விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
நியூஸிலாந்து Vs ஆப்கானிஸ்தான் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் : இந்தியாவின் அரையிறுதிக் கனவு தகர்ந்தது 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இன்னொரு போட்டி எஞ்சியிருக்கும்போதே, டி20 உலகக் கோப்பை இந்தியாவுக்கு கிடைக்காது என்ற செய்தி வந்துவிட்டது. ஆப்கானிஸ்தானுக்கும் நியூசிலாந்துக்கும் இடையேயான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற வேண்டும் என்ற பெருங்கனவை இந்திய ரசிகர்கள் கண்டிருப்பார்கள். ஆனால் அது கொடுங்கனவாகவே முடிந்து போய்விட்டது. விராட் கோலியின் டி20 அணித் தலைமை மிகப் பெரிய தோல்வியுடன் நிறைவடைந்திருக்கிறது. நியூசிலாந்து அணியுடனான போட்டியின் தொடக்கத்திலேயே பலவீனமான அணி என்ப…
-
- 1 reply
- 470 views
- 1 follower
-
-
2022 இருபது - 20 உலகக் கிண்ணத்திலும் இலங்கைக்கு போராட்டமே ! (துபாயிலிருந்து நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போடடியிலும் இலங்கை முதல் சுற்றிலிருந்து விளையாட நேரிட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை 9ஆம் இடத்திலுள்ளதாலேயே அடுத்த வருட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலும் இந்த வருடத்தைப் போன்று முதல் சுற்றிலிருந்து விளையாட நேரிட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 7ஆவது இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் முதல் சுற்றில் 3 போட்டிகளிலும் வெற்றியீட்டிய பின்னர் சுப்பர் 12 சுற்றில் பங…
-
- 0 replies
- 368 views
-
-
தான் இன்னும் ஓய்வு பெறவில்லை - கிறிஸ் கெய்ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்த பேச்சுக்களை மறுத்துள்ள கிறிஸ் கெய்ல், மீண்டும் டி-20 உலகக் கிண்ணத்தில் விளையாடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் 42 வயதான கிறிஸ் கெய்ல் இந்த டி-20 உலக கிண்ண கிரிக்கெட்டில் பிரகாசிக்கவில்லை. நேற்றைய அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2 சிக்ஸருடன் 15 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். நடப்பு உலக கிண்ணதொடரில் அதிக வயது (42) வீரரான கிறிஸ் கெய்ல் 5 ஆட்டங்களில் விளையாடி வெறும் 45 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளார். கெய்லின் ஆட்டத்திறன் பாதிப்பும் மேற்கிந்தியத்தீவுகள் அணி அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெள…
-
- 0 replies
- 545 views
-
-
டி20 உலகக்கோப்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வுதான் பிரச்னையா? - தொடர் தோல்விகளின் பின்னணி ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியின் தொடர் தோல்விகளால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். ` டி20 போட்டியைவிடவும் ஐ.பி.எல் போட்டிகளை பெரிதாக நினைத்ததன் விளைவாகத்தான் இப்படியொரு தோல்வி ஏற்பட்டுள்ளது' என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள். துபாயில் நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோற்றுப் போனது. இந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய இ…
-
- 1 reply
- 385 views
- 1 follower
-
-
இலங்கை கபடி அணியின் பயிற்சியாளராக தமிழ்நாட்டை சேர்ந்த பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெறவுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் தயாராகி வருகின்றன. இதன்படி, இலங்கை அணியும் தயாராகி வருகிறது. குறிப்பாக அந்நாட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி அணிகளுக்கு பயிற்சியாளராக தமிழ்நட்டைச் சேர்ந்த பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் சூழியக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் தற்போது திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் வசித்து வருகிறார்.இந்திய கபடி அணியின் முக்கிய வீரராகவும் பயிற்சி…
-
- 0 replies
- 403 views
-
-
இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமனம் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் புதன்கிழமை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் நியமிக்கப்பட்டார். அதன்படி டி-20 உலகக் கிண்ணத்துக்கு பின்னர் நவம்பர் 17 ஆம் திகதி தொடங்கும் நியூசிலாந்திற்கு எதிரான உள்நாட்டு தொடரில் இருந்து முன்னாள் இந்திய அணித் தலைவர் டிராவிட் அணியின் தலைமைப் பயிறச்சியாளராக பொறுப்பேற்பார். தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் நடந்துகொண்டிருக்கும் ஐ.சி.சி. டி20 உலகக் கிண்ணத்துடன் முடிந்தவுடன் முடிவடைகிறது. திருமதி சுலக்ஷனா நாயக் மற்றும் திரு ஆர்.பி. சிங் அடங்கிய இந்திய கிரிக்கெட் ஆலோசனைக் குழு புதன்கிழமை ஒருமனதாக ராகுல் டிரா…
-
- 1 reply
- 511 views
-
-
இந்தியா Vs பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை: 'இது சாதாரண ஆட்டமல்ல' - இரு நாடுகளிலும் உணர்ச்சிப் பெருக்கு 20 அக்டோபர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES அக்டோபர் 24 ஞாயிற்றுக்கிழமை துபாயில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "எங்களுக்கு இது மற்ற போட்டிகளைப் போன்றதே.", என்று விராட் கோலி பதிலளித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து கேப்டன் விராட் கோலி கூறிய இந்த கருத்தை 'விதிவிலக்காக' எடுத்துக் கொள்ளலாம். சுமார் 28 மாதங்களுக்குப் பிறகு, இரு நாடுகளின் அணிகளும் நேருக்கு நேர் சந்திக்கும்…
-
- 2 replies
- 661 views
- 1 follower
-
-
அவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்... மைக்கேல் ஸ்லேட்டர் கைது குடும்ப வன்முறை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் வர்ணனையாளராக தற்போது செயற்பட்டுவரும் 51 வயதான மைக்கேல் ஸ்லேட்டர் இன்று புதன்கிழமை சிட்னியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவம்தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் மேலதிக விவரங்களை வெளியிடவில்லை. 1993 முதல் 2001 வரை அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த மைக்கேல் ஸ்லேட்டர் 74 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். https://athavannews.com/2021/1245854
-
- 0 replies
- 358 views
-
-
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் காலமானார்! இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான பந்துல வர்ணபுர இன்று, தனது 68 ஆவது வயதில் காலமானார்.உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேச டெஸ்ட் அந்தஸ்து கிடைத்தபின்னர், அணியின் முதலாவது தலைவராக இவர் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் காலமானார்! – Athavan News
-
- 0 replies
- 617 views
-
-
கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் கைது! October 18, 2021 ஹரியாணா காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடைக்கால பிணையில் விடுவிக்கப்பட்டார். ஜூன் 2020ல் இன்ஸ்டாகிராம் வீடியோவில் யுவராஜ் சிங் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சாஹலின் டிக்டாக் வீடியோக்களைப் பற்றி விவாதித்தனர். அப்போது யுஸ்வேந்திர சாஹல் சாதி குறித்து அவதூறாக பேசியது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. பெரும் விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து யுவரான் சிங் தனது ட்விட்டரில் கடந்த ஆண்டு பகிரங்க மன்னிப்பு கோரினார். அவர் கூறுகையில் ‘‘நான் எனது நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தி வி…
-
- 0 replies
- 523 views
-
-
ஐபிஎல் டி20 தொடர் நாளை தொடக்கம்- முன்னேற்றம் காணுமா கொல்கத்தா? செய்திப்பிரிவு ஐபிஎல் டி20 தொடரில் கடந்த சீசனில் தொடக்க ஜோடி, நடுவரிசை, போட்டியை வெற்றிகரமாக முடித்து வைக்கும் வீரர்ஆகியோர் கண்டறியப்பட்டிருந்தாலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கொல்கத்தா அணி தடுமாற்றம் அடைந்தது. தொடரின் நடுப்பகுதியில் கேப்டன் மாற்றப்பட்டதும் பலன் கொடுக்கவில்லை. ஆந்த்ரே ரஸ்ஸல் கடந்தசீசனில் பேட்டிங்கில் தடுமாறினார். அதேவேளையில் சுனில்நரேன் பந்து வீச்சு பாணி சர்ச்சைக்குள்ளானது. இவர்களின் பார்ம் ஒட்டுமொத்த அணியின் ஸ்திரத்தன்மையை பதம் பார்த்தது. விளைவு 2-வதுமுறையாக கொல்கத்தா அணியில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனது.இந்த சீசனில் கொல்கத்தா அணிதனது முதல் ஆட்டத்தில் வ…
-
- 89 replies
- 8.3k views
- 1 follower
-
-
உம்ரான் மாலிக்: ஐபிஎல் போட்டிகளில் அசுர வேகத்துடன் மிரட்டும் ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் வீரர் மோஹித் கந்தாரி ஜம்முவிலிருந்து பிபிசி இந்திக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER ஜம்மு நகரில் வசிப்பவரும் பழங்கள் மற்றும் காய்கறி விற்பனையாளருமான அப்துல் ரஷீத்தின் இளைய மகன் உம்ரான் மாலிக் இந்திய கிரிக்கெட்டில் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில், உம்ரான் மாலிக் மணிக்கு 150 கிமீ வேகத்தில் பந்து வீசினார். உம்ரான் தனது வேகமான மற்றும் சிறந்த பந்துவீச்சு மூலம் அனைவரையும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல், வரும் நாட்களி…
-
- 0 replies
- 486 views
- 1 follower
-
-
இப்படியுமா களத்தடுப்பு அமைப்பது ? இங்கிலாந்தை துவம்சம் செய்த களத்தடுப்பு வியூகம்- வைரல் வீடியோ…! இப்படியுமா களத்தடுப்பு அமைப்பது ? இங்கிலாந்தை துவம்சம் செய்த களத்தடுப்பு வியூகம்- வைரல் வீடியோ…! ஐரோப்பிய கிரிக்கெட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி தொடரில் பின்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் ஒரு வித்தியாசமான களத்தடுப்பாட்டம் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து மற்றும் பின்லாந்து அணிகள் மோதிய ஐரோப்பிய கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு மிகச்சிறந்த களத்தடுப்பு வியூகத்தை பின்லாந்து அமைந்தமை ஆச்சரியமாக இருந்தது. பின்லாந…
-
- 0 replies
- 664 views
-
-
பிரேசில் ஜாம்பவான் பீலேக்கு அறுவை சிகிச்சை பிரேசில் ஜாம்பவான் பீலே தனது பெருங்குடலில் இருந்து கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்துள்ளார். "கடந்த சனிக்கிழமையன்று வலது பெருங்குடலில் சந்தேகத்திற்கிடமான கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்தேன், என்று அவர் ஒரு சமூக ஊடக பதிவில்" குறிப்பிட்டார். அத்துடன் தான் உயிரிழந்து விட்டதாக வெளியான தகவல்களையும் மறுத்த அவர், நன்றாகவுள்ளதாகவும் உறுதிபடுத்தினார். பிரேசிலிய கால்பந்து ஜாம்பவான் பீலே வழக்கமான பரிசோதனைகளின் போது உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக சாவோ பாலோவில் ஆறு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல உள்ளூர் ஊடகங்கள் திங்களன்று செய்தி வெளியிட்டன. 80 வயதான அவர் ஆகஸ்ட் 31 முதல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மரு…
-
- 3 replies
- 520 views
-
-
(நெவில் அன்தனி) அங்குரார்ப்பண லங்கா ப்றீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் சம்பியனான ஜவ்னா ஸ்டாலியன்ஸ் அணியின் உரிமையாளர்கள், அதன் உரிமைத்துவத்திலிருந்து கனத்த இதயத்துடன் விலகிக்கொண்டுள்ளனர். 'இது ஒரு கவலை தரும் செய்தியாகும். எமது பணியை மீண்டும் செயல் உருவாக்குவதற்கு நாங்கள் எங்களால் ஆன அதிகபட்ச முயற்சியில் ஈடுபட்டோம். ஆனால், அது சாத்தியப்படவில்லை. சுருங்கச் சொல்லின் இப்படி ஒரு முடிவுக்கு வருவோம் என நாங்கள் நிச்சயமாக எண்ணவில்லை' என ஜவ்னா ஸ்டாலியன்ஸ் ஸ்தாபனத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'யாழ்ப்பாணத்தை நேசிப்பதாலும் இலங்கையில் எமது பணி அர்த்தம் மிக்கதாக அமைய வேண்டும் என்பதாலும் எமது உரிமைத்…
-
- 1 reply
- 603 views
-
-
பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை ரத்து செய்தது நியூசிலாந்து: பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS நியூசிலாந்து அரசு வழங்கிய பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக பாகிஸ்தானில் விளையாடும் திட்டத்தை ரத்து செய்துள்ளனர் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள். பாகிஸ்தானில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் நடைபெறவிருந்தன. ராவல்பிண்டியில் வெள்ளியன்று ஒரு நாள் போட்டி தொடர் தொடங்கவிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிட்டதட்ட 10 நாட்கள் பாகிஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நியூசிலாந்து அணி தற்போது திட…
-
- 0 replies
- 432 views
- 1 follower
-
-
விராட் கோலி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் இரசிகர்கள் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் தான் ஓய்வுபெறவுள்ளதாக இந்திய அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 17 முதல் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் ஓமானில் இடம்பெறவுள்ள ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக் கோப்பை முடிந்த பின்னர், டி 20 களின் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து தான் விலகுவதாக விராட் கோலி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். இந்நிலையில் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ன டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் தொடர்ந்து தனது அணியை வழிநடத்துவதாகவும் தெரிவித்துள்ளார். அண…
-
- 3 replies
- 683 views
- 1 follower
-
-
மலிங்கவும் சர்வதேச கிரிக்கெட் பயணமும் ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் உலகில் மிகச் சிறந்த டி-20 பந்து வீச்சாளராக கருதப்படும் லசித் மலிங்க, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். லசித் மலிங்க தனது யூடியூப் அலைவரிசை மூலமாக இந்த அறிவிப்பினை நேற்று அறிவித்தார். மலிங்கா இலங்கைக்காக 30 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகள் மற்றும் 84 டி-20 போட்டிகளில் விளையாடி 546 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2004 இல் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமான மலிங்க, குறுகிய காலத்திலேயே இலங்கை அணியின் அனைத்து சர்வதேச சுற்றுப் பயணங்களிலும் இடம்பிடித்தார். புகழ்பெற்ற சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் மலிங்க, இலங்கை அணி…
-
- 0 replies
- 445 views
-
-
இலங்கை பாராலிம்பிக் வீரர் அனீக் அஹமட் காலமானார் யூ.எல். மப்றூக், இலங்கை BBCCopyright: BBC அனீக் அஹமட்Image caption: அனீக் அஹமட் புற்று நோய் காரணமாக தனது காலொன்றை இழந்த பின்னரும், விளையாட்டில் தேசிய ரீதியாக தங்கப் பதக்கங்களை வென்று சாதனைகள் படைத்த இலங்கை - கிழக்கு மாகாணம் காத்தான்குடியைச் சேர்ந்த அனீக் அஹமட் இன்று திங்கட்கிழமை காலமானார்.2019ஆம் ஆண்டு கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நடைபெற்ற தேசிய பராமெய் வல்லுனர்போட்டியில் கலந்து கொண்ட அனீக் அஹமட், அதில் 3 தங்க பதக்கங்களை வென்றிருந்தார். அவரின் அந்தச் சாதனை குறித்து அப்போது பிபிசி தமிழ் - கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தது.உதைப்பந்து விளையாடும் போது - காலில் ஏற்பட்ட…
-
- 0 replies
- 430 views
- 1 follower
-
-
44 வருடகால பிரிட்டனின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் லெய்லா பெர்னாண்டஸை வீழ்த்தி எம்மா ரடுகானு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர்க்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் சனிக்கிழமை நியோர்க்கில் ஆர்தர் ஆஷே அரங்கில் பிரிட்டன் வீராங்கனை எம்மா ரடுகானு மற்றும் கனேடிய வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ் ஆகியோருக்கு இடையில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 18 வயதான எம்மா ரடுகானு 6-4 6-3 என்ற கணக்கில் 19 வயது கனேடிய வீராங்கனையை தோற்கடித்து சம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதன் மூலம் எம்மா ரடுகானு பிரிட்டனின் மகளிரிக்கான ஒரு பெரிய கிண்ணத்தின் 44 வருட காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். …
-
- 3 replies
- 694 views
- 1 follower
-
-
அமெரிக்க ஓபன் ; பிரிட்டிஷ் இளம் வீராங்கனை எம்மா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பிரிட்டிஷ் இளம் வீராங்கனை எம்மா ரடுகானு அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். நியோர்க்கில் வியாழக்கிழமை நடைபெற்ற அமெரிக்க ஓபன் மகளிர்க்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் கீரிஸின் மரியா சக்காரியை எதிர்கொண்டார் எம்மா ரடுகானு. இந்த ஆட்டத்தில் எம்மா ரடுகானு, 6-1 6-4 என்ற கணக்கில் மரியா சக்காரியை தோற்கடித்து கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். 44 ஆண்டுகளின் பின்னர் ஒரு பெரிய தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் பிரிட்டிஸ் பெண் இவர் ஆவார். இதேவேளை அமெரிக்க ஓபன் மகளிர்க்கான ஒற்றையர் பிரிவின் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் …
-
- 2 replies
- 453 views
- 1 follower
-
-
மகேந்திர சிங் தோனி வருகை: விராட் கோலியுடன் அவர் இணைவதை இந்தியா கொண்டாடுவது ஏன்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஓராண்டுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மகேந்திர சிங் தோனியை டி20 உலகக் கோப்பை போட்டிக்காக மீண்டும் அழைத்திருக்கிறது இந்திய அணி. இந்த முறை அவரது ஹெலிகாப்டர் ஷாட்களை ரசிகர்கள் பார்க்க முடியாது. மின்னல் வேக ஸ்டம்பிங்குகளும் காணக் கிடைக்காது. ஆனால் மிஸ்டர் கூல் என்று அழைக்கப்படும் அவரது தலைமைப் பண்பை மட்டும் நிச்சயமாகப் பார்க்க முடியும் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் இப்போது அவர் அணியில் இடம்பெறவில்லை, இந்திய டி-20 அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிர…
-
- 2 replies
- 607 views
- 1 follower
-
-
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் டெஸ்ட்: ஓவல் டெஸ்டில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வெற்றி 6 செப்டெம்பர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES பரபரப்பான கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி நான்காவது டெஸ்ட் போட்டியை வென்றிருக்கிறது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. பெருமை மிக்க ஓவல் மைதானத்தில் 1971-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா பெற்றிருக்கும் முதல் டெஸ்ட்வெற்றி இது. 50 ஆண்டுக் காத்திருப்பு இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. 1971-ஆம் ஆண்டு அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணிதான் கடைசியாக ஓவல் ம…
-
- 1 reply
- 460 views
- 1 follower
-
-
மழை காரணமாக 2 ஆவது ஒருநாள் போட்டி 47 ஓவர்களாக குறைப்பு! சுற்றுலா தென்னாபிரிக்கா அணி மற்றும் இலங்கை அணிக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாக இருந்த நிலையில் சீரற்ற காலநிலையால் போட்டி பாதிக்கப்பட்டது. அதன்படி, போட்டியை 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்த நடுவர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. முன்னதாக இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/n…
-
- 0 replies
- 579 views
-
-
ஜெங் தாவோ: நீச்சல் போட்டியில் 6 தங்கப் பதக்கம் - யார் இந்த ஜெங் தாவோ? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ஆண்கள் நீச்சல் போட்டியில் பங்கேற்ற பிறகு ஜெங் தாவோ. சீனாவை சேர்ந்த ஜெங் தாவோவுக்கு 30 வயது. ஒரு மின்சார ஷாக்கில் தமது இரண்டு கைகளையும் இழந்த இவர், டோக்யோ பாராலிம்பிக் நீச்சல் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்களை அள்ளினார். "என்னைப் பார் மகளே, கைகள் இல்லாவிட்டாலும் என்னால் வேகமாக நீந்த முடிகிறது!" என்று ஒரு போட்டிக்குப் பிறகு தமது மகளுக்கு அனுப்பிய ஒரு வீடியோ மெசேஜில் கூறினார் ஜெங். குழந்தையாக இருக்கும்போதே தமத…
-
- 0 replies
- 405 views
- 1 follower
-