நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
634 topics in this forum
-
அன்னையர் நாள் / Mother's Day [12 மே 2024 / 12 th May 2024] அன்னையர் நாள் விடுமுறை தினம், அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாளாக அன்னா ஜார்விஸ் [Anna Jarvis] அவர்களால் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் [Grafton, West Virginia] உருவாக்கப்பட்டது; இது குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குடும்பங்களின் உறவுச் சூழல்களை மையமாகக் கொண்டது. இது, இப்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகின்றது. உதாரணமாக ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா, இத்தாலி, மலேசியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா போன்ற பெரும்பாலான நாடுகள் மே மாதத்திலும், அயர்லாந்து, மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்றவை மார்ச் மாதத்திலும் கொண்டாடுக…
-
- 1 reply
- 379 views
-
-
சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் வாணி விழாவும் முத்தமிழ் விழாவும் October 13, 2018 சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் வாணி விழாவும் முத்தமிழ் விழாவும் 13.10.2018 சனிக்கிழமை காலை இடம்பெற்றது. அதிபர் ந.சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பழைய மாணவரும் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபருமாகிய செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் கலந்து கொண்டார். தமிழ்த்தினப் போட்டிகளில் பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவர்கள் மற்றும் வாணிவிழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். மாணவர்களின் கலை நிகழ்வுகள் பல இடம்பெற்றன. http://globaltamilnews.net/2018/99298/
-
- 0 replies
- 378 views
-
-
நல்லூர்க் கந்தன் தேர்த் திருவிழாவின் மேலதிக புகைப்படத் தாெகுப்பு. By sub editor Last updated Aug 29, 2019 …
-
- 0 replies
- 376 views
-
-
யேர்மனிலிருந்து வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்படவுள்ள தமிழ் இளைஞர்களைக் காப்பாற்ற போராடுவோம் – போராட்ட ஒழுங்கமைப்பாளர்கள் 101 Views யேர்மனியிலிருந்து தமிழ் இளைஞர்கள் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட இருப்பதைத் தடுக்கும் வகையில் IMRV – பிறேமன் மனித உரிமைகள் அமைப்பு, Voice – உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பு ஆகியோர் மனித உரிமை ஆர்வலர்களின் அனுசரணையுடன் Pforzheim நகரில் போராட்டமொன்றை ஒழுங்கு செய்துள்ளனர். போராட்டம் நாளை திங்கட்கிழமையிலிருந்து புதன்கிழமை வரை, பகல் இரவு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறும். பகுதிநேர ஒத்துழைப்பாக அனைத்துத்தமிழ் மக்களும் பங்குகொள்ள வேண்டுகிறோம். இது ஓர் முக்கியமான முன்னெடுப்பு. சட்ட அளவிலும் பாராளு…
-
- 0 replies
- 376 views
-
-
தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்! வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1379846
-
- 0 replies
- 374 views
-
-
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஜயதசமி – மானம்பூ உற்சவம்! முப்பெரும் தேவியரும் ஒன்றிணைந்து ஆதிசக்தியாகக் காட்சி தரும் விஜயதசமியான இந்நன்நாளில், வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பு பூஜை இடம்பெற்றது. விஜயதசமி – மானம்பூ உற்சவம் இன்று (புதன்கிழமை) காலை 6.45 மணிக்கு பக்தி பூர்வமாக இடம்பெற்றது. காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் இடம்பெற்று குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வெளிவீதி உலாவந்ததுடன் மானம்பூ உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிதேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிதேவியையும் வழிபடுவ…
-
- 0 replies
- 371 views
-
-
முன்னாள் குடியரசு தலைவரும், ஏவுகணை நாயகனுமான அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் குடும்பத்தினர் மற்றும் மாணவ-மாணவிகள் மரியாதை செலுத்தினர். அப்துல்கலாம் நினைவிடத்தில் மூத்த சகோதரர் முகமது முத்துமீரான் மரைக்காயர், குடும்பத்தினர் பிரார்த்தனை செய்தனர். முன்னாள் குடியரசு தலைவரும், ஏவுகணை நாயகனுமான அப்துல் கலாமின் 88ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ராமேசுவரம் பேக்கரும்பில் அமைந்துள்ள அவரது நினைவிடம் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை அப்துல்கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்துமீரான் மரைக்காயர் மற்றும் குடும்பத்தினர் கலாம் நினைவிடத்திற்கு வந்து பிரார்த்தனை செய்தன…
-
- 0 replies
- 368 views
-
-
அனைவரையும் சிரிக்க வைத்த மனிதர்... சார்லி சாப்ளின் பிறந்த தினம் இன்று. அவர் நினைவாக சில ஒளிப்பதிவுகள்.
-
- 1 reply
- 366 views
-
-
"சத்தம் போடாதே, இன்று ஜூலை 23 , 1983 " இன்று ஜூலை 23 , 1983 , சனிக் கிழமை. நானும் என் மனைவியும் எமது ஒரு வயது மகளும் நாலு வயது மகனும், கொழும்பில் இருந்து சனி காலை புறப்பட்டு, என்னுடன் வேலை செய்யும் சக பொறியியலாளர் ராஜரத்ன வீட்டிற்கு, அனுராதபுர பட்டணத்தில் இருந்து கொஞ்சம் உள்ளே உள்ள ஒரு கிராமத்துக்கு, அவரின் முதல் பிள்ளையின் முதலாவது பிறந்த நாளுக்கு வந்தோம். சனிக்கிழமை மதியம் மகிழ்வாக, கலகலப்பாக காலம் நகர்ந்தது. சனி இரவு நாம் கொண்டாட்டத்துக்கான அலங்காரம் மற்றும் ஏற்பாடுகள் செய்வதாக இருந்தோம். அதேவேளை என் மனைவி பிறந்த நாள் கேக் செய்வதில் ராஜரத்ன மனைவியுடன் சுறுசுறுப்பாக இருந்தார். எனவே நானும் ராஜரத்னாவும் அவரின் இரு தம்பிமாரும், மதிய உணவுக்கு பின்…
-
-
- 1 reply
- 364 views
-
-
"Jesus refulsit omnium" ("Jesus, light of all the nations" / "உலக நாடுகளின், அன்பு இரட்சகர்" [25/12/2024] கி பி 340 இல் இருந்து நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப்பட்டாலும், உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றும், ஏறக்குறைய நான்காம் நூற்றாண்டை சேர்ந்த இந்த பாடல். பரவலாக பலரால் இன்றும் அறியப்படவில்லை என்பது வருத்தத்திற் குரியதே. இதன் மூல 'லத்தீன்' பாடலும், அதை தொடர்ந்து, கேவின் கவ்தொர்னின் [Kevin Hawthorne] ஆங்கில மொழிபெயர்ப்பும், என் தமிழ் மொழி பெயர்ப்பும் தரப்பட்டுள்ளது. Though, Christians have been celebrating Christmas since at least AD 340, that’s supposedly when the Church first recognised December 25 as Christ…
-
- 0 replies
- 358 views
-
-
மட்டு. மாமாங்கேஸ்வரர் ஆலய இரதோற்சவம். இதிகாச சிறப்பு பெற்ற கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்ட இந்த ஆலயத்தின் மஹோற்சவமானது கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இலங்கையில் மிகவும் உயரமான திராவிட முகப்புத்திர சிற்ப மகாரதம் கொண்ட ஆலயமாகவும் சிறப்புபெற்ற இந்த ஆலயத்தின் இன்று அதன் இரத உற்சவம் சிறப்பாக மக்கள் அலைக்கு மத்தியில், அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது. மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவாகம கலாநிதி சிவஸ்ரீ கமலராஜ குருக்கள் தலைமையில் உற்சவம் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது. இன்று காலை விநாயகர் மற்றும் கொடித்தம்பத…
-
- 1 reply
- 354 views
-
-
நல்லூர்... சித்தரத்தேர், வெள்ளோட்டம் இன்று! யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவிலின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டம் இன்று பெருமளவான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பரிபாலகர்களான மாப்பாண முதலியார் பரம்பரையில் வந்துதித்த மூன்றாம் இரகுநாத மாப்பாண முதலியார் காலத்தில் ஆலயத்துக்கான முதலாவது தேர் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் இரண்டாம் ஆறுமுக மாப்பாண முதலியார் அழகன் முருகனுக்கான தங்க ஆபரணங்கள் மற்றும் வெள்ளி சிங்காசனம் ஆகியவற்றைச் செய்து அழகன் முருகனை அழகு பார்த்தார். இவரது காலத்தில் சண்முகப் பெருமான் ஸ்தாபிக்கப்பட்டதுடன், சண்முகரே தேரில் ஏறி, பக்தர்களுக்கு அருள் பாலிக்கவும் தொடங்கினார்…
-
- 0 replies
- 354 views
-
-
திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்! திருகோணமலை கடற்கரைப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி மாலை திருகோணமலை கடற்கரை பகுதியில் பொழுது போக்குகிற்காக கூடியிருந்த ஐந்து மாணவர்களும் காந்தி சிலை சுற்று வட்டத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். குறித்த சம்பவம் இடம்பெற்று 17 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் அவர்களை நினைவு கோரும் முகமாக திருகோணமலை வாழ் பொது மக்களால் ஒன்றிணைந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. https://athavannews.com/2023/1318418
-
- 1 reply
- 351 views
-
-
சந்துருக்கொண்டான் படுகொலையின் நினைவுநாள் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு மட்டக்களப்பு சந்துருக்கொண்டான் படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமான அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) மாலை நடைபெற்றது. படுகொலைசெய்யப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அரசியல்வாதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதன்போது நினைவுத்தூபியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்…
-
- 0 replies
- 351 views
-
-
தாய் மண்ணிலே பிறந்து... தாய் மண்ணிலே மடிவது, ஒரு வரம். அதைப் பெறுவதற்கு, நாங்கள்... தவம் செய்யவில்லையோ.... - சிவா தருஸ். -
-
- 0 replies
- 349 views
-
-
இலங்கைத் தமிழ் சினிமாக் கலைஞர்களுக்கான மாபெரும் விருதுக் கொண்டாட்டம்! இலங்கைத் தமிழ் சினிமாக் கலைஞர்களுக்கான மாபெரும் விருதுக் கொண்டாட்டம் “குவியம் விருதுகள் 2022” நிகழ்வு இன்று (29) சனிக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் (யாழ். மத்திய கல்லூரிக்கு அருகில்) இடம்பெறவுள்ளது. மாலை 05 மணிக்கு ஆரம்பமாகும் இந்த விழாவில் கலைஞர்களுக்கான செங்கம்பள வரவேற்பைத் தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்வு ஆரம்பமாகும். பல கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற காத்திருக்கின்றன. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கலந்து கொள்கின்றார். …
-
- 0 replies
- 349 views
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா குறித்த அறிவிப்பு வெளியானது! சுகாதார விதிமுறைகள் இறுக்கமாக அமுலாக்கப்பட்டு யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா இடம்பெறும் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். நல்லூர்க் கந்தன் பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையயில் மேலும் தெரிவித்துள்ள அவர், “நல்லைக் கந்தப் பெருமானின் வருடாந்தப் பெருந் திருவிழாவானது இம்மாதம் 13ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இவ்வேளையில் நாடெங்கும் ஏற்பட்டுள்ள கொடிய கொரோனா தொற்றின் தீவிர பரவல் நிலையைக் கருத்திற்கொண்டு தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள சு…
-
- 0 replies
- 349 views
-
-
இன்று யாழ் கதிர்காமம் பாதையாத்திரைகுழுவின் திருகோணமலை கோணேஸ்வரர் ஆலய தரிசனம் By Shana வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பஞ்ச எச்சங்களும் ஒன்றான புகழ் பெற்ற திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்தை இன்று(24) வியாழக்கிழமை யாழ் - கதிர்காமம் பாதயாத்திரை குழு தரிசிக்கின்றது. கடந்த 15 நாட்களாக யாழ் மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தை கடந்து திருகோணமலை மாவட்டத்தை அடைந்தள்ளது. . நேற்று நிலாவெளி லக்ஷ்மி நாராயணன் ஆலயம் மற்றும் சல்லி அம்மன் ஆலயத்தில் தங்கியிருந்தது. இன்று பாதயாத்திரை குழுவின் தலைவரான சி.ஜெயராசா தலைமையில் தொண்ணூறு அடியார்களை கொண்ட குழுவினர் திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்தை சென்றடைந்து அங்கு பூஜையில் கலந்து கொள்வார்கள்…
-
- 1 reply
- 343 views
-
-
மார்ச்சு – 8 – அனைத்துலக மகளிர் நாள் பெண்ணுரிமை வெல்க – சிறப்புக் கட்டுரை ! On Mar 8, 2020 மார்ச்சு – 8 – அனைத்துலக #மகளிர் நாள் பெண்ணுரிமை வெல்க! பெண்ணும் ஆணும் வாழ்வாங்கு வாழ்க! “பன்னாட்டு மகளிர் நாளில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் பெண்களுக்கும் பெண்ணுரிமைப் போராளிகளுக்கும் நெஞ்சு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்ணுரிமைப் போராட்டம் வெல்க! தமிழர் அறம், அனைத்துவகைச் சமத்துவத்தையும் கூறுகிறது. மனிதர்கள் அனைவரும் சமம்; தமிழர்கள் அனைவரும் சமம் என்று கூறுகின்றோம். சாதி, மதம், இனம் கடந்த சமத்துவத்தைப் பேசுகிறோம். மனித உரிமை அடிப்படையில் சமத்துவத்தைப் பேசுகிறோம். தமிழர் அறம் ஆண் பெண் சமத்துவத்தையும் கூறுகிறது. நம்முடைய சங்க இலக்கியங்கள்…
-
- 0 replies
- 341 views
-
-
இணுவில் கிராமத்தில் நடைபெற்ற முன்பள்ளிக் கலைவிழா December 9, 2018 மழை காலம் முடிந்து குளிர் தொடங்கும் மார்கழி மாதமிது.மாதங்களில் மார்கழியை உன்னதமானதெனப் போற்றுகின்றனர். மார்கழி பள்ளி செல்ல முனைகின்ற சிறுவர்களுக்கு மிகவும் முக்கியமான மாதம் எனலாம். புதிய வகுப்புக்குச் செல்லுகின்ற நிகழ்வு பெரும்பாலும் மார்கழியிலேயே நடைபெறுகிறது. குழந்தையாய் வீட்டோடு இருந்தவர்கள் கல்வி உலகத்தைக் காண விழைகின்றதற்குத் திறவுகோலாக முன்பள்ளிகள் காணப்படுகின்றன. என்னைப் பொறுத்தவரை முன்பள்ளியை நான் நாற்றுமேடை என்பேன்.விதைகளைக் கன்றுகள் என்ற நிலைக்குத் தயாராக்குகின்ற செயற்பாடுகளே முன்பள்ளிகளின் பணியாகக் காணப்படுகின்றது. சமூகத்தில் ஆழமாகச் சென்று மனித வாழ்வின் ஒவ்வொரு கணங்களில…
-
- 0 replies
- 341 views
-
-
திருக்கேதீஸ்வர மகா கும்பாபிஷேகத் திருவிழா ஆரம்பம். June 30, 2022 மன்னார் அருள்மிகு திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷே நிகழ்வை முன்னிட்டு பூர்வாங்க கிரிகைகள் இன்று வியாழக்கிழமை (30) காலை 10.45 மணி அளவில் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு சிவ சிறி தியாகராஜா கருணானந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது. கும்பா விசேசத்திற்கு வருகை தந்த சிவச்சாரியார்கள் மற்றும் தேவாரம் ஓதுபவர்கள் ,தர்மபுர ஆதி யினத்தினை சேர்ந்தவர்கள் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குருவால் மாலை அனுவிக்க பட்டு மங்கள வாத்தியத்துடன் வரவேற்கப்பட்டனர். -அதனைத் தொடர்ந்து விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டது. கிரிகைகளின் போது சாந்தி பூஜைகள் தர்மபுர ஆதீன மு…
-
- 1 reply
- 341 views
-
-
தெல்லிப்பளை.. துர்க்கை அம்மன் ஆலய, தேரோட்டம் இன்று! வரலாற்று பிரசித்தி பெற்ற தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. காலை 7 மணியளவில் நடைபெற்ற வசந்த மண்டப பூஜையை அடுத்து துர்க்கை அம்மன் உள் வீதியுலா வந்து 9 மணியளவில் தேரில் ஆரோகரித்து பக்ர்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். தேர்த்திருவிழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். https://athavannews.com/2022/1298099
-
- 2 replies
- 339 views
-
-
மட்டக்களப்பு... ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய, வருடாந்த மஹோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்! கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புடையதும் தொண்மை வாய்ந்ததுமான மகா துறவி சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதியால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடி ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா நேற்று புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. நேற்று காலை மட்டக்களப்பு அரசடியில் உள்ள சித்திவிக்னேஸ்வரர் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை திருச்செந்தூர் முருகன் ஆலயத்தினை வந்தடைந்ததும் விசேட யாக பூசைகள் இடம்பெற்றுன. ஆலயத்தில் மூலமூர்த்திக்கு அபிசேக ஆராதனைகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்று, விசேட ஆராதனைகள் மற்றும் கொட…
-
- 2 replies
- 339 views
-
-
இன்று மகா சிவராத்திரி விரதமாகும்! சிவனுக்கு உகந்த நாளான மகா சிவராத்திரி இன்று பெப்ரவரி 26 புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இன்று இரவு முழுவதும் விழித்திருந்தால் நன்மை உண்டாகும், சிவனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். மாதம்தோறும் சிவராத்திரி வந்தாலும் வருடத்திற்கு ஒரு முறை மாசி மாதத்தில் தேய்பிறை அன்று வரும் வரும் மகா சிவராத்திரி சிவபெருமானுக்கான முக்கிய விரத நாள் ஆகும். சிவராத்திரி நாளில் சிவனுக்கு 4 கால பூஜை நடைபெறும். முதல் காலம் இரவு 7.30 மணிக்கு தொடங்கும், இரண்டாம் காலம் இரவு 10.30 மணிக்கு தொடங்கும், மூன்றாம் காலம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும், நான்காம் காலம் அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கும். இந்த 4 பூஜைகளிலும் பங்கேற்று சிவனை மனமுருகி தரிசித்தால் அவரின் அருளை பெற்று உங்…
-
- 6 replies
- 336 views
- 1 follower
-
-
நடிகர் விவேக் நினைவாக யாழ்.இணுவில் இளைஞர்களால் மரநடுகை திட்டம்..! மறைந்த நகைச்சுவை நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான விவேக்குக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்.இணுவில் இளைஞர்களால் மரநடுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு கோடி மரம் நடுகை செயற்திட்டத்தை நடிகர் விவேக் முன்னெடுத்து வந்திருந்தார். அந்நிலையில் , கடந்த சனிக்கிழமை அவர் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பலர் மரநடுகை செயற்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் வரதராஜா தனகோபியின் ஏற்பாட்டில் இணுவில் இளைஞர்கள் மரநடுகையில் ஈடுபட்டனர். அதேவேளை Jaffna Jaguars எனும் அமைப்பொன்றினை உருவாக்கி அதில் தன்னார்வமுடைய இளையோரை இணைத்து மரநடுகை செயற்தி…
-
- 0 replies
- 336 views
-