Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சிலி அணிக்கு எதிரான நோக்-அவுட் சுற்றுப் போட்டியில் பெனால்டி கிக் முறையில் பிரேசில் வெற்றி பெற்றது. ஆனால் அதன் பிறகு அதன் முன்னணி வீரர்கள் நெய்மார், கோல் கீப்பர் சீசர், டேவிட் லூயிஸ், கேப்டன் தியாகோ சில்வா உள்ளிட்ட வீரர்கள் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டனர். இது பிரேசில் கால்பந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் மட்டுமல்ல பிரேசில் அணியின் முன்னாள் வீரர்கள் பயிற்சியாளர் ஸ்கொலாரி ஆகியோரையும் சற்றே நிலைகுலையச் செய்தது. இப்படி உணர்ச்சிவசப்படும் மன நிலையில் உள்ளவர்கள் உலகக் கோப்பையை வெல்ல முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் பயிற்சியாளர் ஸ்கொலாரிக்கு பழக்கமான ஸ்போர்ட்ஸ் சைக்காலஜிஸ்ட் ரெஜினா பிராண்டோ பிரேசிலுக்கு …

  2. கிரிக்கெட் இனி... 1843இல் இங்கிலாந்தில் கிரிக்கெட் ஆடும் ராணுவ தளபதி கிரிக்கெட் ஒரு காலனிய ஆட்டம். நியுசிலாந்து, இந்தியா, வங்கதேசம், இலங்கை, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே போன்ற அணிகள் இங்கிலாந்தின் வழிகாட்டலின் கீழ் ஆடிய ஒரு பண்பாட்டு பங்கேற்பு நிகழ்ச்சி. ஒரு காமன்வெல்த் நாடு என தன்னை இருத்திக் கொள்வதை தாண்டி இவ்விளையாட்டுக்கு ஒரு முக்கியத்துவம் இருந்ததில்லை. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்த துவங்கியது. இங்கிலாந்தின் கையில் இருந்து ஆட்சிக்கட்டிலை அது பறித்தது. இதைச் சொல்லும் போது பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்தே இந்த ஆட்டத்தை இங்கிலாந்து தான் ஆடி வளர்த்தெடுத்தது என நினைவில் கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியாவிடம் இருந்து மே…

    • 1 reply
    • 560 views
  3. உலக கோப்பை கால்பந்தில் தோல்வி: கேமரூன் அணி மீது சூதாட்ட விசாரணை உலக கோப்பை கால்பந்து போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்த கேமரூன் அணி தனது 3 லீக் ஆட்டத்திலும் தோல்வி கண்டு அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கேமரூன் அணி 0-4 என்ற கோல் கணக்கில் தோல்வி அடையும் என்று சூதாட்டத்தில் தண்டனை பெற்ற சிங்கப்பூரை சேர்ந்த புரோக்கர் வில்சன் ராஜ் பெருமாள் தெரிவித்ததாக ஜெர்மனி பத்திரிகையில் செய்தி வெளியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து கேமரூன் அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஏதேனும் ஈடுபட்டார்களா? என்பது குறித்து கேமரூன் கால்பந்து சங்கம் விசாரணை நடத்தி வருகிறது. இது குறித்து கேமரூன் கால்பந்து சங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘உலக …

  4. இலங்கை வந்தடைந்தது தெ.ஆபிரிக்க அணி 0 Submitted by Priyatharshan on Mon, 06/30/2014 - 16:11 இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி 3 ஒருநாள் போட்டிகளிலும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. தென்னாபிரிக்க அணி சார்பாக ஒருநாள் போட்டிக்கு ஏ.பி. டிவில்லியர்ஸ{ம் டெஸ்ட் போட்டிக்கு ஹசிம் அம்லாவும் தலைமை தாங்கவுள்ளனர். இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஜூலை மாதம் 6 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்திலும் 2 ஆவது ஒருநாள் போட்டி ஜூலை மாதம் 9 ஆம் திகதி பகலிரவு போட்டியாக கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்த…

  5. சர்வீஸ் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார் என்று முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் மீது செக். குடியரசு நாட்டைச் சேர்ந்த லூகாஸ் ரசூல் குற்றம்சாட்டியுள்ளார். லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி யின் 2-வது சுற்று ஆட்டத்தில் லூகாஸை நடால் தோற்கடித்தார். இதன் பிறகு செய்தியாளர் களிடம் பேசிய லூகாஸ், சர்வீஸ் செய்வதற்கு நடால் வேண்டுமென்றே அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார். முன்னணி வீரர்கள் இதுபோன்ற தவறை செய்யும்போது நடுவர்களும் அவர்களைக் கண்டு கொள்வது இல்லை. இது தவறான முன்னுதாரணம். அதே நேரத்தில் வளர்ந்து வரும் வீரர்கள் மட்டும் குறிப்பிட்ட நேரத்துக்குள் சர்வீஸ் செய்கிறார்கள். முன்னணி வீரர்கள் என்பதால் விதிகளை மீற அனுமதிக்கலாமா? இதனை யாரும் கண்டுகொள்ளா…

    • 3 replies
    • 521 views
  6. ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் குக்: மீண்டும் ஷேன் வார்ன் கடும் விமர்சனம் இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக் மீது ஷேன் வார்ன் கடும் விமர்சனம் வைத்தார். இம்முறை அலிஸ்டர் குக் கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் விலகியிருப்பது நல்லது என்று கூறியுள்ளார். டெலிகிராப் பத்திரிகையில் பத்தி எழுதி வரும் ஷேன் வார்ன் தொடர்ந்து இங்கிலாந்து கேப்டனை கடுமையாக விமர்சனம் செய்து வருவது சர்ச்சைக்குரியதாகி விட்டது. குக், சமீபத்தில் 'இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும்' என்று கூறியதோடு தனது கேப்டன்சி வெற்றி சுயபுராணத்தையும் வெளிப்படுத்தினார். இந்த நிலையில் இலங்கை முதன் முதலாக டெஸ்ட் தொடரில் வீழ்த்தியிருப்பதையடுத்து மேலும் கடுமையான விமர்சனங்களை தனது பத்தியில் எழுப்பியுள்ளார் ஷேன் வார்ன்…

  7. இதற்கு முன்னால் தோற்றதேயில்லையா? ஜேம்ஸ் ஆண்டர்சன் கண்ணீர் ஏன்?- கூறு போடும் பீட்டர்சன் சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக முதன்முதலாக டெஸ்ட் தொடரை இழந்த இங்கிலாந்து அணியினரிடத்தில் ஆழ்ந்த மகிழ்ச்சியின்மை இருக்கிறது என்கிறார் கெவின் பீட்டர்சன். லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் கடைசி ஓவரின் 5வது பந்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன், எரங்காவின் ஷாட் பிட்ச் பவுன்சரில் கேட்ச் ஆகி வெளியேறினார். ஆனால் அவரது கண்களில் கண்ணீர். இதற்கு முன் தோற்றபோதெல்லாம் கூட ஜேம்ஸ் ஆண்டர்சன் இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டதில்லை. இங்கிலாந்தின் மனோநிலை குறித்து பீட்டர்சன் தனது டெய்லி டெலிகிராப் பத்தியில் எழுதுகையில், “இலங்கைகு எதிராக 2 போட்டிகளிலும் வெற்றி பெறும் நிலையிலிருந்தனர். ஆனால் கோட்டைவிட்டனர். சீனியர் வீரர…

  8. உதைபந்தாட்ட உலகக்கிண்ணம் 2014 அடுத்த சுற்றுக்கான விளையாட்டுக்கள் இங்கே அருகருகே சோடியா இருக்கும் அணிகள் முதலில் அடுத்த சுற்றிலும் முறையே காலிறுதி அரையிறுதி என விளையாடி வெற்றி அடையும் அணி இறுதி ஆட்டத்திற்கு முன்னேறும் பிரேசில் எதிர் சிலி கொலும்பியா எதிர் உருகுவே பிரான்ஸ் எதிர் நைஜீரியா ஜேர்மனி எதிர் அல்ஜீரியா மேலுள்ள எட்டு அணிகளில் ஒரு அணியும் கீழே உள்ள எட்டு அணிகளில் ஒரு அணியும் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறுவார்கள் ஒல்லாந்து எதிர் மெக்சிக்கோ கோஸ்ரா ரிக்கா எதிர் கிரேக்கம் ஆர்ஜெண்டீனா எதிர் சுவிஸ் பெல்ஜியம் எதிர் அமேரிக்கா இறுதி ஆட்டம் இப்படியும் அமையலாம் பிரேசில் எதிர் ஆர்ஜெண்டீனா பிரேசில் எதிர் ஒல்லாந்து அல்லது ஜேர்மனி எதிர் ஒல்லா…

  9. லூயிஸ் சுவாரஸ் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின்போது இத்தாலி அணியின் வீரர் ஒருவரை கடித்தார் என்கிற குற்றச்சாட்டில் ஃபிஃபாவால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள லூயிஸ் சுவாரஸுக்கு ஆதரவாக கடி வாங்கியவர் குரல் கொடுத்துள்ளார். எதிரணி வீரரைக் கடித்தார் என்பதற்காக உருகுவே நாட்டின் சுவாரஸுக்கு நான்கு மாதங்களுக்கு கால்பந்து விளையாட்டுடன் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும், ஒன்பது சர்வதேசப் போட்டிகளில் விளையாடக் கூடாது என்றும் ஃபிஃபா நேற்று அறிவித்தது. ஆனால் ஃபிஃபாவின் இந்த தண்டனை மிகவும் கூடுதலானது என்று, அவரிடம் கடிவாங்கிய ஜியார்ஜியோ ச்சீலீனி கூறியுள்ளார். சுவாரஸும், ச்சீலீனியும் இது தவிர, தமது நாட்டின் மிகப்பெரும் கால்பந்து நட்சத்திரமான சுவாரஸை உலகக் கோப்பை போட்டிகளிலிருந்து வெ…

    • 2 replies
    • 570 views
  10. பிரேஸில் கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், அனுமதிக்கப்படாத உள்ளாடையொன்றை உலக கிண்ண போட்டி மைதானத்தில் பகுதியளவில் வெளிப்படுத்தியமை தொடர்பாக சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் (ஃபீஃபா) விசாரணை நடத்துவதாக கூறப்படுகிறது. கடந்த 23 ஆம் திகதி பிரஸிலியா நகரில் நடைபெற்ற கமரூன் அணியுடனான போட்டியில் 4:1 விகிதத்தில் பிரேஸில் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் இரு கோலக்ளை அடித்த நெய்மர், போட்டி முடிந்தவுடன் மைதானத்தில் வைத்து கெமரூன் வீரர் ஒருவருடன் ஜேர்ஸியை பரிமாறிக்கொண்டார் நெய்மர். அதன்பின் நெய்மர் தனது காற்சட்டையை சற்று கீழிறக்கியபோது அவர் அணிந்திருந்த உள்ளாடை பகுதியளவில் வெளிப்பட்டது. சாதாரணமாக இது ஒரு பிரச்சினையாக கருதப்பட்டிருக்க மாட்டாது. ஆனா…

  11. பிரேஸில் கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், அனுமதிக்கப்படாத உள்ளாடையொன்றை உலக கிண்ண போட்டி மைதானத்தில் பகுதியளவில் வெளிப்படுத்தியமை தொடர்பாக சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் (ஃபீஃபா) விசாரணை நடத்துவதாக கூறப்படுகிறது. கடந்த 23 ஆம் திகதி பிரஸிலியா நகரில் நடைபெற்ற கமரூன் அணியுடனான போட்டியில் 4:1 விகிதத்தில் பிரேஸில் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் இரு கோலக்ளை அடித்த நெய்மர், போட்டி முடிந்தவுடன் மைதானத்தில் வைத்து கெமரூன் வீரர் ஒருவருடன் ஜேர்ஸியை பரிமாறிக்கொண்டார் நெய்மர். அதன்பின் நெய்மர் தனது காற்சட்டையை சற்று கீழிறக்கியபோது அவர் அணிந்திருந்த உள்ளாடை பகுதியளவில் வெளிப்பட்டது. சாதாரணமாக இது ஒரு பிரச்சினையாக கருதப்பட்டிருக்க மாட்டாது. ஆன…

    • 0 replies
    • 642 views
  12. இங்­கி­லாந்தில் ஈட்­டப்­பட்ட வெற்றிப் பய­ணத்தை தொடர முடியும் என மெத்தியூஸ் நம்­பிக்கை இங்­கி­லாந்தில் ஈட்­டிய மகத்­தான வெற்­றி­யை­யிட்டு முழு அணி­யி­னரும் பெரு மகிழ்ச்சி அடை­கின்றோம். ஆசிய நாடுகள் ஆங்­கி­லேய மண்ணில் சாதிப்­பது அரி­தான விடயம். அங்கு எங்­க­ளுக்கு நிறைய சவால்­களை எதிர்­கொள்ள நேரிடும் என்­பதை முன்­கூட்­டியே அறிந்­தி­ருந்தோம். அவற்றை வெற்­றி­கொள்­வ­தற்­கான தந்­தி­ரோ­பா­யங்­களைப் பிர­யோ­கித்­ததன் மூலம் வெற்றி எம்மை நாடி வந்­தது. இந்த வெற்றி வீரர்கள் அனைவர் மத்­தி­யிலும் மகிழ்ச்சிப் பிர­வா­கத்தைத் தோற்­று­வித்­துள்­ளது. இந்த வெற்றிப் பய­ணத்தை தென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ரான தொடர்­க­ளின்­போது தொடர முடியும் என நான் வெகு­வாக நம்­பு­கின்றேன். இவ்­வாறு இங்­கி…

  13. கடி வாங்கிய இத்தாலி வீரர் சியெலினி, தடை செய்யப்பட்ட சுவாரேஸ். | படம்: ஏ.எஃப்.பி. இத்தாலி வீரர் சியெலினியை தோள்பட்டையில் கடித்த உருகுவே வீரர் சுவாரேஸிற்கு இந்த உலகக் கோப்பைப் போட்டிகள் உட்பட 4 மாதங்களுக்குத் தடை விதித்துத் தீர்ப்பளித்தது ஃபிஃபா. இந்தத் தடையினால் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய உருகுவே அணிக்குக் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காரணம் முதல் போட்டியில் கோஸ்டா ரிகாவுக்கு எதிராக சுவாரேஸ் காயம் காரணமாக விளையாடவில்லை, மாறாக அவர் விளையாடிய அடுத்த 2 போட்டிகளில் அவர் கோல்களை அடித்து அணியை அடுத்தச் சுற்றுக்கு இட்டுச் சென்றார். இவர் 4 மாதங்களுக்கு கால்பந்து தொடர்பான பயிற்சி, விளையாட்டு மற்றும் நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்க முடியாது. உலகக் கோப்பை அடுத்த சுற்று…

    • 0 replies
    • 386 views
  14. மஹேல, சங்கா இருவரும் தலா 11,493 டெஸ்ட் ஓட்டங்களுடன் ; நண்பர்களின் மற்றொரு ஆச்சரிய ஒற்றுமை இலங்கை அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்களான மஹேல ஜயவர்தனவும் குமார் சங்கக்காரவும் நெருங்கிய நண்பர்கள் என்பது பலருக்குத் தெரியும். தற்போது அவ்விருவரும் டெஸ்ட் போட்டிகளில் சம எண்ணிக்கையான (11,493) ஓட்டங்களுடன் உள்ளனர் என்பது வியக்கத்தக்க ஓர் ஒற்றுமையாகும். தற்போது நடைபெறும் இங்கிலாந்துடனான இரண்டாவது போட்டிக்கு முன் மஹேல ஜயவர்தன 11,392 ஓட்டங்களையும் குமார் சங்கக்கார 11,359 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். இங்கிலாந்துடனான இரண்டாவது போட்டியில்; மஹேல ஜயவர்தன முதல் இன்னிங்ஸில் 22 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 79 ஓட்டங்களையும் பெற்றார். அதேவேளை குமார் சங்கக்கார முதல் இன்ன…

    • 1 reply
    • 531 views
  15. கராச்சி அல்ல... ராஞ்சி... - நகைச்சுவை அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட தோனி தனது கிரிக்கெட் ஆட்டத்தின் ஆரம்ப காலங்களில் தனது ஊர் ராஞ்சி என்றால் மக்களுக்கு அது பற்றி புரியவில்லை, அதனை கராச்சி என்றே கருதி வந்ததாகவும், தற்போது கிரிக்கெட் மூலம் ராஞ்சி சர்வதேசப் புகழை எட்டியுள்ளது என்று கூறினார் தோனி. ஜே.எஸ்.சி.ஏ. ஸ்டேடியத்தில் கண்ட்ரி கிரிக்கெட் கிளப் தொடக்க விழா நிகழ்ச்சியில் தோனி பங்கேற்று தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது: எனது முதல் போட்டிக்கு முன்பாக நான் கென்யாவில் இருந்தேன், நான் அங்கு ஒரு சதம் எடுத்தவுடன் ரசிகர்கள் என்னிடம் நான் எந்த ஊர் என்று கேட்டனர், நான் ராஞ்சி என்றேன், உடனே நாடு பிரிக்கப்பட்டப் பிறகு என் பெற்றோர்கள் இங்கு வந்து விட்டன…

  16. லோட்ஸ் பெயர்ப்பலகையில் சங்கா, மெத்தியூஸின் நாமங்கள் இலங்கை கிரிக்கெட் அணியின் குமார் சங்கக்கார மற்றும் அஞ்சலோ மெத்யூஸ் ஆகியோரின் பெயர்கள் புகழ்பெற்ற லோட்ஸ் மைதான விசேட விருந்தினர் தங்கும் அறைக்கு அருகிலுள்ள பெயர்ப்பலகையில் பொறிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டின் போது பெற்றுக்கொண்ட சதங்களை கௌரவிக்கும் வகையில், இவர்களின் பெயர்கள் குறித்த பெயர்ப்பலகையில் பொறிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் சங்கக்கார, மூன்று முறை லோட்ஸ் மைதானத்தில் விளையாடியுள்ள போதிலும் சதம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கவில்லை, 36 வயதான குமார் சங்கக்கார 147 ஓட்டங்களை பெற்று இந்த கௌரவத்தைப் பெற்றுள்ளார். இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்யூஸ{ம் 102 ஓட்டங்களை பெற்று ச…

  17. 13 ம் திகதி நடைபெற்ற மெக்சிக்கோ எதிர் கமேரூன் விளையாட்டில் உதவி மத்தியஸ்த்தராகக் கடமையாற்றிய கொலம்பியாவைச் சேர்ந்த Humberto Clavijo என்பவர் அவரது பணியிலிருந்து உலக உதைபந்தாட்டச் சம்மேளனத்தினால் நீக்கப்பட்டுள்ளார்.இவர் 22 ம் திகதி நடைபெற உள்ள தென் கோரிய எதிர் அல்ஜீரியா விளையாட்டில் உதவி மத்தியஸ்த்தராக தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இவரது பணி நீக்கம் பலத்த சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. மெக்சிக்கோ எதிர் கமேரூன் விளையாட்டில் இரு முறை மெக்சிக்கோ அடித்த கோல்கள் இவரது சமிக்ஜையின் படி கோலாக மத்தியஸ்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.மெக்சிக்கோ வீரர் விதியை மீறியதாக( Off side ) இவர் சமிக்சை செய்திருந்தார்.இந்த விடயத்தில் உலக உதைபந்தாட்டச் சங்கம் இவர் மீது சந்தேகம் கொண்டே இ…

    • 2 replies
    • 532 views
  18. இந்திய மொடல் அழகி மஷ_ம் சின்கா என்பவரை அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷோன் டைட் திருமணம் செய்து கொண்டார். இருவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜுன் 12ஆம் திகதி இருவருக்கும் மும்பையில் திருமணம் இடம்பெற்றுள்ளது. டைடின் அவுஸ்திரேலிய நண்பர்கள் திருமணத்திற்கு வருகை தந்திருந்தனர். மேலும் இந்திய கிரிக்கெட் வீரர்களில் சகீர் கான் மற்றும் யுவ்ராஜ் சிங் ஆகியோரும் திருமணத்தில் பங்கேற்றனர். கடந்த ஆண்டு இருவரும் பாரீஸில் இருந்தபோது ஷோன் டெய்ட் தனது விருப்பத்தைத் தெரிவித்தார் என்று மஷ_ம் தெரிவித்துள்ளார். http://virakesari.lk/articles/2014/06/20/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%…

    • 0 replies
    • 424 views
  19. உலகக் கோப்பைக் கால்பந்துக் காய்ச்சல் கிரிக்கெட் விரர்களையும் தொற்றிக் கொண்டது. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த முறை ஜெர்மனி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். ஜெர்மனி அன்று போர்ச்சுகலை வீழ்த்திய போது முல்லரின் ஹேட்ரிக்கை வியந்தோதி ட்வீட் செய்திருந்தார் கோலி. ஜெர்மனி வீரர் பிலிப் லாம் என்பவரது விசிறி நான் என்று கூறிய கோலி, “இவருடைய பணி நேர்த்தி எனக்கு பிடித்தமானது. இவர்தான் ஜெர்மனி அணிக்கு நிறைய வெளிகளை உருவாக்கித் தருகிறார். இந்த முறை ஜெர்மனி உலகக் கோப்பை வெல்லவேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஏனெனில் அந்த அணி அபாயகரமான அணியாக திகழ்கிறது. இந்த ஆண்டு ஜெர்மனியின் ஆண்டாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். …

  20. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கான பயிற்சியாளர் குழுவில் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் அறிவித்துள்ளது. tamilmirror

  21. வங்கதேசத்தில் இந்திய அணி: ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம் ஜூன் 13, 2014. கோல்கட்டா: மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க, ரெய்னா தலைமையிலான இளம் இந்திய அணி நேற்று வங்கதேசம் சென்றது. இம்மாத இறுதியில் இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, 5 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு சர்வதேச ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. இதற்கு தயாராகும் விதமாக, இந்திய அணி, வங்கதேசத்தில் மூன்று போட்டிகள் (ஜூன் 15, 17, 19) கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. தோனி, கோஹ்லி, அஷ்வின், ரோகித் சர்மா உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், சுரேஷ் ரெய்னா தலைமையிலான இந்திய அணி விளையாடுகிறது. முதல் போட்டி மிர்புரில் நாளை நடக்கிறது. இதற்காக ரெய்னா தலைமையிலான இந்திய அணியினர் கோல்கட்டா…

  22. ஃபீஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை நேரில் கண்டு இரசிப்பதற்காக இங்கிலாந்து கால்பந்து அணியின் ரசிகர்கள் நால்வர் பிரேஸிலுக்கு நடந்தே சென்றுள்ளனர். ஃபீஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் பிரேஸிலில் நேற்று ஆரம்பமானது. இப்போட்டிகளைக் காண இங்கிலாந்து ரசிகர்களான அடம் பேர்ன்ஸ் (27), டேவிட் பெவிக் (32), பீட் ஜோன்ஸ்டன் (29) மற்றும் பென் ஒல்ஸென் (31) ஆகிய நால்வரே பிரேஸிலுக்கு நடந்து சென்றுள்ளனர். ஆர்ஜென்டீனாவின் மெண்டொசா நகரிலிருந்தே இவர்கள் ஒன்றிணைந்து பிரேஸிலின் போர்ட்டோ அலேகிரி நகருக்கு 1,966 கிலோ மீற்றர் தூரத்தை நடந்துசென்றுள்ளனர். இதன்போது பிரேஸில் வறட்சியில் வாடும் ஏழை மக்களுக்கு கிணறு தோண்டுவதற்காக 20 ஆயிரம் பவுண்கள் (சுமார் 44 இலட்சம் ரூபா) நிதி திரட்ட முய…

  23. யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் டுவேண்டி – 20 துடுப்பாட்டப் போட்டியில் தெல்லிப்பளை யூனியன்ஸ், ஸ்ரீகாமாட்சி, கிறாஸ்கோப்பர்ஸ் அணிகள் வெற்றிபெற்றன. யுவ பிரன்ட்ஸ் பவுண்டேஸன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட துடுப்பாட்டக் கழகங்களுக்கிடையில் டுவேண்டி – 20 துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. மே மாதம் 10 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சுற்றுப்போட்டியில் 18 அணிகள் பங்குபற்றுவதுடன், முதற் சுற்று ஆட்டங்கள் லீக் முறையில் இடம்பெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற முதற்போட்டியில் ஜொலிஸ்ரார்ஸ் அணியினை எதிர்த்து தெல்லிப்பளை யூனியன்ஸ் அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஜொலிஸ்ர…

  24. வில்லியம்சன் சதம்: நியூசிலாந்து அபாரம் ஜூன் 09, 2014. கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில், வில்லியம்சன் சதம் அடித்து கைகொடுக்க, நியூசிலாந்து அணி இமாலய இலக்கை நோக்கி செல்கிறது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஜமைக்காவில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கலம், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். நியூசிலாந்து அணிக்கு புல்டன் (1) ஏமாற்றினார். பின் இணைந்த டாம் லதாம், வில்லியம்சன் ஜோடி, வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை பதம்பார்த்தனர். பொறுப்பாக ஆடிய லதாம் அரைசதம் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்த போது, ஷில்லிங்போர்டு ‘சுழலில்’ லதாம் …

  25. மொகமது ஷமி. | கோப்புப் படம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமி கொல்கத்தாவைச் சேர்ந்த மாடல் அழகி ஹசின் ஜஹன் என்பவரைத் திருமணம் செய்தார். ஐபிஎல் நிகழ்ச்சி ஒன்றில் ஹசின் ஜஹனைச் சந்தித்திருந்தார் மொகமது ஷமி. மொராதாபாதில் நடைபெற்ற எளிமையான இந்த திருமணத்திற்கு நண்பர்களும் உறவினர்களும் வந்திருந்தனர். இந்திய வீரர்கள் ஒருவரும் திருமணத்திற்கு வரவில்லை. இதற்கான காரணத்தை மொகமது ஷமியின் தந்தை கூறுகையில், “ஷமியின் சக இந்திய வீரர்களை நாங்கள் அழைக்கவில்லை, காரணம் அவர்களது நிலைமை பற்றி தெரியவில்லை. எனினும் கொல்கத்தா அல்லது டெல்லியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதில் இந்திய வீரர்கள் நிச்சயம் கலந்து கொள்வார்கள்” என்றார். வங்கதேசத் தொடருக்கு ஷமிக்கு ஓய்வு அளிக்கப…

    • 0 replies
    • 536 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.