கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
நான் நீ மற்றும் கடல்! - சிறுகதை அனுராதா ஆனந்த் - ஓவியங்கள்: ஸ்யாம் நித்யா காரைத் திறந்து உள்ளே ஏற எத்தனிக்கும் போதுதான் சட்டெனக் கவனித்தாள். வேப்ப மரமெங்கும் மல்லிகைப் பூ மொட்டுகள் தெறித்துவிட்டதுபோல் கிடந்தன. நெற்றி சுருங்க ஆச்சர்ய மாய்ப் பார்த்தாள். அருகிலிருக்கும் பந்தலையும் தாண்டி மரத்திலேறி அதன் கிளையெங்கிலும் பெரிய பச்சைப்பாம்பைப் போல் சுற்றிக் கொண்டு மல்லிக்கொடி படர்ந்திருக் கிறது . அந்தக் காலை நேரத்தில் அது அவ்வளவு வாசனையை அந்தத் தெருவுக்கு வழங்கிக்கொண்டிருந்தது. அருகில் போய் கைக்கெட்டும் கொஞ்சம் மொட்டுகளைப் பறித்து மூக்கின் அருகில் வைத்து மனசு கொள்ளுமளவுக்கு அதன் வாசத்தை நுகர்ந்துகொண்டாள். பின் காருக்குள் நுழைந்து அந்த மொட…
-
- 0 replies
- 4.8k views
-
-
ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார். வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார். அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர் ஆழ்ந்த சிந்தனையில், சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார். மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று இதமாகக் கையைப் பிடித்து... “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார். கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?…
-
- 0 replies
- 712 views
-
-
எகேலுவின் கதை - சிறுகதை ஜேர்மன்காரர் இரண்டு மாதம் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகுதான் சம்பவம் நடந்தது. சிறையில், வளர்ந்த தாடியை மழிக்கக் கூடாது என்பது அதிகாரிகள் தரும் கூடுதல் தண்டனை. ஆகவே, அவர் தாடியுடன் காணப்பட்டார். பெயர் ஃபிரெடரிக். ஏழை மக்களுக்கு மலிவு வீடுகள் கட்டித் தரும் தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்தார். ஜேர்மன்காரர்களுக்கு வாழ்க்கையில் இரண்டு குறிக்கோள்கள். ஒன்று, அன்றாடம் செலவுக்கணக்கு எழுதி வைப்பது. இரண்டு, பீர் குடிப்பது. இரண்டாவது குறிக்கோள்தான் அவருடைய சிறைவாசத்துக்குக் காரணம். ஃபிரெடரிக் வேலைசெய்தது சோமாலிலாண்ட் எனும் நாட்டில். இது சோமாலியாவில் இருந்து தனியாகப் பிரிந்து, உலகத்தில் வேறு எந்த ந…
-
- 0 replies
- 4.8k views
-
-
நன்மாறன்கோட்டை கதை சிறுகதை: இமையம், ஓவியங்கள்: செந்தில் ``நல்ல ஊரு சார். இங்க வேலை செய்றவங்க எல்லாருமே நல்ல மாதிரியான ஆளுங்கதான். நல்லா கோஆபரேட் பண்ணுவாங்க. கட்சிக்காரங்க, அரசியல்வாதி, உள்ளூர்க்காரங்கனு யாரும் ஸ்கூலுக்குள்ள வர மாட்டாங்க. நான் இந்த ஸ்கூலுக்கு வந்து பத்து வருஷமாச்சு. எந்தத் தொந்தரவும் இல்லை. ரிட்டையர்ஆகிறவரைக்கும் நீங்களும் இந்த ஊர்லயே ஓட்டலாம் சார். நன்மாறன்கோட்டைங்கிற பேருக்கு ஏத்த மாதிரி ஊரு ஆளுங்களும் இருப்பாங்க’’ என உடற்கல்வி ஆசிரியர் தனவேல் சொன்னார். ``அப்படியா?’’ என்று ராமன் கேட்டதோடு சரி. மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று, இன்று காலையில்தான் கடலூர் மாவட்டத்திலிருந்து வந்து புதிய பள்ளியில் ராமன் சேர்ந்தி…
-
- 0 replies
- 3.2k views
-
-
சொர்க்கத்தின் பாவிகள் -நிரூபா நாகலிங்கம் உயிரைக் கையில் ஏந்தியவாறு மண்டியிட்டிருந்தான் அந்தோணியோ. அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அவனுக்கு முன்னால் அளவிடமுடியாத உயரத்திலும் அகலத்திலும் எழுந்து நின்றது அந்த சுவர். அவன் மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்த சுவரைப் பார்த்தவாறு இருந்தனர். அந்த சுவருக்கு ஒரு கதவும் இருந்தது. அது எப்போது திறக்குமென்றுதான் அவர்கள் காத்திருந்தனர். அந்தோணியோ வருடக் கணக்கில் இங்கு காத்திருக்கின்றான். சுவருக்கு மறுபக்கம் சொர்க்க பூமி இருக்கின்றதென்று அந்தோணியோவும் பல ஏழை மக்களும், யுத்தநாடுகளின் பல அப்பாவி மக்களும் நம்பிக்கொண்டிருந்தனர். அந்தோனியோவைப்பொறுத்தவரையில் அவன் தாங்கிப் பிடித்திருக்கும் அவன் நேசிக்கும் உ…
-
- 0 replies
- 767 views
-
-
காதல் ‘‘உங்களை காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டது எவ்வளவு தப்புன்னு இப்பதான் புரியுது!’’ - முகம் சிவக்க மாலா கத்தினாள். ‘‘இங்க மட்டும் என்னா வாழுதாம்..? அதேதான்! நீ என்னிக்கு என் வாழ்க்கைல வந்தியோ... அன்னில இருந்தே எனக்கு நரகம்தான்!’’ - பிரஷர் எகிற, குதித்தான் கணேசன். ‘‘கோபத்தை சாப்பாட்டுல காமிக்காதீங்க! டிபன் சாப்பிட்டுட்டு போங்க...’’‘‘நீயாச்சு, உன் டிபனுமாச்சு!’’ - விருட்டென வெளியேறினான்.‘‘உங்களுக்கு அவ்வளவுன்னா... எனக்கு மட்டும் மானம், ரோஷம் இருக்காதா?’’ - சடாரென்று கிளம்பிப்போய் காருக்குள் ஏறினாள் மாலா. ஷூட்டிங் ஸ்பாட்டில்... ‘‘ஸ்டார்ட்... கேமரா... ரோல்!’’ ‘‘டார்லிங், உங்களைப் பார்த்த பிறகுதான் என் வாழ்க்கையே பிரகாசமாச்சு! இப்படியே என்னைக்குமே இருந்துடக் கூட…
-
- 0 replies
- 2.1k views
-
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள் தாய்+அம்மா தாயம்மா செத்துட்டா. ஊரே திர…
-
- 0 replies
- 986 views
-
-
நாடு காத்த சிறுவன் ----------------------------------------------------------------------- அந்நியன் படத்தில் விக்ரம் விவேக் சதா நடிகர்ள் நடித்து ஆடி பாடிய ஹாலந்து நாட்டு அந்த அழகிய பரந்த பூந்தோட்டங்களில் நடுவில் இருந்த கைவிடப்பட்ட பழைய இராணுவ முகாம் ஒன்று இப்பொழுது அகதி முகாமாக்க பட்டிருக்கிறது. அந்த முகாமில் ஏழாம் நம்பர் றூமில் கீழ் படுக்கையில் நான் தூங்க விரும்பியும் தூங்கமால் தவித்து கொண்டிருந்தேன்,அவன் அடிச்சு பிடிச்சு ஓடிவந்து மூச்சிரைத்து சொன்னான் .வாடா உனக்கு ஒன்று காட்டிறன் என்று. இவன் மோகன் தோட்…
-
- 0 replies
- 920 views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் விஷ மருந்து டயாபடீஸுக்கு மாத்திரைகள் தந்துவிட்டு, மீதம் ஒரு ரூபாய் சில்லறை இல்லாததால் அதற்குப் பதிலாக அவனிடம் மருந்துக்கடைக்காரர் சாக்லேட் ஒன்றைத் தந்தார்! - தக்கலை லீலாஇராம். பிரார்த்தனை `சிவப்பு விளக்கு அணையக் கூடாது’ என வேண்டிக்கொண்டான், சிக்னலில் பொம்மை விற்கும் சிறுவன்! - வினோத் குமார். கால்ஷீட் “ஹீரோயின் சம்மதம் சொல்லிட்டாங்க. நீங்க ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணிட்டீங்கன்னா, அட்வான்ஸ் குடுத்திரலாம். நாளைக்கே பிரசாரத்துக்கு அழைச்சிட்டு வந்துடறேன்” என்றார் தலைவரிடம் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர்! - பெ.பாண்டியன் செல்ஃபி நேரம் மயானத்தில் சடலம் கிடத்தப்பட்டிருந்தத…
-
- 0 replies
- 865 views
-
-
சூபி காலைப் பொழுதின் வருகையை அந்த சங்கின் ஊதல் அறிவித்தது. வழக்கத்துக்கு மாறாக ஒரு மணிநேரம் முன்பாகவே சங்கு ஊதியது. இங்கே இப்படித்தான். ஒருநாள் சீக்கிரம் ஊதும். சில நாட்கள் தாமதமாக ஊதும். ஊதியதும் புறப்பட வேண்டும். சூபி (SOOBI) வேண்டா வெறுப்பாக எழுந்தான். தூங்க முடியாது. தூங்கக் கூடாது. களத்திற்குச் செல்ல வேண்டும். இரவு 11 வரை உழைக்க வேண்டும். வெளியே எட்டிப் பார்த்தான். DARK CITY மெல்ல மெல்ல விழித்துக் கொண்டிருந்தது. ஆங்காங்கே பல்புகள் எரிந்தும் அணைந்தவாறும் இருந்தன. ஊழியர்கள் களத்துக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். எதற்கு இந்த அர்த்தமற்ற ஓட்டம்? யாருக்காக? எதற்காக? சில காலமாக இந்தக் கேள்வி களை சூபி கேட்கத் தொடங்கியிருந்தான். பொதுவாக இப்படிப்பட்ட க…
-
- 0 replies
- 1.1k views
-
-
அகல்யா ஆர். அபிலாஷ் நானும் சில நண்பர்களும் கருத்தரங்குக்கு முந்தின நாளே சென்றுடைந்த போது விடாது மழை பெய்து கொண்டிருந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் ஒரு நாய் உடலை குறுக்கி புட்டத்தை லேசாய் தூக்கி ஒரு குட்டை அருகே மலம் கழிக்க முயன்று கொண்டிருந்தது. நீராய் கழிந்த மஞ்சள் மலம் மெல்ல அந்த குட்டையின் கறுப்புநீரில் ஓவியனின் தூரிகையை முக்கும் போது கரையும் சாயம் போல் கலந்து ஓடத் தொடங்கியது. தன் அவஸ்தை முடிந்து நாய் எங்களை தலைதூக்கிப் பார்த்தது. சந்தீப்பும் பார்த்திவ் ஷர்மாவும் என்னை நோக்கி சிரித்தனர். நாங்கள் அப்பகுதியில் பார்த்த நாய்களை கணக்கெடுத்து வந்தோம். அதன் செவியின் நுனி கத்தரிக்கப்பட்டிருக்கவில்லை. அதனால் எ.பி.சி எனும் கருத்தடை செய்யப்படாத ஒன்று என குறித்துக் கொண்டோம…
-
- 0 replies
- 2.3k views
-
-
இன்னா செய்தாரை ஒருத்தல்! ‘நட்புகள், உறவுகள் சில சமயங்களில் எதிராக மாறும் போது நகக்கண்களில் ஊசி குத்தினால் வலிப்பது போல் மனதில் வலிக்கும்’ என அனுபவப்பட்டவர்கள் எழுதியதைப்படித்துள்ள வருணுக்கு நிஜமாகவே அது தனக்கு நடந்த போது மனதால் துவண்டு போய் விட்டான். “நானும் நினைவு தெரிஞ்சதுல இருந்து யாருக்கும் மனசறிஞ்சு துரோகம் பண்ணினதில்லை. யாரையும் பார்த்து பொறாமைப்பட்டதில்லை. நண்பர்களுக்கும், சொந்தக்காரங்களுக்கும் நெறைய உதவி செஞ்சிருக்கேன். ஆனா எனக்கு போய் இப்படிப்பண்ணிட்டாங்களே….? அவங்க தலைல மண்ணை வாரி போட்டவங்க, என்னோட தலைல கல்லைப்போட்டிட்டாங்க….” சொன்னவன் கண்களில் கண்ணீர் பெருகியது. “ஆதி காலத்துல இருந்தே உலகம் இப்படித்தாங்க இருக்கு. நம்ம தாத்தா, பாட்டிக்கும் நம்பிக்கை துரோகம் நடந்…
-
- 0 replies
- 253 views
- 1 follower
-
-
மக்களை ஈர்த்த மகராசர் தி. ஜானகிராமன் விமானம் தரை தட்டிற்று. ஓடி நின்றது. 'இங்கு ஐம்பது நிமிஷம் நிற்கும். தொடர்ந்து பிரயாணம் செய்பவர்கள் இறங்கி, ட்ரான்ஸிட் கூடத்தில் இளைப்பாறி திரும்பி வரலாம். ' என்று பெண் குரல் அறிவித்தது. அவர் வெள்ளைகாரர் படிக்கட்டில் இறங்கினார். நடந்து 'ட்ரான்ஸிட் ' கூடத்திற்குப் போனார். இன்று என்ன விசேஷம் இந்த ஊரில் ? ஏன் இவ்வளவு இரைச்சல். ' ஏன் இத்தனை கூட்டம் ? கண்ணாடிச் சுவர் வழியாகப் பார்த்தார் வெள்ளைக்காரர். தலை, தலை, எங்கும் தலைகள் 'பத்தாயிரம் தலைகள். ஆமாம் பத்தாயிரம் பேருக்குக் குறையாது. மேலும் மேலும் கார்கள் வந்து கொண்டிருந்தன. சின்னக்கார்கள், பெரிய கார்கள், உள்நாட்டு கார்கள். வெளிநாட்டு கார்கள் கதவுகள் திறந்தன. மனிதர்களைக் கொட்…
-
- 0 replies
- 872 views
-
-
"அம்மா என்னையும் அழைத்துச் செல்லுங்கள்" அன்பின் அம்மாவுக்கு, சுவாசிக்கக் காற்றிருக்கிறது. உண்ண ஒருவேளை சோறு கிடைக்கிறது. துன்பங்களின் மத்தியிலும் உங்கள் மடியில் சாய்ந்துறங்கிய நிம்மதியான நினைவுகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். நீங்கள் நலமாயிருக்கிறீர்களா? உங்களின் நலத்திற்கு என்றும் குறைவரக்கூடாது என்பதுதான் எனது முதல் பிரார்த்தனையும் வேண்டுதலும். நம் குலதெய்வம் உங்களின் நலன் காக்கட்டும். நிற்க: நீங்கள் குவைத் சென்று ஐந்து வருடங்கள் கழிந்துவிட்டன. இரண்டு வருடங்களில் வருவதாக சொல்லிச்சென்றீர்கள். ஒன்றும் அறியாத எட்டுவயது சிறுமியாய் இருந்தபோது நீங்கள், கடைசியாய் தந்த அன்பு முத்தம் இன்னும் இனிக்கிறது அம்மா. ஆனாலும் பல விடயங்களை பரிமாறி துன்பங்களைச் சொல்லி அழ எ…
-
- 0 replies
- 815 views
-
-
அழகாபுரி ஊர் மக்கள் ஒரே மகிழ்ச்சியாக இருந்தனர். அதற்குக் காரணம், அன்றுதான் பொங்கல் பண்டிகை ஆரம்பம் ஆனது. பரமார்த்தரும் சீடர்களும் கூட மிகவும் சுறுசுறுப்பாய் இருந்தனர். மறுநாள் - மாட்டுப் பொங்கலும் வந்து விட்டது. "குருவே...குருவே.." என்று கத்திக் கொண்டே ஓடி வந்தான் மண்டு. "இன்று சாயுங்காலம், ஊர் எல்லையில் நிறைய பந்தயம் எல்லாம் நடக்கப் போகுதாம்!" "பந்தயமா? என்ன அது?" என்றபடி குருவும் சீடர்களும் அவனைச் சூழ்ந்து கேட்டார்கள். "காளை மாட்டின் கொம்புகளுக்கு வண்ணம் பூச வேண்டுமாம். அப்புறம், ஜல்லிக் கட்டுகூட நடக்கப் போகுதாம். வெற்றி பெறுபவர்களுக்குப் பல கிராமங்களைத் தரப் போகிறாராம் நம் அரசர்" என்று சொன்னான் மண்டு. இதைக் கேட்டதும் பரமார்த்தரின் மூளை தீவ…
-
- 0 replies
- 764 views
-
-
21ஆம் நூற்றாண்டு சின்டரெல்லாவின் கதை சித்தியின் கொடுமைக்கு ஆளாவதும் பிறகு தேவதையின் துணையுடன் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்று இளவரசரால் விரும்பப்படுவதும் நாம் அனைவரும் கேட்ட அதே சின்டரெல்லாதான்; ஆனால் அந்த சின்டரெல்லா தற்காலத்தில் அதாவது 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தால் அவளின் வாழ்க்கை எவ்வாறு இருந்திருக்கும்?! இதோ 21ஆம் நூற்றாண்டுசின்டரெல்லாவின் கதை. சின்டரெல்லாவின் தந்தை வெளியூருக்கு சென்றிருந்தார். அதனால் சின்டரெல்லா யாருக்கும் தெரியாமல் முகநூல் மற்றும் வாட்ஸ் அப் மூலம் தனது நண்பர்களை தொடர்பு கொண்டிருந்தாள். தனது வீட்டு வேலைகளை செய்து கொண்டே முகநூலில் தனது கவனத்தை செலுத்தி வந்தாள் சின்டரெல்லா; அப்பொழுதுதான் முகநூல…
-
- 0 replies
- 773 views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் நெருக்கடி நடந்துபோனால், அரைமணி நேரத்துக்குள் போய்விடும் அலுவலகத்துக்கு ஒரு மணி நேரம் ஊர்ந்தபடியே காரில் போனான் ராகுல்! - கே.சதீஷ் புரிதல் ``ஹாய் டாட்!’’ என்ற வாட்ஸ் அப் மெசேஜ் பார்த்து மகளுக்கு `டாப் அப்’ செய்தார் அப்பா! - கி.ரவிக்குமார் சுறுசுறுப்பு “ஹோம் ஒர்க் எழுத முடியல...தூக்கம் வருதும்மா...” என்றவனிடம், மொபைலை நீட்டியதும் எழுந்து உட்கார்ந்தான்! - சி.சாமிநாதன் பிரார்த்தனை படம் பார்த்துக்கொண்டிருக்கையில் பேயின் ஆசை நிறைவேற கடவுளை பிரார்த்தித்தது குழந்தை! - பெ.பாண்டியன் தனிமை ஆயிரமாவது ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட்டை அக்செப்ட் செய்துவிட்டு, ஃபீலிங் லோன்லி …
-
- 0 replies
- 1.4k views
-
-
இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, "குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு" என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது. "போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்" என்று குருவி மறுத்து விட்டது. தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனு…
-
- 0 replies
- 922 views
-
-
மனோரஞ்சிதம்! வ.ந.கிரிதரன் - புகலிட அனுபவ சிறுகதை மனோரஞ்சிதம்! நான் மனோரஞ்சிதத்தை மீண்டுமொரு முறை சந்திப்பேனென்று எண்ணியிருக்கவேயில்லை. அதுவும் இவ்விதம் எதிர்பாராமல். இருபது வருடங்களாவதிருக்கும் அவளைக் கடையாகச் சந்தித்து..முன்பை விட இன்னும் தளதளவென்று பூசி மெழுகி மின்னிக் கொண்டிருந்தாள். அழகென்றால் அப்படியொரு அழகு. சங்ககாலக் கவிஞர்கள் வர்ணிப்பதைப் போல் பணை, வன, தட, பருத்த, அகன்ற போன்ற வார்த்தைகளைத் தாராளமாகவே பாவிக்கலாம் அவளை வர்ணிப்பதற்கு. அவ்விதமானதொரு உருவ அமைப்பு. அப்பொழுது நான் மிகவும் கட்டுப்பெட்டி என்று சொல்வார்களே அவ்விதமானதொரு குண அமைப்பு எனக்கு. என் வாழ்வில் எப்பொழுதுமேயே நிதானமானதொரு வளர்ச்சி தான் ஏற்பட்டு வந்திருக்கின்றது. நிதானமென்றால் அப்படியொரு நி…
-
- 0 replies
- 1k views
-
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள் பயம்! பு றப்படும்போதுதான் கடிகாரத்தைப…
-
- 0 replies
- 1.3k views
-
-
சனல் – 4 – வெற்றிச்செ்ல்வி (”காணாமல் போனவனின் மனைவி” சிறுகதை தொகுப்பு, சோழன் படைப்பகம், 2012, இந்தியா) சனல்-4 கானொளியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் முகுந்தாவிடம் கொஞ்சம்கூட இருக்கவில்லை. அவள், அறியாத, காணாத, கேள்விப்படாத மரணங்களா அதில் புதிதாக இருந்துவிடப் போகின்றன? யுத்தம் முடிந்ததாகச் சொல்லி மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டாலும்; அவள் கண்ட பிணங்களின் கோலங்கள் மட்டும் நினைவில் நின்ற இடத்திலேயே நிற்கின்றன. அழிக்க முடியாத பதிவுகளாய் மூளையில் பதிந்துவிட்ட அவை மரணம் தாண்டியும் அந்த ஆத்மாவை அமைதியாக வாழ விடுமா தெரியவில்லை; மறந்துவிட வேண்டும். கொஞ்ச நாட்களுக்காகவாவது மனதை அலட்டிக்கொள்ளாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதுதான் அவளின் விருப்பம். முடிகிறதா? இதோ நிமலன் தொலைப…
-
- 0 replies
- 2.2k views
-
-
எலியம் - உமா வரதராஜன் கொஞ்சம் பழைய வீடுதான். ஆனால் அது ஓர் அழகான வீடு. பக்கத்துக் கொன்வென்றில் இருந்து வாத்தியம்மா சொல்லிக் கொடுக்கும் வாசகங்களை அப்படியே ஒப்புவிக்கும் பாலர்களின் ஒருமித்த குரல்கள் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கும். வைத்தியசாலை வெகு கிட்டத்தில் இருந்தது. சந்தை கூட அவ்வளவு தூரத்தில் இல்லை. இவன் வீட்டுக்கு நேர் எதிரே புகைப்படப் பிடிப்பு நிலையம் ஒன்று இருக்கிறது. தேவையானால் இவன் தன் வீட்டிலிருந்தே ஒப்பனைசெய்து கொண்டுபோய்ப் படம் எடுத்துக் கொள்ளலாம். அவர்களுடைய பௌடரையும், ஒல்லாந்தர் காலத்து அழுக்கு நிரம்பிய சீப்பையும் பாவிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அதற்குப் பக்கத்திலுள்ள பேக்கரியில் பாண் போடுவார்கள்; 'கேக்'கும் போடுவார்கள். ஆனால் இரண்டுக்கும் இடையில…
-
- 0 replies
- 1.2k views
-
-
அடேலினா - சிறுகதை அவள் அறிமுக எழுத்தாளர் பா.விஜயலட்சுமி ஓவியம்: ஸ்யாம் ஆல்ப்ஸ் மலையின் மிதமிஞ்சிய குளிர், கணப்புச் சூட்டைத் தாண்டி போர்வைக்குள் சுருண்டு படுத்திருந்த அடேலினாவின் உடலை சன்னமாக குலுங்க வைத்தது. கண்கள் மூடி தூக்கத்தில் கனவுகண்டு புன்னகை புரிந்தவளை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே ஜன்னல் ஓரத்தில் கைதொடும் தூரமாகக் கிடப்பதைப் போல விரிந்துகிடக்கும் ஆல்ப்ஸ் மலையின் பிம்பத்தை ரசித்துக்கொண்டிருந்தான் கெவின். கெவின்... நாற்பது வயதைத் தொட 1,460 நாட்களை கைகளில் வைத்துக் கொண்டிருப்பவன். ஆல்ப்ஸ் மலையின் பனிப்படுகைகளில் உருண்டு, புரண்டு ஐஸ்கட்டிகளை ஆராய்ச்சி செய்பவன் - ‘கிளேசியர் ரிசர்ச் சயின்ட்டிஸ்ட்’. அவனிடம் பயிற்சியாளினியாக வேலைக்குச் …
-
- 0 replies
- 1.3k views
-
-
எட்டாப் புத்தகம்! பொன்னம்பி அவனிடம் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தான்."நீ (அரசியல்)அமைப்பிலே வேலை செய்யாமல் வெளியிலே போய் பயிற்சி எடுக்கணும் என்று அவசரப்படுகிறாய்.உனக்குத் தெரியுமா, இங்கே(தளத்திலே) வேலை செய்வது தான் முக்கியமானது,ஒரு காலத்தில் உணர்வாய்!"என்றான். இதையெல்லாம் நின்று நிதானிக்கும் நிலையில் அவன் இருக்கவில்லை.. .மனோவும் ,சதிஸும் ...கிராமத்திலிருந்து பயிற்சிற்குச் சென்ற பிறகு இவனுக்கு மன அலைகள் அடிப்பது அதிகமாகியிருந்தன. .மனோ,அவனுடன் சிறு வயதிலிருந்து படித்த நல்ல நண்பன்.சதாசிவம் வாத்தியாரின் பல பிள்ளைகளில் ஒருத்தன். ரமேஸினுடைய அம்மாவும் அங்கே படிப்பிக்கிற சந்திரா ஆசிரியை தான். சதிஸ் கிராமத்தில் இருந்து வட்டுக்கோட்டையில் படித்திருக…
-
- 0 replies
- 1.1k views
-
-
முதற்காதல் வ.ந.கிரிதரன் - நீண்ட நாட்களின் பின் நண்பனைச் சந்தித்தேன். வழக்கத்துக்கு மாறாக மகிழ்ச்சியுடனிருந்தான். இவனைக் கண்டதும் எனக்குப் பழைய ஞாபகங்கள் சில எழுந்தன. பதின்ம வயதினில் இவனொருத்தியின் மேல் காதல் மிகுந்திருந்தான். அதை அவளுக்கும் தெரியப்படுத்தியிருந்தான். அவளோ அதைத்தூக்கி எறிந்துவிட்டுச் சென்று விட்டாள். ஆனால் அவள் மீதான காதலை மட்டும் இவன் விடவேயில்லை. அவளையே நினைத்துக்கொண்டிருந்தான். எப்பொழுதும் அவனுடன் கதைக்கும்போதும் உரையாடலில் நிச்சயம் அவளது பெயரும் வரும். நீண்ட காலமாக அவளைப்பற்றிய தகவல்கள் கிடைக்காததால் அவன் பல்வேறு நினைவுகளில் மூழ்கியிருந்தான். யுத்தபூமியில் அவள் இன்னும் இருக்கின்றாளா என்றும் சந்தேகப்பட்டான். இந்நிலையில் யுத்தம்…
-
- 0 replies
- 1.1k views
-