விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
தென் ஆபிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு எல்.பி.டபிள்யூ கொடுக்க மறுத்த நடுவர் வினீத் குல்கர்னி மேல் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சர்வதேச கிரிக்கெட் சபையிடம் (ஐ.சி.சி) புகார் செய்துள்ளது. இந்திய தென்ஆபிரிக்க அணிகள் மோதிய ‘ருவென்ரி 20’ போட்டியில் இந்தியா 02 என தொடரை இழந்தது. இதற்கு நடுவர் வினீத் குல்கர்னியின் மோசமான முடிவுதான் காரணமாக அமைந்துவிட்டது. தர்மசாலாவில் நடந்த முதல் ருவென்ரி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா முதலில் விளையாடி 199 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் இந்த கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு டுமினியின் அதிரடி ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. இந்தப்போட்டியில் அவர் அக்சார் பட்டேல் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். ஆனால், நடுவர்…
-
- 2 replies
- 284 views
-
-
இந்தியாவுக்கு அபராதம் தென் ஆப்பிரிக்காவுடனான 3 வது டெஸ்ட் போட்டி நடைப்பெற்ற நாக்பூர் மைதானம் உரிய தரத்தில் பேணப்படாததால் இந்தியாவுக்கு £ 9950 பவுன் அபராதம் விதிக்க சர்வதேச கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பான விளக்கம் அளிக்க விரும்பினால் 14 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கலாம் என அந்த சபை இந்தியாவிற்கு தெரிவித்துள்ளது. http://www.hirunews.lk/tamil/sports/121219/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
-
- 2 replies
- 1.4k views
-
-
- என் கொல்லைப்புறத்து காதலிகள்: யாழ்ப்பாணத்து கிரிக்கட் ஒழுங்கை கிரிக்கட் தெரியுமா? பன்னிரண்டு அடி அகலம் தான். பண்டா செல்வா ஒப்பந்தம் முடிந்து மூன்றாம் நாள் போட்ட தார் அத்தனையும் எடுபட்டு போய் சல்லிக்கல்லும் குண்டும் குழியும் மட்டுமே எஞ்சி இருக்கும். இரண்டு புறமும் மதில் சுவர். வெடித்துப்போய், கவனமில்லாமல் ஏறினால் சரிந்துவிழுந்துவிடும். ஒரு பக்கம் யாராவது ஹிட்லர் குடும்பம் இருக்கும். இன்னொரு வீட்டில் அந்த ஏரியாவின் தேவதை, “என் வீட்டு தோட்டத்தில்” பாட்டுக்கு கனவில் உங்களோடு சேர்ந்து டூயட் ஆடும் மதுபாலா! “ம்ஹூஹூம் அனுபவமோ” என்று நிச்சயம் இரண்டு நாளுக்கு ஒருவாட்டியாவது கனவில் வந்து செல்லமாக சிணுங்கியிருப்பாள்! வடிவான பெட்டை! அவளை ரூட்டு போட ஒன்றிரண்டு ஏஎல் அண்ணாமார…
-
- 2 replies
- 1.5k views
-
-
தங்கப் பந்து: இறுதிப் பட்டியலில் நெய்மர் உள்ளிட்ட 10 பேர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தலைசிறந்த வீரருக்கு வழங்கப்படும் தங்கப் பந்து விருதுக்கான (கோல்டன் பால்) இறுதிப்பட்டியலில் பிரேசிலின் நெய்மர் உள்ளிட்ட 10 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 7 பேர் இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளனர். அர்ஜென்டீனா தரப்பில் கேப்டன் லயோனல் மெஸ்ஸி, ஜேவியர் மாஸ்கெரனோ, ஏஞ்சல் டி மரியா ஆகியோரும், ஜெர்மனி தரப்பில் கேப்டன் பிலிப் லாம், தாமஸ் முல்லர், டோனி குரூஸ், மேட்ஸ் ஹம்மல்ஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் மெஸ்ஸி 4 கோல்களையும், முல்லர் 5 கோல்களையும் அடித்துள்ளனர். கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த பிரேசில் வீரர் நெய்மர் 4 கோல்களை அடித்ததன்…
-
- 2 replies
- 558 views
-
-
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து குயின்டன் டிகொக் ஓய்வு தென்னாபிரிக்க அணியின் விக்கெட் காப்பாளர் குயின்டன் டிகொக் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். செஞ்சூரியனில் வியாழன் அன்று நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவை வீழ்த்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியானது. 29 வயதான டி கொக், தென்னாபிரிக்காவின் தற்காலிக டெஸ்ட் 2021 இல் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் தென்னாபிரக்கா இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளில் 50 சதவீத வெற்றியை பதிவுசெய்துள்ளது. தென்னாபிரிக்கா இலங்கையை சொந்த மண்ணில் 2-0 என்ற கணக்கில் …
-
- 2 replies
- 436 views
-
-
இங்கிலாந்து விஜயம் இலங்கை அணிக்கு அதிக பாடங்களையே தந்துள்ளது பாகிஸ்தான் அணியுடனான தோல்வியின் பின்னர் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறிய இலங்கை அணி, இன்று (புதன்கிழமை) நாடு திரும்பியது. நாட்டை வந்தடைந்தவுடனேயே, இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. குறித்த ஊடவியலாளர் மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் திலங்க சுமதிபால, “இந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரானது, எமக்கு சிறு கவலையைத் தருகின்றது. ஏனெனில், எமது அணி அரையிறுதி வாய்ப்பினை தவறவிட…
-
- 2 replies
- 580 views
-
-
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டியில் இன்று காலை குறித்த நேரத்துக்கு (பாகிஸ்தானில் காலை 10.15 மணி) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் 10 வருடங்கள், 10 மாதங்களின் பின்னர் பாகிஸ்தானில் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பமானது. பாகிஸ்தானில் வரலாற்று முக்கியம்வாய்ந்தாக அமைந்த இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணி தீர்மானித்தது. இலங்கை அணியில் ஆரம்ப வீரராக லஹிரு திரிமான்னவுக்குப் பதிலாக ஓஷத பெர்னாண்டோ ஆரம்ப வீரராக பெயரிடப்பட்டார். தனது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 3ஆம் இலக்க வீரராக விளையாடிய ஓஷத பெர்னாண்டோ, ஆரம்ப வீரராக விளையாடுவது இதுவே முதல் தடவையாகும். இன்றைய போட்டியில் இலங்கை அணியி…
-
- 2 replies
- 599 views
-
-
NatWest t20 போட்டியில் சங்ககாராவின் துடுப்பாட்டம்.... Middlesex v Surrey at Lord's, Jul 13, 2017 http://www.espncricinfo.com/
-
- 2 replies
- 389 views
-
-
இங்கிலாந்துக்கெதிரான இறுதி ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியதீவுகள் வெற்றி – தொடர் சமன் March 3, 2019 இங்கிலாந்துக்கெதிரான இறுதி ஒருநாள் போட்டியில் 113 ஓட்டங்களால் வெற்றி பெற்ற மேற்கிந்தியதீவுகள் அணி தொடரை 2-2 என சமன் செய்துள்ளது. இரு அணிகளுக்குமிடையில்; ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்;ற நிலையில் முடிவுற்ற நான்கு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் 5-வதும் இறுதியுமான ஒருநாள் போட்டி நேற்று கிராஸ் ஐலேட்டில் நடைபெற்றது. நாயணச்சுழற்சியில் வென்ற மேற்கிந்தியதீவுகள் அணி களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 28.4 ஓவர்களில் 113 ஓட்டங்களை மாத்தி…
-
- 2 replies
- 320 views
- 1 follower
-
-
Hall of Fame விருதிற்குப் பாத்திரமானார் முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உயரிய விருதான Hall of Fame விருதுக்கு இலங்கையின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று மாலை விடுத்த அறிக்கையில் உறுதிப்படுத்தியது. கிரிக்கெட் உலகில் அதீத ஆற்றலை வெளிப்படுத்திய வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கின்றது. அந்த வகையில், இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார். இதன் மூலம் Hall of Fame விருதைப் பெற்ற முதல் இலங்க…
-
- 2 replies
- 485 views
-
-
கண்டிக்கப்பட்டார் அலெக்ஸ் ஹேல்ஸ் ! இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்டவீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் இலங்கிலாந்தின் கிரிக்கெட் ஒழுக்காற்று ஆணைக்குழுவினால் (சிடிசி) கண்டிக்கப்பட்டுள்ளார். மாணவர் விருந்தில் கருப்பு நிறத்தை பூசிய முகத்துடன் இருக்கும் பழைய புகைப்படமொன்று தொடர்பில் எழுந்த சர்ச்சையையடுத்து, இவ்வாறு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, ‘தி சன்’ என்ற பத்திரிகையில், ஹேல்ஸ் கறுப்பு முகத்தில் இருப்பதை காட்டும் பழைய புகைப்படம் ஒன்று வெளியானது. 2009 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு புகைப்படம் வந்த பத்திரிகை மூலம் வெளியானதையடுத்து எழுந்…
-
- 2 replies
- 814 views
-
-
ரஷ்யாவில் 2018 ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று (வியாழக்கிழமை) மாலை தொடங்குகிறது. படத்தின் காப்புரிமை Getty Images ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் உள்ள லூஸ்நிக்கி மைதானத்தில் நடக்கும் கோலாகல தொடக்க விழாவைத் தொடர்ந்து முதல் போட்டியில் ரஷ்யாவுடன் செளதி அரேபியா மோதுகிறது. இன்று தொடங்கும் கால்பந்து திருவிழாவில், நடப்பு சாம்பியனான ஜெர்மனி உள்பட 32 நாடுகள் பங்கேற்கின்றன. 32 நாட்களுக்கு மேல் நடக்கவுள்ள இந்த தொடரில், 64 போட்டிகள் நடக்கவுள்ளன. இந்த போட்டிகள் ரஷ்யாவில் 11 நகரங்களில் உள்ள 12 மைதானங்களில் நடக்கவுள்ளன. …
-
- 2 replies
- 948 views
-
-
முதல் டெஸ்ட் - வங்காள தேசத்தை முதல் இன்னிங்சில் 43 ரன்னில் சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 43 ரன்களில் வங்காள தேசம் சுருண்டது. #WIvBAN #TestSeries ஆண்டிகுவா: வங்காள தேசம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் ஆண்டிகுவா நகரில் இன்று இரவு தொடங்கியது. டாஸ் வென்ற வெ…
-
- 2 replies
- 843 views
-
-
இந்திய அணிக் கப்டன் தோனிக்கு சிறந்த எதிர்காலமுள்ளதென்கிறார் சப்பல் [03 - October - 2007] [Font Size - A - A - A] இந்திய அணிக்கப்டன் தோனிக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக இந்திய முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சப்பல் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சப்பல் உலகக் கிண்ணப் போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்வியைத் தொடர்ந்து அவர் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். அவருக்குப் பின் இந்திய அணிக்கு பயிற்சியாளர் இன்று வரை நியமிக்கப்படவில்லை. இராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் பியூச்சர் கிரிக்கெட் அக்கடமியின் ஆலோசகராக கிரேக் சப்பல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவர் ஜெய்ப்பூர் வந்தார். அப்போது கிரேக் சப்பல் நிருபர்கள…
-
- 2 replies
- 1.3k views
-
-
சுப்ரீம் கோர்ட் அதிரடி: பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் இருந்து அனுராக் தாக்கூர் நீக்கம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை அப்பதவிகளில் இருந்து நீக்கி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முக்கிய செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இருக்கும் வகையில் புதிய நிர்வாகிகள் நடந்துகொள்ள வேண்டும் என கடந்த ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவுக்கு மதிப்பளிக்கா…
-
- 2 replies
- 503 views
-
-
வில்லன் வருகிறார் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் கடமையாற்ற 25 மத்தியஸ்தர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாக தலா இரண்டு மத்தியஸ்தர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2010 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை பரபரப்பாக்கிய இங்கிலாந்து மத்தியஸ்தர் ஹாவாட் வெப் பின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆபரிக்காவில் 2010 ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெய்னும், நெதர்லாந்தும் மோதின. விறுவிறுப்பான அந்தப் போட்டியில் 14 மஞ்சள் அட்டைகளும் ஒரு சிவப்பு அட்டையும் காட்டிய ஹாவாட் வெப் பரபரப்பாக்கினார். போட்டி முடிவடைந்ததும் நெதர்லாந்து பயிற்சியாளர் பெட்வன் மாவி ஜிக் மத்தியஸ்தரான ஹாவாட் வெப்புடன் தர்க்கம் செய்தார். நெதர்லாந்து ரசிகர்களுக்கு வில்…
-
- 2 replies
- 652 views
-
-
ஐ.சி.சி., தலைவர் முஸ்தபா ராஜினாமா புதுடில்லி: ஐ.சி.சி., தலைவர் பதவியை வங்கதேசத்தின் முஸ்தபா கமால் திடீரென ராஜினாமா செய்தார். சர்வதேச கிரிக்கெட் (ஐ.சி.சி.,) கவுன்சில் தலைவர் முஸ்தபா கமால். இவர் வங்கதேசத்தை சேர்ந்தவர். சமீபத்திய, உலக கோப்பை தொடரின் காலிறுதியில், இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. அப்போது, இந்திய வீரர் ரோகித் சர்மாவுக்கு ‘நோ–பால்’ வழங்கிய விவகாரத்தில் அம்பயர்கள் சதி இருப்பதாக, முஸ்தபா சர்ச்சை கிளப்பினார். இதில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு, தலைவர் என்று முறையில் நான்தான் கோப்பை வழங்க வேண்டும். ஐ.சி.சி., சேர்மன் சீனிவாசன் வழங்கியது விதிமுறை மீறல் எனவும் புகார் தெரிவித்திருந்தார். இப்படி பல பிரச்னைகளால், கோபமடைந்த முஸ்தபா, ஐ.சி.சி.,யில் …
-
- 2 replies
- 390 views
-
-
மோசமான உலகக் கோப்பை லெவன் அணியை அறிவித்து நியூஸி. இணையதளம் வேடிக்கை உலகக் கோப்பை போட்டிகள் முடிந்த பிறகு பிரெண்டன் மெக்கல்லம் தலைமையில் ஐசிசி ஒரு சிறந்த உலகக் கோப்பை அணியை அறிவிக்க நியூசிலாந்து இணையதளம் ஒன்று மோசமான உலகக் கோப்பை அணி ஒன்றை அறிவித்துள்ளது. இந்த அணிக்குத் தலைவர் இயன் மோர்கன் என்று அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. 'Not First XI' என்ற பெயரில் நியூசி. இணையதளம் ஒன்று இந்த அணியை அறிவித்துள்ளது. இந்த அணிக்கு முதல் சுற்றில் வெளியேறிய இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கனை கேப்டனாக அறிவித்து உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சரியாக செயல்படாத வீரர்கள் கொண்ட அணியை வேடிக்கையாக அறிவித்துள்ளது. இது குறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள விவரம்…
-
- 2 replies
- 340 views
-
-
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கடந்த சனிக்கிழமையன்று நியமிக்கப்பட்ட தென்னாப்ரிக்காவை சேர்ந்த கிரஹாம் ஃபோர்டு அந்த பொறுப்பை ஏற்க மறுத்துள்ளார். இங்கிலாந்தில் கெண்ட் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியளிப்பதையே தான் தொடர்ந்து விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்க தாம் அழைக்கப்பட்டால், அந்த பணியை தாம் ஏற்றுக்கொள்ள விரும்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சையத் கிர்மானி தமிழோசையிடம் தெரிவித்தார்.
-
- 2 replies
- 1.3k views
-
-
யூரோ 2016 : போட்டி அட்டவணை வெளியீடு பிரான்சில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் போட்டியை நடத்தும் பிரான்ஸ் அணி ருமேனியாவை எதிர்கொள்கிறது. அட்டவணைக்கு க்ளிக் செய்க... இது வரையில் 16 அணிகள் மட்டுமே பங்கு பெற்று வந்த இந்த தொடரில் முதல் முறையாக 24 அணிகள் பங்கேற்கவுள்ளன. போட்டியில் இடம் பெற்றுள்ள 24 அணிகளும் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒரு பிரிவுக்கு 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஜுலை 6 மற்றும் 7ஆம் தேதிகளில் அரையிறுதி போட்டிகளும் ஜுலை 10ஆம் தேதி இறுதிபோட்டியும் நடைபெறுகிறது. இந்த தொடரில் ஏ பிரிவில் பிரான்ஸ், ருமேனியா, அல்பேனியா, சுவிட்சர்லாந்து அ…
-
- 2 replies
- 579 views
-
-
படக்குறிப்பு, பாராலிம்பிக்கில் 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற முதல் பார்வை மாற்றுத் திறனாளி இந்திய பெண் ரக்ஷிதா கட்டுரை தகவல் எழுதியவர், திவ்யா ஆர்யா பதவி, பிபிசி ஹிந்தி 4 மணி நேரங்களுக்கு முன்னர் "என் இளம் வயதில் என் கிராமத்தில் உள்ள அனைவரும் 'இவளுக்கு கண் பார்வை இல்லை, இவள் வீண்' என்று கூறுவார்கள்," என்கிறார் ரக்ஷிதா ராஜு. இப்போது 24 வயதான அவர் இந்தியாவின் சிறந்த இடைநிலை (middle distance) பாரா தடகள வீரர்களில் ஒருவர் ஆவார். "இது என்னைப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது," என்று அவர் கூறுகிறார். ரக்ஷிதா தென்னிந்தியாவில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் பார்வை மாற்றுத் திறனாளியாகப் பிறந்தார். 10 வ…
-
-
- 2 replies
- 294 views
- 1 follower
-
-
பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப்போட்டி: வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 2-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாடுவதில் தயக்கம் தான் காட்டி வருகிறார்கள். துபாய் : 2-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதன் இறுதிப்போட்டி லாகூரில் நாளை மறுநாள் (ஞாயிற…
-
- 2 replies
- 387 views
-
-
19 SEP, 2024 | 10:30 AM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கு எதிராக நடுநிலையான ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று புதன்கிழமை (18) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் மிக இலகுவாக ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் தென் ஆபிரிக்காவை முதல் தடவையாக வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாறு படைத்தது. பஸால்ஹக் பறூக்கி, 18 வயதுடைய அல்லா மொஹமத் கஸன்பார் ஆகிய இருவரும் துல்லியமாக பந்துவீசி தம்மிடையே 7 விக்கெட்களைப் பகிர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு வரலாற்று வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர். தென் ஆபிரிக்காவின் வழமையான அணித் தலைவர் டெம்பா பவுமா சுகவீனம…
-
-
- 2 replies
- 529 views
- 1 follower
-
-
பாக்கிஸ்தானின் டெஸ்ட் அணித்தலைவர் மற்றும் ரி 20 அணித்தலைவர் பதவியிலிருந்தும் அணியிலிருந்தும் சர்பராஸ் அகமட்டை நீக்கியுள்ளதாக பாக்கிஸ்தானின் தெரிவுக்குழுவினர் அறிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாக்கிஸ்தான் டெஸ்ட் அணிக்கு அசார் அலி தலைமை தாங்குவார் என தெரிவுக்குழுவினர் அறிவித்துள்ளனர். ரி2அணிக்கு பாபர் அசாம் தலைமை தாங்குவார் எனவும் தெரிவுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.சமீப காலங்களில் டெஸ்ட் போட்டிகளில் பாக்கிஸ்தான் சந்தித்த மோசமான தோல்விகளை தொடர்ந்தே தெரிவுக்குழுவினர் இந்த முடிவை அறிவித்துள்ளனர். ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பாக்கிஸ்தான் ஏழாம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை சமீபத்தில் இலங்கைக்கு எதிரான ரி20 ப…
-
- 2 replies
- 530 views
-
-
கிறிஸ் கெய்லை கண்டு பயந்த லாரா..! மேற்கிந்திய தீவு கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் கிறிஸ்கெய்ல், ‘சிக்ஸ் மெசின்: நான் கிரிக்கெட்டை விரும்புவதில்லை... அதை நேசிக்கிறேன்’ என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள சுவாரஸ்மான ஒரு நிகழ்வில், "சில வீரர்கள் தங்களது சாதனைகள் முறியடிக்கப்பட்டு விடுமோ என்று பயப்படுவார்கள். அதற்கு பிரையன் லாராவும் உதாரணம். 2005ம் ஆண்டு ஆன்டிகுவாவில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லாரா 4 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். பிறகு வீரர்களின் ஓய்வறையில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த லாரா, அடிக்கடி பால்கனிக்கு வந்து ஸ்கோர் போர்டை மட்டும் பார்த்தபடி உள்ளே சென்றார். அச்சமயம் களத்…
-
- 2 replies
- 996 views
-