கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
அப்பா.. ஐவர்.. ஆழம்... - நீலவன் அப்பாவின் போக்கு யாருக்கும் பிடிக்கவில்லை. விளங்கினால் தானே பிடிக்கும்? போனவாரம் ஒருநாள் இரவு பத்துமணிக்குத் திடீரென்று சொல்லிக் கொள்ளாமல் போனவரை இன்னும் காணோம். ஆறுமாதங்களில் அப்பா இப்படி ஒரேயடியாய் மாறிப்போய் விட்டார். அதற்கு முன்னால்? அவரது 'டியர்' இருந்தாள்- அம்மா தான்! அவள் கிழித்த கோட்டை அவர் தாண்ட மாட்டார். அவள் போவதற்குப் பத்து தினங்களுக்கு முன்புதான் தன்னுடைய உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றார். வாழ்க்கையில் எது தான் கவனமும், முன்னெச்சரிக்கையும் கலந்த ஒத்திகை போல் நிகழ்கிறது? …
-
- 1 reply
- 751 views
-
-
இரவு நேர புழுக்கம் நித்திரையை தாலாட்டாமால் எழுப்பியது.இப்படி கொஞ்சநாளாக ..கொஞ்ச காலமாக ஏதோ எனக்கு வந்து கதை சொல்லுவது போல பிரமை .அதுவும் மற்ற நேரம் காலம் இல்லாது இரவு பன்னிரண்டு மணி அடித்து முடிந்த கையோடை தொடங்கி விடும்.காலில் இருந்து உடம்பில் வழியாக ஊர்ந்து வந்து தலை வழி ஏறி பிடரி பக்கம் சென்று இனம் புரியாத சங்கீத மொழியில் ஏதோ சொல்ல தொடங்கி விடும். இதோ தொடங்கி விட்டது.அக்கம் பக்கம் என்னையறியாமால் புரள்கிறேன் ,கவிழ்கிறேன் நிமிர்கிறேன் பிறகு படுக்கிறேன்..தலையை ஆட்டுகிறேன்.பிறகு புரள்கிறேன்..ஏதோ றிமோட் கருவியினால் யாரோ இயக்க அவர்களின் கட்டளைகளை உடனுக்குடன் நிறேவற்றுவது போல் நிறேவேற்றி கொண்டிருக்கிறேன். எனக்கே ஆச்சரியமாய் இருக்கிறது .நான் செய்து கொண்டிருப்பதை நானே மூன…
-
- 1 reply
- 898 views
-
-
எட்டாவது திரை - தெய்வீகன் அடைமழை பொழிவது எல்லாத் திரைகளிலும் தெரிந்தது. ஒரு சில துளிகள் கமராக்களின் கண்களில் தெறிந்து விழுந்து வீங்கிப் பின் வடிந்தன. நகரத்தின் வாகன நெரிசல் பெரும்பாலும் அத்தனை திரைகளிலும் நிறைந்திருந்தது. எனக்கருகிலிருந்த தொலைத்தொடர்பு ரேடியோ கருவண்டு போல அவ்வப்போது இரைந்து முனகியது. பாதுகாப்பு அதிகாரிகளின் குரல்கள், அந்த ரேடியோவில் விழுவதும் ஓய்வதுமாயிருந்தன. களத்திலிருந்து உத்தியோகத்தர்கள் அறிவித்த சங்கேதக் குரல் வழியான செய்திகளுக்குப் பதில் கொடுத்தேன். அதனை பதிவேட்டில் நேர விவரத்தோடு எழுதினேன். “Spring Street Security vehicle moving” கட்டுப்பாட்டு அறையிலுள்ள பெருந்திரைக்கு மேலுள்ள மணிக்கூட்டில் சரியாக மாலை ஐந்து மணி காண்பித்தது. முன்னைய இரவுப் பணியின் …
-
- 1 reply
- 445 views
-
-
சாமர்த்தியம் ‘‘அக்கா... போன்ல அத்தான்...’’ என்றபடி போனை கவிதா விடம் நீட்டினாள் வசந்தி. ‘‘என்னங்க..?’’ ‘‘காபிக்கு எத்தனை ஸ்பூன் சுகர்... பால், தண்ணீர்... கொஞ்சம் சொல்லேன்..?’’ கவிதாவின் கணவர் முருகராஜ். ஹோட்டல் சாப்பாடு சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. அதனால் கவிதா வெளியூர் செல்லும்போதெல்லாம் இப்படி கேட்டுக் கேட்டாவது செல்ஃப் குக்கிங்தான். பதில் சொல்லிவிட்டு போனை வைத்தாள் கவிதா. தொடர்ந்து காலை டிபன், மதிய சாப்பாடு, இரவு உணவு என்று அவ்வப்போது ரெசிபிகளையும் கணவனுக்குச் சொல்லிக்கொண்டே இருந்தாள். கேட்டுக் கொண்டு இருந்த வசந்திக்கு ஒரு சந்தேகம்.. ‘‘ஏன்க்கா நீ சொல்ற அளவெல்லாம் வித்தியாசமா இருக்கே... இப்படியா நீ சமையல் பண்றே..?’’ ‘‘இல்லடி... இது அவருக்கான அளவு.…
-
- 1 reply
- 1.7k views
-
-
ஒட்டக மொழி சஞ்சயன் செல்வமாணிக்கம் இணைப்பு: http://visaran.blogspot.in/2014/03/blog-post_16.html வாழ்க்கை பல மனிதர்களை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் தங்களின் நினைவுகளை, தாக்கங்களை என்னுள் செதுக்கிவிட்டே கடந்துபோகிறார்கள். மனிதர்களின் மனம் என்னும் இரகசியப் பெட்டியினுள் பலரின் நினைவுகளும் உரையாடல்களும் சம்பவங்களும் ரகசியமாகத் தமக்குள் உரையாடியபடியே உலாவித் திரிகின்றன. சிலர் அவற்றில் சிலவற்றை என்னிடம் நம்பிப் பகிர்ந்துபோகிறார்கள். நான் அவர்கள் தந்துபோனவற்றைச் சுமந்து திரிகிறேன்; சுகமான சுமை அது. இன்னொரு மனிதனின் நம்பிக்கையைப் பெறுவதும், அவன் பாதுகாப்புணர்வுடனும் நம்பிக்கையுடனும் என்னை அணுகுவதும் பரம ரகசியங்களைப் பகிர்வதும் மனத…
-
- 1 reply
- 1k views
-
-
தாவரங்களின் உரையாடல் – எஸ்.ராமகிருஷ்ணன் “தி கிரேட் கோஸ்ட்” கப்பல் மூலம் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்துகொண்டிருந்த ராபர்ட்ஸன், உடன் வந்த எந்த ஒரு கிழக்கிந்திய கம்பெனி அதிகாரியுடனும் உரையாடுவதையோ, மது அருந்துவதையோ தவிர்த்து தன் அறைக்குள் நாள் எல்லாம் நிலவியல் வரை படத்தை ஆராய்ந்தவாறே, பதினோரு நாள்கள் பயணம் செய்த போது இந்திய மலைச் சரிவுகளிலும், குறிப்பிட்ட குடும்பங்களாலும் வளர்க்கப்பட்டு வரும் விசித்திரத் தாவரங்கள் பற்றியும் சங்கேதச் சித்திரங்களால் உருவான தாவர வளர்முறை பற்றிய குறிப்புகளையும், கிரகண தினத்தன்று தாவரங்கள் தங்களுக்குள் நடத்தும் உரையாடலை அறியும் சூட்சும சமிக்ஞைகள் குறித்தும் வியப்பும் பயமுமாக அறிந்தபோது, மீட்பரின் பண்டிகையான கிறிஸ்துமஸ் பிறந்து கம…
-
- 1 reply
- 907 views
-
-
1985 நடந்த திம்பு பேச்சுவார்த்தைக்கு முன்பு இந்தியா இவங்களை எல்லாம் கூப்பிட்டு பேசிய பொழுது எடுத்த வீடியோ.இது. இந்த வீடியோவில் உள்ளவர்கள்-ரொமேஷ் பண்டாரி (முன்னாள் வெளிவிவாகர செயலாளர் குர்தீப் சகாதேவ் (Asst.forign secreetary) – சம்பந்தன் (TULF) சிவசிதம்பரம் (TULF) – அமிர்தலிங்கம் (TULF) – உமாமகேஸ்வரன் (PLOTE) – வாசுதேவா (PLOTE) – வெற்றிச்செல்வன் (PLOTE) – கனகராஜா (PLOTE) – யோகி (LTTE) – லோரன்ஸ் திலகர் (LTTE) – பிரபாகரன் (LTTE) – ரட்ணசபாபதி (EROS)- பாலகுமார் (EROS)- – றொபர்ட் (TELO) – சிறீ சபாரட்னம் (TELO) – ? – ? – பத்மநாபா (EPRLF) – கேதீசுவரன் (EPRLF) – சாந்தன் (EPRLF) ( இவர்களில் அநேகர் இன்று உயிரோடு இல்லை) இந்த வீடியோவை இணைக்க அனுமதியும் மற்றும் தகவல்களும்…
-
- 1 reply
- 1.1k views
-
-
மங்கை பதிப்பகம் (கனடா), ஸ்நேகா பதிப்பகம் (தமிழ்நாடு) இணைந்து வெளியிட்ட அமெரிக்கா தொகுதியானது 'அமெரிக்கா' என்னும் நாவலையும் (அளவில் சிறியதானாலும் இது நாவல்தான்) , சில சிறுகதைகளையும் உள்ளடக்கிய தொகுதியாகும். இவை அனைத்துமே 'பொந்துப்பறவைகள்' மற்றும் 'மான் ஹோல்' தவிர , கனடாவிலிருந்து வெளியான 'தாயகம்' பத்திரிகை, சஞ்சிகையில் பிரசுரமானவை (தாயகம் ஆரம்பத்தில் பத்திரிகையாகவும் , பின்னர் சஞ்சிகையாகவும் வெளியானது). முதற் பதிப்பின்போது ஒழுங்காக சரி, பிழை பார்க்காமல் போனதால் பல எழுத்துப்பிழைகள் ஏற்பட்டு விட்டன; சில வசனங்கள் விடுபட்டுப்போயின, மேலும் இந்நாவல் ஈழத்துத்தமிழ் அகதிகள் சிலரின் நியூயார்க்கிலுள்ள சட்ட விரோதக் குடிகளுக்கான தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்குமொரு நாவல். இந்நிலையில்…
-
- 1 reply
- 1.6k views
-
-
நட்புத் தேவதையே... "நித்யா... நீங்க கண்டிப்பாய் போய்தான் ஆகமணுமா...?" "ஆமா சந்துரு...வேற வழி இல்லை. என்னோட சூழ்நிலை அந்தமாதிரி" நிதானமாய் ஏறெடுத்து நோக்கினான் சந்துரு. "சந்துரு...அப்பாவுக்கு நிறைய கடன் சுமை. தம்பி, தங்கையோட படிப்புச் செலவு. இப்படி நிறைய...அதனால நான் போய்தான் ஆகணும்." நித்யா...என்னோடு வேலை செய்யும் அன்புத் தோழி. அறிவு, அழகு, திறமை, தைரியம் அனைத்திற்க்கும் சொந்தக்காரி. எல்லாம் இருந்தும் அடக்கத்தை மட்டும் ஆட்சி செய்யும் இளவரசி. என்னை போன்ற ஒருவனுக்கு கிடைத்த அபூர்வ தோழி. உண்மைதான். நித்யாவைப் பற்றி எதைச் சொல்வது!! என் கவிதை எழுத்துக்களை அதிகம் நேசிப்பதை சொல்வதா..? இல்லை என் மன வருத்தத்திற்கு நம்பிக்கை வார்த்தைகளை மருந்தாய் கொ…
-
- 1 reply
- 1.1k views
-
-
அப்பா முகத்தில்... வீடு எப்படி அமைய வேண்டும் என்று அண்ணன், அண்ணி, தம்பிகள், தங்கைகள் எல்லோருடைய கருத்துகளையும் சேர்த்து ஒரு பிளான் வரைந்தார்கள். கடைசியாக அப்பாவிடம் கொண்டு காட்டி, ‘‘அப்பா, இது சரியான்னு பாருங்க. ஏதாவது மாற்றம் இருந்தால் செஞ்சுக்கலாம்’’ என்றார் அண்ணன். அப்பா சிறிது நேரம் பார்த்துவிட்டு, ‘‘எல்லாம் சரிதான். முன் பக்கத்தில் மட்டும் முடிந்தால் கொஞ்சம் கார்டன் போட இடம் விடுங்கள். பூச்செடிகள் வைத்து, சாமிக்குப் பறிச்சுப் போடலாம்’’ என்றார். ‘‘சரிப்பா! அப்படியே பண்ணிடலாம்!’’- அண்ணன். தனிமையில் அண்ணனிடம…
-
- 1 reply
- 936 views
-
-
வலசை – கார்த்திக் பாலசுப்ரமணியன் நாங்கள் இந்த அப்பார்ட்மண்ட்டுக்கு குடிவந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. பூரணிக்கு ஃபிளைட் டிக்கெட் உறுதியானவுடன் முதல் காரியமாக வீடு பார்க்க ஆரம்பித்துவிட்டேன். சிட்னியில் நினைத்தவுடன் வீடு அமைவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதுவும் ஹோம்புஷ் போன்று இந்தியர்கள் அதிகம் தங்கியிருக்கும் இடங்களில் கிடைப்பது இன்னுமே கடினம். இந்தப் பகுதியைச் சுற்றி ஈழத் தமிழர்களும் வசிக்கிறார்கள். இந்த அப்பார்ட்மண்ட்டிலிருந்து நடந்து போகும் தொலைவில் ஒரு இந்தியன் ஸ்டோர் இருக்கிறது. இந்தியச் சமையலுக்குஉகந்த அத்தனை மளிகைப் பொருட்களும் அங்கே கிடைக்கும். அரிசி, பருப்பு, சர்க்கரையிலிருந்து குங்குமம்,சந்தனம் பத்தி முதலான பக்திப் பொருட்கள் உட்பட எல்லாமும் கிடைக்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
மாங்குடி மைனர் - சிறுகதை சிறுகதை: பாக்கியம் சங்கர், ஓவியங்கள்: ஸ்யாம் `மாங்குடி மைனர் இறந்துவிட்டார்' என்றது பேட்டை வாழ் பெருமக்களுக்கு அத்தனை மகிழ்வானதொரு செய்தியாகத்தான் இருந்தது. முக்கியமாக மைனரின் மூன்று மனைவிகளுக்கும் நெஞ்சம் குளிர்ந்து, முகம் ஒருவிதப் பூரிப்படைந்திருந்தது. தனது எண்பத்திரெண்டு வயதில் இத்தனை ஆன்மாக்களை சந்தோஷமடையச்செய்த மாங்குடி மைனர், பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்தபடி முறுக்கிய மீசையில் ஜபர்தஸ்தாக காட்சியளித்்தார், அகன்று விரிந்த முகத்தில் பட்டையைப் போட்டு நடுவில் வட்டமாகப் பொட்டு வைத்திருந்தனர். டுப்பு டுப்பு என்று ஒய்யாரமாக வலம் வந்துகொண்டிருந்த மைனரின் புல்லட்டை பேரன்களும் பேத்திகளும் ஏறிக்கொண்டு ஓட்டுவதாகப் பாவனை செய்து கொண்டிருந…
-
- 1 reply
- 4k views
-
-
நன்றி நிவேதாவுக்கு வெறுத்துப் போயிற்று. சமையலில் அவள் கெட்டி. தன் குடும்பத்தினருக்காக ஒவ்வொரு நாளும் எதையாவது புதுசு புதுசாகச் செய்ய வேண்டுமே என பதைபதைப்பாள். அதில் தன் திறமை முழுவதையும் காட்டி சுவை கூட்டுவாள். அவள் புத்தக கலெக்ஷன் முழுவதுமே சமையல் கலை புத்தகங்களால் நிரம்பி வழியும். ஆனாலும் என்ன? ஒரு சின்ன பாராட்டுகூட கிடைக்காது! இன்று அவள் பார்த்துப் பார்த்து செய்த அரிதான ரெஸிபி... சாப்பிட்ட யாருமே ‘‘நல்லா இருக்கு’’ என வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. கணவன் சாப்பிட்டு கை கழுவிய வேகத்தில் ஆபீஸ் கிளம்பிப் போய் விட்டான். குழந்தைகள் இருவரும் வேகவேகமாக அள்ளிப் போட்டுக்கொண்டு பள்ளிக்கு ஓடிவிட்டனர். மாமியாரும் சாப்பிட்டு முடித்தவுடன் அரட்டை அடிக்க பக்கத்த…
-
- 1 reply
- 1.8k views
-
-
-------------------------------------------------------------------------------- தினச்செய்தி (சிறுகதை)[/b] தினச்செய்தி தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவிலே மிகவும் பிரபலமான தமிழ் நாளிதழ். நகரம், கிராமம்,குக்கிராமம், மலைகிராமம், சந்து,இண்டு,இடுக்கு என்று அனைத்து இடங்களிளும் தினச்செய்தி நாளிதழ் தான். எந்த டீக்கடையாக இருந்தாலும் பால், பாய்லர், டீ மாஸ்டர் இருப்பதுப் போல கண்டிப்பாக தினச்செய்தி நாளிதழும் இருக்கும். மழையாக இருந்தாலும் சரி, புயலாக இருந்தாலும் சரி, பூகம்பமாக இருந்தாலும் சரி, தினச்செய்தி கண்டிப்பாக மக்களை சேரும். மக்களும் தினச்செய்தியை காலையில் படித்தால் தான் அன்றைய தினம் அவங்களுக்கு தொடங்கும். அந்த அளவிற்க்கு தினச்செய்தி மக்களுடன் பல வருடங்களாக ஒன்றி விட்டது. …
-
- 1 reply
- 1.2k views
-
-
நல்லவர் ‘‘அப்பா, நான் ஆபீஸ்ல ஒருத்தரை லவ் பண்றேன். அவர் ரொம்ப நல்லவர்!’’‘‘ம்...’’‘‘முதல்ல கோயிலுக்குப் போகலாம்னு சொல்லிட்டு என்னைக் கூட்டிட்டுப் போனார். போன் பண்ணி அவர் அம்மாவையும் வரச்சொல்லியிருக்கார். அவ்வளவு டீசென்ட்டான டைப் அவர்...’’‘‘ம்...’’ ‘‘சினிமாக்குப் போகலாம்னு சொல்லிட்டு அவர் தங்கையையும் கூட கூட்டிட்டு வந்து எங்க ரெண்டு பேர் சீட்டுக்கும் நடுவுல அவளை உட்காரச் சொன்னார். ஹி ஈஸ் எ ஜென்டில்மேன்!’’ ‘‘ம்ம்...’’ ‘‘நீ முதல்ல உங்க அப்பாகிட்ட பேசு! அவர் ஒத்துக்கிட்டா முறைப்படி எங்க வீட்ல எல்லாரையும் கூட்டிக்கிட்டு முறைப்படி வந்து பேசறேன்னு கண்ணியமா சொன்னார், தெரியுமா?’’‘‘ம்ம்ம்...’’ ‘‘என்னப்பா இது? நான் பாட்டுக்கு அவரைப் பத்தி சொல்லிக் கிட்டே போறேன்.…
-
- 1 reply
- 1.6k views
-
-
ஒன்ராறியோவிற்குள் பயணித்தல் இளங்கோ-டிசே பயணம் செய்தல் என்றவுடன் பலருக்குத் தொலைதூரங்களுக்குப் பயணிப்பதைப் பற்றிய ஒரு விம்பமே எழும். ஆனால் வீட்டை விட்டு வெளியேறிப்போகும் எந்தப் பாதையுமே அது இதமான ஒரு மனோநிலையைத் தருமென்பதைப் பலர் மறந்துவிடுகின்றார்கள். ஒன்ராறியோ மாகாணத்தில் வசிக்கும் நமக்கு இன்னொரு நாட்டிற்கோ அல்லது இன்னொரு மாகாணத்திற்கோ சென்றால் மட்டுந்தான் நிறையப் புது இடங்களைப் பார்க்கலாம் என்கின்ற ஓர் எண்ணமுண்டு. அதில் ஒரளவு உண்மை இருந்தாலும் ஒன்ராறியோவிற்குள்ளே ஒரு நாளுக்குள்ளேயே பார்ப்பதற்கு நமக்கு நிறைய இடங்கள் உண்டென்பதைப் பலர் மறந்துவிடுகின்றோம். எல்லோருக்குந் தெரிந்த நயாகரா நீர்வீழ்ச்சி, சிஎன் ரவர் போன்ற சுற்றுலாப் பயணிகள் குவியும் இடங்களை …
-
- 1 reply
- 957 views
-
-
ஒரு நிமிடக் கதை: படிப்பு வழக்கம் போல் அந்த இட்லி கடையில் நல்ல கூட்டம். காரணம், ருசி, சுகாதாரம் மட்டுமல்ல.. அங்கு வேலை செய்யும் அந்த இளவயசுப் பையனும்தான். கில்லி மாதிரி சுழன்று, சாப்பிட வருபவர்களையும், பார்சல் வாங்கிப் போகிறவர்களை யும், மின்னல் வேகத்தில் கவனித்து இன்முகத்துடன் அனுப்பி வைப்பான். இட்லி வாங்க வந்த பெரியவர் ஒருவர், பையனைப் பற்றி கடை முதலாளியிடம் விசாரிக்கத் தொடங்கினார். “என்ன சம்பளம் குடுப்பீங்க.. இந்த பையனுக்கு..?” “எனக்கு கிடைக்கிற சொற்ப லாபத்துல என்னத்த குடுத்துடப் போறேன். சாயந்திரம் 7 மணியிலிருந்து 10 மணி வரை வேலை. போகும் போது இங்கேயே சாப்பிடச் சொல்லிட்டு,கையில் 5…
-
- 1 reply
- 1.5k views
-
-
நிரஞ்சனி நிரஞ்சன், நிரஞ்சனி. நல்ல பெயர் பொருத்தம் என்றுதான் வீட்டில் அனைவரும் சொன்னார்கள். ஆனால் வாழ்க்கை அப்படி ஒன்றும் பொருத்தமாக போய்விடவில்லை என்றே நிரஞ்சன் எண்ணினான். திருமணமாகி இன்றோடு சரியாக இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. சம்பிரதாயமாக திருமணநாளைக் கொண்டாடிவிட்டு தான் பணியாற்றிய படத்தின் இசை வெளியீட்டிற்கு கிளம்பினான். அவன் காரில் ஏறப்போகும் போது, நிரஞ்சனி வாசலிலேயே நின்றுக் கொண்டிருப்பதைக் கவனித்தவன், ""என்ன?'' என்றான். "" வரும் போது ஏதாவது வாங்கிட்டு வா...'' நிரஞ்சனி சொன்னாள். ""ஏதாவதுனா...?'' ""ஒண்ணுமில்ல'' என்றவாறே உள்ளே ஓடிவிட்டாள். சிறிது நேரம் அவள் செல்வதை…
-
- 1 reply
- 1k views
-
-
கொங்கை – ஜ.காவ்யா செல்போன் அலாரம் அடித்தது. எப்பொழுதும் ஒன்று இரண்டுதடவை ச்நூஸ் அழுத்திய பின்னே எழுந்திருக்கும் மீனுகுட்டி அன்றைக்கு உடனே எழுந்துவிட்டாள். எழுந்தவுடன் படபடப்பு கூடிகொண்டது. இதை இன்று செய்தே ஆக வேண்டுமா என்று யோசித்தாள். மேலும் யோசித்தால் செய்யாமல் போய்விடுவோமோ என்ற அச்சத்தில் படுக்கையில் இருந்து எழுந்து கிளம்ப தொடங்கினாள். இன்ஜினியரிங் முடித்துவிட்டு சென்னையில் தனியாக வீடு எடுத்து வேலைக்குச் சென்று கொண்டிருந்தாள். காலையில் எழ எப்பொழுதும் தாமதமாகி அவசர அவசரமாக கிளம்பி ஸ்கூட்டி எடுத்துக்கொண்டு அலுவலகம் செல்வது வழக்கம். காலையில் எதைப்பற்றியுமே யோசிக்க நேரமிருக்காது மீனுகுட்டிக்கு. மாறாக இன்று யோசிப்பதைத்தவிர எதுவுமே அவள் செய்யவில்லை. மெதுவாக சென்று சு…
-
- 1 reply
- 1.6k views
-
-
மனவலி யாத்திரை.....! (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்) அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அவனது குரல் அழைக்கிறது. விழிப்புலனில் சிக்காத முகம் ஆனால் அந்தக்குரல் மட்டும் தெளிவாகக் கேட்டது. திடுக்கி…
-
- 1 reply
- 12.4k views
-
-
மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்." ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்.. அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது. வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு .... ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை நடந்து சென்றே... ரெகுலராக ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம் முருங்கை காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார்! ராமசாமி கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம்! இதை பய…
-
- 1 reply
- 1.5k views
-
-
http://www.youtube.com/watch?v=yl7bif0d7Vc நீயா நானா நிகழ்ச்சியில் பங்கு பற்றிய வைரமுத்து புரட்சி பெண்ணோ அல்லது புதுமை பெண்ணோ அல்ல, சாதாரணமான யதார்த்தமான பெண் தான்..அங்கு பங்கு பற்றிய வைரமுத்து திரைபடங்களில் உருவகபடுத்துகின்ற பெண்ணொன்று புயலாகிறது என்ற புரட்சி பாணியில் இல்லை தான்.மேலும் தொடர்புசாதனங்களினால் உருவகபடுத்தபட்டு உரு கொண்டு இருக்கும் நகர் புற பெண்களின் தங்களுக்குள் கொண்டிருந்த பொய்மையான ஆளுமையை அதில் உடைத்து எறிந்து இருக்கிறார் அவ்வளவு தான் அந்த நிகழ்ச்சியை மட்டும் பொருத்தவரையில் .அதை விட்டு விட்டு நகர் புற பெண்கள் இழந்த பண்பாடு கலாச்சாரம் அடக்கம் வெட்கம் அச்சம் போன்றவற்றை வைரமுத்து அதில் காட்டிவிட்டார்.அதனால் இந்த வைரமுத்து ஆஹோ ஓஹோ என்று புகழ்ந்த…
-
- 1 reply
- 2.1k views
-
-
கடவுள் கடவுள் ம.வே.சிவகுமார் இ ரண்டு நாட்களாகவே அந்தக் கருப்புப் பூனை இரவில் நான் உறங்கிக்கொண்டு இருந்த அறைக்கு வந்துகொண்டு இருந்தது. இருட்டில் தொப்பென்ற சப்தத்தில் கனவு கலைந்து நான் திடுக்கிட்டு கண் விழிப்பேன். காலடியில் மெத்தென்று பூனை இடறும். இன்னதென்று புரியாத கலவரத்தில் சுவரில் துழாவி விளக்கைப் போடுவேன். வெளிச்சம் பழகுவதற்குள் பூனை கட்டிலுக்கடியே போயிருக்கும். பயத்தில் வியர்க்கும். ஒரு சந்தேகத்தில் கட்டிலுக்கடியே குனிந்து பார்ப்பேன். அந்தக் கருப்…
-
- 1 reply
- 2.7k views
-
-
காமத் தாழி - சி. சரவணகார்த்திகேயன் சாகஸ ராத்திரி!அந்தப் பெயரே ஜிலீர் என்றிருந்தது சில்வியாவுக்கு. ADVENTURE NIGHT என்று காப்பர் ப்ளேட் கோத்திக் எழுத்துருவில் அச்சிடப் பெற்ற அந்த நுழைவுச் சீட்டை எடுத்தாள். முகமூடி, மதுக்கோப்பை, வாண வேடிக்கைக்கிடையே Happy New Year’s Eve – 2018. ₹ 1,00,000 என்றிருந்த பொன்ஜிகினாப் புடைப்பை விரல்களால் ஆதூரமாய்த் தடவினாள். பார்த்திபன் முதலில் அதைச் சொன்ன போது விளையாடுகிறான் என்றே நினைத்தாள்.“ச்சீய்… போடா பொறுக்கி!”அவன் எப்போதும் அப்படித்தான். ஆபாசமாய்ப் பேசிச்சிரிக்க வைப்பதில் அசகாயசூரன். சில்வியா திருமணமாகி இவ்வூருக்கு வந்து இரண்டரையாண்டுகள் ஆகின்றன. மொழி தெரியாத மிலேச்சர்கள் சூழ வாழும் அந்த அந்நியப் பிரதேசத்தில் ஒவ்வொரு பகலும…
-
- 1 reply
- 2k views
-
-
வாதாபியை விழுங்கிய அகத்தியனின் தொப்பையாக.. ஆலகால விடத்தையுண்ட சிவனின் தொண்டைக்குழி போல மேனி கறுத்து.. பகலை விழுங்கி ஏப்பம் விட்டபடி இருண்டு கிடந்தது இரவு. ஆங்காங்கே சில்வண்டுகளின் சிங்கார ராகம்.. பாம்புகளின் ‘கிறிச்..கிறிச்’ சத்தம். ஊமத்தங்கூவைகளின் உறுமல் ஓசை.. அவள் தன் வாழ்நாளில் தனியாக இருளில் நடந்ததே கிடையாது. இன்று… தன்னந் தனிவழியே காட்டு நிலமேறி.. சுடலை வழிதாண்டி குளங் குட்டை - கோயில் வெளி கடந்து நின்று நிதானிக்க நேரமின்றி வேகமாக… மிகவேகமாக குன்றுங் குழியும் குறுக்கு வழியுமாக… இத்தனை இடம் தேடியும் கண்ட பலன் ஏதுமில்லை. குளக்கரையில் விழி அகலத் திறந்தாள் சுற்றிலெங்கும் நோட்டம் விட்டாள். மருதமரத்தின் அடி முதல் …
-
- 1 reply
- 914 views
-