02/jaffna-international-airport.jpg பலாலி விமான நிலையத்திற்கு தந்தை செல்வாவின் பெயரை சூட்டுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம், வீ. ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ள அவர், “இலங்கை வாழ் அனைத்து இன மக்களின் நன்மதிப்பைப்பெற்று ‘ஈழத்து காந்தி’ என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் தந்தை செல்வா. 1947ஆம் ஆண்டு …
-
- 5 replies
- 877 views
-
-
இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்குச் செல்ல முடியும்: பிரவேசிப்பதற்கு மட்டுமே தடை! பிரித்தானியாவில் இருந்து எந்தவொரு பயணிகள் விமானங்களுக்கோ பயணிகளுக்கோ இலங்கைக்குள் பிரவேசிக்க இன்று (புதன்கிழமை) அதிகாலை முதல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்குச் செல்வதில் எந்த சிக்கலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/பிரித்தானியாவுக்கு-செல்/
-
- 2 replies
- 619 views
-
-
MCC: பயன்பெறும் நாடுகளில் இருந்து இலங்கை நீக்கம்.! 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிறுத்தப்பட்டுள்ளது.! எம்.சி.சி எனப்படும் அமெரிக்க மில்லேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கையின் ஊடாக இலங்கைக்கு முன்மொழியப்பட்டிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிலேனியம் சவால் ஒத்துழைப்பு குழு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. வொஷிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் நேற்று முன்தினம் கூடிய மிலேனியம் சவால் ஒத்துழைப்பு சபையின் பணிப்பாளர் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. மிலேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் நடப்பு அரசாங்கம் இருந்தது. கடந்த…
-
- 56 replies
- 4.8k views
-
-
சர்வதேச விசாரணையே ரெலோவின் உறுதியான நிலைப்பாடு – செல்வம் அடைக்கலநாதன் 27 Views “வருகின்ற 2021 மார்ச் மாதம் நடைபெற இருக்கும் மனித உரிமை ஆணையத்தின் கூட்டத் தொடரில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட்டு இலங்கை அரசினால் நடத்தப்பட்ட சர்வதேசக் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும். எந்தவிதமான கால அவகாசத்திற்கும் இடமளிக்க முடியாது. இலங்கை அரசினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப் படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக உள்ளோம்” என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; “ஏற்கனவே 2019 மார்ச் மாத மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத் த…
-
- 1 reply
- 337 views
-
-
அரசுக்கு மீண்டும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே கூட்டமைப்பு செயற்படுகின்றது – கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு “ அரசாங்கத்துக்கு மீண்டும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயல்படுகின்றது. அந்தக் கட்சியால் மனித உரிமைகள் கவுன்ஸிலின் உறுப்பு நாடுகளுக்கு வழங்கத் தயாரிக்கப்பட்ட நாம் ஒருபோதுமே கையொப்பமிடோம்” என்று தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைப் பணிமனையில் அவர் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே…
-
- 2 replies
- 443 views
-
-
தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்று சேர்ந்தும் அரசை ஜெனிவாவில் மிரட்டவே முடியாது - அமைச்சர் தினேஷ்.! "கடந்த நல்லாட்சி அரசின் இணை அனுசரணையுடன் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. தீர்மானங்கள் இரண்டும் செத்துப்போய்விட்டன. அதனைப் புதிய பிரேரணை மூலம் புதுப்பிக்க முடியாது. அதேவேளை, தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்று சேர்ந்தும் ஜெனிவாவில் இலங்கை அரசை மிரட்ட முடியாது." - இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசு, இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானங்களின் இணை அனுசரணையிலிருந்து இவ்வருடம் விலகிவிட்டது. அந்தத் தீர்மானங்களின் கா…
-
- 4 replies
- 796 views
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) நீதிஅமைச்சர் அலிசப்ரி அடிப்படைவாதத்தை தூண்டும்வகையில் தெரிவித்திருக்கும் கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என சிங்ஹல ராவய தேசிய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார். கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்காமல் இருப்பதன் மூலம் முஸ்லிம் இளைஞர்கள் அடிப்படைவாதத்துக்கு தள்ளப்படலாம் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்திருக்கும் கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவித்து சிங்ஹல ராவய தேசிய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் நேற்று பொலிஸ் தலைமையகத்துக்கு முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார். அந்த முறைப்பாட்டிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 533 views
-
-
வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அம்மாச்சி உணவகம் நேற்றிலிருந்து மூடப்பட்டுள்ளது. வவுனியா திருவநாவற்குளத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. தொற்று உறுதி செய்யப்பட்ட குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி அம்மாச்சி உணவகத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தல்களிற்கமைய அம்மாச்சி உணவகம் மூடப்பட்டுள்ளது. இதேவேளை வவுனியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புகளை பேணிய பலர் தனிமைப்படுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன், சில வியாபார நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வவுனியா…
-
- 0 replies
- 397 views
-
-
முஸ்லீம்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு மாலைதீவை கோரவில்லை – அமைச்சரவை பேச்சாளர் கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்கான உத்தியோகபூர்வ வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் விடுக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் எதனையும் அனுப்பவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்கள் தற்போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் கீழ் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை பின்பற்றி கையாளப்படுகின்றன என தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் பலசுற்றுப்பேச்சுவார்த்தைகள் இடம்பெ…
-
- 0 replies
- 294 views
-
-
நுவரெலியா மாவட்டம் முழுவதும் சுற்றுலா நகரமாக மாற்ற வேண்டும் நுவரெலியா வசந்த காலம் நடைபெறுவது போல தலவாக்கலை நகரையும் ஒரு சுற்றுலா நகரமாக மாற்ற முடியும். அங்கிருக்கின்ற நீர் தேக்கத்தின் ஒரு பகுதி பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றது. பல தற்கொலைகள் நடைபெற்றுள்ளது. எனவே அதற்கு உரிய முறையில் பாதுகாப்பு வேலி அமைத்து அதனை பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைத்து அங்கு சுற்றுலா தளமாக அதனை மாற்றுவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனஜீவ ராசிகள் அமைச்சர் சீ.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா மாநகர சபை கேட்போர் கூடத்தில் நுவரெலியா அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இவ்வாறு தெரிவித்துள்ளார்…
-
- 0 replies
- 230 views
-
-
கொரோனா தொற்றுக்குள்ளான ஷானி அபேசேகர கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம் by : Dhackshala http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/01/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0.jpg குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு அண்மையில் கொரோனா வைரஸ் த…
-
- 0 replies
- 301 views
-
-
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை ஒன்றினை கொண்டுவரும் அமெரிக்கா!! அடுத்த மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 46 வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை ஒன்றினை கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவும் பிரித்தானியாவுடனும் இணைந்து இதற்கான ஆரம்பக்கட்ட களப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய ஐ.நா. தீர்மானம் 30/1 இலிருந்து விலகியதாக இலங்கை அரசு அறிவித்தது. இதனை அடுத்து இலங்கைக்கு எதிராக ஒரு புதிய தீர்மானத்தை சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக உள்…
-
- 1 reply
- 623 views
-
-
சிலரை சுமந்திரன், முட்டாள்கள் ஆக்கலாம்’-க.வி.விக்னேஸ்வரன் கருத்து 103 Views திரு.சுமந்திரன் அவர்கள் சிலரை எல்லா காலத்திலும் முட்டாள்கள் ஆக்கலாம். பலரை சில காலம் முட்டாள்கள் ஆக்கலாம். ஆனால் எல்லோரையும் எல்லாக் காலத்திலும் முட்டாள்கள் ஆக்கமுடியாது எனத் தெரிவித்துள்ள நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், அதுவும் அவருக்கு சட்டம் படிப்பித்த ஆசிரியரை முட்டாளாக்கப் பார்ப்பது குருத்துரோகம் என்று சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமாகிய க.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “நானும் கஜேந்திரகுமாரும் பொய் சொன்னதாகக் கூறியுள்ளார். அவர் கூறுவது சரியா அல்லது கஜேந்திரகுமாரும் நானும் கூறுவது சரிய…
-
- 2 replies
- 936 views
-
-
சிறீலங்காவுக்கு எதிராக புதிய தீர்மானம் – அமெரிக்கா முயற்சி 8 Views எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடரில் சிறீலங்காவுக்கு எதிராக புதிய தீர்மானம் ஒன்றை கொண்டுவருவதற்கு அமெரிக்கா முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னர் முன்வைக்கப்பட்ட 30/1 தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா அரசு விலகுவதாக அறிவித்த பின்னர், புதிய தீர்மானம் தொடர்பில் அமெரிக்காவும், பிரித்தானியாவும் இணைந்து செயற்பட்டிருந்தன. முன்னைய தீர்மானத்தை 2015 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த சிறீலங்கா அரசு ஏற்றுக்கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து 34/1 மற்றும் 40/1 எ…
-
- 2 replies
- 641 views
-
-
காணாமலாக்கப்பட்டோர் அலுவலக தலைவர் நியமனத்தில் தலையிடுங்கள் – ஐ.நா.விடம் சந்தியா 12 Views இலங்கையின் காணாமல் போனவர்கள் குறித்த அலுவலகத்தின் தலைவராக நீதிபதி உபாலி அபயரத்ன நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கரிசனை வெளியிட்டு காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளதாவது; 2010ஜனவரி 24 ம் திகதி பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்ட அரசியல் கேலிச்சித்திர கலைஞரும் பத்திரிகையாளருமான பிரகீத் எக்னலிகொடவின் மனைவி நான். 2010 முதல் நான் எனது கணவர் காணாமல்போனமை…
-
- 1 reply
- 371 views
-
-
இரத்தினபுரத்தில் வீதியை வாய்க்கால் ஆக்குவதாக குற்றச்சாட்டு! என்ன செய்கிறது பிரதேச சபை.? கிளிநொச்சி இரத்தினபுரத்தில் நீர் பாயும் வாய்க்கால்களை மூடி அவற்றின்மீது வீடுகளை அமைத்துவிட்டு மக்கள் போய் வரும் வீதியில் வாய்க்கால் வெட்டி இடையூறு செய்வதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரம் கிராம சங்கத்தில் உள்ள சிலர், தமது சுயநலத்திற்காக இவ்வாறு செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வாய்க்கால்களை மூடி வீடுகளை அமைத்தமையால் நீர் வழிந்தோட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் வெள்ளம் வீடுகளுக்குள் நுழைவதாகவும் இரத்தினபுரம் பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். இந்த நிலையில், கிராம அபிவிருத்தி சங்கத்தில் உள்ள சிலர், தமது தனிப்பட்ட நலன்களுக்காக, மக்கள் அன்ற…
-
- 0 replies
- 311 views
-
-
பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் இலங்கையிலும் பரவும் அபாயம் பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே இது குறித்து தீவிர அவதானத்துடன் இருக்க வேண்டும் என அரச வைத்திய ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மிகவும் வேகமாகப் பரவிவரும் இந்த வைரஸின் புதிய உருமாற்றம் விசேடமானது என சிரேஷ்ட வைத்திய ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் கீர்த்தி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். குறிப்பாக பிரித்தானியா போன்ற நாட்டிலிருந்து நபர்கள் வருகைத்தரும்போதும் அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும்போதும் அந்த வைரஸ் பரவக்கூடிய அபாயம் உள்ளதா…
-
- 0 replies
- 318 views
-
-
சடலங்களைப் பாதுகாப்பதற்கான கொள்கலன்கள் தயார் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக குளிர்சாதன வசதிகள் அடங்கிய 5 கொள்கலன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் தனிப்பட்ட நன்கொடையாக இந்த கொள்கலன்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய குறித்த குளிர் கொள்கலன்களில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணித்த 5 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பில் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை கிடைக்கப்பெறும் வரையில் இதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நீதியமைச்சிடம் கோரியிருந்தார் என்பது குறிப்பிட…
-
- 0 replies
- 385 views
-
-
காணாமல்போனவர்களிற்கான அலுவலகத்தின் புதிய தலைவராக அரசியல் பழிவாங்கல் குறித்த ஆணைக்குழுவின் தலைவர் நியமனம்- கவலை வெளியிட்டு ஜெனீவாவிற்கு சந்தியா எக்னலிகொட கடிதம் இலங்கையின் காணாமல் போனவர்கள் குறித்த அலுவலகத்தின் தலைவராக நீதிபதி உபாலி அபயரத்ன நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கரிசனை வெளியிட்டு காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளதாவது 2010ஜனவரி 24 ம் திகதி பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்ட அரசியல் கேலிச்சித்திர கலைஞரும் பத்திரிகையாளருமான பிரகீத் எக்னலிகொடவின் ம…
-
- 0 replies
- 350 views
-
-
இந்திராகாந்தி பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்திருக்காவிட்டால் எங்களுக்கு கினிமினியின் உதவி தேவைப்பட்டிருக்காது என ஜேஆர் இந்திய வெளிவிவகார செயலாளரிடம் தெரிவித்தார்- இலங்கையில் கினிமினியின் நடவடிக்கைகள் குறித்து ரணில் பேட்டி கினிமினி ஒரு கூலிப்படையில்லை எனத் தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இலங்கையில் விசேட அதிரடிப்படையினருக்கு பயிற்சிகளை மாத்திரம் வழங்கினார்கள் என தெரிவித்துள்ளார். இலங்கையில் கினிமினியின் நடவடிக்கைகள் குறித்து பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு தெரிந்திருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சண்டே டைம்சிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் மீண்டும்…
-
- 2 replies
- 501 views
-