விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7858 topics in this forum
-
உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின்னர் 21 போட்டிகளில் இந்தியா - அவுஸ்திரேலியா மோதும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகும் இந்தியா தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இதில் அவுஸ்திரேலியாவுடன் மட்டும் 4 டெஸ்ட் போட்டிகள் உட்பட 21 போட்டிகளில் மோதவுள்ளது. இரு அணிக்குமிடையே முதல் ஒருநாள் போட்டி ஜூன் மாதம் நடக்கிறது. இந்தப் போட்டி அயர்லாந்தில் நடைபெறும். அங்கு இரு அணிக்குமிடையே 3 போட்டிகள் நடைபெறும். அதன் பின் அவுஸ்திரேலிய அணி அக்டோபர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறது. அப்போது இரு அணிக்குமிடையே 7 ஒருநாள் போட்டிகள் நடைபெறும். இதை தொடர்ந்து இந்திய அணி அவுஸ்திரேலியா செல்கிறது. அங்கு இரு அணிகளுக்குமிடையே 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெறும். அடுத…
-
- 0 replies
- 868 views
-
-
2019 ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை திருவிழா ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த நிலையில் உலகக்கோப்பை அணி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பரபரப்பான இறுதிப் போட்டியில் கடும் போராட்டத்திற்கு இடையே நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து முதல் முறையாக கோப்பையை வென்றது. இந்நிலையில் ஐசிசி அணியில் இந்தியாவை சேர்ந்த தொடக்க வீரர் ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பின்வருமாறு: ஐசிசி அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்: ஜேசன் ராய் ( இங்கிலாந்து) -443 ரன்கள் ரோகித் சர்மா ( இந்தியா) - 648 ரன்கள் கேன் வில்லியம்சன் ( நியூசிலாந்து) - 578 ரன்கள் ஷாகிப் அல் ஹசன் (வங்க தேசம்) - 606 ரன்கள் மற்றும் 11 …
-
- 0 replies
- 868 views
-
-
சுமை அதிகமாவதால் வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைய வாய்ப்பில்லை. முதல் தர போட்டிகளில் ஆண்டுக்கு ஆயிரம் ஓவர் பந்து வீச வேண்டும் என்கிறார் ஷ்ரீநாத். இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷ்ரீநாத். ஓய்வுக்குப் பின் ஐ.சி.சி. போட்டி நடுவராகப் பணியாற்றி வருகிறார். விளம்பர நிகழ்ச்சிக்காக டில்லி வந்த இவர் அதிகளவில் பந்து வீசுவதால் காயமடைய நேரிடும் என்ற கருத்தை மறுத்தார். இது பற்றி ஷ்ரீநாத் கூறுகையில்; அதிகளவில் பந்து வீசும் போது தசைகள் வலுவடையும். இதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைய வாய்ப்பில்லை. உதாரணமாக பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்றவர்களைக் குறிப்பிடலாம். குறைவான போட்டிகளில் பந்து வீசுவதால் தான் 60 சதவீதம் பேர் காயமடைகின்றனர். …
-
- 0 replies
- 868 views
-
-
கடந்த 24 வருடங்களில் முதன்முறையாக ஆர்ஜென்ரீனா ஒலிம்பிக் ஹொக்கிப் போட்டிக்கான தகுதியை இழந்தது [13 - February - 2008] [Font Size - A - A - A] ஆக்லாந்தில் 6 நாடுகள் பங்கேற்ற ஒலிம்பிக் தகுதி ஹொக்கி போட்டியில் ஆர்ஜென்ரீனாவைத் தோற்கடித்து ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றது நியூஸிலாந்து. ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் `கோல்டன் கோல்' அடித்து வாய்ப்பைப் பெற்றுள்ளது நியூஸிலாந்து. நியூஸிலாந்தை விட உலக தரவரிசையிலும் 3 இடங்கள் முன்னிலை பெற்றுள்ள ஆர்ஜென்ரீனா கடந்த 24 ஆண்டுகளில் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறமுடியாமல் போயுள்ளது. மு…
-
- 0 replies
- 867 views
-
-
கிளிநொச்சியில் 98 சோடிகள் பங்குபற்றிய முதலாவது மாட்டு வண்டிசவாரி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை மாட்டுவண்டி சவாரி வரலாற்றில் 98 ஜோடிகள் பங்குபற்றிய போட்டி நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற மாட்டுவண்டி சவாரியில் நடந்துள்ளது. குறித்த சவாரி போட்டி கிளிநொச்சி அக்கராயன் சவாரி திடலில் இடம்பெற்றது. கிளிநொச்சி சவாரி சங்கத்தின் ஓற்பாட்டில் அக்கராயன் உழவர் கழகத்தினால் நடத்தப்பட்ட குறித்த போட்டியில் வரலாற்றில் இல்லாதவாறு 98 ஜோடிகள் 5 பிரிவுகளில் பங்கு பற்றியிருந்தன. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக திகழும் குறித்த போட்டி இலங்கையில் 50 வருடங்களிற்கு மேலாக முன்னெடுத்து வரப்படுகின்றது. குறித்த…
-
- 1 reply
- 867 views
-
-
உலகக்கிண்ண தொடரில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும்: ஐ.சி.சி. திட்டவட்டம் புல்வாமா தீவிரவாத தாக்குதலையடுத்து எதிர்வரும் உலகக்கிண்ண தொடரில் இந்தியா பங்கேற்பது குறித்தும், பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவது குறித்து பல்வேறு வாத பிரதி வாதங்கள் எழுந்திருந்த நிலையில், இதற்கு சர்வதேச கிரிக்கெட் சபை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி, காஷ்மீர்- புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இந்திய துணை இராணுவ படையினர் 44 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒவ்வொரு இந்தியரையும் கடுமையாக பாதித்த நிலையில், இதனை பல இந்திய வீரர்களும் கடுமையாக கண்டித்தனர். குறிப்பாக இந்த புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெ…
-
- 0 replies
- 866 views
-
-
கேட்ச்களை கோட்டைவிட்ட தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது பெர்த்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை, ஆஸ்திரேலியா 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்று முன்னிலை வகித்தது. நல்ல பேட்டிங் பிட்சில் தெ.ஆ. கேப்டன் டிவிலியர்ஸ் முதலில் பீல்ட் செய்ய முடிவெடுத்தார். இதனால் ஆஸ்திரேலியா அபாரமாக விளையாடி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 48.1 ஓவர்களில் 268 ரன்களுக்குச் சுருண்டது. பெய்லிக்கு மட்டும் தவறவிடப்பட்ட 4 கேட்ச்கள்: தென் ஆப்பிரிக்கா அணியின் பீல்டிங் இன்று படு மோசமாக இருந்தது. ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் க…
-
- 5 replies
- 866 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒட்டுமொத்தப் போட்டியில் டைசன் 18 குத்துக்களை மட்டுமே பதிவு செய்தார். எழுதியவர், கல் சஜாத் பதவி, டெக்சாஸ், பிபிசி ஸ்போர்ட் பத்திரிகையாளர் உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்ற மைக் டைசனை, யூடியூபராக இருந்து குத்துச்சண்டை வீரராக மாறிய ஜேக் பால் வென்றுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸில் AT &T மைதானத்தில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் மைக் டைசனை அவர் வீழ்த்தியுள்ளார். இந்த ஆட்டத்தை 70 ஆயிரம் ரசிகர்கள் நேரிலும், லட்சக்கணக்கானோர் நெட்ஃபிளிக்ஸ் மூலம் நேரலையிலும் கண்டு களித்தனர். 58 வயதான மைக் டைசன் இரண்டு முறை ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் வென்றவர். அவர் 19 வருடங்களா…
-
-
- 9 replies
- 865 views
- 1 follower
-
-
ஆரம்பமானது வடக்கின் பெரும் சமர்! வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி இன்று காலை 09.30 மணியளவில் ஆரம்பமானது. 117வது முறையாக இடம்பெறும் இப்போட்டி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று, நாளை, நாளை மறுதினம் என மூன்று தினங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1372617
-
- 8 replies
- 865 views
- 1 follower
-
-
கிரிக்கெட் சர்ச்சைகள் பலவற்றால் பொண்டிங்கின் துடுப்பாட்டத்தில் பாதிப்பு [18 - February - 2008] [Font Size - A - A - A] கிரிக்கெட் சர்ச்சைகள் பலவற்றால் ரிக்கி பொண்டிங்கின் துடுப்பாட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். முக்கோண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் கப்டன் ரிக்கி பொண்டிங்கின் ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளது. அவரது சராசரி 10 ஆகத்தான் உள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் சோபிக்கவில்லை. பல்வேறு சர்ச்சைகளில் தான் கப்டன் ரிக்கி பொண்டிங்கின் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக துணைக் கப்டன் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; ரிக்கி பொண்டிங்குக்கு எல்லா வீரர்களைப் போல் பல பிரச்சினைகள் என்றாலும…
-
- 0 replies
- 864 views
-
-
நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிக் கொள்கின்றன. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=166658 இந்திய அணிக்கு 66 ஓட்டங்கள் வெற்றியிலக்கு 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிக் கொள்கின்றன. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை …
-
- 3 replies
- 864 views
-
-
மாகாண மட்ட துடுப்பாட்டப் போட்டி வடக்கு கிழக்கு மாகாண அணிக்கு யாழ்.மாவட்ட வீரர் ஐவர் தெரிவு மாகாண மட்டத்தில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபை யின் அனுசரணையுடன் நடத்தப் படவுள்ள துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்துகொள் வதற்கு வடக்கு கிழக்கு மாகாண அணியில் யாழ். மாவட்ட வீரர்கள் ஐவர் தெரிவாகியுள்ளனர். ஆர்.ஏபிரகாம் பிரசாத் (யாழ். மத்திய கல்லூரி), ப.நேசவர்மன் (பரி யோவான் கல்லூரி), வோ. இ.ஜக்ஸன்(சென் பற்றிக்ஸ் கல்லூரி), எஸ். வினோத்(மானிப்பாய் இந்துக் கல்லூரி), எம்.அமரதீசன் (யாழ்ப் பாணக் கல்லூரி) ஆகி யோரே இந்த அணிக்குத் தெரிவாகியுள்ளனர். இவர்கள் போட்டி களில் பங்குபற்றுவதற்கு கடந்த 23ஆம் திகதி கண் டிக்குச் சென்றுள்ளனர். இவர்களுக்குப் பொறுப்பாக ரி.ஜெக நாதன் கடமையாற்றுகின்றார். 20 வயதி…
-
- 0 replies
- 864 views
-
-
வீரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட ரசிகர்களை கைதுசெய்ய நடவடிக்கை இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையே கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்ற ஒரு நாள் சர்வதேச போட்டியின் போது, இலங்கை வீரர்களை இலக்கு வைத்து கல், தண்ணீர் போத்தல்களை வீசி தாக்குதல் நடத்திய ரசிகர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய மத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர், கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் ஆலோசனைக்கு அமைய இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன. இதற்காக வேண்டி குறித்த போத்தல் வீச்சு, கல் வீச்சு காட்சிகள் பதிவாக…
-
- 0 replies
- 863 views
-
-
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் நவம்பர் 29இல் ஆரம்பம் (நெவில் அன்தனி) ஆசிய கிரிக்கெட் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 50 ஓவர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி துபாயிலும் ஷார்ஜாவிலும் நடைபெறவுள்ளன. சர்வதேச கிரிக்கெட் பேரவையில் பூரண அந்தஸ்துடைய ஐந்து நாடுகள் உட்பட 8 நாடுகள் இப் போட்டியில் பங்குபற்றவுள்ளன. நடப்பு சம்பியன் பங்களாதேஷுடன் இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகியன பி குழுவில் இடம்பெறுகின்றன. பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் ஏ குழுவில் இடம்பெறுகின்றன. அந்த இரண்டு நாடுகளுடன் ஐக்கிய அரபு இராச்சியம், ஜப்பான் ஆகியனவும் இக் குழுவில் இடம்பெறுகின்றன. ஐக்கிய …
-
-
- 18 replies
- 863 views
- 1 follower
-
-
ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20 உலகக் கிண்ணம்: மலேசியாவில் ஆரம்பம்: இலங்கை உட்பட 16 அணிகள் பங்கேற்பு Published By: VISHNU (நெவில் அன்தனி) ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நாளைமறுதினம் 18ஆம் திகதி நடைபெறவுள்ள 6 போட்டிகளுடன் ஆரம்பமாவுள்ளது. இந்த வருட 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியை மலேசியா முன்னின்று நடத்துகின்றது. 19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்திய மலேசியாவில் 17 வருடங்கள் கழித்து மற்றொரு பிரதான ஐசிசி கிரிக்கெட் போட்டி நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும். தென் ஆபிரிக்காவில் 2023இல் நடைபெற்ற அங்குரார்ப…
-
- 18 replies
- 863 views
- 1 follower
-
-
வட மாகாண துடுப்பாட்ட வெற்றக்கிண்ணத்தை சுபீகரித்தது யாழ் மாவட்ட அணி இலங்கை துடுப்பாட்ட சங்கத்தால் வடமாகாண மாவட்டங்களுகிடையே நடத்தப்பட்ட 50 பந்து பரிமாற்றங்களை கொண்ட 23 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான கடினபந்து சுற்றுபோட்டியின் இறுதி போட்டி இன்று (13) காலை 10 மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்தில் வவுனியா மாவட்ட கடின பந்து துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர் யோ.ரதீபன் தலமையில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் மாவட்ட அணி களத்தடுப்பை தெரிவு செய்து வவுனியா மாவட்ட அணியினை துடுப்பெடுத்தாட பணித்தது. அதன்படி களமிறங்கிய வவுனியா மாவட்ட அணி 27.5 பந்துபரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 94ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அதிகபட்சமாக சயரூபன் 29 ஓட்டங்களை பெற…
-
- 0 replies
- 862 views
-
-
பிரெஞ் ஓப்பன் டெனிஸ் தொடரில் ரஷ்ய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஷரபோவா, கஸ்னெட்சோபா, சபினா என ரஷ்ய வீராங்கனைகள் நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். பிரான்ஸின் அமெலி மவுரி ஸ்மோ அதிர்ச்சித் தோல்வியடைந்தார். ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ் ஓப்பன் டெனிஸ் தொடர் பாரிஸில் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் மூன்றாவது சுற்றுப் போட்டியில் `நம்பர் -2' வீராங்கனை ரஷ்யாவின் மரியா ஷரபோவா, சகநாட்டு வீராங்கனை அலா குட்ரியாவ்சேவாவை எதிர்கொண்டார். முதல் செட்டை 6-1 என எளிதாக தன்வசப்படுத்திய ஷரபோவா இரண்டாவது செட்டிலும் அசத்தினார். இதை 6-4 என கைப்பற்றினார். இறுதியில் 6-1, 6-4 என்ற செட்களில் வெற்றி பெற்று, நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார்…
-
- 0 replies
- 862 views
-
-
”அனுபவ வீரர்கள் இல்லாமல் தடுமாறும் இலங்கை அணி” சங்கக்காரா December 20, 2015 இலங்கை அணித் தெரிவாளர்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சங்கக்காரா தெரிவித்துள்ளார். இலங்கை அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் 122 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை படுதோல்வியடைந்தது. இந்நிலையில் ஹாமில்டனில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி தடுமாறி வருகிறது. இது பற்றி சங்கக்காரா கூறுகையில், “நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் துரதிர்ஷ்டவசமாக திரிமன்னே போன்ற அனுபவ வீரர்கள் இடம்பெறவில்லை. தற்போது இலங்கை டெஸ்ட்…
-
- 0 replies
- 862 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத், வாகன விபத்தொன்றில் உயிரிழந்ததாக ட்விட்டர் சமூக வலையமைப்பில் வதந்தியொன்று வெளியாகியுள்ளது. இதனால், கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுவரும் இலங்கை அணிக்கும், அவுஸ்ரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்ற நிலையில் ரங்கன ஹேரத் இலங்கை அணி சார்பில் விளையாடியமை குறிப்பிடத்தக்கது. 'சிட்னி நகரில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ரங்கன ஹேரத் உயிரிழந்ததாகவும் இலங்கையின் முன்னாள் பந்து வீச்சாளரான சமிந்த வாஸ் காயமடைந்துள்ளார்' என்று மேற்படி ட்விட்டர் சமூக வலையமைப்பில் செய்தி வெளியானது. இந்த செய்தியைத் தொடர…
-
- 1 reply
- 862 views
-
-
சானியா சாதித்த ரகசியம்! #AceAgainstOdds #SaniaAutobiography அது 2003 ம் ஆண்டு. சான்யா மிர்சா, நைஜீரியாவில் தன் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு பதக்கங்களுடன் நாடு திரும்புகிறார். அந்த ஆப்பிரிக்க மண்ணில் அவர் அடைந்த வெற்றி, அவருக்கு நிறைய தன்னம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது. அவர் அங்கிருந்து மும்பையை நோக்கி பயணிக்கும் போது, அவருக்குப் பல கனவுகள். 'நம் மக்கள் நம்மை உச்சிமுகர்ந்து வரவேற்கப் போகிறார்கள், தங்கள் அன்பால் நம்மை திக்குமுக்காட வைக்கப் போகிறார்கள்...' என்ற கனவுகளுடன் இந்தியாவை நோக்கி பயணிக்கிறார். அவர் கனவுகளிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை. ஏனென்றால், அந்த சமயத்தில் சானியா இந்தியாவில் பிரபலமடைந்து இருந்தார். ஏற்கெனவே, அவருக்கு அத்தகைய வரவேற்…
-
- 0 replies
- 862 views
-
-
தென்ஆப்ரிக்கா எதிர் பங்களாதேஷ் ஒருநாள் & T20 போட்டி தொடர் செய்திகள் தென்னாப்ரிக்காவிற்கு எதிராக சதம் அடித்த முதல் வங்கதேச வீரர்... ரஹீம் சாதனை... வங்கதேச அணி சமீப காலமாக ஒருநாள் கிரிக்கெட் உலகில் அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில், வங்கதேச அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி தற்பொழுது நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது. இதில் அனைத்து வீரர்களும் கணிசமான ரன் குவிக்க வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர் மு…
-
- 8 replies
- 862 views
-
-
தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இன்னிங்ஸ மற்றும் 137 ஓட்டங்களினால் வெற்றிகொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்தியா- தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி, புனேவில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 601 ஓட்டங்களை குவித்து ஆட்டத்தை இடைநிறுத்தியது. மயங்க் அகர்வால் 108 ஓட்டத்தையும் ரவீந்திர ஜடேஜா 91 ஓட்டத்தையும் எடுத்தனர். விராட் கோலி 254 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 275 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. முதல் இன்னிங்சில் 326 ஓட்ட…
-
- 0 replies
- 861 views
-
-
இப்போ நடைபெறும் இந்த உலக கோப்பை போட்டியில் நியுசிலாந்து அணி சார்பில் ஒரு தமிழர் விளையாடுகின்றார் .பெயர் -லலிதானந்தன் யுகராஜா.(ARNES YUGARAJAH).முக புத்தகத்தில் போய் இவர் பற்றிய விபரங்கள் அறியலாம் . இலங்கை டீமில் ஒரு தமிழருமில்லை.
-
- 6 replies
- 861 views
-
-
கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்து வரும் மேற்கிந்திய தீவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ரோகித் சர்மா, அபாரமாக விளையாடி தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இன்றைய 2 ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகளுக்கு 354 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி நேற்று ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று 2வது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் மேற்கிந்திய தீவு வீரர்களின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் 10 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து ரோகித்- டோனி ஜோடி இந்திய அணியின் ரன் எண்ணிக்கை சற்று உயர்த்தியது. 42 ரன்னில் டோனி வெளியேற, அஸ்வின…
-
- 2 replies
- 861 views
-
-
இந்தியாவும் மேற்கிந்தியத் தீவுகளும் இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு விசாகப்பட்டினத்தில் தொடங்கியுள்ளது. சென்னை நடந்த முதல் போட்டியில் கீரோன் பொல்லார்ட் தலைமையிலான அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. https://sports.ndtv.com/tamil/cricket/live-scores/india-vs-west-indies-2nd-odi-visakhapatnam-inwi12182019190938?pfrom=insidearticle
-
- 3 replies
- 860 views
-