விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7858 topics in this forum
-
ஒரு மில்லியன் டொலரை நஷ்ட ஈடாக கேட்க உள்ளோம் : கிரிக்கெட் சபை இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கு ஐ.சி.சி.யால் தடை விதிக்கப்பட்டிருந்தமையால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சர்வதேச கிரிக்கெட் சபையிடம் ஒரு மில்லியன் டொலரை நஷ்டஈடாக கேட்க உள்ளோம் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. குசேல் ஜனித் பெரேரா தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பாவித்ததாக கூறி ஐ.சி.சி.யால் தடைவிதிக்கப்பட்டது. ஆனால் ஆய்வில் அது பொய்யானது. எனவே நஷ்டஈடு கேட்கும் உரிமை எமக்குள்ளது. இதற்கு முன்னதாக குசல் ஜனித் பெரேராவை இலங்கை அணியில் இணைத்து நாட்டுக்காக விளையாட வாய்ப்பளிப்பதே முக்கிய நோக்கமாகும். http://www.virakesari.lk/article/6340
-
- 2 replies
- 883 views
-
-
முதலிடத்தை இழந்தது இந்தியா உலக அளவில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடுகளின் தரவரிசையில் முதலிடத்தை இங்கிலாந்து அணி பிடித்துள்ளது. 32 ஆண்டுகளில் முதல் முறையாக இங்கிலாந்து அந்த இடத்தை பிடித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் உலக அளவில் முதலிடத்தில் இருந்த இந்தியா தனது தொடர் தோல்விகளால் அந்த இடத்தை இழந்துள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணிக்கு எதிராக எட்ஜ்பாஸ்டன் நகரில் இடம்பெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் படுதோல்வி அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி, இந்திய அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. எட்ஜ்பாஸ்டன் போட்டியின் முதல் இன்னிங்ஸ…
-
- 2 replies
- 883 views
-
-
66 ஆண்டுகால வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது இங்கிலாந்து அணி; செம சாதனை !! இந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸின் மூலம் இங்கிலாந்து அணி புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து…
-
- 0 replies
- 883 views
-
-
மத்திய அரசின் சாட்டையடி; மாற்றத்துக்கான அறிகுறி! எப்போது அழைத்தாலும் நாட்டுக்காக விளையாடத் தயாராக இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே இனி அரசின் நிதி உதவி வழங்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது மத்திய விளையாட்டு அமைச்சகம். இந்திய டென்னிஸ் வீரர்கள் பயஸ், போபண்ணா, சோம்தேவ் ஆகியோர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாட மறுத்ததன் எதிரொலியாக வெளியிடப் பட்டுள்ள இந்த அறிவிப்பு, விளையாட்டு வீரர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அமைச்சகத்தின் முடிவு மிகச் சரியானது என்பதுதான் நிதர்சனம். இந்தியாவில் உள்ள பெரும்பாலான விளையாட்டு வீரர்களுக்கு ஆரம்ப காலத்தில் அரசின் நிதியுதவி தேவைப்படுகிறது. அந்த நிதியுதவியோடுதான் அடுத்த கட்டத்துக்கே முன்னேறுகிறார்கள். ஆனால் முன்னணி …
-
- 0 replies
- 883 views
-
-
தென்ஆப்ரிக்காவுக்கு வீரரை கடன் கொடுத்த இந்தியா...இதுவல்லவோ விளையாட்டு உணர்வு! பொதுவாக சிறுவர்கள் விளையாடும் கிரிக்கெட்டில்தான் எதிரணி வீரர்கள், ஆள் பற்றாக்குறை காரணமாக பீல்டிங் செய்வார்கள். தற்போது ஆள்பற்றாக்குறை காரணமாக சர்வதேச போட்டியிலும் மாற்று அணி வீரர் பீல்டிங் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் இந்தியா, தென்ஆப்ரிக்கா, ஆஸ்திரேலிய 'ஏ ' அணிகள் பங்கேற்கும் முத்தரப்புத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க வந்த தென்ஆப்ரிக்க வீரர்கள் சென்னையில் உள்ள வணிக வளாகம் சென்று உணவருந்தியுள்ளனர். உணவு அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் 10க்கும் மேற்பட்ட தென்ஆப்ரிக்க வீரர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்ட வீரர்கள் சென்னை அப்பல்லோ மருத்த…
-
- 0 replies
- 881 views
-
-
உலகக் கிண்ண கிரிக்கெட் அணி தலைவர்கள் எலிசபெத் மகாராணியுடன் சந்திப்பு (படங்கள் இணைப்பு) உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்துக்கொள்ளும் 10 அணிகளின் தலைவர்கள் பிரிட்டனின் 2ஆவது எலிசபெத் மகாராணிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இதனை தொடர்ந்து உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரின் ஆரம்ப வைபவம் பக்கிங் ஹாம் மாளிகைக்கு அருகாமையில் இடம்பெற்றது. சிறுவர்களின் கல்விக்க்காக போராடும் பாகிஸ்தானின் சிறுவர் வீரர்கள் மற்றும் ஜக்கிய நாடுகளின் சபையின் இளம் சமாதான தூதுவரான மலாலா யுசுவ்சாயி கலந்துக்கொண்டதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த ஆரம்ப வைபவத்தில் விவியன் ரிஜட் வோஸ் மஹெல ஜெயவர்த்தன அனில் கும்பே ஹசார் அலி…
-
- 0 replies
- 881 views
-
-
பல்லான் டி ஆர் விருது : இறுதி பட்டியலில் மெஸ்சி, ரொனால்டோ, நெய்மர் இந்த ஆண்டுக்கான பல்லான் டி ஆர் ( தங்கபந்து ) விருதுக்கான இறுதி பட்டியலில் பார்சிலோனாவின் மெஸ்சி, நெய்மர் மற்றும் ரியர்மாட்ரிட்டின் ரொனால்டோ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இறுதி 3 பேர் பட்டியலில் இருந்து விருதுக்குரிய வீரர், கால்பந்து பத்திரிகையாளர்கள், தேசிய அணியின் பயிற்சியாளர்கள் வாக்கெடுக்கின் மூலம் தேர்வு செய்வார்கள். ஜனவரி 11ஆம் தேதி இந்த ஆண்டுக்கான விருதுக்குரிய வீரர் அறிவிக்கப்படுவார். சிறந்த பயிற்சியாளருக்கான பல்லான் டி ஆர் விருதுக்கு பேயர்ன் மியூனிச்சின் பெப் கார்டியாலாவும் பார்சிலோனாவின் லுயீஸ் என்ரிச்சும் அர்ஜென்டினாவின் ஜோர்ஜ் சம்போலியும் முதல் 3 பட்டியலில் இடம் பெற்றுள…
-
- 1 reply
- 881 views
-
-
பெங்களூரில் தமிழர்களின் கால்பந்து சாம்ராஜ்யம் உருவான கதை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் குறுகலான சந்துகளில் கால்பந்து விளையாடும் குழந்தைகள், பிரேசில் அணியின் டீ-ஷர்ட் அணிந்திருக்கும் இளைஞர்கள், தற்போது நடந்து கொண்டிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணியை ஆதரிக்கும் சுவரொட்டிகள், பிரேசிலின் கால்பந்து நட்சத்திரமாக விளங்கிய பீலேவின் சிலை... இவற்றை எல்லாம் …
-
- 1 reply
- 881 views
-
-
அதிக சதம்: சச்சினை வேகமாக நெருங்கும் விராட் கோலி பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்து சச்சின் நிகழ்த்தியிருந்த சாதனையை நெருங்கி வரும் விராட் கோலி, அவரது வேறு சில சாதனைகளை முறியடித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இருபது ஓவர் தொடரை ஏற்கனவே இழந்துவிட்டது. இருபது ஓவர் தொடரில் விளையாடாத விராட் கோலி, அந்த அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளார். முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் - சுப்மன் கில் ஜோடி சிறப்பான தொடக்கம் தந்ததால் மூன்…
-
- 5 replies
- 880 views
- 1 follower
-
-
இங்கிலாந்துடனான டி-20 தொடரை கைப்பற்றியது இந்தியா இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டி-20 சர்வதேச கிரக்கெட் போட்டியில் 36 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற இந்திய அணியானது, டி-20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆவதும் இறுதியானதுமான டி- 20 ஓவர் போட்டி குஜராத், ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் இயான் மோர்கன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. லோகேஷ் ராகுல் இந்த ஆட்டத்தில் இடம் வழங்கப்படாததன் காரணத்தினால் ரோகித் சர்மாவுடன், அணித் தலைவர் விராட் கோலி தொடக்க வீரா…
-
- 3 replies
- 880 views
-
-
இந்தியாவில் ஆஸ்திரேலியர் வெறியாட்டம்; கிரிக்கெட் தோல்வியால் அநாகரிகத்தின் உச்சத்தைத் தொட்டனர் ஆந்திர பிரதேசம் ஹைதராபாத்தில், பி.எட் படித்த .. பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2010,08:25 IST புதுடில்லி: இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆஸ்திரேலியர்கள், புதுடில்லியில் வெறியாட்ட்டத்தில் ஈடுபட்டனர். விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாமல், இத்தகைய அநாகரிகமான செயல்களில் அவர்கள் ஈடுபட்டனர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்காக வந்திருந்த ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள், வீரர்களுக்கான கிராமத்தில் தங்கள் வெறியாட்டத்தை அரங்கேற்றினர். காமன்வெல்த் போட்டிகளில் அதிகப் பட்ச பதக்கங்…
-
- 1 reply
- 880 views
-
-
Angelo Davis Mathewsஇவர் தமிழரா? இப்ப அவுஸ்ரேலியா தொலைக்காட்சி சேவையில் இவர் தமிழர் என்று கூறினார்கள் ...இது உண்மையா? கள உறவுகளே உங்களுக்கு இது பற்றி எதாவது தெரியுமா?
-
- 4 replies
- 880 views
-
-
தோனி மீதான அதிருப்தியை என் தந்தை பகிரங்கப்படுத்தியது ஏன்?- யுவராஜ் சிங் விளக்கம் உலகக்கோப்பை அணியில் யுவராஜ் சிங் தேர்வு செய்யப்படாததற்கு தோனியே காரணம் என்று யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் கூறியதற்கு யுவராஜ் சிங் பதிலளித்துள்ளார். இது குறித்து யுவராஜின் தந்தையும் முன்னாள் இந்திய வீரருமான யோக்ராஜ் சிங் கூறும்போது, “என் மகனுடன் தோனிக்கு தனிப்பட்ட முறையில் பிரச்சினைகள் இருந்தால் என்னால் என்ன செய்ய முடியும்? கடவுள் நீதியளிப்பார். உங்கள் கேப்டன் பொறுப்பில் இந்தியா உலகக்கோப்பையை வெல்ல பிரார்த்திக்கிறேன். ஆனால் இது போன்று நீங்கள் (தோனி) நடந்து கொண்டதை விடவும் வேறு வருத்தங்கள் இருக்க முடியாது.” என்றார். ஆனால், தன் ட்விட்டர் பக்கத்தில் யுவராஜ் சிங், தனது தந்தை…
-
- 0 replies
- 880 views
-
-
ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் கிரிக்கெட் விளையாடி வந்த தோனி காயம் காரணமாக மேற்கிந்திய தீவுகள் தொடரிலிருந்து விலக நேரிட்டுள்ளது. இன்று இலங்கைக்கு எதிராக நடைபெறும் போட்டியில் இதனால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தோனியைக் கண்டால்தான் இலங்கை நடுங்கும். அந்த அட்வாண்டேஜ் இல்லாமல் போய்விட்டது தற்போது. அவருக்கு பதிலாக அம்பாட்டி ராயுடு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் முதல் போட்டியில் பேட்டிங்கின் போது தசைப் பிடிப்பு காரணமாக தோனி பீல்டிங்கில் களமிறங்கவில்லை. கோலியே கேப்டன் பொறுப்பை ஏற்றார். இந்த நிலயீல் தோனி முத்தரப்பு தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக அம்பாட்டி ராயுடு தேர்வு செய்யப்பட்டுள்ளார். …
-
- 3 replies
- 879 views
-
-
உலகில் மிகவும் பிரபலமான துடுப்பு மட்டை November 09, 2015 கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலமான துடுப்பு மட்டை எது தெரியுமா? நியூயோர்க்கில் நடைபெற்ற முதலாவது சகல நட்சத்திரங்களின் ஆட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து நட்சத்திரங்களும் கையொப்பமிட்ட இந்த துடுப்புமட்டைதான். நியூயோர்க் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப் படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. http://www.onlineuthayan.com/sports/?p=3224&cat=2
-
- 1 reply
- 879 views
-
-
பந்துவீச்சில் ஹசரங்க சாதனை, துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் அதிரடி; தொடர் இலங்கை வசம் 12 JAN, 2024 | 06:44 AM (நெவில் அன்தனி) ஸிம்பாப்வேக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் வெற்றியீட்டிய இலங்கை, தொடரை 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் கைப்பற்றியது. வனிந்து ஹசரங்கவின் தனிப்பட்ட சாதனை மிகு பந்தவீச்சுப் பெறுதியும் அணித் தலைவர் குசல் மெண்டிஸின் அதிரடி அரைச் சதமும் இலங்கைக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தன. ஆறு மாதங்களின் பின்னரே சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்ட…
-
- 7 replies
- 879 views
- 1 follower
-
-
ரஹானே நொறுக்க... சங்கக்கரா குவிக்க.. மியாஸகி அசத்த... பிளாஷ்பேக் 2015! டெல்லி: வழக்கம் போல 2015ம் ஆண்டிலும் விளையாட்டு உலகம் பல சாதனைகளை, மறக்க முடியாத நிகழ்வுகளைக் கண்டது. பல புதிய சாதனைகள் படைக்கப்ட்டன. பல பழைய சாதனைகள் தகர்க்கப்பட்டன. கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து என சகல விளையாட்டிலும் சாதனைகள் படைக்கப்பட்டன. அவற்றிலிருந்து ஒரு சில. கோஹ்லியின் கேப்டன் சாதனை டெஸ்ட் கேப்டனாக இந்தியாவின் விராத் கோஹ்லி சாதனை படைத்த ஆண்டு இது. ஒரு கேப்டனாக அடுத்தடுத்து தொடர்ந்து நான்கு சதங்கள் போட்டு சாதனை படைத்தார் கோஹ்லி. இப்படி அடுத்தடுத்து நான்கு சதங்களை அடித்த முதல் டெஸ்ட் கேப்டன் என்ற சாதனை கோஹ்லிக்குச் சொந்தமானது. பீல்டிங…
-
- 0 replies
- 879 views
-
-
'நான் ஒரு ஒயின் மாதிரி!'- இது தோனி பன்ச் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 'நான் ஒரு ஒயின் மாதிரி. காலம் போக போக சுவைகூடிக் கொண்டே போவேன்' என்று சிலாகித்துள்ளார். கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியதிலிருந்தே, அவரது ஃபார்ம் பற்றி தொடர்ச்சியான கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில் கெத்து கம்-பேக் கொடுத்துள்ளார். இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் ஒரு 20 ஓவர்கள் போட்டியை விளையாடி வருகிறது. நேற்றுடன் இதுவரை மூன்று ஒரு நாள் போட்டிகள் முடிந்துள்ளன. நேற்றைய போட்டியில், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பவே தோனி கொஞ்சம் சீக…
-
- 3 replies
- 878 views
-
-
பந்து வீச்சில் மிரள வைத்த இலங்கை! துடுப்பாட்டத்தில் சொதப்பியிருந்தாலும், பந்து வீச்சில் மிரள வைத்த இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 20 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 27 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு லீட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 233 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 47 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுக்களையும…
-
- 0 replies
- 878 views
-
-
-
- 1 reply
- 878 views
-
-
சிரிலங்காவுக்கு எதிரான மட்டையாட்டம் இங்கிலாந்து வெற்றி -தமிழர்கள் கொண்டாட்டம். சிங்களப் பேரினவாதத்தின் ஆசீர்வாதத்தினை பெற்ற அணியான சிரிலாங்காவின் மட்டையாட்ட விளையாட்டுத் தொடரில் இறுதியாக இங்கிலாந்து வெற்றி பெற்றது. இவ் வெற்றியினை பிரித்தனியா வாழ் தமிழர்கள் அனைவருக்கும் இனிப்புக் கொடுத்து கொண்டாடினார்கள். தமிழர்களுடன் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களும் இணைந்து அவ்வழியே சென்றவர்களுக்கு இனிப்புக்கள் கொடுத்ததோடு தமிழீழத்தின் தேசியக் கொடிகளைத் தாங்கியவாறு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். சிரிலங்காவுடன இங்கிலாந்து விளையாடக்கூடாது என பிரித்தானிய தமிழ் இளையோர்கள் தொடர்ச்சியாக புறக்கணிப்புப் போராட்டம் நடாத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. http://rste.org/2011/07…
-
- 0 replies
- 878 views
-
-
சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை இந்திய அணியின் முகாமைத்துவம் நடத்தியுள்ள விதம் குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் போதெல்லாம் அந்த அணியில் அஸ்வின் இடம்பெறவேண்டும் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அஸ்வின் நிச்சயமாக இடம்பெறவேண்டிய வீரர் ஆனால் அணி முகாமைத்துவம் அஸ்வினை உரிய முறையில் நடத்தாதன் காரணமாக அவர் சிறப்பாக பந்து வீசுவதற்கு சிறிது சிரமப்படுகின்றார் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். தன்னை சுற்றியுள்ளவர்களின் நம்பிக்கை உள்ளது என அஸ்வின் உணரும் நிலையை ஏற்படுத்தவேண்டும்,என தெரிவித்துள்ள சுனில்கவாஸ்கர் நீங்கள் தொடர்ந்தும் புறக்கணி;க்கப்பட்டால் நீங்கள் உங்களை நிருபிப்பதற்காக மேலும் …
-
- 2 replies
- 878 views
-
-
லண்டனில் சரே அணிக்காக சதம் விளாசிய சங்கக்கார! (Highlights) இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்றுவரும் ரோயல் லண்டன் ஒருாநாள் கிண்ணத் தொடரின் நேற்றைய ஹம்சையர் அணிக்கெதிரான போட்டியில் குமார் சங்கக்கார 124 ஓட்டங்களை விளாசியுள்ளார். இந்த போட்டியில் 238 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு சரே அணி துடுப்பெடுத்தாடிய போதே சங்கக்கார சதம் விளாசியுள்ளார். இவர் ஆட்டமிழக்காமல் 121 பந்துகளில் 2 ஆறு ஓட்டங்கள் மற்றும் 13 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 124 ஓட்டங்களை குவித்து சரே அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார். இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தற்போது லண்டனில் நடைபெற்றுவரும் ரோயல் லண்டன் ஒருநாள் கிண்ணத் தொடரில் ச…
-
- 0 replies
- 878 views
-
-
டி20 போட்டியில் ரஷித்கான் புதிய சாதனை ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித்கான் : கோப்புப்படம் - படம்: கெட்டி இமேஜஸ் சர்வதேச டி20 போட்டிகளில் மிக விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் எனும் பெருமையை ஆப்கானிஸ்தான் சுழற்பந்தவீச்சாளர் ரஷித்கான் பெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி எடுத்துவைத்த 220 நாட்களில் ஒருநாள் போட்டியிலும், டி20 போட்டியிலும் குறிப்பிட்ட சாதனைகளை ரஷித்கான் புரிந்துள்ளார். இதற்கு முன் 40 ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி மிகவிரைவாக 100 விக்கெட்டுகளைச் சாய்த்த வீரர் எனும் பெருமையை ரஷித்கான் பெற்று இருந்தார். இப்போது டி20 போ…
-
- 1 reply
- 877 views
-
-
சென் தோமஸ் கல்லூரிக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்ற சென் ஜோன்ஸ் By Jegan - சிங்கர் நிறுவன அனுசரணையில் இடம்பெறும் 19 வயதுக்குட்பட்டோருக்கான அகில இலங்கை ரீதியான பாடசாலை மட்ட கிரிக்கெட் தொடரில் மாத்தளை சென் தோமஸ் கல்லூரி அணிக்கு எதிராக யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லுரி இன்னிங்ஸ் மற்றும் 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. பிரிவு 2 இல் சி குழுவுக்காக இடம்பெற்ற இந்த போட்டியில் மாத்தளை சென் தோமஸ் கல்லூரியும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியும் சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் பலப்பரீட்சை நடாத்தின. நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பை தீர்மானித்த சென் ஜோன்ஸ் அணிக்கு கைமேல் பலன் கிடைத்தது. எதிரண…
-
- 0 replies
- 877 views
-