கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3080 topics in this forum
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள் பார்த்துப் பார்த்து... அம்மாவுக்குப் பட்டுப்புடவை, தங்க வளையல், அப்பா வுக்கு விலை உயர்ந்த கைக் கடிகாரம், பாலியெஸ்டர…
-
- 0 replies
- 1.2k views
-
-
கன்னியம்மாள் - சிறுகதை க.வீரபாண்டியன் - ஓவியங்கள்: ஸ்யாம் “இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிச்சுக்கிறது என்னன்னா... நம்ம ஊரு முன்னாள் பெரசிடென்ட் பெரியசாமி, இன்னிக்குக் கோழிகூவுற நேரத்துல காலமானாரு... அன்னார் தகனம், இன்னிக்கி சாயங்காலம் 5 மணிக்கு நம்ம ஊரு கெழக்க இருக்கிற குடியானவுக சுடுகாட்டுல நடக்குமுங்கோ...ஓஓஓ...’’ பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்காலம் முடிந்து 15 வருடம் ஆகியிருந்தும், அதற்குப் பிறகு மூன்று பேர் அந்தப் பதவியை அலங்கரித்திருந்தாலும்கூட இன்றைக்கும் அதியங்குடி கிராமத்துக்காரர்களின் பிரசிடென்ட் பெரியசாமிதான். கன்னியம்மாள் மாதிரியான சிலருக்கு `பெரசன்ட்டு’. `பிரசிடென்ட் பெரியசாமி இறந்துவிட்டார்’ என்று பன்றிமலையில் பட்டு எதி…
-
- 0 replies
- 2.4k views
-
-
புகை( ப் )படம் செல்லமாய்ச் சிணுங்கியது இவனது செல்பேசி. மாலைக் குளியலில் சுகங்கொண்டிருந்த விசுவநாதன் உள்ளிருந்தவண்ணம் உரத்துக் குரல் கொடுக்கிறான் : "ஜானகி, ஃபோனை எடும்மா !'' முழு நிலவென மஞ்சள்முகங் காட்டும் உப்பிய பூரியும், கொதித்து மணத்துத் தளதளக்கும் உருளை மசாலாவிலும் கவனங்கொண்டிருந்த ஜானகி , அடுப்புச் சூட்டைக் குறைத்து, வேகமாக வந்து, செல்பேசியை எடுத்துப் பேசுகிறாள். அம்முனைச் செய்தி கேட்டு ஜானகி , ஆனந்தக் குரலில் , " ஓ , அப்படியா ! ரொம்ப மகிழ்ச்சி . அவர் குளிச்சிட்டு வந்ததும் உடனே பேசச் சொல்றேன்'' என்றவள், பேசியவர் பெயர் , எண்ணைப் பாதுகாத்துக் கொள்கிறாள். " மும்பையிலிருந்துத…
-
- 5 replies
- 2.4k views
-
-
மைக்கேல் மைக்கேல் வா ழ்க்கையில் சந்திக்கும் அனைவரது முகமும் நமக்கு நினைவில் இருப்பதில்லை. ஆனால், நெருக்கமான நட்போ, உறவோ இல்லாத நிலையிலும் சிலரது முகம் எந்தக் காரணமும் இல்லாமல் அடிக்கடி ஞாபகத்தில் வந்துகொண்டே இருக்கும். எனக்கு அப்படி மறக்கமுடியாத முகம் மைக்கேலின் முகம். ‘‘பாக்க றவன் எல்லோருமே கொஞ்ச தொலவு போயிட்டுத் திரும்பிப் பாக்குறான். இது இன்னா, மனுஷனா கொரங்கா... அதுக்குத்தான பாக்குறாங்க..?’’ என்று பேசியதுதான் அவனுடைய முத்திரை. டக்கென்று என் மனசில் அவனுக்…
-
- 0 replies
- 1k views
-
-
சோதனைச்சாவடி - சிறுகதை கவிப்பித்தன் - ஓவியங்கள்: ஸ்யாம் கோடை வெயில், பெட்ரோல் விலையைப் போன்று விறுவிறுவென ஏறிக்கொண்டிருந்தது. வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த வருவாய் ஆய்வாளர் சிதம்பரத்தின் நடு உச்சிக்கு மேல் கொதித்துக்கொண்டிருந்தான் சூரியன். இலைகளை உதிர்க்கத் தொடங்கியிருந்த வயதான ஒரு புளியமரம், சிதம்பரத்தின் வலதுபுறம் ஒற்றைக் கிளையுடன் நின்றிருந்தது. அதன் வெக்கை, அங்கே மேலும் மேலும் உஷ்ணத்தைக் கிளப்பிக் கொண்டிருந்தது. தலைமைக் காவலர் இருவர், சாலையில் வரும் கார்களை நிறுத்தி அதன் டிக்கிகளைத் திறந்து காட்ட, தலையைச் சாய்த்து சாய்த்து உள்ளே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த சிதம்பரத்துக்கு எரிச்சலாக இருந்தது. சவுக்குத்தோப்புபோல …
-
- 1 reply
- 1.9k views
-
-
ஒருநிமிடக் கதை: ஏமாறு... ஏமாற்று! சதாவிற்கு மிகவும் அதிகமாகக் கோபம் எட்டிப்பார்த்தது. வெளியில் காட்ட முடியாத இயலாமை, கார்க் கதவை ஒரு ஆர். டி. எக்ஸ் வெடியின் சத்தத்தோடு அடித்துச் சாத்துவதில் வெளிப்பட்டது. பின்ன ...கோபம் வருமா வராதா..? இந்த டிரைவர், அவர் கத்திக்கொண்டேதான் இருக்கிறார்.. இங்கே வேண்டாம் தள்ளிப்போ என்று.... கேட்காமல் காரை மிகச்சரியாக... இந்தத் தெரு குப்பை எடுக்கும் பையன். என்ன பேர்...ஆங்.குமார்... அவன் பக்கமாக நிறுத்தித் தொலைக்கிறான். டிரைவரிடம் சத்தம் போட முடியாது மாசக்கணக்கில் லீவ் போட்டுவிடுவான். அதான் வாயில்லா அந்த கார் கதவு, அடியை வாங்கிக்கொண்டது. சதாவு…
-
- 1 reply
- 1.3k views
-
-
மழை நின்ற காலத்தில்... குருவாயூர் கோயிலில் லட்டு கிருஷ்ணனின் தரிசனத்துக்காக வரிசையில் காத்து நின்றிருந்தேன். விசேஷ நாள் கிடையாது தான். என்றாலும் கூட்டம் இருந்தது. எதிரே துலாபாரத்தில் ஒரு சிறுமியை உட்கார வைத்து எடைக்கு எடை நேந்திரம் காய்களை காணிக்கைக் கொடை தந்து கொண்டிருந்தார்கள். உள்ளே பூஜை நடந்து கொண்டிருக்க கொஞ்ச நேரமாகக் காத்திருப்பு. யாரோ என் தோளைத் தொட திரும்பினேன். "நிங்ஙள அவிட யாரோ விளிக்குன்னு...'' அந்தப் பெரியவர் கை காட்டின திசையில் நோக்கினேன். எனக்குப் பின் வரிசையில், பத்திருபது பேர் தள்ளிக் கைக்குழந்தையுடன் நின்றிருந்த அந்தப் பெண் உற்…
-
- 3 replies
- 1.5k views
-
-
ஆற்றாமை கு-ப-ராஜகோபாலன் ‘உட்காரேண்டி! போகலாம். என்ன அவசரம்’ என்று சாவித்திரி புரண்டு படுத்துக்கொண்டு சொன்னாள். ‘இல்லை. அவர் வருகிற நேரமாகிவிட்டது. போய் காபிக்கு ஜலம் போட்டால் சரியாயிருக்கும்!’ என்று எழுந்து நின்றாள் கமலா. ‘ஆமாம், காபி போடுவதற்கு எத்தனை நாழியாகும்? வந்த பிறகு கூடப் போகலாம். உட்கார். எனக்குப் பொழுதே போகவில்லை.’ அப்பொழுது ‘கமலா’ என்று கூப்பிட்டுக்கொண்டே ராகவன் வந்துவிட்டான். ‘பார்த்தாயா. வந்துவிட்டார்!’ என்று சொல்லிவிட்டு கமலா தன் அறைபக்கம் ஓடினாள். சாவித்திரி படுத்தபடியே தலைநிமிர்ந்து பார்த்தாள்; ராகவன் மனைவியைப் பார்த்து சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தான். கமலா, ‘அதற்குள் நாழியாகிவிட்டதா?’ என்று கேட்டுக்கொண்டே பின்னால் …
-
- 1 reply
- 2.5k views
-
-
மனைவி சூரியன் இன்னும் விழிக்கவில்லை. இன்னும் சிறிது நேரம் தூங்கிவிட்டு எழுந்திருக்கலாம் என நினைத்து மேகப் போர்வைக்குள் நுழைந்தது சூரியன். கட்டிலில் படுத்திருந்த நான் தலைமாட்டில் வைத்திருந்த செல்போனை தட்டி, மணி பார்த்தேன். 5 ஆக 5 நிமிடங்கள் இருந்தன. பக்கத்தில் படுத்திருந்த மனைவி எப்போதோ எழுந்து போயிருந்தாள். தனித்தனி போர்வைக்குள் படுத்திருந்த பிள்ளைகள் இரண்டும் இப்போது ஒரே போர்வைக்குள் படுத்திருந்தனர். அண்ணனின் வயிற்றின் மீது காலைப் போட்டு வசதியாக படுத்திருந்தாள் எனது மகள். இதெல்லாம் காலை நேரத்து ஆச்சரியங்கள். காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரைக்கும் சண்டை போட்டுக் கொள்ளும் இரண்டும் இப்போது அமைதியா…
-
- 0 replies
- 1.3k views
-
-
அது... இது... எது? வங்கியில், குணசுந்தரியை தற்செயலாக பார்த்தார், பரந்தாமன். அவளது அப்பா காலத்திலிருந்தே குடும்ப நண்பர் என்பதால்,''என்னம்மா இந்த பக்கம்...'' என்று உரிமையுடன் விசாரித்தார். சொல்லலாமா, வேண்டாமா என்ற தயக்கத்தோடு, அருகில் நின்றிருந்த கணவனை பார்த்தாள், குணசுந்தரி. ''ஒண்ணுமில்ல... பொண்ணுக்கு வரன் அமைஞ்சிருக்கு; மூணு மாசத்துல கல்யாணம். பட்ஜெட் அதிகமாகும்ன்னு தோணுது; அதான் வீட்டை அடமானமா வெச்சு, கடன் வாங்க வந்திருக்கோம். குணசுந்தரி பேர்ல வீடு இருக்கு,'' என்றார், அவளது கணவர், குமார். ''வீட்ட வெச்சா...'' கவலையும…
-
- 0 replies
- 961 views
-
-
ரத்த மகுடம் பிரமாண்டமான சரித்திரத் தொடர் 1. மீண்டும் சிவகாமியின் சபதம் கே.என்.சிவராமன் இந்த இடம்தான். இங்குதான் தன்னைச் சந்திக்க ஒரு நபர் வருவார் என்றும் அவர் சொற்படி நடக்கும்படியும் புலவர் தண்டி கட்டளையிட்டிருந்தார். அதை ஏற்றே மல்லை கடற்கரைக்கு கரிகாலனும் நடந்து வந்திருந்தான். ஆனால், எப்போதும் மனதை ஆற்றுப்படுத்தும் அந்த இடம் அன்று ஏனோ அலைக்கழித்தது. நிச்சயம் சந்திக்கப்போகும் நபர் யாராக இருக்கும் என்ற கேள்வியின் அழுத்தத்தால் இந்த உணர்வு விளையவில்லை. ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்பதற்கான எச்சரிக்கையே அது. என்னவாக இருக்கும்? மேடான பகுதியில் அழுத்தமாகக் கால்களை ஊன்றியபடி புருவங்கள் முடிச்சிட சுற்றும்முற்றும் அலசத் தொடங்கினான். வைகாசி மாத சுக்கில ப…
-
- 171 replies
- 61.4k views
- 1 follower
-
-
மாசு எனக்கு இன்றைக்கு பள்ளிக்குக் கிளம்பவே மனம் இல்லை. என்னமோ மிகவும் பாரமாகத்தான் இருந்தது. நினைவெல்லாம் மதுவைச் சுற்றியே இருந்தது. ஆனால் கால்கள் மட்டும் பழக்க தோஷத்தில் பஸ் ஸ்டாண்ட் வந்து நின்றன. இன்று உடலுறுப்பு பற்றி ஸ்கூலில், பாடம் நடத்த வேண்டும். எந்த மெட்டீரியலும் தயார் செய்து கொள்ளவில்லை. பஸ் வந்து நின்றது. அவசர அவசரமாய் ஏறிய எனக்கு நல்ல வேளை உட்கார இடம் கிடைத்தது. கொஞ்ச நேரம் டெக்ஸ்ட் புக்கைப் புரட்டினால், இன்று எடுக்கப் போகும் புது பாடத்தின் மெட்டிரியல்களைக் கொஞ்சம் சேகரித்துக் கொள்ளலாம். புத்தகத்தைப் புரட்டி, அதற்கான பக்கத்தையும் எடுத்துப் பிரித்துக் கொண…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஒரு நிமிடக் கதை: கோலமாவு "இங்க பாருங்க...நீங்க ப்ராடக்ட்டை வாங்கி ஒரு வருஷமாயிட்டுது. ஆமாங்க .... சொன்னோம் ... டேர்ம்ஸ்சை அக்ரீமெண்ட்டுலே பாருங்க .. என்ன ... இல்லையா ... எங்கோ வெச்சுட்டீங்களா .... அதுக்கும் நாங்க தான் பொறுப்புன்னு சொல்லிடப்போறீங்க ... பாருங்க, இது இரு மல்டி நேஷனல் கம்பெனி...வாக்கு கொடுத்தா தவற மாட்டோம். ஒரு வருஷத்திற்கு ஃப்ரீ சர்விஸ் வீட்டுக்கு வந்து செய்து கொடுப்போம்.. . அப்புறம் செய்வது எல்லாம் பெயிட் சர்விஸ் தான். என்ன...உங்களுக்கு வயசாயிடுத்தா.. அதுக்கு நான் என்னங்க செய்ய முடியும்... யாரையாவது திணைக்கு கூட்டிவாங்க.... நான் கம்பெனி வைஸ் பிரெசிடெண்ட்.... இந்த விஷயமெல்லாம் என் கையி…
-
- 0 replies
- 784 views
-
-
வான்கோழி நடனம் - ரஸவாதி அவுஸ்திரேலியா, மெல்பேர்ண் நகரத்தில் இருந்து இரண்டு மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட கார் ஓடும் தூரத்தில் “ரறல்கன்” நகரம் இருக்கின்றது. நகரம் என்று சொல்ல முடியாது. அதி அற்புத கிராமம். அங்கேதான் அந்த எழுத்தாளர் தனது வீட்டில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். அவர் இறந்தபொழுது மனைவி அவருடன் இருக்கவில்லை. அவர் ஏற்கனவே நான்கு மாதங்களுக்கு முன்பதாக இலங்கை போய் விட்டார். அவரின் இறப்பைப் பரிசோதித்த வைத்தியர்கள் ‘இயற்கை மரணம்’ – அடல்ற் டெத் என்று வாக்குமூலம் சொன்னார்கள். அவருக்கு ஏகப்பட்ட வருத்தங்களும் மனவருத்தங்களும் இருந்திருக்கின்றன. ஆனால் அவரது மனைவி தனது கணவனின் இறப்பில் சந்தேகம் இருக்கின்றது என்று இலங்கையில் இருந்தபடி தெரிவித்தார…
-
- 2 replies
- 805 views
-
-
மேப்படியான் புழங்கும் சாலை - சிறுகதை சிறுகதை: ஏக்நாத் - ஓவியங்கள்: ஸ்யாம் கம்பிக்கூண்டு இருக்கும் லாரி, தெருவுக்குள் இருந்து ஆடி ஆடி வந்து ஆழ்வார்க்குறிச்சி செல்லும் சாலையில் வளைந்து நின்றது. லாரியின் பின்னால் வந்த வன அதிகாரியின் ஜீப், இப்போது ஓரமாக ஏறி முன்பக்கம் வந்து நின்றது. ஜீப்பில் இருந்த பெண் அதிகாரி இறங்கி, லாரியைச் சுற்றிப் பார்த்தார். டிரைவரிடம், ``எல்லாம் சரியா இருக்குல்லா?’’ என்று கேட்டார். அவன் தலையை ஆட்டினான். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களில், முன்னால் நின்ற தொரட்டுவிடம் கையைக் காட்டிவிட்டு ஜீப்பில் ஏறிக்கொண்டார். ஊர்க்காரர்கள், எக்கி எக்கி லாரிக்குள் இருக்கும் கூண்டைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அது தெரிய…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள் தாய்+அம்மா தாயம்மா செத்துட்டா. ஊரே திர…
-
- 0 replies
- 997 views
-
-
சுவடுகள் டேய் சுந்தர் ஓடாதே.. .இங்க வா'' பக்கத்து கம்பார்ட்மெண்டில் இருந்து, குரு இருந்த கம்பார்ட்மென்டுக்கு ஓடி வந்த சிறுவன். பின்னால் ஓடி வந்தவள் லதா மாதிரி இருந்தது. ஒன்பது பத்து வகுப்புகளில் உடன் படித்தவள். மூக்குத்தி மினுங்களோடு அத்தனை மாற்றம் இல்லாமல் அதே சிரிக்கும் முகம். கைக்கெட்டும் தூரத்தில் ஓடியவனைப் பிடித்து நிறுத்தி அவளிடம் ஒப்படைத்தபடியே, ""நீங்க... நீ... லதாதானே...?'' என்றான் குரு. ""ஆமா..நீங்க...?'' ""ஓ... டென்த் பி செக்ஷன்...'' ""குரு.. குருமூர்த்தியா... சுத்தமா அடையாளம் தெரியாம இப்படி குண்டு போட்டிருக்கீங்க...'' என்றவாறு தாவத் தயாராய் இருந்த மகனை இழுத்துப…
-
- 1 reply
- 3.8k views
-
-
தலைக்கடன் - இமையம் ஓவியங்கள் : மணிவண்ணன் மகளிர் காவல் நிலையத்தின் வாசலுக்குச் சற்றுத் தள்ளி, கிழக்கிலிருந்த இலுப்பை மரத்தின் நிழலில் உட்கார்ந்திருந்த தன்னுடைய அம்மா, அண்ணன், அண்ணியை நோக்கி, இடுப்பிலிருந்த குழந்தையுடன் சாலையைக் கடந்துவந்தாள் சீனியம்மா. “புள்ளக்கி என்னா வாங்கிக் கொடுத்த?” என்று மேகவர்ணம் கேட்டாள். அதற்குச் சீனியம்மா பட்டும்படாமலும் “டீயும் பன்னும்தான்” என்று சொன்னாள். காவல் நிலையத்தின் பக்கம் பார்த்தாள். பிறகு, தலையைக் கவிழ்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த தன்னுடைய அண்ணன் சுந்தரத்தைப் பார்த்ததும் சீனியம்மாவுக்கு அழுகை வந்துவிட்டது. அழுகையை மறைப்பதற்காக அங்குமிங்கும் பார்த்தாள். அப்போதும் அவளுக்கு அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. …
-
- 1 reply
- 2k views
-
-
ஒரு நிமிடக் கதை: பேப்பர் வழக்கு கணேசன் புது வீடு மாறி வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. அக்கம் பக்கம் யாரும் இன்னும் நண்பர்கள் ஆகவில்லை. புன்சிரிப்புக்களோடு மட்டும் அறிமுகங்கள் முடிந்துவிட்டன. கனேசனுக்கு எப்போதும் நியூஸ்பேப்பர் ராசி மிக அதிகமாகவே உண்டு. அனைவருக்கும் காலை பேப்பர் வந்துவிடும். இவருக்கு மட்டும் லேட்டாக வரும். சரி, பக்கத்து வீட்டில் போடும் ஆளுக்கு மாற்றிப்பார்கலாம் என்றால் அவர்கள் வீட்டிலிருந்தே விசிறி அடித்த பேப்பர் சுருள் வாசல் தண்ணீரில் நனைந்து, எடுக்கும்போதே எண்ணெய்யில் விழுந்த பூரி போல் சொட்டச்சொட்ட கைகளுக்கு வந்து ஒரே விரிப்பில் பிசுபிசுத்து துண்டுகளாகப் போய்விடும். சரி இ…
-
- 1 reply
- 866 views
-
-
வெந்து தணிந்தது காலம்...- சிறுகதை வெந்துதணிந்ததுகாலம்...- மு.சிவலிங்கம் அந்த மாமரம்¸ ஆல மரத்தைப் போல அடர்ந்து¸ படர்ந்து விரிந்திருந்தது. கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்து ஓய்ந்திருக்கும் காலம். இப்போது வெய்யிற் காலமாகியும் புழுதி பறக்காமல் ஈர நிலம் எங்கும் வியாபித்திருந்தது. மரத்தில் புதிய தளிர்கள் துளிர்த்து¸ பச்சைப் பசேலெனச் செழித்திருந்தன. காற்றில் சலசலக்கும் இலைகளும்¸ கிளைகளும் குளிர்ந்தக் காற்றை அள்ளி வீசிக் கொண்டிருந்தன. அந்த மரமே அங்கு தவித்திருக்கும் அகதிக் குடும்பங்களுக்கு கூரையாக¸ வீடாக¸ ஊராக¸ பாதுகாப்பாகக் குஞ்சுகளை இறக்கைக்குள் அணைத்து வைத்திருக்கும் பேடாக ஆதரவளித்துக் கொண்டிருக்கிறது. நெருப்பாய் எரிக்கும் வெய்யிற் காலங்களில் சுகமான நிழலைக் கொடுக்கின்றது.…
-
- 0 replies
- 1.2k views
-
-
கடைசி கடுதாசி அன்புள்ள அமுதினிக்கு, அன்றைய திகதி நினைவில்லை. அன்று ஏன் எனக்கு மட்டும் புது பட்டுப் பாவாடை சட்டை அணிவித்து காலையிலேயே எனக்குப் பிடித்த பருப்புக் குழம்பு செய்திருந்தாய்? “ஆறு வயசாயிட்டது…. இனியெங்கிலும் அவளை ‘அம்மா’ எண்டுதான் விளிக்க வேணும். சரி தன்னே?’ என்று மாமி என்னைப் பார்த்துக் கூறவும், “பரவாயில்லை ! அவளுக்கு எப்படி இஸ்டமோ அப்படியே விளிக்கட்டும்” என்றாயே? நான் உன்னைப் பெயர் சொல்லி அழைத்ததை அவ்வளவு ரசித்தாயா? நாம் நட்டு வைத்த செடியில் கொத்துக் கொத்தாய்ப் பூக்கள் பூத்தது, அண்ணன் (அவனது பெயர் ஏன் எனது நினைவிற்கு வரமாட்டேன் என்கிறது?) ஒரு கொத்தைப் பறித்து அதில் ஒரு பூவின் நடுவில் இருந்த மெல்லிய நார் போன்ற ஏதோ ஒன்ற…
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
மனிதனும்... மனிதமும்! பச்சையப்பனிடம் பேசிவிட்டு திரும்பிய கணத்திலிருந்து மனதில் பாரம், நடையில் துவளல். எனக்கு வயது 62. அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வு. எனது ஊர் கடற்கரையை ஒட்டிய இடம். எனது வீட்டிற்கும் கடலுக்கும் துல்லியமாக 3 கி.மீ. எனக்கு எந்தவித நோய், தொந்தி, தொப்பை எதுவும் கிடையாது. பெற்ற பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் முடித்து விட்டு ஓய்வூதியத்தில் நிம்மதியான வாழ்க்கை. நான் தினம் காலை 4.45 க்கு எழுந்து முகச்சவரம் செய்து, பல் துலக்கி, கழிப்பறை இயற்கை உபாதை வேலையை முடித்து விட்டு சரியாய் 5.20 மணிக்கு பொல பொலவென்று விடியும் பொழுதில் என் தெரு திருப்பத்தில் இருக்கும் சாலையில் கிழக்குப் பக்கம் த…
-
- 0 replies
- 584 views
-
-
முரண்- கோமகன் 2010 “ஹொப்பித்தால் ட்ருசோ”வின் பிரதான வாயிலில் இருந்து உள்ளே செல்லும் நீண்ட சாலையில் காலைப்பனி மூடியிருந்தது. அதன் இருமருங்கிலும் நின்றிருந்த பைன் மரங்கள் இலைகளைத்துறந்து துக்கம் கொண்டாடிக்கொண்டு இருந்தன. அதன் கிளைகளில் இருந்த மொக்குகளில் பனி உறைந்து காலை வெளிச்சத்தில் பளபளத்தது. இருபக்கமும் பனிச்சொரியல் மூடியிருக்க நடுவே வீதி சுத்தமாக்கப்பட்டு கருஞ்சாரையாய் நீண்டு சென்றது. ஆங்காங்கே பனியில் சறுக்காமல் இருக்க உப்புத்தூவப்பட்டிருந்தது. “இந்த மரங்களே இப்படித்தான் வசந்தகாலத்தில் இலைகளால் நிறைந்து அத்தனை பறவைகளையும் தமக்குள் வைத்துக்கொண்டு ஒரேயடியாக சந்தோஷத்தைக் கொண…
-
- 14 replies
- 2.7k views
-
-
சுடரும் புன்னகை! பேப்பர்காரரை இன்னும் காணோமே? மணி ஏழரை ஆகப்போகிறது. மற்ற நாள்ன்னா வீட்டை பூட்டிவிட்டு போயிறலாம். அவரும் வரண்டாவில் பேப்பரை போட்டு விட்டு போயிருவாரு. அவரு கைமாற்றாக இரண்டாயிரம் ரூபாய் கேட்டாரு. "வீட்டு வாடகைக்கு கொடுக்கணும். ஒரு வாரத்தில் மகனுக பணம் அனுப்பினதும் கொண்டுவந்து தர்றேன் சாரு'ன்னாரு என்று முணுமுணுத்தவாறே சுவர்க்கடிகாரத்தையும், வீட்டு வாசலுக்கும் இவரது கண்கள் பந்தாடிக் கொண்டிருந்தன. மனைவி குளித்து தயாராவதற்குள் பேப்பர்காரர் வீட்டிலேயே கொடுத்துட்டு வந்துறலாமே. அவருக்கும் வீட்டு வாடகைப் பிரச்னை தீரும். நமக்கும் மனசு அலை பாயாம ஓர்மையா வெளியூர் கிளம்பத் தோதாயிருக்கும் என்று பணத்தை …
-
- 0 replies
- 624 views
-
-
பாம்பு - சிறுகதை சிறுகதை: அபிமானி, ஓவியங்கள்: ஸ்யாம் வாசலை விட்டு வெளியே வந்துகொண்டிருந்த திவாகரனின் கண்களில் அது படக்கெனத் தெரிந்து, பளிச்சென ஒளிர்ந்து, பட்டென மறைந்தது. மின்னல் தெறிப்பின் விநாடி ஒளிர்வு. இமைமூடும் வேகத்தில் அவசர மறைவு. மரப்பலகை அடுக்கின் கீழ் அது விறுவிறுவென ஊர்ந்து போனதை அவரது மூளை தன் ஞாபக ஏட்டில் சட்டெனப் பதித்துக்கொண்டதால், உடனே அதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாமல் திணறினார். `அது பாம்புதானே? பாம்புபோலத்தானே இருந்தது... பாம்பாகத்தானே இருக்க வேண்டும்!’ நன்றாகத் தீர்மானித்துக் கொண்ட பிறகே, கறாரான முடிவுக்கு வந்தார். `பாம்புதான். நிச்சயமாக... அது பாம்புதான்.’ அதிர்ந்துபோனார் திவாகரன். விதிர்விதிர்த்துப் போனது தேகம். உ…
-
- 0 replies
- 2.4k views
-