விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
துப்பாக்கி முனை தோட்டாவாய் ரொனால்டோ... புல்லட் புரூஃப் ஜாக்கெட்டாய் யுவென்டஸ்! #ChampionsLeagueFinal #RealMadridvsJuventus `பாகுபலி 2' க்ளைமாக்ஸில் பிரபாஸும் ராணாவும் மோதிக்கொண்டபோது தியேட்டர் அதிர்ந்ததுபோல் இன்று இரவு சாம்பியன்ஸ் லீக் ஃபைனலில் ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாடுகளில் உள்ள க்ளப் சாம்பியன்களான ரியல் மாட்ரிட், யுவென்டஸ் மோதும்போது கால்பந்து உலகமே அதிரும். இது கார்டிஃப்பில் நடக்கப்போகும் சாம்பியன்களின் சாம்பியனுக்கான யுத்தம்; ஒரு வருடத் தவம். ஒவ்வொரு நொடியும் இதயத்துடிப்பு எகிறப்போகும் அந்த ஆட்டத்தின் முன்னோட்டம் இங்கே... சுவாரஸ்யமான இந்தப் போட்டியில் ஜெயிக்கப்போவது யார் என்பதைக் கணிப்பது சிரமம். ஏனெனில், மோதப்போவது தலைகள் அல்ல... ம…
-
- 4 replies
- 827 views
-
-
இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதும் ஒருநாள் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடுகின்றது. இவ்விரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகள் காலி மைதானத்தில் நடைபெறுகின்றன. மீதமுள்ள மூன்று போட்டிகளும் ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நடைபெறவுள்ளன. ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நாளை காலி மைதானத்தில் நடைபெறவுள்ளது. சிம்பாப்வே அணியுடன் மோதவுள்ள இலங்கை அணி நேற்றுமுன்தினம் அறிவிக்க…
-
- 4 replies
- 517 views
-
-
ரொனால்டோவின் ஹெட்ரிக்குடன் ரியல் மெட்ரிட் வெற்றி நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அதிவேக ஹெட்ரிக் சாதனையால் கிரனேடா அணியை வீழ்த்தி ரியல் மெட்ரிட் அணி வெற்றிப்பெற்றுள்ளது. ஆட்டத்தின் முதல்பாதியில், 8 நிமிடங்களில் அடுத்தடுத்து 3 கோல்கள் அடித்து, கிறிஸ்டியானோ ரொனால்டோ அசத்தினார். அதிவேக ஹொட்ரிக் கோல் சாதனையுடன் மேலும் 2 கோல்களை தலையால் முட்டி முதன் முறையாக 5 கோல்களை பெற்றார். இதனையடுத்து, லா லிகா பட்டியலில் இறுதியில் உள்ள அணியான கிரனேடாவை 9:1 என்ற கணக்கில் ரியல் மெட்ரிட் அணி வீழ்த்தியது. மற்றொரு போட்டியில், பார்சிலோனா அணி, மத்தியுவின் ஒரே ஒரு கோலுடன் போராடி செல்டோவிகோ அணியை, 1:0 என்ற கணக்கில் வென்று லா லிகா தரவரிசைப்பட்டியலில் 71 புள்ளிகளுடன் முன்ன…
-
- 4 replies
- 441 views
-
-
போர்ச்சுகல் அணியின் வெளியேற்றம் ரொனால்டோவின் கால்பந்து வாழ்க்கையின் முற்றுப்புள்ளியா? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் போர்ச்சுக்கல்லின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வந்தது. கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் நேற்று நடந்த காலிறுதி போட்டியில் மொராக்கோ அணி போர்ச்சுகல் அணியை 1-0 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது. போட்டியிலிருந்து போர்ச்சுகல் அணி வெளியேறியவுடன் ரொனால்டோவின் கால்பந்து வாழ்க்கையும் முடிவுக்கு வந்துவிட்டதா? போர்ச்சுக்கல் அணி காலிறுதி போட்டியில் இருந்து வெளியேறியவுடன் ரொனால்…
-
- 4 replies
- 435 views
- 2 followers
-
-
சமையல்காரருக்கு மகனாக பிறந்த ரொனால்டோ உலகின் பணக்கார வீரர் ஆனது எப்படி? பிரிட்டிஷ் அகாடமி விருது பெற்ற இயக்குனர் பிரைட்டன் அண்டோனி வோன்க் இயக்கத்தில், பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. ரியல்மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, போர்ச்சுகல் நாட்டில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை சாதாரண சமையல்காரர். இவரது தாய் நகராட்சி ஒன்றில் பூங்காக்களை பராமரிக்கும் வேலையில் இருந்தார். ஏழை குடும்பத்தில் பிறந்தாலும், தனது கால்பந்து திறமையால் உலகிலேயே கால்பந்து மூலம் அதிகம் சம்பாதிக்கும் வீரராக உருவெடுத்துள்ளார். இவரது ஆண்டு வருமானம் சுமார் 600 கோடிக்கும் மேல். ஏழ்மை நிலையில் இருந்து …
-
- 4 replies
- 508 views
-
-
மலிங்கவை இலங்கை வருமாறு அழைப்பு இலங்கை அணி வீரர் லசித் மாலிங்கவை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்ட விஷேட மருத்துவக் குழுவின் முன் எதிர்வரும் புதன்கிழமை ஆஜராகுமாறு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/5271
-
- 4 replies
- 658 views
-
-
. அவுஸ்திரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்களால் இலகுவாக வெற்றிபெற்றது. பேர்த் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 23.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 70 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. முதலாவது விக்கெட்டை 14 ஓட்டங்களுக்கு இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 39 ஓட்டங்களைப் பெற்றுத் தடுமாறியது. அதன் ப…
-
- 4 replies
- 471 views
-
-
மீண்டும் கேப்டனாகக் களமிறங்கப்போகும் மேத்யூஸ்... தோல்வியின் பிடியிலிருந்து மீளுமா இலங்கை! இலங்கை கிரிக்கெட் அணி, கடந்த ஓர் ஆண்டாகவே தொடர் சரிவைச் சந்தித்துவருகிறது. டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து ஃபார்மெட்களிலும் தோல்வி மேல் தோல்வி. விளைவு, தொடர்ச்சியாக கேப்டனை மாற்றி, புதுப்புது உத்திகளைக் கையாண்டுவருகிறது அணி நிர்வாகம். ஆனால், எந்த உத்திக்கும் பழைய ரிசல்ட் மட்டும்தான் கிடைக்கிறது. இந்நிலையில், எல்லாம் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்கிறது இலங்கை கிரிக்கெட் வாரியம். கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இலங்கை அணி, ஒருநாள் தொடரில் மண்ணைக் கவ்வியவுடன், அணியின் கேப்டனாக இருந்த மேத்யூஸ் பதவி விலகினார். அதன் பின்னர், உபுல்…
-
- 4 replies
- 525 views
-
-
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 16வயதில் இந்திய அணிக்காக "பேட்' பிடித்த இவர், 36 வயதிலும் அசைக்க முடியாத "ஹீரோவாக' ஜொலிக் கிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 175 ரன்களை விளாசிய இவர், தனது ஆட்டத்தில் இன்னும் இளமை மாறவில்லை என்பதை அழுத்தமாக நிரூபித்தார். மிக நீண்ட காலமாக அசத்தி வரும் இவரது சாதனை பயணத்தை பார்ப்போம். கடந்த 1973, ஏப்., 24ம் தேதி மும்பையில் பிறந்த சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் இளம் பருவத்தில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வமாக இருந்தார். அண்ணன் அஜித் ஊக்கம் அளிக்க, உள்ளூர் போட்டிகளில் தூள் கிளப்பினார். முதலில் பள்ளி அளவிலான "ஹாரிஸ் ஷீல்டு' போட்டியில் …
-
- 4 replies
- 2k views
-
-
Hall of Fame விருதைப் பெற்று வரலாற்றில் பதிவானார் முத்தையா முரளிதரன் Hall of Fame விருதைப் பெற்ற முதல் இலங்கையராக முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வரலாற்றில் பதிவாகியுள்ளார். இதன் மூலம் சேர். பிரட்மன், இயன் செப்பல், காபில்ட் சோபர்ஸ், கர்ட்லி அம்புரோஸ் ஆகியோரின் வரிசையில் முரளிதரனும் இணைந்து கொண்டுள்ளார். கிரிக்கெட் உலகில் அதீத ஆற்றலை வெளிப்படுத்தி புகழ்பூத்த வீரர்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கின்றது. அந்த வகையில், இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் இன்றைய தினம் Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட…
-
- 4 replies
- 871 views
-
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சயீட் அஜ்மல் இடைநிறுத்தம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னிலை சுழற்பந்துவீச்சாளரான சயீட் அஜ்மல் சர்வதேச போட்டிகளிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) இன்று அறிவித்துள்ளது. சயீட் அஜ்மலின் பந்துவீச்சுப் பாணி விதிகளுக்கு முரணானது என கண்டறியப்பட்டதையடுத்து அவர் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6772#sthash.SXUY3STC.dpuf
-
- 4 replies
- 636 views
-
-
தன்னை தமிழராகவோ இந்துவாகவோ அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை எனவும், இலங்கையர் என்ற அடையாளமே முக்கியமானது எனவும் இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்… அரசியலில் தமக்கு நாட்டமில்லை எனவும், அரசியலில் ஈடுபடப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏதேனும் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால், தமது பெயர் அதற்காக பயன்படுத்துவது வழமையாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் ஈடுபட்டால் மட்டுமே மக்களுக்கு சேவையாயற்ற முடியும் என்பதில் தமக்கு நம்பிக்கை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அறக்கட்டளைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாக மக்களுக்கு தாம் சேவ…
-
- 4 replies
- 1.6k views
-
-
யாழ்.மத்திய கல்லூரி 8 விக்கெட்டுகளால் வெற்றி இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில், 19 வயதுப்பிரிவு அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட இரண்டு நாள் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ஆட்டமொன்றில் யாழ். மத்திய கல்லூரி வெற்றிபெற்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற இந்தப் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை எதிர்த்து கொட்டஹேன ஆனந்தா மகா வித்தியாலயம் மோதியது. நாணயச் சுழற்சியில் வென்று முதலில் ஆடிய ஆனந்தா மகா வித்தியாலயம் 48.4 ஓவர்களின் சகல விக்கெட்களையும் இழந்து 109 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் பஷன் ஜெயகலன 23 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் யாழ். மத்திய கல்லூரி சார்பா…
-
- 4 replies
- 526 views
-
-
ஊக்கமருந்துப் பரிசோதனையில் சிக்கினார் குசால் இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரர் குசால் ஜனித் பெரேரா, தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துப் பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான கிரிக்கெட் தொடரின் போது மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்துச் சோதனையிலேயே, குசால் ஜனித் பெரேராவின் ஊக்கமருந்துப் பாவனை கண்டுபிடிக்கப்பட்டது. இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடருக்கான குழாமில், குசால் பெரேரா இடம்பெற்றிருந்த நிலையில், நியூசிலாந்துக்குச் சென்றிருந்தார். ஆனால், தற்போது அவரது ஊக்கமருந்துப் பாவனை வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் குழாமிலிருந்து அவர் விலக்கப்…
-
- 4 replies
- 984 views
-
-
கால் இறுதியாட்டம் #1 பிரான்ஸ் - அமெரிக்கா கால் இறுதியாட்டம் #2 நோர்வே - இங்கிலாந்து கால் இறுதியாட்டம் #3 இத்தாலி - ஒல்லாந்து கால் இறுதியாட்டம் #4 ஜெர்மனி - சுவீடன்
-
- 4 replies
- 897 views
-
-
புதிய மகுடம் சூடிய, செரீனா வில்லியம்ஸ்.. அமெரிக்க ஓபனில் 100 வெற்றிகளை எட்டினார்! அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 100 வெற்றிகளை பெற்று சாதனை புரிந்தார். மேலும், தன் நூறாவது வெற்றி மூலம், 2019 அமெரிக்க ஓபன் தொடரின் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தார்.சீனாவின் வாங் கியாங்-கை கால் இறுதி சுற்றில் சந்தித்தார் செரீனா வில்லியம்ஸ். செரீனாவின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாத அவர் 44வது நிமிடத்திலேயே தோல்வி அடைந்தார். 6 - 1, 6 - 0 என்ற நேர் செட்களில் எளிதான வெற்றியை பெற்றார் செரீனா வில்லியம்ஸ். இந்த வெற்றி மூலம் அரை இறுதியில் செரீனா வில்லியம்ஸ், உக்ரைனின் எலினா விட்லோனாவை சந்திக்கிறார். இது வரை மூன்று சீன வீரர் அல்ல…
-
- 4 replies
- 1k views
-
-
யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீரங்கானைகள் கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி Published By: DIGITAL DESK 5 04 MAR, 2023 | 02:10 PM யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீரங்கானைகள் கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இவ்வாண்டுக்கான உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டி கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ளது. இப் போட்டியில் இலங்கை சார்பாக விளையாட தகுதியுடைய வீர, வீராங்கனைகளைத் தெரிவு செய்வதற்கான தேசிய மட்டப் போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன. இப் போட்டியில் வெற்றிகளைப் பெற்ற …
-
- 4 replies
- 338 views
- 1 follower
-
-
பிரஸீலிய அழகி 25 வயதான பெர்னான்டா உலியானா உதவி நடுவரகியுள்ளார்! http://www.stuff.co.nz/sport/football/10035479/Brazils-breakthrough-referee-Fernanda-Colombo-Uliana
-
- 4 replies
- 677 views
-
-
பெண் நிருபரால் தாக்கப்பட்ட சிரிய அகதி ஸ்பெயினில் கால்பந்து பயிற்சியாளர் ஆனார்! கடந்த சில நாட்களுக்கு முன் சிரியாவில் இருந்து ஹங்கேரிக்கு சென்ற அகதிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பெண் வீடியோகிராபரான பெட்ரோ லஸ்லா என்பவரால் ஒசமாக அகமது என்ற அகதி காலை இடறி கீழே விழ வைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்படியே தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகியது. இந்த சம்பவத்தை தொலைகாட்சிகளில் பார்த்த மக்கள், அந்த பெண் நிருபரின் செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நிருபர் பெட்ரோ லஸ்லாவை அவர் வேலை பார்த்து வந்த நிறுவனமும் பணியை விட்டு நீக்கியது. பெண் நிருபரால் தாக்கப்பட்ட சிரிய அகதி ஒசமா அப்துல் சிரிய நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற கால்பந்து அணிகளுக்கு…
-
- 4 replies
- 443 views
-
-
பேட்டிங் தடுமாற்றங்கள் பற்றிய கேள்விகளுக்குப் பதில் அளிக்காவிட்டால் அயல்நாடுகளில் நாம் தொடரை ஒரு போதும் வெல்ல முடியாது: ரவிசாஸ்திரியை விளாசிய கங்குலி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி : கோப்புப்படம் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்து தோல்வி அடைந்ததற்கு தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கரும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வலியுறுத்தியுள்ளார். இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் த…
-
- 4 replies
- 511 views
-
-
-
19வயதிற்குட்பட்ட கால்பந்தாட்ட அணியில் இரண்டு யாழ். வீரர்கள் ஆசிய பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதிற்குட்பட்ட 43ஆவது சர்வதேச கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடர் சீனாவில் நடைபெறுகிறது. ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதிமுதல் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதிவரை நடைபெறும் இப்போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணி நேற்றுமுன்தினம் சீனாவுக்கு பயணமானது. சீனா சென்ற 19வயதிற்குட்பட்ட இலங்கை கால்பந்தாட்ட அணியில் யாழ். ஹென்றிக் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும் மன்னார் சேவியர் கல்லூரியின் மாணவரும் இடம்பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம், இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவன் செபமாலைநாயகம் யூட்சுபன் மற்றும் அமலதாஸ் மதுஸ்ரன் ஆகிய இரு மாணவர்களுமே யாழ். மாவட்டத்தில…
-
- 4 replies
- 1k views
-
-
கோலூன்றிப் பாய்தலில் மீண்டும் சாதனை படைத்த யாழ் மாணவி அனித்தா யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவி ஜே.அனித்தா , கோலூன்றிப் பாய்தலில் புதிய தேசிய சாதனையை படைத்துள்ளார். அனித்தா சேர்.ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் படைத்திருந்த தேசிய சாதனையை தானே முறியடித்துள்ளார். இவர் சேர்.ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் 3.35 மீற்றர் உயரத்திற்கு கோலூன்றிப் பாய்ந்து சாதனை நிலைநாட்டியிருந்த நிலையில், இன்று ஆரம்பமான 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் 3.41 மீற்றர் உயரம் பாய்ந்து சாதனையை நிலைநாட்டியுள்ளார். http://www.virakesari.lk/article/11920
-
- 4 replies
- 787 views
-
-
ஐந்து No Ball இல்லாத கிறிக்கட் வீரர்கள் Kapil Dev 131 Tests 225 One Days ( The Ace All rounder!) Ian Botham 102 Tests 116 One Days Imran Khan 88 Tests 175 One Days Dennis Lillee 70 Tests Lance Gibbs 70 Tests
-
- 4 replies
- 979 views
-
-
பேயார்ன் முனிக் சாம்பியன் மார்ச் 26, 2014. பெர்லின்: ஹெர்தா பெர்லின் அணிக்கு எதிரான பன்டஸ்லிகா( bundesliga ) தொடரின் லீக் போட்டியில் வெற்றி பெற்ற பேயார்ன் முனிக் அணி சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது. ஜெர்மனியில் உள்ளூர் கிளப் அணிகள் பங்கேற்கும் ஜெர்மன் பன்டஸ்லிகா கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் நேற்று நடந்த லீக் போட்டியில் பேயார்ன் முனிக், ஹெர்தா பெர்லின் அணிகள் மோதின. போட்டியின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய முனிக் அணிக்கு டோனி கிராஸ் (6வது நிமிடம்), மரியோ (14) ஆகியோர் கோல் அடித்தனர். இதற்கு பெர்லின் அணி வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. பின் இரண்டாவது பாதியில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் பெர்லின் அணிக்கு ஏட்ரியன் (66) ஒரு கோல் அடித்…
-
- 4 replies
- 549 views
-