கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
சாட்சிகள் எதுக்கடி ? எனும் கதை மார்கழி மாதத்து பனித்துளி எனும் வலைப்பூவில் தாட்சாயணி யால் எழுதப்பட்ட கதை. இதுவரை கவிதை, சிறுகதை தொகுப்பு என பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார். கதையை வலைப்பதிவில் இருந்து பிரதி எடுத்து இணைக்க முடியாத படி வலைப்பதிவை அமைத்துள்ளார். நேரம் உள்ளவர்கள் வலைப்பதிவில் சென்று படித்துப்பாருங்கள். http://sthadsayanee.blogspot.ca/2012/08/blog-post_21.html
-
- 0 replies
- 451 views
-
-
இதோ எனது சரீரம் - நரன் ஓவியங்கள் : செந்தில் பாரிஸில் செயின்ட் பிரான்சிஸ் சேவியர் தேவாலயத்திலிருந்து நேர்க்கோட்டில் தொடங்கி இரண்டாகப் பிளவுறும் சர்ப்பத்தின் நாவைப் போன்ற வீதி அது. இடது பக்கமாகப் பிரியும் 7-ம் அவென்யுவில் சாலையோர உணவகம் ஓன்று இருக்கிறது. சமதளத்தில் இற்றுப்போன மரஉணவு மேசைகளும், இருக்கைகளும், கால் உடைந்த மர பெஞ்சுகளும் பழமையும், அழுக்கும், தூசியும் படிந்த மலிவான உணவகம். அந்த உணவகத்தைப்போன்றே கால்கள் அற்ற, அழுக்குப் படிந்த, மிகுக் கசப்பும், மலிவான விலையும் கொண்ட மதுவை அருந்துவதில் விரு ப்பம் கொண்டவர்களும், கடன் சொல்லி உணவு உண்பவர்களும்தான் பெருமளவு வாடிக்கையாளர்களாக இருந்தார்கள். ஏழைக் குடிகாரர் களிடையும், மூப்பிலும் வேலை தேடும் ஆண்களிட…
-
- 0 replies
- 3.2k views
-
-
சுடரும் புன்னகை! பேப்பர்காரரை இன்னும் காணோமே? மணி ஏழரை ஆகப்போகிறது. மற்ற நாள்ன்னா வீட்டை பூட்டிவிட்டு போயிறலாம். அவரும் வரண்டாவில் பேப்பரை போட்டு விட்டு போயிருவாரு. அவரு கைமாற்றாக இரண்டாயிரம் ரூபாய் கேட்டாரு. "வீட்டு வாடகைக்கு கொடுக்கணும். ஒரு வாரத்தில் மகனுக பணம் அனுப்பினதும் கொண்டுவந்து தர்றேன் சாரு'ன்னாரு என்று முணுமுணுத்தவாறே சுவர்க்கடிகாரத்தையும், வீட்டு வாசலுக்கும் இவரது கண்கள் பந்தாடிக் கொண்டிருந்தன. மனைவி குளித்து தயாராவதற்குள் பேப்பர்காரர் வீட்டிலேயே கொடுத்துட்டு வந்துறலாமே. அவருக்கும் வீட்டு வாடகைப் பிரச்னை தீரும். நமக்கும் மனசு அலை பாயாம ஓர்மையா வெளியூர் கிளம்பத் தோதாயிருக்கும் என்று பணத்தை …
-
- 0 replies
- 612 views
-
-
அரிபாபு நினைவுகளை என்னால் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது! அவரைப் போல் சிவராசன் என்னை அழைத்திருந்தாலும், அன்றைக்கு ஸ்ரீபெரும்புதூருக்கு நானும் போயிருப்பேன். அங்கே அரிபாபு உடன் நானும் சிதறித் செத்திருந்தாலும், தினம் தினம் இன்றைக்கு இவ்வளவு உளைச்சலுக்கு ஆளாகிச் சாக வேண்டிய நிலை வந்திருக்காது. சம்பவ இடத்துக்குப் போயும் உயிர் தப்பியவள் என் மனைவி நளினி. ‘ராஜீவ் காந்தியைக் கொலை செய்யப்போகிறார்கள் என்பது நளினிக்குத் தெரியாது. சுபாவும் தாணுவும் இலங்கைத் தமிழில் பேசினால் சந்தேகம் வரும் என்பதால்தான், தமிழ்ப் பெண்ணான நளினி அவர்களுடன் அழைத்துச் செல்லப்பட்டார்’ என அரசுத் தரப்பு ஆவணங்களிலேயே எழுதப்பட்டுள்ளது. சம்பவத்தை நிறைவேற்றும் கடைசிக் கணத்தில் கூட தனது திட்…
-
- 0 replies
- 607 views
-
-
பளு வீரன் – தீபச்செல்வன் 01 நகரில் மூண்ட சமர் நின்ற வேளையில் கடிகாரமும் நின்றுபோயிருக்க வேண்டும். அதன் முட்கள் பன்னிரண்டைக் காட்டின. தூரத்தில் நடந்து வரும் சத்தியனைப் பார்த்தது நேரத்தின் எண்கள் உடைந்த கடிகாரம். காலம் உடைந்து போனதின் சித்திரமாக உருக்குலைந்த அதன் முட்கள் நெளிந்தழைப்பதைப் போலிருந்தன அவனுக்கு. எறிகணைகள் நுழைந்தும் துப்பாக்கிச் சன்னங்கள் காயமிட்டும் இருந்த மணிக்கூண்டுக் கோபுரத்தின் சுவர்களில் யாழ் நகரின் வெளுத்த முகம் தெரிந்தது. கோபுரத்திற்கு அண்மையாய் நடந்தவன், நிமிர்ந்து அதன் சுவர்களைப் பார்த்தான். போரின் தழும்புகள் அதன் உடல் முழுதும் சித்திரமாயிருந்தன. விதவிதமான முகங்கள். அத்தனையிலும் காயங்களும் தழும்புகளும். பெயர்ந்தலையும் சனங்களும் பதுங்கியிருக்கும் போ…
-
- 0 replies
- 380 views
-
-
உச்சி வெய்யில் வெளி உடலை வாட்ட, பசி உள் உடலை வாட்டி எடுக்க வீட்டின் முன்னாலுள்ள கானில் குந்தியிருந்துதோம் நாம் மூவரும். அம்மா அறைக்குள் அழுதபடி இருந்தார். ஒரு புறம் பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுக்க முடியவில்லை என்ற கவலையாக இருக்கலாம். மறுபுறம் அப்பாவிடம் இரவும் காலையும் வாங்கிய அடியினால் ஏற்பட்ட வலியாகவும் இருக்கலாம். நேற்று இரவு அப்பா காசு கொண்டுவருவார் என நம்பிக்கொண்டு காத்திருந்தோம்.. அவர் காசு கொண்டுவந்தால் காலையும் மதியமும் நல்ல சாப்பாடு சாப்பிடலாம் என அவாப்பட்டுக்கொண்டும் மனம் அங்காலாய்த்துக்கொண்டும் இருந்தோம். இப்பவெல்லாம் நல்ல சாப்பாடு என்பது காலையில் ஒரு துண்டுப் பாணும் சினியும் அல்லது வாழைப்பழமும் மதியம் பருப்பும் தக்காளிக் குழம்பும் தான். ஆனால் அப்பா காசு கொண…
-
- 0 replies
- 1.2k views
-
-
எங்கள் தேசம் : http://www.youtube.com/watch?v=FubhS1GZhYo
-
- 0 replies
- 628 views
-
-
நாய்க்குட்டிகளைப் பராமரிக்கும் சேவல் [15 - March - 2009] [Font Size - A - A - A] சீனாவில் மாஜியாகியாவோ என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காவோ பென்ஜியிங். இவர் வீட்டில் வளர்ந்து வரும் சேவல் ஒன்று அதே வீட்டில் இருந்த நாயுடன் சிநேகிதமாக இருந்தது. அந்த நாய் சமீபத்தில் 2 குட்டிகளை போட்டது. அதற்கடுத்த 10 நாட்களில் அதை யாரோ விஷம் வைத்துக் கொன்றுவிட்டனர். இதைத் தொடர்ந்து அந்த நாய்க்குட்டிகளும் இறந்துவிடும் என்று தான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், இறந்துபோன நாயின் சிநேகிதனான சேவல் அந்த நாய்க் குட்டிகளை அக்கறையுடன் கவனித்துக் கொள்ளத் தொடங்கிவிட்டது. யாரும் அந்தக் குட்டிகளை நெருங்கிவிடாமல் அந்தச் சேவல் பார்த்துக் கொள்கிறது. தீனியை முதலில் குட்டிகளை தின்றுவிட்டு பிறகுதான் அ…
-
- 0 replies
- 1.4k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் சம்மர் ``சம்மரில் உங்கள் குழந்தைகளுக்கு டிராயிங்.. ஹேண்ட் ரைட்டிங்...அபாகஸ் எனக் கற்றுத் தருகிறோம், வாருங்கள்..'' என்ற விளம்பரத்தில் நடித்து முடித்த ஹீரோ, மனைவி குழந்தைகளுடன் புறப்பட்டார், சுற்றுலாவுக்கு! - சி.சாமிநாதன் கண்டிஷன் `மணமகன் தேவை' விளம்பரத்தில் ஃபேஸ்புக் அக்கவுன்ட் இருக்கக் கூடாது என்ற கண்டிஷனையும் சேர்த்தாள். - ரேகா ராகவன் உதவி ``உதவிக்கு நர்ஸ் இருக்காங்க. பயப்படாதீங்க ...'' என பைபாஸ் சர்ஜரி செய்துகொண்ட அப்பாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, வேலைக்குக் கிளம்பினான் மகன்! பெ.பாண்டியன் பார்வை ``தப்பு செஞ்சா மேலே இருந்து ஒருத்தன் பார்ப்பான்!" என்றதும், "கேமிர…
-
- 0 replies
- 1.1k views
-
-
மத்தியபிரதேசத்தில் பீல் (Bheel) எனும் பழங்குடியினர் உண்டு. அவர்களை ஆய்வு செய்ய சென்ற பேராசிரியர் பகவான் தாஸ் படேல், பீல் பழங்குடியினரிடம் ஒருவகை மகாபாரதம் இருப்பதைக் கண்டார். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் திரவுபதியின் கதை மிக வித்தியாசமானது என்பதுடன் பழங்குடி மரபுகளையும் உள்ளடக்கியது. பீல் மகாபாரதம் (Bheel Mahabharat) எனும் பெயரில் சாகித்ய அகாடமி நூலாக இது வெளிவந்தாலும் இதன் பெயர் பாரத் என்பதாகும். பீல் மொழியில் இதன் பொருள் யுத்தம் என்பதாகும். இதில் திரவுபதி பொன்னிற முடியை உடையவளாகச் சித்திரிக்கப்படுகிறாள். அஸ்தினாபுரத்தில் அவள் உறங்குகையில் அவள் தோழியர் அவள் தலையைச் சீவுகின்றனர். அப்போது ஒரு பொன்னிற முடி பறந்து சென்று காற்றில் அடித்துச் செல்லப்பட்டு, பாதாள உலகம் செல்க…
-
- 0 replies
- 865 views
-
-
ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவறவிட்டுவிட்டதை உணர்ந்தது. அப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய். அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது என்பதையும் உணர்ந்தது. தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டது. சட்டென ஒரு காரியம் செய்தது அந்த நாய் . புலிக்கு முதுகு காட்டியவண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்தது. புலி அருகில் வந்தவுடன் "ஆஹா...புலியின் மாமிசம் எவ்வளவு சுவை! இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இ…
-
- 0 replies
- 481 views
-
-
கற்படிகள் - சிறுகதை ஜி.கார்ல் மார்க்ஸ் - ஓவியங்கள்: ஸ்யாம் ராமமூர்த்தி அந்த வீட்டை நெருங்கி அதன் வெளிப்புற இரும்புக் கதவின் மீது கைவைத்து உள்ளே பார்த்தார். தாழ்வாரமும் கார் நிறுத்துமிடமும் ஆளரவமற்று இருந்தன. அது ஒரு தனித்த, அலுவலர்கள் குடியிருப்பாக இருந்தது. கதைவைப் பற்றியபடி சிறிது நேரம் யோசித்துக்கொண்டே நின்றவர், பிறகு வலது கையை உள்ளே விட்டு கதவின் கொண்டியைச் சுழற்றினார். மெல்லிய உராய்வுடன் அது விலகியது. நடந்து உள்ளே போய், நிலைக்கதவை ஒட்டியிருந்த அழைப்புப் பொத்தானைத் தயக்கத்துடன் அழுத்தினார். அது அந்தச் சூழலுக்குச் சற்றும் பொருத்தமற்ற வகையில் ட்ரிங்... எனும் பழைய தொலைபேசி ஒலியைப் போன்ற, நீண்ட நாராசமான சப்தத்தை உள்ளே எழுப்பியத…
-
- 0 replies
- 1.9k views
-
-
"பாசம்" எம் திருமணத்தின் பரிசாக எம்கையில் தவழும் அவன்மேல் பாசம் அத்தனையும் கொட்டிவளர்த்தோம். அது தன்னலம் என்று என்றுமே எண்ணவில்லை. ஏன் - பாசத்தை உணரவும், கொடுக்கவும் பெறவும் திறன் பெரும்பாலும் உயிரியல் ரீதியானது என்றுகூட சிந்திக்கவில்லை. இனிப்பு இனிக்கும் என்கிறோம். ஆனால், இனிப்பு என்றால் என்ன? என்றுயாராவதுகேட்டால், விளக்குவது சிரமமாகிறது. அப்படியே பாசமும் ஆகும். அவனுக்கு எல்லா வசதியும் கொடுத்து, படிப்பில் ஒரு எல்லைக்கே கொண்டுபோனோம். நல்ல உயர்தர வேலையும் கிடைத்தது. அழகானபெண்ணும் காதலியாக வரவே, அவனின் விருப்பத்தின்படி, சிறப்பாக ஆடம்பரமாக திருமணமும் மகிழ்வாக நிறைவேறியது. பாசத்திற்கு நாம் நாளாந்தவாழ்வில் கொடுக்கும் விளக்கம், அதை ஒ…
-
- 0 replies
- 701 views
-
-
1- ‘இனியெண்டாலும், குடிகாரற்றை உறைப்பைக் கொஞ்சம் குறையுங்கோ, வயித்திலை அல்சர் முத்தி, கான்சர் வரப்போகுது’ என, இரவுச் சாப்பாட்டின் போது பல்லவியைத் துவங்கினாள் மனைவி. திருவாளர் வீரசிங்கமோ மனைவியின் ஆரோகணத்தை காதில் வாங்குவது கிடையாது. சாப்பாட்டு விஷயத்தில் வீரசிங்கம் சமரசம் செய்வதில்லை. அவருக்கு நல்ல உறைப்புக் கறி வேணும். நான்கு தசாப்தங்களுக்கு மேலாக அவர் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும், காரசாரமான கறி சோறு இல்லாவிட்டால், அவருக்கு அன்று நித்திரை வராது. ‘தாய் பழக்கின பழக்கம்’ என்று மனைவி புறுபுறுப்பாள். புருஷனுக்கு உறைப்புக்கறி, தனக்கும் பிள்ளையளுக்கும் காரம் குறைந்த பால் கறி என்று, தினம்தினம் சமையல் அறையில் அவள் படும் பாடு, அவளுக்குத்தான் தெரியும். சனிக்கிழமைகளில், பல்லின …
-
- 0 replies
- 1k views
-
-
"நாளைக்கு செந்தளிப்பா இன்னும் அழகா இருக்கோணும் அம்மா சீக்கிரம் படனை" அம்மா சொல்லிவிட்டு கதவை மெதுவாக மூடி சென்றாள். அவள் அப்படித்தான் நடந்தால் நிலமதிராது. இரண்டு அண்ணன்கள் செல்லமாய் வளர்ந்த எனக்கு கொஞ்சம் துடுக்குதான். ஒருமுறை பள்ளி ஆசிரியை அடித்ததை அறிந்து அவருடன் சண்டைக்கு போன அப்பா என் மேல் துரும்பு விழுந்தாலும் துடித்து போகும் பாசம் .எனது சந்தோசமே அவரது சந்தோசமென வாழ்கிற ஜீவன். எல்லோரும் தூங்கிவிட்டார்களா.. அப்படி அமைதியாக இருக்கிறது. அந்த நிசப்தத்திலும் என் இதயத்தின் துடிப்பு எனக்கு கேக்கிறது. ஏன் இந்த படபடப்பு? ஏன் இந்த சலனம்? நாளைக்கு எனக்கு திருமணம் மாப்பிள்ளை இலண்டன். எல்லா இலட்சணங்களும் குணங்களும் கலந்த கலவை போல. ஏன…
-
- 0 replies
- 949 views
-
-
அனிதா தற்கொலையில் உள்ள அரசியல் பின்னணி சில தினங்களுக்கு முன்பு மருத்துவர் ஆகும் கனவோடு இருந்த அரியலூரை சேர்ந்த அனிதா என்னும் மாணவி தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆட்சி இருக்கைக்காக போட்டி போட்டு கொண்டு இருந்த தமிழ்நாட்டின் அரசியல் புள்ளிகள். இறுதியில் காற்றில் கலந்தது அனிதாவின் உயிரும், அவரது கனவும்.
-
- 0 replies
- 868 views
-
-
மழலை தெளிவத்தை ஜோசப் திடீரென்று தான் அது நடந்தது! எத்தனை பேர் இருக்கின்றோம். யாருமே எதிர்பார்க்கவில்லை. மம்மி என்று அன்பொழுக அழைக்கப்படும் அம்மா மிம்மி என்று பாசத்துடன் அழைக்கப்படும் அம்மம்மா. பெரியம்மா, பெரியப்பா, குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் சாந்தி… எத்தனை பேர்! அந்த இரண்டு வயதுக் குழந்தையைச் சுற்றி இத்தனை பேர் இருந்தும் இது எப்படி நடந்தது! எப்படி நடந்தது… எப்படி நடந்தது… என்று எத்தனை தடவை கேட்டாலும் பதில் ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. எப்படி என்கின்ற விவரணங்களை எல்லாம் மீறி மேவிக் கொண்டு அது நடந்துதான் இருக்கிறது. அதுவும் திடீரென்று யாருமே எதிர் பார்த்திராத விதத்தில். இரண்டு வயதுப் பெண் பிஞ்சின் குஞ்சு விரல்களுக்கு எட்டும் உயரத்தில் குள…
-
- 0 replies
- 731 views
-
-
ஒரு நிமிட கதை: கண்டிஷன் “மணி! நம்ம வீட்டுல குடியிருக்கிறவங்க அடுத்தவாரம் வீட்டைக் காலி பண்ணிடுவாங்க. வேற ஆள் யாராவது இருந்தா கூட்டிட்டு வாப்பா!” வீட்டு புரோக்கர் மணியின் கடைக்குள் ஏறி வந்த பழனியப்பன் சொன்னார். கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பழனியப்பனின் வீட்டு மாடி போர்ஷனுக்கு வாடகைக்கு ஆள் கூட்டி வருவது மணிதான். பழனியப்பனின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இதுவரை ஐந்து குடும் பங்களுக்கு மேல் வாடகைக்கு வந்து போய் விட்டார்கள். “அதுக்கென்னங்கய்யா… பார்த்துட்டாப் போச்சு. இந்தப் பத்து வருஷத்துல எத்தனை பேரை கூட்டிட்டு வந்திருக் கிறேன். யாராவது எந்தப் பிரச்சனையாவது பண்ணினாங் களா? சர…
-
- 0 replies
- 922 views
-
-
ஒரு நிமிடக் கதை: நம்பிக்கை கார் பழுதடைந்திருந்ததால், ஆட்டோவில் பயணித்தாள் சாவித்திரி. இது வரை எத்தனை கர்ப்பிணிப் பெண்களை இலவசமாக பிரசவத்திற்கு அழைத்து போயிருக்கிறாய்? ஆட்டோ டிரைவர் கோவிந்தனிடம் ஆவலோடு கேட்டாள். குறைஞ்சது இருபது பேராவது இருக்குமாம். உன்னோட மனைவி இந்த ஆட்டோவில் ஏறியிருக்காங்களா? தினமும் ஒரு ரவுண்டு வருவா கர்ப்பிணி பெண்கள் அமர்ந்த ஆட்டோவில் உட்கார்ந்தாலாவது ஒரு குழந்தை பிறக்காதாங்கற ஆதங்கம் தான் அதுக்கு காரணம். கோவிந்தனின் பதிலில் நம்பிக்கையும் ஏமாற்றமும் கலந்திருந்தது. அந்த பிரசவ ஆஸ்பத்திரியின் முன் ஆட்டோவை நிறுத்த சொல்லி தன் விஸிட்டிங் கார்டை அவனிடம் கொடுத்தாள். நீ செய்றது பெரிய தொண்டு உன் மனைவியின் நம்பிக்கை வீண் போகாமலிருக்க நீயும்.…
-
- 0 replies
- 778 views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் பேச்சு ``வாட்ஸ்அப்ல அப்படி என்னதான் பேசிப்பீங்க” என்ற அம்மாவிடம், ``ஒன்லி வீடியோதாம்மா” என்றாள் பொன்னி. - கே.சதீஷ் இங்கிதம் சுமாரான புடவை, சிம்பிளான அலங்காரத்துடன் கிளம்பினாள், வேலைக்கார அம்மாவின் வீட்டு விசேஷத்துக்கு. - ராம்ஆதிநாராயணன் சிரிப்பு முதல்வரைப் பார்த்து, 32 எம்.எல்.ஏக்களும் தெரிய சிரித்தார் தலைவர். - கிணத்துக்கடவு ரவி சமையல் ``சாப்பாடு பிரமாதமா இருக்கு. சமைச்சவருக்குக் கை குடுக்கணும். மாஸ்டர் எங்கே இருக்காரு..?’’என்ற கஸ்டமரிடம், ``வீட்டுக்குச் சாப்பிடப் போயிருக்காரு சார்..’’ என்றார் சர்வர்! - சி.சாமிநாதன் பில்டப் ``கார் பார்க்…
-
- 0 replies
- 1.3k views
-
-
. சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை! - - வ.ந.கிரிதரன் - புகலிட அனுபவ சிறுகதை இந்த அப்பா எப்பொழுதுமே இப்படித்தான். Harry Potter and The Goblet of fire புத்தகத்தைக் கடைசியில் ஒரு மாதிரி வாங்கித் தந்து விட்டார். ஜெ.கெ.ராவ்லிங்கின் ஹரி பாட்டர் தொடர் புத்தகங்கள் எனக்குப் பிடித்த தொடர்களிலொன்று. ஆனால் இந்தப் புத்தகத்தை மட்டும் அப்பா ஒவ்வொருமுறையும் வாங்குவதற்குச் சாக்குப் போக்குச் சொல்லி இழுத்தடித்துக் கொண்டு வந்தார். காரணம் இதன் விலைதான் தான். முப்பத்தைந்து கனடியன் டொலர்கள். சென்ற முறை சாப்டர்ஸ்ஸிற்குக் கூட்டிப் போனபோது இந்தப் புத்தகத்தை வாங்கித் தருவதாகத் தான் கூட்டிப் போனார். ஆனால் வழக்கம் போல் இறுதியில் கையை விரித்து விட்டார். 'உனக்கம்மா இந்த ஒரு ப…
-
- 0 replies
- 923 views
-
-
காட்சிப் பிழை மறுபடியும் மாடி ஜன்னல் வழி எட்டிப்பார்த்தபோது அந்த இளைஞன் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான். அவனை முன்னே பின்னே இதற்குமுன் சபாபதி பார்த்ததில்லை. தூங்கி எழுந்த கையோடு ஜன்னல் திண்டிலிருந்த செடிக்கு தண்ணீர் விடுகையில் தற்செயலாக அவனைப் பார்க்க நேர்ந்தபோது பெரிதாக எதுவும் தோன்றவில்லை. அந்த வேப்ப மர நிழலில் இரு சக்கர வாகனங்கள் இருப்பதோ.. அவற்றின் மீது சாய்ந்தவாறே இளைஞர்கள் நிற்பதோ புதிய காட்சி இல்லை. ஆனால் இன்னமும் அங்கேயே நிற்கும் இவன்? காலை உணவை மென்றவாறே மறுபடி ஜன்னலோரம் வந்தபோதும்.. அவனைக் காண முடிந்ததில்... மனசுள் ஏதோ பொறி தட்ட, குழப்பத்தோடே சாய்வு நாற்காலி பக்கம் திரும்பினார். …
-
- 0 replies
- 784 views
-
-
வாசகியாயிருத்தல் மோகனா இசை படுக்கை வசதி கொண்ட பேருந்திலேயே சென்று பழக்கப்பட்டதால் இருக்கை வசதி கொண்ட பேருந்தும், குண்டும் குழியுமான பாதைகளும் அயர்ச்சியைத் தந்தது. படுக்கை வசதி கொண்ட பேருந்தில் கூட இந்த சாலையில் வசதியாக பயணம் செய்துவிட முடியப்போவதில்லை என்று தொன்றியது. எது எப்படியோ பயணங்கள் இனிமையானவை தான், எந்த ஒரு காரணமும் இல்லாமலேயே கூட, ஆனால் இனிமையான காரணத்துடனான இந்த பயணத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தது மனம். பயணத்தை அனுபவித்து செய்வதின் இன்பம் அந்த பயணத்திற்கான காரணமாக இல்லாமல் வேறதாக இருக்க முடியும்? ஒரு எழுத்தாளனை பார்க்க சென்று கொண்டிருக்கும் இந்த பயணம் என்னளவில் வித்யாசமான அனுபவம் தான். என் நண்பனும் இன்னும் காதலை சொல்லிக்கொள்ளாததால் நண்பனாக உடனிருந்தான், மிகவு…
-
- 0 replies
- 1k views
-
-
"காதலா ? காமமா ??" வவுனியா காட்டின் ஒரு எல்லையில் அமைந்த ஒரு குக் கிராமம் அது. பொதுவாக அங்கு எல்லா வீடுகளும் மண் வீடாக இருக்கும் பொழுது ஒரு வீடு மட்டும் கல் வீடாக அங்கு தனித்து காணப்பட்டது. அந்த வீட்டின் இளவரசி தான் எம் கதாநாயகி. அழகிலும் அதே நேரத்தில் படிப்பிலும் சிறந்து விளங்கிய அவள், அருகில் உள்ள பாடசாலையில் உயர் வகுப்பில், விஞ்ஞான பிரிவில் கற்று வந்தாள். அவளின் அழகும் நளினமும் மற்றும் உடையும் கண்டு மயங்காத ஆண் மாணவர்களோ அல்லது ஆசிரியர்களோ இல்லை என்றே சொல்லலாம். அதே பாடசாலையில் குழப்படி பையன் என பெயர்பெற்ற, ஆனால் கம்பீரமான மிடுக்கான ஒரு பையன் இருந்தான். அவன் ஏற்கனவே உயர்தர பரீட்சை எடுத்து இரு முறையும் கோட்டை விட்டவன். என்றாலும் பாடசா…
-
- 0 replies
- 509 views
-
-
எனக்குப் பிடித்த மிகநல்ல மொழிபெயர்ப்பு உருவகக் கதை ஒன்று...எங்கள் துப்பாக்கி முனைகளின் கீழ் நசுக்கப்படும் வாழ்க்கையை உருவகித்து இந்தக் கதையை வாசித்துமுடிக்கையில் எண்ணிப்பாருங்கள்..மீதி நான் கூறாமலே உங்களுக்கு புரியும்... _____________________________________________________________________________________ ஏதோவொரு நாளில்-கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் [size=5]தமிழில்: விமலாதித்த மாமல்லன்[/size] [size=5]மழையற்ற வெம்மையுடன் திங்கள் விடிந்தது. அதிகாலையில் எழும் வழக்கம் கொண்டவரும் பட்டம் பெறாத பல் டாக்டருமான அரேலியோ எஸ்கவார், அன்று காலை ஆறு மணிக்கு தன் அலுவலகத்தைத் திறந்துவிட்டிருந்தார். வார்ப்பில் பொறுத்தப்பட்டிருந்த பொய்ப் பற்கள் சிலவற்றைக் கண்ணாடி …
-
- 0 replies
- 605 views
-