Jump to content
View in the app
A better way to browse. Learn more.
கருத்துக்களம்
A full-screen app on your home screen with push notifications, badges and more.
To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
பதிவாளர் கவனத்திற்கு!
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
  1. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தலிபான் ஒப்புதல் அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில் விளையாட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தலிபான் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதலின் மூலம் நவம்பரில் டாஸ்மேனியாவில் நடைபெறும் அவுஸ்திரேலிய அணியுடனான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் மோதும். தலிபானின் இந்த ஒப்புதல் மூலம் ஆப்கானிஸ்தான் அணியின் சர்வதேச கிரிக்கெட் பயணம் வழக்கம் போல் தொடரும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி ஹமீத் ஷின்வாரி AFP செய்திச் சேவையிடம், "அணியை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்ப தலிபான்களிடமிருந்து எங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது" என்று கூறியுள்ளார். 2001 இல் தலிபான்கள் அதிகாரத்திலிர…
  2. கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புதிய சாதனை சர்வதேச போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரராக தற்சமயம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மாறியுள்ளார். 2021 செப்டம்பர் முதலாம் திகதி போர்ச்சுகல், அல்கர்கேவ் மைதானத்தில் நடந்த போர்ச்சுகல் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆண்களுக்கான சர்வதேச கால்பந்து போட்டியின்போது அதிக கோல்கள் அடித்த சாதனையை அவர் முறியடித்துள்ளார். இந்த ஆட்டத்தில் அயர்லாந்துக்கு எதிராக போர்ச்சுகல் அணித் தலைவர் ரொனால்டோ தனது 110 ஆவது மற்றும் 111 ஆவது கோல்களை அடித்தார். இதன் மூலம் ஆண்கள் சர்வதேச கால்பந்தில் அதிக கோல்கள் அடித்த வீரராக காணப்பட்ட ஈரானிய அலி டாய்யின் (109 கோல்) முறியடிக்கப்பட்டது. அவருக்கு அடுத்தபடியாக சர்வதேச போட…
  3. ஐ.பி.எல். தொடரில் மேலும் இரு புதிய அணிக்கான விலை மனுக் கோரல் இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) புதிய அணிகளுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2000 கோடி இந்திய ரூபா அடிப்படை விலையை நிர்ணயித்துள்ளது. செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 31) இரண்டு புதிய உரிமையாளர்களுக்கான ஏலங்களை அழைக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்ட பின்னர், பி.சி.சி.ஐ. அலுவலகப் பணியாளர் கிரிக்பஸ்ஸுடம் இருப்பு விலை 2000 கோடி ரூபா என்று உறுதி செய்தனர். தற்போது 8 அணிகள் பங்கேற்று வரும் நிலையில் அணிகளின் எண்ணிக்கையை 2022 ஆம் ஆண்டில் இருந்து 10 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து புதிய இரு அணிகளுக்கான உரிமத்தை பெற விரும்பும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்…
  4. பாராலிம்பிக்ஸில் இலங்கை வீரா் உலகசாதனை August 30, 2021 ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டியில் இலங்கை வீரரான தினேஷ் பிரியந்த ஹேரத் உலக சாதனை படைத்துள்ளார். F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இந்த சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அத்துடன் தினேஷ் பிரியந்த ஹேரத் இந்தப் போட்டியில் தங்கப்பதக்கத்தினையும் வென்றுள்ளாா். இதன்மூலம் இலங்கை தனது முதலாவது தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2021/165226
  5. குழந்தையின் அறுவைச் சிகிச்சைக்காக ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விட்ட வீராங்கனை! போலந்து நாட்டைச் சேர்ந்த ஈட்டு எறிதல் வீராங்கனை தனது குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக தான் வென்ற ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை ஏலம் விட்டுள்ளார்.போலந்து நாட்டைச் சேர்ந்த 25 வயதான ஈட்டி எறிதல் வீராங்கனை மரியா மக்டெலானா. இவர் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றார்.இந்நிலையில் கடந்த வாரம் தனது முகநூல் பக்கத்தில் தனது 8 மாதக் குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை விற்பனை செய்வதாக அறிவித்தார். இதன்மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு உடனடியாக அமெரிக்காவில் தனது குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருப்…
    • 3 replies
    • 710 views
  6. சிஎன்என்) லியோனல் மெஸ்ஸி பார்சிலோனாவை விட்டு வெளியேறுவதாக ஸ்பானிஷ் கிளப் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. "கிளப் மற்றும் பிளேயர் ஒரு உடன்பாட்டை எட்டினாலும், இன்று ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட அவர்களின் தெளிவான எண்ணம் இருந்தபோதிலும், நிதி மற்றும் கட்டமைப்பு தடைகள் காரணமாக இது நடக்காது" என்று பார்சிலோனா தனது இணையதளத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 34 வயதான அவர், கடந்த மாதம் அர்ஜென்டினாவுடன் தனது முதல் கோபா அமெரிக்காவை வென்றார், 2020 கோடையில் அவர் "ஆண்டு முழுவதும்" வெளியேற விரும்புவதாக ஒப்புக்கொண்டார் மற்றும் அவரது ஒப்பந்தத்தில் ஒரு ஷரத்தை அவர் இலவசமாக செய்ய முடியும் என்று கூறினார், ஆனால் இறுதியில் பார்சிலோனா உடன்படாததால் மெஸ்ஸி தங்க வேண்டிய கட்டாயம் ஏற்ப…
  7. எழிலனின் கனவு நனவானது .. தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினரும் தமது கணவருமான எழிலனின் கனவை தமது பிள்ளைகள் நனவாக்கியுள்ளதாக அனந்தி சசிதரன் நெகிச்சியுடன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ளதாவது, 2007/2008 என்கணவரின் விருப்பத்திற்கு அமைய எங்கள் பிள்ளைகளிற்கு கிளிநொச்சியில் இருந்த தமிழீழ விளையாட்டு கழகத்தினரல் நடாத்தப்பட்ட கராத்தே பயிற்சியை வழங்கியிருந்தேன். போரிற்கு பிற்பட்ட காலத்தில் பல தடைகள் ஏற்பட்டது. ஆயினும் இன்று நல்விழி,எழில்விழி, கல்கி மூன்றுபேரும் கறுப்பு பட்டியை பெற்றுள்ளனர். எங்கள் பலநாள் விருப்பம் நிறைவேறியிருக்கு. நல்ல குருவாக ரேமன் சேர் அமைந்தது ஒரு வரப்பிரசாதம். மிக பொறுமையாகவும் கண்ணி…
  8. இங்கிலாந்துடனான 2 ஆவது டெஸ்டில் இந்தியா 151 ஓட்டங்களால் அபார வெற்றி இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 151 ஓட்டங்களால் இந்தியா அபார வெற்றி ஈட்டியது. 272 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து வெறும் 120 ஓட்டங்களுக்கு சுருண்டது. இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்துள்ளது. அத்துடன் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான 12 வெற்றிப் புள்ளிகளை இந்தியா பெற்றுக்கொண்டது. மொஹம்மத் ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ரா ஆகிய இருவரும் 2 ஆவது இன்னிங்ஸில் வெளிப்படுத்திய சகலதுறை ஆற்றல்கள் இந்தியாவின் வெற…
  9. 2021 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்துக்கான அட்டவணை அறிவிப்பு 2021 ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலகக் கிண்ணம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமானில் ஒக்டோபர் 17 முதல் நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டி நவம்பர் 14 அன்று துபாயில் நடைபெறும். இதில் சூப்பர் 12 சுற்றின் குழு 2 இல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டம் துபாயில் ஒக்டோபர் 24 ஆம் திகதி அரங்கேறவுள்ளது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் விளையாடுவது இதுவே முதல் முறையாகும். இறுதியாக இவ்விரு அணிகளும் 2019 இல் ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் ஒன்றையொன்று எதிர்த்து ஆடியது. ஐ.சி.சி. செவ்வாய்க்கிழமை 2021 டி-20 உலகக் கிண்ணத்துக்கான அட்டவணையை அறிவித்ததால் போ…
  10. ஆண்டர்ஸனில் இருந்து ராகுல் வரை ஆர். அபிலாஷ் லார்ட்ஸில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்டில் நான் மிகவும் ரசித்த ஒரு விசயம் ஆண்டர்ஸனின் பந்து வீச்சு. அதற்கு அடுத்து ராகுலின் ரசிக்கத்தக்க, ரொம்ப ஸ்டைலான மட்டையாட்டம். 1 ) ஆண்டர்ஸன் மிதவேக வீச்சாளர்களிடையே ஒரு உன்னதமான கலைஞன் என்று சொல்லலாம். அவரால் வழக்கமான seam up பந்து வீச்சில் ஈடுபட முடியும். குளிரும் மந்தமான வானிலையும் கொண்ட காலைப் பொழுதில், மாலை வேளையில் நான்காவது ஸ்டம்பில் போட்டு ஸ்விங் பண்ண முடியும். பகற்பொழுதில் ஐந்தாவது ஸ்டம்பில் பொறுமையாக வீசி ரன்களை கட்டுப்படுத்த முடியும். பேட்ஸ்மேனை வைடாக செல்லும் பந்தை துரத்த வைத்து அவுட் ஆக்க முடியும். உள்ளே வெளியே…
  11. ஒலிம்பிக் போட்டி... இந்தியாவுக்குச் சிறப்பாக அமைந்தது – வெங்கைய நாயுடு டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இந்தியாவுக்குச் சிறப்பாக அமைந்ததாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார். மாநிலங்களைவையில் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘அதிகமானனோர் பதக்கங்கள் பெற்றதால் மட்டுமல்ல, அதிகமானோர் பதக்கச் சுற்றுக்குச் சென்றாலும் ஒலிம்பிக் போட்டி இந்தியாவுக்குச் சிறப்பாக அமைத்துள்ளதாக தெரிவித்தார். ஈட்டி எறியும் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் பெற்றது நம்மாலும் கூட முடியும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2021/1233316
    • 2 replies
    • 357 views
  12. நிறைவுக்கு வந்த டோக்கியோ ஒலிம்பிக் : வெறுங்கையுடன் நாடு திரும்பும் இலங்கை - ஒருபார்வை ! டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத் ஜப்­பானின் மிகப்­பெ­ரிய நக­ரமும் மின்­சார நகரம் என்றும் வர்­ணிக்­கப்­படும் டோக்­கி­யோவில் கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி வரை நடை­பெற்­று­வந்த 32ஆவது டோக்­கியோ ஒலிம்பிக் போட்டி விழா இன்று பிரம்­மாண்ட நிறைவு விழா­வுடன் முடி­வுக்கு வந்­தது. 206 நாடு­களை சேர்ந்த ஒலிம்பிக் அணிகள், 11,326 வீரர்கள், 33 விளை­யாட்டில் 339 போட்­டிப்­பி­ரிவுகளில் , 16 நாட்கள் இந்த ஒலிம்பிக் நடந்து முடிந்­துள்­ளது. டோக்­கியோ ஒலிம்பிக் போட்­டியின் நிறைவு விழாவில் நேற்று இரவு ஜப்பான் ரேப்­பட்டி 8 மணி­ய­ளவில் ஆரம்­ப­மா­னது. வெற்று மைத…
  13. பார்சிலோனாவின் பிரியாவிடை செய்தியாளர் சந்திப்பில் கண்ணீருடன் மெஸ்ஸி ஞாயிற்றுக்கிழமை காலை தனது பிரியாவிடை செய்தியாளர் சந்திப்பில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு பார்சிலோனாவை விட்டு வெளியேறுவதை உறுதி செய்தபோது லியோனல் மெஸ்ஸி கண்ணீர் விட்டார். பார்சிலோனாவை விட்டு வெளியேறுவது தனது வாழ்க்கையில் கடினமான தருணம் என்று 34 வயதான மெஸ்ஸி விவரித்தார். லியோனல் மெஸ்ஸி தனது செய்தியாளர் சந்திப்பைத் தொடங்கியபோது கண்ணீரை எதிர்த்துப் போராடினார், அதில் அவர் தனது முழு வாழ்க்கையையும் விளையாடிய கால்பந்து கிளப்பான பார்சிலோனாவை விட்டு வெளியேறுவதை உறுதிப்படுத்தினார். அவர் ஒரு தொடக்க அறிக்கையை கூறுவதற்கு முன்பு அவர் உணர்ச்சிவசப்பட்டார். "இந்த சமீபத்திய நாட்களில், நான் என்ன…
  15. நீரஜ் சோப்ரா டோக்யோவில் சாதனை: ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் தங்கம் 7 ஆகஸ்ட் 2021, 12:47 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்காக முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்திருக்கிறார் ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா. ஒலிம்பிக் தடகளத்தில் இந்திய வீரர்கள் யாரும் இதுவரை பதக்கங்களைப் பெற்றதில்லை. மில்கா சிங், பி.டி. உஷா ஆகியோர் தடகளத்தில் மிகக் குறைந்த வேறுபாட்டில் பதக்கங்களைத் தவற விட்டனர். அந்த நூற்றாண்டு கால ஏக்கத்தைத் தீர்த்து வைத்திர…
  16. பஜ்ரங் புனியா: பள்ளியை தவிர்க்க மல்யுத்தம் பயின்றது முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்றது வரை பிரதீப் குமார் பிபிசி தமிழ் 7 ஆகஸ்ட் 2021, 03:42 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,VIPIN KUMAR/HINDUSTAN TIMES VIA GETTY IMAGES) இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா டோக்யோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். ஆண்கள் 65 கிலோ உடல் எடைப் பிரிவில் ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் இந்தியா சார்பாக விளையாடிய பஜ்ரங் புனியா இன்று கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த தெளலத் நியாஸ்பெகொவ்வை வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் எதிர்கொண்டு வெற்றி பெற்றார். சில …
  17. ஒலிம்பிக் குதிரையேற்ற நிகழ்வுகள்... நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் கத்திக்குத்து: 10பேர் காயம்! ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் பயணிகள் ரயிலில் ஒருவர் குறைந்தது 10 பயணிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளதா, ஜப்பானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை, நகரின் மேற்கில் உள்ள செடகயா வார்டில் ரயிலில் இந்த கத்திக்குத்து தாக்குதல் நடந்தது. செடாகயா வார்டில் உள்ள சீஜோகாகுன்-மே ஸ்டேஷனுக்கும் சோஷிகாயா-ஒகுரா ஸ்டேஷனுக்கும் இடையே உள்ள ஒடக்யூ லைன் ரயிலில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தளம் ஒலிம்பிக் குதிரையேற்ற நிகழ்வுகள் நடைபெறும் இடத்திலிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. காயமடைந்த 10 பயணிகளில் ஒன்பது …
  18. ஜேர்மனியை தோற்கடித்து வெண்கலம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணி டோக்கியோ ஒலிம்பிக்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்கள் ஹாக்கி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜேர்மனிக்கு எதிராக இந்தியா 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஓய் ஹாக்கி மைதானத்தில் அரங்கேறிய இந்த ஆட்டத்தில், சிம்ரஞ்சீத் சிங் இந்தியாவுக்காக இரண்டு கோல்களை அடித்தார், ஹர்திக் சிங், ஹர்மன்பிரீத் சிங் மற்றும் ரூபிந்தர் பால் சிங் ஆகியோரும் தமது பங்கிற்கு கோல்களை அணிக்காக பெற்றுக் கொடுத்தனர். இந்த வெற்றி இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் 41 வருட பதக்க காத்திருப்பை முடிவுக்கு கொண்டுவர உதவியது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் மூன்றாவது ஆக்கி வெண்கலப் பதக்கம் இதுவாகும். இந்திய தேசிய விளையா…
  19. முகமது அலி ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை ஆற்றில் வீசியெறிந்தது ஏன்? எம்.மணிகண்டன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தனது சுயசரிதைப் புத்தகத்துடன் முகமது அலி சொந்த நாட்டில் வசிக்கும் கறுப்பின மக்களை இழிவாக நடத்தும் அமெரிக்கா, பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் வியட்நாமுக்கு சென்று யாரைக் காப்பாற்றப் போகிறது என்று கேள்வி எழுப்பியவர் குத்துச் சண்டை வீரர் முகமது அலி. வெள்ளை இனத்தவர்தான் எம்முடைய எதிரிகள், விடுதலையும் சமத்துவமும் கேட்டபோது எம்மை அவர்கள்தான் எதிர்த்தார்கள் என்று நேரிடையாகப் பேசியவர் …
  20. பெலருஸ் ஒலிம்பிக் வீராங்கனை சிமானுஸ்காயாவுக்கு போலாந்தின் மனிதாபிமான விசா பெலருஸ் ஒலிம்பிக் வீராங்கனை கிரிஸ்டினா சிமானுஸ்காயாவுக்கு போலாந்து அரசாங்கத்தினால் மனிதாபிமான விசா வழங்கப்பட்டுள்ளதாக அந் நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் திங்களன்று உறுதிபடுத்தினார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தேசிய பயிற்சியாளர் ஊழியர்களின் முறைப்பாடுகளைத் தொடர்ந்து தனது அணியின் விருப்பத்திற்கு மாறாக விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 24 வயதான சிமானுஸ்காயா ஞாயிற்றுக்கிழமை டோக்கியோவிலிருந்து வெளியேற மறுத்துவிட்டார். பெலருஸுக்குத் திரும்பினால் தன் பாதுகாப்பு குறித்து அஞ்சுவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். அவர் பின்னர் ஜப்பானிய காவல்துறையின் பாதுகாப்பை ந…
  21. ஒலிம்பிக் ஹாக்கி காலிறுதி: ஆஸ்திரேலிய அரணை சிதறடித்த இந்திய வீராங்கனைகள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒலிம்பிக்கில் இந்திய பெண்கள் ஹாக்கி முதல் முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கின் காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 22 - ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் குர்ஜித் கவுர் ஆஸ்திரேலிய கோல் கீப்பர் ரேச்சலை ஏமாற்றி கோல் அடித்தார். அதன் பிறகு ஆஸ்திரேலிய அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதன் மூலம் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. …
  22. Pyrros Dimas: பளுதூக்குதல் விளையாட்டின் டான்ஸிங் ரோஸ், வயது மூப்பு, காயங்களை தாண்டி சரித்திரம் படைத்த சூரன் கெளதமன் முராரி பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒலிம்பிக் ஐவண்ண வலையங்கள் ஒரு ஒலிம்பிக் பதக்கத்துக்கே தசாப்த கால முயற்சியும் பயிற்சியும் தேவையாக இருக்கிறது. ஆனால் இங்கு ஒரு மனிதர் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பளு தூக்குதல் போட்டியில் கிரேக்க கடவுளாக இருந்து வசீகரித்திருக்கிறார். கிரீஸ் அவரது தாய் நாடு அல்ல. தன் சொந்த நாட்டின் அரசியல் சூழலால் தாய் நாட்டை விட்டு, கிரீஸுல் குடியேறி, அந்நாட…
  23. ரவிகுமார் தஹியா: டோக்யோ ஒலிம்பிக் மல்யுத்த இறுதியில் நுழைந்த இந்திய வீரரின் கதை 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS டோக்யோ ஒலிம்பிக்கில் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் ரவிகுமார் தஹியா. அரையிறுதிப் போட்டியில் கஜகஸ்தானின் நூரிஸ்லாம் சனாயேவைத் தோற்கடித்து இந்தியாவிற்கு குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார். ஆரம்பத்தில் பின்னடைந்திருந்த இவர், தனது அற்புதமான விளையாட்டால் தனது எதிராளியையைத் தோற்கடித்தார். ஒரு கட்டத்தில் ரவிக்கு இரண்டு புள்ளிகளும்…
  24. Nadia Comaneci: ஒலிம்பிக் சரித்திரத்தை நிரந்தரமாக மாற்றி எழுதிய ஜிம்னாஸ்டிக் நாயகி 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அதிக எடை தூக்கியது யார்? அதிக கோல் அடித்தது யார்? அதிக ரன்கள் எடுத்தது யார்? குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்தது யார், அதிக தூரம் வீசியது யார்? என எல்லா விளையாட்டுகளிலும் மிகத் தெளிவான முடிவுகள் கிடைக்கும். ஆனால் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற சில விளையாட்டுகளில் முழுக்க முழுக்க நடுவர்களின் தனிப்பட்ட புள்ளிகளைப் பொறுத்து வெற்றியாளர் தீர்மனிக்கப்படுவார். அப்படிப்பட்ட விளையாட்டில், ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக 10-க்கு 10 புள்ளிகளைப் பெற்று மொத்த உலகையும் வ…
  25. ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற 13 வயதுடய ஜப்பானிய வீராங்கனை திங்கட்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான முதல் ஒலிம்பிக் ஸ்கேட்போர்ட் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த மோமிஜி நிஷியா வெற்றி பெற்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் மூலம் அறிமுகமான "ஸ்கேட்போர்ட்டிங்" விளையாட்டின் முதலாவது தங்கப்பதக்கத்தை ஜப்பான் நாட்டின் இளம் வீரர் யூட்டோ ஹொரிகோம் வென்ற ஒரு நாள் கழித்து, ஒசாக்காவைச் சேர்ந்த 13 வயதுடைய நிஷியா ஜப்பானுக்கு மீண்டும் தங்க பதக்கம் பெற்றுக் கொடுத்துள்ளார். நிஷியா 15.26 மதிப்பெண்களுடன் தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு ஜப்பானிய வீராங்கனையான 16 வயதுடைய ஃபூனா நகயாமா 14.49 மதிப் பெண்களுடன் வெண்கலப் பதக்கம் வென்றார். அதேநேரம் பிரேசில் நாட்டைச் சேர்ந்த 13 வயதான ரெய்…
    • 4 replies
    • 724 views
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Configure browser push notifications
Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.