நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
ப்ராக்கோலி பெப்பர் ப்ரை காலிஃப்ளவர் போன்று ஆனால் பச்சை நிறத்தில் இருக்கும் ப்ராக்கோலியை பலருக்கு எப்படி சமைத்து சாப்பிட வேண்டுமென்று தெரியாது. அத்தகையவர்களுக்காக ப்ராக்கோலியை எப்படி சுவையான முறையில் சமைத்து சாப்பிடுவதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் இங்கு ப்ராக்கோலி பெப்பர் ப்ரை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. சரி, இப்போது அந்த ப்ராக்கோலி பெப்பர் ப்ரை ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்ததென்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: ப்ராக்கோலி - 1 (சிறியது மற்றும் துண்டுகளாக்கப்பட்டது) உப்பு - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் ப்ரை செய்வதற்கு... எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு - …
-
- 1 reply
- 797 views
-
-
செட்டிநாடு பொடி கத்திரிக்காய் வறுவல் மதியம் வீட்டில் சாம்பாருக்கு செட்டிநாடு சைடு டிஷ் செய்ய ஆசைப்பட்டால், செட்டிநாடு பொடி கத்திரிக்காய் வறுவலை செய்து சுவையுங்கள். இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, காரமாகவும் இருக்கும். மேலும் இது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். சரி, இப்போது அந்த செட்டிநாடு பொடி கத்திரிக்காய் வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: சின்ன கத்திரிக்காய் - 8 கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் பொ…
-
- 1 reply
- 1.4k views
-
-
செட்டிநாடு ஸ்டைல் வெண்டைக்காய் மண்டி உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் உணவுகள் அனைத்தும் பிடிக்குமா? அதில் செட்டிநாடு உணவுகளில் ஒன்றான வெண்டைக்காய் மண்டி பற்றி தெரியுமா? இல்லையெனில் இங்கு அந்த செட்டிநாடு ஸ்டைல் வெண்டைக்காய் மண்டி சமையலை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வெண்டைக்காய் மண்டி சாதம் மற்றும் தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறு இருக்கும். இதன் ஸ்டைல் அரிசி ஊற வைத்த நீரைக் கொண்டு தயாரிப்பது தான். தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் - 1 1/2 கப் (துண்டுகளாக்கப்பட்டது) சின்ன வெங்காயம் - 1 கப் பூண்டு - 8 பல் (நறுக்கியது) தக்காளி - 1 புளி - 1 எலுமிச்சை அளவு பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை உப்பு…
-
- 1 reply
- 642 views
-
-
உலகிலேயே விலையுயர்ந்த புரியாணி.! டுபாயில் செயல்பட்டு வரும் பாம்பே போரோ என்ற புரியாணி ரெஸ்டோரன்ட்டில் ரோயல் புரியாணி என்ற பெயரில் உலகிலேயே அதிக விலை கொண்ட புரியாணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புரியாணியில் 23 கரட் சாப்பிடக் கூடிய தங்கமும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு தட்டு அலங்கரிக்கப்பட்ட புரியாணியின் விலை 1,000 திர்ஹா (ரூபாய் 50 ஆயிரம்) ஆகும். கிட்டத்தட்ட 6 பேர் ஒரு தட்டு புரியாணியை உண்ண முடியும். உணவகத்தின் முதல் ஆண்டை குறிக்கும் வகையில் உணவு அட்டவணையில் ரோயல் கோல்ட் புரியாணி சேர்க்கப்பட்டுள்ளது. பாம்பே போரோ ரெஸ்டோரன்ட் டுபாயில் தொடங்கப்பட்டு முதல் ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு இந்த ரோயல் புரியாணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பு…
-
- 1 reply
- 885 views
-
-
சிம்பிளான... வெங்காயம் தக்காளி குழம்பு மதிய வேளையில் சாதத்திற்கு சிம்பிளாக ஏதேனும் குழம்பு செய்ய நினைத்தால், வெங்காயம், தக்காளி மற்றும் தேங்காய் பால் சேர்த்து சிம்பிளாக ஒரு அருமையான சுவையில் குழம்பு செய்யலாம். இது செய்வதற்கு ஈஸியாக இருப்பதுடன், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாகவும் இருக்கும். சரி, இப்போது அந்த வெங்காயம் தக்காளி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: வெங்காயம் - 1 கப் (நறுக்கியது) தக்காளி - 2 கப் (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் புளிச்சாறு - 1/2 டீஸ்பூன் மல்லி தூள் - 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன் கெ…
-
- 1 reply
- 610 views
-
-
தேவையான பொருட்கள்: இறால் - 200 கிராம் புதினா - 1 சிறிய கட்டு கொத்தமல்லி - 1/2 கட்டு இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 2 பூண்டு - 5 பற்கள் பச்சை மிளகாய் - 1-2 சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன் மல்லி தூள் - 1/2 டீஸ்பூன் தேங்காய் பால் - 100 மி.லி எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு தண்ணீர் - 1 1/2 கப் செய்முறை: இறாலை நன்கு கழுவி, அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி நன்கு ஊற வைக்க வேண்டும். பின்னர் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகப் பொடி, மல்லி பொடி, இஞ்சி, பூண்டு மற்றும் 1 வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில…
-
- 1 reply
- 708 views
-
-
காளான் குருமா தேவையான பொருட்கள்: காளான் - 200 கிராம் சின்ன வெங்காயம் - 100 கிராம் சோம்பு - 1/2 தேக்கரண்டி கசகசா - 1/4 தேக்கரண்டி தேங்காய் - 1/4 மூடி மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி தக்காளி - 2 இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி பட்டை - 3 கிராம்பு - 3 மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி கொத்தமல்லித்தழை - 1 கொத்து செய்முறை: காளானை சுத்தம் செய்து வெந்நீரில் போட்டுக் கழுவி, பெரிய பெரிய துண்டுகளாக வெட்ட வேண்டும். தேங்காய், கசகசா, சோம்பு ஆகியவற்றை தனியே தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு பட்டை, க…
-
- 1 reply
- 745 views
-
-
கீமா வறுவல் என்பது மட்டன் உணவிலேயே மிகவும் சுவையானது. இதை உலகம் முழுவதும் உள்ள மக்கள் விரும்பி சாப்பிடுவர். அதிலும் அசைவ உணவுகள் என்றாலே காரம் தான். அந்த காரம் ஆந்திரா உணவுகளில் சொல்ல முடியாத அளவில் இருக்கும். இப்போது அந்த வகையான ஆந்திரா ஸ்டைலில் கீமா வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: மட்டன் கீமா (கொத்துக்கறி) - 800 கிராம் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - 10 வெங்காயம் - 1 (நறுக்கியது) இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறித…
-
- 1 reply
- 782 views
-
-
தக்காளி உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி செய்யும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக உருளைக்கிழங்கு மசாலா சூப்பராக இருக்கும். ஆனால் அந்த உருளைக்கிழங்கு மசாலாவையே சற்று வித்தியாசமாக தக்காளி அதிகம் சேர்த்து சமைத்தால் எப்படி இருக்கும்? உண்மையிலேயே சூப்பரா இருக்கும். வேண்டுமெனில் முயற்சித்துப் பாருங்கள். இங்கு தக்காளி உருளைக்கிழங்கு மசாலாவை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது) பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் தண்ணீர் - 1/2 கப் உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) …
-
- 1 reply
- 1.3k views
-
-
ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவல் இதுவரை எத்தனையோ மீன் வறுவலை சுவைத்திருப்பீர்கள். ஆனால் ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவலை சுவைத்ததுண்டா? நிச்சயம் இருக்க முடியாது. ஏனெனில் இந்த மாதிரியான மீன் வறுவல் ஐதராபாத்தில் உள்ள பார்களில் அதிகம் விற்கப்படும். இங்கு அந்த ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவலை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: விரால் மீன் - 250 கிராம் நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 (நீளமாக வெட்டிக் கொள்ளவும்) மிளகாய் பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன் சோயா சாஸ் - 1 டீஸ்பூன் தயிர் - 1/4 கப் மிளகுத் …
-
- 1 reply
- 796 views
-
-
மருத்துவ குணம் நிறைந்த சீரகக் குழம்பு செய்ய...! தேவையானவை: சீரகம் - 2 டேபிள்ஸ்பூன் புளி - ஒரு எலுமிச்சை அளவு பெரிய வெங்காயம் - 1 பூண்டு - 5 அல்லது 6 பல் சாம்பார் பொடி - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் வெல்லம் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தாளிக்…
-
- 1 reply
- 1k views
-
-
மட்டன் பிரியாணி, ஹைதராபாதி சிக்கன் மசாலா... ஹோட்டல் ஸ்பெஷல்! அசைவம் இல்லாத ஞாயிற்றுக்கிழமையா? சென்னையைச் சேர்ந்த ஆசிஃப் பிரியாணி நிறுவனம், மட்டன் பிரியாணியும், அதற்கு சைட் டிஷ்-ஆக ஹைதராபாதி சிக்கன் மசாலாவும் எப்படி செய்வது என்று சொல்லித் தந்திருக்கிறார்கள். சமைத்து ருசியுங்கள். புரட்டாசி அன்பர்கள் மட்டும் மன்னிச்சு... மட்டன் பிரியாணி தேவையானவை: மட்டன் (ஆட்டுக்கறி) - 1 கிலோ பிரியாணி அரிசி - அரை கிலோ சீரகம் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு நெய் - 4 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா தயாரிக்க: பட்டை - 4 சிறிய துண்டு ஏலக்காய் - 8 கிராம்பு - 4 மிளகு - 20 ஜாதிக…
-
- 1 reply
- 796 views
-
-
Doctor சிவராமன் சார் வீட்டு கல்யாணம் எப்படி இருக்கு பாருங்க! அசத்தல் MENU! வாயடைத்து போன சம்பவம்
-
-
- 1 reply
- 295 views
- 1 follower
-
-
"டோ நட்" Donuts தேவையான பொருட்கள் : மைதா மாவு - 100 கிராம் சீனி - 50 கிராம் உருக்கிய வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி ட்ரை ஈஸ்ட் - ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி பால் - அரை கப் முட்டை - ஒன்று சாக்லேட் டிப்பிங் செய்ய : கோகோ பவுடர் - அரை கப் சீனி - கால் கப் வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் - தேவையான அளவு ஒரு இன்ச் அளவு வட்டமான மூடி - ஒன்று (அ) பிஸ்கட் கட்டர் 4 இன்ச் அளவில் வட்டமான பாட்டில் மூடி - ஒன்று செய்முறை: கால் கப் பாலை வெதுவெதுப்பாக சூடாக்கி அதில் ஈஸ்டைக் கலந்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். …
-
- 1 reply
- 1.3k views
-
-
செட்டிநாடு பூண்டு புளிக்குழம்பு செய்வது எப்படி வயிறு உபாதை இருப்பவர்கள் இந்த பூண்டு புளிக்குழம்பை செய்து சாப்பிடலாம். இன்று இந்த குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம் - 1/2 கப் பூண்டு - 10 பல் புளி - (சிறிய எலுமிச்சை அளவு ) சாம்பார் தூள்(குழம்பு மிளகாய்த்தூள் ) - 3 டீஸ்பூன் தக்காளி - 2 வெங்காய கறி வடகம் - 1/4கப் தாளிக்க : வெந்தயம் - 1/4 டீஸ்பூன் சோம்பு - 1/4 டீஸ்பூன். செய்முறை : பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி தனியாக வைக்கவும். தக்காள…
-
- 1 reply
- 1.9k views
-
-
ஆந்திரா குண்டூர் சிக்கன் தேவையான பொருட்கள்: சிக்கன் – அரை கிலோ - முக்கால் கிலோ காய்ந்த சிவப்பு மிளகாய் – 4 - 6 (காரம் அவரவர் விருப்பம்) முழு மல்லி – 3 தேக்கரண்டி மிளகு – ஒரு தேக்கரண்டி சீரகம் – 1 1/2 தேக்கரண்டி கடுகு – அரை தேக்கரண்டி வெந்தயம் – கால் தேக்கரண்டி தேங்காய் துருவல் – 3 மேசைக்கரண்டி எண்ணெய் – 4 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி கரம் மசாலா – ஒரு தேக்கரண்டி (ஏலம், பட்டை, கிராம்பு கலவை) வெங்காயம் – 100 கிராம் தக்காளி – 150 கிராம் புளிக்காத தயிர் – 2 மேசைக்கரண்டி மல்லி இலை – சிறிது உப்பு – தேவைக்கு. செய்முறை: தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும். சிக்கனை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் …
-
- 1 reply
- 972 views
-
-
உலகில் பெரும்பாலான மக்கள் விரும்பி உண்ணும் மற்றொரு இறைச்சி இது. ஆட்டு இறைச்சியில் கொழுப்பு (Fat) சற்று அதிகம். ஆட்டின் அனைத்து பாகங்களுமே உணவாக உட்கொள்ளப்படுகின்றது. மருத்துவ ரீதியாக ஒவ்வொரு பாகமும் உடலுக்கு ஒவ்வொரு பலனைக் கொடுக்கின்றது. ஆட்டிறைச்சி வாங்கும் போது மிகவும் பார்த்து வாங்குதல் அவசியம். இளம் ஆட்டின் கறி சுவையாக இருக்கும். மிருதுவாகவும் இருக்கும். கறியின் கொழுப்பு வெண்மை நிறமாக இருத்தல் வேண்டும். மஞ்சள் நிறமாக இருந்தால் சற்று முற்றின ஆடு என்று கொள்ளலாம். கறியின் நிறம் சற்று மங்கிய சிவப்பாய் இருக்க வேண்டும். முற்றின கறியாக இருந்தால், சிறிது வினிகர், எலுமிச்சை சாறு சேர்த்து வேக வைப்பதின் மூலம் சற்று மிருதுவாக்கலாம். ஆட்டு இறைச்சி 100 கிராம் உண்பதில் அடங…
-
- 1 reply
- 9.2k views
-
-
· · ஆந்திர பச்சை மிளகாய் சிக்கன் தேவையான பொருட்கள் சிக்கனை ஊறவைக்க சிக்கன் 300 கிராம் நெய் 1 மேஜைக்கரண்டி வெங்காயம் 2 பெரியது ( விழுதாக அரைத்து கொள்ளவும் ) எலுமிச்சை சாறு 1 மேஜைக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி கரம்மசாலா தூள் 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள் …
-
- 1 reply
- 1.1k views
-
-
https://youtu.be/VQifd-tKVSw
-
- 1 reply
- 672 views
-
-
மரவள்ளி கிழங்கு புட்டு இப்ப இருக்கிற ஆக்கள் கூடுதலாய் மாவிலைதான் புட்டு அவிப்பினம் . பருத்திதுறையிலை மரவள்ளிக் கிழங்கிலையும் புட்டு அவிக்கிறவை . மரவள்ளிக் கிழங்கு கஸ்ரப்பட்ட ஆக்களின்ரை சாப்பாட்டு எண்டு இப்ப பெரிசாய் ஒருத்தரும் அதை மதிக்கிறேலை . எங்கடை பழைய ஆக்கள் மரவள்ளிக் கிழங்கை சாப்பிட்டே நல்ல சுக நயமாய் இருந்தவை . எனக்கு தெரிஞ்சு இதிலை புட்டு அவிக்கிறது குறைவு . ஆனால் நல்ல சத்தான சாப்பாடு. என்ன வேணும் : மரவள்ளிக் கிழங்கு 1 கிலோ பனங்கட்டி 1 - 3 குட்டான் ஏலக்காய் 4-5 ( தேவையான அளவு ) பட்டர் அல்லது நெய் 1 தேக்கரண்டி உப்பு தேவையான அளவு கூட்டல் : மரவள்ளிக் கிழங்கை கொஞ்ச நேரம் மெதுவான சுடுதண்ணியிலை ஊறவிட்டு மண்ணை கழுவுங்கோ . மரவள்ளிக் கிழங்கை 2- 3 துண்…
-
- 1 reply
- 1.5k views
-
-
இட்லி சூப்பர் சாஃப்டாக வர என்ன செய்யலாம்? காலை உணவுக்கு ஏற்றது இட்லி மற்றும் சட்னிதான். தயாரிக்கவும் எளிது. ஆனால் எல்லோர் வீட்டிலும் இட்லி சாஃப்டாக இருப்பதில்லை. நமக்கே கூட ஒரு சில நாட்கள் மிருதுவாக வரும், சில நாட்கள் கல் போன்று சுவையற்று இருக்கும். எப்போதும் ஒரே மாதிரியான மிருதுவாக இட்லி வர என்ன செய்யவேண்டும்? தேவையான பொருட்கள் : புழுங்கல் அரிசி - 4 தம்ளர் உளுந்து - 1 டம்ளர் வெந்தயம் - 1/2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை : முதலில் தரமான அரிசி மற்றும் உளுந்தை பயன்படுத்தவேண்டும். அதன் பின் உளுந்து, அர…
-
- 1 reply
- 4.1k views
-
-
https://www.youtube.com/watch?v=3-qhNGjryt0https
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
ரசத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது தக்காளி ரசம் தான். ஆனால் அதற்கு சமமான சுவையில் பூண்டு ரசம் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? சரி, உங்களுக்கு பூண்டு ரசம் வைக்கத் தெரியுமா? இல்லாவிட்டால் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு தமிழ் போல்ட் ஸ்கை பூண்டு ரசத்தை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து சுவையுங்கள். தேவையான பொருட்கள்: புளி - 1 சின்ன நெல்லிக்காய் அளவு கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... பூண்டு பற்கள் - 6 பச்சை மிளகாய் - 1 மிளகு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் …
-
- 1 reply
- 899 views
-
-
சுவையான தேங்காய்ப்பால் மீன் குழம்பு தேவையான பொருள்கள்: அரை கிலோ மீன், இரண்டு பெரிய வெங்காயம், மூன்று தக்காளி, தேங்காய்ப்பால் இரண்டு கப், 4 தேக்கரண்டி மீன் குழம்பு மசாலா, 3 தேக்கரண்டி நல்லெண்ணெய், அரை தேக்கரண்டி கடுகு மற்றும் வெந்தயம், பச்சை மிளகாய் நான்கு, ஒரு தேக்கரண்டி பூண்டு விழுது, இரண்டு கப் புளி தண்ணீர், உப்பு தேவையான அளவு. செய்முறை: மேலே குறிப்பிட்ட அளவு வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம் போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சி…
-
- 1 reply
- 793 views
-
-
சூப்பரான ஆந்திரா நண்டு மசாலா புலாவ், சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த ஆந்திரா நண்டு மசாலா. இன்று இந்த நண்டு மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பெரிய நண்டு - அரை கிலோ தக்காளி - 4 வெங்காயம் - 2 கிராம்பு - 4 தனியா தூள் - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - 4 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி உப்பு …
-
- 1 reply
- 1k views
-