ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142919 topics in this forum
-
ஈஸ்டர் தாக்குதலின், முக்கிய சூத்திரதாரி.. சஹ்ரானின் மனைவிக்கும் கொரோனா தொற்று ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி மொஹமட் சஹ்ரான் ஹாசீமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா சாதியாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள வெலிகந்த மருத்துவமனைக்கு அவர் இன்று பலத்த பாதுகாப்புற்கு மத்தியில் அழைத்து செல்லப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. சஹ்ரான் ஹசீமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா சாதியா கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்தார். கொழும்பு ரிமாண்ட் சிறை மற்றும் வெலிகடை சிறைச்சாலையில் இதுவரை 30 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவர்களில் பெரும்பாலோர் பெண் கைதிகள் எனவும் தெரி…
-
- 1 reply
- 460 views
-
-
மக்களே எச்சரிக்கை ! இலங்கையில் கொரோனா பரவல் நிலை குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் புதிய அறிக்கை வெளியானது ! Published by T. Saranya on 2020-11-07 13:31:21 சமூகப் பவரவல் நான்கு நிலைகளில் பரவுகின்ற நிலையில், இலங்கையில் தற்போது 3 ஆவது நிலையில் கொவிட் 19 தொற்று பரவல் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் கணித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது. புதிய வகைப்பாட்டின் படி, நிலை 3 கடந்த 14 நாட்களில் உள்நாட்டில் பரவலாக பாதிக்கப்பட்ட தொற்றாளர்களை குறிக்கிறது. சூழ்நிலை மதிப்பீட்டின்படி, மேலும் நான்கு சூழ்நிலைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. சூழ்நிலை நிலை 3 என்பது சமூக பரவல் நிலைமை என வரையறுக்கப்படுகிறது. இதற்கு ப…
-
- 0 replies
- 320 views
-
-
பைடன் ஆட்சியில் இலங்கை மீது அழுத்தம் அதிகரிக்கும் – சட்டவல்லுநர் பிரதீப மஹாநாம November 7, 2020 அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவாகும் பட்சத்தில் இலங்கைக்கு இராஜதந்திர மட்டத்தில் மீண்டும் நெருக்கடிகள், அழுத்தங்கள் ஏற்படக்கூடும். இலங்கை விவகாரத்தை பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்வதற்குக் கூட முயற்சிகள் எடுக்கப்படலாம் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், சட்டவல்லுநருமான பிரதீபமஹாநாம ஹோவா சுட்டிக்காட்டினார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு; சி.ஐ.ஏ. , எப்.பி.ஐ. உட்பட அமெரிக்காவில் அரச இயந்திரமே பலம்பொருந்தி…
-
- 0 replies
- 865 views
-
-
கிழக்கில் கொரோனா பரவல் 100 ஆக அதிகரிப்பு – மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவிப்பு November 7, 2020 கனகராசா சரவணன் மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேச செயலகப்பிரிவு 4 பேரும் மட்டக்களப்பில் 2 பேருக்கு இன்று சனிக்கிழமை (07) பி.சி,ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறிதிப்படுத்தப்பட்டதையடுத்து கிழக்கு மாகாணத்தில் 100 பேர் தொற்றாளாராக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார். கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் இன்று சனிக்கிழமை (07) ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். மட்டக்களப்பு செங்கலடியில் வர்த்தக நிலையத்தில் கடமையாற்றிவந்த மட்டக்களப்பை லொயிட்ஸ் அவனியூரைச் சேர்ந்த ஒர…
-
- 0 replies
- 516 views
-
-
யாழ்ப்பாணம் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று யாழ்ப்பாணம், கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.இவ்வாறு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் சிறுவனும் உள்ளடங்குவதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.அவர்கள் மூவரும் ஒரு வாரத்துக்கு மேலாக சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களிடம் நேற்றைய தினம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பரிசோதனை கூடத்தில் இன்று இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில…
-
- 1 reply
- 457 views
-
-
‘மணி’ ஆதரவு உறுப்பினர்களின் பதவிகளைப் பறிக்கிறது முன்னணி – தெரிவத்தாட்சி அதிகாரிக்கு கடிதம் November 6, 2020 உள்ளூராட்சி சபைகளின் நான்கு உறுப்பினர்களை பதவியில் இருந்து நீக்குமாறு, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி யாழ். மாவட்ட உதவி தெரிவத்தாட்சி அதிகாரிக்கு அறிவித்துள்ளது. யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்களான தர்ஷிபா, டென்சி ஆகியோரும், சாவகச்சேரி பிரதேச சபைஉறுப்பினர்களான நிதர்சன், சிவகுமார் கஜன் ஆகிய நால்வருமே, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். எனவே இவர்களை சபைகளின் உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்குமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினால் யாழ். மாவட்ட உதவி தெரிவத்தாட்சி அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkur…
-
- 3 replies
- 624 views
-
-
மாவீரர் நாளை அனுஸ்டிக்க அனுமதி வழங்கினால் ஆதரவளிக்க தயார்!- செல்வம் அரசியல் கைதிகள் தொடர்பாக கவனம் செலுத்துவதாக தெரிவிக்கும் சுரேன் ராகவன், மாவீரர் நாளை அனுஸ்டிக்கவும் அனுமதியை பெற்றுத்தந்தால், அவரின் செயற்பாடுகள் அனைத்திற்கும் ஆதரவளிக்க தயாராக உள்ளேன் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். சுரேன் ராகவன் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “முன்னாள் வட.மாகாண ஆளுநரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன், கருத்தொன்றை விட்டுள்ள நிலையில் அரசியல் கைதிகள் என்பது எல்லோருக்கும் சாதாரண விடயம…
-
- 3 replies
- 922 views
-
-
அபிவிருத்திக் குழுவினை கூட்டுவதன் மூலமே பிரச்சினைகளை தீர்க்கமுடியும்- இரா.துரைரெட்னம் 38 Views மட்டக்களப்பு மாவட்டம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மாவட்ட அபிவிருத்திக்குழுவினை கூட்டுவதன் மூலமே தீர்க்கமுடியும் என இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கருத்து தெரிவித்த முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்-இன் பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்னம், “கொரேனா அச்சுறுத்தல் காரணமாக தொழில்நிலை பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் நிவாரணம் வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்கு சுகாதார திணைக்…
-
- 5 replies
- 580 views
-
-
வடக்கில் 9 ஆயிரம் தமிழ் இளைஞர், யுவதிகளை இராணுவத்தில் இணைக்க திட்டம்..! ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலமையிலான கூட்டத்தில் பேச்சு.. வடமாகாணத்தின் 5 மாவட்டங்களில் இருந்தும் சுமார் 9 ஆயிரம் இளைஞர், யுவதிகளை இராணுவத்தில் இணைக்க தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. குறித்த விடயம் இன்று வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலமையில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம் -4500, வன்னி - 4500 என்ற அடிப்படையில் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களில் இருந்தும் சுமார் 9 ஆயிரம் பேரை இராணுவத்தில் இணைக்கவுள்ளனர். இவ்வாறு இராணுவத்தில் இணைக்கப்படுவோர் வடக்கில் வேலை செய்ய இடமளிக்கப்படுவதுடன், 60 ஆயிரத்திற்கும் அதிகமான மாத சம்பளம் வழங்கப்படும் எ…
-
- 33 replies
- 3.7k views
-
-
மக்கள் ஒத்துளைப்பின்றி மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது- அரசாங்க அதிபர் கருணாகரன் தெரிவிப்பு BATTINEWS MAINNovember 6, 2020 அரச தரப்பினால் எவ்வளவுதான் கட்டுப்பாடுகளை விதித்தாலும் மக்கள் ஒத்துளைப்பின்றி கொரோனா வைரஸ் பரவலை மட்டக்களப்பில் கட்டுப்படுத்த முடியாது என மாவட் செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் 4வது விசேட கூட்டம் இன்று(06) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கருத்து வெளியிடுகையில்,கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான காரியமாகும். அரச தரப்பினால் எ…
-
- 0 replies
- 789 views
-
-
மன்னாரில் ஒரு கிலோ மஞ்சள் தூள் 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை.! மன்னார் நகரில் உள்ள சில பல்பொருள் விற்பனை நிலையங்களில் மஞ்சள் தூள் மறைத்து வைத்து நாளுக்கு நாள் அதிகரித்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில், விலை தொடர்பாக உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது மன்னார் நகரில் உள்ள சில பல்பொருள் விற்பனை நிலையங்களில் மஞ்சள் தூள் 100 கிராம் 400 ரூபாய் குதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதற்கு அமைவாக 1 கிலோ மஞ்சள் தூள் 4 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. நாளுக்கு நாள் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் கு…
-
- 0 replies
- 575 views
-
-
கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் – DR.சத்தியமூர்த்தி by : Vithushagan http://athavannews.com/wp-content/uploads/2020/11/20201105_142227-720x450.jpg கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் அப்பிரதேச மக்கள் பீதி அடையத் தேவையில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று (வியாழக்கிழமை) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அகருத்து தெரிவித்த அவர் “யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் கீழ் யாழ் கோப்பாயில் கொரோனா தொற்றுக்குள்ளா னவர்களுக்கான விசேட சிகிச்சை நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. …
-
- 2 replies
- 897 views
-
-
தனிமைப் படுத்தல் நிலையத்தில் மது போதையில் இருந்த பொலிஸ் உறுப்பினர்கள்! 25 Views கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மற்றும் கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் பாதுகாப்புக் கடமைக்கு அனுப்பப்பட்ட பொலிஸ் உறுப்பினர்கள் இருவர் மதுபோதையில் இருந்தமை மற்றும் கடமையைச் செய்யத் தவறிய குற்றச்சாட்டில் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் நேற்று நள்ளிரவு அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவச் சிப்பாய்களுடன் முரண்பட்டு கைகலப்பில் ஈடுபட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி வளாகத்தில் தனிமைப்படுத்தல் மற்றும் கோவிட் -19 சிகிச்சை…
-
- 0 replies
- 422 views
-
-
மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் – மாவை சேனாதிராஜா. மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா புதிய வடிவத்திலான தொற்று இரண்டாவது அலையாக இலங்கையின் பல பாகங்களிலும் பரவி வருகின்றது. இத்தொற்றானது சமூக பரவலை எட்டிவிட்டது என்றும் கருதப்படுகின்றது. தேசியப் பேரழிவை ஏற்படுத்தப் போகிறதென்றும் எச்சரிக்கப்படுகின்றது. இந்த நோய் தொற்றின் தீவிரம் உலகம் முழுவதும் சமூக, பொருளாதாரப் பாதிப்புக்களையும் அனைத்துத் துறைகளும் பெரும் பொருளாதார வீழ்ச்சியும் அவற்றுக்கு அப்பால்…
-
- 2 replies
- 553 views
-
-
( எம்.நியூட்டன்) யாழ் நகரில் பொதுமக்களின் ஒன்றுகூடலை தடுக்கும் முகமாக யாழ் வணிகர் கழகத்தினரின் ஏற்பாட்டில் வீடுகளிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரன் தெரிவித்தார். இவ் விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், தற்போது கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக வட மாகாணத்திலும் இந்த கொரோனாத் தாக்கம் அதிகரித்துக் கொண்டு வருகின்ற காரணத்தினால் நகரத்திற்கு வரும் பொதுமக்களை இயன்ற அளவு குறைக்குமாறு சகல தரப்பினரும் கேட்டுக்கொள்கிறார்கள். குறிப்பாக பஸ் போக்குவரத்து தற்போது மட்டுப்பட…
-
- 2 replies
- 529 views
-
-
நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் நிகழும் மரணங்கள் தொடர்பில் நாடு ஆபத்தான நிலையில் பயணிப்பதாக அறியமுடிவதாக வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார். நாட்டில் முதலாவது கொரோனா தொற்றின் போது 9 மாதங்களில் 13 மரணங்கள் மாத்திரமே பதிவானதாகவும் இருப்பினும் கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் 11 மரணங்கள் பதிவாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/137920/asdsa.jpg இவ்வாறு மரணித்தவர்களுள் சிலர் உயிரிழந்த பின்னரே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றமை பி.சி.ஆர். பரிசோதனை மூலம் இனங்காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ள அவர், இந்நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் உயிரிழப்பு வீதம் அதிகளவில் நேரிடலாமென குறிப்பிட்டுள்ளார்…
-
- 0 replies
- 535 views
-
-
அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட தொற்றா நோயாளர்களுக்கான மருந்துகளை தபால் மூலம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கொரோனா தொற்று நோயின் பரவல் காரணமாக தொற்றா நோய்களுக்குரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளும் நோயாளர்கள் தமக்குரிய மருந்துகளை கிரமமாகப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இதனைத் தவிர்ப்பதற்காக சுகாதார அமைச்சு அஞ்சல் திணைக்களத்துடன் இணைந்து பொலிஸாரின் உதவியுடன் அரச வைத்தியசாலைகளில் பதிவு செய்துள்ள தொற்றா நோயாளர்களுக்கான மருந்து வகைக…
-
- 0 replies
- 371 views
-
-
கொரோனா அனர்த்தம் காலநிலை மாற்றம் காரணமாக ஆழ்கடல் கடற்றொழில் நடவடிக்கைகள் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட ஆழ்கடல் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தெரிவித்தனர். தற்போது ஒரு மாதகாலமாக கடலுக்கு செல்லாமல் பல்வேறு சிரமங்களை தாம் எதிர்கொண்டுள்ளதாகவும் அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், ஒலுவில், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில், திருக்கோவில் என குறித்த ஆழ்கடல் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். இதனால், தமது பாரிய படகுகளை நிறுத்தி வைப்பதற்கு இடமின்றி கனரக இயந்திரத்திற்கு ஆயிரக்கணக்கான பணங்களை செலவிட்டு கடற்கரையோரங்களில் இழுத்து நிறுத்தி வைக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக கவலையு…
-
- 0 replies
- 364 views
-
-
கொரோனா பரவலையடுத்து சந்தை வாய்ப்பை இழந்திருக்கும் யாழ். மீனவர்கள் போதிய சந்தை வாய்ப்பின்மையால் யாழ்.மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர் என கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் – “குடாக்கடலில் கடற்தொழிலுக்குச் செல்லும் 50 சத வீத மீனவர்கள் தொழிலுக்குச் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். கொரோனாத் தொற்றுக் காரணமாகத் தென்பகுதிக்குக் கடலுணவு ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் பிடிபடும் கடலுணவுகள் போதிய சந்தை வாய்ப்பின்றித் தேங்கிக் காணப்படுகின்றன. அதனால் உள்ளூர் சந்தைகளில் நண்டு, இறால், கணவாய் போன்றவை கிலோ 400 ரூபாக…
-
- 0 replies
- 522 views
-
-
மட்டு-பொது நூலகக் கட்டிட பணிகள் மீள ஆரம்பம்: புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்து 23 Views இடைநடுவில் கைவிடப்பட்ட மட்டக்களப்பு பொது நூலகக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படுவதற்கான ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டுள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டில் இடைநடுவில் கைவிடப்பட்ட விடப்பட்ட மட்டக்களப்பு பொது நூலகக் கட்டடத்தை பூர்த்தி செய்வதற்கான தேசிய கொள்கை திட்டமிடல் அதிகாரசபை, திரைசேரி மற்றும் அமைச்சரவை என்பவற்றின் அனுமதிகள் பெறப்பட்டு தற்போது மீள கட்டுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 458 views
-
-
யாழ். மாவட்டத்திலும் 5000 ரூபா நிவாரணப் பொதி வழங்க ஏற்பாடு – டக்ளஸ் கொரோனா தொற்று பரவல் காரணமாக யாழ் மாவட்டத்தில் சுய தனிமைப்படுத்தலில் உள்ள 772 குடும்பத்தைச் சேர்ந்த 1700 பேருக்கு அரசினால் வழங்கப்படும் 5000 ரூபா நிவாரணப்பொதி உடன் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் . இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ”சுய தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு தலா 5000 ரூபா பெறுமதியான உணவுப் பொதிகள் நாடுபூராகவும் வழங்கப்பட்டு வரும் நிலையில், யாழ் மாவட்டத்திற்கான இடர் கால நிவாரண பொதிகள் இதுவரை வழங்கப்பட்டிருக்கவில்லை என எனக்கு தெரியப்படுத்தியிருந்தது. இந்நிலையில் இது தொடர்பில் நேற்றைய பாராளுமன்ற அமர்…
-
- 0 replies
- 369 views
-
-
கொரோனா தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - வடமாகாண ஆளுநர் பணிப்பு அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கொரோனா தடுப்பு வழிகாட்டல்களை பின்பற்றுவதை உறுதி செய்வதோடு விழிப்புணர்வுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். வடமாகாணத்தில் கொரோனா தொற்று இடர் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று (04-11-2020) காலை 1௦ மணிக்கு வடமாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம் சாள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது ஆளுநர் நாம் மேலும் தெரிவிக்கையில், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளை பின்பற்றி, எமது நாட்டின் பொருளாதார நடவடிக்கைளை இலகுவாக முன்னெடுத்துச் செல்ல…
-
- 0 replies
- 334 views
-
-
கொரோனாவிலிருந்து இலங்கை தப்புமா?தவறான முகாமைத்துவம் பெரும் அழிவை ஏற்படுத்தும் 30 Views இலங்கையில் மூன்றாவது அலையாக கோவிட்-19 தொற்று தற்போது அசுர வேகத்தில் பரவி வருகிறது. 24 மாவட்டங்களில் தொற்றாளர்கள் இனங்காணப் பட்டுள்ளார்கள். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அனர்த்தத்தில் இருந்து நாடு மீண்டு வருமா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இது தொடர்பாக இலங்கையின் சுகாதார அமைச்சின் சமுதாய மருத்துவ நிபுணர் வைத்தியர் முரளி வல்லிபுரநாதனுடன் ‘இலக்கு’ மேற்கொண்ட நேர்காணலில் அவர் கூறிய கருத்துக்களை இங்கே பகிர்கின்றோம். 2019 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் இந்த கோவிட்-19 தொற்று உலகம் முழு…
-
- 0 replies
- 391 views
-
-
இலங்கையில் கொரோனா வைரஸ் வலுவிழந்து செல்ல மேலும் இரண்டு வருடங்கள் ஆகலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் மேலும் பரவுவதற்கான ஆபத்து உள்ளமையினால் இன்னும் இரண்டு வருடங்கள் அதனுடன் வாழ வேண்டும் என சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார். நேற்று சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு 400 முதல் 500 வரையிலான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அது மிகவும் மோசமான நிலைமையாகும். இதுவரையில் 65 ஆயிரம் பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் PCR பரிசோதனைக்கமைய எதிர்வரும…
-
- 2 replies
- 475 views
-
-
வட மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்த மார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். வட மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்த மார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். மார்ச் முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் 18 நோயாளர்களும், ஒக்டோபர் மாதத்தில் 41 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒக்ரோபர்15 தொற்றாளர்களும், வவுனியா மாவட்டத்தில் 14 தொற்றாளர்களும், மன்னார் மாவட்டத்தில் 10 நோயாளர்களும், முல்லைத்தீவு 2 த…
-
- 7 replies
- 1.2k views
-