Jump to content

குருந்துார் மலையை ஆக்கிரமிக்க தீவிர முயற்சி.! தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுழைந்ததால் பதற்றம்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குருந்துார் மலையை ஆக்கிரமிக்க தீவிர முயற்சி.! தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுழைந்ததால் பதற்றம்.!

Screenshot-2021-01-17-23-33-29-547-org-m 

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று குருந்தூர் மலைக்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். 

அண்மைய நாட்களாக தமிழ் மக்கள் குருந்தூர் மலைக்குச் சென்று வழிபடுவதற்கு, அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ள இராணுவம் மற்றும் போலீசார் தடை விதித்து வந்தனர். 

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் தெரியப்படுத்திய நிலையிலேயே அவர்கள் குறித்த கள பயணத்தினை மேற்கொண்டிருந்தனர். அப்போது ஊடகவியலாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மலைப் பகுதிக்கு செல்ல அங்கிருந்த போலீசார் தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகவியலாளர்களை செய்தி சேகரிப்பதற்கு இடமளிக்குமாறு கூறிய போதும் போலீசார் முடியாது என கூறியதுடன், நாளைய தினம் அமைச்சர் ஒருவர் குருந்தூர் மலைக்கு வருகை தரும் நிலையில் ஊடகவியலாளர்கள் மலைப்பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்தனர்.

குறிப்பாக முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைக்கு 18.01.2021 நாளைய தினம் அமைச்சர் ஒருவர் வருகை தரவுள்ள நிலையில், குருந்தூர் மலைச் சூழலில் அதற்குரிய ஏற்பாடுகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் குருந்தூர் மலைச்சூழல் அலங்கரிக்கப்பட்டிருப்பதுடன், குருந்தூர் மலைக்குச் செல்வதற்காக பாதைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. 

இந்த ஏற்பாட்டு வேலைகளில் இராணுவத்தின் 591ஆவது பிரிகேட்டின் 59ஆவது படைப்பிரிவினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://jaffnazone.com/news/22781

Link to comment
Share on other sites

புத்தர் சிலை கொண்டுவரப்பட்டு முல்லைத்தீவு குருந்தூர் மலை சிவன் ஆலயப்பகுதியில் தொல்லியல் ஆய்வுகள் ஆரம்பம்

முல்லைத்தீவு குருந்தூர் மலை புராதன சிவன் ஆலயப் பகுதியில் இராணுவத்தினரின் ஆதரவுடன் தொல்லியல் திணைக்களம் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது
தேசிய மரபுரிமைகள் இராஜாங்க அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க இதனை ஆரம்பித்து வைத்துள்ளார்.தொல்லியல் திணக்கள அதிகாரிகள் உட்பட படைத்தரப்பினரும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

mulaitheevu-kulu-300x135.jpg
குருந்தூர் மலைபகுதிக்கு புத்தர்சிலை கொண்டுவரப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்று அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன
முல்லைத்தீவு குருந்தூர் மலை புராதன சிவன் ஆலயப் பகுதியை ஆக்கிரமிப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டள்ள நிலையில் இன்றுதமிழ்தேசியமக்கள் முன்னணியினதும் தமிழ்தேசிய கூட்டமைப்பினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த இடத்தை சென்று பார்வையிட்டனர்

 

Thinakkural.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நேற்று பூமி பூசை ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் இருந்த பகுதியில் பௌத்த விகாரைகள் இருந்ததாக தெரிவித்து அகழ்வு ஆராய்ச்சி

தமிழ் மக்களுக்கு சொந்தமான புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் அமைந்துள்ள வயல் நிலங்கள் காணிகள்,  உள்ளடங்கிய குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை  மற்றும் மணலாறு படலைக்கல்லு பகுதி ஆகிய இடங்களில் இரண்டு புராதன பௌத்த விகாரைகள் இருந்தமைக்கான தொல்லியல் சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து இராணுவத்தின் அனுசரணையுடன் தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வு ஆராய்ச்சி பணிகள் இன்று (18.01.2021) ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

spacer.png

இந்த அகழ்வு ஆராய்ச்சிப்பணிகளை இராணுவத்தினர் புடை சூழ  தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க  மற்றும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மானதுங்க மற்றும் தொல்லியல் அமைச்சின்  செயலாளர் முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் தளபதி ஜெகத் ரத்நாயக்க ஆகியோர் பௌத்த ஆகம முறைப்படி பிரித் ஓதி ஆரம்பித்து வைத்தனர்.

இதன்போது புத்தர்சிலை ஒன்று குருந்தூர்மலை பகுதிக்கு கொண்டுவரப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு அகழ்வாராய்ச்சி நடவடிக்கை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

spacer.png

மணலாறு படலைகல்லு என்னும் பகுதியிலும்  கல்யாணிபுர என்னும் மற்றுமொரு விகாரை சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து இன்று திங்கட்கிழமை அங்கும் தொல்லியல் அகழ்வாராச்சி பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் 59 ஆவது படைப்பிரிவின் 591 ஆவது பிரிகேட்டினால் ஏற்பாட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.  இராணுவத்தினரின் கொடிகள் குருந்தூர் மலை சூழ நாட்ட பட்டு நூற்றுக்கணக்கான இராணுவம் மற்றும் பொலிஸார்  பாதுகாப்பு கடமைகளுக்காக குருந்தூர் மலையிலிருந்து அருகிலுள்ள குமுளமுனை கிராமம்வரைக்கும் நிறுத்தப்பட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

spacer.png

இதன் போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,

இந்த பகுதியில் குருந்தாசேவ புராதன விகாரை ஒன்று இருந்ததாக 1932 இல் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது . இது ஒரு தொல்லியல் பிரதேசம் இங்கே இருக்கும் தொல்லியலை பாதுகாக்க வேண்டியது தொல்லியல் திணைக்களத்தின் கடமை இந்த நிலையில் இந்த தொல்லியல் சிதைவுகள் குறித்து அகழ்வு ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு மேலதிக நடவடிக்கைகளை தொல்லியல் திணைக்களம் முன்னெடுக்கவுள்ளது என தெரிவித்தார்.

 

இந்நிலையில் குறித்த மலை பகுதியில் தமிழ் மக்கள் வழிபட்டுவந்த புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் காணப்பட்ட நிலையில்  அங்கு குமுளமுனை ,தண்ணிமுறிப்பு கிராம மக்கள் சென்று பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டு வந்திருந்தனர். ஆனால் நேற்று (17.01.2021) குருந்தூர் மலை பகுதிக்குள் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறான ஆலயம் அங்கு இல்லாது உடைத்து அழிக்கப்ட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த நிலையில் குருந்தூர் மலையில் இருந்த சூலம் ஒன்று இடம் தெரியாது உடைத்து எறியப்பட்டுள்ளது அங்கிருந்த ஆலய சின்னங்கள் அனைத்தும் காணாமல் செய்யப்பட்டுள்ளது.

 

முன்னதாக நேற்று கிராம மக்களின் முறைப்பாட்டின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செல்வராசா கஜேந்திரன் , செல்வம் அடைக்கலநாதன் , வினோ நோகராதலிங்கம் ஆகியோர் இந்த பகுதிக்கு பார்வையிடுவதற்க்காக சென்றிருந்த நிலையில் இராணுவத்தினரும் தொல்லியல் திணைக்களத்தினரும் தடைகளை ஏற்படுத்திய நிலையில் மிக நீண்ட வாய்தர்க்கத்தை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் உட்செல்ல அனுமதிக்க பட்டிருந்தனர். அந்த இடத்துக்கு செய்தி சேகரிக்க சென்ற பிரதேச ஊடகவியலாளர்களுக்கு  அனுமதி மறுக்கட்டிருந்தது.

இந்நிலையில் இன்று  அமைச்சர் வருகை தந்திருந்த நிலையில் கொழும்பிலிருந்து வருகைதந்திருந்த ஊடகவியலாளர்களுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டி பிரதேச ஊடகவியலாளர்கள் தொல்லியல் திணைக்களத்திடம் கேள்வி எழுப்பிய நிலையில் பிராந்திய ஊடகவியலாளர்களும் இறுதியில் அனுமதிக்கபட்டனர். இருந்த போதிலும் அகழ்வாராய்ச்சி பணி இடம்பெறும் மலையில் உள்பகுதியில் காணப்பட்ட படையினர் பிரதேச ஊடகவியலாளர்களை 'நீங்கள் தமிழா' என கேட்டு வெளியே செல்லுமாறு பணித்ததோடு ஊடகவியலாளர்களை புகைப்படங்களையும் எடுத்தனர்.

அகழ்வு பணிகளுக்காக குருந்தூர் மலையில் நின்ற பல நூற்றுக்கணக்கான காட்டு மரங்கள் அறுத்து வீழ்த்தப்பட்டுள்ளது.

அமைச்சரின் வருகைக்காக பல மாதங்களாக குன்றும் குழியுமாக காணப்பட்ட தண்ணிமுறிப்பு குளத்துக்கு  செல்லும் வீதி, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின்  மாகாண பொறியியலாளரின் உத்தரவின் பேரில் இரண்டு நாட்களில் அவசர அவசரமாக செப்பனிட பட்டிருந்தது. பல வருடங்களாக இந்த வீதியை செப்பனிட்டு தருமாறு தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ்  விவசாயம் செய்துவரும் விவசாயிகள் அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்தும் செப்பனிட படாத வீதி அமைச்சர் வருகைதந்து விகாரையின் தொல்லியல் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காக அவசர அவசரமாக செப்பனிடபட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினார் .

spacer.png

குறித்த குருந்தூர்மலை இடம்  தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் தாக்கல்செய்ய வழக்கில்  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் 2018 இல் ஆக்கபட்ட கட்டளை ஒன்றில் அங்கே உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான ஆலயத்தில் மக்கள் வழிபடலாம் என்றும் எந்தவிதமான  கட்டுமானங்களையும்   இரு சாராரும் செய்ய முடியாது  என்றும் தொல்லியல் திணைக்களம் மாத்திரம் ஆய்வுகளை செய்யலாம் என்றும் வேறு தரப்பினர் ஆய்வுகளை செய்ய முடியாது, தொல்லியல் ஆய்வுகளை செய்வதாக இருந்தால் யாழ் பல்கலைக்கழக தொல்லியல் துறையின்  பங்களிப்போடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூற பட்டிருந்த நிலையில் இராணுவத்தினர் நூற்றுக்கணக்காக குவிக்கப்பட்டு இராணுவமே  தொல்லியல் ஆய்வுகளை செய்வதுபோல தமது கொடிகளை நாட்டி தொல்லியல் ஆய்வு என்ற பேரில் பௌத்த விகாரையை நிர்மாணித்து  குறித்த தமிழ் மக்களுக்கு சொந்தமான பிரதேசத்தை சிங்கள மயப்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகின்றதா என பிரதேச தமிழ் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். 

புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் இருந்த பகுதியில் பௌத்த விகாரைகள் இருந்ததாக தெரிவித்து அகழ்வு ஆராய்ச்சி | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் சிலை கொண்டுவரப்பட்டு முல்லைத்தீவு குருந்தூர் மலை சிவன் ஆலயப்பகுதியில் தொல்லியல் ஆய்வுகள் ஆரம்பம்

முல்லைத்தீவு குருந்தூர் மலை புராதன சிவன் ஆலயப் பகுதியில் இராணுவத்தினரின் ஆதரவுடன் தொல்லியல் திணைக்களம் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது
தேசிய மரபுரிமைகள் இராஜாங்க அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க இதனை ஆரம்பித்து வைத்துள்ளார்.தொல்லியல் திணக்கள அதிகாரிகள் உட்பட படைத்தரப்பினரும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

mulaitheevu-kulu-300x135.jpg
குருந்தூர் மலைபகுதிக்கு புத்தர்சிலை கொண்டுவரப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்று அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன
முல்லைத்தீவு குருந்தூர் மலை புராதன சிவன் ஆலயப் பகுதியை ஆக்கிரமிப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டள்ள நிலையில் இன்றுதமிழ்தேசியமக்கள் முன்னணியினதும் தமிழ்தேசிய கூட்டமைப்பினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த இடத்தை சென்று பார்வையிட்டனர்

 

Thinakkural.lk

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவின் குருந்தூர் மலையின் ஆதி ஐயனார் இருந்த இடத்தில் எழுந்தருளினார் புத்தபிரான்.!

Screenshot-2021-01-18-23-30-10-157-com-a 

முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் 1932 இல் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட குருந்தாசேவ பௌத்த விகாரையின் சிதைவுகள் இருந்ததாகத் தெரிவித்து இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்புக்களுடன் தொல்லியல் திணைக்களத்தினரால் ஆய்வு நடவடிக்கைள் இன்று தொடங்கியுள்ளன.

இந்த அகழ்வு ஆராய்ச்சிப்பணிகளை இலங்கை இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்புடன் தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மானதுங்க மற்றும் தொல்லியல் அமைச்சின் செயலாளர் முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் தளபதி ஜெகத் ரத்நாயக்க ஆகியோர் பௌத்த ஆகம முறைப்படி பிரித் அகழ்வு நடவடிக்கையினைத் தொடங்கினர்.

இதன்போது புத்தர்சிலை ஒன்று குருந்தூர்மலை பகுதிக்கு கொண்டுவரப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு அகழ்வாராய்ச்சி நடவடிக்கை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. ஜெயவர்த்தனபுர தொல்லிய பீடம், இராணுவத்தினர் தொல்லியல் திணைக்களத்தினர் இணைந்து குறித்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

வன்னியில் பாரம்பரிய வழிபா்ட்டுத் தெய்வங்களில் ஒன்றாக விளங்கிய ஆதி ஐயனார் கோவில் குறித்த பகுதியில் இருந்ததாகவும் நீண்டகாலமாக மக்கள் அங்கு வழிபாடாற்றி வந்ததாகவும் வன்னியின் மூத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

http://aruvi.com/article/tam/2021/01/18/21697/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ருவான்வெலிசயவில் பதவியேற்ற நந்தசேனவின் ஆட்சியில் இதெல்லாம் சகஜமப்பா.

தமிழரின் நிலத்தை ஆக்கிரமிக்கவே சர்வதேசமும் குறிப்பாக அமெரிக்காவும்.... ஹிந்தியாவும் புலி அழிப்பை செய்தன.

அன்று கருணாநிதி என்ற துரோகன் இருந்திருக்காவிட்டால்.. நினைவுதூபி உடைத்த போது எழுந்த ஒத்த குரல் அன்று எழுந்திருந்தால்.. இன்று இந்த நிலை வந்திருக்காது.

எல்லாம் சொக்கத்தங்கம் போட்ட சொக்குப்பொடியால் வந்த வினை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் புத்தர் எழுந்தருளப்போகிறார், தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தோண்டப்போகினம், அதிர்வு தாங்காமல் புத்தர் இலங்கையை விட்டு ஓடப்போகிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

ருவான்வெலிசயவில் பதவியேற்ற நந்தசேனவின் ஆட்சியில் இதெல்லாம் சகஜமப்பா.

தமிழரின் நிலத்தை ஆக்கிரமிக்கவே சர்வதேசமும் குறிப்பாக அமெரிக்காவும்.... ஹிந்தியாவும் புலி அழிப்பை செய்தன.

அன்று கருணாநிதி என்ற துரோகன் இருந்திருக்காவிட்டால்.. நினைவுதூபி உடைத்த போது எழுந்த ஒத்த குரல் அன்று எழுந்திருந்தால்.. இன்று இந்த நிலை வந்திருக்காது.

எல்லாம் சொக்கத்தங்கம் போட்ட சொக்குப்பொடியால் வந்த வினை. 

ருவன்வெலிசாய வில் நந்த சேன ஏன்பதவியேற்றார் என்பதற்குப் பின்னால் உள்ள காரணம் யாருக்காவது தெரியுமா.. 

😂😂😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் போன்ற அரசியல்வாதிகள் சிறிலங்காவுக்கும் வேண்டும்.

Bild

Bild

Bild

Bild

Bild

 

 

Link to comment
Share on other sites

 

ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழரின் புராதன ஆலயமான முல்லைத்தீவு குருந்தூர் மலை சிவன் கோவில் பகுதிக்கு செல்ல முயன்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணியை தடுத்து நிறுத்தமுயன்ற சிறிலங்கா பொலிசார்.

https://www.facebook.com/friendsofgajen/videos/320647325943707

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர் மலையிலுள்ள ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறியபட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டது!- மக்கள் விசனம்

முல்லைத்தீவு- குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் வழிபட்டுவந்த கிராமிய ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறியபட்டு,  தற்போது புத்தர் சிலை  வைக்கப்பட்டு பௌத்த வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தமிழர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் சமூக வலைத்தளங்களிலும் இந்த சம்பவம் வைரலாகியுள்ளது.

இந்நிலையில் குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் குருந்தாசேவ பௌத்த விகாரையின் சிதைவுகள் இருப்பதாகவும் 1932 இல் பிரசுரிக்கபட்ட வர்த்தமானியில் இந்த ஆலயம் இருந்ததாக தெரிவித்து இராணுவத்தின் ஆதரவோடு தொல்லியல் திணைக்களம் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த அகழ்வு ஆராய்ச்சிப்பணிகளை இலங்கை இராணுவத்தினர் புடைசூழ தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மானதுங்க மற்றும் தொல்லியல் அமைச்சின் செயலாளர் முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் தளபதி ஜெகத் ரத்நாயக்க ஆகியோர் பௌத்த ஆகம முறைப்படி பிரித் ஓதி ஆரம்பித்து வைத்தனர்.

இதன்போது புத்தர்சிலை ஒன்று குருந்தூர்மலை பகுதிக்கு கொண்டுவரப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு, அகழ்வாராய்ச்சி நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

 ஜெயவர்த்தனபுர தொல்லியல் பீடம், இராணுவம், தொல்லியல் திணைக்களம் இணைந்து ஆய்வுகளை செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை இவ்விடயம் தொடர்பாக அங்குள்ள தமிழ் மக்கள் கூறியுள்ளதாவது, “இன்னும் சில மாதங்களிலோ வாரங்களிலோ இங்கிருந்து பௌத்த கல்வெட்டுகளும் சிதைவுகளும் மீட்கபட்டன என சொல்லப்படலாம். இங்கே பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்றும் சொல்லப்பட்டு ஒரு பௌத்த விகாரையும் அமைக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

ஆகவே இவ்விடயத்தில் தமிழ் பிரதிநிதிகள் உடனடியாக தலையிட்டு உரிய தீர்வை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

http://athavannews.com/குருந்தூர்-மலையிலுள்ள-ஆத/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர் மலை ஆதிஐயனார் ஆலயம் மீதான பண்பாட்டு இனவழிப்பு சர்வதேச பொறிமுறையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

Digital News Team 2021-01-19T14:35:14

ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு எதிராக சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையொன்றின் அவசியத்தினை ஆதி ஐயனார் ஆலய சூலம் அழிக்கப்பட்ட சம்பவம் மீளவும் வெளிப்படுத்தியுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களால் தொன்றுதொட்டு வழிபட்டு வரப்பட்ட முல்லைத்தீவு குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறியப்பட்டு, அங்கு பௌத்த விகாரையின் சிதைவுகள் இருந்ததாக குறிப்பிட்டு ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துணையுடன் சிறிலங்காவின் தொல்லியல் துறை அப்பகுதியினை அபகரித்துள்ளமையானது தமிழர் தேசத்தின் மீதான பண்பாட்டு இனவழிப்பாக (Cultural genocide) காணப்படுகின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

mulaitheevu-kulu-300x135.jpg

மேலும் தெரிவிக்கையில், சிறிலங்கா அரசு தனது அரசாங்க திணைக்களங்கள் ஊடாக பல்வேறு பெயர்களிலும், தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்துக் கொள்வதும், சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதும் மட்டுமல்லாது, தமிழ்மக்களின் பண்பாட்டு அடையாளங்கள் மீதான பண்பாட்டு இனவழிப்பினையும் (Cultural genocide)தொடர்ந்து தனது கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் ஒரு பகுதியாக செய்து வருகின்றது.

தனது ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துணையுடன் தமிழர் தேசத்தின் மீதான சிங்களமயமாக்கல், பௌத்த மயமாக்கலை சிங்கள் பேரினவாத அரசு தீவிரப்படுத்தியுள்ள இவ்வேளையில் தமிழர் தேசத்தில் சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையொன்றின் அவசியத்தினை மீள நாம் வலியுறுத்துகின்றோம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

https://thinakkural.lk/article/105787

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு பணிகள் - சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கைகளை ஆரம்பித்த அமைச்சர் கூறுவது என்ன ?

(இராஜதுரை ஹஷான்)

 

 

 

தமிழ் மக்களின் மத மற்றும் கலாச்சார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது.

தேசிய மரபுரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு அனைத்து இன மக்களுக்கும் உண்டு.தமிழ் அரசியல்வாதிகளே தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிக்கிறார்கள் என தேசிய மரபுரிமைகள், கலைகலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

No description available.

குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு பணிகள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முல்லைத்தீவு பிரதேசத்தில் குருந்தூர் மற்றும் மணலாறு படலைகல்லு பகுதியில் பௌத்த விகாரைகள் மற்றும் பௌத்த துறவிகள் வாழ்ந்தமைக்கான சான்றாதாரங்கள் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து தொல்லியல் திணைக்களம் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இச்சம்பவத்தை கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு அரசியல்வாதிகள் தவறான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்கள்.

தமிழ் மக்களின் மதம் மற்றும் கலாச்சார அம்சங்களை ஒடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது குறித்த பிரதேசம் தொல்லியல் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்ற காரணத்தினால் ஆராய்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்க மாகாணத்தில் மாத்திரமல்ல அனைத்து மாகாணங்களிலும் வரலாற்று சின்னங்கள், புதைந்துள்ளன.

No description available.

தேசிய மரபுரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு இவ்விடயத்தில் இனம், மதம் ஆகிய காரணிகளை கொண்டு செயற்பட முடியாது.

எதிர்கால சந்ததியினருக்காக தேசிய மரபுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தேசிய மரபுரிமைகள் தொடர்பில் பிரத்தியேகமாக இராஜாங்க அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது.

பௌத்த மதத்தில் மரபுரிமைகளை மாத்திரம் பாதுகாப்பது எமது நோக்கமல்ல அனைத்து இனத்தவர்களின் மரபுரிமைகளும் பாதுகாக்கப்படும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த விகாரைகளை கொண்டு காணிபகிஸ்கரிப்பு இடம்பெறுவதாக தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிடும் கருத்து முற்றிலும் தவறானதாகும்.

அரசியல் நோககங்களுக்காக இவர்கள் இனங்களுக்கிடையில் தவறான எண்ணப்பாட்டை தோற்றுவிக்கிறார்கள். ஆகவே குருந்தூர் மலை விவகாரத்தில் தமிழ் மக்களின் மத உரிமைகள் ஏதும் ஒடுக்கப்படவில்லை என்றார்.

குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு பணிகள் - சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கைகளை ஆரம்பித்த அமைச்சர் கூறுவது என்ன ? | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனனும், சிங்களவனும் சந்திக்கும் ஒரே புள்ளி பௌத்தம்.

தென்பகுதியில், முக்காட்டு இல்லாமல் உள்ளே புகுந்து விட்ட சீனன், வடக்கே உள்ளே புகுவதற்கு, எடுத்த ரகசிய முகம் பௌத்தம். சிங்களவர்கள் மட்டுமே கொண்ட, தொல் பொருள் ஆய்வு அமைப்பினை கோத்தாவின் நேரடி மேல்பார்வையில், அமைக்கும் நோக்கமே, சீன நலன் தான்.

ராணுவத்தின் பிரசன்னம்.... சொல்லும் செய்தி இந்தியா காரர்களுக்கு புரியாவிடில்.... இழப்பத்துக்கு எதுவம் இல்லாத, நமக்கு என்ன வந்தது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

சீனனும், சிங்களவனும் சந்திக்கும் ஒரே புள்ளி பௌத்தம்.

தென்பகுதியில், முக்காட்டு இல்லாமல் உள்ளே புகுந்து விட்ட சீனன், வடக்கே உள்ளே புகுவதற்கு, எடுத்த ரகசிய முகம் பௌத்தம். சிங்களவர்கள் மட்டுமே கொண்ட, தொல் பொருள் ஆய்வு அமைப்பினை கோத்தாவின் நேரடி மேல்பார்வையில், அமைக்கும் நோக்கமே, சீன நலன் தான்.

ராணுவத்தின் பிரசன்னம்.... சொல்லும் செய்தி இந்தியா காரர்களுக்கு புரியாவிடில்.... இழப்பத்துக்கு எதுவம் இல்லாத, நமக்கு என்ன வந்தது? 

எமது தமிழ் அரசியல்வாதிகளில் ஒருவர் கூட இதுபற்றி அறிக்கை விடாதது மிகவும் கவலைக்குரியது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர் மலையில் ஐயனார் ஆலயம் இடிப்பு : வைகோ கண்டனம்!

 
1-116.jpg
 27 Views

இலங்கையில் தமிழர் தாயகப்பகுதியான குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் வழிபட்டுவந்த கிராமிய ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறிய பட்டு புத்தர் சிலை கொண்டுவரப்பட்டு பௌத்த வழிபாடுகளுடன் விகாரை அமைக்கப்பட்டதற்கு,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் இலங்கை இராணுவ உதவியுடன் ஆலய சின்னங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

“இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்ற குமுளமுளை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில், தமிழ் மக்கள் வழிபட்டு வந்த கிராமிய ஆதிசிவன் ஐயனார் ஆலயம், சூலம் தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் இலங்கை இராணுவத்தினரின் உதவியுடன் உடைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த ஆலய சின்னங்கள் அனைத்தும் காணாமல் செய்யப்பட்டுள்ளன.

அந்த இடத்தில் குருந்தாசேவ பௌத்த விகாரையின் சிதைவுகள் இருப்பதாகத் தெரிவித்து, இராணுவத்தின் ஆதரவோடு தொல்லியல் ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த அகழ்வு ஆராய்ச்சிப் பணிகளை இலங்கை இராணுவத்தினர் புடை சூழ தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக் கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக, தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மானதுங்க, தொல்லியல் அமைச்சகத்தின் செயலாளர், முல்லைத் தீவு பாதுகாப்புப் படைகளின் தளபதி ஜெகத் ரத்நாயக ஆகியோர் பௌத்த ஆகம முறைப்படி பிரித் ஓதி தொடங்கி வைத்தனர்.

புத்தர் சிலை ஒன்றைக் குருந்தூர்மலை பகுதிக்குக் கொண்டுவந்து வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழர்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

இன்னும் சில மாதங்களில் அந்த இடத்தில் இருந்து பௌத்த கல்வெட்டுகளும், சிதைவுகளும் மீட்கப்பட்டன என்றும், பௌத்தர்கள் அங்கு வாழ்ந்தார்கள் என்றும் கூறி, மேலும் ஒரு பௌத்த விகார் கட்டி, புத்தர் சிலையும் அமைத்து விடுவார்கள் என தமிழ் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தண்ணிமுறிப்பு குளத்துக்கு அருகில் படலைக்கல்லு என்னும் இடத்திலும் மற்றொரு விகாரைக்கான தொல்லியல் அகழ்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த இடம் ‘கல்யாணபுர’ என அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது.

குருந்தூர் மலை இடம் தொடர்பான விவகாரத்தில், ஒட்டுசுட்டான் காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கில், முல்லைத் தீவு நீதிமன்றம் கடந்த 2018 இல் பிறப்பித்த உத்தரவில், அங்கே உள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆலயத்தில் மக்கள் வழிபடலாம்.

இரு சாராரும் எந்தவிதமான கட்டுமானங்களையும் செய்ய முடியாது. தொல்லியல் ஆய்வாளர்கள் மட்டுமே ஆய்வுகளைச் செய்யலாம். வேறு தரப்பினர் ஆய்வுகளைச் செய்ய முடியாது. தொல்லியல் ஆய்வுகளைச் செய்வதாக இருந்தால் யாழ் பல்கலைக் கழக தொல்லியல் துறையின் பங்களிப்போடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இராணுவத்தினர் நூற்றுக் கணக்கில் குவிக்கப்பட்டு, இராணுவமே தொல்லியல் ஆய்வுகளைச் செய்வது போல கொடிகளை நாட்டி, தொல்லியல் ஆய்வு என்ற பேரில் பௌத்த விகாரையை நிர்மாணித்து, தமிழ் மக்களுக்குச் சொந்தமான பிரதேசத்தைச் சிங்களமயப் படுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப் படுகின்றது. இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் இந்து கோயில்கள் இடித்து நொறுக்கப்பட்டது பற்றி நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, இதுவரை எந்தக் கண்டனமும் தெரிவித்தது இல்லை; நடவடிக்கையும் எடுத்தது இல்லை; செய்திக் குறிப்பு எதுவும் வெளியிட்டதும் இல்லை.

அதனால் கேள்வி கேட்பார் இல்லை என்ற ஆணவத்தில், சிங்கள இனவெறி அரசு தொடர்ந்து அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவகிறது. இதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அண்மையில் இலங்கைக்கு சென்று வந்த அயல்உறவு அமைச்சர், தமது பயணத்தில் சாதித்தது என்ன? என்பதை நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்; இந்துக் கோயில்களை இடிப்பது குறித்து, இந்திய அரசின் கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

 

https://www.ilakku.org/?p=39798

 

Link to comment
Share on other sites

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அமைந்திருந்த ஆதி ஐயனார் ஆலய சூலம் பிடுங்கப்பட்டு, அந்த இடத்தில் ஒரு புத்தர் சிலை வைக்கப்பட்டு , தொல்பொருள் ஆய்வுப்பணிகள் ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயகவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

139977323_1516254521896493_8408170875659

140185748_1516254555229823_1946955611436

140108737_1516254591896486_6577340215586

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர் மலையை சிங்கள மயமாக்க முயற்சி

January 20, 2021

kajenthiran-1024x568.jpg

குருந்தூர் மலையை சிங்கள மயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினா் கஜேந்திரன் நேற்று  (1) 9-01-2021 நாடாளுமன்றில் ஆற்றிய உரையாற்றிய போது தொிவித்துள்ளாா். 

மேலும் அங்கு உரையாற்றிய அவா் நில அளவை அத்தியட்சகர் S.M.J.S.சமரசிங்கவின் செயற்பாடுகள் இனவாத அடிப்படையிலானது முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மக்கள் மற்றும் விவசாயிகளது வேண்டுகோளின் அடிப்படையில் எமது கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்; பொன்னம்பலம் தலைமையில் கூட்டமைப்பின்நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் நோகராதலிங்கம் ஆகியோருடன் சென்றிருதோம். கடந்த 17-01-2021 திகதியன்று முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குருந்தூர் மலைக்குச் சென்றிருந்தோம். 

அங்கு சென்றடைந்தபோது மலை அடிவாரத்திலிருந்து மேற்பகுதிக்குச் செல்லும் வழியெங்கும் காட்டுமரங்கள் வெட்டப்பட்டு மேலே செல்வதற்கான பாதை துப்பரவு செய்யப்பட்டு செப்பனிடப்பட்டுக் கொண்டிருந்தது. அந்தப் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தார்கள். அங்கு 59வது டிவிசனைச் சேர்ந்த 591ஆவது பிரிகேட் படையினரது கொடிகள் கட்டப்பட்டிருந்தது. 

மலையின் மேற்பகுதியில் துப்பரவு செய்யப்பட்டு நூல்களால் சசதுரங்கள் அமைக்கப்பட்டு குறியீட்டு எண்களும் இடப்பட்டிருந்தது. அதுபற்றி வினவியபோது அகழ்வுப் பணிகளை இலகுவாக மேற்கொள்வதற்காக அவ்வாறு சதுரவடிவிலான அடையாளங்கள் இடப்பட்டுள்ளதாக அங்கிருந்த தொல்லியல் திணைக்களத்தினைச் சார்ந்தவர்கள் தெரிவித்திருந்தனர்.

மறுநாள் 18 ஆம் திகதி நாம் ஊடகங்களைப் பார்த்தபோது அந்த மலைக்கு தொல்லியல் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் விதுர விக்கரமநாயக்க சென்றிருந்தார். அவருடன் ஒரு பத்தர் சிலையும் எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. அந்த சிலையை மலையின் மேற்பகுதியில் வைத்து பூசை வழிபாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதுடன் அங்கு கட்டடம் ஒன்றுக்கான அத்திபாரமும் இடப்பட்டுள்ளது. 

ஆனால் அந்த மலலப்பகுதி தமிழர்களுக்குச் சொந்தமானதாகும். அங்கு தமிழர்கள் மிக நீண்டகாலமாக வழிபாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். கடந்த 27-09-2018ஆம் திகதியன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழ் மக்கள் அந்த மலைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று தெரிவித்துள்ளது. 

ஆனால் தொல்லியல் திணைக்களம் அங்கு சென்று வழிபடுவதற்கு அனுமதி மறுக்கின்றது. அத்துடன் அந்தப் பகுதியை பௌத்த மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் நில அளவை வேண்டுகைக்கு அமைய கடந்த 14 டிசம்பர் 2020 அன்று நில அளவைத் திணைக்களத்தினால் எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட்ட வரைபடம் ஒன்று கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் நில அளவை வேண்டுகைக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட அந்த நிலஅளவையானது முல்லைத்தீவு மாவட்ட நில அளவை அத்தியட்சகரினால் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக கொழும்பிலிருந்து வந்த S.M.J.S சமரசிங்க தலைமையிலான நில அளவை குழுவினராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தொல்லியல் இடமெனக் குறிப்பிடப்பட்ட குருந்தூர் மலைப்பகுதியை எல்லை மீள் நிர்ணயம் செய்த பின்னர் புதிய இடவிளக்க வரைபடம் 14-12-2020 திகதியிடப்பட்டு S.M.J.S.சமரசிங்கவின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் அவரது கடிதம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் குருந்தி விகாரைக்குச் சொந்மான இடம் எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். 

அதுவொரு இனவாத செயற்பாடு. அந்த மலைப்பகுதியை சிங்கள மயமாக்குவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது. உடனடியாக அந்த வரைபடம் இரத்துச் செய்யப்படல் வேண்டும் என்றும் அதுதொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்றும் கோருகின்றேன்.நேற்றய தினம் (18-01-2021) மண்டைதீவில் கடற்படைக்காக 18 ஏக்கர் காணி சுவீகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அம் முயற்சியை நாம் எதிர்த்து தடுத்து நிறுத்தியுள்ளோம். எனினும் இந்த வாரம் முழுவதும் காணிகளை சுவீகரிப்பதற்காக நில அளவை மேற்கொள்ளப்படவுள்ளது. எமது தாயகத்தில் மிக மோசமான நில ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தமிழ் மக்கள் மிகவும் கொதித்துப் போயிருக்கின்றார்கள். தமிழ் மக்களின் நிம்மதி கெட்டுப்போயிருக்கின்றது. அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு அவசரமாகக் காணப்படல் வேண்டும் என தொிவித்துள்ளாா். #குருந்தூர்மலை #சிங்கள_மயமாக்க #கஜேந்திரன் #இனவாத #தொல்லியல்


 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர்மலை விவகாரம்-மறவன்புலவு சச்சிதானந்தம் பொறுப்பற்றவிதத்தில் அறிக்கை விடக்கூடாது எச்சரிக்கிறார் – ரவிகரன்

 
1-153-696x430.jpg
 16 Views

முல்லைத்தீவு – குருந்தூர்மலையில் உள்ள தமிழ் தெய்வங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதோடு, தமிழ்மக்கள் அங்கு வழிபாடுகளை மேற்கொள்ளச் செல்லமுடியாத நிலையே காணப்படுகின்றது.

இந் நிலையில் மறவன் புலவு சச்சிதானந்தம் எமது மதத்தின்பெயரால் பொறுப்பான இடத்தில் இருந்துகொண்டு, பொறுப்பற்றவிதத்தில் அறிக்கைகளை வெளியிடக்கூடாதென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் எச்சரித்துள்ளார்.

குருந்தூர் மலையிலிருந்த சூலம் மற்றும் இந்து மத அடையாளங்கள் அழிக்கப்படவில்லை எனவும், அதேளை தமிழ் மக்களின் வழிபாட்டிற்கு அங்கு எவ்வித தடைகளும் இல்லை என கோவில் அறங்காவலர் சபைத் தலைவர் சசிக்குமார் தன்னிடம் தெரிவித்ததாக  மறவன்புலவு சச்சிதானந்தம் அண்மையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

0?ui=2&ik=008a654ed4&attid=0.1.6&permmsgid=msg-f:1689666778766375121&th=1772e6fba925f8d1&view=fimg&sz=s0-l75-ft&attbid=ANGjdJ-FXY9I2vba_KTa_99DTV-yc3uGslvxu2oS1UIH9ZBBqWQSl2IRwvCSmzI1JRvCXfA0Ku-ffyK3hVBZkgudWkLF2oUSeo8zJfCbOOGEnCgZvBralZ9oFvGDskA&disp=emb

அந்தவகையில் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை மறுத்துள்ள குருந்தூர்மலைக்கோவில் அறங்காவலர் சபைத்தலைவர் சசிக்குமார், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் இவ்விடயம் தொடர்பில் எழுத்துமூலமான மறுப்பு அறிக்கை ஒன்றினையும் கையளித்துள்ளார்.

இதனையடுத்து இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன்  இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

‘குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் மறவன்புலவு சச்சிதானந்தம்  ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில், குருந்தூர் மலையிலிருந்த சூலம் மற்றும் இந்து மத அடையாளங்கள் அழிக்கப்படவில்லை எனவும், அதேளை தமிழ் மக்களின் வழிபாட்டிற்கு அங்கு எவ்வித தடைகளும் இல்லைஎனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அத்தோடு கோவிலின் அறங்காவலர் சபைத் தலைவர் சசிகுமார் இத் தகவலை தனக்குத் தெரிவித்ததாகவும், இது தொடர்பாக அறங்காவலர் சபைத் தலைவருடன் தொடர்புகொண்டு விடயங்களை அறிந்துகொள்ளமுடியுமென அறங்காவலர் சபைத் தலைவர் சசிகுமாரின் தொலைபேசி இலக்கமும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மறவன் புலவு சச்சிதானந்தம் அவர்களின் இவ்வறிக்கையினைப் பார்த்ததும் எனக்கு வியப்பாக இருந்தது.

ஏன்எனில் குருந்தூர் மலை தொடர்பான விடயங்களில் அங்குள்ள மக்களுடன் நான் நாளாந்தம் தொடர்புகளைப் பேணிவருகின்றேன்.

அந்தவகையிலே குருந்தூர்மலையில் இருந்த சூலம் உள்ளிட்ட தமிழ் மக்களின் மத அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவே அங்குள்ள மக்கள் என்னிடம் தெரியப்படுத்தியிருந்தனர்.

எனவே இவரது இந்த அறிக்கை  உண்மைக்குப் புறம்பாக இருப்பதை உணர்ந்து உடனடியாக குமுழமுனைப் பகுதிக்குச் சென்று, அங்குள்ள குருந்தூர்மலை அறங்காவலர் சபைத் தலைவர் உட்பட குருந்தூர்மலை கோவில் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடியபோது, தாங்கள் அப்படி எதுவும் சொல்லவில்லை என்ற கருத்துப்பட, உடனடியாக எனக்கு எழுத்துமூலமாக அறங்காவலர் சபைத் தலைவர் தனது பெயருடனும், ஐந்தாம் வட்டாரம், குமுழமுனை கிழக்கு, முல்லைத்தீவு என்னும் தனது முகவரியையும் இட்டு, அவரின் கையெழுத்துடன் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களின் இத்தகைய அறிக்கைக்கு மறுப்பறிக்கை ஒன்றை என்னிடம் கையளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள மறுப்பு அறிக்கையில்,

குருந்தூர் மலையில் நடைபெற்றது இதுதான், இதுவே உண்மை,

கடந்த 2020.03.23ஆம் திகதியன்று குருந்தூர்மலையில் இருந்த முச்சூலம் இந்தெரியாதவர்களினால் அப்புறப்படுத்தப்பட்டிருந்தது.

இதன் பின்பு நாம் வழிபாட்டிற்குச்சென்றபோது சூலம் காட்டிற்குள் வீசப்பட்டிருந்ததை கண்டோம். அச்சூலத்தினை எடுத்து சூலம் இருந்த இடத்தில் மீண்டும் வைத்து வழிபாடுகளை மேற்கொண்டுவந்தோம்.

இந் நிலையில் 18.01.2021 அதாவது இராஜாங்க அமைச்சரம், ஆய்வுக்குழுவினர் குருந்தூர் மலைக்கு வருகைதந்தபோது மீண்டும் அந்த ஆதிசிவனும், முச்சூலமும் திருடப்பட்டோ என்னவோ, விசமிகளால் அப்புறப்படுத்தப்பட்டிருந்தது.

மேலும் கடந்த 17.01.2021 அன்று இராஜாங்க அமைச்சர் வருவதற்கு முதல் நாள் ஆலய அறங்காவலர் தலைவராகிய நானே குருந்தூர் மலைக்குப் பொங்கல் பொங்குவதற்காகச் சென்றபோது, அங்கு செல்லவிடாமல் தடுக்கப்பட்டதுடன், படையினரால் திருப்பி அனுப்பப்பட்டேன்.

இந் நிலையல் மறவன் புலவு சச்சிதானந்தம் என்பவர் என்னால் தெரிவிக்கப்பட்டதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களையும், எனது தொலைபேசி இலக்கத்தினையும் ஊடகங்களில் தெரியப்படுத்தியுள்ளமை எனக்கு மனவேதனையினையும், கவலையுமளிக்கின்றது. என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன் எனக் குறித்த மறுப்பறிக்கையில் குருந்தூர்மலை கோவிலின் அறங்காவலர் தலைவர் சசிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

இதனூடாக மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புவது என்னவெனில், நிச்சயமாக அவர் இங்கு வருகைதருவாரானால், அங்கு குருந்தூர்மலைக்குச் செல்வதற்கு படையினர் வழிவிட்டால்  நாம் அவரை அழைத்துச்சென்று நேரடியாக நிலைமைகளை காண்பிக்கமுடியும்.

அங்கு சிவனும், முச்சூலமும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் அதுதான் உண்மையான நிலைமை.

காணால் ஆக்கப்டுவது இவர்களுக்குக் கைவந்த கலையாகும். மக்களை காணாமல் ஆக்கியதன் தொடரச்சியாக, தற்போது தெய்வங்களையும் காணமல் ஆக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதற்கு இச்சம்பவம் ஒரு ஆதாரமாகும்.

மேலும் அங்கு மக்கள் செல்வதற்குத் தற்போதும் தடைவிதிக்கப்படுகின்றது.

0?ui=2&ik=008a654ed4&attid=0.1.1&permmsgid=msg-f:1689666778766375121&th=1772e6fba925f8d1&view=fimg&sz=s0-l75-ft&attbid=ANGjdJ-iXGCQE7y-o7qDt2c-YKF59xn5tI8aOtBm-psNQqkzICahFNVanU38yo5X7vA7zsipTIT2lkKZBfuIa0h0f8yVCdamI1DiCRSChMqfte8NVgWc2XK_Zijawus&disp=emb

இந்த நிலையில் அவரது இத்தகைய கருத்தானது எமக்கு மிகுந்ந வேதனையழிக்கின்றது.

அவர் காணாத ஒரு விடயத்தினை, அவருக்குத் தெரியாத விடயத்தினைப்பற்றி அவர் ஏன் இவ்வாறு கருத்துத் தெரிவிக்கவேண்டும்.  யாருக்கு ஆதரவாக இவர் இவ்வாறு கருத்துத் தெரிவிக்கின்றார். எமது மத அடையாளங்களை அழிக்கும், அழிக்க முற்படுகின்ற தரப்புகளுக்காக ஆதரவாக கருத்துத் தெரிவிக்கின்றார்.

நாம் இந்த இடத்திலே இருந்துகொண்டிருக்கின்றோம். நிச்சயமாக அவருடைய கருத்துக்கள் பொய்யானவை. எனவே இவ்வாறான தவறான தகவல்களைப் பரப்பவேண்டாம்.

அதேவேளை அவருடைய அறிக்கையில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் வருகைதந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருடைய இத்தகைய கருத்தையும் எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது.

ஏன் எனில்  நீதிமன்றத் தீர்ப்பின்படி யாழ் பல்கலைக்கழக தொல்லியல்துறை மாணவர்களை அழைத்தே ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர பேராதனைப் பல்கலைக்கழகமாணவர்களை அழைத்து ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு சொல்லப்படவில்லை.

கடந்த 18.01.2021அன்று இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமாநாயக்க வருகைதந்தபோது இராணுவத்தின் கொடிகள் அங்கே பறக்கவிடப்பட்டிருந்தன. அன்றைய தினம் இராணுவ ஆதிக்கத்தோடுதான் அந்த நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

அவ்வாறு இராணுவ ஆதிக்கத்துடன் குருந்தூர்மலைப் பகுதியில் நிகழ்வுகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் நீதிமன்றக் கட்டளைகள் இருக்கவில்லை.

அங்குள்ள பல மரங்கள் வெட்டப்பட்டுக் காணப்படுகின்றன. மரங்களை வெட்டக்கூடாதென அரசு அறிவித்தல்களை வெளியிடுகின்றது. ஆனால் படைகள் மரங்களை வெட்டுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக செங்கற்கள் உட்பட பல கட்டுமானப் பொருட்களையும் அங்கு காணக்கூடியதாகவிருந்து.

ஆய்வுப் பணிகள்தான் மேற்கொள்வதாகவிருந்தால், அங்கு கட்டுமானப் பொருட்கள் பல கொண்டு செல்லப்பட்டதற்கான காரணம் என்ன? இவ்வாறாக பல பொருத்தமற்ற செயற்பாடுகள் பல இடம்பெற்றிருக்கின்றன.

மேலும் எமது மதத்தின் பெயரால் பொறுப்பான பதவிகளில் இருந்துகொண்டு, பொறுப்பற்ற விதமாக அறிக்கைகளைவிடுவதை மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும்” – என்றார்

 

https://www.ilakku.org/?p=40127

Link to comment
Share on other sites

கொல்வேன் ,கொன்றேன் என்று சொல்லும் ஜனாதிபதி தான் கோட்டபாய - சி.சிறீதரன்
பாராளுமன்றில் இன்று ஆற்றிய உரை

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.