நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
சிறுதானியங்களில் நிறைந்துள்ள சத்துக்கள் தற்போது சிறுதானிய உணவுகளை உண்ணும் ஆர்வம் அதிகரித்திருக்கின்றன. சிறுதானியங்களில் என்னென்ன சத்துகள் நிறைந்திருக்கின்றன என்று பார்க்கலாம். தற்போது சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வும், சிறுதானிய உணவுகளை உண்ணும் ஆர்வமும் அதிகரித்திருக்கின்றன. ஆனால் சிறுதானியங்களில் என்னென்ன சத்துகள் நிறைந்திருக்கின்றன என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இதோ, விவரம்... கம்பு: ‘டைப் 2’ சர்க்கரைநோய் வராமல் தடுக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும். வெயில் காலத்தில் ஏற்படும் தலைச்சுற்றல், கிறுகிறுப்பு, நாவற…
-
- 0 replies
- 737 views
-
-
பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும். ________________________________________ வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும். ________________________________________ சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும். ________________________________________ சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும். __________________________________…
-
- 9 replies
- 3k views
-
-
தேவையான பொருட்கள் எக் பீட்டர் கோதுமை மா அல்லது அரிசிமா வெந்நீர் அளவுகேற்ப உப்பு தேங்காய் பூ கோதுமைமா புட்டினை அவிப்பம் ஓகேயா :P போதுமானவளவு கோதுமை மாவினை 5 நிமிடங்கள் ஒரு கோப்பையில் போட்டு மைக்ரோவேயில் வைக்க பின் அந்த மாவினை அரிந்தெடுத்து புட்டு குழைக்கும் பாத்திரத்தில் இடுக.அளவுகேற்ப உப்பு வெந்நீர் சேர்த்தபின் எக்பீட்டரை உபயோகித்து ஒரு 30 செக்கண் மாவினை குழையுங்க.ஊரில பேணியால குத்திற மாதிரி புட்டு குழைக்கப்பட்டுவிடும்.பின் புட்டு குழலிலோ அல்லது ஸ்ரிமரிலோ தேங்காய்பூவினை கலந்து அவித்து எடுத்து பரிமாறுங்கள் Copyright 2002-2007 eelavan85, All Rights Reserved. :P எக் பீட்டர்
-
- 33 replies
- 8k views
-
-
சிலோன் சிக்கன் பரோட்டா செய்வது எப்படி சிலோன் பரோட்டா சாப்பிட சூப்பராக இருக்கும். இன்று வீட்டிலேயே சிக்கன் வைத்து சிலோன் பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் - அரைக்கிலோ பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் - 2 மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி பிரிஞ்சி இலை - 2 சிலோன் கறிபவுடர் - கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி தேங்காய் பால் - 2 கப் எலுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி உப்பு, எண்ணெய் - தேவையான அளவு நெய் - தேவையான அளவு சிலோன் கறி …
-
- 4 replies
- 1.2k views
-
-
சில்லி சப்பாத்தி கொத்து : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : சப்பாத்தி - 4 வெங்காயம் - 2 தக்காளி - 2 குடைமிளகாய் - ஒன்று (சிறியது) இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி பச்சைமிளகாய் - ஒன்று தனி மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி முட்டை - 2 செய்முறை : சப்பாத்திகளை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, லவங்கம், பட்டை தாளிக்கவும். தாளித்தவற்றுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம், பச்சை ம…
-
- 2 replies
- 3.3k views
-
-
-
- 0 replies
- 890 views
-
-
சில்லி சிக்கன் தேவையானவை கோழிக்கறி - 500 கிராம் பூண்டு - 5 பச்சைமிளகாய் - சிறிதளவு எண்ணெய் - 1 தேக்கரண்டி வினிகர் - 1 தேக்கரண்டி உப்பு - சிறிதளவு செய்யும் முறை கோழிக்கறியை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், பூண்டை அரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கோழிக்கறி, வினிகர், உப்பு, பூண்டு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை அரை மணிநேரம் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கோழிக்கறி துண்டுகளை போட்டு வதக்கி மிதமான தீயில் வேக விடவும். சிறிது நேரம் வாணலியை மூடி வைக்கவும். கோழிக்கறி வெந்ததும் திறந்த…
-
- 0 replies
- 1.4k views
-
-
தேவையான பொருட்கள்: எலும்பில்லாத கோழி இறைச்சி : 1/2 கிலோ மிளகாய்த்தூள் : 2 தே. கரண்டி (உங்கள் சுவைக்கேற்ப) சோளமாவு: 1 தே. கரண்டி முட்டை : 1 பச்சை மிளகாய்: 6 (உங்கள் தேவைக்கேற்ப) இஞ்சி : ஒரு சிறு துண்டு டொமாடோ சாஸ்: 4 தே.கரண்டி சோயா சாஸ் : 2 தே. கரண்டி சில்லி சாஸ்: 1 தே.கரண்டி மஞ்சள் தூள் : சிறிதளவு உப்பு தேவையான அளவு எண்ணை பொரிக்க, தாளிக்க வெண்ணை 2 தே. கரண்டி அஜினமோட்டோ தேவையென்றால் 1/2 தே.கரண்டி செய்முறை *கோழி இறைச்சியை சுத்தமாக்கி சிறு துண்டுகளாக்கி வைத்துக்கொள்ளவும். *ஒரு முட்டையுடன் ஒரு தே. கரண்டி சோளமாவை நன்றாகக் கலந்து இறைச்சியுடன் சேர்க்கவும் உடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, ஒரு தே. கரண்டி …
-
- 2 replies
- 937 views
-
-
தேவையான பொருட்கள்: ------------------------------- கோழி 1 கி பெரிய வெங்காயம் 6 மிளகாய் வற்றல் 7 தக்காளி 5 இஞ்சி, பூண்டு சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி கரம் மசாலா டால்டா அல்லது நெய் வினிகர் எலுமிச்சை சாறு வெள்ளரிக்காய் செய்முறை: ------------- முதலில் கோழியை தோல் நீக்கி பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டை வினிகர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவும். பின்னர் துண்டுகளாக வெட்டிய கோழியுடன் இந்த விழுதை சேர்க்கவேண்டும். இத்துடன் உப்பு, மஞ்சள் தூள் எலுமி்ச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து 1 மணி நேரம் ஊறவிடவும். இந்த கலவையை இட்லி தட்டில் வைத்து ஆவியில் நன்றாக வேக வைக்கவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறு…
-
- 14 replies
- 4.2k views
-
-
சில்லி சீஸ் டோஸ்ட் மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியோடு வரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சமையலின் மூலம் பசியை அடக்க நினைத்தால், சில்லி சீஸ் டோஸ்ட் செய்து கொடுங்கள். இது வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். சரி, இப்போது அந்த சில்லி சீஸ் டோஸ்ட் எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: பிரட் - 2 துண்டுகள் சீஸ் - 3 டேபிள் ஸ்பூன் (துருவியது) பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது) பச்சை குடைமிளகாய் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பௌலில் பச்சை மிளகாய், குடைமிளகாய், துருவிய சீஸ், மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்த…
-
- 4 replies
- 725 views
-
-
சில்லி நண்டு தேவையானவை: நண்டு - ஒரு கிலோ சின்னவெங்காயம் - 2 கப் காய்ந்த மிளகாய் - 10 இஞ்சி - ஒரு இஞ்ச் துண்டு பூண்டு - 6 பல் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் தக்காளி சாஸ் - 4 டேபிள்ஸ்பூன் லைட் சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன் ஸ்வீட் சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன் ரெட் சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன் எம்.எஸ்.ஜி சுவையூட்டி - ஒரு துளி சர்க்கரை - ஒரு சிட்டிகை தண்ணீர் - 3 கப் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து சுத்தம் செய்த நண்டுடன் உப்பு, மஞ்சள்தூள், 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். இரண்டு நிமிடம் கழித்து கொதிக்கும் நண்டை வடித்து நன்றாக ஆறவிடவும். சின்னவெங்காயம், காய்ந்த மிளகாய், இஞ்சி, ப…
-
- 3 replies
- 822 views
-
-
சில்லி நண்டு - சைனீஸ் முறை தேவையான பொருட்கள்: நண்டு - அரை கிலோ மிளகாய் விழுது - 2 மேசைக்கரண்டி எண்ணெய் - 2 மேசைக்கரண்டி நறுக்கிய பூண்டு - ஒரு மேசைக்கரண்டி அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை சோளமாவு - 2 மேசைக்கரண்டி சர்க்கரை - ஒரு மேசைக்கரண்டி நறுக்கிய தக்காளி - ஒரு கப் வினிகர் - ஒரு மேசைக்கரண்டி முட்டை - ஒன்று உப்பு - தேவையான அளவு செய்முறை: நண்டைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பூண்டைப் பொடியாக நறுக்கவும். தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும். (சிறிதளவு சுடு தண்ணீரில் 5 காய்ந்த மிளகாயைப் போட்டு கால் மணி நேரம் ஊற வைத்து, பிறகு விதையை நீக்கிவிட்டு தோ…
-
- 2 replies
- 2.3k views
-
-
[size=3][size=4]தேவையான பொருட்கள் : [/size][/size] [size=3][size=4]* மைதா – 1 கப் (200 கிராம்), * பெரிய வெங்காயம் – 1, * குட மிளகாய் – 1, * மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி, * சோயா சாஸ் – 1 தேக்கரண்டி, * தக்காளி சாஸ் – 3 தேக்கரண்டி, * சிவப்பு கலர் கேசர் பவுடர் – 1/2 தேக்கரண்டி, * இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி, * எண்ணெய் – 2 மேசைக்கரண்டி, * சர்க்கரை – 1 தேக்கரண்டி, * உப்பு – தேவையான அளவு.[/size] [size=4]செய்முறை : * வெங்காயம், குட மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி உதிர்த்து வைக்கவும்.[/size] [size=4]* மைதாவை சிறிது உப்பு, ஒரு தேக் கரண்டி எண்ணெய் சேர்த்து, சப்பாத் திக்கு பிசைவது போல் பிசைந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.[/size] [siz…
-
- 1 reply
- 915 views
-
-
சில்லி மீன் வறுவல் செய்வது எப்படி .... சில்லி சிக்கன் செய்வதை போல் மீனில் சில்லி மீன் வறுவல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருள்கள் : வஞ்சிரம் வறுவல் ஸ்லைஸ் - 10 குடமிளகாய் - 1 வெங்காயம் - 1 சோயாசாஸ் - 1 டீஸ்பூன் கிரீன்சில்லி சாஸ் - 2 டீஸ்பூன் ரெட்சில்லி சாஸ் - 1 டீஸ்பூன் டொமேட்டோ கெட்சப் - 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் உப்பு - சிறிது எண்ணெய் - தேவைக்கு கார்ன் மாவு -1/2 டீஸ்பூன் எலுமிச்சை - 1 செய்முறை : * மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். * ஒரு பாத்திரத்தில் மீனை போட்டு அதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி 1/2 மணி நேரம் ஊற விடவும். …
-
- 0 replies
- 1.3k views
-
-
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/10606491_831119306907126_7245413857358199100_n.jpg?oh=fa1b8fb23fb38271af95bdad8fb3e95b&oe=545DCE6A&__gda__=1416835420_d4df096cd7263ab06b9100288379c68a தேவையான சாமான்கள். --- வறுத்த உளுத்தம் மா _______________ அரை சுண்டு. --- சிவப்பு அரிசி மா ___________________ 1 சுண்டு. --- வறுத்த பயறு ______________________ காற் சுண்டு. --- தேங்காய்ப் பால் ____________________ அரை லிட்டர். --- சீனி _______________________________ 250 கிராம். --- உப்பு ______________________________ தேவையான அளவு. சுமாராக 6 , 8 . பேருக்கு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் உளுத்தம் மா , அரிசி ம…
-
- 12 replies
- 2.8k views
-
-
சிவானந்தா ஆச்சிரம ஆரோக்கிய மான சாப்பாட்டு முறைகள். சிவானந்தா சைவச்சாப்பாட்டுக் கடை ஆக்கங்கள் கைகளில் உண்டு ஒவ்வொருநாளும் தொடர்ச்சியாக உங்களுக்கு தந்து கொண்டு இருப்பேன். தற்போது தமிழில் அதனை மொழிபெயர்த்துக்கொண்டு உள்ளேன். மீண்டும் நாளை வருக. நன்றிகள்.
-
- 0 replies
- 1.8k views
-
-
சீசுவான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன் இதுவரை காலிஃப்ளவர் கொண்டு மஞ்சூரியன் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் உருளைக்கிழங்கு கொண்டு, அதுவும் சைனீஸ் ஸ்டைலில் மஞ்சூரியன் செய்து சுவைத்திருக்கிறீர்களா? தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 2 சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சூரியன் செய்வதற்கு... எண்ணெய் - 3 டீஸ்பூன் பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 1/2 (பொடியாக நறுக்கியது) பெரிய வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) குடைமிளகாய் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது) சோயா சாஸ் - 1/4 டீஸ்பூன் தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் …
-
- 0 replies
- 575 views
-
-
-
- 10 replies
- 961 views
-
-
-
- 0 replies
- 592 views
-
-
UNSEEN Chinese Street Food BREAKFAST TOUR in DEEP Sichuan, China | STREET FOOD Tour through China! சீன தெருவோர உணவகங்களில் சாப்பாட்டு அசுரன்
-
- 1 reply
- 743 views
-
-
-
- 0 replies
- 609 views
-
-
ராசவள்ளிக் கிழங்கு சிறு வயதினரிலிருந்து பெரியோர்கள் வரை விரும்பி சாப்பிடும் நல்ல ஒரு உணவு.வெளி நாட்டில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு இதைப் பற்றி தெரிய வாய்ப்பில்லை.ஆனால் இலங்கையில் பிறந்து வளர்ந்தவர்கள் இதைச் சாப்பிடாதவர்களே இருக்க மாட்டார்கள்.இங்குள்ள இந்தியன் கடைகளில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி பக்கற் பண்ணி குளிரூட்டிகளில் போட்டு விற்கிறார்கள். இதையே சீன மரக்கறி கடைகளுக்கு போனால் purple jam என்ற பெயரில் வைத்திருப்பார்கள். தோலைச் சுரண்டி அளவான தண்ணீரில் போட்டு நன்றாக வெந்ததும் தேவையான அளவு உப்பு தேங்காய்ப்பால் அல்லது பசுப்பால் தேவையான அளவு தண்ணீராகவும் இல்லாமல் இறுக்கமாகவும் இல்லாத அளவு வர இறக்கி சிறிது ஆறவைக்க இன்னும் கொஞ்சம் இறுகும். உங்களுக்கு தேவையான …
-
- 4 replies
- 1.9k views
-
-
சீன வகை உணவுகளில் மிக அதிகளவில் உப்பு: ஆய்வில் கண்டுபிடிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் இருந்து பார்சல் மூலம் பெறப்படும் சீன உணவுகளில் உப்பு அதிகளவில் இருப்பதால், அதில் சுகாதார எச்சரிக்கை இடம்பெற வேண்டும் என ஒரு பிரசார குழு கூறுகிறது. ஆக்ஷன் ஆன் சால்ட் எனும் இந்த அமைப்பு 150 க்கும் மேற…
-
- 2 replies
- 849 views
-
-
சீனாவின் கொழுக்கட்டை சாப்பிட்டதுண்டா!
-
- 5 replies
- 1.3k views
-
-