நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
634 topics in this forum
-
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று ! இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, மட்டக்களப்பு மனித உரிமைகள் என்றால் எல்லா மனிதர்களுக்கும் உரிய அடிப்படையிலான உரிமைகளையும், சுதந்திரங்களையும் குறிக்கின்றன. ஒரு மனிதன் அமைதியான அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கு என்னவெல்லாம் தேவையோ அவற்றை மனித உரிமைகள் எனக் கருதலாம். இவற்றில் அடிப்படைத் தேவைகளான நீர், உணவு, உறைவிடம் போன்றவற்றுடன் கொலை செய்யப்படாமலும். சித்திரவதை செய்யப்படாமலும். அவமதிக்கப்படாமலும் வாழ்வதற்கான உரிமையும் இதில் உள்ளடக்கப்படுகிறது. இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவடைந்ததும் வெற்றி பெற்ற நாடுகள் 1945 இல் உக்ரேனில் யால்டா மாநாட்டில் கலந்து கொண்ட போது, உலக சமாதானத்தைப் பாதுகாக்க தவறிவிட்ட சர்வதேச சங்கத்த…
-
- 0 replies
- 531 views
-
-
அனைவரையும் சிரிக்க வைத்த மனிதர்... சார்லி சாப்ளின் பிறந்த தினம் இன்று. அவர் நினைவாக சில ஒளிப்பதிவுகள்.
-
- 1 reply
- 364 views
-
-
சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் வாணி விழாவும் முத்தமிழ் விழாவும் October 13, 2018 சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் வாணி விழாவும் முத்தமிழ் விழாவும் 13.10.2018 சனிக்கிழமை காலை இடம்பெற்றது. அதிபர் ந.சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பழைய மாணவரும் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபருமாகிய செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் கலந்து கொண்டார். தமிழ்த்தினப் போட்டிகளில் பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவர்கள் மற்றும் வாணிவிழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். மாணவர்களின் கலை நிகழ்வுகள் பல இடம்பெற்றன. http://globaltamilnews.net/2018/99298/
-
- 0 replies
- 378 views
-
-
நெதர்லாந்தில் சாவிலும் வாழ்வோம் முதலாம் நாள் நிகழ்வு. சாவிலும் வாழ்வோம் கவனயீர்ப்பு போராட்ட நிகழ்வு நேற்று நெதர்லாந்தில் அம்சர்டாம் நகரில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் 2மணிக்கு நெதர்லாந்து தமிழர் மனிதஉரிமைமையப் பொறுப்பாளர் திரு. இந்திரன் அவர்கள் பொதுச்சுடரேற்றி இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். சிங்களஅரசினால் படுகொலைசெய்யப்பட்ட தமிழ்மக்களிற்காக சுடர், மலர்வணக்கம் அங்குவந்திருந்த மக்களால் செய்யப்பட்டு, இப்படுகொலைகளை விளக்கி நெதர்லாந்து மொழியில் பிரசுரங்களும் நெதர்லாந்து மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்வானது ஒக்ரோபர் 6ம் திகதி வரை நெதர்லாந்தின் பலநகரங்களில் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. நாளை புதன்கிழமை அல்மேரா …
-
- 18 replies
- 3.3k views
-
-
வியாழக்கிழமை, 7, ஜூலை 2011 (9:18 IST) சிங்கப்பூரில் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு சிங்கப்பூரில் அக்டோபர் மாதம் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் நா.ஆண்டியப்பன் கூறியதாவது, சிங்கப்பூர் எழுத்தாளர் விழா அக்டோபர் 22ம் தேதி முதல் 30ம் தேதிவரை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை "உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு' சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. "தாயகம் கடந்த தமிழ் இலக்கியம்: புதிய போக்குகள், புதிய பாதைகள்' என்பதே இந்த மாநாட்டின் முக்கிய கருப்பொருள். அமெரிக்கா, ஆஸ்திரேலியா,கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இலங்கை, பிரிட்டன், மலேசியா, …
-
- 2 replies
- 1.4k views
-
-
சிட்னி முருகன் கோயில் வருடாந்த தேர்திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.வரும் சனிக்கிழமை தேர் .முருகனின் முகப்புத்தகத்தில் மேலதிக தகவல்களை பெறலாம் https://www.facebook.com/search/top/?q=sydney murugan temple சிட்னி முருகனுக்கு அரோகரா
-
- 3 replies
- 942 views
-
-
நவம் அறிவு கூடதிற்கான நிதி சேகரிப்பு சிட்னியில் நடந்தது சகலரும் அறிந்திருப்பீர்கள்."இராவணேசன்" என்ற நாட்டிய நிகழ்ச்சியை இளைஞர்களும்,யுவதிகளும் மேடை ஏற்றி நடித்திருனர்.பார்த்து ரசிக்க கூடியதாக இருந்தது.வழமையான நாட்டிய நாடகங்களிள் இராமர்,சீதை,நடராஜா தாண்டவம் போன்ற புரியாத கதைகளை புரியாத கர்நாடக சங்கீதத்தில் தான் மேடையில் பார்க்க கூடியதாக இருக்கும்.ஆனால் இது எமது இராவணன் கதையை சித்தரிக்கும் ஒரு நாட்டிய நிகழ்ச்சியாக இருந்தது அத்துடன் தமிழ் பாடல்கள் தான் நாட்டியம் பூராகவும் கேட்க கூடியதாகவும் இருந்தது.இந்த நிகழ்ச்சியை என் போன்ற சங்கீத நாட்டிய அறிவில்லாத பாமரனும் பார்த்து ரசிக்க கூடியதாக இருந்தது. இந்த நாட்டிய நாடகத்தை தாயரித்து நெறியாள்கை செய்து நடித்தவர் புலத்தில் பிறந்த…
-
- 7 replies
- 2.2k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
சிட்னியில் Laughing'o laughing நகைச்சுவை நாடகங்கள் வரும் சனி 30.01.2009ல் நடைபெறவுள்ளது. 4 வது வருடமாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சேகரிக்கப்படும் நிதி தாயாகத்தில் மனிதாபிமான உதவிகளுக்கே செலவு செய்யப்பட்டு வருகிறது. 4 வது வருடமாக சென்ற மாதம் அக்டோபரில் நடைபெற்ற இந்நிகழ்வில் 1500 இருக்கைகள் கொண்ட அரங்கில், நுளைவுச்சீட்டினைப் பெறமால் ஏமாற்றத்துடன் திரும்பியவர்களுக்காக 2வது முறையாக இந்நிகழ்வு வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.
-
- 0 replies
- 815 views
-
-
-
- 0 replies
- 927 views
-
-
சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடிய பூரணையே சித்திரா பூரணையாகும். அன்று சித்திரகுப்த விரதம் நோற்பார்கள். அந்த நாளில் பொங்கி வழியும் பால் நிலவைப் போல் மக்கள் உள்ளமும் மகிழ்ச்சியில் பொங்கித் திளைக்கும். அந்நாளில் பொங்கலிட்டுத் தெய்வங்களை மக்கள் வழிபட்டு விழாவாற்றி வந்தார்கள். ஏழைகளுக்கு கஞ்சி காய்ச்சி ஊற்றுவார்கள். இதற்கு சித்திரைக் கஞ்சி என்று பெயர், மாலையில் சித்திரகுப்தருடைய கதையை ஒருவர் வாசிக்க மற்றவர்கள் எல்லாரும் பயபக்தியுடன் கதையைக் கேட்டு அனுபவிப்பார்கள். பொன், வெள்ளி இவைகளாலான பதுமையில் சித்திர குப்தனை இருத்தி நியமப்படி வழிபாடு செய்ய வேண்டும். அன்னம், வெல்லத்துடன் கலந்த எள், பால். நெய் முதலியவை படைத்து வழிபாட்டின் முடிவில் பாயாசம் நிறைந்த வெண்கலப் பாத்திரம் …
-
- 5 replies
- 1.4k views
-
-
அனைவருக்கும்.... உளம்கனிந்த, சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.
-
- 9 replies
- 6.5k views
-
-
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆடித் திருவிழா மன்னார் மடு அன்னையின் ஆடித் திருவிழா இன்று (2) சனிக்கிழமை காலை இடம்பெற்றது. மடுத் திருத்தலத்தின் திருவிழா கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நவ நாள் ஆராதனைகளை தொடர்ந்து இன்று சனிக்கிழமை காலை திருவிழா திருப்பலி கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் யாழ் மறைமாவட்ட ஆயர் மேதகு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் மற்றும் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர். திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம் பெற்றதோடு, பக்தர்களுக்கு திருச்சொரூப ஆசியும் வழங்கப்ப…
-
- 0 replies
- 183 views
-
-
சிறப்புற இடம்பெற்ற யாழ். தமிழ்ச்சங்கத்தின் நாவலர் விழா December 2, 2018 யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கரிகணன் பதிப்பகத்தாருடன் இணைந்து முன்னெடுத்த நாவலர் விழா நேற்று சனிக்கிழமை (01.12.2018) பிற்பகல் 4 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க உபதலைவர் சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கரிகணன் நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் சி.ராஜ்குமார் தம்பதியர் மங்கலவிளக்கேற்றினர். யாழ். இந்துக் கல்லூரி மாணவர் வசந்தகுமார் கஜானன் தமிழ்த்தெய்வ வணக்கப்பாவையும் நாவலர் வழிபாட்டுப் பாக்களையும் இசைத்தார். தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் பா.பாலகணேசன் வரவேற்புரையையும் தமிழ்ச்சங்கத்த…
-
- 0 replies
- 819 views
-
-
சிறப்புற நடைபெற்ற மடு மாதா அன்னையின் திருவிழா! மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி திருவிழா இன்று (15) காலை சிறப்பாக இடம்பெற்றது. கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்னாண்டோ தலைமையில் காலை 6.15 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, காலி மறை மாவட்ட ஆயர் றேமன் விக்கிரம சிங்க, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபேட் அன்ராடி ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர். திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து மடு அன்னையின் திருச் சொரூப பவணி இடம்பெற்றதோடு மடு அன்னையின் ஆசி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. குறித்த திருவிழா திருப்பலியில் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல…
-
- 0 replies
- 540 views
-
-
சிறுகதை - 183 / "கறுப்பு ஜூலை 1983, என்னை கருப்பாக்கியது" [ஒரு தேசத்தின் ஆன்மாவில் எரிந்த காதல் கதை] அது ஜூலை 1983, இலங்கையின் தலைநகரம் கொழும்பு, ஈரப்பதமான, சாம்பல் நிறத்துடன் அதன் வழக்கமான பருவ மழையின் தாக்கத்தில் ஆழ்ந்து யோசனை செய்துக் கொண்டு இருந்தது. ஆனால் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிறப்பு மிக்க மாணவர்கள் கூடும் மண்டபங்களுக்குள், ஒரு அமையான, ஆனால் ஆவேசமான எதிர்ப்பு அங்கொன்று இங்கொன்றாக மின்னியது. அதன் குரல்கள், ஒரு மூலையில் குளிர்பானத்தை இரசித்து சுவைத்துக் கொண்டு இருந்த இரண்டு காதலர்கள் காதிலும் விழுந்தது. ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இறுதியாண்டு அரசியல் அறிவியல் மாணவன் பிரதீபன் மற்றவர் மட்டக்களப்பைச் சேர்ந்த உற்சாகமான தமிழ் இலக்கிய பட்டதாரி இரண்டாம் ஆண்டு மாண…
-
- 0 replies
- 102 views
-
-
´நட்புமிகு தேசத்தில் சிறார்களை வெற்றிபெறச் செய்வோம்´ – சிறுவர் தினம் இன்று! சர்வதேச சிறுவர் தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகின்றது. ´நட்புமிகு தேசத்தில் சிறார்களை வெற்றிபெறச் செய்வோம்´ எனும் தொனிப்பொருளில் இவ்வருட சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு இலங்கையின் பல இடங்களிலும் பாடசாலைகளிலும் இன்று சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இலங்கையில் உள்ள சிறுவர்களில் பலர் பெற்றோரின் பாதுகாப்புடன் வாழும் அதேநேரம், 13704 பேர் வரை குழந்தைத் தொழிலாளர்களாக காணப்படுகின்றனர். அவர்களில் 87,854 பேர் சிறுவர் தொழிலாளர்களாகவே வாழ்வதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு, தோட்டப்புறங்களைச் சேர்ந்த 2321 சிறுவர…
-
- 0 replies
- 521 views
-
-
சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் 82 வது பிறந்த நாள். சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் 82 வது பிறந்த நாள்அறக் கொடை விழா நிகழ்வுகள் இன்று காலை 9.45 மணியளவில் ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தான யாத்திரிகர் மண்டபத்தில் சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி தலைமையில் இடம் பெற்றது ஆசியுரையை நல்லை ஆதின குரு முதல்வர் பராமாச்சரிய திருஞான சம்பந்த சுவாமிகளும் மற்றும் தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய பிரதம குரு ஸ்ரீவஸ்ரீ ச. அகிலேஸ்வரக்குருக்களும் வழங்கினார்கள் வரவேற்புரையை ய?ரையை செஞ்செற்செல்வர் ஆறு திருமுருகன் நிகழ்த்தினார் சிறப்புரைகளை யாழ்ப்பாணம் பல் கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியாகளான க.சிவலிங்கராசா மற்றும் அ.சண்முகதாஸ் ஆகியோர் நிகழ்த்தினார்கள…
-
- 1 reply
- 1.2k views
-
-
“தங்கம்மா என்றால் தொண்டு தங்கம்மா என்றாற் பண்பு தங்கம்மா என்றாற் சக்தி தங்கம்மா என்றாற் பக்தி தங்கம்மா என்றாற் சைவம் என்றெல்லாந் தரணி காணும் தங்கம்மா தமிழர் பெற்ற தனிப்பெருஞ் செல்வி வாழி.” என்ற கவிஞர் வி.கந்தவனம் ஐயாவின் பாடல் வரிகளை இவ்விடத்தில் நினைவு கூர்கின்றேன். ஆம் அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியின் நூற்றாண்டு விழா ஞாபகார்த்தமாக இக்கட்டுரையை எழுத விளைகின்றேன். அன்னை சைவசமயத்துக்கும் தமிழ்மொழிக்கும், சமுதாயத்துக்கும் அளப்பரிய பணிகளை ஆற்றி சைவத்தமிழ் மக்களின் மனங்களில் இன்றும் நீங்காத இடத்தைப் பெற்று மிளிர்கின்றார் என்றால் மிகையில்லை. அன்பு நெறியை அடிப்படையாகக் கொண்டு அவர் வாழ்ந்த வாழ்வு தமிழுக்காகவும் சைவசமயத்துக்காகவும் அம…
-
- 0 replies
- 192 views
- 1 follower
-
-
சீரோடும் சிறப்போடும் நடந்தேறிய தமிழ்ப் புத்தாண்டு (2038) பொங்கல் விழா! தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் எடுக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் புத்தாண்டு விழா இவ்வாண்டும் மிகச் சிறப்பாக நடந்தேறியது. தமிழன் தன் இனம், தன் மொழி, தன் பண்பாடு, தன் மானம் பற்றிய கவலை இல்லாமல் இருப்பதுதான் அவனது தாழ்வுக்கும் வீழ்ச்சிக்கும் காரணம் என்பதைக் கண்டறிந்த மறைமலை அடிகளாரும், பெரியாரும் அண்ணாவும் தொடக்கி வைத்த பண்பாட்டு மலர்ச்சியின் குறியீடுதான் தமிழ்ப் புத்தாண்டு விழா மற்றும் பொங்கல் விழா ஆகும். இம்முறை தமிழக முதல்வர் கலைஞரின் தமிழ்நாடு அரசு தமிழர் திருநாளைக் கோலாகலமாகக் கொண்டாடுமாறு ஊடகங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். கனடா முருகன் கோயில் அரங்கி…
-
- 3 replies
- 1.5k views
-
-
சுதந்திர தமிழீழத்திற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு பிரித்தானியா
-
- 4 replies
- 2.1k views
-
-
-
-
- 0 replies
- 651 views
-
-
-
-
- 2 replies
- 1.5k views
-