கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
அரம்பை - ஷோபாசக்தி நான் மாலையில் வீடு திரும்பும்போது, என்னுடைய குதிரை வண்டிக்குக் குறுக்கே சென்ற குடிகாரர்கள் இருவரை வண்டிச் சாரதி சவுக்கால் அடித்துவிட்டான். “இறைவனால் கட்டப்பட்ட இலண்டன் நகரம் இப்போது குடிகாரர்களதும் போக்கிரிகளதும் சத்திரமாகிவிட்டது” எனச் சலிப்பாகச் சொல்லிக்கொண்டே, இரட்டைக் குதிரைகளை அவன் விரட்டினான். விடிந்தால் 26-ம் தேதி ஜூலை 1833. பிரிட்டிஷ் சாம்ராஜியத்தின் வரலாற்றில் மிக முக்கியமான நாள். எங்களது காலனிய நாடுகளில் அடிமை முறையை ஒழிப்பதற்கான மூன்றாவது சட்டவாக்க வரைவு நாடாளுமன்றக் கீழவையான பொதுச்சபையில் விவாதத்திற்கு வரயிருக்கிறது. இம்முறை இந்தச் சட்டம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் ஒப்புதலோடு நிறைவேறுவதற்கு எல்லா வாய்ப்புகளுமுள்ளன. ஆனால், இல…
-
- 1 reply
- 1k views
-
-
நட்சத்திரங்களை ருசிப்பவர்கள் - பா.திருச்செந்தாழை விநோதங்களின் முதல் விதியின்படி, நீங்கள் வாசித்துக் கடந்த செய்தித்தாளின் கீழ் விளிம்பில், அந்தச் சிறு சதுரத்தில் நோயுற்ற காகம் போல மௌனத்திலிருந்த எழுத்துகள், என்னை மட்டுமே தெரிவு செய்தன. ‘பறக்கும் கம்பளத்தில் வாழ விருப்பமா?’ அதனருகே பச்சை மாமிசத்தின் உறைசிவப்பிலிருக்கும் மேப்பிள் இலையும், அதன் நடுவே ஆழ்துயிலிலிருக்கும் ஒரு வெண்கம்பளிப்பூச்சியின் படமும் இலச்சினைப் போல மிளிர்ந்தன. விநோதங்களின் இரண்டாவது விதியின்படி, அந்த வீட்டை வடிவமைத்தவர் குறித்த தெளிவான தகவல்கள் இல்லை. இருந்தும் இல்லாததாய் கவனப்பிசகில் பதுங்குகின்ற சில இடங்களைப்போல, தனித்துவிட்ட அந்த மிக உயரக் கட்டடத்தின் மொட்டைமாடியின் நடுவே, ஒரு …
-
- 0 replies
- 1k views
-
-
மான்டேஜ் மனசு 19: லன்ச் பாக்ஸ் - மதிப்புமிகு மாற்றுக் காதல்! அலுவலகப் பணிகள் முடிந்து வீட்டுக்கு கிளம்பத் தயாராக இருந்த தருணம் அது. குணசேகரன்தான் செல்போனில் அழைத்தார். ''குடும்பஸ்தன் ஆன பிறகு மேன்ஷனையே மறந்திட்டியே டா...'' ''அப்படில்லாம் இல்லை பெருசு... ஒருநாள் கண்டிப்பா வர்றேன்.'' ''இப்படியே எத்தனை நாளைக்குதான் சமாளிப்ப... இன்னைக்கு ஃப்ரீயா..?'' ''ஹ்ம்ம். நீங்க எங்கே இருக்கீங்க?'' அடுத்த அரை மணி நேரத்தில் திருவல்லிக்கேணியில் ஒரு மேன்ஷனில் குணசேகரனை சந்தித்தேன். சம்பளம் போட்ட தினம் என்பதால் குணசேகரன் நண்பர்களுடன் உற்சாகமாகப் பேசிக்கொண்ட…
-
- 0 replies
- 1k views
-
-
மைக்கேல் மைக்கேல் வா ழ்க்கையில் சந்திக்கும் அனைவரது முகமும் நமக்கு நினைவில் இருப்பதில்லை. ஆனால், நெருக்கமான நட்போ, உறவோ இல்லாத நிலையிலும் சிலரது முகம் எந்தக் காரணமும் இல்லாமல் அடிக்கடி ஞாபகத்தில் வந்துகொண்டே இருக்கும். எனக்கு அப்படி மறக்கமுடியாத முகம் மைக்கேலின் முகம். ‘‘பாக்க றவன் எல்லோருமே கொஞ்ச தொலவு போயிட்டுத் திரும்பிப் பாக்குறான். இது இன்னா, மனுஷனா கொரங்கா... அதுக்குத்தான பாக்குறாங்க..?’’ என்று பேசியதுதான் அவனுடைய முத்திரை. டக்கென்று என் மனசில் அவனுக்…
-
- 0 replies
- 1k views
-
-
ஹெச். எச். ஆண்டர்சன் (1837) பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு அரசன் இருந்தான், அவர் அணிகலன்கள் மற்றும் புதிய ஆடைகளை உணர்ச்சியுடன் விரும்பி, தனது பணத்தை அதற்கே செலவழித்தார். அவர் தனது வீரர்களிடம் வெளியே சென்று, ஒரு புதிய உடையில் காட்டுவதற்காக மட்டுமே தியேட்டருக்கு அல்லது காட்டுக்குள் ஒரு நடைக்குச் சென்றார். நாளின் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அவர் ஒரு சிறப்பு கேமிசோலை வைத்திருந்தார், மேலும் ராஜாக்களைப் பற்றி அவர்கள் சொல்வது போல்: "ராஜா கவுன்சிலில் இருக்கிறார்", எனவே அவர்கள் எப்போதும் அவரைப் பற்றி சொன்னார்கள்: "ராஜா டிரஸ்ஸிங் அறையில் இருக்கிறார்." ராஜா வாழ்ந்த நகரம் பெரியதாகவும், கலகலப்பாகவும் இருந்தது, அதனால் ஒவ்வொரு நாளும் வெளிநாட்டு விருந்தினர்கள் வருகிறார்கள், ஒ…
-
- 2 replies
- 1k views
-
-
என்ன ஆதங்காக்கா ...? இண்டைக்கு இரண்டு போத்தல் தயிர் எடுக்கலாமா, சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்த எருமைகளை தா ...தா என்று தள்ளிக்கொண்டு வந்த ஆதமிற்கு இடது காது ஸ்பீக்கர் கொஞ்சம் அவுட், ஆதமும் ங்கே என்று முழுச.. இரண்டு போத்தல் தயிர் ....தயிர் என்று பலங்கொண்டமட்டும் கத்தினார் கணேஸ், கணேசின் கதறலை கேட்டு பக்கத்துவீட்டு ராஜன் தெருவிற்கு வேடிக்கை பார்க்க ஓடிவர, கணேசின் குரல் ரகசியம் பேசுவதை போல் ஆதமிற்கு கேட்டது, எப்படியோ கணேஸ் சொல்லவந்ததை விளங்கிக்கொண்ட ஆதம், ஓவ் ...ஓவ்வ் ...கொண்டாரன்...ஹா என்று விட்டு பட்டியை விட்டு விலக எத்தனித்த எருமை கன்று ஒன்றை கையிலிருந்த இப்பில் கம்பைவைத்து தட்டி மீண்டும் பட்டியை மேய்த்துக்கொண்டு தெரு முனை சந்தியை நோக்கி முழு எருமை பட்டியையும் …
-
- 1 reply
- 1k views
-
-
வாசகியாயிருத்தல் மோகனா இசை படுக்கை வசதி கொண்ட பேருந்திலேயே சென்று பழக்கப்பட்டதால் இருக்கை வசதி கொண்ட பேருந்தும், குண்டும் குழியுமான பாதைகளும் அயர்ச்சியைத் தந்தது. படுக்கை வசதி கொண்ட பேருந்தில் கூட இந்த சாலையில் வசதியாக பயணம் செய்துவிட முடியப்போவதில்லை என்று தொன்றியது. எது எப்படியோ பயணங்கள் இனிமையானவை தான், எந்த ஒரு காரணமும் இல்லாமலேயே கூட, ஆனால் இனிமையான காரணத்துடனான இந்த பயணத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தது மனம். பயணத்தை அனுபவித்து செய்வதின் இன்பம் அந்த பயணத்திற்கான காரணமாக இல்லாமல் வேறதாக இருக்க முடியும்? ஒரு எழுத்தாளனை பார்க்க சென்று கொண்டிருக்கும் இந்த பயணம் என்னளவில் வித்யாசமான அனுபவம் தான். என் நண்பனும் இன்னும் காதலை சொல்லிக்கொள்ளாததால் நண்பனாக உடனிருந்தான், மிகவு…
-
- 0 replies
- 1k views
-
-
முக்கியச் செய்திகள் வாசிப்பது நளாயினி சுப்ரமணியம். கடந்த மூன்று தினங்களாக காஸ்மீர் தலைநகரின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தனது படைகளை நிறுத்திக் கொண்டு போருக்குத் தான் தயாராக இருப்பதாக மார்தட்டி வருகிறது. அதைப் பற்றி வருத்தமடைந்த அரசுதரப்பு போர் குறித்து ஆலோசித்து வருவதாகவும், போர் இரண்டு நாடுகளிடையே பெரும் சேதத்தை விளைவிக்கும் என்பதைக் கருத்தில்கொண்டும் மறுப்புத் தெரிவித்துள்ளது கிரிக்கெட் இடையே வந்த செய்தியைக் கேட்டுவிட்டு சற்றுக் கொதிப்போடு சத்யா அங்கிருந்து எழுந்து வீடுநோக்கிப் புறப்பட்டான். “பாகிஸ்தான் தில்லு தில்லு தாண்டா” “பத்தியா, வீட்டுக்குள் வரும்போதே இவன் இப்படி எதனா ஒரு கதையோடு தான் தம்பி வருவான்” “ஹேய்… சத்யா.., வா வா உனக்காகத் தான் கா…
-
- 2 replies
- 1k views
-
-
ஒரு நிமிடக் கதை: பாட்டீஸ் டே அவுட் கார் A 4 போலீஸ் ஸ்டேஷன் வாசலில் டயர்களைத் தேய்த்தபடி நின்றது. லேசான கால் நடுக்கத்தோடு பின் இருக்கையிலிருந்து ஜானகி பாட்டி இறங்கினாள். உடல் ஒரு ஆட்டம் ஆடி சம நிலைக்கு வந்தது. "அய்யோ பாட்டி கீழே விழுந்து கிழுந்து வெச்சுடப்போற... நில்லு, என் கைய புடிச்சுகிட்டு வா" போனில் தன் ப்ரமோஷனுக்குத் தேவையான பேச்சுக்களைப் பேசிக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் காக்கி உடையை விட அதிக மொறமொறப்புடன் விழித்துக் கண்களை உருட்டினார். ஒரு பக்கத்து ஐப்ரோவையும் ப்ரியா வாரியர் கணக்கா மேலே தூக்கி என்ன விஷயம் என்று பேசாமல் பேசினார். "இந்த அம்மா, ரோட…
-
- 1 reply
- 1k views
-
-
நவீனத் தமிழ் இலக்கிய நட்சத்திரமாக ஆவதற்கு பத்து டிப்ஸ்கள் (ஆண் எழுத்தாளர்களுக்கானது) 1. நான் பிறக்கும்போதே பேனாவுடன் பிறந்தவன்; எனது மூதாதைகள் லத்தீன் அமெரிக்கா/ ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நவீன எழுத்தாளர்கள். 2. தமிழில் எனக்கு முன்னோடிகள் கிடையாது; நான் தமிழ் இலக்கியங்களை வாசித்ததுமில்லை, வாசிப்பதுமில்லை; என்னைத் தவிர தமிழ் இலக்கியத்தில் கொம்பன்கள் எவனும் கிடையாது. 3. தமிழில் எனக்கு முன்பு கவிதையோ சிறுகதையோ இல்லை; நகுலன் மட்டுமே அதற்கான முயற்சிகளைச் செய்து பார்த்துத் தோற்றுப் போயிருந்தார். -இவை நீங்கள் விட வேண்டிய அதிரடி அறிக்கைகள். இனி, உங்களுக்கான தகுதிகள்: 4. தமிழ்ச் சொற்களையும் வாக்கியங்களையும் இலக்கணப் பிழையோடு எழுதத் தெரிந்திருக்க வேண்டும். உப்பு…
-
- 3 replies
- 1k views
-
-
இன்று எனக்கு துக்கமான நாளா மகிழ்ச்சியான நாளா என்று எதுவுமே புரியவில்லை... எனது நண்பர்களில் ஒருவர் இன்றுடன் ஓய்வுபெறப் போகிறார். அவருக்கு எழுபது வயதாகின்றது. ஆனால் ஓர் இளைஞனுக்கு இருக்க வேண்டிய அனைத்து சுபாவங்களும் நிறைந்த ஓர் அற்புதமான மனிதர் அவர். இளமையான வேகம்... துல்லியமான பார்வை வீச்சு... பரந்த அறிவு... கண்ணியமான நட்பு... இளமையான உணர்வுகள் அனைத்தும் ஒருங்கே கூடியவர்... அவர் மெக்சிக்கோ நாட்டைச் சேர்ந்தவர். பொதுவாக அழகான பெண்களை "ஏஞ்சல்" என அழைப்பார்கள் ஆனால் அவரின் பெயர் "ஏஞ்சல்" . எமது ஓய்வறையில் நாம் என்றும் நால்வர்தான் ஒன்றாக இருப்பது வழக்கம் இன்றிலிருந்து அது மூவராகக் குறைகிறது என நினைக்கும் போது மிகவும் கவலையாக உள்ளது. இன்னொருத்தர் எதித்திரியா நாட்டைச்…
-
- 7 replies
- 1k views
-
-
பதுங்கு குழி எழுத்தாளர்: பொ. கருணாகரமூர்த்தி நாச்சிக்குடா வீழ்ந்ததிலிருந்து மாதவன் மனத்துள் அந்தகாரம் புகுந்துகொண்டது. இராணுவம் முன்னேறிய வேகத்தைப் பார்க்கையில் மாதவனது மனம் துவண்டுபோனது. இனிமேலும் நாம் இப்போரை வெல்லமுடியுமோ என்று ஒரு சந்தேகமுண்டாகியது. அவன் அடிக்கடி யோகபுரத்திலுள்ள தன் வீட்டுக்குப்போய், அம்மாவையும் சகோதரங்களையும் பார்த்து வருவதும் அவனது அணியின் பொறுப்பாளனுக்குப் பிடிக்கவில்லை. இப்போது தந்தைக்கு திவசம் கொடுப்பதற்காக வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறான். தந்தைக்கான சடங்குகளைச் செய்வதற்கும் அணித் தலைவனிடம் மண்டாடியே ஒருநாள் விடுப்பு எடுத்து வந்து நிறைவேற்றவேண்டியுள்ளது. தேசத்தின் நிலமையில் மக்களின் பொருண்மியம் பெரிதும் குன்றிவிட்டதால் இப்போ…
-
- 1 reply
- 1k views
-
-
காளீஸ்வரன் “அக்கா… அக்கோவ்” சற்றே தயக்கம் தொனித்தாலும் வலுவாக எழுப்பப்பட்ட குரல் குமரேசனின் தூக்கத்தைக் கலைத்தது. அவிழ்ந்து கிடந்த லுங்கியை சரிப்படுத்திக்கொண்டு, படுத்தவாறே அண்ணாந்து கெடிகாரத்தைப் பார்த்தான். மணி ஏழு. கிழக்கு பார்த்த தலைவாசல் கொண்ட அந்த வீட்டில் நுழைந்தவுடன் தெரிவது பூஜையறை. தலைவாசல் நெலவும் பூஜையறை நெலவும் கிட்டத்தட்ட ஒரே அகலம். வீட்டுக்குள் நுழையும்போதே பூஜையறையும் அதன் மையமாய் ராஜ அலங்காரத்தில் ஜொலிக்கும் பழனி முருகன் படமும் கூடவே குமரேசனின் குலதெய்வம் படமும் தென்படும். பூஜையறையை ஒட்டியபடி அகன்ற ஆசாரம். எப்போதுமே ஆசாரத்தில் படுப்பதுதான் குமரேசனின் விருப்பம். குமரேசன் எழுந்து தூக்கக் கலக்கத்துடன் பார்த்தான். சாமியறை முன்பாக அம்மிணியக்கா ந…
-
- 0 replies
- 1k views
- 1 follower
-
-
மரணதண்டனை தீர்ப்பு ? சொல்லமறந்த கதைகள் – 17 முருகபூபதி – அவுஸ்திரேலியா இலங்கையில் இனப்பிரச்சினை தொடர்பான அரசியல் நெருக்கடிகள் உக்கிரமடைந்தபின்பு ஏராளமான கொலைச்சம்பவங்கள் நடந்துவிட்டன. அரசியல் தலைவர்கள், இயக்க, மற்றும் தொழிற்சங்கத்தலைவர்கள், மதகுருமார், அரச அதிபர்கள், அதிகாரிகள், படைத்தளபதிகள், கல்விமான்கள், பத்திரிகையாளர்கள், சாதாரண அப்பாவிப்பொதுமக்கள்…. என்று அந்தப்பட்டியல் நீளும். இது ஒரு புறமிருக்க பாதாள உலகக்கோஷ்டிகளின் படுகொலைகளும் தொடர்ந்தன. ஆனால் இந்தப்படுகொலைகள் தொடர்பான நீதிவிசாரணைகள் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. தொடர்ச்சியான நீதிமன்ற விசாரணைகள், அவசரகால சட்டத்தின் கீழும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழும் விசாரிக்கப்பட்டபோதிலும் பத்திரிகைகளில் பத…
-
- 2 replies
- 1k views
-
-
அ.முத்துலிங்கம் விருது சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவுக்குப் போயிருந்தேன். பலவிதமான பரிசுகளும், விருதுகளும் வழங்கினார்கள். எல்லாமே மகிழ்ச்சியான விசயம்தான்.ஒருவரைப் பாராட்டுவது எப்போதுமே வரவேற்கப் படவேண்டிய நிகழ்ச்சிதான். ஒருவருக்கு அவருடைய அதீத வணிக வளர்ச்சியைப் பாராட்டி விருது வழங்கினார்கள். சென்ற வருடம் அவருடைய லாபம் 3 மில்லியன் டொலர் மட்டுமே. நடப்புவருடம் அவருடைய லாபம் 10 மில்லியன் டொலர். ஒரு வருடத்திலே லாபத்தை மூன்று மடங் காகப் பெருக்கியிருக்கிறார். அசுர சாதனை. நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்தான். இப்படியான வணிக மேதைகளைப் பார்க்கும்போது மெலிண்டாவையும், பில் கேட்சையும் நினைத்துக் கொள்வேன். உலகத்திலேயே அதிகசெல்வம் சே…
-
- 1 reply
- 1k views
-
-
ஓர் ஆனந்த பைரவியும் சில அபஸ்வரங்களும் கதையாசிரியர்: ராஜேஷ்குமார் ‘தண்ணீர்ப்பந்தல் பாளையம் ஊராட்சி ஒன்றியம் உங்களை மகிழ்வுடன் வரவேற்கின்றது’ என்கிற பெயர்ப்பலகை கிராமத்து எல்லையிலேயே வரவேற்க, தம்முடைய காரின் வேகத்தைக் குறைத்தான் ரகுராம். காரின் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த மூன்று நண்பர்களைத் திரும்பிப் பார்த்தான். “கிராமத்துக்குள்ளே நுழையப் போறோம். அதோ! அந்த வேப்பமரத்துக்குக் கீழே ஒரு பெட்டிக்கடை தெரியுது. அங்கே விசாரிச்சா ராமசாமி வாத்தியார் வீடு எங்கே இருக்குன்னு சொல்லுவாங்க… கேட்டுடலாமா?” “ம்… கேட்டுட வேண்டியதுதான்!” உச்சிவெயில்மண்டையில் உறைக்கிற அந்த மத்தியான நேரத்தில் மண்ரோட்டுப் புழ…
-
- 1 reply
- 1k views
-
-
கத்தரிக் குழம்பும் கருத்து முரண்பாடும் . நான் கனடாவுக்கு வந்த புதுசு. அவரும் நானும் தற்செயலாகவே அறைஞர்கள் ஆனோம். அவர் என்னைவிட ஒரு வருடம் முந்திக் கனடாவுக்குள் வந்து தரைதட்டியவர். அந்தத் தராதரம் மிக்க தகுதியின் அடிப்படையில் – அவரது பரிபாஷையில் – அவர் ஒரு பழைய காய். கனடா பற்றிய கற்கைநெறியில் அவரோடு தங்கி வாழ்ந்த ஆரம்பகால வாழ்க்கை எனக்கு ஒருவகையில் குருகுல வாசந்தான்! கண்ணைக் கட்டிக் கனடாவுக்குள் விடப்பட்டது போன்ற எனது பரிதாபகரமான அந்த நாட்களில் அவரது ஆலோசனைகளும் புத்திமதிகளும் – ஏன் குயுக்திகளும்கூட – எனது காதுக்குள் வேதமாய் ஓதப்பட்டன. ஒரு கொஞ்ச நேரம் பேசக் கிடைத்தால் போதும், ‘ஐசே’ என்ற முகமனுடன் உபநியாசம் ஆரம்பமாகும். கனடிய அரசு, கனடிய மக்கள், கல…
-
- 5 replies
- 1k views
-
-
கதையாசிரியர்: பிரசன்னா நீலகண்டன் “இந்தா அம்மா.. என் முதல் மாத சம்பளம்.. 40 ஆயிரம் ரூபாய்.. அப்பா எப்பவாச்சும் இப்படி முப்பது ஆயிரம் சம்பாதித்து இருக்கிறாரா.. எனக்கு இன்னும் கூட பதவியும் சம்பளமும் கூடிக்கிட்டே போகும்..!” இதுவரை மகன் இப்படிப் பேசி அந்த தாய் கேட்டதே இல்லை. வீட்டில் அதிகம் பேசவே மாட்டான் . அப்பாவிடம் சுத்தமாக பேசுவதே இல்லை. அப்படிப்பட்டவன் வாயில் இருந்தா இப்படிப்பட்ட வார்த்தைகள்…? மனம் துணுக்குற்றாள் அம்மா . “என்னடா.. வார்த்தை எல்லாம் தடிப்பா வருது..? அதுவும் அப்பாவை பற்றி ரொம்ப ஏளனமாக பேசுற..!” “அவர் மட்டும் என்னை ஏளனமாக நடத்தலையா.. காலேஜ் போன புதுசுல ஒரு போன் வாங்கி தாங்கன்னு கேட்டதற்கு இழுத்தடிச்சு ஒரு வருஷம் கழிச்சுத் தா…
-
- 0 replies
- 1k views
- 1 follower
-
-
சுற்றிச் சுழலும் ரொமான்ஸ்கள்! சுத்தேசி ரொமான்ஸ் படத்தில் சுஷாந்த் சிங், பரினீத்தி சோப்ரா தற்கொலைக்கு முயல மாட்டேன் ஒருபோதும் - நான். அது கோழைகளின் பேராயுதம். நான் ஓட்டிச்செல்லும் இருசக்கர வாகனத்தின் மீது எதிர்வாகனம் எதுவும் வந்து மோதி எனை கொல்லட்டும். * என் பேருந்துப்பயணத்தில்... அதிவேக ஓட்டுநரின் அலட்சியத்தால் அந்த பாலம் பிளந்து பேருந்து சுக்குநூறாகி சிதைந்து அழியட்டும் என்னையும் பலியாக்கி. * நீண்டதூர ரயில் பயணத்தில் நியாயமான கோரிக்கையி…
-
- 0 replies
- 1k views
-
-
ஸ்நேகிதி சத்யராஜ்குமார் இதோ இவன்தான் அனிதாவின் வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கியவன். அந்த அமெரிக்கப் பெருநகரத்தில் திடுமென அவள் எதிரில் நிற்கிறான். அவனுடைய அரைக்கை சட்டைக்குக் கீழே மணிக்கட்டில் இன்னமும் அந்தத் தழும்பு ஒரு கருப்புக் கோடாய் அப்படியே இருக்கிறது. நியாயமாய் அவள் பார்வையில் கோபத் தீ பற்றி எரிய வேண்டும். அல்லது வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு போயிருக்கவும் செய்யலாம். ஆனால் முன்வரிசைப் பற்கள் பளிச்சிட அழகாய்ச் சிரிக்கிறாள். பெரிய கண்களை இன்னும் விரித்து ஆச்சரியமாய்க் கூவுகிறாள். இது அனிதாவின் சுபாவம். அவளுக்குக் கோபப்படத் தெரியாது. இந்தச் சுபாவம்தான் அவள் வாழ்க்கையைக் கலைத்துப் போட்டது. “டேய் ரஞ்சித்? அமெரிக்காவிலா இருக்கே? எப்படா வந்தே?” சான் …
-
- 0 replies
- 1k views
-
-
நிலங்கீழ்வீடு பொ.கருணாகரமூர்த்தி எமது 15 வருஷ கனடியவாழ்வின் அருஞ்சேமிப்பில் இந்தவீட்டை நோபிள் ரியல் எஸ்டேட்ஸ் என்கிற ஒரு குழுமத்தின் அனுசரணையுடன்தான் வாங்கினோம். இங்கே வீடுகளைவாங்கும் தமிழர்கள் அநேகமாகச் செய்வதைப்போலவே நாங்களும் இவ்வீட்டை நிலவறைகள் உள்ள வீடாகத்தேர்வுசெய்தோம். ஆனாலொன்று எப்படி ஒரு அடுக்ககத்தின் உச்சிமாடத்தில் கூரைமுகடுகளுக்குள் அமைந்த வீடுகளை குடியிருப்பாளர்கள் தவிர்த்துக்கொள்வார்களோ, அதேபோல் இந்த நிலங்கீழமைந்த வீடுகளும் குடியிருப்பாளர்களின் முதல் விருப்புக்குரியவையல்ல. நிலங்கீழ்வீட்டையும் யாருக்காவது வாடகைக்கு விட்டால் அவர்கள் தரக்கூடிய வாடகையும் எமது மாதாந்த தவணைத்தொகையைச் செலுத்துவதற்கு உதவும் என்பதே இவ்வீட்டைத் தேர்வுசெய்ததின் சூக்…
-
- 1 reply
- 1k views
-
-
1- ‘இனியெண்டாலும், குடிகாரற்றை உறைப்பைக் கொஞ்சம் குறையுங்கோ, வயித்திலை அல்சர் முத்தி, கான்சர் வரப்போகுது’ என, இரவுச் சாப்பாட்டின் போது பல்லவியைத் துவங்கினாள் மனைவி. திருவாளர் வீரசிங்கமோ மனைவியின் ஆரோகணத்தை காதில் வாங்குவது கிடையாது. சாப்பாட்டு விஷயத்தில் வீரசிங்கம் சமரசம் செய்வதில்லை. அவருக்கு நல்ல உறைப்புக் கறி வேணும். நான்கு தசாப்தங்களுக்கு மேலாக அவர் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும், காரசாரமான கறி சோறு இல்லாவிட்டால், அவருக்கு அன்று நித்திரை வராது. ‘தாய் பழக்கின பழக்கம்’ என்று மனைவி புறுபுறுப்பாள். புருஷனுக்கு உறைப்புக்கறி, தனக்கும் பிள்ளையளுக்கும் காரம் குறைந்த பால் கறி என்று, தினம்தினம் சமையல் அறையில் அவள் படும் பாடு, அவளுக்குத்தான் தெரியும். சனிக்கிழமைகளில், பல்லின …
-
- 0 replies
- 1k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் கண்காணிப்பு “ஸ்கூல்ல பசங்க யாரும் செல்போன் கொண்டுவர்றாங்களா?” என வாத்தியாரிடம் வாட்ஸ்அப்பில் கேட்டார் ஹெச்.எம்! - பெ.பாண்டியன் கலைப்பு “இரண்டு நாள்ல கலைக்கப் போறாங்களாம் ஐயா...” பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் ஆளுங்கட்சி MLA, தோட்டக்காரன் காட்டிய குருவிக் கூட்டை. - கல்லிடை வெங்கட் விதி விதியை மீறி கட்டிய கட்டடத்தால் விதியை ஒன்றும் செய்ய முடியவில்லை. - நந்த குமார் வெள்ளைப்பூக்கள் சண்டை போட்டுக்கொண்டே குடும்ப அமைதிக்காகக் கோயிலுக்குப் புறப்பட்டனர் கணவனும் மனைவியும்! - கே.சதீஷ் நிறைவு “வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்த மகிழ்ச்சியில் முதியோ…
-
- 0 replies
- 1k views
-
-
ஒரு கவடு தூரம் -வாசுதேவன் பாரிஸ் முதலாவது குறிச்சியில் உள்ள உணவகமொன்றில் சமையற்காரனாக வேலை செய்யும் கண்ணன் பிரஞ்சுக் குடியுரிமை பெற்றுக்கொண்ட வேகத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி உறுபினராகவும் தன்னைப் பதிவு செய்துகொண்டிருந்தான். அதற்கு மூன்று வருடங்களுக்கு முன்னரே பிரஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பான தொழிற்சங்கத்திலும் உறுப்புரிமை பெற்றிருந்தான். தொழிற் சங்கத்தில் இணைந்ததிலிருந்து சிறிது சிறிதாக இடதுசாரிச் சிந்தனை அவனை ஆக்கிரமித்துக்கொண்டது. தொழிற்சங்கக் குறிச்சிப்பொறுப்பாளனான டானியல் ப்ரௌவ்ஸ்கிதான் கண்ணனுக்கு கம்யூனிசச் சிந்தனைகளின் கதவுகளைத் திறந்துவிட்டவன். கண்ணனுக்கும் ப்ரௌவ்ஸ்கிக்கும் இடையில் ஒரு முக்கியமான பொதுவிடயம் உண்டு. ப்ரௌவ்ஸ்கி பரிசில் கோவில் வீதிய…
-
- 0 replies
- 1k views
-
-
மூன்றாம் திருநாள்! மூன்றாம் திருநாள்! சி.முருகேஷ் பாபு ‘‘அ வனை ஏன்டே கூட்டிட்டு வந்தீங்க... படிக்கிற புள்ளைக்கு இதெல்லாம் என்னத்துக்கு..?’’ என்னோடு வந்த முத்துக்குமாரையும் சுப்பிரமணியையும் கடிந்துகொண்டார் சித்தப்பா. எல்லோரும் திருநெல்வேலி பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டு இருந்தோம். எங்கள் ஊர் அம்மன் கோயிலில் கொடைவிழாவுக்கு காப்புக்…
-
- 1 reply
- 1k views
-