விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
ஆறாவது ஐபிஎல் போட்டியின் தொடக்க விழா கோலாகல கொண்டாட்டத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடக்க நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான், காத்ரினா கைஃப் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சியில் சீன இசை வாசிக்கப்பட உள்ளது. ரசிகர்களைக் கவரும் வாணவேடிக்கைகளும் நிகழ்த்தப்பட உள்ளன. தொடக்க நிகழ்ச்சி குறித்து கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் கூறுகையில், "இதுபோன்ற தொடக்க நிகழ்ச்சிகளை இதுவரை இந்தியாவில் எங்கும் கண்டிருக்க முடியாது. அந்த அளவு சிறப்பாக இருக்கும்' என்றார். இப்போட்டியில் 9 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகவும் பி…
-
- 1 reply
- 599 views
-
-
இலங்கை டுவென்டி டுவென்டி அணியின் தலைவர் டினேஷ் சந்திமால் தனக்கான இந்தியன் பிரீமியர் லீக் வாய்ப்பை நிராகரித்துள்ளார். மேலதிக பயிற்சிகளைப் பெற விரும்பியதன் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இலங்கையின் டுவென்டி டுவென்டி அணியின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட அவர், இன்றையதினம் தனது முதலாவது போட்டியில் பங்குகொள்ளவுள்ளார். இந்நிலையில் காயமடைந்துள்ள டெல்லி டெயாடெவில்ஸ் அணி வீரர் கெவின் பீற்றர்சனுக்குப் பதிலாக டினேஷ் சந்திமாலை அவ்வணி அணுகியதாகவும் எனினும் அந்த வாய்ப்பை டினேஷ் சந்திமால் நிராகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளுக்காக ஐ.பி.எல் இடம்பெறவுள்ள 2 மாதங்களில் கடுமையான பயிற்சிகளில் ஈடுபடவுள்ள…
-
- 4 replies
- 596 views
-
-
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜெசி ரைடர் நேற்று இரவு பாரில் ஏற்பட்ட அடிதடியில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் தற்போது கோமாவில் உள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜெசி ரைடர்(28). அவர் மெரிவேல் என்ற இடத்தில் உள்ள பாருக்கு நேற்று இரவு சென்றார். அவரும் அவரது நண்பர்களும் பாரில் குடித்துவிட்டு வெளியே வந்தபோது யாரோ அவரை தாக்கியுள்ளனர். சுமார் 4 பேர் ரைடரை கடுமையாக தாக்கியதாக சம்பவத்தைப் பார்த்த ஒருவர் தெரிவித்தார். ஆனால் தாக்கியவர்கள் யார், எதற்காக தாக்கினர் என்று இன்னும் தெரியவில்லை. இந்திய நேரப்படி இரவு 12.44 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தில் ரைடரின் மண்டையோடு உடைந்தது. இதையடுத்து அவர் கிறைஸ்ட்சர்ச் மருத்துவமனையில் அனுமதிக்கப்…
-
- 1 reply
- 573 views
-
-
. இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான முதலாவது டெஸ்ற் போட்டியின் முதல்நாள் முடிவில் இலங்கை அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. காலியில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, இன்றைய நாள் ஆட்டம் மழை காரணமாக 4.3 ஓவர்கள் முன்னதாகவே நிறுத்தப்படும் போது 3 விக்கெட்டுக்களை இழந்து 361 ஓட்டங்களைக் குவித்திருந்தது. இலங்கை அணி 46 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்னவின் முழங்கையில் பந்து பட்டதன் காரணமாக அவர் வெளியேற, டில்ஷானுடன் இணைந்து குமார் சங்கக்கார…
-
- 6 replies
- 689 views
-
-
சுஷந்திகாவுக்கு ஆலோசகர் பதவி! ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு பதக்கமொன்றை பெற்றுக்கொடுத்த முன்னாள் மெய்வல்லுனர் வீராங்கனை சுஷந்திகா ஜயசிங்கவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சில் ஆலோசகர் பதவியொன்று வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அடுத்தமாதம் முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவின் ஆலோசனைப்படியே இப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. http://www.virakesari.lk/article/local.php?vid=3398
-
- 1 reply
- 705 views
-
-
இந்திய அணியில் இருந்து ஷேவாக் நீக்கம் இந்திய அணியிலிருந்து ஷேவாக் நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் புதிய அணிக்கான பெயர் விபரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அணிக்கெதிரான மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்தே அவர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சமீபகாலமாக டெஸ்ட் அரங்கில் தொடர்ந்தும் இவர் ஏமாற்றி வருவ டன் அரைச்சதம் கூட அடிக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அத்னபடி அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியின் நான்கு இன்னிங்சில் மொத்தம் 27 ஓட்டங்கள் தான் எடுத்திருந்தார். இருப்பினும், இந்திய அணி வெற்றி பெற்றதால் மீதமுள்ள போட்டிகளிலும் ஷேவாக் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்…
-
- 0 replies
- 386 views
-
-
உதைபந்தாட்ட ரசிகர்கள் தவறவிடவேண்டாம் .இன்னமும் மூன்று மணித்தியாலங்கள் இருக்கு ஆட்டம் ஆரம்பிக்க . வாழ்த்துக்கள் மன் யு .
-
- 15 replies
- 984 views
-
-
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் முதல் நாளிலேயே 9 விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆஸ்திரேலியா 237 ரன்கள் எடுத்த நிலையில் திடீரென டிக்ளேர் செய்தது. இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்திருக்கிறதுஇந்தியா வருகை தந்துள்ள கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சென்னையில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இந்திய அணி அபாரமாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.இதைத் தொடர்ந்து இன்று ஹைதராபாத்தில் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.இன்று காலை போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாட…
-
- 12 replies
- 974 views
-
-
கொடுப்பனவு பிரச்சினை தொடர்பில் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்களுக்கும், சிறிலங்கா கிரிக்கடுக்கம் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. கிரிக்கட் வீரர்களுடனான சிறிலங்கா கிரிக்கட்டின் உடன்படிக்கை கடந்த மாதத்துடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கிரிக்கட் வருமானத்தில் 78 சதவீத கொடுப்பனவை கோரியுள்ள சிரேஷ்ட்ட கிரிக்கட் வீரர்கள் 23 பேருடன், மேலும் சில வீரர்களும் சிறிலங்கா கிரிக்கட்டுடன் உடன்படிக்கையை ஏற்படுத்த மறுத்து வருகின்றனர். இதற்கிடையில் இன்றைய தினத்துக்குள் சிறிலங்கா கிரிக்கட்டின் உடன்படிக்கையில் சிரேஷ்ட வீரர்கள் கைச்சாத்திடவில்லை என்றால், எதிர்வரும் பங்களாதேஸ் அணிக்கு எதிரான கிரிக்கட் போட்டித் தொடருக்கு…
-
- 4 replies
- 697 views
-
-
ஆனந்தா - நாலந்தா மாணவரிடையே முறுகல்; பொலிஸார் கண்ணீர்க்குண்டு பிரயோகம் கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கும் நாலந்தா கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது கைகலப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதனால் அப்பகுதியில் கலவர நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக கலகமடக்கும் பொலிஸார் அழைக்கப்பட்டதோடு பொலிஸாரால் கண்ணீர்க்குண்டுப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு எஸ்.எஸ்.சி விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்த கலவரத்தின் போது மாணவர்கள், அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்டமையினாலேயே கண்ணீர்க்குண்டு பிரயோகம் மேற்கொள்ள நேரிட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பி.எம்.எச்.பீ.சிறிவர்தன தெரிவித்தார். See more at: http://t…
-
- 0 replies
- 485 views
-
-
உலகத்தில் அதிகளவு செலவீனங்களை கொண்ட விளையாட்டுக்களில் ஒன்றாக ஃபோர்மியுலா வன் திகழ்கிறது. மோட்டார் கார் பந்தையமான இந்த விளையாட்டு, வருடாந்தம் உலகின் பல முன்னணி கார் தயாரிப்பாளர்களின் பங்களிப்புடன் இடம்பெறுகிறது. இந்த விளையாட்டுக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட கார், ஓடு பாதை, டயர்கள், விதிமுறைகள் என பல விசேட அம்சங்கள் இந்த போட்டித்தொடரில் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு வருடமும் இந்த போட்டி விதிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதோடு, இந்த விதிமுறைகளை பொறுத்து ஒவ்வொரு கார் தயாரிப்பாளர் நிறுவனத்தினதும் மொத்த செலவீனம் தீர்மானிக்கப்படுகிறது. இலங்கையில் கிரிக்கெட், கால்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகள் அதிகளவில் புகழ்பெற்றுக் காணப்படுகின்றன. இந்த விளையாட்டுக்கள் குறித்து அதிகளவில் ப…
-
- 3 replies
- 606 views
-
-
ஆப்பிரிக்க நாடுகள் இடையிலான கால்பந்தாட்டப் போட்டியில் நைஜீரியா மூன்றாவது தடவையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஞாயிறன்று நடந்த இறுதி ஆட்டத்தில் புர்கினோ ஃபாஸோவை 1-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியா வென்றது. நைஜீரிய அணியின் சண்டே ம்பா அற்புதமான கோலை அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஆட்டத்தின் முதல் பாதியில் ம்பா இந்த கோலை அடித்திருந்தார். புர்கினோ பாஸோ அணியின் வில்ஃப்ரட் சனூ ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கோல் எண்ணிக்கையை சமன் செய்ய முயன்றார். ஆனால் நைஜீரிய கோல்கீப்பர் வின்செண்ட் என்யீமா தனது விரல் நுனியால் அந்த கோலைத் தடுத்து நிறுத்தி விட்டார். இதற்கு முந்தைய ஆப்பிரிக்க நாடுகளிடையிலான பந்தயங்களைப் பொறுத்தவரை வெளிநாடுகளில் நட…
-
- 2 replies
- 447 views
-
-
சென்னையில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் டோணி இரட்டை சதமடித்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 206 ரன்களுடன் கேப்டன் டோணி ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இதேபோல் கோஹ்லி மற்றும் டெண்டுல்கரின் அற்புதமான ஆட்டங்களால் இந்திய அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 515 ரன்களை எடுத்திருக்கிறது.சென்னையில் ஆஸ்திரேலியாவுடனான முதலாவது டெஸ்ட் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 380 ரன்களைக் குவித்தது. பின்னர் இந்திய அணி நேற்று தமது முதல் இன்னிங்ஸை தொடங்கியது.இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய சேவாக்கும் முரளி விஜய்யும் 12 ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர். ஆனால் களத்தில் இருந்த ப…
-
- 2 replies
- 844 views
-
-
சென்னை: ஆசிய தடகள போட்டியை நடத்த முடியாது என, தமிழக அரசு அறிவித்த நிலையில், சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க முடியுமா என்று கேள்வி எழுந்துள்ளது. விளையாட்டில் அரசியலை கலக்கக் கூடாது என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது தான். ஆனால், ஒரு நாட்டில் அளவுக்கு அதிகமான கொடுமைகள் நிகழும் போது, சர்வதேச விளையாட்டு சமூகம் ஒதுக்கி வைக்கிறது. உதாரணமாக இனவெறி சர்ச்சை காரணமாக, தென் ஆப்ரிக்கா சர்வதேச விளையாட்டு அரங்கில் இருந்து சில காலம் ஒதுக்கி வைக்கப்பட்டது. கால்பந்துக்கு எதிர்ப்பு: இதே போல, இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான கடைசி கட்ட போரில், மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இதையடுத்து, "நட்பு' போட்டியில் பங்கேற்க சென்னை வந்த இல…
-
- 1 reply
- 526 views
-
-
இன்று இந்தியாவில் மகளிர்க்கான உலக கோப்பை கிரிக்கெட் ஆரம்பமானது .முதல் ஆட்டத்தில் இந்தியா மேற்கிந்திய தீவுகளை வெற்றி கொண்டுள்ளது . இந்திய தரப்பில் விளையாடும் இரு தமிழ் வீரர்களும் மிக சிறப்பாக விளையாடினார்கள் . காமினி ஆரம்ப ஆட்டக்காரராக களம் இறங்கி சதம் அடித்தார் ,பந்து வீச்சில் நிரஞ்சனா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்கள். மொத்தம் எட்டு அணிகள் விளையாடுகின்றன . இங்கிலாந்து ,இந்தியா ,மேற்கிந்திய தீவுகள் ,சிறி லங்கா பிரிவு A அவுஸ்திரேலியா ,நியுசிலாந்து ,பாகிஸ்த்தான் ,தென்னாபிரிக்கா பிரிவு B.
-
- 30 replies
- 2.2k views
-
-
பயிற்சி போட்டி; இந்தியா 338 ரன்கள் இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட், 22ம் தேதி சென்னையில் துவங்குகிறது. இதற்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய அணி இரண்டு பயிற்சி போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் போட்டி “டிரா’ ஆனது. சென்னையில் துவங்கிய (3 நாட்கள்)இரண்டாவது பயிற்சி போட்டியில் இந்தியா “ஏ’, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. “டாஸ்’ வென்ற இந்தியா “ஏ’ அணி கேப்டன் காம்பிர் “பேட்டிங்’ தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா அணிக்கு ஷேன் வாட்சன் கேப்டன் பொறுப்பை ஏற்றார். இந்திய “ஏ’ அணிக்கு கேப்டன் காம்பிர், ஜிவன்ஜோத் சிங் ஜோடி துவக்கம் கொடுத்தது. ஜிவன்ஜோத் சிங் 24 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் காம்பிர், தனது சிறப்…
-
- 0 replies
- 330 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக அஞ்சலோ மெத்தியூஸின் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளுக்கான தலைராக செயற்டவுள்ளார். அத்துடன் தினேஷ் சந்திமால் டுவென்டி டுவென்டி சர்வதேச போட்டிக்கான தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளுக்கான உப தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார். டுவென்டி டுவென்டி சர்வதேச போட்டிக்கான உப தலைவராக லசித் மலிங்க அறிவிக்கப்பட்டுள்ளார். http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/58909-2013-02-14-07-11-06.html
-
- 7 replies
- 871 views
-
-
. அவுஸ்திரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்களால் இலகுவாக வெற்றிபெற்றது. பேர்த் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 23.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 70 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. முதலாவது விக்கெட்டை 14 ஓட்டங்களுக்கு இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 39 ஓட்டங்களைப் பெற்றுத் தடுமாறியது. அதன் ப…
-
- 4 replies
- 471 views
-
-
2020-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இருந்து மல்யுத்தத்தை நீக்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுவிட்சர்லாந்தில் இன்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நடப்பு ஒலிம்பிக் அட்டவணையில் உள்ள 26 விளையாட்டுக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, மல்யுத்தத்தை நீக்கிவிட்டு வாள்வீச்சு, குதிரை சவாரி, நீச்சல், ஒட்டப்பந்தயம், துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய நவீன பென்டத்லான் போட்டிகளை சேர்க்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஒலிம்பிக் போட்டியில் இருந்து ஏதாவது ஒரு விளையாட்டை நீக்கினால்தான், ஒரு புதிய விளையாட்டை சேர்க்க முடியு…
-
- 2 replies
- 464 views
-
-
இலங்கைக் கிரிக்கெட் அணியின் தேர்வாளராக இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜெயசூரிய நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மாத இறுதியில் இலங்கைக் கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களின் எண்ணிக்கையில் ஒருவர் அதிகரிக்கப்படவுள்ளார். இதற்கான பரிந்துரைக்கான நபர்களின் விபரங்கள் இலங்கை விளையாட்டு அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதிலேயே சனத் ஜெயசூரியவின் பெயரும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 11 பேரின் விபரங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், இந்தப் பட்டியலில் மேலும் சிலர் சேர்க்கப்படலாம் எனவும், இவர்களில் ஒருவர் இலங்கைக் கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப்படவுள்ளார். சனத் ஜெயசூ…
-
- 12 replies
- 867 views
-
-
பிரேசில் உதைபந்தாட்ட அணிக்கெதிரான சிநேகபூர்வமான போட்டியில் இங்கிலாந்து அணி வரலாற்று ரீதியிலான வெற்றியை பதிவுசெய்துள்ளது. இங்கிலாந்தின் வெம்பிளி மைதானத்தில் நடைபெற்ற இந்த நட்பூ ரீதியிலான போட்டியில் 2-1 என்ற கோல்கள் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காது போராட்ட குணத்தை வெளிப்படுத்தி தலா ஒரு கோலை போட்டு சமநிலை வகித்தன. இதையடுத்து இரண்டாம் பாதியில் விறுவிறுப்புடன் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு 60 ஆவது நிமிடத்தில் பிராங் லெம்பேர்ட் வெற்றிக் கோலைப் போட்டார். இந்நிலையில் 23 ஆண்டுகளின் பின்னர் பிரேசில் அணி இங்கிலாந்து அணிக்கெதிரான வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது. http://www.virakesa…
-
- 1 reply
- 498 views
-
-
முகமட் அலியை வென்ற முதல் வீரர் ஜோ விறேஸர் அண்மையில் நுரையீரல் கான்சரால் காலமானார்.அவர்களது குத்துச்சண்டை காட்சிகள் சில .... http://www.youtube.com/watch?v=QzG1WsCzXJk&feature=related
-
- 3 replies
- 1.2k views
-
-
கால்பந்தாட்ட சூதாட்டங்கள் ஐரோப்பிய காவல்துறையான யூரோபோல் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளன. ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் கால்பந்தாட்டப் போட்டிகளில் ஆட்ட நிர்ணய சூதாட்டங்கள் பெருமளவில் நடந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காவல்துறை கண்டறிந்துள்ளது. ஐரோப்பாவில் மட்டும் கிட்டத்தட்ட 400 போட்டிகளில் சூதாட்டம் நடந்துள்ளதாக சந்தேகம் இருப்பதாக யூரோபோல் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது. அதே அளவான எண்ணிக்கைகொண்ட மேட்ச்-ஃபிக்சிங் சூதாட்டங்கள் ஆபிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் நடந்துள்ளதாக பல நாடுகளையும் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளை உள்ளடக்கிய யூரோபோல் தெரிவித்துள்ளது. உலகக் கிண்ணப் போட்டித் தொடர், ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடருக்கான …
-
- 3 replies
- 483 views
-
-
ஐ.பி.எல்.போட்டி ஏலத்தில் இலங்கை விரர்கள் விபரம் இந்திய பிறிமியர் லீக் போட்டி ஏலத்தில் இலங்கை வீரர்கள் பலரும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். இதன்படி அஜந்த மென்டிஸ் 7,25,000 அமெரிக்க டொலர்களுக்கும் திசர பெரேரா 6,75,000 அமெரிக்க டொலர்களுக்கும் சவீந்ர சொய்சா 6,25,000 அமெரிக்க டொலர்களுக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். இவேளை மென்டீஸ் 50,00 அமெரிக்க டொல்களுக்கும் அகில 20,000 அமெரிக்க டொலர்களுக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் இந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 2013 ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் ஏப்ரல் 3-ம் திகதி தொடங்க உள்ளது. இவற்றுக்கான வீரர்கள் ஏலம் எடுக்கும் முறை இன்று (03) ஆரம்பமாகியுள்ளது…
-
- 1 reply
- 671 views
-
-
விஜ் ஆன் ஜீ:டாடா ஸ்டீல் செஸ் தொடரின் 12வது சுற்றுப் போட்டியில், உலக சாம்பியன் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றார். நெதர்லாந்தில் உள்ள விஜ் ஆன் ஜீ நகரில், 75வது டாடா ஸ்டீல் செஸ் தொடர் நடக்கிறது. இதில் நார்வேயின் கார்ல்சன், ஆர்மினியாவின் ஆரோனியன் உள்ளிட்ட 42 முன்னணி வீரர்கள், மூன்று பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றனர்.ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், 12வது சுற்றுப் போட்டியில் நெதர்லாந்தின் எர்வின் எல் அமியை சந்தித்தார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், 54வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.இந்தியாவின் ஹரிகிருஷ்ணா, சீனாவின் ஹயோ வாங் மோதிய போட்டி 49வது நகர்த்தலின் போது டிரா ஆனது. அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுராவுக்கு எதிர…
-
- 0 replies
- 488 views
-