ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143666 topics in this forum
-
எமது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வி.மணிவண்ணனை ஆதரித்து, கட்சியின் கொள்கைக்கு துரோகம் செய்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் 10 உறுப்பினர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (30) சற்றுமுன் தெரிவித்துள்ளார். அத்துடன் மணிவண்ணனை ஆதரித்ததன் மூலம் கட்சியின் கொள்கைக்கு துரோகம் இழைத்து, யாழ்ப்பணம் மாநகர சபையின் எமது கட்சியை பிரதிநித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் பத்துப்பேர் டக்ளஸ் தேவானந்தாவுடன், கைகோர்த்து கட்டிப்பிடித்துக் கொண்டுள்ளனர். அவர்களை எமது இயக்கத்தில் இருந்து நீக்குவோம் என்றும் அவர் தெரிவித்தார். டக்ளஸை கட்டிப்பிடித்துக் கொண்டு இருக்கும் 10 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்! | NewUthayan
-
- 27 replies
- 2.6k views
- 1 follower
-
-
இலங்கை | நீதி அமைச்சர் அலி சப்றி பதவி விலகல் கடிதத்தை நிராகரித்த ஜனாதிபதி ஆர்ப்பாட்டங்கள் ஆளும் கட்சியின் நாடகம் - பிரதான எதிர்க்கட்சி கோவிட் தொற்றினால் இறந்த முஸ்லிம் மக்களின் உடல்களைத் தகனம் செய்யும் விடயத்தில் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாக நீதி அமைச்சர் அலி சப்றி தனது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்ததாகவும் ஜனாதிபதி ராஜபக்ச அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இறந்த முஸ்லிம்களின் உடல்களைப் புதைப்பது அவர்களின் மதச் சடங்குகளில் ஒன்றாகவிருந்தும் அதை அனுமதிக்காமல் அவர்களது உடல்களைத் தகனம் செய்யவேண்டுமென அரசாங்கம் சட்டமியற்றியுள்ளது. இதனால் முஸ்லிம் சமூகம் தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்து வருகிறது. இவ…
-
- 0 replies
- 352 views
-
-
நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பத்மநாதன் மயூரன் வெற்றி பெற்றுள்ளார். நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று (30) மதியம் இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் குமாரசாமி மதுசுதனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் பத்மநாதன் மயூரனும் முன்மொழியப்பட்டனர். தவிசாளர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது. இதன்படி மதுசுதனன் 08 வாக்குகளையும் மயூரன் 10 வாக்குகளையும் பெற்றனர். மதுசுதனுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2 உறுப்பினர்கள் ம…
-
- 32 replies
- 3k views
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) கொரோனா தொற்று காரணமாக ஏற்படும் முஸ்லிம் மரணங்களில் பாரிய சந்தேகம் இருக்கின்றது. அதனால் இதுதொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து விசாரணை நடத்தப்படவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார். கொரோனா தொற்றில் மரணித்தவர்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் முஸ்லிம்களாக இருப்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 22மில்லியன் சனத்தொகையைக்கொண்ட இலங்கையில் சுமார் 10 வீதமே முஸ்லிம்கள். ஆனால் கொரோனா தொற்றில் இலங்கையில் மரணித்தவர்களில் மொத்த எண்ணிக்கையில் 10வீதம் கொண்ட முஸ்லிம் சமூகத்தில் இருந்து 80 வீதமான கொரோனா மரணங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பாரிய …
-
- 0 replies
- 360 views
-
-
மட்டக்களப்பில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – 8 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டது 18 Views மட்டக்களப்பு நகரில் இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் மருத்துவ பரிசோதனையில் 18பேர் கொரோனா தொற்றுக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் எட்டு வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிகையை தொடர்ந்து இன்று காலை முதல் மட்டக்ளப்பு காந்திபூங்காவில் மட்டக்களப்பு நகரில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் பரிசோதனைகளுக்குட்படுத்தப் பட்டனர். மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் கிரிசுதன…
-
- 1 reply
- 336 views
-
-
அரசியல் கைதிகளின் விடுதலை வெறும் கானல் நீரே’-பரிசிலிருந்து உதயன் 16 Views தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பரிசிலிருந்து உதயன் என்பவரால் இலக்கு மின்னிதழுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கட்டுரைஇது, இலக்கு வாசகர்களுக்காக, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது வெறும் கானல் நீராகவே இருந்து வருகிறது. தேர்தல் வேளைகளில் மட்டும் பேசு பொருளாக பிரதான இடம் பிடிப்பதோடு சரி, மற்றபடி மாறி மாறி எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சனைகளில் மட்டும் மாற்றான் தாய் மனப்பான்மையோடு தான் நடந்து வருகிறது. தமிழ் அரசியல் கைதிகளின் சிறை வாழ்வு என்பது பல வருடங்களை தாண்டி இன்று இரண்டு மூன்று தசாப்ங…
-
- 0 replies
- 433 views
-
-
‘மொத்தமாக கொன்று விடுங்கள்’ காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்! December 30, 202000 காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை மீட்டுத் தாருங்கள் எனக் கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (30) யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். நல்லூர் நல்லை ஆதினம் முன்பாக இன்று காலை 9 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. “இதன்போது “எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள் இனவாதத்தைக் கக்காதீர்கள், எங்கள் பிள்ளைகள் எங்களுக்கு வேண்டும், தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஒரு நீதியா? மனிதாபிமானத்துடன் எமது பிள்ளைகளை விடுவியுங்கள், இனியும் காலம் தாழ்த்தாது பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள், எமது உறவ…
-
- 2 replies
- 465 views
-
-
புலிகளின் தமிழீழக் கனவுடன் கூட்டமைப்பு: வடக்கு - கிழக்கு தனிப்பிராந்திய யோசனையைத் தூக்கி வீசுங்கள்.! இலங்கையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகளின் தமிழீழக் கனவுடன் தொடர்ந்து செயற்பட்டுவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர்கள் குழுவுக்குச் சமர்ப்பித்துள்ள யோசனைகளில் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைந்த தனிப்பிராந்தியமாக இருக்க வேண்டும் என்ற யோசனையை அரசு தூக்கிக் குப்பையில் வீச வேண்டும்." - இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சருமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். அத்துடன் கூட்டமைப்பின் யோசனைகளில் எதுவும் முழுமையாக ஏற்றுக்கொள்ளக…
-
- 0 replies
- 473 views
-
-
சடலங்களை அடக்கம் செய்வது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை – சுகாதார சேவைகள் பணிப்பாளர் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு எந்த தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது என்ற முடிவில் எந்த சூழ்நிலையிலும் இதுவரை மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாற்றங்கள் இருந்தால் அது குறித்து பொதுமக்களிற்கு தெரியப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/சடலங்களை-அடக்கம்-செய்வது/
-
- 0 replies
- 288 views
-
-
யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வராக சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் வெற்றி பெற்றுள்ளார். இன்று (30) சற்றுமுன்னர் மாநகர முதல்வர் தெரிவுக்காக யாழ் மாநகரசபையில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், ஈபிடிபி உறுப்பினர்களின் ஆதரவுடன் மணிவண்ணன் முதல்வரானார். வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் முதல்வர் இ.ஆனோல்ட்டுக்கு 20 வாக்குகளும் மணிவண்ணனுக்கு 21 வாக்குகளும் அளிக்கப்பட்டன. நால்வர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அமர்வில் பங்குகொண்டு வாக்கெடுப்பில் பங்குகொள்ளாதவர்களில் ஒருவர் தமிழரசுக்கட்சி உறுப்பினர், மூவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/
-
- 30 replies
- 2.5k views
-
-
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல்.! மார்ச் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையில் எடுக்கப்படுகின்ற தீர்மானம் ஓர் புதிய தீர்மானமாக இருக்க வேண்டும். அது ஜெனிவா மனித உரிமை பேரவையின் மேற்பார்வையை தக்கவைத்துக்கொள்வதாக இருக்க வேண்டும். என்கின்ற பொதுவான நிலைப்பாடு ஒன்று இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயங்கள் தொடர்பான கடந்தகால செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சிவகரன் தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப…
-
- 0 replies
- 644 views
-
-
பொன்னாலை வரதராஜர் ஆலயம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானது 34 Views பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற மார்கழி வைகுண்ட ஏகாதசி மகோற்சவத்தின்போது சமூக இடைவெளி பேணப்படவில்லை என்ற காரணத்தால் ஆலயம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆலயத்தில் மகோற்சவ கிரியைகளை நடத்திய அர்ச்சகர்களும் ஆலய பரிபாலன சபையைச் சேர்ந்தவர்களும் ஆலயத்திலும் வீடுகளிலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். மேலும், தேர், தீர்த்த உற்சவ உபயகாரர்கள், மகோற்சவ ஆரம்பம் தொடக்கம் முடிவடையும் வரை தொடர்ந்து ஆலயத்திற்கு வருகைதந்தவர்கள், தீர்த்தோற்சவத்தின் போது கடலில் மிக நெருக்கமாக நின்றவர்கள் ஆகியோரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்ற…
-
- 0 replies
- 314 views
-
-
மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது நாட்டில் தற்போது நிலவும் கொவிட்-19 கொரோனா தொ ற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு மாகாண சபை தேர்தலை ஒத்திவைப்பது என அரச கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர் இருப்பினும், நாட்டுக்கு மாகாண சபை அமைப்பு தேவை என்று அரச கட்சியின் பாராளுமன்ற உறுப் பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், மாகாண சபை தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஜனாதிபதி தலைமையில் அரச கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதேவேளை மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து இறுதி முடிவு இன்னமு…
-
- 1 reply
- 820 views
- 1 follower
-
-
திருக்கேதீஸ்வர ஆலய காணி ‘மாதோட்ட’ விகாரையின் பிக்குவால் அபகரிப்பு – சாள்ஸ் எம்.பி. அதிரடி விஜயம் மன்னார் நிருபர் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை ‘மாதோட்ட’ விகாரையின் பிக்கு அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று செவ்வாய்க் கிழமை காலை குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் காணி சைவ மங்கையர் கழகத்துக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது. குறித்த காணியானது நீண்ட காலமாக திருக்கேதீச்சர ஆலயத்தின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளது.இக் காணியானது நாட்டில் ஏற்பட்ட இடப் பெ…
-
- 8 replies
- 1.4k views
-
-
திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை அபகரிக்க பௌத்த பிக்கு முயற்சி December 29, 2020 மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை ‘மாதோட்ட’ விகாரையின் பிக்கு அபகரிக்க முயற்சித்து வருகின்றார். இந்நிலையில்,வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் காணி சைவ மங்கையர் கழகத்துக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது. குறித்த காணியானது நீண்ட காலமாக திருக்கேதீச்சர ஆலயத்தின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளது. இக் காணியானது நாட்டில் ஏற்பட்ட இடப் பெயர்வு காரணமாக இராணுவம் அவ் இடத்தில் நிலை கொண்டது. அதன் பின்னர்…
-
- 26 replies
- 2.9k views
-
-
ஆர்னோல்ட் மீண்டும் போட்டியிடுவார் December 29, 2020 யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டதனால் முதல்வர் பதவியை இழந்த இம்மானுவேல் ஆர்னோல்ட் அந்தப் பதவிக்காக மீண்டும் போட்டியிடுவார் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா அறிவித்துள்ளார். யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் பதவிக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில் வடமாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளர் தலைமையில் நாளை தெரிவு இடம்பெறவுள்ளது. இந்த நிலையிலேயே இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் சார்பில் இம்மானுவேல் ஆனல்ட் முதல்வர் பதவிக்கு போட்டியிடுவார் என்று கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார். #இம்மானுவேல்_ஆர்னோல்ட் #யாழ்ப்பாணம்_மாநகரசபை #பாதீடு #…
-
- 0 replies
- 583 views
-
-
இந்தியாவில் இருந்து மன்னாரிற்கு கடத்தி வரப்பட்ட 532 கிலோ மஞ்சள் கட்டிகள் தீயிட்டு அழிப்பு இந்தியாவில் இருந்து மன்னார் பகுதிக்கு சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு, மன்னார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 532 கிலோ மஞ்சள் கட்டிகள் இன்று (திங்கட்கிழமை) தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராய்சி முன்னிலையில், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.பி.ஜெயதிலக தலைமையில், பொலிஸ் தடவியல் நிபுணத்துவ பொலிஸார் இணைந்து மன்னார் நகர சபைக்கு சொந்தமான மலக்கழிவகற்றல் நிலையத்தில் வைத்து தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட சுற்று நிருபத்தின் அடிப்படையில் கொரோனா தொற்று அபாயம் உடைய கடத்தல் பொருட்கள…
-
- 4 replies
- 906 views
- 1 follower
-
-
போர்க்குற்ற விவகாரம் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அகற்றப்பட வேண்டும் என கோருவோரை மதிக்கிறேன்: சுமந்திரன் போர்க்குற்ற விவகாரம் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அகற்றப்பட வேண்டும் என வெளிப்படையாக கோரிக்கை விடுப்பவர்களது கருத்தை நான் வெகுவாக மதிக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஏற்கனவே மூன்று தடவைகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டன. அவை தொடர்பாக தமிழர் தரப்புக்கு எவ்வித பயனும் ஏற்படவிலை. கூட்டமைப்புடன் ஒத்துப்போவதாக அறிவிக்கப்பட்ட அரசங்காத்தினால் கூட எவ்வித முன்னேற்றமு…
-
- 7 replies
- 878 views
-
-
புதிய அரசியலமைப்பில் வட-கிழக்கை தனிப்பிராந்தியமாக அங்கீகரிக்குக - கூட்டமைப்பு முன்மொழிவு.! '"புதிய அரசமைப்பில் மத்திய மற்றும் பிராந்தியங்களின் ஐக்கியத்தைக் கொண்டதாக அரசு முறைமை அமைய வேண்டும். அதில் ஒரு பிராந்தியமாக தமிழ் பேசும் மக்களின் பிரதான வாழிடமான வடக்கு - கிழக்கு இருத்தல் வேண்டும்." - இவ்வாறு புதிய அரசமைப்பை உருவாக்கத்துக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்த யோசனைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. "ஒரு மக்கள் கூட்டத்துக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை தொடர்ந்து மறுக்கப்படுமானால் அவர்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் வெளிப்புற சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதை நினைவுபடுத்துகின்றோம்" என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புதிய அரசம…
-
- 0 replies
- 509 views
-
-
வெளிநாடுகளிலிருந்து இஸ்லாமிய தீவிரவாதிகள் இலங்கை அமைப்புகளுக்கு நிதி வழங்குகிறார்கள் – ரஷ்ய தூதுவர் கோவிட்-19 ஆதரவு என்ற பெயரில் வெளிநாடுகளிலுள்ள இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கள் இலங்கையிலுள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு நிதியை அனுப்பலாம் என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மற்றேறி எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த வாரம் இலங்கை உள்ளகப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகராவைச் சந்தித்தபோது ரஷ்ய தூதுவர் மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளார். இலங்கையிலுள்ள முஸ்லிம் தர்ம ஸ்தாபனங்களுக்கும், மனிதாபிமான அமைப்புகளுக்கும் நிவாரணம் வழங்கல் என்ற பெயரில் போதை வஸ்து மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் மூலமாக வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் இவ்வுதவிகளை மேற்கொண்டு வருகின்றன என அமைச்சு அதிகார…
-
- 2 replies
- 447 views
-
-
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் நல்லூரில் போராட்டம் C.L.SisilDecember 28, 2020 சி றைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதி களின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்தக் கோரியும், அவர் களின்விடுதலையை வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறுகின்றது. ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பின் ஏற்பாட்டில் காலை 10.00 மணி முதல் நல்லூர் கந்தசுவாமி கோயில் பின்புறமாகவுள்ள நல்லைஆதீன முன்றிலில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது:- சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள த…
-
- 0 replies
- 707 views
-
-
சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக இலங்கை தனது இறைமையை உறுதிப்படுத்தினால் மாத்திரமே எதிர்காலத்தில் நிதி உதவி- அமெரிக்கா Rajeevan ArasaratnamDecember 28, 2020 சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக இலங்கை தனது இறைமையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மாத்திரமே இலங்கைக்கு தொடர்ந்து நிதி உதவி வழங்கப்படும் என்ற நிபந்தனையை அமெரிக்கா விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது தொடர்பாக அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக தனது இறைமையை வலியுறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டல் மாத்திரமே நிதி உதவி வ…
-
- 3 replies
- 973 views
-
-
முஸ்லிம் கட்சிகள் நமக்குத் தேவையா என்பதை சமூகம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் By Sayanolipavan (எப்.முபாரக் )முஸ்லிம் கட்சிகள் நமக்குத் தேவையா என்பதை சமூகம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இன்று(27) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ;ரப் அவர்களினால் பல்வேறு காரணங்களை முன் வைத்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அப்போது இதன் அடிப்படை குர்ஆன், ஹதீஸ் என்று கூறப்பட்டது. இதனால் முஸ்லிம் மக்கள் மத்தியில் இக்கட்சிக்கு அமோக ஆதரவு வழங்கப்பட்டது. அதிகாரத்தைப் பெற்ற தலைவர் அஷரப் அவர்களும் தன்னால் முடியுமான பல ப…
-
- 0 replies
- 650 views
-
-
கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் உதயம்! December 27, 20204:29 pm கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அங்குறார்ப்பன கூட்டம் இன்று நடைபெற்றது. கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் என்ற அமைப்பினை இன்று உருவாக்கி உள்ளனர். இதன் அங்குறார்ப்பன கூட்டம் கொரோணா பாதுகாப்பை கருத்தில் கொண்டு இணைய வழி ஊடாக இன்று இடம்பெற்றது. இதில் புதிய நிர்வாக சபை உருவாக்கப்பட்டதுடன் எதிர் காலத்தில் கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாகவும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு, ஊடகவியலாளர்களின் நலன்புரி நடவடிக்கை குறித்து ஆராயப்பட்டது. புதிய நிர்வாக சபை உறுப்பினர்களாக 1) தலைவர…
-
- 0 replies
- 341 views
-
-
ஒருபோதும் தளர்வடையேன்! சாணக்கியன் சபதம் சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படும் போதே எமக்கு நீதிகிடைப்பது சாத்தியமாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். வட கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடித்திலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் அனுப்பி வைத்துள்ள கடித்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை முன்னின்று நடாத்திய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மாரில் 71 இற்கும் அதிகமானவர்கள் இறந்து போய் உள்ளதனை ஆவணப்படுத்தி, அதனை கையளிக்கும் வட கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற கையேட்டு நிகழ்வில…
-
- 1 reply
- 548 views
-