Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 7 ஆவது தடவையாகவும் சம்பியனானார் ஹேமில்டன் போர்முலா - 1 கார் பந்தயத்தில் ஏழாவது தடவையாக லூயிஸ் ஹேமில்டன் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்த ஆண்டுக்கான போர்முலா - 1 கார் பந்தயம் உலகம் முழுவதும் 17 சுற்றுகளாக நடக்கிறது. இதன் 14 ஆவது சுற்றான துருக்கி கிராண்ட்பிரி இஸ்தான்புல் நகரில் நேற்று நடந்தது. இதில் 309.396 கிலோமீட்டர் பந்தய தூரத்தை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். 6 ஆவது வரிசையில் இருந்து காரை மின்னல் வேகத்தில் செலுத்திய நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லூயிஸ் ஹேமில்டன் (மெர்சிடஸ் அணி) ஈரப்பதமான ஓடுபாதை சூழலை திறம்பட சமாளித்து 1 மணி 42 நிமிடம் 19.313 நிமிடங்களில் இலக்கை கடந்து வெற்றி பெற்றார். அவருக்கு 25…

    • 1 reply
    • 835 views
  2. 7 டெஸ்ட் கிரிக்கெட் நாடுகளுக்கு தலா 10 மில்லியன் டொலர்கள் பூரண அங்­கத்­துவ அந்­தஸ்­து­டைய ஏழு கிரிக்கெட் சபை­க­ளுக்கு அடுத்த எட்டு வரு­டங்­க­ளுக்கு மொத்­த­மாக 10 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) வழங்­க­வுள்­ளது. இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபை, இங்­கி­லாந்து கிரிக்கெட் சபை, கிரிக்கெட் அவுஸ்­தி­ரே­லியா நிறு­வனம் ஆகிய 'முப்­பெரும் சக்தி' கிரிக்கெட் ஆளுமை சபையை கடந்த வருடம் பொறுப்­பேற்­ற­போது இது குறித்த அறி­விப்பை விடுத்­தி­ருந்­தது. இந்த 'முப்­பெரும் சக்­திகளை விட பூரண அங்­கத்­துவம் பெற்ற மற்­றைய ஏழு நாடு­க­ளுக்கு அடுத்த வருடம் முதல்…

  3. 7 மாதங்களுக்குப் பின் அணிக்குத் திரும்புகிறார் டி வில்லியர்ஸ்..! அதே வேகம், அதே அதிரடி என உற்சாகமாக அணிக்குத் திரும்பியிருக்கிறார் டி வில்லியர்ஸ். கடந்த ஜூன் மாதத்தில் கரீபிய மண்ணில் நடந்த வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முத்தரப்பு போட்டியில் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து ஒதுங்கினார். காயத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டார். இருந்தாலும் பூரண குணமடைய நீண்ட காலம் ஆனது. இதனால் அணியில் இருந்து பல மாதங்கள் ஒதுங்கியே இருந்தார். இதோ இந்த தொடரில் வந்துவிடுவார், அந்த தொடரில் வந்துவிடுவார் என ரசிகர்கள் ஒவ்வொரு முறை எதிர்பார்க்கும்போதும் ஃபிட்னெஸ் சோதனையில் தோல்வியைத் தழுவி விளையாட முடியாத சூழ்நிலையில் இருந்தார். …

  4. 7 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டத்துடன் ஆஸி. இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸுக்காக 7 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களை குவித்துள்ளது. இவ் விரு அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து, நேற்றைய ஆட்ட நேர முடிவின் வரை இந்திய அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை குவித்திருந்தது. ஆடுகளத்தில் மெஹமட் ஷமி 6 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார். இந் நிலையில் போட்டியின் இரண்டாம் நாளான இன்று முதல் பந்திலேயே ஷமி ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸுக்காக 2…

  5. 7,600 அடி உயரத்தில் கிரிக்கெட் குயின்ஸ்டவுன்: நியூசிலாந்து வீரர்கள், பாலிவுட் நடிகர் இணைந்து 7,600 அடி உயரத்தில் கிரிக்கெட் விளையாடினர். பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா, 30. சமீபத்தில் இந்தியா, நியூசிலாந்தின் சுற்றுலா துாதராக இவர் நியமிக்கப்பட்டார். நியூசிலாந்து சென்ற இவர், ஒருநாள் காலையில் முன்னாள் கேப்டன் பிளமிங், வீரர்கள் ஸ்காட் ஸ்டைரிஸ், சைமன் டவுலை அழைத்துக் கொண்டு, அங்குள்ள ‘இசோபெல் கிளேசியர்’ என்ற மலைப்பகுதிக்கு ஹெலிகாப்டரில் கிளம்பினார். கடல் மட்டத்தில் இருந்து 7,600 அடி உயரத்தில் உள்ள இது ஒரு பனிப் பிரதேசம். எப்போதும் பனிப்பொழிவு காணப்படும். இங்கு சென்ற இவர்கள் கிரிக்கெட் ‘மேட்டை’ விரித்து ஆடுகளத்தை தயார் செய்தனர். இருபுறமும்…

  6. 70 வயதிலும் இத்தனை பதக்கங்கள்... ஆசிய தடகளப் போட்டியில் அசத்திய கோவை வீராங்கனை! கடந்த மே மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற 19 வது ஆசிய தடகளப் போட்டியில், இந்தியாவுக்காக 2 தங்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கங்களை வென்று பெருமிதத்துடன் திரும்பியிருக்கிறார் கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்த லட்சுமி லோகநாதன். இவருக்கு வயது 70 என்பதுதான் இதில் ஹைலைட். ஆம், இவர் பங்குபெற்றது முதியோருக்கான தடகளப் போட்டிகள்! ''சாதிக்க முயற்சி மட்டும் இருந்தால்போதும், வயது என்பது ஒரு பொருட்டே இல்லை'' என உற்சாகம் பொங்கப் பேசுகிறார், லட்சுமி லோகநாதன். ''நான் என் வீட்டுக்கு ஒரே பெண். ஒவ்வொரு முறை விளையாட்டு போட்டிக்கு போகும்போதும் வீட்டில் போராட்டம்தான். பெண் என்பதைக் காரணம…

    • 1 reply
    • 600 views
  7. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் அண்டர்சன் புதிய சாதனை படைத்துள்ளார். இந்தியா இங்கிலாந்து இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை துவக்கிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாக் கிராலி 79 ரன்கள் குவித்து இருந்தார். இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணியில் ரோகித் சர்மா 103…

  8. 72 பந்துகளில் 277 ஓட்டங்களைக் குவித்து லண்டன் பிராந்திய அணியில் இலங்கையர் சாதனை [07 - September - 2007] 20/20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியொன்றில் இலங்கையின் முதல்தர ஆட்டக்காரர் ஒருவர் 72 பந்துகளில் 277 ஓட்டங்களை குவித்து வியக்க வைத்திருக்கிறார். தனுகா பத்திரன என்ற இலங்கையரே இந்தச் சாதனையைப்படைத்துள்ளார்.இங்க

  9. அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற நேஷனல் மாஸ்டர்ஸ் என்ட் சீனியர் அத்லடிக்ஸ் (National Masters & Seniors Athletics) போட்டியில் முல்லைத்தீவை சேர்ந்த வீராங்கனை இரண்டு தங்கப்பதக்கங்களை தனதாக்கியுள்ளார். இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முல்லைத்தீவு - முள்ளியவளை, சேர்ந்த அகிலத்திருநாயகி (75 வயது) (ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தர்) என்ற வீராங்கனையே இந்த சாதனையை படைத்துள்ளார். தங்கப் பதக்கம் வென்று சாதனை 1500 மீட்டர் ஓட்டப்போட்டி மற்றும், 5000m விரைவு நடை ஆகிய போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார். மேலும் 800m ஓட்டபோட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் தனதாக்கியுள்ளார். https://tamilwin.com/article/ecord-at-the-age-of-…

  10. இந்திய முன்னாள் கப்டனும் சுழற்பந்து வீச்சாளருமான பிஷன் சிங் பேடிக்கு எதிராக 750 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்போவதாக இலங்கையின் சுழற்பந்து வீச் சாளர் முத்தையா முரளிதரன் கூறியுள்ள அதேநேரம், முரளிதரனை நீதிமன்றில் சந்திக்கத் தயாரென பிஷன் சிங் பேடி கூறியுள்ளார். முரளியின் பந்துவீச்சு முறை குறித்து பிஷன் சிங் பேடி அவ்வப்போது குறைகூறி வந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரரென்ற சாதனையை அடுத்த இரு மாதங்களில் முரளிதரன் முறியடிப்பாரென எதிர்பார்க்கப்படுகையில் முரளியின் பந்துவீச்சு முறையை பேடி மிக மோசமாகக் குறைகூறியுள்ளார். முரளி பந்தை எறிவதாகவும் அவரது பந்துவீச்சு முறையானது ஈட்டி எறிவது போன்றும் குண்டெறிவது போன்றுமிரு…

    • 2 replies
    • 1.4k views
  11. 758 கோடி ரூபாய் கொடுத்து கிரிஸ்மானை வாங்க தயாராகும் பார்சிலோனா நெய்மர் அணியை விட்டு விலகுவதாக கூறி வருவதால் கிரிஸ்மானை 758 கோடி ரூபாய் கொடுத்து வாங்க பார்சிலோனா விரும்புகிறது. கால்பந்து விளையாட்டின் தலைசிறந்த வீரராக பிரேசில் நாட்டின் நெய்மர் திகழ்ந்து வருகிறார். இவர் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப்பான பார்சிலோனாவிற்காக விளையாடி வருகிறார். தற்போது அவர் பார்சிலோனா அணியை விட்டு வெளியேற விரும்புகிறார். கடந்த ஆண்டும் இதுபோன்று வெளியேறுவதாக கூறினார். இறுதியில் பார்சிலோனாவுடன் 2021 வரை விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது பிரான்ஸ் நாட்டின் ம…

  12. 76 ஓட்டங்களுக்கு சுருண்ட இந்தியா அகமதபாத்தில் தற்பொழுது நடைபெறும் 2வது மட்டைப்பந்து போட்டியில் தென்னாபிரிக்கா அணியினரின் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துக்கு தாக்குப்பிடிக்க முடியாத இந்தியா சகல ஆட்டக்காரர்களையும் இழந்து 76 ஓட்டங்களையே பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே சென்னையில் நடைபெற்ற போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது தெரிந்ததே.

    • 9 replies
    • 2.5k views
  13. ஆண்கள் ஒற்றையர் விம்பில்டன் ரெனிஸ் சம்பியன்சிப் 77 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பிரிட்டனிடம் வந்துள்ளது. கடைசியாக 1936 இல் Fred Perry என்பவரால் இந்த தலைப்பு வெல்லப்பட்டிருந்தது. இன்று வெம்பில்டனில் நடந்த இறுதிப் போட்டியில் உலகின் முதல் தர வீரரான Novak Djokovic ஐ 6-4 7-5 6-4 என்ற செற்களில் தோற்கடித்து ஆன்டி மொரே (Andy Murray) (இவர் ஒரு ஸ்கொட்லாண்ட் வீரர் ஆவார். ஸ்கொட்லாண்ட் 2014 இல் பிரிட்டனில் இருந்து தனி நாடாக பிரிந்து செல்வதற்கான வாக்களிப்பை நடத்த உள்ளது) 77 ஆண்டுகள் நீண்ட காத்திருப்பினை முடிவுக்குக் கொண்டு வந்து இந்த வெற்றியை.. பெற்றுக் கொடுத்துள்ளார். வாழ்த்துக்கள் ஆன்டி மொரே. http://www.bbc.co.uk/sport/0/tennis/23217393 https://www.youtube.com/watch?v=…

    • 1 reply
    • 853 views
  14. இந்தியா vs பாகிஸ்தான்: சென்னையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மோதுவதால் ரசிகர்கள் உற்சாகம் பட மூலாதாரம்,HOCKEY INDIA கட்டுரை தகவல் எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு பதவி, பிபிசி செய்தியாளர் 30 ஜூலை 2023 7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளன. சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச ஹாக்கி விளையாட்டு போட்டி நடைபெறவுள்ளது ஹாக்கி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 25 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இந்திய அணியும்…

  15. 7ஆவது தடவையாக பலூன் டோரை வென்ற மெஸ்ஸி ஏழாவது தடவையாக, உலகின் சிறந்த வீரருக்கான பலூன் டோர் விருதை ஆர்ஜென்டீனாவின் லியனல் மெஸ்ஸி வென்றுள்ளார். போலந்தின் றொபேர்ட் லெவன்டோஸ்கி, இத்தாலியின் ஜோர்ஜினியோவைத் தாண்டியே விருதை இம்முறை மெஸ்ஸி வென்றிருந்தார். மெஸ்ஸி 613 புள்ளிகளைப் பெற்ற நிலையில், லெவன்டோஸ்கி 580 புள்ளிகளையும், ஜோர்ஜினியோ 460 புள்ளிகளையும் பெற்றிருந்தனர். இந்நிலையில், சிறந்த முன்களவீரராக லெவன்டோஸ்கியும், சிறந்த கோல் காப்பாளராக இத்தாலியின் ஜல்லூயிஜி டொன்னருமா தெரிவானார். சிறந்த கழகமாக இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் செல்சி தெரிவாகியது. சிறந்த வீராங்கனையாக ஸ்பெய்னின் அலெக்ஸியா புடெல்லஸ் தெரிவாகியிருந்தார். …

  16. [size=3][size=4][/size][/size] [size=3][size=4]ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை வழங்கப்பட்ட பதக்கங்களை விட, லண்டன் ஒலிம்பிக்கில் வழங்கப்படவுள்ள பதக்கங்கள் தான் அதிக எடையும், விலை மதிப்பும் மிகுந்தவையாகும்.[/size][/size] [size=3][size=4]இதற்காக மங்கோலியா மற்றும் அமெரிக்காவின் உதா மாகாணம் ஆகிய பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட 8 ஆயிரம் கிலோ எடை கொண்ட தங்கம், வெள்ளி, வெண்கலம் பயன்படுத்தப்பட்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்(ஊனமுற்றோர்) போட்டிகளுக்கு மொத்தம் 4,700 பதக்கங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.[/size][/size] [size=3][size=4]கடந்த ஜூலை மாதம் 2ஆம் திகதி லண்டன் கொண்டு வரப்பட்ட இந்தப் பதக்கங்கள் இப்போது லண்டன் டவரில் பலத…

  17. 8 ஆவது உலக கரம் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் By VISHNU 06 OCT, 2022 | 11:16 AM (என்.வீ.ஏ.) மலேசியாவின் லங்காவி உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் 8 ஆவது உலக கரம் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான குழுநிலைப் பிரிவில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. இலங்கை சார்பாக முன்னாள் உலக சம்பியன் நிஷான்த பெர்னாண்டோவும் ஷஹீத் ஹில்மியும் இணைந்து வெண்கலப் பதக்கதை வென்றனர். பங்களாதேஷ் அணியினரை எதிர்த்தாடிய இலங்கை அணி 2 - 1 ப்ரேம்கள் கணக்கில வெற்றிபெற்று 3 ஆம் இடத்தைப் பெற்றது. கடந்த திங்கட்கிழமை (03) ஆரம்பமான 8 ஆவது உலக கெரம் சம்பியன்ஷிப் போட்டி வெள்ளிக்கிழமை (07) நிறைவடையவுள்ளது. …

  18. 8 கேப்டன்களை உருவாக்கிய தோனி! - #TheRealKingmaker சிலர் கிங்காக இருப்பார்கள், இன்னும் சிலர் கிங் மேக்கர்களாக இருக்கார்கள். கிங்காகவும், கிங் மேக்கராகவும் இருக்க முடியும் என்றால், அவர் இரண்டு உலகக் கோப்பையை வென்றிருக்க வேண்டும். இக்கட்டான சூழலில் அணியை கூலாக வெற்றிக்கு அழைத்து செல்பவராக அவர் இருக்க வேண்டும். அதற்கு அவரது பெயர் மஹேந்திர சிங் தோனியாகவும் இருக்க வேண்டும். கிரிக்கெட் என்ற விளையாட்டு இருக்கும் காலம் வரை அதில் சிறந்த கேப்டன் பட்டியலில் தோனி முதல் வரிசையில் இருப்பார். ஹெலிகாப்டர் ஷாட் கிங், கடைசி பந்தில் சிக்ஸர் என எத்தனையோ சாதனைகளை அடுக்கினாலும் கோப்பையை வாங்கி இளம் வீரர்களிடம் கொடுத்து விட்டு, ஒரு ஓரமாக நின்று அவர்களின் சந்தோசத்தை கண்டு மகிழ்வதை பார…

  19. 8 வருடங்களின் பின் இலங்கையின் தேசிய கால்பந்தாட்ட அணி அறிவிப்பு (நெவில் அன்தனி) வெளிநாட்டு கால்பதாட்ட அணி ஒன்றின் விளையாட்டுத்திறனைக் காணும் வாய்ப்பு எட்டு வருடங்களின் பின்னர் இலங்கை இரசிகர்களுக்கு கிடைக்கவுள்ளது. பங்களாதேஷில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள தெற்காசிய கால்பந்தாட்டப் போட்டிக்கு முன்னோடியாக லிதுவேனிய அணியுடன் இலங்கை அணி விளையாடவுள்ளது. லிதுவேனியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கால்பந்தாட்டப் போட்டி கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இலங்கை அணியில் சிரேஷ்ட அனுபவம்வாய்ந்த ஏழு வீரர்களே இடம்பெறுகின்றனர். முன்னாள் தலைவர்களான சுஜான் ப…

  20. 8 வாரங்களுக்கு மெஸ்ஸி இல்லை பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லியனொல் மெஸ்ஸி, 7 தொடக்கம் 8 வாரங்களுக்குப் போட்டிகளில் பங்குபற்ற மாட்டார் என அறிவிக்கப்படுகிறது. சனிக்கிழமை இடம்பெற்ற போட்டியில் காயமடைந்திருந்த நிலையிலேயே, 8 வாரங்கள் வரை அவரால் போட்டிகளில் பங்குபெற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. லாஸ் பல்மாஸ் அணிக்கெதிரான இப்போட்டியில், அவருக்கு முழங்காலில் உபாதை ஏற்பட்டிருந்ததோடு 10ஆவது நிமிடத்தில் அவர் வெளியேறியிருந்தார். மைதானத்தை விட்டு வெளியேறிய மெஸ்ஸி, அணி அறைக்குள் வைத்துப் பரிசோதிக்கப்பட்ட பின்னர், வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். மெஸ்ஸின் இடது முழங்காலில் உள்ளக தசைநாண்களில் கிழிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாகவே அவரால் போட்டிகளில் பங்குபற்ற முடியா…

  21. அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் எட்டு விக்கெட்டுக்களினால் இலங்கை வெற்றி பெற்றுள்ளது. கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவுஸ்திரேலிய சென்றுள்ள இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அடிலெய்ட் ஓவலில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி இலங்கை வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை முகங்கொடுக்க முடியாமல் 46.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 170 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. முதலாவது விக…

  22. 8-2 என பார்சிலோனாவை துவம்சம் செய்த பேயர்ன் முனிச்: கால்பந்து வரலாற்றில் மெஸ்சி கண்டிராத தோல்வி யூரோப்பியன் சாம்பியன்ஸ் லீக்கின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த அணியான பார்சிலோனாவும், ஜெர்மனியின் பேயர்ன் முனிச் அணிகளும் விளையாடின. இந்திய நேரப்படி இன்று அதிகாலை போட்டி நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் பேயர்ன் முனிச் அணியின் தாமஸ் முல்லர் முதல் கோலை பதிவு செய்தார். 7-வது நிமிடத்தில் பார்சிலோனாவுக்கு ஓன் கோல் மூலம் ஒரு கோல் கிடைத்தது. இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலைப் பெற்றன 21-வது நிமிடத்தில் பேயர்ன் முனிச் அணியின் இவான் பெரிசிக் ஒரு கோலும், 27-வது நிமிடத்தில் செர்ஜ் காப்ரி ஒரு கோலும், 31-வது நிமிடத்தில் தாமஸ் மு…

  23. யுஎஸ்.- சனிக்கிழமை ஒகையோவில் இடம்பெற்ற ஆர்னொல்ட் விளையாட்டு விழாவில் மனிதனுக்கும் சிறுவர்க்குமான சதுரங்க ஆட்டத்தில் இந்த நிகழ்வு நடந்தது. தலையில் ஒரு ஊதா பூவை அணிந்து கொண்டு எம்மா செங் முன்னாள் body builder-ம் கலிபோர்னியா ஆளுநருக்கும் எதிராக போட்டியில் கலந்து கொண்டாள். ஆர்னொல்ட்டும் ஒரு சதுரங்க ஆர்வலர். செங் யுஎஸ்சில் ஒன்பது வயதிற்குட்பட்ட சதுரங்க விளையாட்டாளர்களில் நான்காவதாக கணிக்கப்பட்டவள். ஆத்துடன் ஒகையோவிலுள்ள சகல மாணவர் களிடையேயும் மூன்றாவது தரத்திலும் உள்ளவள் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இருவருக்கும் இடையில் மிகவும் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த நிகழ்வு ஸ்வார்ஸ்னேக்கர் விளையாட்டை கைவிட்டு விட்டு வேறொரு பிள்ளையுடன் இரண்டாவது விளையாட்டை விளையாட சென்றதால் குறுகிய தாக்க…

    • 0 replies
    • 437 views
  24. 80 முறை 300 ரன்களைக் கடந்த இந்திய அணி: சுவையான தகவல்கள் தரம்சலாவில் நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகளுக்கு எதிராக 330 ரன்களை எடுத்த இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் 80வது முறையாக 300 ரன்களைக் கடந்தது. 80 முறை 300 ரன்களைக் கடந்த அணி என்ற வகையில் அதிகம் 300 ரன்களுக்கும் மேல் அடித்த ஒரே அணி இந்திய அணியே. ஆனாலும் 300 ரன்களுக்கு மேல் அடித்த போட்டிகளில் வெற்றி விகிதம் பார்த்தால் குறைவாகவே உள்ளது. அதாவது 10 அணிகளில் இந்தியா அல்லாத டாப் 6 அணிகள் 300க்கும் மேல் ரன்கள் எடுத்த போது அதிக வெற்றிகளை சாதித்துள்ளன. இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகள் 300 ரன்களுக்கும் மேல் எடுத்தும் வெற்றி விகிதத்தில் குறைவாக உள்ள அணிகளாகும். 20வது ஒருநாள் ச…

  25. 80 வருடங்களின் பின் பொதுநலவாய போட்டி வரலாற்றில் சிறப்பித்த இலங்கை 80 வருடங்களின் பின் பொதுநலவாய போட்டி வரலாற்றில் சிறப்பித்த இலங்கை இலங்கை விளையாட்டுத்துறை வரலாற்றில் முதன்முறையாக பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களுடன் 6 பதக்கங்களை வென்று இந்த வருடம் சாதனை படைத்தது. அவுஸ்திரேலிய குயிண்ஸ்லாந்து மாநிலத்தின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற 21ஆவது பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் கோலாகலமான கலை நிகழ்ச்சிகளுடன் கடந்த(15) ஞாயிற்றுக்கிழமை நிறைவுக்கு வந்தது. இதன்படி, பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆதிக்கம் செலுத்தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.