நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
தென்னிந்தியா முழுவதும் பிரபலமான உணவு வகை இது. தமிழர் உணவு பழக்கத்தில் சாம்பாருக்கு அடுத்தபடியாக ரச உணவு என்பது எழுதப்படாத விதி. நேரம் கிடைக்காதவர்கள் அவசரத்திற்கு ஒரு ரசம் வைத்தேன் என்று சொல்லுமளவிற்கு செய்வதற்கு மிகவும் எளிமையானது. அதிக மூலப் பொருட்கள் தேவையில்லை. தக்காளி வதக்கி புளிக்கரைசலில் மிளகு சீரகம் தட்டிப்போட்டு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து எளிய முறையில் சுவையான ரசம் தயாரித்துவிடலாம். உணவு செரிமானத்திற்கு ரசம் அவசியமாகின்றது. பல நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பது ரச உணவுதான். திரவ உணவு என்பதால் எளிதில் ஜீரணம் ஆவதுடன், இதில் சேர்க்கப்படும் மிளகு, சீரகம் போன்றவை உடல் நலத்திற்கும் பெரிதும் உதவுகின்றன. மிளகு ரசம், பருப்பு ரசம், பூண்டு ரசம் ஆகியவை ரச வக…
-
- 3 replies
- 4.3k views
-
-
மீன் சொதி தேவையான பொருட்கள்: மீன் -500கிராம் பச்சைமிளகாய் -5எண்ணம் பெரியவெங்காயம் -50 கிராம் கறிவேப்பிலை -சிறிது வெந்தயம் -1 மேஜைக்கரண்டி பெரும்சீரகம் -2 மேஜைக்கரண்டி மஞ்சள்தூள் -1 தேக்கரண்டி தேங்காய்பால் -1 கப் உப்பு -தேவையான அளவு செய்முறை: 1. பச்சைமிளகாய், வெங்காயத்தை வெட்டி வைத்துக் கொள்ளவும். 2. ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரைக் கொதிக்க வைத்து அதில் வெட்டிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், வெந்தயம், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து வேக விடவும். 3. இந்தக் கலவையில் துண்டுகளாக்கிய மீனைச் சேர்த்து தேவையான அளவு வேகவைக்கவும். 4. மீன் ஓரளவு வெந்ததும் அதில் தேங்காய்ப் பாலைச் சேர்த்து, தேவையான உப்பு போட்…
-
- 39 replies
- 6.2k views
-
-
வெந்தயக்கீரை பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், வெந்தயக்கீரை - 2 கட்டு, பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 4, தேங்காய்ப்பால் - ஒரு கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. அரைக்க: இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 4 பல், சீரகம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, தனியா - ஒரு டீஸ்பூன், கரம் மசாலா - அரை டீஸ்பூன். தாளிக்க: பட்டை - ஒரு துண்டு, நெய் - 4 டேபிள்ஸ்பூன். செய்முறை: அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைத்தபின், வேகவைத்து முக்கால் பதமாக வெந்ததும் எடுத்து வைக்கவும். வெந்தயக்கீரையின் இலைகளை மட்டும் நன்கு ஆய்ந்து சுத்தம் செய்து வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். நெ…
-
- 0 replies
- 605 views
-
-
Roasted Chicken And Rainbow Veggies FULL RECIPE: http://bzfd.it/2bPSdT9
-
- 0 replies
- 975 views
-
-
-
உடல் எடையை குறைக்கும் முட்டைக்கோஸ் - மிளகு சூப் குளிர்காலத்தில் முட்டைக்கோஸ் அதிகம் கிடைக்கக்கூடியதால், இதனைக் கொண்டு சூப் செய்து அவ்வப்போது குடித்தால் உடல் எடையும் குறையும். தேவையான பொருட்கள் : முட்டைக்கோஸ் - 200 கிராம் கேரட் - 1 வெங்காயம் - 2 சோள மாவு - 1/2 டீஸ்பூன் மிளகு தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு வெண்ணெய் - 2 டீஸ்பூன் …
-
- 2 replies
- 1.2k views
-
-
லக்னோ தெருவோர உணவகங்களில் சாப்பாட்டு அசுரன்
-
- 0 replies
- 591 views
-
-
சப்பாத்திக்கு அருமையான சாஹி மட்டன் குருமா மட்டனை வைத்து பிரியாணி, குழம்பு, தொக்கு செய்து இருப்பீங்க. இன்று கொஞ்சம் வித்தியாசமாக சாஹி மட்டன் குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : எலும்பில்லாத மட்டன் - 600 கிராம் வெங்காயம் - 3 எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் - 3 கிராம்பு - 4 இலவங்க பட்டை - 1 மிளகு - 7 இஞ்சிபூண்டு விழுது - 3 டீஸ்பூன் மல்லிப் பொடி - 1 டேபிள் ஸ்பூ…
-
- 1 reply
- 869 views
-
-
பெர்த் நகரைச் சேர்ந்த Darrsh Clarke இந்த நிகழ்ச்சியில் முதன்முறையாக பாஸ்மதி சாதம், தயிர் ரைத்தா மற்றும் கத்தரிக்காய் கறியை சமைத்து வழங்கியுள்ளார். இலங்கையின் பாரம்பரிய உணவு எனினும், “இதற்கு முன் ஏன் இலங்கை உணவை வழங்கவில்லை” என நடுவர்கள் கேள்வியெழுப்பியிருந்ததுடன் அதற்கு பதிலளித்து பேசிய Darrsh தனது இலங்கை பாரம்பரியத்தை நிராகரித்ததை வெளிப்படுத்தினார். எனினும், அவரை ஊக்கப்படுத்திய நடுவர்கள் MasterChef Australia நிகழ்ச்சி தமது பாரம்பரியத்தை மீட்டெடுக்க உதவுவதாக தெரிவித்திருந்தனர். தனது தந்தை மற்றும் பாட்டியின் சமையலில் Darrsh ஈர்க்கப்பட்டிருந்ததாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. …
-
-
- 4 replies
- 709 views
-
-
ஆத்தூர் மிளகு கறி தேவையான பொருட்கள் மட்டன் – அரை கிலோ வெங்காயம் – 2 தக்காளி – 2 மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன் சின்ன வெங்காயம் – 100 கிராம் இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு மசாலாவுக்கு மிளகு – 1 ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் சோம்பு – 1/2 ஸ்பூன் வரமிளகாய் – 4 மல்லித்தூள்(அ)முழு மல்லி – 1 ஸ்பூன் பட்டை – 1 கிராம்பு – 2 முந்திரி – ஐந்து ஏலக்காய் – 3 தேங்காய் – பாதி (ஒரு மூடியில்) இஞ்சி – நெல்லிக்காய் அளவு பூண்டு – 5-6 பல் செய்முறை முதலில் மசாலாவுக்கு உரிய மிளகு, சீரகம், சோம்பு, வரமிளகாய், மல்லித்தூள்(அ)முழு மல்லி, பட்டை, கிராம்பு, முந்திரி, ஏலக்காய், தேங்காய், இஞ்சி, பூண…
-
- 7 replies
- 1.3k views
-
-
சுவையான பாவ் பாஜி!! பாவ் பாஜி வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. இது உடலுக்கு மிகவும் சிறந்தது, ஏனெனில் இதற்கு செய்யப்படும் மசாலாவில் நமக்கு வேண்டிய எந்த காய்கறிகளையும் வைத்து செய்யலாம். மேலும் காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி செய்து கொடுத்து, அவர்களை சாப்பிட வைக்கலாம். அந்த பாவ் பாஜியை எப்படி செய்வதென்று பார்க்கலாமா!!! தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு - 3 கேரட் - ஒரு கப் பீன்ஸ் - ஒரு கப் பச்சைபட்டாணி - 1/2 கப் காலிஃப்ளவர் - ஒரு கப் வெங்காயம் - ஒன்று தக்காளி - இரண்டு இஞ்சிபூண்டு விழுது - 1 1/2 ஸ்பூன் மிளகாய்தூள் - ஒரு ஸ்பூன் தனியாத்தூள் - ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள் - அரை ஸ்பூன் சீரகத்தூள் - அரை ஸ்பூன் கரம்மசா…
-
- 0 replies
- 736 views
-
-
நண்டு பிரியாணி என்னென்ன தேவை? பாசுமதி அரிசி -300கிராம் நண்டு -300கிராம் வெங்காயம் -2 தக்காளி -2 பச்சை மிளகாய் -2 இஞ்சி, பூண்டு விழுது -2ஸ்பூன் தயிர் - 4ஸ்பூன் தேங்காய் பால் - 4ஸ்பூன் எலுமிச்சை -1 பட்டை -2 ஏலக்காய் -5 அன்னாசிப்பூ -2 கல்பாசி -2 சிவப்பு மிளகாய் தூள் -1 1/2ஸ்பூன் மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன் மல்லித்தூள் -1ஸ்பூன் கரம் மசாலா -1/2 ஸ்பூன் புதினா, கொத்தமல்லி, உப்பு, நெய், எண்ணெய் -தேவையான அளவு எப்படி செய்வது? நண்டு பிரியாணி செய்ய முதலில் குக்கரில் அரிசியை போட்டு போதுமான அளவு தண்ணீர் சிறிது எண்ணெய் சேர்க்கவும் (சாதம் உதிரியாக வர) உப்பு கலந்து சாதம் வேகவைத்து அதில் நெய் ஊற்றி எடுத்…
-
- 3 replies
- 1.8k views
-
-
இறால் ஃப்ரை செய்யும்போது இதை மறந்துராதீங்க! #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான இறால் ஃப்ரை அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி தேவையானவை: இறால்(சுத்தம் செய்தது) - 200 கிராம் இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் வட்டமாக, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 10 கிராம் நறுக்கிய காய்ந்த மிளக…
-
- 0 replies
- 572 views
-
-
மாங்காய் சிக்கன் குழம்பு. சிக்கன் ரெசிபிக்களில் பிரபலமான ஒன்று தான் மாங்காய் சிக்கன் குழம்பு. மேலும் இது ஒரு கோவா ரெசிபி. இதில் மாங்காய் சேர்க்கப்பட்டிருப்பதால், இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். அதிலும் விடுமுறை நாட்களில் வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைப்போர், இந்த மாங்காய் சிக்கன் குழம்பை செய்யலாம். இங்கு அந்த மாங்காய் சிக்கன் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சி செய்து பாருங்கள். தேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 2 (அரைத்தது) மாங்காய் - 1 (சிறியது மற்றும் தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது) தேங்காய் - 1 கப் (துருவியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய…
-
- 0 replies
- 721 views
-
-
எலுமிச்சை(தெசிக்காய்) ரசம் ரசம் என்பது நம்முடைய சாப்பாட்டில் முக்கியம் பங்கு வழங்கப்படுகின்றது. எந்த ஒரு உணவினை உண்டாலும் கடைசியில் ரசம் ஊற்றி சாதம் சாப்பிடுவது நம்முடைய வழக்கமாக இருக்கின்றது. ரசம் சாப்பிடுவதால் எளிதில் ஜீரணம் ஆகின்றது. உடலிற்கும் மிகவும் நல்லது. பருப்பு ரசம், தக்காளி ரசம், எலுமிச்சை ரசம் , மிளகு ரசம் என பல வகைகளில் ரசம் உள்ளன. அதில் இன்று நாம் பார்க்க போவது எலுமிச்சை ரசம். எப்பொழுதும் புளி சேர்த்து தான் பெரும்பாலும் ரசம் வைப்போம். புளியினை நிறைய சேர்த்து கொள்ளவதும் உடலிற்கு நல்லது அல்ல. அதனால் வாரம் ஒரு முறை இந்த ரசத்தினை எங்கள் வீட்டில் வைப்போம்…வாருங்கள் சமைக்க தேவைப்படும் நேரம் : 10 – 15 நிமிடம் தேவையான பொருட்கள் : …
-
- 3 replies
- 1.9k views
-
-
தேவையான பொருட்கள்: ஆட்டு மூளை மஞ்சள் தூள் - 2 சிட்டிகை மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி மிளகு - 1 தேக்கரண்டி தேங்காய் - 2 பத்தை உடைத்த கடலை - ஒரு கைப்பிடி சீரகம், பட்டை, சோம்பு - அரை தேக்கரண்டி வெங்காயம் - 2 பூண்டு - 10 பல் புளி - எலுமிச்சை அளவு தயிர் - 1 தேக்கரண்டி தேங்காய்ப்பால் - 1 மூடி எண்ணெய் - தேவையான அளவு கொத்துமல்லி, கறிவேப்பிலை செய்யும் முறை: முதலில் மூளையை தண்ணீர் விட்டு கழுவி அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். பின்னர் மூளை வெந்ததும் அதன் மேல் ஜவ்வை எடுத்துவிட்டு பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகு, பட்டை, சோம்பு, போன்றவற்றை வறுத்து, அதனுடன் நறுக்கிய தேங்காய், மிளகாய் தூள், உடைத்த கடலை ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள…
-
- 5 replies
- 2.9k views
-
-
சிம்பிளான... வெஜிடேபிள் தம் பிரியாணி உங்களுக்கு வெஜிடேபிள் தம் பிரியாணியை வீட்டிலேயே செய்யத் தெரியுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு மிகவும் ஈஸியான முறையில் எப்படி வெஜிடேபிள் தம் பிரியாணி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த வெஜிடேபிள் தம் பிரியாணி செய்ய சற்று நேரம் ஆனாலும், மிகவும் சுவையாக இருக்கும். சரி, இப்போது அந்த வெஜிடேபிள் தம் பிரியாணியின் செய்முறையைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது) குடைமிளகாய் - 1/2 (நறுக்கியது) கேரட் - 1 (நறுக்கியது) பட்டாணி - 1/4 கப் காளான் - சிறிது பன்னீர் - சிறிது சீரகம் - 1 டீஸ்பூன் கிராம்பு - 5 பட்டை- 2 மிளகு - 5 …
-
- 0 replies
- 657 views
-
-
-
உணவாகும் மென்பொருள் தலைப்பே தவறு, இதோ நாளைய அடுப்படி மன்னர்களே உங்கள் திறமையை மேம்படுத்த ஒரு அரிய சந்தர்ப்பம். இந்த ஆட்களுக்கு யாராவது வேலை கொடுங்கப்பா.
-
- 0 replies
- 705 views
-
-
-
- 0 replies
- 620 views
-
-
விடுமுறை நாட்களில் வீட்டில் அனைவரும் இருக்கும் போது வித்தியாசமான சுவையில் ஏதேனும் அசைவ சமையல் சமைக்க ஆசைப்பட்டால், ஆப்கானிஸ்தான் ஸ்டைலில் ஒரு அருமையான சிக்கன் குழம்பை செய்து, வீட்டில் உள்ளோரை அசத்தலாம். மேலும் இந்த சிக்கன் குழம்பிற்கு, சிக்கன் ஆப்கானி என்று பெயர். இது சாதத்திற்கு அருமையாக இருக்கும். இப்போது அந்த சிக்கன் ஆப்கானியை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: சிக்கன் - 1 கிலோ இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் ஏலக்காய் - 4 பிரியாணி இலை - 4 பட்டை - 1 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ - சிறிது …
-
- 0 replies
- 893 views
-
-
"மசாலா பாஸ்தா'' செய்யும் முறை தேவையான பொருட்கள்: பாஸ்தா - 250 கிராம் வெங்காயம் - 5 புதினா - கால் கட்டு கொத்தமல்லி - கால் கட்டு கறிமசால் தூள் - ஒரு பாக்கெட் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - சிறிது கடுகு - சிறிதளவு செய்முறை : பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு 10 - 15 நிமிடம் வேக வைக்கவும். ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். பின் வடிகட்டி குளிர்ந்த நீர் ஊற்றி வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு பொரிய விடவும். பொரிந்ததும் பொடியாக நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் கறிமசால் தூள் சேர்த்து வதக்கவும்.( ரெடி மேடாக கிடைக்கும் மட்டன் மசாலா, சிக்கன் மசாலா வையும் சேர்க்கலாம்.) சிறிது உப்பையும் சேர்க்கவும். மசாலா…
-
- 0 replies
- 7.1k views
-
-
இறால் மிளகு தொக்கு செய்ய... தேவையான பொருட்கள்: இறால் - 1 கப் வெங்காயம் - 2 தக்காளி - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன் தனியா தூள் - 2 ஸ்பூன் கரம் மசாலா - 1 ஸ்பூன் சீரகத் தூள் - 1 ஸ்பூன் மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை எண்ணெய் - 2 ஸ்பூன் மிளகு - 2 ஸ்பூன் உப்பு - தேவைக்கேற…
-
- 0 replies
- 645 views
-
-
அருமையான சைடிஷ் நண்டு புட்டு நண்டை வைத்து குழம்பு, வறுவல், கிரேவி செய்து இருப்பீங்க. இன்று நண்டை வைத்து சூப்பரான புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : நண்டு, நண்டு ஸ்டிக்ஸ் - அரை கிலோ கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எலுமிச்சை ஜூஸ் - சிறிது, மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் சோம்பு - அரை டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் வெங்காயம் - 2 …
-
- 2 replies
- 1.3k views
-
-
வெங்காய பகோடா நேற்று நான் வீட்டில் செய்தது.. அனைவரும் பார்த்து நீங்கள் பிறந்ததின் பயனை பெற்று கொள்ளுங்கள். நீங்களும் செய்து சாப்பிட விருப்பமா? செய்முறை வேணுமா?? வேணும் என்றால் தான் எழுதுவன்..இல்லாட்டி :twisted: http://www.yarl.com/weblog/suvaiaruvi/2006...st_22.html#more
-
- 30 replies
- 7.2k views
-