விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7858 topics in this forum
-
நாளை வரை ஒத்திவைக்கப்பட்ட முதலாவது அரையிறுதி ஆட்டம்! இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான அரையிறுதிப் போட்டி மழை காரணமாக நாளைய தினம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இன்று ஆரம்பமான முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோதின. இன்று மாலை 3.00 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. மார்டின் குப்டில் - ஹென்றி நிக்கோலஷ் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களமறிங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க 3.3 ஆவது ஓவரில் மார்டின் குப்டில் பும்ராவின் பந்து வீச…
-
- 0 replies
- 985 views
-
-
https://www.google.co.uk/amp/s/tamil.oneindia.com/amphtml/news/delhi/mahendra-singh-dhoni-announces-retirement-from-international-cricket-394621.html
-
- 10 replies
- 985 views
-
-
நடுவரைத் திட்டிய ஷேன்வோர்னுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன். இவர் தற்போது கவுன்டி போட்டிகளில் ஹாம்ப்ஷையருக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் கென்டர்பரியில், கென்ற் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இவருக்கு நடுவர் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட் கொடுத்தார். இந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்த வோர்ன் களத்திலேயே சிறிது நேரம் இருந்தார். பின்னர் `பெவிலியன்' திரும்பும்போது தகாத வார்த்தைகளால் நடுவரை வசை பாடினார். இச்சம்பவம் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் சபையிடம் நடுவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, இவருக்கு 6 அபராத புள்ளிகளை கிரிக்கெட் சபை விதித்தது. இப்புள்ளிகள் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இவரது கணக்கிலிருக்க…
-
- 0 replies
- 985 views
-
-
தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இலங்கை குழாத்தில் ஓஷத, நிஷான் - நெவில் அன்தனி தென் ஆபிரிக்காவுக்கு எதிராக இந்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட 17 வீரர்களைக் கொண்ட இலங்கை டெஸ்ட் குழாத்தில் துடுப்பாட்ட வீரர் ஓஷத பெர்னாண்டோ, சுழல்பந்துவீச்சாளர் நிஷான் பீரிஸ் ஆகியோர் இடம்பெறுகின்றனர். நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பிரகாசிக்கத் தவறிய ரமேஷ் மெண்டிஸ் நீக்கப்பட்டுள்ளார். அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா உட்பட 10 வீரர்கள் ஏற்கனவே தென் ஆபிரிக்கா சென்று அங்கு நீல் மெக்கென்ஸியின் கீழ் விசேட பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். …
-
-
- 18 replies
- 984 views
- 1 follower
-
-
ராஹுல் திராவிட் – முடி துறந்த டெஸ்ட் சக்ரவர்த்தி சந்திரசேகரன் கிருஷ்ணன் உலகமே ராஹுல் திராவிடிலிருந்து சச்சினுக்குத் தாவிய பின்னர் திராவிடைப் பற்றி மீண்டும் பேசுகிறோம். அவசரகதியில் பல்லாயிரக்கணக்கான மைல் நீளமுள்ள சுவர்களுக்கு வெள்ளையடிக்கும் பணியில் பெரும்பாலானோர் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, பக்கத்தில் 5 அடிக்கு 5 அடி கேண்வாஸில் அரைமணி நேரமாய் ஒரே ஒரு கோடு வரைந்துக் கொண்டிருப்பவனை பைத்தியம் என்றுதான் சொல்லவேண்டும், வெள்ளையடிப்பதற்கும் ஓவியத்திற்கும் வித்தியாசம் தெரியாவிட்டால். அப்படிப் பலரின் விமர்சனங்களையும் வாங்கிக்கொண்டு பொறுமையாக வரைந்து முடித்து, ஓவியத்தை ஒரு அழியாச்சின்னமாக விட்டுச் சென்று இருக்கிறார் திராவிட். கிரிக்கெட்டே வண்ணமயமான ஒரு கோலாகலமாக ம…
-
- 8 replies
- 984 views
-
-
சும்மா இருந்த சங்கக்காரவுக்கு மீண்டும் கிடைத்த ஜக்பொட் ! 8 வருடங்களின் பின்னர் மீண்டும் ஐ.பி.எல் தொடரில் விளையாட்டு கிரிக்கெட் உலகில் ஏராளமான இருபதுக்கு இருபது லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு நாடுகளினுடைய கிரிக்கெட் சபைகளும் இருபதுக்கு இருபது லீக் தொடர்களை நடாத்தி வருகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் அதிக அளவில் பிரபலம் அடைந்துள்ள லீக் தொடர்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 2021ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொரானது எதிர்வவரும் ஏப்ரல் – மே மாதஙங்களில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கிரிக்கெட் கட்டுப்…
-
- 1 reply
- 983 views
-
-
டோணிக்கு இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குது.. . ராஞ்சி: உலக கோப்பை வெல்ல முடியாத விரக்தி, யுவராஜ்சிங்கின் தந்தை வசைமாறி என மாறிமாறி காயப்பட்டுவரும், இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் டோணி, அதையெல்லாம் சட்டை செய்யாமல், தனக்கு பிடித்தமான ஒரு விஷயத்தில் ஈடுபட்டுள்ளார். 60 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்களை கொண்டிருந்தாலும், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தோடு டிவிட்டருக்கு தற்காலிக பிரேக் விட்டார் கேப்டன் கூல், டோணி. இந்நிலையில், இன்றுதான் மீண்டும் டிவிட்டருக்கு வந்தார் டோணி. டோணிக்கு இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குது.. . அதுவும், ஒரு புதிரோடுதான் ரீ-என்ட்ரி கொடுத்தார். பல மாத வெயிட்டிங்கிற்கு இப்போதுதான் முடிவு கிடைத்துள்ளது. இருந்தாலும், இன்ன…
-
- 1 reply
- 983 views
-
-
அணிகள் : ஹூஸ்ட்டன் ஆஸ்ரோஸ் மற்றும் வாசிங்கிடன் நஷனல்ஸ் முதல் நான்கு வெற்றிகளை பெரும் அணி சாம்பியனாகும் முதலாவது போட்டி , அரங்கு ஹூஸ்ட்டன்
-
- 8 replies
- 982 views
-
-
உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: 36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா கட்டுரை தகவல் எழுதியவர்,க. சுபகுணம் பதவி,பிபிசி தமிழ் 18 டிசம்பர் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முதல் கோல் அடித்தபின் கொண்டாடும் மெஸ்ஸி 36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வென்றுள்ளது. இரண்டு அணிகளும் தலா மூன்று கோல் அடித்த நிலையில்; பெனால்டி ஷூட் அவுட்டில் பிரான்ஸை 4-2 என்ற கணக்கில் வென்றது அர்ஜென்டினா. எமிலியானோ மார்ட்டினெஸ், ஐந்து பெனால்டி ஷூட்களில் இரண்டை தடுத்து அணியைக் காப்…
-
- 23 replies
- 982 views
- 1 follower
-
-
மொகாலி: மொகாலி டெஸ்டில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் துல்லியமாக பந்துவீச, ஆஸ்திரேலிய "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். பொறுப்புடன் ஆடிய வாட்சன் சதமடித்து கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 224 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மொகாலியில் நேற்று துவங்கியது. "டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், பேட்டிங் தேர்வு செய்தார். பாண்டிங் அரைசதம்: முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு சைமன் காடிச் (6), ஜாகிர் வேகத்தில் வெளியேறி மோசமான துவக்கம் கொடுத்தார். பின்னர் இணைந்த ஷேன் வாட்சன், ரிக்கி பாண்டிங் ஜோடி இந்திய பந்துவீச்சை எளிதாக…
-
- 8 replies
- 982 views
-
-
இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கு விராட் கோஹ்லி கேப்டன்! மும்பை: இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் டோணிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, பார்முக்கு திரும்பியுள்ள விராட் கோஹ்லிக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சம்பள பிரச்சினை காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணி திடீரென ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகிக் கொண்டதால், அதற்கு பதிலாக, நவம்பரில், இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கு விராட் கோஹ்லி கேப்டன்! இந்த சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணி தேர்வு இன்று நடைபெற்றது. இதன்படி, டோணிக்கு ஓய்வளிக்கப்பட்டு கோஹ்லி, இத்தொடருக்கான கேப்டனாக்கப்பட்டுள்ளார். டோணிக்கு பதிலாக விருத்திமான் ச…
-
- 0 replies
- 982 views
-
-
முழங்கால் காயம் : மருத்துவமனையில் சானியா அனுமதி! சனி, 3 மார்ச் 2007 இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது கால் முட்டியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்! டோஹாவில் நடந்த கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டிகளின் முதல் சுற்றில் இத்தாலி வீராங்கனையை வென்ற சானியா மிர்சாவிற்கு வலது கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. அதனால் இரண்டாவது சுற்றில் இருந்து அவர் விலகிக் கொண்டார். நாடு திரும்பிய அவருக்கு நேற்று எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டபோது, முட்டியில் முழங்கால் எலும்பையும், தொடை எலும்பையும் இணைக்கும் குறுத்தெலும்பில் காயம் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அ…
-
- 0 replies
- 981 views
-
-
இன்றைய தரவரிசைப்படி துடுப்பெடுத்தாட்டத்தில் முதலாம் இடத்தில் ஆஸ்திரேலியாவின் மைக்கல் ஹசியும் இரண்டாம் இடத்தில் இந்தியாவின் டோனியும் உள்ளார்கள். சிரிலங்காவை :P அண்மையில் மண் கவ்வ வைத்த ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் டோனியின் அதிரடி ஓட்டக் குவிப்பு அவரை இரண்டாம் இடத்திற்கு ஏற்றி விட்டது. ஜானா
-
- 0 replies
- 980 views
-
-
பிஃபாவின் சிறந்த வீரருக்கான விருது: ஐந்தாவது முறையாக தட்டிச் சென்றார் ரொனால்டோ போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பிஃபாவின் சிறந்த வீரருக்கான விருதை ஐந்தாவது முறையாக தட்டிச் சென்றார். போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த கால்பந்து கிளப் அணியான ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். ரியல் மாட்ரிட் அணி இந்த வருடம் லா லிகா, ஸ்பெயின் சூப்பர் கோப்பை, ஐரோப்பிய சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை கைப்பற்றியது. இதற்கு ரொனால்டோவின் ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. இந்த வருடத்திற்கான பிஃபாவின் சிறந்த வீரரருக்கான வி்ருது நேற்று அறிவிக்…
-
- 1 reply
- 979 views
-
-
கோபா- அமெரிக்க கால்பந்து இறுதியாட்டம் சாம்பியன் கிண்ணத்தை பிரேசில் கைப்பற்றியது [17 - July - 2007] கோபா அமெரிக்க கால்பந்தாட்ட இறுதியாட்டத்தில் பிரேசில் அணி ஆர்ஜென்ரீனாவை தோற்கடித்து சாம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றியது. கோபா- அமெரிக்கக் கிண்ண கால்பந்துப் போட்டி வெனிசுலாவில் நடந்தது. இதன் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்றது. இதில் தற்போது சாம்பியனான பிரேசில் - ஆர்ஜென்ரீனா ஆணிகள் மோதின. பிரேசில் வீரர்களின் அபாரமான ஆட்டத்திற்கு ஈடுகொடுத்து விளையாட முடியாமல் ஆர்ஜென்ரீனா வீரர்கள் திணறினார்கள். ஆட்டம் தொடங்கிய 4 ஆவது நிமிடத்தில் பிரேஸில் முதல் கோலைப் போட்டது. கனிஷ்ட வீரர் பாப்டிஸ்டா இந்தக் கோலை அடித்தார். 40 ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்ரீனா …
-
- 0 replies
- 979 views
-
-
உலகப் புகழ்பெற்ற பாடகியான ரிஹானா, உலக கிண்ண கால்பந்தாட்ட சம்பியன் கிண்ணத்தை தனது கைகளால் தொட்டதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். பிரேஸிலின் ரியோ டி ஜெனெய்ரோ நகரின் மரக்கானா அரங்கில் கடந்த ஞாயிறன்று இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனாவை தோற்கடித்து சம்பியனான ஜேர்மன் அணியினருடன் இணைந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டார் பாடகி ரிஹானா. இதன்போது, ஜேர்மனி அணி வீரர்களின் கைகளிலிருந்து உலக கிண்ண கிண்ணத்தை ரிஹானாவும் தொட்டுப்பார்த்தார். இதன்போது பிடிக்கப்பட்ட படங்களும் ஊடகங்களின் வெளியாகின. ஆனால், பாடகி ரிஹானா உலக கிண்ணத்தை தொட்டமை சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தின் (ஃபீஃபா) விதிகளுக்கு முரணானது எனத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்மேளனத்தின் விதிகளின்படி, உலக…
-
- 4 replies
- 979 views
-
-
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் முதல் நாளிலேயே 9 விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆஸ்திரேலியா 237 ரன்கள் எடுத்த நிலையில் திடீரென டிக்ளேர் செய்தது. இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்திருக்கிறதுஇந்தியா வருகை தந்துள்ள கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சென்னையில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இந்திய அணி அபாரமாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.இதைத் தொடர்ந்து இன்று ஹைதராபாத்தில் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.இன்று காலை போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாட…
-
- 12 replies
- 979 views
-
-
33 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்து ஒரு ஓவர் வீசி திரும்பிய ஆஸ்திரேலிய வீரர்! இங்கிலாந்து- ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான டி20 கிரிக்கெட் போட்டி அயர்லாந்தில் உள்ள கார்டீப் நகரில் நடைபெற்றது. இந்த ஒரே ஒரு போட்டிக்கான டி20 ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்துவீச்சாளர் கேமரான் பாயிஸ் இடம் பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து பிரிஸ்பேன் நகரில் இருந்து கார்டீப் நகருக்கு 33 ஆயிரம் கிலோ மீட்டர் பறந்து வந்து கேமரான் பாயிஸ் போட்டியில் பங்கேற்றார். ஏற்கனவே டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் அவர் இடம் பெற்றிருக்கவில்லை. அடுத்து நடைபெறவுள்ள ஒருநாள் போட்டிக்கான அணியிலும் கேமரான் பாயிஸ் இடம் பெறவில்லை.எனவே இந்த டி 20 போட்டி முடிந்தவுடன் அவர் உடனடியாக தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். …
-
- 0 replies
- 977 views
-
-
எம்.சி.எல்.காக சங்கக்கார மற்றும் மஹேல ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர் எம்.சி.எல். எனப்படும் மாஸ்டர்ஸ் செம்பியன்ஸ் லீக் தொடருக்காக, ஓய்வுபெற்ற இலங்கை கிரிக்கட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் 5 லட்சத்து 50 ஆயிரம் டொலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். இந்த தொடர் அடுத்த வருடம் டுபாயில் நடைபெறவுள்ளது. இதற்கு பிரையன் லாரா, சௌரவ் கங்குலி, ஜெக்ஸ் கலிஸ், போன்றோரும் ஆறு அணிகளுக்காக ஏலத்தில் பெறப்பட்டுள்ளனர். இன்டர்நஷனல் பிஸினஸ் ரைம்ஸின் தகவல் படி முத்தையா முரளிதரன் ஒரு லட்சம் டொலர்களுக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும். அவர் ஜெமினி அரேபியன்ஸ் என்ற அணிக்காக விளை…
-
- 3 replies
- 977 views
-
-
இந்தியா போராடித் தோல்வி ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 24, 2008 சிட்னி: சிட்னியில் இன்று நடந்த ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், கடுமையாக போராடி இந்திய தோல்வியைத் தழுவியது. இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை முத்தரப்புத் தொடரில் இன்று சிட்னியில் முக்கிய ஆட்டம் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறி விட முடியும். ஆனால் தோற்றால் இலங்கைக்கு சாதகமாக வாய்ப்புகள் திரும்பி விடும் என்ற நிலை இருந்தது. இந்த சூழ்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. எடுத்தது முதல் அதிரடியாக ஆடத் தொடங்கியது ஆஸ்திரேலியா. தொட…
-
- 0 replies
- 977 views
-
-
சீனாவில் இடம்பெற்ற “ஆசிய ஆணழகன் சாம்பியன்ஷிப் 2019” போட்டியில் மலையக இளைஞர் மாதவன் ராஜகுமார் மூன்றாம் இடத்தைப்பெற்று வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார். 53 வது ஆசிய ஆணழகன் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சார்பில் பாங்கேற்ற நுவரெலியா கொண்டகளை தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் இறுதிப் போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த வீரர்களுடன் போட்டியிட்டு மூன்றாம் இடத்தை தனதாக்கிக் கொண்டார். ஆரம்பம் முதலே தனது கடுமையான முயற்சிகளுடன் பயணித்துவந்த ராஜகுமாருக்கு ஏராளமானோர் உதவி செய்துவந்தனர். இந்நிலையில் தனது விடாமுயற்சியில் 60 கிலோ கிராம் எடைப் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார். கடந்த ஆண்டு நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய உடற்கட்ட…
-
- 8 replies
- 976 views
-
-
கபில்தேவின் புதிய சவாலைச் சமாளிப்பதற்கு கவாஸ்கரை களமிறக்குகிறது இந்திய கிரிக்கெட் சபை [25 - ஆஉகுச்ட் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] இந்திய கிரிக்கெட் சபை (பி.சி.சி.ஐ.) விழித்துக் கொண்டுள்ளது. கபில்தேவ் தலைவராக உள்ள ஐ.சி.எல். அமைப்பின் சவாலை சமாளிக்க கவாஸ்கரை களமிறக்குகிறது . கவாஸ்கர் தலைமையில்` புரபொசனல் கிரிக்கெட் லீக்' என்ற புதிய அமைப்பு தொடங்கப்படவுள்ளது. இதன் சார்பில் உள்ளூரில் ருவென்ரி - 20 தொடரை நடத்த பி.சி.சி.ஐ. அதிரடியாக திட்டமிட்டுள்ளது. இரு கிரிக்கெட் அமைப்புகளுக்கும் இடையே வலுவான போட்டி உருவாகியிருப்பதால் கிரிக்கெட் வீரர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. உலகக் கிண்ணத் தோல்வியை அடுத்து இந்திய கிரிக்கெட் சபைக்குச் சவாலாக ஜீ.ரீ.வி. சார்பில் இந்தியன…
-
- 0 replies
- 976 views
-
-
2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ. 2021 ஆம் ஆண்டுக்கான விவோ இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை இந்தியாவில் நடத்த முடிவுசெய்துள்ளதாக ஐ.பி.எல். நிர்வாக சபை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஐ.பி.எல் களியாட்டம் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இந்த சீசன் 2021 ஏப்ரல் 9 ஆம் திகதி சென்னையில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு இடையே முதலாவது போட்டியுடன் ஆரம்பமாகும். உலகின் மிப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் பிளேஆஃப்களையும் 2021 மே 30 ஆம் திகதி இறுதிப் போட்டியையும் நடத்த…
-
- 13 replies
- 975 views
-
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து மேற்கிந்தியக் கப்டன் சர்வான், காயம் காரணமாக விலகியுள்ளார். இவருக்குப் பதிலாக டேரன் கங்கா புதிய கப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய அணி 4 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 2 ` ருவென்ரி-20' போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஹெடிங்லியில் நடந்த இரண்டாவது டெஸ்டில் களத்தடுப்பு செய்துகொண்டிருந்த போது சர்வானுக்கு வலது தோள் மூட்டில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் அப்போட்டியின் இரண்டு இனிங்சிலும் துடுப்பெடுத்தாடவில்லை. இதனால் அணி இனிங்ஸ் மற்றும் 283 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்நிலையில், இவரது காயம் குணமடைய இன்னும் 6 வாரங்களுக்கு மேலாகும் என்பதால், தொடரிலி…
-
- 1 reply
- 975 views
-
-
பொண்டிங் படை' மகத்தான சாதனையை நெருங்குகிறது தடுத்து நிறுத்த முயல்வார்களா [01 - January - 2008] [Font Size - A - A - A] இந்திய வீரர்கள்டெஸ்ட் போட்டிகளிலும் உலக சம்பியன் அவுஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை அசைக்க முடியவில்லை. இந்தியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் வென்ற உற்சாகத்தில் இருக்கும் `பொண்டிங் படை' மகத்தான சாதனையை நெருங்குகிறது. நாளை 2 ஆம் திகதி சிட்னியில் தொடங்கும் இரண்டாவது போட்டியில் அசத்தினால், தொடர்ந்து 16 டெஸ்களில் வென்ற ஸ்ரீவோவின் சாதனையை சமன் செய்யலாம். இந்தச் சாதனைக்கு இந்திய வீரர்கள் முட்டுக் கட்டை போடுவார்களா? ஷேன் வோர்ன் (708 விக்.), மெக்ராத் (563 விக்.), ஜஸ்ரின் லாங்கார் (7,696 ஓட்டங்கள்), டேமியன் மார்ட்டின் (4,406 ஓட்டங்கள்) போன்ற அனுபவ வீரர்கள்…
-
- 0 replies
- 973 views
-