ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
சென்ற ஆண்டு இதே நாளில் மண்ணுலகில் இருந்து சென்றாலும், என்றும் தமி்ழர்களின் நினைவுலகில் வாழும் " தேசத்தின் குரல்" ஆண்டண் பாலசிங்கம் அவர்களுக்கு எம் வணக்கங்கள். அண்ணாரது ஆன்மா, தமி்ழ் தேசியத்தின் விடியலில் தான் சாந்தியடையும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. விரைவில் அண்ணாரது ஆன்மா சாந்தியடைய எல்லாரும் ஒன்றாய் வேண்டுவேம்.
-
- 2 replies
- 1.4k views
-
-
[size=4]அண்மையில் வெளியிடப்பட்ட 'மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன' என்ற நூலில் அதன் ஆசிரியரான பிரான்செஸ் ஹரிசன், சிறிலங்காவிலிருந்து வெளியேறிய பெண்கள் இன்னமும் அச்சத்துடன் வாழ்வது தொடர்பாக விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். அதன் விபரமாவது, சிறிலங்காவிலிருந்து பிரித்தானியாவில் புகலிடம் கோரி தஞ்சம் புகுந்துள்ள கிழக்கு இலண்டனில் வதிகின்ற தமிழ்ப் பெண்மணி ஒருவரைச் சந்தித்து நேர்காணல் ஒன்றை நான் மேற்கொண்டிருந்தேன். சில சட்டவாளர்கள், மதகுருமார்கள் போன்றோரால் இந்த நேர்காணல் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. குறித்த தமிழ்ப் பெண்ணின் உண்மையான பெயரைக் கூட நான் அறியவில்லை. ஆனாலும் நான் இங்கு அவரை மணிமொழி என அழைக்கிறேன். இப்பெண் தனது தாயாரிடமோ அல்லது கணவனிடமோ ஒருபோதும் கூறாத சம்ப…
-
- 2 replies
- 499 views
-
-
மட்டக்களப்பிலிருந்து மகான் எழுதிய ” மகிந்த பிள்ளாயான் இடையே ஆரம்பித்த நிழல் யுத்தம் ” ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் செந்தமிழ்] தெற்காசிய வலைய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் சந்தித்துக் கொண்ட பதினைந்தாவது உச்சி மகாநாட்டின் மூலம் மஹிந்தா அரசுக்கும் ஒட்டுக்குழுவின் தலைவர் பிள்ளையானுக்கும் இடையில் முதல் முறையாக பாரிய நிழல் யுத்தம் ஆரம்பித்துள்ளது. அரசாங்கத்தின் கைபொம்மையாக செயற்பட்டுவரும் ஆயுதக்குழுவின் தலைவர் பிள்ளையானை பாரத பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் சந்திக்க மறுப்பு தெரிவித்தமை பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைக்கும், முதல் அமைச்சருக்கும் அடித்த சாவு மணியாகும். 1987ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் இலங்கையின் சிறுபான்மை இனமா…
-
- 13 replies
- 2.3k views
-
-
சம்பந்தனிடம் எப்போதும் ஒரே கொள்கையும் வெளிப்படையான செயற்பாடுமே உள்ளது. ஆகவே சம்பந்தனை சந்தேகப்படாது நம்ப முடியும். ஆனால் ரணில் மிகப்பெரிய சூழ்ச்சிக்காரர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரணிலை நம்பமுடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். வடக்கில் இருப்பவை நாய்க்குட்டிகள் அல்ல புலிக்குட்டிகள் என்பதை மீண்டும் ஒருமுறை கூட்டமைப்பினர் நிரூபித்து விட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டா…
-
- 0 replies
- 439 views
-
-
"தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னான காலகட்டம் (Post-LTTE Scenario) என ஒன்று ஒருபோதுமே வரப்போவதில்லை" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், "இவ்வாறான காலம் ஒன்று வரும் எனக் காத்திருந்து - காலத்தை வீணடித்து, மனித உயிர்களை அழிக்காமல், தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையையும், தமிழர் தாயகத்தையும் அங்கீகரித்து அவர்களுடைய அரசியல் விருப்புக்களை நிறைவேற்றுவதில் கவனத்தைச் செலுத்துங்கள்" என உலக சமூகத்தையும், இந்தியாவையும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவில் இருந்து வெளிவரும் 'தெஹெல்கா' இதழின் ஊடகவியலாளர் பி.சி.வினோஜ்குமாருக்கு பா.நடேசன் அளித்த சிறப்பு நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு: தமிழீழ விடுதலைப் புலிகளு…
-
- 9 replies
- 1.3k views
-
-
"" நல்லாட்சியிலிருந்து முஸ்லிம்களை பிரிக்க சதி '' (எம்.சி.நஜிமுதீன்) கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள் தற்போது நல்லாட்சி அரசாங்கத்துக்கும் முஸ்லிம் மக்களுக்கிடையிலும் பேதங்களை ஏற்படுத்தும் அரசியல் சதியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அது தொடர்பில் முஸ்லிம்கள் அவதானமாக நடந்து அச்சதி வலையில் சிக்கி விடக்கூடாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். புனித ரமழான் நோன்பின் இப்தார் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், சகல இனங்களுக்கிடையிலும் சமாதானம் மற்றும்…
-
- 0 replies
- 218 views
-
-
""2020 வரை நல்லாட்சி தொடரும்'' (ரொபட் அன்டனி) மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் 2008 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டுவரை மத்திய வங்கியில் இடம் பெற்றதாகக் கூறப்படும் 4000 பில்லியன் ரூபா மோசடி குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சரவை பேச் சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெ ளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரட்ன மேலும் குறிப்பிடுகையில் கேள்வி: மத்தியவங்கி விசாரணை அறிக்கை எப்படி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்டுவதற்கு முன்னர் முன்னாள் நிதி அ…
-
- 0 replies
- 299 views
-
-
""இராணுவப்பிடிக்குள் ஜனாதிபதி உள்ளாரா?'' (ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்) பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காத்திரமான தீர்மானம் எடுக்க முடியாதிருப்பதானது அவர் இராணுவ பிடிக்குள் இருக்கின்றாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபையில் சந்தேகம் வெளியிட்டது. பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் தனது உரையில் மேலும் தெரிவ…
-
- 1 reply
- 391 views
-
-
அதிகாரப் பகிர்வு நடவடிக்கையை நோக்கி இலங்கை அரசை மெதுவாக நகர்த்துவதற்காகவே அனைத்துக் கட்சிக் குழுவின் யோசனையை இந்தியா வரவேற்றது. இலங்கையின் இனப்பிரச்சினை தீர்விற்கான சர்வகட்சி பிரதிநிதிகளின் தற்போதைய பரிந்துரையை ஆதரிக்காத பட்சத்தில் இலங்கையில் அதிகாரப் பகிர்விற்கான செயற்பாடுகள் அற்றுப் போய்விடுமென இந்தியா கருதுவதாக புதுடில்லி வட்டாரங்களை மேற்கோள் காட்டி "இந்தோ ஆசிய செய்திச் சேவை' மேலும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே இந்தத் தீர்வு யோசனையில் புரட்சிகரமானதாக ஏதும் இல்லாவிட்டாலும் அதனை வரவேற்பதற்கு இந்தியா தீர்மானித்தது. இந்திய அதிகாரிகள் இதனை நல்லதொரு ஆரம்பமாக கருதும் அதேவேளை, இதன் வரையறைகள் குறித்தும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை இது நிறைவேற்ற வில்லையென்பதையும்…
-
- 0 replies
- 1.4k views
-
-
""கால அவகாசத்திற்கு ஜெனிவாவில் வாய்ப்பு'' (ஆர்.யசி) இலங்கை விவகாரத்தில் ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழு கால அவகாசம் வழங்கினாலும் குறுகிய காலத்தினுள் அரசாங்க மானது அனைத்து தீர்மானங்களையும் நிறைேவற்றுவதற்கான அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட எம்.பி.யுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கால அவகாசத்திலும் காலத்தை கடத்தும் நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள முயற்சிக்கக் கூடாது எனவும் அவர் சுட்டிக் காட் டினார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை மீதான விவகாரத்தில் கால அவகாசம் வழங்கப்படும் என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் தமிழ்த் தேசியக்…
-
- 0 replies
- 266 views
-
-
""கோடரியுடன்'' பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஆதிவாசிகளின் தலைவர் 2/5/2008 10:38:42 PM வீரகேசரி இணையம் - ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலெத்தோ பாராளுமன்றத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை காலை "கோடரி'யுடன் வருகை தந்திருந்தார்.பாராளும ன்றத்தின் முழுமையான அனுமதியுடனேயே அவர் மன்றிற்கு வருகை தந்து சபாநாயகரின் கலரியில் அமர்ந்திருந்தார். ஆதிவாசிகளின் தலைவர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருக்கின்றார். அவரை கலரிக்குள் சபாநாயகரின் கலரிக்குள் கோடரியுடன் அனுமதிக்குமாறு அமைச்சரும் ஆளுங் கட்சியின் பிரதம கொறடாவுமான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே வாய்மூலமான கேள்வி நேரத்தில் சாபாநாயகரை கேட்டுக்கொண்டார். ஆதிவாசிகளின் தலைவரை பாராளுமன்றத்திற்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுப்ப…
-
- 2 replies
- 1.6k views
-
-
மத்திய அரசின் அனுமதிபெற்று வருமாறு வலியுறுத்தல் சென்னை, "பிரபாகரன்' திரைப்படச் சுருளை அதன் இயக்குநர் துஷந பீரிஸிடம் கையளிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சென்னை ஜெமினி திரைப்படக் கூடம், மத்திய அரசாங்கத்திடமிருந்து.................... ..... தொடர்ந்து வாசிக்க....................................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2544.html
-
- 2 replies
- 2.1k views
-
-
"uch a peace [in Sri Lanka] can only be reached once the full truth about the past is understood." - Joint letter from 58 members of Congress to Secretary of State Hillary Clinton Momentum is building. Help ensure that those responsible for war crimes in Sri Lanka are finally brought to justice. Dear! The amazing response from Congress really put a fire under us! Within the first 24 hours of asking Representatives to sign on to a letter calling for an international investigation into war crimes in Sri Lanka, we got one new co-signer every hour!1 In just 8 days total, we won the support of 58 members of Congress. One by one, they added their n…
-
- 0 replies
- 431 views
-
-
"1,500 மக்கள் கொல்லப்பட்டமைக்காக கொசோவாவை தனிநாடாக்கிய அனைத்துலக சமூகம், இப்போது வன்னியில் மூன்று மாதங்களில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையிலும் கைகட்டி பார்த்து நிற்பது ஏன்?" என்று கொழும்பு சென்ற பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்டிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 491 views
-
-
"10 வருடங்களாக எனது மகனை தேடி அலைகின்றேன்" (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) எனது மகனை 10 வருடங்களாக தேடி அலைகின்றேன் என்று 2008 ஆம் ஆண்டில் காணாமல்போன மொரட்டுவை பல்கலைக்கழக மாணவனின் தந்தையார் நேற்று ஜெனிவாவில் தெரிவித்தார். மொரட்டுவை பல்கலைக்கழக மாணவன் கடந்த 2008 ஆம் ஆண்டு காணாமல் போன நிலையில் அவரது தந்தையார் தர்மகுலசிங்கம் தற்போது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நீதி கேட்டு ஜெனிவா வந்துள்ளார். அவர் கேசரிக்கு தொடர்ந்தும் கருத்துக் கூறுகையில், எனது மகன் கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் திகதி லங்கா பெல் நிறுவனத்திற்கு பயிற்ச்சிகளை பெற்றுக்கொள்ள சென்றிரு…
-
- 0 replies
- 268 views
-
-
"100 மில்லியன் ரூபாய்" நட்டத்தில்... மத்தள விமான நிலையம். மத்தள விமான நிலையம் தற்போது மாதாந்தம் 100 மில்லியன் ரூபாய் நட்டத்தில் இயங்கி வருவதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவசரமாக தரையிறங்குவதற்கான மேலதிக விமான நிலையமாக மத்தள விமான நிலையத்தை தொடர்ந்து இயக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். விமான நிலையம் மூடப்பட்டால் விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட வேண்டும் என்பதனால் நஷ்டம் ஏற்பட்டாலும் பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ளதாக கூறியுள்ளார். காட்டு யானைகள் வாழுமிடத்திற்குள் விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையால் மின்சார வேலியை உடைத்துக்கொண்டு காட்டு யானைகள் நுழையும் அச்சு…
-
- 0 replies
- 242 views
-
-
"13' ஒழிப்பதில் தவறே இல்லை; கோத்தாவின் கருத்துக்கு அரசு பச்சைக் கொடி "வடக்கு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு 13 ஆம் திருத்தச்சட்டம் தடையாகவிருந்தால் அதைத் திருத்துவதோ அல்லது இல்லாமல் செய்வதோ தப்பில்லை. அவ்வாறு செய்யவேண்டிய நிலை ஏற்படும்போது சர்வ ஜன வாக்கெடுப்பை நடத்தவும் அரசு தயார். 13ஆம் திருத்தச் சட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் அதைத் திருத்துமாறு அல்லது இல்லாமல் செய்யுமாறு வடக்கு மக்களே கோரிக்கை விடுப்பர். மக்களுக்கு அதி காரங்களைக் கொடுப்பதற்காக 13 ஆம் திருத்தச்சட்டத்தை ஒழித்து 19ஆம் திருத்தச்சட்டத்தைக் கொண்டுவருவதற்கும் நாம் பின்வாங்கமாட்டோம்.'' இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நேற்று தமிழ் பத்திரிகையாளர்களைச் சந்தித்து உரையாற…
-
- 10 replies
- 946 views
-
-
"13" அமுலானால் சமஷ்டி ஆட்சி மலரும்! - சரத் வீரசேகர “தமிழ் மக்கள் சமஷ்டியைக் கேட்கவில்லை. பிரிவினையை விரும்பும் தமிழ் அரசியல்வாதிகளும் புலம்பெயர் தமிழர்களுமே சமஷ்டியைக் கேட்கின்றனர்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்தார். “அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். 13 ஐ நடைமுறைப்படுத்தினால் ஒற்றையாட்சியின் கீழ் இருக்கின்ற நாடு சமஷ்டி ஆட்சிக்கு உட்படும்” – என்றும் அவர் சுட்டிக்காட்டினார். “தமிழ் நாட்டின் ஆதரவைப் பெறுவதற்காகத்தான் இந்திய அரசு 13 ஆவது திருத்தச் சட்டத்தை வடக்குக்குக் கொடுப்பதற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது” – என்றும் அவர் குறிப்பிட்டார். …
-
- 2 replies
- 430 views
-
-
இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் இந்தியாவுக்கு கடுமையாக அழுத்தம் கிடைத்து வருவதாக இலங்கை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபை இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்கும் வகையில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் அமையப் பெற்றுள்ள போதிலும், அது இன்று கடும் சவாலுக்கு உட்பட்டுள்ளதை காண முடிகின்றது. இலங்கை தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் காரணமாக இந்திய அரசாங்கத்தின் பங்களிப்புடன் 1987ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29ஆம் தேதி இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி மற்றும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோரினால் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது…
-
- 2 replies
- 575 views
-
-
23.05.2009, 13:51 மணி (தமிழீழம்) "16 மணித்தியாலங்களில், படுகொலை இடங்களைப் பறந்து பார்வையிட்டு ஜனாதிபதியோடு விருந்துண்பார் பான்” - இன்னர் சிற்றி பிறஸ் ஐ.நா அதிகாரிகள் குறிப்பிட்ட " கடற்கரையில் ஒரு இரத்தக்களறி" என்பதைப் பார்வையிட, ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி முன் மற்றும் ஊடகமும் ஒரு 16 மணித்தியாலப் பயணத்ததை சனிக்கிழமை மேற்கொள்கிறார்கள், "இதை சிலர் வெற்றிச் சுற்றுலா என்றும் கூறுகிறார்கள்" என இன்னர் சிற்றி பிறஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. இவர்கள் இராணுவ உலங்கு வானூர்திகளில்இ ஐ.நாவின் ஜோன் கோம்ஸ் குறிப்பிட்ட ~உலகத்திலேயே மிகப் பெரிய உள்ளேயே இடம் பெயர்ந்தோர்களுக்கான முகாமான, மேனிக் பார்முக்கு பயணம் செய்வார்கள். இதில் வட்டாரம் 1 மற்றும் 4 ஆகியவைக்கே இவர்கள் பயணிப்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
"18 இராணுவத்தினர் பலியாகி 78 பேர் படுகாயமடைந்த மன்னார் சமரில் புலிகள் கடைப்பிடித்த உத்தி என்ன?: கொழும்பு ஆங்கில ஊடகம் [வெள்ளிக்கிழமை, 20 யூலை 2007, 21:41 ஈழம்] [சி.கனகரத்தினம்] மன்னாரில் கடந்த வாரம் நடைபெற்ற சமரில் தமிழீழ விடுதலைப் புலிகள் கடைப்பிடித்த உத்தி என்ன? என்று கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: குடும்பிலையை கைப்பற்றியதைத் தொடர்ந்து வடபகுதியில் சிறிலங்கா இராணுவ முன்னரங்க நிலைகள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டிப்பாகத் தாக்குதல் நடத்துவார்கள் என்று சிறிலங்கா புலனாய்வுத்துறை எச்சரிக்கை செய்திருந்தது. இந்தத் தகவல் இராணுவத்தினரை சென்றடையும் போது முன்னரங்க நிலைகளில் பாரிய எண்ணிக்கையிலான தமிழீழ விடு…
-
- 3 replies
- 2k views
-
-
"19 மே 2009க்கு முன்னதான நிலைப்பாட்டிற்கு TNAசெல்லுமானால் கட்சியைக் கலைத்துTNA யில் இணைவோம்" 01 மே 2013 தமிழ் தேசியக்கூட்டமைப்பு 19 மே 2009 இற்கு முன்னதாக எவ்வாறான கொள்கைகளின் அடிப்படையில் செயற்பட்டதோ இனியும் அவ்வாறு செயற்படுவோமென கூறட்டும் நாங்கள் எமது கட்சியை கலைத்து விட்டு கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இன்று மாலை வடமராட்சியின் கரவெட்டிப்பகுதியில் நடைபெற்ற கட்சியின் மேதினக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போது கூட்டமைப்புக்குள் நிலவி வரும் முரண்பாடுகளின் மத்தியில் ஒவ்வொரு தரப்பும் தம்மோடு பேச்சு நடத்த அழைப்பு விடுத்துவருகின்…
-
- 2 replies
- 416 views
-
-
முள்ளிவாய்க்கால் பகுதியில் 2,000 தமிழர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்ட நிலையில் போரை நிறுத்திவிட்டோம் என்று கூற கருணாநிதிக்கும் சோனியாவுக்கும் எப்படி மனம் வருகிறது" என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஜெயலலிதா ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: "இலங்கைத் தமிழர் பிரச்சினை இன்றைக்கு உலகம் முழுவதும் வாழுகின்ற ஒவ்வொரு தமிழ் நெஞ்சையும் உலுக்குகின்ற பிரச்சினை. உலகெங்கும் வாழும் 8 கோடி தமிழர்களையும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கக்கூடிய பிரச்சினை. இந்த நிமிடத்தில் கூட, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக, எந்த ஒர் உறு…
-
- 1 reply
- 1.2k views
-
-
"முள்ளிவாய்க்கால் பகுதியில் 2,000 தமிழர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்ட நிலையில் போரை நிறுத்திவிட்டோம் என்று கூற கருணாநிதிக்கும் சோனியாவுக்கும் எப்படி மனம் வருகிறது" என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 326 views
-
-
"20" ஐ ஆதரித்தால் "13" இல்லாமல்போகும் ஆபத்து (ரொபட் அன்டனி) ஜே.வி.பி.யினர் கொண்டுவரும் நிறைவேற்று ஜனாதிபதி முறை மையை நீக்குவதற்கான 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு நாங்கள் 16 பேரும் ஆதரவளிக்கமாட்டோம் என்று சுதந்திரக்கட்சியின் ரணில் எதிர்ப்புக்குழுவின் முக்கியஸ்தர் டிலான் பெரேரா தெரிவித்தார். நிறைவேற்று அதிகாரமுறையை நீக்கும் ஜே.வி.பி.யின் முயற்சியினால் 13 ஆவது திருத்த சட்டம் இல்லாமல் ஆக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அடுத்த பாராளுமன்ற அமர்வில் மக்கள் விடுதலை முன்னணி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான பிரேரணையை கொண்டுவருவது குறித்து வ…
-
- 0 replies
- 411 views
-