விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி - பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் ஜொலித்த ஜடேஜா பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, முதல் இன்னிங்ஸில் 104 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் எடுத்த ஜடேஜா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆமதாபாத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஆமதாபாத்தின் நரேந்திர மோதி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 2) தொடங்கிய…
-
- 4 replies
- 304 views
- 1 follower
-
-
பேட்ஸ்மென் அடித்த ஷாட் பவுலர் தலையில் பட்ட பிறகு சிக்ஸ்: நியூஸி. கிரிக்கெட்டில் வினோதம்; ஆபத்திலிருந்து தப்பிய பவுலர் படம். | ட்விட்டர். நியூஸிலாந்தின் உள்நாட்டு 50 ஓவர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பேட்ஸ்மென் ஆக்ரோஷமாக அடித்த ஷாட் ஒன்று பவுலர் தலையில் பட்டு பிறகு சிக்ஸருக்குச் சென்ற வினோதச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆக்லாந்து பேட்ஸ்மென் ஜீத் ராவல், ஆண்ட்ரூ எல்லிஸ் என்ற பவுலரின் பந்தை நேராக ஆக்ரோஷமாக அடிக்க பந்து பவுலர் தலையில் பட்ட பிறகும் சிக்சருக்குப் பறந்தது. கேண்டர்பரி அணியைச் சேர்ந்தவர் பவுலர்/கேப்டன் எல்லிஸ். பந்து தலையில் பட்டதையடுத்து பரிசோதனை மேற்கொண்டார். …
-
- 4 replies
- 327 views
-
-
300-வது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கும் தோனி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி தனது 300-வது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளார். கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த 2004-ம் ஆண்டில் வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். 2009-ம் ஆண்டில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட தோனியின், தலைமையில் 2011-ம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்தியா வென்றது. மேலும், சர்வதேச தரவரிசைப்பட்டியலி…
-
- 4 replies
- 1.2k views
-
-
-
- 4 replies
- 1.7k views
-
-
சச்சின் டெண்டுல்கரின் சாதனைப் புத்தகத்தில் நேற்று மேலும் ஒரு புதிய அத்தியாயம் இடம் பெற்றது. அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் 50,000 ரன்களை நேற்று கடந்தார். இதுவரை உலகத்தில் எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் படைக்காத புதிய சாதனை இது.நேற்று மும்பை இந்தியன்ஸ், டிரினிடாட் டொபாகோ இடையிலான சாம்பியன்ஸ் லீக் போட்டியின் போதுதான் இந்த புதிய சாதனையை சச்சின் படைத்தார்.சச்சின் கிரிக்கெட் ஆட வந்து 25 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில் 50,000 ரன்களை அவர் கடந்திருப்பது புதிய வரலாறும் ஆகும். டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டுவென்டி 20 என மொத்தம் 953போட்டிகளில் இதுவரை சச்சின் ஆடியுள்ளார்.அனைத்துப் போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 50,009 ரன்களைக் குவித்துள்ளார்.இதில் 307 முதல் தர போட்டிக…
-
- 4 replies
- 725 views
-
-
பாகிஸ்தான் பவுலர் சயீத் அஜ்மல் பந்துவீச்சு மீது புகார் சந்தேகத்திற்கிடமான முறையில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் வீசுகிறார் என்று ஐசிசி-யிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக நேற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அவரது பந்து வீச்சு மீது சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து ஐசிசி விதிமுறைகளின் படி அவர் 21 நாட்களுக்குள் பரிசோதனைக் கூடத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால் அவர் தொடர்ந்து பந்து வீசலாம் என்று ஐசிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மைதானத்தில் இருந்த ஆட்ட அதிகாரிகள் அஜ்மல் வீசிய பல பந்துகள் விதிமுறைகளை மீறியதாக உள்ளது என்று கூறியுள்ளனர். இந்த புகார் அறிக்கையை பாகிஸ்தான் அணி…
-
- 4 replies
- 693 views
-
-
சைமண்ட்சுக்கு மனநல பாதிப்பு? : சிகிச்சை மேற்கொள்ள ஆலோசனை சர்ச்சை நாயகன் சைமண்ட்ஸ், மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மன நல மருத்துவ மையத்தில் சிகிச்சை பெறுவது அவருக்கு உதவியாக இருக்கும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டின் மருத்துவ அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியா சென்றுள்ள வங்கதேச அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டிக்கு முன்பாக நடந்த வீரர்களின் கூட்டம் மற்றும் பயிற்சி ஆகியவற்றில் ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸ் கலந்து கொள்ளவில்லை. அந்நேரத்தில் அவர் டார்வின் கடற்கரையில் மீன்பிடித்து கொண்டு "ஜாலி'யாக பொழுதுபோக்கினார். இதையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு அவரை தொடரிலிருந்து நீக்கியது.…
-
- 4 replies
- 2.1k views
-
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஜாகீர் கான் ஓய்வு ஜாகீர் கான் | கோப்புப் படம்: ஏபி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர் கான் ஓய்வு பெறுகிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை அவர் இன்று பிற்பகல் வெளியிடவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜாகீர் கானின் ஓய்வு தொடர்பான தகவலை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகி ராஜீவ் சுக்லா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்திய அணிக்காக 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 311 விக்கெட்டுகளை வசப்படுத்தியவர் ஜாகீர் கான். 200 ஒருநாள் போட்டிகளில் 282 விக்கெட்டுகளையும், 17 டிவென்டி 20 போட்டிகளில் 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர். 2000-ல் டாக்காவில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள…
-
- 4 replies
- 372 views
-
-
[size=4]லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரின் பூப்பந்துப் போட்டியில் வெற்றி பெறுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிறிலங்கா வீரர் நிலூக்க கருணாரத்ன தோல்வியடைந்துள்ளார். இன்று இடம்பெற்ற போட்டியில் இந்திய வீரர் கே.பருப்பள்ளியிடம் நிலூக்க கருணாரத்ன 1 க்கு 2 என்ற செற் கணக்கில் தோல்வியடைந்தார். அத்துடன் பூப்பந்து சுற்றிலிருந்தும் வெளியேற்றப்பட்டார். இந்தத் தொடரில் நிலுக்க கருணாரத்ன பூப்பந்து போட்டியில் 2:0 என்ற அடிப்படையில் c பிரிவின் முதல் சுற்றில் வெற்றி பெற்றார். இவர், உலகில் 8ம் நிலை வீரராக உள்ள ஜப்பானின் Kenichi Tago வை 21 க்கு 18, மற்றும் 21 க்கு 16 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.[/size] http://onlineuthayan.com/News_More.php?id=7317412…
-
- 4 replies
- 1.1k views
-
-
கேப்டனாக கடைசி போட்டி: அதிரடி காட்டிய தோனி இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் கேப்டனாக தோனி இருக்கிறார். கேப்டனாக கடைசியாக களமிறங்கியுள்ளார் தோனி. மும்பையில் நடந்து வரும் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய ஏ அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்தன. அதிகபட்சமாக ராயுடு 100 ரன்கள் எடுத்தார். தோனி 40 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். குறிப்பாக எட்டு பவுண்டரிகளும், 2 சிக்சர்களையும் பறக்க விட்டார். யுவராஜ் 48 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். யுவராஜ் ஆறு பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடித்தார். இதையடுத்து 305 ரன் என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்க உள்ளது. http://www.vikatan.com/news/sports/77…
-
- 4 replies
- 579 views
-
-
இங்கிலாந்தின் கிரிக்கெட் கலாசாரத்தில் மாற்றம் வேண்டும் - ரவி பொப்பாரா சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் இங்கிலாந்து மிளிரவேண்டுமானால் இங்கிலாந்தின் கிரிக்கெட் கலாசாரத்தில் மாற்றம் அவசியம் என ரவி பொப்பாரா கூறியுள்ளார். தமது அணி அச்சத்துடன் விளையாடியதாகவும் கிரிக்கெட்டில் முன்னேற வேண்டுமானால் ஆங்கிலேய கிரிக்கெட் முறைமையைக் கைவிடவேண்டும் எனவும் உலகக் கிண்ண கிரிக்கெட்டின் குழுநிலைப் போட்டிகளுடன் வெளியேறிய இங்கிலாந்து அணியில் இடம்பெற்ற ரவி பொப்பாரா கூறினார். தற்கால மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளுக்கு ஏற்ப இங்கிலாந்து வீரர்கள் சுதந்திரமாக விளையாட முடியாமல் தடுமாறியதாகவும் ஐ பி எல் போன்ற இருபதுக்…
-
- 4 replies
- 450 views
-
-
கோலியும் அனுஷ்காவும் இணைந்து இலங்கையில் முன்னெடுத்த காரியம் ( படங்கள் இணைப்பு ) இந்திய அணித் தலைவர் விராட் கோலியும் அவரது பெண் தோழியுடான அனுஷ்கா சர்மாவும் இணைந்து இலங்கையில் மரக்கன்று ஒன்றை நாட்டி வைத்த புகைப்படங்கள் இணையங்களில் உலாவி வருகின்றது. மரக்கன்றுகளை அவர்கள் தங்கியிருந்த ரிசோர்ட் ஒன்றில் நாட்டி வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு கோலி தலைமையில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிளைக் கொண்ட டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இந் நிலையில் 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது போட்டியில் வெற்றிபெற்று 1-0 என முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, ஒரு போட்டியைக் கொண்ட இருபதுக்கு -20 போட்டியிலு…
-
- 4 replies
- 628 views
-
-
'146 ரன்; 18 சிக்ஸர்' - டி20-யில் எதிரணியை மிரளவைத்த கெய்ல்! இந்தியன் பிரிமியர் லீக்கான ஐபிஎல் போல வங்கதேசத்தில் பங்களாதேஷ் பிரிமியர் லீக் (பிபிஎல்) தொடர் ஒவ்வோர் ஆண்டும் நடக்கிறது. வங்க தேச கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடரின் இறுதி ஆட்டம் இன்று தாக்கவில் நடந்து வருகிறது. இதில், தாக்கா டைனமைட்ஸ் மற்றும் ராங்பூர் ரைடர்ஸ் ஆகிய அணிகள் கோப்பைக்கு போட்டா போட்டிப் போட்டு வருகின்றன. இந்தப் போட்டிக்கான டாஸை வென்ற தாக்கா டைனமைட்ஸ், ரைடர்ஸை பேட்டிங் ஆடச் சொல்லி பணித்தது. அந்த அணி சார்பில், கிறிஸ் கெய்ல், தொடக்க வீரர்களில் ஒருவராகக் களமிறங்கினார். கடைசி வரை நின்றாடிய கெய்ல், 69 பந்துகளுக்…
-
- 4 replies
- 691 views
-
-
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் சர்வதேசக் கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவின் தலைவராக செப் பிளாட்டர் மீண்டும் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். மீண்டும் தலைவராக பிளாட்டர் தேர்வு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோர்டான் நாட்டு இளவரசர் அலி பின் அல் ஹுசைன் இரண்டாம் சுற்றின்போது போட்டியிலிருந்து விலகியதால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மிகவும் பரபரப்புக்கு இடையே இந்தத் தேர்தல் ஜூரிக் நகரில் நடைபெற்றது. முதல் சுற்று வாக்கெடுப்பில் இரு வேட்பாளர்களுக்கும் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைக்காததால், போட்டி இரண்டாம் சுற்றுக்குச் சென்றது. எனினும் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பின் போது, அலி பின் அல் ஹுசைன் விலகுவதாக தெரிவித்த பின்னர், பிளாட்டர் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டத…
-
- 4 replies
- 468 views
-
-
முதலில் இஷாந்த் சர்மா முடி வெட்ட வேண்டும்.. மாஜி தெ. ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் அட்வைஸ் மும்பை: இஷாந்த் சர்மாவின் இன்றைய நிலைக்கு அவர்தான் பொறுப்பாவார். அவர் முதலில் பல நல்ல பழக்கங்களை தன்னுள் கொண்டு வர வேண்டும். முதலில் தலைமுடியை சீரமைக்க வேண்டும். அவரது தலைமுடியால் அணிக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும் என்று முன்னாள் தென் ஆப்பிரிக்க வேகப் பந்து வீச்சாளர் பானி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். அவரைப் பார்த்தால் எனக்கு ஸ்போர்ட்ஸ்மேன் போலவே தெரியவில்லை. அவரது ஹேர்ஸ்டைல் மிக மோசமாக உள்ளது. கெட்டப் பையன் போன்ற தோற்றத்தையே அது தருகிறது என்றும் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார். இமேஜ்தான் முதலில் அவருக்குப் பெரும் பிரச்சினை. அதை அவர் சரி செய்தாக வேண்டும். அவரிடம் நல்ல கிரிக்கெட் உள்ளது.…
-
- 4 replies
- 497 views
- 1 follower
-
-
இங்கிலாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் மார்ச் 01, 2014. ஆன்டிகுவா: இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பொறுப்பாக ஆடிய இங்கிலாந்து வீரர் மைக்கேல் லம்ப் சதம் வீணானது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டூவர்ட் பிராட், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். திணறல் துவக்கம்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு போவல் (5) மோசமான துவக்கம் கொடுத்தார். மற்றொரு துவக்க வீரர் டுவைன் ஸ்மித் (24) பெரிய அளவில் சோபிக்கவில்லை. அடுத்து வந்த கிர்க் எட்வர்ட்ஸ் (10), டேரன் பிராவோ (2) சொற்ப ரன்னி…
-
- 4 replies
- 636 views
-
-
Twenty 20 உலக சம்பியன் துடுப்பாட்ட சுற்றுப்போட்டி: கால அட்டவணை. -Cricinfo-
-
- 4 replies
- 1.7k views
-
-
கருண் நாயர் முச்சதம் அடித்தது போல் இந்தியாவுக்கு எதிராக வார்னர் விளாச வேண்டும்: ஸ்மித் விருப்பம் வார்னர், கேப்டன் ஸ்மித். | படம்.| ஏ.எஃப்.பி. இந்தியாவை இந்திய மண்ணில் வீழ்த்த வேண்டுமெனில் பெரிய ஸ்கோர் தேவை, அதற்கு வார்னர், கருண் நாயர் போல் முச்சதம் விளாச வேண்டும் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ இணையதளத்திற்கு ஸ்மித் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்திய தொடரில் நமது மூத்த வீரர்கள் தங்கள் ஆட்டத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும். இதைத்தான் நாம் இலங்கையில் சரிவர செய்யவில்லை. அதனால் நாங்கள் விரும்பிய முடிவுகள் கிட்டவில்லை. எனவே எங்கள் விரு…
-
- 4 replies
- 351 views
-
-
சுவிஸ் பயிற்சியாளர் ஒற்மார் ஹிற்ஸ்வெல்ட்விடைபெற்றார் சுவிட்சர்லாந்து அணியின் பயிற்சியாளர் ஒட்மார் ஹிட்ஸ்பெல்ட் ஓய்வு பெற்றார். தனது சகோதரர் வின்பிரெட் (81) இறந்த துக்கத்துக்கு இடையிலும் அர்ஜென்டீனாவுக்கு எதிராக ஆடிய சுவிட்சர்லாந்து வீரர்களை உற்சாகப்படுத்திய ஹிட்ஸ்பெல்ட் கனத்த இதயத்துடன் விடைபெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “அர்ஜென்டீனாவுடனான இந்தத் தோல்வி 1999 சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியைத்தான் எனக்கு நினைவுபடுத்துகிறது. எனது இதயம் முழுவதும் உணர்ச்சி வசத்தால் நிரம்பியுள்ளது. இதுபோன்ற உணர்ச்சிபூர்வமான தருணங்கள் கால்பந்து விளையாட்டில் மட்டுமே கிடைக்கும். அதனால்தான் கால்பந்தை விரும்புகிறேன்” என்றார். சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளை…
-
- 4 replies
- 513 views
-
-
ஆப்கான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரானார் இன்சமாம் உல் ஹக் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக். | கோப்புப் படம்: பிடிஐ. முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். முதலில் வரவிருக்கும் ஜிம்பாப்வே தொடருக்கு மட்டும் இன்சமாம் நியமிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் ஆப்கான் கிரிக்கெட் சங்க தலைமைச் செயலதிகாரி ஷபிக் ஸ்டானிக்சாய் தெரிவிக்கும் போது, “இன்சமாம் ஒப்பந்தம் 2 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்” என்று கூறினார். கடந்த 3 ஆண்டுகளாக பாகிஸ்தான் பேட்டிங் பயிற்சியாளராக இன்சமாம் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இன்று வரை அது குறித்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் எடுக்க…
-
- 4 replies
- 381 views
-
-
அவுஸ்திரேலியாவிற்குப் பயணமாகின்றார் இலங்கையின் வலைப்பந்தாட்ட நட்சத்திரம் சிவலிங்கம் தர்ஜினி Tharjini Sivalingam (Seylan Bank) - Best Shooter(Mercantile Netball League 2016) இலங்கையின் வலைபந்தாட்ட நட்சத்திரம் சிவலிங்கம் தர்ஜினி அவுஸ்திரேலியாவின் முன்னனி கழக அணியான சிற்றி வெஸ்ட் ஃபெல்கொன் அணிக்கு விளையாடுவதற்காக ஆறு மாதகால ஒப்பந்த அடிப்படையில் நாளை (17.04.2017) அவுஸ்திரேலியா நோக்கி பயணமாகின்றார். யாழ்ப்பாணம் ஈவினையைப் பிறப்பிடமாகக் கொண்ட தர்ஜினி, தனது பள்ளிக்கல்வியை வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில் பெற்றுக்கொண்ட இவர் அதனை தொடர்ந்து கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு நுழைந்தார். அங்கு வலைப்பந்தாட்ட…
-
- 4 replies
- 1.3k views
-
-
ரெய்னாவுக்கு 'எஸ்'... அஷ்வினுக்கு 'நோ'... சி.எஸ்.கே முதல் மும்பை இந்தியன்ஸ் வரை யாரை ரீடெய்ன் செய்யலாம்? #IPL2018 #CSK Chennai: 'தி பாய்ஸ் ஆர் பேக்' பி.ஜி.எம்தான் இப்போது வைரல். சென்னை சூப்பர் கிங்ஸின் கம்பேக் கிரிக்கெட் ரசிகர்களின் எனர்ஜியை அதிகரித்துள்ளது. நேற்று கூடிய ஐ.பி.எல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் வீரர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. அதனால் தோனி, மீண்டும் மஞ்சள் ஜெர்சி அணிந்து, சேப்பாக்கத்தில் வலம் வருவது உறுதியாகிவிட்டது. வேறு யாரையெல்லாம் சென்னை தக்கவைத்துக்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும். மற்ற அணிகள் யாரையெல்லாம் தக்கவைத்துக்கொள்வார்கள்? #IPL2018 Player retention-யைப் பொறுத்தவரை…
-
- 4 replies
- 791 views
-
-
சிம்பாவே, நபீபியா நாட்டில் நடைபெற இருக்கும் 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் விளையாடும் உலககிண்ண துடுப்பாட்ட போட்டியில் அவுஸ்திரேலியா அணியில் நிதேஷ் சாமுவேல் என்ற ஈழத்து வம்சாவளி தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரின் பெற்றோர் யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாக கொண்டவர்கள். https://www.icc-cricket.com/news/peake-to-lead-as-australia-unveil-under-19-world-cup-squad
-
-
- 4 replies
- 303 views
- 1 follower
-
-
159 பந்துகளில் 160 நாட் அவுட்: நிறுத்த முடியாத கோலி சதம் எண் 34; இந்தியா 303 ரன்கள் குவிப்பு 3-வது ஓருநாள் போட்டியில் 34-வது சதம் எடுத்த விராட் கோலி. - படம். | கெட்டி இமேஜஸ் கேப்டவுனில் நடைபெறும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 160 ரன்களைக் குவித்து நாட் அவுட்டாகத் திகழ இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 303 ரன்கள் என்று தன் 50 ஓவர்களை முடித்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணியினால் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணியின் 303 ரன்களில் பாதிக்கும் மேல் ரன்களை விராட் கோலி எடுத்துள்ளார். ரோஹித் சர்மா மட்டையின் உள்விளிம்பில் பட்டு ரபாடா பந்தி…
-
- 4 replies
- 743 views
-
-
ரோஜர் பெடரர் தோற்று வெளியேற்றம்: அதிர்ச்சி அளித்த ஆண்ட்ரியாஸ் செப்பி ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் உலகின் நம்பர் 2 வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறினார். இத்தாலி வீரர் ஆண்ட்ரியாஸ் செப்பி, ரோஜர் பெடரரை 6-4, 7-6, 4-6, 7-6 என்று 4 செட்களில் 3-1 என்று கைப்பற்றி வீழ்த்தினார். 2001-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் இவ்வளவு விரைவில் ரோஜர் பெடரர் வெளியேறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. செப்பி 11 போட்டிகளில் இப்போதுதான் ரோஜர் பெடரரை வீழ்த்துகிறார். செப்பிக்கு இந்த டென்னிஸ் தொடரில் தரவரிசை அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது செட் டைபிரேக்கரில் பெடரர் 4-1 என்று ம…
-
- 4 replies
- 545 views
-