கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
சத்தியமாக இந்த சொக்ஸ் பண்ணுற தொல்லையை தாங்கமுடியவில்லை. மூக்குள்ளவரை சளிபோல இதுவும் நான் இந்த ஊரில இருக்கு மட்டும் என்னை விடாது போலிருக்கிறது . விதி வலியது இவ் விடயத்திலும். முதலில் பிரச்சனையை விளக்குகிறேன். கடந்த 23 வருடங்களாக நான் வாஷிங் மெசீனுக்குள் 2 சொக்ஸ் போட்டால் வாஷிங் மெசீன் ஓன்றைத்தான் திருப்பித்தருகிறது. 2 சோடி போட்டால் ஒரு சோடி மட்டும் திரும்பித் தருகிறது ஆனால் அது வேற வேற நிறத்திலிருக்கும். ஆனால் அடுத்தமுறை உடுப்புகளுவும் போது முதல் முறை காணாமல் போன சொக்ஸ் வந்திருக்கும் ஆனால் இந்த முறை போட்டது வந்திருக்காது. கல்ல கண்டா நாய கணோம் நாய கண்டா கல்ல கணோம் மாதிரி அல்லது பார்முடா முக்கோத்தினுள்ளக்குள்போன கப்பல் மாதிரி.. மாயமாய் மறைகிறது. வாஷிங் மெசீன் என்ற …
-
- 11 replies
- 9.1k views
-
-
பிசாசுகளின் இராச்சியம் தமிழீழத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வன்னிப் பிரதேசம் அது. அங்கே ஓங்கி உயர்ந்த பல வகைமரங்கள். அவற்றுக்கிடையே பல விழுதுகள் தாங்க, பரந்து, விரிந்த கிளைகளைத் தாங்கிய பல ஆலமரங்கள். ஆலமரங்களிலே கூடு கட்டி, உள்ளாசமாக கொஞ்சிக் குலாவி வாழும்; குருவிக் கூட்டங்கள். மரத்துக்கு மரம் தாவும் மந்திக் கூட்டங்கள். மரங்களுக்கிடையே துள்ளி ஓடும் மான் கூட்டம். சுழண்டாடும் மயில் கூட்டம். மந்தைகள் எங்கும் பரந்து மேயும். முல்லையும் மருதமும் இணைந்து வளங் கொழிக்கும். இப்பிரதேசம், 2009 மே மாதம் 18ம் திகதி, புகைமண்டலமாகக் காட்சி அளித்தது. அங்கே என்ன நடந்தது? அங்கே வாழ்ந்த மக்களுக்கு என்ன நேர்ந்தது? என, ஒருவராலும் அறிய முடியவில்லை. சிலநாட்களுக்குப்பின், அப் பகுதியை முற்ற…
-
- 7 replies
- 2.6k views
-
-
இனியாவின் தவிப்பு ...... (பாகம் 6 ) (மறுநாள் காலை) தாயார் : இனியா ..... இனியா பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மாச்சி ..... அம்மா அப்பா என்னை ஆசிர்வதியுங்கோ ..... எங்கள் ஆசிர்வாதம் எப்போதுமே உங்களுக்கு உண்டு .... (இனியாவை கட்டித்தழுவிய படி கூறினார்கள்) நாங்கள் எல்லோரும் கோவிலுக்கு போவோம் வெளிக்கிடுங்கள் கெதியாக அபிஷேகத்துக்கு முன் போகவேணும் ''இனியா தளயத்தளைய நடை பயின்று பூமியை தட்டி எழுப்பும் விதத்தில் அவளின் சேலையும் அவள் தோட்டத்தில் உள்ள தேன்வண்டுகளை கொட்டி கூப்பிடும் அளவுக்கு அவள் தலையில் மல்லிகை பூவும் முகத்தில் புன்னகை என்னும் பூக்கள் வடிய சிந்து பாடும் நடையோடு மனதில் அலைபோல் கற்பனைகளை சுமந்து அவள் மனதுக்குள் ஒரு சுயம்பரமே நடத்துகின்…
-
- 37 replies
- 5.3k views
-
-
இது வெறும் நகைச்சுவைக்காகவே என்னால் எழுதப்பட்டது . உள்நோக்கங்கள் எதுவும் இதில் இல்லை . நேசமுடன் கோமகன் ************************************************************************************************************************* நேற்று இரவைக்கே என்ரை மனிசி சொல்லிப்போட்டா , நாளைக்கு வேலையால வரேக்கே வோட் பண்ணவேணும் எண்டு . நான் போவம் எண்டு சொல்லிப் போட்டு யாழ் இணையத்தை நோண்டிக் கொண்டிருந்தன் . விடிய எழும்பி ரெண்டு பேரும் வேலைக்கு போகேக்கை என்ரை வாக்காளர் அட்டையை மறக்காமல் மனிசி தந்தா . நான் வேலை செய்யேக்கை என்ரை மண்டையுக்கை சுருள் சுருளாய் வட்டம் போச்சுது . அப்ப நான் ஏழாம் வகுப்பு படிச்சுக் கொண்டிருக்கறன் . எங்கடை கோப்பாய் தொகுதிக்கு கதிரவேற்ப்பிள்ளை ஐய்யா தான…
-
- 25 replies
- 4.8k views
-
-
பொலிஸ் பரிசோதனையும் அடையாள அட்டையும் சற்று கிராமச்சூழலை அண்டிய பகுதியில் வாழும் மீனா ரொம்ப அழகானவள். பெற்றோருக்கு ஒரேயொரு செல்லமகளான மீனா பருவமடைந்தாலும் இன்னும் செல்லப்பிள்ளையாகவே வீட்டில் வலம் வந்தாள். படிப்பில் கெட்டிக்காரியான அவளுக்கு தனி அறை ஒதுக்கப்பட்ட போதிலும் படுக்கையை பெற்றோரோடு பங்கிட்டாள். அன்று ஞாயிற்றுக்கிழமை நீண்ட நேரம் உறங்கும் பழக்கம் கொண்ட மீனா கட்டிலில் பூனைகுட்டி போல மென்மையாக ஆனால் கடுமையான உறக்கத்தில் இருந்தவளை தாய் உலுப்பி எழுப்பியதால் திடுக்கிட்டு எழும்பி சிணுங்கியபடி எழுந்து "என்னம்மா இப்படி அவசரபடுத்தி எழுப்புறீங்க" என்ற முனங்கலோடு கண்ணைக் கசக்கியவண்ணம் குளியலறையை நோக்கிச் சென்றவள் வீட்டினுள் துப்பாக்கியோடு இருந்த இராணுவத்த…
-
- 17 replies
- 2.8k views
-
-
ஜெயகாந்தனின் இந்த கதையை கன காலத்துக்கு முந்தி வாசித்து இருக்கிறேன் ..தற்செயலாக இப்ப வாசிக்க கிடைத்தது ...இப்பவும் நல்லாய் தான் இருக்குது வாசிக்கும் பொழுது அவர் கதை சொல்லும் பாணி ...அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன் . நீங்களும் வாசி்த்து பாருங்களேன் நான் ஒண்ணும் 'லூஸ்' இல்லே. அதுக்காக என்னெ நான் புத்திசாலின்னு சொல்லிக்கறதா இன்னா... எனக்குக் குடுத்திருக்கிற வேலையை ஒழுங்காகத்தான் செய்யிறேன். அதிலே ஒரு சின்ன மிஷ்டேக் சொல்ல முடியாது. எங்க முதலாளிக்கு மானேஜர் ஸாருக்கு எல்லாருக்கும் என்கிட்டே ரொம்பப் பிரியம். அதான் ஸார்... நவஜோதி ஓட்டல்னு சொன்னா தெரியாதவங்க யாரு? அந்த ஓட்டல்லே மூணாவது மாடியிலே நான் இருக்கேன்... பேரு பாண்டியன். சும்மா ரோட்டுக்கா போய்க்கி…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஒரு கோப்பை தேநீர் அருந்தினால் அருமையாக இருக்கும் என தோன்றியது. கைத்தொலைபேசியில் தலைபேசி வழி பாட்டு கேட்டுக்கொண்டிருந்த மனைவியிடம் டவாலி போல மூன்று முறை கேட்ட பின்னரும் அவள் அசைவதாயில்லை. பல்லாயிரத்தி பல நூற்றி சொச்சம் முறையாக அவள் மீது கோபம் வந்தது. "தேநீர் வருமா வராதா?" "ஆ..." காதிலிருந்ததை அகற்றி கேட்டாள். உள்ளே கோபம் வந்தாலும் அமைதியாய்.. "தேநீர் வருமா வராதா?" " தேநீர் எப்படி தானாய் வரும்?" இது நகைச்சுவையாய் தோன்றவில்லை "எனக்கு இப்போது தேநீர் வேண்டும்" "எனக்கும் இப்போது வைர அட்டிகை..தங்க காப்பு பட்டுசேலை எல்லாம் வேண்டும்..ஆசைப்படுவதெல்லாம் உடனே நடக்குமா என்ன" "சாதரண தேநீருக்கு என்ன எகத்தாளம்" "அப்படியா..சாதரண தேநீரா..நீங்களே தயாரித்து அருந்துங்கள்" …
-
- 10 replies
- 2.3k views
-
-
ஷினுகாமி - சிறுகதை சிறுகதை: லதாமகன், ஓவியங்கள்: ஸ்யாம் ``ஹிரோஷிமானி இக்கோ தெசுகா?’’ கொஞ்சல் ஜப்பானிய மொழியில் அந்தப் பெண் புன்னகைத்துக் கேட்டபோது புரியவில்லை. ``மன்னிக்கவும், ஜப்பானிய மொழி தெரியாது’’ என்றேன். ``ஹிரோஷிமா போறீங்களா?’’ நல்லதொரு நுனி நாக்கு ஆங்கிலம். சிகரெட் சாம்பலை அதற்காக வைக்கப்பட்டிருந்த நீண்ட தொட்டியில் முடிந்தவரை நளினமாகத் தட்டிவிட்டு ‘`ஆம்’’ என்றேன். `‘தனியாகவா’’ ஜப்பானியப் பெண்கள் எல்லாவற்றிலும் ஆச்சர்யம் கொண்ட கீச்சுக்குரலை நுழைத்துவிடுகிறார்கள் என்று தோன்றியது. மீண்டும் `‘ஆம்’’ . ‘`ஏன் ஹிரோஷிமா?’’ இந்த இரண்டு ஆண்டுகளில் சுற்றும் பாதைகளெல்லாம் இந்தக் கேள்வியைச் சந்தித்திருக்கிறேன். பெரும்பாலும் ஒரு விருந்த…
-
- 0 replies
- 2.2k views
-
-
சில நாட்கள் இருக்கும், ஒரு சனி காலை, எனது இளையவளைக் கூட்டிக்கொண்டு ஆங்கிலப் பாடல் வகுப்பொன்றிற்குச் சென்றிருந்தேன். வகுப்பு ஆரம்பமாவதற்கு இன்னும் சிறிது நேரம் இருந்ததனால், அங்கிருந்த சொகுசு நாற்காலி ஒன்றில் அமர்ந்துகொண்டு அப்பகுதியை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தேன். இடையிடையே மகள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் கூறிக்கொண்டிருந்தாலும் கூட, அங்கே வருபவர்கள் யாரென்று பார்ப்பதிலேயே எனது கவனம் சென்றிருந்தது. அநேகமானவர்கள் வெள்ளையர்கள். அவ்வப்போது சீனர்கள்....இப்படியே வந்துபோய்க்கொண்டிருந்த முகங்களினூடு ஒரு மண்ணிற முகம். எங்களைப் போல என்று வைத்துக்கொள்ளுங்களேன். இந்தியராகக் கூட இருக்கலாம். ஆகவே அவரையும் அவரது பிள்ளையையும் அவதானிக்கத் தொடங்கினேன். வரிசையில் நின்றிருந்த ப…
-
- 27 replies
- 4.5k views
-
-
சீதாவனம் – ஜி .விஜயபத்மா சூர்ய அஸ்தமனம் துவங்கி விட்டது… காட்டுக்குள் …இருளுடன் , குளிரும் போட்டி போட்டுக்கொண்டு ….பரவத் துவங்கியிருந்தது . துறவிகளுக்கு வரக்கூடாத கவலை வால்மீகியின் முகத்தில் தென்பட்டது .. அவர் தன்னை தானே சமாதனப்படுத்திகொண்டு , வேக வேகமாக நடக்க ஆரம்பித்தார் . அவர் தன் தலையை இருபுறமும் திருப்பி பார்த்தபடி ஆட்டி ,ஆட்டிக்கொண்டு நடக்கும் வேகமும் ,நாலாப்புறமும் துலாவும் கண்களையும் பார்த்தால் காட்டிற்குள் அவர் யாரையோ தேடுகிறார் என்பது புலப்படுகிறது .. கண்களுக்கு எட்டிய வரையில் தூரத்தில் வெயில் விலகிக்கொள்ள ,இருளை விருப்பத்துடன் போர்த்திக் கொள்ளும் பயிர்களின் மங்கலான , கருமஞ்சள் நிறம் தவிர வேறு எதுவும் தெரியவில்லை ..இன்று ஏனோ காட்டின் மொத்த மரங்களும் சத்தி…
-
- 1 reply
- 1.4k views
-
-
நடுநிசி நட்சத்திரங்கள் - சிறுகதை ஆனந்த் ராகவ், ஓவியங்கள்: அனில் கே.எஸ். மேகங்களின் குறுக்கீடு இல்லா வானத்தில், வைரத் துகள்களாக இறைந்துகிடந்தன நட்சத்திரங்கள். படுத்து உறங்கும் வசதிகொண்ட, சொகுசான அந்தக் குளிர் பேருந்தின் படுக்கையில் இருந்து இயற்கையின் அந்த கேன்வாஸை நகர்ந்துகொண்டே ரசிப்பது... பரவச அனுபவம். மூன்று நாட்கள் வேலைக்குப் பிறகு உடல் சோர்வாக இருந்தாலும், நட்சத்திரச் சிதறல் வானத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு வரும் ஆர்வத்தில் தூக்கம்கூடப் பிடிக்கவில்லை. கேமராவும் கையுமாக நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சுற்றும் எனக்கு, நட்சத்திரங்கள் மட்டும் இல்லாவிட்டால் பயணங்கள் சலிப்புற்றுவிடும். வனவிலங்குக் காப்பகங்களிலும், அடர்ந்த காடுகளி…
-
- 2 replies
- 1.5k views
-
-
கம்போடியா பரிசு - சிறுகதை தமிழ்மகன் - ஓவியங்கள்: ஸ்யாம் தோளில் பாந்தமாக அழுத்திய அந்த விரல்கள் சரவணனு டையவை என நினைத்தேன். மிக மிருதுவாக அழுத்திய படி இருந்தன அந்த விரல்கள். எதிரில் அமர்ந்திருந்த ரமேஷ் சிரிக்கவேதான் சந்தேகம் வந்தது. கண்களைத் தாழ்த்தி, அழுத்திய அந்த விரல்களைக் கவனித்தேன். இரண்டு கைகளின் விரல்களிலும் செக்கச் சிவப்பாய் நகப்பூச்சு. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். இன்னும் சிவப்பாய் உதட்டுச் சாயம் பூசிய கறுப்பு ஸ்கர்ட் போட்ட ஒரு பெண் நின்றிருந்தாள். மேலும் திடுக்கிட்டு எழுந்து நின்றேன். அந்தப் பெண் சிரித்தாள். ``உட்கார்’’ என்றாள் ஆங்கிலத்தில். ராகம்போல இழுத்துப் பேசும் அவளின் உச்சரிப்பு பாணியும், கெஞ்சலான அல்லது கொஞ்சல…
-
- 0 replies
- 2.1k views
-
-
அலெக்சாண்டர் இறக்கும் தருவாயில் போர் வீரர்களிடம் சொன்னார், “எனக்கு நீங்கள் நான் கேட்கப் போகும் உதவிகளைச் செய்ய வேண்டும்.நான் இறந்த பின் என்னைச் சவப் பெட்டியில் தூக்கிச் செல்லும் பொது என் இரு கைகளையும் வெளியே தொங்கப் போட்டவாறு எடுத்துச் செல்ல வேண்டும். எனக்கு மருத்துவம் பார்த்த உலகப் புகழ் பெற்ற டாக்டர்கள் சவ ஊர்வலத்தின் முன்னே செல்ல வேண்டும். நான் சேகரித்த வைரங்களையும் வைடூரியங்களையும் ஊர்வலப் பாதையில் போட்டுக்கொண்டே செல்ல வேண்டும்.” அங்கிருந்த அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை. இவற்றை ஏன்செய்யவேண்டும் என்று ஆர்வமுடனும் வருத்தத்துடனும் அவரையே கேட்க அவர் சொன்னார், ”நான் எத்தனை நாடுகளை வென்ற போதும் எத்தனை கோடி செல்வத்தை வாரி எடுத்த போதிலும், இறந்தப…
-
- 0 replies
- 590 views
-
-
விடை கொடு விடை கொடு மண்ணே... வாகனம் ஓடும் சத்தம், காற்று வீசும் ஓசை, வண்டிக்குள் எம் மூச்சுக்காற்று இவை தவிர அந்தச் சூனியப் பிரதேசத்தில் வேறு சத்தமில்லை. சாம்பல் பூத்த வானம் சலனம் தீர்ந்து சயனித்திருந்தது. வெந்து கிடந்தது மண்; வேகம் இழந்து வீசியது காற்று. கருகிக் கிடந்தன மரங்கள். குவிந்து கிடந்தன எரியூட்டப்பட்ட வாகனங்கள். மூச்சடங்கிக் கிடந்தது முல்லை நிலப்பரப்பு. மொட்டையாய் நின்றன கற்பகத்தருக்கள். கோலமிழந்து கிடந்தன வாழ்வின் எச்சங்கள். கூரை இழந்து நின்றன குடியிருந்த கோயில்கள். விதவைக் கோலம் பூண்டிருந்தன தெருக்கள். இறுதிக்கட்ட போரின் பின் தொலைக்காட்சிகளிலும் கணனிகளிலும் பார்த்து மனம் கனத்த கொடுமையான நிகழ்வுகளின் ஒளிப்படங்கள் மனக்கண்ணில் ஒருகணம் நிழற்படமாய் விரிய மனதை …
-
- 37 replies
- 6.2k views
-
-
http://sinnakuddy1.b...-post_8635.html
-
- 1 reply
- 689 views
-
-
மான்டேஜ் மனசு 2 - இன்றும் நெஞ்சில் அழியாத கோலங்கள்! நாங்கள் மொத்தம் ஆறு பேர். கல்லூரி முடித்த தருணம் அது. தீபாவளியை முன்னிட்டு திரைப்படம் பார்க்கலாம் என்று திட்டம். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் அஜித் நடித்த 'வரலாறு' வெளியாகியிருந்தது. கே.எஸ்.ரவிகுமார் பிறந்து வளர்ந்ததெல்லாம் எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள வங்கனூர் கிராமத்தில்தான். பத்து வயது வரைக்கும் அங்கேதான் பாட்டி வீட்டில் ரவிகுமார் வளர்ந்ததாக சொல்வார்கள். அதனாலேயே ரவிகுமார் நம்ம ஏரியா ஆள் என்ற பாசம் எங்கள் பக்கத்து கிராமங்கள் முழுக்க ஒட்டிக்கிடந்தது. அஜித் நடித்த படம் என்றால் இன்னும் சொல்லவா வேண்டும்? நான், மணி, உதயன், புருஷோத், …
-
- 0 replies
- 1.4k views
-
-
அங்கீகாரம்: ஒரு நிமிடக் கதை இரவு 11 மணி. நல்ல தூக்கத்தில் இருந்த சரவணனுக்கு ஏதோ சத்தம் கேட்டதும் விழிப்பு வந்தது. லைட் வெளிச்சம் கூச வைக்க கண்களைக் கசக்கியவாறே பார்த்தான். அருகில் உட்கார்ந்து தபால் கார்டில் எழுதிக்கொண்டிருந்த மனைவி லதா "சாரிங்க.." என்று கீழே விழுந்த தண்ணீர் டம்ளரை எடுத்தாள். எரிச்சலுடன் அவளைப் பார்த் தான். இவளுக்கு வேறு வேலை கிடையாது. கடையில் காசு கொடுத்து வாங்கும் வார, இரு வார, மாத இதழ்கள் தவிர அலுவலகத்திலிருந்து அவன் கொண்டு வரும் பத்திரிகைகளை யும் ஒன்றுவிடாமல் படித்து விடுவாள். படிப்பதோடு, அதில் அவளுக்கு பிடித்த விஷயங்களைப் பாராட்டி அந்தப் பத்திரிகைக்கு எழுதிவிட்டுத்தான் ஓய்வாள். …
-
- 1 reply
- 751 views
-
-
காயா ஷோபாசக்தி ஒன்பது வயதுச் சிறுமியும் பாரிஸின் புறநகரான சார்ஸலின் ‘அனத்தலே பிரான்ஸ்’ பள்ளி மாணவியும் எனது உற்ற தோழன் திருச்செல்வத்தின் ஒரே மகளுமான செல்வி. காயா கொல்லப்பட்டதற்குச் சில நாட்களிற்கு முன்னதாக நடந்த ஒரு சம்பவமே ‘காயா’ என்ற இந்தக் கதையை நான் எழுதுவதற்குக் காரணமாகிறது. முதலில் காயாவின் அப்பா திருச்செல்வத்தைக் குறித்துச் சொல்லிவிடுகிறேன். நானும் திருச்செல்வமும் ஒரே கிராமத்தில் ஒரே நாளில் ஒரே மாதத்தில் 1967-ம் வருடம் பிறந்தவர்கள். முதலாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை ஒன்றாகவே படித்தவர்கள். பத்தாவது வகுப்பு இறுதிப் பரீட்சை எழுதியதன் பின்பாக நான் படிப்பைத் தொடரவில்லை. திருச்செல்வம் அதற்குப் பின்பு யாழ்ப்பாணம் சென்று படித்துப் பேரதனைப் பல்…
-
- 17 replies
- 2.7k views
-
-
மரியாதை - ஒரு நிமிடக் கதை திருமண மண்டபத்துக்குள் நுழைந்தவுடன் “வாங்க சார்..” என்று வரவேற்ற வேலு வின் மகனைப் பார்த்து லேசாய் எரிச்சலடைந்தேன். பதினாறு வயதிருக்கும். அவன் மட்டும் தனியே நின்று வரவேற்றுக் கொண்டிருந்தான். அருகில் பெரிய மனிதர்கள் யாருமில்லை. ‘வர்றவங்கள வாசல்ல நின்னு வரவேற்கணும்கிற பண்பு தெரியாம என்ன விசேஷம் நடத்துறாங்க... சின்ன பையனை நிறுத்தியிருக்கிறாங்களே’ என்று நினைத்துக் கொண்டேன். “அப்பா எங்கேப்பா..?’’ வேலுவின் மகன் சுரேஷிடம் கேட்டேன். “சாப்பாட்டு கூடத்துல நிக்கிறாங்க சார்’’ என்றான். மேடையில் இருந்த புதுமணத் தம்பதியருக்…
-
- 1 reply
- 2k views
-
-
உதறல்-சப்னாஸ் ஹாசிம் ஓவியம் : எஸ்.நளீம் நீண்ட நாட்களுக்குப் பிறகு அச்சமற்ற மனித நடமாட்டத்தை சந்தைக்கூச்சலை வாகன நெரிசலை, பாடசாலை சிறுவர்களை அவர்கள் கண்டிருந்தனர். அநுராதபுரத்தில் ஆங்காங்கே இருந்த புத்தர் சிலைகளைச் சுற்றியிருந்த வெண் அலரிப்பூக்கள் பகலிலும் மணத்துக்கிடந்தன. சில இடங்களில் பாதை தடுப்புகள் போடப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்பட்டன. நீண்ட நாள் பசி, வயிறு ஒட்டி அடியிலிருந்து பிழம்பாய் எரிவது மூக்கு நாசிவரை சுட்டது. வேறு வழியின்றி ஒரு முஸ்லிம் ஹோட்டலை பார்த்து உள்ளே முதலாளியிடம் ஒரு சிலர் நிலைமையைப் புரியவைக்க அவர்களில் ஒருவனுக்கு அவசரமாய் அடைத்துக்கொண்டு வந்திருந்ததில் ஒதுங்கப் போனான். கழிவறையில் மஞ்சள் சுவர் பூச்சு போலக் கசந்து ஒழுகியதும் அந…
-
- 1 reply
- 956 views
-
-
தங்கரேகை புனிதவதி ரீச்சருக்குக் காதுகள் கொஞ்சம் மந்தம் எனச் சொல்லி ஆரம்பித்தான் கதைசொல்லி. புனிதவதியைத் தேடி வந்திருந்த விடுதலைப் புலிகள் சொன்னது அவருக்குச் சரியாகக் கேட்கவில்லை. எனினும் வந்திருந்த இருவரையும் பார்த்து ‘வாருங்கள்‘ என்பதுபோலத் தலையாட்டிச் சிரித்தவாறே அவர்களை வரவேற்றுவிட்டு, முற்றத்தில் இருந்த இரண்டு ப்ளாஸ்டிக் நாற்காலிகளைக் காட்டி வந்தவர்களை உட்காரச் சொன்னார் புனிதவதி. வந்தவர்கள் புனிதவதி ரீச்சரை உட்காருமாறு சொல்ல, எதுவும் பேசாமல் புனிதவதி தலையை ஆட்டிவிட்டு முற்றத்து மண்ணில் மெல்ல உட்கார்ந்துகொண்டார். புலிகள் நாற்காலியில் உட்காரத் தயங்கி நின்றார்கள். அவர்களில் ஒருவன் புனிதவதியை நாற்காலியில் உட்காருமாறு கையைக் காட்டி மறுபடியும் சொன்னான். அவனது …
-
- 0 replies
- 719 views
-
-
காலம்தோறும் - சிறுகதை சிறுகதை: வாஸந்தி, ஓவியங்கள்: ஸ்யாம் இன்னும் இருள் பிரியவே இல்லை. ஆனால், அருகில் இருந்த பூங்காவிலிருந்து கூட்டுக்குரலாகச் சிரிப்பலை வெடித்தது. அவளுக்கு வழக்கம்போல எரிச்சல் ஏற்பட்டது. அவர்கள் சரியான பித்துகள் அல்லது அசாதாரணமானவர்கள். சந்தேகமில்லை. அவர்களது சிரிப்பை வைத்து அவளால் நேரத்தைக் கணிக்க முடியும். 6:30 மணி. கோடைக்காலம் என்றால் யாரும் குறைகாணத் தேவையில்லை. நடுங்கும் குளிர்காலமாக இருந்தாலும் அது நேரம் தப்புவதில்லை என்பதில்தான் இருக்கிறது விஷயம். டெல்லி குளிர். இருள் விலகாதபோது, `இன்னும் கொஞ்ச நேரம்’ என, கண்களைத் திறக்க மனமில்லாமல் ரஜாய்க்குள் சுருண்டிருக்கும் வேளையில் அந்தச் சிரிப்பு. பூங்காவில் நடக்கும் யோகா வகுப்புக்கு …
-
- 0 replies
- 2k views
-
-
வெளியில் நடந்து செல்லணும் மகன் வெளிக்கிட நேரமாச்சு.. நானும் மனைவியும் நடக்கத்தொடங்கினோம்.. சிறிது நடந்தும் ஆளைக்காணவில்லை.. தொலைபேசி எடுத்தேன் வீட்டில் தான் நின்றிருந்தார் போய்க்கொண்டிருக்கின்றோம் ஓடிவா என்று விட்டு தொலைபேசியை வைத்தேன்.. மனைவி பேசினார் ஓடி வா என்கிறீர்கள் பிள்ளை ஓடி வந்து விழுந்துவிட்டால்.. அடிப்பாவி பொடிக்கு 22 வயசு பட்டதாரி எஞ்சினியர் பொத்திக்கொண்டு வா என்றேன்.. சத்தியமாக ஓடி வா என்று தொலைபேசியில் சொல்லிவிட்டு ஓடிவந்து விழுந்து விட்டால் என்று தான் சில செக்கனுக்கு முன் நானும் நினைத்தேன்............
-
- 9 replies
- 3.1k views
-
-
காலம் வெகு வேகமாக ஓடிவிட்டது போல் இருந்தது அவனுக்கு . சோமசுந்தரம் தன் தாய் நாட்டை விட்டு வெளியேறி இருபது வருடங்கள் . எல்லோராலும் " சோமு "என்று அன்பாக் அழைக்கபட்டவன். வீட்டுக்கும் ஊருக்கும் நல்ல பிள்ளை .காரணம் மூன்று பெண சகோதரிகளுக்கு இளையவனாக் பிறந்தவன். நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன் தந்தை அயலில் உள்ள பட்டணத்தில் , பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியர். வார இறுதியில் தான் வீட்டுக்கு வருவார். தாயார் வீட்டு வேலைகளை யும் மக்களையும் கவனித்து கொள்வார். பெண்கள் பள்ளியில் கவனமாய் படித்து .வந்தனர். .தாயார் ஆண்பிள்ளை என்று அவனில் மிகுந்த பாசம் வைத்தது இருந்தார். வேண்டியதெல்லாம் எப்படியாவது காசு சேர்த்து வாங்கி கொடுப்பார்.அவனுக்கு துணி துவைப்பது , அக்கா மார்தான். சில சமயம…
-
- 13 replies
- 1.8k views
-
-
ஊருக்குப் போனேன் - பாகம் 2 நயினைதீவை அடியாகக் கொண்ட அந்த இளைஞன், நான் வெளிநாட்டிலிருந்து வருகிறேன் எனப் புரிந்து கொண்டு கேள்விகள் கேட்க ஆரம்பித்தான். பின்னர், கேள்விகள் தீர்ந்து போனதோ என்னவோ, 23 வயது நிரம்பிய அவ்விளைஞன் தன் வாழ்க்கையைப் பற்றிக் கூறினான். வறுமைப்பட்ட குடும்பம், பெண்சகோதரங்கள், அவர்களின் திருமணம், இயக்கத்தில் இறந்து போன தம்பி ... ஓ ! சபிக்கப்பட்டவர்களே. சபிக்கப்பட்டவர்களே ! எப்போதுதான் உங்கள் சிறுமைகளை விட்டொழிவீர்கள் ? எப்போதுதான் பெண்களுடன் பிறக்கும் ஆண்களுக்கு விடுதலையளிப்பீர்கள் ? எப்போதுதான் பெண்களைச் சீதனம் வாங்கி "வாழ்வு கொடுக்கும்" பண்டங்களாகக் கருதாது விடுவீர்கள் ? சீதனம் கொடுக்கச் சொத்துத் தேடப் பரதேசம் போனவர்களே, உங்களில் எத்தனை பேர் நீங்…
-
- 4 replies
- 1.7k views
-