விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
மிரட்டல் மெக்குல்லம் ஏன் மிஸ் செய்வோம் தெரியுமா? அதிரடியாக கிரிக்கெட் ஆடுபவர்களை காட்டுத்தனமாக கிரிக்கெட் ஆடுகிறார்கள் என்று கூறுவோம். ஆனால் உண்மையிலுமே காட்டுத்தனமாக கிரிக்கெட் ஆடக்கூடியவர் மெக்கல்லம். லகான் படத்தில் ஒருவர் மட்டையை நெட்டுக்குத்தாகப் பிடித்து வித்தியாசமான முறையில் கிரிக்கெட் ஆடுவது போன்ற காட்சி இடம் பிடித்திருக்கும், இதனை பார்த்த பலர் இப்படியெல்லாம் படத்தில் தான் கிரிக்கெட் ஆடுவார்கள் என்றபோது, நிஜத்திலும் இப்படி கிரிக்கெட் ஆட முடியும் என அனாயாச சிக்சர்களை பறக்கவிட்டு மாஸ் காட்டியவர் மெக்கல்லம். அவர் வரும் பிப்ரவரியில் ஓய்வு பெற போகிறாராம். அவரை கிரிக்கெட் உலகம் கட்டாயம் மிஸ் செய்யும். ஏன்? அந்த போட்டியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந…
-
- 1 reply
- 939 views
-
-
ஆசியக்கோப்பை டி20: பிப்ரவரி 27-ல் இந்திய-பாக். போட்டி 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது பாகிஸ்தானுடன் இந்தியா மோதிய போட்டியில் ரசிகர்கள் உற்சாகம். | கெட்டி இமேஜஸ். வங்கதேசத்தில் நடைபெறும் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய-பாகிஸ்தான் அணிகள் பிப்ரவரி 27-ம் தேதி மோதுகிறது. 11 போட்டிகள் கொண்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் இந்த முறை டி20 போட்டிகளாக நடைபெறுகிறது. இதில் இந்தியா வங்கதேச அணியை பிப்ரவரி 24-ம் தேதியும், பாகிஸ்தான் அணியை பிப்ரவரி 27-ம் தேதியும் சந்திக்கிறது. பிப்ரவரி 24-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை வங்கதேசத்தில் ஆசியக் கோப்பை டி20 தொடர் நடைபெறுகிறது. மார்ச் 1-ம் தேதி இலங்கைக்கு எதிராக இந்திய அணி களமிறங்க…
-
- 1 reply
- 394 views
-
-
ஓய்வு அறிவித்தார் பிர்லோ ! இத்தாலி சூப்பர்ஸ்டார் ஆன்ட்ரூ பிர்லோ, கால்பந்து விளையாட்டுக்கு விடைகொடுத்துள்ளார். அவருக்கு வயது 38. இத்தாலி மிட்ஃபீல்டர் ஆன்ட்ரூ பிர்லோ, இரண்டு ஆண்டுகளாக நியூயார்க் சிட்டி அணிக்காக விளையாடிவந்தார். முன்னதாக ஏ.சி.மிலன், இன்டர்மிலன், ஜூவான்டஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். இதில், ஏ.சி.மிலன் அணிக்காக விளையாடியபோது, இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையைக் கைப்பற்றினார். 2006-ம் ஆண்டு, உலகக் கோப்பையை வென்ற இத்தாலி அணியிலும் பிர்லோ இடம் பிடித்திருந்தார். பிர்லோ ஃப்ரீகிக் மற்றும் பெனால்டி ஸ்பெஷலிஸ்ட். நடுக்களத்தில் அபாரமாக விளையாடக்கூடியவர். மிக நேர்த்தியான பாஸ்களையும் கோல் வாய்ப்புகளையும் உருவாக்கித்…
-
- 1 reply
- 514 views
-
-
-
- 1 reply
- 700 views
-
-
இந்தியா மோசமான தோல்வி! ஞாயிறு, 17 பிப்ரவரி 2008( 17:13 IST ) இன்று நடந்த 7வது லீக் போட்டியில் இந்திய அணியை 50 ரன் வித்தியாசத்தில் ஆஸ்ட்ரேலியா வீழ்த்தியது. அடிலெட்டில் இன்று இந்தியா- ஆஸ்ட்ரேலியா அணிகளுக்கு இடையே 7வது லீக் போட்டி நடந்தது. பூவா தலையா வென்று முதலில் பேட்டிங் செய்தது ஆஸ்ட்ரேலியா. தொடக்க வீரர்கள் கில்கிறிஸ்ட் (15), ஹைடென் (13) ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். பின்னர் வந்த பாண்டிங் 10 ரன்னில் பெவிலியன் திரும்பினார். மைக்கேல் கிளார்க் மட்டும் நன்றாக விளையாடி 79 ரன் குவித்தார். இதேபோல் ஹாக் 32 ரன் எடுத்தார். ம…
-
- 1 reply
- 1.3k views
-
-
FIFA 2016-க்கான சிறந்த வீரர் யார்? கால்பந்து விளையாட்டுக்கான சர்வதேச அமைப்பு FIFA, இந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான இறுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினாவின் மெஸ்ஸி மற்றும் பிரான்சின் அன்டோயின் கிறிஸ்மேன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். முதற்கட்ட பட்டியலில் 23 வீரர்கள் இருந்தார்கள். Fifa.com இணையதளம் வாயிலாக கால்பந்து ரசிகர்கள் இறுதிப் பட்டியலுக்கு ஓட்டுப்போட்டனர். இதன் அடிப்படையில், இம்மூன்று வீரர்கள் 2016-க்கான சிறந்த வீரருக்கான விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் சிறந்த வீரர் யார் என்பது ஜனவரி 9-ம் தேதி அறிவிக்கப்படும். http://www.vikatan.com/news/sports/74144-who-is…
-
- 1 reply
- 552 views
-
-
சச்சின் டெண்டுல்கரின் மகன் இலங்கைக்கெதிரான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன், இலங்கைக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். உலகின் தலைசிறந்த துடுப்பாட்டக்காரர்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ள சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். மேலும் சர்வதேச போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் சச்சின் 100 சதங்களுடன் முதலித்தில் உள்ளார். இந்தநிலையில் கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல…
-
- 1 reply
- 524 views
-
-
ஆஸி.யை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது தென் ஆப்பிரிக்கா. அடிலெய்டில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் பிஞ்ச் 14, கேமரூன் ஒயிட் 24, பென் டங்க் 2, ரியார்டன் 4 ரன்களுக்கு ஆட்ட மிழந்தனர். இதையடுத்து வாட்சனுடன் இணைந்தார் ஃபாக்னர். இந்த ஜோடி அதிரடியாக ஆட ஆஸ்தி ரேலியாவின் ஸ்கோர் உயர்ந்தது. வாட்சன் 47 ரன்களில் (36 பந்துகள்) ஆட்டமிழந்தார். ஃபாக்னர் ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் 41 ரன்கள் சேர்க்க, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்ரிக்ஸ் டக் அவுட்டாக,…
-
- 1 reply
- 309 views
-
-
இலங்கை அணியினை, இலக்கு வைத்து.. மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதல்? இலங்கை கிரிக்கட் அணி மீது தீவிரவாத தாக்குதல் நடத்தக் கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் மூன்று இருபதுக்கு இருபது போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இவ்வாறு பாகிஸ்தான் செல்லும் இலங்கை கிரிக்கட் அணி மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக பிரதம அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக பிரதமர் அலுவலகம், விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடாக ஸ்ரீலங்கா கிரிக்கட் சபைக்கு அ…
-
- 1 reply
- 647 views
-
-
‘பேரழிவுக்குத்தான் 2 புதிய பந்து’: சச்சின் காட்டம்; வக்கார் யூனிசும் ஆதரவு சச்சின் டெண்டுல்கர் : கோப்புப்படம் ஒருநாள் போட்டியை பேரழிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்தான் 2 புதிய பந்துகளை பயன்படுத்துகிறார்கள் என்று கிரிக்கெட் ஜாம்பவானும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான சச்சின் டெண்டுல்கர் கடுமையாகச் சாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஒரு நாள் போட்டிகளில் இரு புதிய பந்துகள் இரு அணி பேட்டிங்கின்போதும் பயன்படுத்தலாம் என்ற விதிமுறை கொண்டு வந்தது. கிரிக்கெட்டை பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும், பார்வையாளர்களுக்கு நல்ல விருந்தாகவும் அமைய வேண்டும் என்பதற்காக ஐசிசி இந்த விதிமுறையைத் திருத்தி அமைத்தது. …
-
- 1 reply
- 645 views
-
-
ஆஷஸ் முடிந்ததும் மைக்கேல் கிளார்க் ஓய்வு! ஆஷஸ் தொடர் முடிந்ததும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி மோசமாக தோல்வியை சந்தித்து வருகிறது. மேலும் கிளார்க்கின் மோசமான பார்மும் அவருக்கு எதிராக ஆஸ்திரேலிய ரசிகர்களையும், மீடியாக்களையும் திருப்பி விட்டுள்ளது. கடைசியாக அவர் விளையாடிய 28 இன்னிங்சுகளில் 668 ரன்களைத்தான் எடுத்துள்ளார். இதில் 2 முறை சதமடித்துள்ளார். சராசரி 28.67 ஆகும். இந்த 28 இன்னிங்ஸ்களில் கிளார்க் 23 முறை, 30 ரன்களுக்கும் குறைவாகவே எடுத்துள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரானத் தொடரில்தான் கிளார்க் அறிமுகம் ஆனார். கிளார்க் அறிமுகமான இந…
-
- 1 reply
- 291 views
-
-
தப்பாக டெலிவரி செய்த ஹோட்டல் ஊழியர்.. தென் ஆப்பிரிக்க பந்து வீச்சு வியூகம் பேஸ்புக்கில் லீக்கானது செஞ்சூரியன்: நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு எந்த மாதிரியான பந்துகளை வீச வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க பவுலர் டேல் ஸ்டெயினுக்கு அனுப்பப்பட்ட ஐடியாக்கள் அடங்கிய டிப்ஸ், வேறு ஒருவரின் கையில் சிக்கி தற்போது அம்பலமாகியுள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்துள்ளது. இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியரினில் நடக்கிறது. இதையடுத்து, நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை சமாளிக்க தென் ஆப்பிரிக்க முன்னணி பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினுக்கு வியூகம் அமைத்து கொடுத்தார் கோச். இதற்காக ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் எந்த இடத்தில் பந்து வீச வேண்டும், அவ…
-
- 1 reply
- 241 views
-
-
ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்த ஆப்கானிஸ்தான் அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடியது. டி20 தொடரை 2-1 எனவும், ஒருநாள் தொடரை 2-0 எனவும் வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்திய ஆப்கானிஸ்தான் அணி, ஜிம்பாப்வேவின் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரையும் 1-0 என வென்று அசத்தியுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் 699, ஜிம்பாப்வே 586 ஓட்டங்கள் என குவிக்க ஆட்டம் சமன் செய்யப்பட்டது. இந்த நிலையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னின்ஸில் 157 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த போதும், இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷீத் கானின் அபார பந்…
-
- 1 reply
- 473 views
- 1 follower
-
-
டென்னிஸ் ஊழலில் 16 வீர வீரராங்கனைகள் சிக்கியுள்ளனர் February 25, 2016 கடந்த 2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற டென்னிஸ் போட்டிகளில் 246 போட்டிகளில் ஊழல் இடம்பெற்றிருப்பதாக டென்னிஸ் நேர்மை அலகின் தலைவர் நைஜல் வெல்லேர்டன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். இவற்றுள் மூன்று கிறான்ஸிலாம் போட்டிகள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,’ வருடம் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும். கடந்த வருடத்தில் ஊழல் தொடர்பான 246 எச்சரிக்கைகள் எமக்கு கிடைக்கப் பெற்றது. இந்த எண்ணிக்கையானது வருடம் ஒன்றுக்கு நடைபெறும் டென்னிஸ் போட்டிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைந்த எண்ணிக்கை. இது மிகப் பெரு…
-
- 1 reply
- 489 views
-
-
தோனியின் ஆதார் தகவல்கள் வெளியானது ஏன்? சட்ட அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய சாக்ஷி! மத்திய அரசின் முக்கிய அடையாள அட்டையாக ஆதார் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் மானியம் பெறுவதற்கும், ரேஷன் கடைகளில் பொருள்கள் பெறுவதற்கும் ஆதார் எண் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வரப்படுகிறது. வங்கிக் கணக்கு தொடங்குதல், புதிதாக பான் அட்டை பெற, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய எனப் பல்வேறு பணிகளுக்கு ஆதார் எண் தேவைப்படுகிறது. இந்நிலையில், மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், தன்னுடைய ட்விட்டர் தளத்தில் தோனி ஆத…
-
- 1 reply
- 449 views
-
-
இந்தியா - மே.தீவுகள்: 5ஆவது போட்டி இன்று மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 5ஆவதும் இறுதியுமான போட்டி, இன்று இடம்பெறவுள்ளது. கிங்ஸ்டனில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இலங்கை நேரப்படி இரவு 7.30க்கு ஆரம்பிக்கவுள்ளது. இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் முடிவேதும் பெறப்படாத நிலையில், அடுத்த 2 போட்டிகளிலும், இந்திய அணி வெற்றிபெற்றது. ஆனால், 4ஆவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் பெற்ற வெற்றி, இந்தத் தொடருக்கு உயிர்ப்பை வழங்கியுள்ளது. எனவே, இன்று இடம்பெறும் போட்டியில் வென்றால் மாத்திரமே, தொடரைக் கைப்பற்ற முடியும் என்ற நில…
-
- 1 reply
- 553 views
-
-
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான உலகத் தர வரிசையில் இடம்பெறும் தகுதியை ஆப்கானிஸ்தான் அணி புதிதாகப் பெற்றுள்ளது. ஆசியக் கோப்பை போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு சில ஆண்டுகள் முன்பே வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி - சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையான ஐசிசியின் தர வரிசையில் 12ஆவது இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பதினோராவது இடத்தில் அயர்லாந்து அணியும், அதற்கு முன்னால் டெஸ்ட் பந்தயங்களில் விளையாடும் தகுதி கொண்ட பத்து நாடுகளும் இந்த தர வரிசையில் இடம்பெற்றுள்ளன. வங்கதேசத்துக்கு எதிராக பெற்ற வெற்றிதான் டெஸ்ட் விளையாடும் நாடொன்றுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெறுகின்ற முதல் ஒரு நாள் வெற்றி ஆகும். ஒன்றாம் தேதியன்று ஃபதுல்லா நகரில் நடந்த ஆட்ட…
-
- 1 reply
- 421 views
-
-
ICC மே மாதத்திற்கான சிறந்த வீரராக-மெத்தியூஸ்-தெரிவு! வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மாதத்திற்கான சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மே மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை அறிவித்துள்ளது. அண்மையில் பங்களாதேஷில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் ஏஞ்சலோ மெத்தியூஸின் துடுப்பாட்டம் இந்தப் பெயரிடலுக்குக் காரணமாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 1 reply
- 410 views
-
-
178 ஓட்டத்துக்குள் சுருண்டது நியூஸிலாந்து hare1 இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களுக்குள் சுருண்டுள்ளது. நியூஸிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி நியூஸிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக இடம்பெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சமநிலையில் முடிந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கிறிஸ்ட்சர்சில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்ப…
-
- 1 reply
- 526 views
-
-
நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸி அணி 604/7 இந்தியா 112/5 தென்னாஸ்திரேலிய நகரான அடிலெயிட்டில் நடைபெற்றுவரும் நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்த்திரேலிய அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 604 ஓட்டங்களைப் பெற்று தனது அட்டத்தினை நிறுத்திக்கொண்டது. இதில் அவ்வணியில் தலைவர் கிளாக் 210 ஓட்டங்களையும் அவ்வணியின் முன்னால்த் தலைவர் பொண்டிங் 220 ஓட்டங்களையும் பெற்றது குறிப்பிடத் தக்கது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 112 ஓட்டங்களை மட்டுமே இதுவரை பெற்றிருக்கிறது.இதில் இந்தியாவின் நட்சத்திரத் துடுப்பாட்டக்காரரும், தனது நூறாவது சத்தத்தைப் பெற்றுக்கொள்வார் என்று இத்தொடர் ஆரம்பமாகிய நா…
-
- 1 reply
- 806 views
-
-
லாராவின் சாதனையை எட்ட 86 ரன்களே தேவை : சங்கடத்துடன் விடைபெற்றார் சந்தர்பால் ! மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஷிவ்நாராயண் சந்தர்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். சுமார் 22 வருடங்கள் கிரிக்கெட்டுடன் பயணித்த அவருக்கும் பெரும்பாலான கிரிக்கெட்டர்களை போல, ஓய்வு பெறும் தருணம் இனிப்பாக இல்லை. கடந்த 1994-ம் ஆண்டு சந்தர்பால், கினியாவில் நடந்த போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இங்கிலாந்து அணிக்கு எதிராக முதன் முறையாக களம் இறங்கினார். இந்த போட்டியில் சந்தர்பால் அரை சதம் அடித்தார். மேற்கிந்திய தீவுகள் அணி இந்த போட்டியில், 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அவரது இறுதி டெஸ்ட் போட்டியும் இங்கிலாந்து அணிக்கு எதிராகவே அ…
-
- 1 reply
- 464 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தினேஷ் அகிரா பதவி, கிரிக்கெட் நிபுணர் 25 மே 2025, 12:03 GMT தோனி ஓய்வுபெற வலியுறுத்தும் ரசிகர்களின் கருத்துக்கள் உண்மையில் ஆச்சர்யத்தையே ஏற்படுத்துகின்றன. தோனியை நன்றாக அறிந்தவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல, வழக்கமான தோனி நகர்வுதான் என்பது எளிதாக புரிந்துவிடும். தோனியின் ஓய்வறிவிப்புகளுக்கு என்று ஒரு தனித்த பாணி உண்டு. திடீர் முடிவுகள் போல தோற்றம் அளித்தாலும், ஒரு ஃபார்முலாவின் படிதான் அவை எப்போதும் அமைந்துள்ளன. அது என்ன ஃபார்முலா? தனது தலைமைத்துவமோ ஆட்டத்திறனோ கேள்விக்குள்ளாக்கப்படும் போது தோனி முதலில் அமைதிகாப்பார், விமர்சனங்களை சிரித்த முகத்துடன் எதிர்கொள்வார்; சமயங்களில் சற்று ஆக்ரோஷத்துடன். அடுத்ததாக தனது செயல்பாடுகள…
-
- 1 reply
- 213 views
- 1 follower
-
-
யாழில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பாசையூர் சென் அந்தோனிஸ் மோதியது. நெஸ்லே லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ் உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் மாவட்ட ரீதியிலான மைலோ கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி, யாழ் துரையப்பா விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பாசையூர் சென் அந்தோனிஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. இதில் பாசையூர் சென் அந்தோனிஸ் விளையாட்டுக்கழகம் 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது - http://vvtfrance.com/?p=19442
-
- 1 reply
- 543 views
-
-
இலங்கையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடுத்துவதை தவிர்க்க சொல்லியும், நிறவெறியை பின்பற்றிய தென் ஆப்பிரிக்காவை இவ்வாறு கிரிகெட் போட்டியில் இருந்து உலகம் நீக்கியது போல இலங்கை அணியையும் போட்டியில் இருந்து நீக்க சொல்லியும் இந்த கையெழுத்து போராட்டம் வழியாக உலகின் முதன்மையான அணிகளின் அலுவலுகத்திற்கு மின்னஞ்சல் அனுப்புவோம். ஒரு லட்சம் கையெழுத்துக்கள் குவிக்க உறுதி கொள்ளுங்க தோழர்களே… போராட்டம் ஆரம்பிக்கட்டும்… நாம் வெல்வோம்… http://www.eelamwebsite.com/?p=10626 http://www.change.org/petitions/view/boycott_of_sri_lanka_cricket_2011 Muthamizh Chennai
-
- 1 reply
- 1.3k views
-
-
சச்சின் டெண்டுல்கர் : சாதனைகள் படைப்பதில் சரித்திரம் படைத்தவர் - 30 புள்ளிவிவரத் தகவல்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைSUHAIMI ABDULLAH 1987ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையோடு சுனில் கவாஸ்கர் தனது கிரிக்கெட் உலகுக்கு முழுக்குப் போட்டார். டெஸ்ட் போட்டிகளில் முதன் முதலாக பத்தாயிரம் ரன்களை கடந்தவர். டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் எடுத்திருந்தவர் என்ற டான் பிரா…
-
- 1 reply
- 1.5k views
-