விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
இந்த செயலுக்காக வெட்கப்பட வேண்டும்;ஜாஃப்ரி பய்காட் வேதனை!! by MohamedFebruary 13, 2021 இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜாப்ரி பய்காட் இங்கிலாந்து அணியின் தேர்வாளர் எட் ஸ்மித் மற்றும் அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். . சமீபமாகஇலங்கைக்கு எதிரான இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றது …
-
- 0 replies
- 452 views
-
-
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சினால் 72வது விளையாட்டாக அறிமுகப்படுத்திய கால் மேசை பந்தாட்டம் (TeqBall) முதல் தடவையாக வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (13) காலை வல்வெட்டித்துறை வல்வை விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு இலங்கை மேசை பந்து சங்கம் சார்பாக இலங்கைக்கான ரெக்பந்தாட்ட அபிவிருத்தி முகாமையாளர் சிவராஜா கோபிநாத், சம்மேளனத்தின் உயர் அதிகாரிகள் ரஞ்சித் மற்றும் மருத்துவர் கணேசநாதன் ஆகியோரும் பங்கேற்றனர். யாழில் மேசைப்பந்தாட்டம் அறிமுகம்! – உதயன் | UTHAYAN (newuthayan.com)
-
- 1 reply
- 561 views
-
-
சச்சின் மகன் vs ஆட்டோ ஓட்டுநரின் மகன்... ஒப்பீடும், உண்மையும்! கார்த்தி Arjun Tendulkar Vs Pranav Dhanawade நமக்கு எப்போதுமே, நாம் படிக்கும், பார்க்கும் விஷயங்களில் ஒரு எமோஷனல் வீக்னெஸ் தேவைப்படுகிறதா? ஆறு ஆண்டுகளுக்கு முன்னர்... 15 வயது சிறுவனான பிரனவ் தனாவடே ஜனவரி 2016-ம் ஆண்டு 1000 ரன்கள் அடித்து மீடியாக்களில் தலைப்பு செய்தியானார். எதிரணயினரின் ஒட்டுமொத்த ஸ்கோர் நூற்றுக்கும் குறைவு என்பதால், அது இன்னும் பெரிதானது. அதன் பின்னர், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான மேற்கு மண்டலத்துக்கான அணி அறிவிக்கப்படுகிறது. அதில் சச்சினின் மகன் அர்ஜுன் ஸ்குவாடில் சேர்க்கப்படுகிறார். ஆனால், அந்தப…
-
- 0 replies
- 683 views
-
-
இங்கிலாந்து - இந்திய சமர் இன்று சேப்பாக்கத்தில் ஆரம்பம் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி நான்கு டெஸ்ட், ஐந்து டி-20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதலவதாக நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள இங்கிலாந்து அணியானது முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது. கொரோனா பரவலுக்கு பிறகு ஓராண்டு கழித்து இந்தியாவில் நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி …
-
- 7 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர் வியஸ்காந்த் ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் ஏலப் பட்டியலில் நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் 18ஆம் திகதி சென்னையில் இடம்பெறவுள்ளது.இந்த ஏல பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் 1114 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில் தற்போது இறுதி பட்டியல் வெளியாகியுள்ளது.இதில் 31 இலங்கை வீரர்களில் ஒன்பது பேரின் பெயர் ஏல பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர் விஜயகாந்த் வியஸ்காந்த் பெயரும் இடம்பெற்றுள்ளது. 31 இலங்கை வீரர்கள் பதிவு செய்த போதிலும் அவர்களில் 9 வீரர்களே இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள…
-
- 1 reply
- 1.3k views
-
-
குஜராத் மண்ணில் தமிழ்நாடு வெற்றிக்கொடி நாட்டியது எப்படி? அஷ்வின், சுந்தர், நடராஜன் என நட்சத்திர வீரர்கள் இல்லாத போதும் குஜராத் மண்ணில் தமிழ்நாடு வெற்றிக்கொடி நாட்டியது எப்படி?
-
- 0 replies
- 645 views
-
-
எல்லா திட்டமும் பக்கவா வச்சிருப்பானுக; எச்சரிக்கும் முன்னாள் வீரர் !! இந்திய அணியை வீழ்த்துவதற்கு இங்கிலாந்து அணி மிகத் தீவிரமாக முயற்சி செய்யும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கோச் ஆண்டி பிளவர் தெரிவித்துள்ளார் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள், 5 t20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.பலம் வாய்ந்த இரு அணிகளும் பங்கேற்க உள்ள இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்று பலரும் எதிர்பார்த்து உள்ளனர். 2012 நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 2-1 என வீழ்ந்தது. இதில் குறிப்பாக அலாஸ்டர் குக் சிறப்பாக பேட்டிங் செய்து இந்திய…
-
- 0 replies
- 510 views
-
-
சும்மா இருந்த சங்கக்காரவுக்கு மீண்டும் கிடைத்த ஜக்பொட் ! 8 வருடங்களின் பின்னர் மீண்டும் ஐ.பி.எல் தொடரில் விளையாட்டு கிரிக்கெட் உலகில் ஏராளமான இருபதுக்கு இருபது லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு நாடுகளினுடைய கிரிக்கெட் சபைகளும் இருபதுக்கு இருபது லீக் தொடர்களை நடாத்தி வருகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் அதிக அளவில் பிரபலம் அடைந்துள்ள லீக் தொடர்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 2021ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொரானது எதிர்வவரும் ஏப்ரல் – மே மாதஙங்களில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கிரிக்கெட் கட்டுப்…
-
- 1 reply
- 976 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய முகாமையாளர் இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய முகாமையாளராக ஜெரோம் ஜெயரத்னவை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நியமித்துள்ளது. அதன்படி பெப்ரவரி மாதம் இலங்கை அணியின் மேற்கிந்தியத்தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணியின் முகாமையாளராக ஜெயரத்ன இருப்பார். தனிப்பட்ட காரணங்களினால் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரு டெஸ்ட் போட்டிகளுடன் அசந்த டி மெல், அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து விலகியதையடுத்து ஜெரோம் ஜெயரத்ன குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு மேலதிகமாக ஜெர்மி ஜெயரத்ன இலங்கை கிரிக்கெட்டின் தலைமை இயக்க அதிகாரியாகவும் பணியாற்றுவார். தொழில்முறை பயிற்சியாளரான ஜெயரத்ன முன்னதாக இலங்கை கிரிக்கெட்…
-
- 0 replies
- 671 views
-
-
ஆவுஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த இரு போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தது. இன்று மூன்றாவது 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். இன்று முதன்முதலாக இந்தியாவுக்காக சர்வதேச அரங்கில் களமிறங்கியிருக்கும் நடராஜனுக்கு பல விக்கட்டுக்களை வீழ்த்தி மேன்மேலும் புகழ் சேர வேண்டுகிறேன். BATSMEN R B 4s 6s SR TOTAL (5.4 Ov, RR: 4.58) 26/0 Yet to bat: V Kohli (c), SS Iyer, KL Rahul †, HH Pandya, RA Jadeja, SN Thakur, Kuldeep Yadav, JJ Bumrah, T Natarajan S Dhawan …
-
- 111 replies
- 10.1k views
- 2 followers
-
-
ஆல்ரவுண்டர் தேவைதான்.. அதுக்குன்னு இவரேதான் வேணுமா என்ன?.. மோசமான வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே.! சென்னை: சிஎஸ்கே அணி 2021 ஐபிஎல் தொடருக்காக முக்கியமான ஆல் ரவுண்டர் வீரர் ஒருவரை ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மோசமாக ஆடி தோல்வியை தழுவியது. முதல் முறை பிளே ஆப் செல்லும் வாய்ப்பையே சிஎஸ்கே பறிகொடுத்தது. இந்த நிலையில் தற்போது 2021 ஐபிஎல் தொடரில் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சிஎஸ்கே உள்ளது. 2021 ஐபிஎல் தொடருக்கும் 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது தயார் புது புது வீரர்களை அணியில் எடுத்து, சிறப்பான அணியை உருவாக்கும் திட்டத்தில் ஐபிஎல் அணிகள் களமிறங்கி உள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி எ…
-
- 0 replies
- 898 views
-
-
ஐ.பி.எல். தொடரில் மேலும் இரு அணிகள் 2020-12-25 11:34:26 இந்தியாவின் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற பி.சி.சி.ஐ. யின் 89 ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் இந்தியன் பிரீமியர் லீக்கில் இரண்டு புதிய அணிகள் சேர்க்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது ஐ.பி.எல். போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. 2022 ஆம் ஆண்டு முதல் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயரும். 2011 ஆம் ஆண்டில் இந்த தொடரில் அதிகபட்சமாக 10 அணிகள் பங்கேற்று இருந்தது. மீண்டும் அந்த நிலைக்கு அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அத்துடன் பி.சி.சி.ஐ.யின் 89 ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் மேலும் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்…
-
- 10 replies
- 1.3k views
-
-
ஆஸ்திரேலிய வெற்றி vs இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி... ஏன் இவ்வளவு பாராமுகம் பி.சி.சி.ஐ? ரமணி மோகனகிருஷ்ணன் கிரிக்கெட் இந்திய மகளிர் அணி ஐ.பி.எல் மிகப்பெரும் வெற்றியை எட்டியது. அடுத்து இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா தொடரில் விளையாடினார்கள். ஆனால், இன்னொரு புறம் பெண்கள் கிரிக்கெட் அணியின் கதை வேறாக இருக்கிறது. கொரோனா காலத்தில் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணிக்கான போட்டிகளை, ஆண்கள் கிரிக்கெட் அணியைப் போன்று கவனம் செலுத்தி நடத்தாமல், பாராமுகம் காட்டுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் மீது குற்றச்சாட்டுகள் அதிகரித்திருக்கின்றன. கொரோனா பெருந்தொற்று காலத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வாய்ப்பே இல்லை என்று மக்கள் நின…
-
- 1 reply
- 1.1k views
-
-
சந்தியா ரங்கநாதன்: தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றிய தமிழக கால்பந்தாட்ட வீராங்கனை 44 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவின் வளர்ந்துவரும் கால்பந்தாட்ட வீராங்கனையான சந்தியா ரங்கநாதன், நடுத்தர குடும்பத்தில் வளர்ந்தவர். விளையாட்டு என்பது தம்மை மேம்படுத்திக்கொள்ளும் விஷயம் மட்டுமின்றி, ஒருவரின் வாழ்நாள் தேர்வாகவும் இருக்கலாம். தன்னை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவும் அது இருக்கலாம். தமிழகத்தைச் சேர்ந்த சந்தியா ரங்கநாதன், சாதாரண குழந்தைப்பருவத்தை கொண்டவர். அரசால் நடத்தப்படும் விடுதியில் படித்து முன்னேறிய அவர், மிகவும் இளம் வயதில், கால்பந்தாட்டத்தில் சேர்ந்ததோடு, நாட்டிற்காக பல பதக்கங்களையும் வென்றுள்ளார். ஆரம்பம் என்ன? …
-
- 0 replies
- 550 views
- 1 follower
-
-
நாட்டுக்காக முழு அர்ப்பணிப்போடு கடைசி வரை விளையாடியவர் இவர் – இந்திய லெஜண்டை பாராட்டிய ஸ்டீவ் வாக் இந்திய அணியின் மறக்க முடியாத பவுலர்களில் அனில் கும்ப்ளேவும் ஒருவர். அனில் கும்ப்ளே இந்திய அணியின் முன்னாள் வீரர், பயிற்சியாளர் மற்றும் வர்ணனையாளர் ஆவார். இவர் 18 வருடங்களாக தனது தாய் நாட்டு கிரிக்கெட் அணிக்காக வாளையாடி உள்ளார். இவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய பார்மட்களில் விளையாடி முறியடிக்க முடியாத பல சாதனையை படைத்துள்ளார். இந்திய வீரர்களின் சார்பாக இவர் 619 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். இதன் மூலம் அதிக டெஸ்ட் விக்கெட்கள் எடுத்த மூன்றாவது வீரராக திகழ்கிறார். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 29.65 பவுலிங் சராசரியை பெற்றிருக்கிறார். அதுமட்டுமின்றி …
-
- 0 replies
- 623 views
-
-
பிரிஸ்பேன் சரித்திரம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்று விட்டால் கூட இந்தியா அந்தளவுக்கு கொண்டாட வேண்டிய அவசியம் கிடையாது. சாம்பியன்ஷிப் கிண்ணத்தை சுவீகரித்தால் அது வெற்றி மட்டும் தான் ஆனால் இந்த பிரிஸ்பேன் சம்பவம் ஒரு மாபெரும் கிரிக்கெட் சரித்திரம் மட்டும் கிடையாது இந்திய அணியைப் பார்த்து ஏளனமாகப் பேசித்திரிந்த அத்தனை வாய்களையும் அடக்கி விட்ட வரலாறு. 32 வருடமாக பிரிஸ்பேனில் அவுஸ்ரேலியா தோற்றதே கிடையாது. இருந்திட்டு போகட்டும், ஆனால் இனிமேல் இந்தியா பிரிஸ்பேன் வந்தால் அவுஸ்ரேலியன் கண்ணில் மரண பயம் தெரிய வேண்டும். நாம திருப்பி அடிக்கலனா அவனுக நம்மல துரத்தி அடிச்சிட்டே இருப்பானுகள், அடிக்கிறவனுக்கு திரும்ப அடிக்கனும், மொத்தமா அடங்கிற மாதிரி அடிக்கனும் என்று…
-
- 0 replies
- 566 views
-
-
உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியான இந்தியா: என்ன காரணம்? முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டனான ரிக்கி பாண்டிங்,'அடிலெய்ட் டெஸ்ட் தோல்வியை பார்க்கும் போது,இந்தியா இந்த தொடரில் ஒயிட் வாஷ் ஆகிவிடும்' என தெரிவித்திருந்தார்.ஆனால் நடந்ததே வேறு. https://www.facebook.com/BBCnewsTamil/videos/398622391203863 புதிய உச்சம் - சரித்திர சாதனை படைத்தது இந்திய அணி. எப்படி சாத்தியமானது இந்த வெற்றி? 36 ரன்களில் ஆல் அவுட் ஆன அணி தொடரை வென்றது எப்படி? https://www.facebook.com/186742265162/videos/413423799768237/
-
- 0 replies
- 641 views
-
-
இனவெறிக் கோஷங்களால் சிட்னி மைதானத்தில் குழப்பம் இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின்போதும் இனவெறி கோஷம் எழுந்த நிலையில் போட்டி இடைநிறுத்தப்பட்டது. இந்திய-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் மூன்றாவது நாளான நேற்றைய ஆட்டத்தில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, மொஹமட் சிராஜ் ஆகிய இருவரையும் சிட்னி மைதானத்தில் அவுஸ்திரேலிய ரசிகர்கள் இனரீதியாக இழிவுப்படுத்தியுள்ளனர். எல்லைக்கோடு அருகே பீல்டிங் செய்த போது, அவர்களை சீண்டியுள்ளனர். மூன்றாவது நாள் ஆட்டம் முடிந்ததும் இந்திய அணித் தலைவர் ரஹானே கள நடுவர்கள் பால் ரீபெல், பால் வில…
-
- 3 replies
- 1.2k views
-
-
முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி! இலங்கை மற்றும் சுற்றலா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சிற்காக 135 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்சில 359 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 421 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட நிலையில் வெற்றிப் இலக்காக இங்கிலாந்து அணிக்கு 74 ஓட்டங்களை இலங்கை அணி நிர்ணயித்திருந்தது. இதற்கமைய தனது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. முதலாவது டெஸ…
-
- 0 replies
- 467 views
-
-
சீர்குலைந்த அவுஸ்திரேலிய ஓபன் ; 47 வீரர்கள் தனிமைப்படுத்தலில் அவுஸ்திரேலிய ஒபனில் விளைாயடவுள்ள மொத்தம் 47 வீரர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு தங்களின் ஹோட்டல் அறைகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையை அவசியம் முன்னெடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து விக்டோரியாவுக்கு பட்டாய விமானங்களில் சென்ற மூவர் கொரோனா தொற்றுக்குள்ளகியுள்ளமை அடையளாம் காணப்பட்டதையடுத்து, அவர்களுடன் தொடர்புகளை பேணி 47 வீரர்களை அவர்களது ஹோட்டல் அறைகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா தொற்றுக்குளானவர்களுடன் தொடர்பினை பேணிய வீரர்கள் தவிர்ந…
-
- 0 replies
- 763 views
-
-
குடும்ப வன்முறை, வறுமை ஆகிய தடைகளை வென்று இந்திய ரக்பி அணியில் இடம் பிடித்த சுமித்ரா நாயக் அது 2008ஆம் ஆண்டு. எட்டு வயது மதிக்கத்தக்க அந்த சிறுமி ஒடிஷாவில் ஒரு மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் ஒரு முட்டை வடிவ பந்தை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருப்பதை கண்டார். முதலில் அவர் அது டைனோசர் முட்டைபோல உள்ளது என நினைத்தார். முதன் முதலில் ரக்பி போட்டியை பார்த்துக் கொண்டிருந்த அந்த சிறுமிதான் சுமித்ரா நாயக். தற்போதைய இந்தியாவின் பெண்கள் ரக்பி அணியின் முக்கிய வீராங்கனை. புவனேஷ்வரில் உள்ள கலிங்கா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் மைதானத்தில் தன் சிறு வயதில் இந்த விளையாட்டை தொடங்கிய சுமித்ராவின் இளமைக் காலம் சவால்கள் ந…
-
- 1 reply
- 595 views
-
-
11 விக்கெட்டுகளை வீழ்த்திய 6.8 அடி உயரமுள்ள ஜேமிஸன்: டெஸ்ட் தொடரை வென்று பாகிஸ்தானை பந்தாடியது நியூஸி. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற நியூஸிலாந்து அணியினர் : படம் உதவி ட்விட்டர் கிறிஸ்ட்சர்ச் 6.8அடி உயரமுள்ள கைல் ஜேமிஸனின் வேகப்பந்துவீச்சு, போல்டின் துல்லியப்பந்துவீச்சு ஆகியவற்றால் கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியை இன்னிங்ஸ் மற்றும் 176 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து அணி. இந்த கோடைகால சீசனில் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நியூஸிலாந்து அணி 4 போட்டிகளிலும் வென்றுள்ளது. இரு இன்னிங்ஸிலும் சேர்த்து மொ…
-
- 2 replies
- 766 views
-
-
இந்திய பந்துவீச்சாளரான இவரை தவிர வேறுயாரும் எனக்கு இவ்வளவு தொல்லை கொடுத்ததில்லை – ஸ்மித் பேட்டி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி பேட்ஸ்மேனுமான ஸ்டீவ் ஸ்மித் தற்போதைய டெஸ்ட் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கிறார். அது மட்டுமின்றி இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த ஸ்மித் குறிப்பாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு சதம் விளாசி அவர் இந்திய அணிக்கு பெரும் தொந்தரவு கொடுத்திருந்தார். இந்நிலையில் வழக்கமாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் அவர் ஒருநாள் போட்டிகளிலேயே அபாரமான ஃபார்மில் இருந்ததால் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு பெரிய தலைவலியை கொடுப்பார் என்று …
-
- 0 replies
- 841 views
-
-
இந்திய வீரர்கள் பந்துவீச்சில் அவுட்டாகி விடுவோம் எனும் பயத்தை நிறுத்தங்கள்: ஆஸி. பேட்ஸ்மேன்களை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங் ரிக்கி பாண்டிங் : கோப்புப்படம் மெல்போர்ன் இந்தியப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் ஆட்டமிழந்துவிடுவோம் எனும் பயத்தை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் முதலில் நிறுத்தினால்தான் விக்கெட் சரிவைத் தடுக்க முடியும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சாடியுள்ளார். அடிலெய்டில் நடந்த பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவிடம் 8 விக்கெட்டில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. ஆனால், மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் 4-வது நாளான இன்று ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தி்ல…
-
- 1 reply
- 646 views
-
-
Ind Vs Aus 2-வது டெஸ்ட் - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி 28 டிசம்பர் 2020 பட மூலாதாரம், QUINN ROONEY/GETTY IMAGES மெல்பர்னில் நடந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான தொடரின் இரண்டாவது போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது. பொறுப்பு கேப்டனாக செயல்பட்ட அஜிங்க்யா ரஹானே ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டியில் இந்தியா வென்றுள்ளதால் 1-1 எனும் அளவில் இப்போதைக்கு இந்தத் தொடர் சமநிலையை எட்டியுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் இன்னிங்சில் ஆஸ்திரேலியா முறை…
-
- 0 replies
- 540 views
-