விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
கையிலிருந்து நழுவியது கோப்பை தோல்வி அதிர்ச்சியில் இந்திய அணி வீரர்கள். லெண்டில் சிம்மன்ஸ் இந்தியா வுக்கு வந்து இறங்கி இரண்டு நாட்கள்தான் ஆகின்றன. பெரிய அளவில் பயிற்சியோ முன்தயாரிப்போ இல்லாமல் அவர் களம் இறங்கி னார். அவர் இறங்கிய களம் ஒரு விதத்தில் அவரது ‘சொந்த’ஊர். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடும் அவருக்கு மும்பையின் ஆடுகளம் மிகவும் பரிச்சயமானது. அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெய்லும் மார்லன் சாமுவேல்ஸும் விரைவிலேயே ஆட்டமிழந்த பிறகு அணியின் நம்பிக்கையை ஜான்சன் சார்லஸுடன் இணைந்து புதுப்பித்தார் சிம்மன்ஸ். தான் ஆடிய முதல் ஆட்டத்திலேயே அணியை வெற்றிபெறச்செய்து இறுதி ஆட்டத்துக்கு அழைத்துச் சென்றார். அஜிங்க…
-
- 1 reply
- 649 views
-
-
ஐரோப்பிய விருதுகள் அனைத்தையும் தட்டிச் சென்ற ரியல் மெட்ரிட் வீரர்கள் லிவர்பூல் அணியை 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கண்ணத்தை வென்ற ரியல் மெட்ரிட் வீரர்கள், ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தின் (UEFA) அனைத்து பிரிவுகளிலும் விருதுகளை தட்டிச் சென்றனர். பிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டிவரை முன்னேறிய குரோஷிய அணித்தலைவரும் ரியல் மெட்ரிட்டின் மத்தியகள வீரருமான லூகா மொட்ரிக், முன்னாள் சக அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லிவர்பூல் முன்கள வீரர் முஹமட் சலாஹ் ஆகியோரைப் பின்தள்ளி ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றார். மொனாகோவில் வியாழக்கிழமை (30) நடைபெற்ற நிகழ்வில் ரியல் மெ…
-
- 0 replies
- 649 views
-
-
செப் பிளட்டர் மற்றும் மைக்கல் பிளாட்டினிக்கு எதிராக தடை உலக கால்பந்து சம்மேளன தலைவர் செப் பிளட்டர் மற்றும் ஐரோப்பிய கால்பந்து சம்மேளன தலைவர் மைக்கல் பிளாட்டினி ஆகியோருக்கு கால்பந்து குறித்த நடவடிக்கைகளில் இருந்து 8 வருடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. செப் பிளட்டர் மற்றும் மைக்கல் பிளாட்டினிக்கு எதிராக தடை நடத்தை குறித்த புலன்விசாரணை ஒன்றின் அடிப்படையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. 79 வயதான பிளட்டரின் மீதான தடை அவரது நீண்டகால ''கால்பந்து நிர்வாகி'' பதவியை முடிவுக்கு கொண்டுவருகிறது. பெப்ரவரியில் நடக்கவிருக்கும் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு முன்னதாக பதவி விலக அவர் ஏற்கனவே சம்மதித்துவிட்டார…
-
- 2 replies
- 649 views
-
-
‘உலகின் அதிவேக மனிதன் உசைன் போல்ட்’ கால்பந்து வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறல் பயிற்சியில் உசைன் போல்ட். | ஏ.எப்.பி. உலகின் அதிவேக மனிதன், ஒலிம்பிக் தங்கங்கள் வென்ற நாயகன், உசைன் போல்ட் கூட தன்னால் தொழில்பூர்வ கால்பந்தாட்டத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் இந்த வாரத்தில் ஒரு அமெச்சூர் அணியுடன் அவர் முதல் போட்டியில் களமிறங்க வாய்ப்பிருப்பதால் கடுமையாக தன் உடற்தகுதியை மேம்படுத்த போராடி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 8 முறை ஒலிம்பிக் சாம்பியனான உசைன் போல்ட்டுக்கு ஆஸ்திரேலியாவின் செண்ட்ரல் கோஸ்ட் மரைனர்ஸ் அணி அவரது கால்பந்து கனவை நிறைவேற்ற வாய்ப்பள…
-
- 0 replies
- 649 views
-
-
இலகு வெற்றியை பெற்ற மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி By A.Pradhap இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட டிவிஷன் 3 கிரிக்கெட் தொடரில் செட்டிக்குளம் மகா வித்தியாலய அணிக்கு எதிரான போட்டியில் மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. செட்டிக்குளம் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி அணி 49.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்ட…
-
- 0 replies
- 649 views
-
-
ஆசிய கோப்பை: கிரிக்கெட்டை விட இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் ஆதிக்கம் செலுத்தும் போட்டி அப்துல் ரஷீத் ஷக்கூர் பிபிசி செய்தியாளர், கராச்சி 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் பார்க்க விரும்பும் அனைத்தும் நடந்து வருகின்றன. சனத் ஜெயசூர்யாவின் ஆக்ரோஷமான பேட்டிங், முரளிதரன் மற்றும் அஜந்தா மென்டிஸ் ஆகியோரின் மாயாஜால பந்துவீச்சு மற்றும் அனைத்திற்கும் மேலாக உலகையே மெய்சிலிர்க்க வைக்கும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பரபரப்பான பந்தயம். கிரிக்கெட்டின் இந்த இரண்டு பாரம்பரிய போட்டியாளர்களும் இந்த மா…
-
- 3 replies
- 649 views
- 1 follower
-
-
இலங்கை அணியினை, இலக்கு வைத்து.. மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதல்? இலங்கை கிரிக்கட் அணி மீது தீவிரவாத தாக்குதல் நடத்தக் கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் மூன்று இருபதுக்கு இருபது போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இவ்வாறு பாகிஸ்தான் செல்லும் இலங்கை கிரிக்கட் அணி மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக பிரதம அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக பிரதமர் அலுவலகம், விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடாக ஸ்ரீலங்கா கிரிக்கட் சபைக்கு அ…
-
- 1 reply
- 649 views
-
-
தோனியால் மீண்டும் ‘பினிஷிங்’ செய்ய முடியவில்லை: கர்நாடகாவிடம் தோற்றது ஜார்கண்ட் கோப்புப் படம்.| ராய்ட்டர்ஸ். விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டியில் கர்நாடக அணி தோனி தலைமை ஜார்கண்ட் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் பிரிவு டி ஆட்டமொன்றில் வீழ்த்தியது. ஈடன் கார்டன்ஸில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் கர்நாடக அணி 266 ரன்களை எடுத்தது, கேப்டன் மணிஷ் பாண்டே அதிகபட்சமகா 77 ரன்களையும், ரவிகுமார் சமர்த் என்ற வீரர் அதிரடி 71 ரன்களையும் எடுத்தனர், ஜார்கண்ட் தரப்பில் ராகுல் ஷுக்லா 4 விக்கெட்டுகளையும் வருண் ஆரோன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ரினர். தொடர்ந்து ஆடிய ஜார்கண்ட் அணி 49.5 ஓவர்களில் 261 ரன்களை எடுத்து 5 ரன்கள் …
-
- 2 replies
- 648 views
-
-
இந்தமுறை இலங்கையணி நியூசிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்தபோது பெரிதாக எனக்குள் எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. ஏனென்றால் சங்கா, மஹேல போன்ற இலங்கையின் தூண்கள் இருந்தபோது இலங்கையணி கடந்த வருடம் அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது கூட, நியூசிலாந்து அணியிடன் அடிவாங்குவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. சங்கா தனித்துப் போராடித்தான் பார்த்தார், ஆனால் அணியில் மற்றவர்கள் கைகொடுக்காததால், அவரால் கூட இலங்கையணியை காப்பாற்ற முடியவில்லை. இலங்கையணியின் தேவைக்கும் அதிகமான நிதான விளையாட்டும், வேணுமென்றே தடுத்து ஆடியதும்தான் அவர்கள் டெஸ்ட் தொடரில் தோற்றதற்கான காரணம் என்று அப்போது பேசிக்கொண்டார்கள். ஆனால் ஒருநாள்ப் போட்டித் தொடரில் சிறிது வித்தியாசமாக விளையாடி, தொடரில் தோற்றாலும், ஒரு சில…
-
- 5 replies
- 648 views
- 1 follower
-
-
'ஸ்லெட்ஜிங்' செய்வது ஒருநாள் கைகலப்பில் போய் முடியும்: ஹோல்டிங் எச்சரிக்கை எதிரணி வீரர்களை தனிப்பட்ட முறையில் வசை பாடும் ‘ஸ்லெட்ஜிங்’ போக்கினால் என்றாவது ஒருநாள் மைதானத்திலேயே கைகலப்பு நடக்கப் போகிறது என்று மேற்கிந்திய தீவுகள் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் எச்சரித்துள்ளார். "நான் விளையாடும் காலக்கட்டங்களில் ஸ்லெட்ஜிங் கிடையாது. ஒரு சில வீரர்கள் சிலர் பற்றி ஓரிரு வார்த்தைகளை நகைச்சுவையாகக் குறிப்பிடுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் இப்போது நான் பார்ப்பதெல்லாம் என்னவெனில் பெவிலியனுக்குச் செல்லும் போது ஒருவர் முகத்துக்கு நேராக ஒருவர் சில வசைகளை பொழிவதையே. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சமீபத்தில் டேவிட் வார்னர், ரோஹித் சர்மாவிடையே நடந்த…
-
- 0 replies
- 648 views
-
-
ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யுவராஜ் மீண்டும் சேர்ப்பு! சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12 ல் தொடங்கி 31-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில், அந்நாட்டுடன் இந்திய அணி 5 ஒருநாள் போட்டியிலும், மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இதற்காக இந்திய ஜனவரி 6-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 5 ஒருநாள் போட்டி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கு தோனி, ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, மணிஷ் பாண்டே, ரஹானே, அஷ்வின், ஜடேஜா, மு…
-
- 1 reply
- 648 views
-
-
இந்திய வீரர்கள் பந்துவீச்சில் அவுட்டாகி விடுவோம் எனும் பயத்தை நிறுத்தங்கள்: ஆஸி. பேட்ஸ்மேன்களை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங் ரிக்கி பாண்டிங் : கோப்புப்படம் மெல்போர்ன் இந்தியப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் ஆட்டமிழந்துவிடுவோம் எனும் பயத்தை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் முதலில் நிறுத்தினால்தான் விக்கெட் சரிவைத் தடுக்க முடியும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சாடியுள்ளார். அடிலெய்டில் நடந்த பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவிடம் 8 விக்கெட்டில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. ஆனால், மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் 4-வது நாளான இன்று ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தி்ல…
-
- 1 reply
- 648 views
-
-
கிரிக்கெட்: ரிவர்ஸ் ஸ்விங் - கலையும், அறிவியலும் இணைந்த ரகசியம் 5 மணி நேரங்களுக்கு முன்னர் Getty Images கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலின் காரணமாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால், பந்தை எச்சிலை கொண்டு பளிச்சிட செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறிய முதல் வீரராக இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் டோம் சிப்லே அறியப்படுகிறார். இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் நான்காவது நாளில் இந்த சம்பவம் நடந்தது. ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த டோம் கவனக்குறைவாக தனது எச்சிலை கொண்டு பந்தை பளிச்சிட செய்தார். தனது விதிமீறல் குறித்து சிறிது நேரத்திற்கு பின்னர் உணர்ந…
-
- 0 replies
- 648 views
-
-
பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டி – தென்னாபிரிக்கா அணி தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்கா அணி, 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. சென்சூரியனில் பொக்ஸிங்டே அன்று ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 181 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக பாபர் அசாம் 71 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் டூன்ஹேன் ஒலிவியர் 6…
-
- 0 replies
- 648 views
-
-
அயர்லாந்துடன் இன்று மோதல்:புத்துயிர் பெறுமா மே.இ.தீவுகள் அணி; மீண்டும் களமிறங்குகிறார் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் கிறிஸ் கெயில் - படம்: விவேக் பென்ரே அயர்லாந்து - மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெல்பாஸ்ட் நகரில் இன்று நடக்கிறது. இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக கிறிஸ் கெயில் நீண்ட நாட்களுக்குப் பிறகு களம் இறங்குகிறார். மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி, தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை அந்த அணி இழந்தபோதிலும், ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது கிரிக்கெட் உலகில் சற்று தாக்கத்தை …
-
- 2 replies
- 648 views
-
-
வங்கதேசத்தில் நடந்த இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை வென்றுள்ளது. மீர்புரில் நடந்த இறுதியாட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை இலங்கை எளிதில் வீழ்த்தியது இந்த ஆட்டத்தோடு சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுகின்ற குமார சங்ககா,ர தனது கடைசி ஆட்டத்தில் அரைசதம் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இருபது ஓவர் கிரிக்கெட்டில் இலங்கை உலகக் கோப்பையை வெல்வதென்பது இதுவே முதல் முறை. ஓய்வுபெறுகின்ற மற்றொரு மூத்த ஆட்டக்காரரான மஹேல ஜெயவர்த்தனவும் 24 ரன்களை எடுத்து அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றிருந்தார். இந்திய அணி நிர்ணயித்த 131 ரன்கள் இலக்கை இலங்கை மட்டைவீச்சாளர்கள் இரண்டு ஓவர்கள் மீதமிருக்க எட…
-
- 1 reply
- 648 views
-
-
மேற்கிந்தியத் தீவுகளுக்கான 33 வருட ஆரம்ப விக்கெட் இணைப்பாட்ட சாதனை றெத்வெய்ட், சந்தர்போலால் முறியடிப்பு By VISHNU 07 FEB, 2023 | 02:07 PM (என்.வீ.ஏ.) ஸிம்பாப்வேக்கு எதிராக புலாவாயோ, குவீன்ஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் க்ரெய்க் ப்றத்வெய்ட், டேஜ்நரேன் சந்தர்போல் ஆகிய இருவரும் 336 ஓட்டங்களைப் பகிர்ந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கான புதிய ஆரம்ப விக்கெட் இணைப்பாட்ட சாதனையை நிலைநாட்டியுள்ளனர். இதன் மூலம் 33 வருடங்கள் நீடித்த சாதனையை ப்றத்வெய்ட்டும் சந்தர்போலும் புதுப்பித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இப் போட்டியின் முதல் இரண்டு நாட்டகளி…
-
- 1 reply
- 648 views
- 1 follower
-
-
குஜராத் மண்ணில் தமிழ்நாடு வெற்றிக்கொடி நாட்டியது எப்படி? அஷ்வின், சுந்தர், நடராஜன் என நட்சத்திர வீரர்கள் இல்லாத போதும் குஜராத் மண்ணில் தமிழ்நாடு வெற்றிக்கொடி நாட்டியது எப்படி?
-
- 0 replies
- 648 views
-
-
இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி! மின்னம்பலம் சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் படுதோல்வியடைந்த இந்திய அணி, இரண்டாவது டெஸ்டில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறும் இரண்டாம் டெஸ்ட் போட்டியில் நேற்று (பிப்ரவரி 15) நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸின் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் 19 ஒவர்களில், 3 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் ஜோ ரூட் 2 ரன்களும், லாரன்ஸ் 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணியை விட, இங்கிலாந்து அணி 429 ரன்கள் பின்தங்கியிருந்த நிலையில் இன்று (பி…
-
- 3 replies
- 648 views
-
-
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டித் தொடரில் ஒர்அங்கமான ஆண்களுக்கான மென் பந்துத் துடுப்பாட்டத் தொடரில் சென்.பீற்றஸ் விளையாட்டுக்கழக அணி கிண்ணம் வென்றது. கடந்த திங்கட்கிழமை முல்லையடி விநாயகர் விளையாட்டுக்கழக மைதானத்தில் இறுதியாட்டம் இடம் பெற்றது. இதில் துர்க்கா விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து சென்.பீற்றஸ் விளையாட்டுக்கழக அணி மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய துர்கா விளையாட்டுக்கழக அணியினர் 8 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் சகல இலக்கினையும் இழந்து 44 ஓட்டங்களைப் பெற்றது. …
-
- 0 replies
- 648 views
-
-
உதைபந்து,ஆபிரிக்க கோப்பையை செனகல் வென்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் செனகல் எகிப்துக்கு எதிராக விளையாடியது. இறுதிவரை யாரும் கோலை போடாததால் பனால்டி உதை மூலம் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது.
-
- 0 replies
- 648 views
-
-
இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் தென்னாபிரிக்காவை அவுஸ்திரேலியா வீழ்த்தியது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை அவுஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியை தென்னாபிரிக்காவும் வென்றிருந்த நிலையில், கேப் டெளணில் நேற்றிரவு நடைபெற்ற தீர்மானமிக்க மூன்றாவது போட்டியை அவுஸ்திரேலியா வென்றதன் மூலமே தொடரைக் கைப்பற்றியது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா அவுஸ்திரேலியா: 193/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டேவிட் வோணர் 57 (37), ஆரோன் பின்ஞ் 55 (37), ஸ்டீவ் ஸ்மித் ஆ.இ 30 (15), மிற்செல் மார்ஷ் 19 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: தப்ரையாஸ் ஷம்சி 1/25 [4], லுங்கி என்கிடி 1/33 [4], டுவைன் பிறிட்டோறியஸ் 1/42 [4], ககிஸோ றபாடா 1/42 [4], அன்றிச் நொர…
-
- 1 reply
- 647 views
- 1 follower
-
-
பதக்கத்துக்கு உயிரைப் பணயம் வைக்கிறாரே... யார் இந்த தீபா கர்மகர்? இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மகர், அந்தரத்தில் தலைகீழாகப் பறக்கும் படம், இன்று பெரும்பாலான பத்திரிகைகளின் முதல் பக்கத்தை அலங்கரித்துள்ளன. தனது 23 வது வயதில் அடியெடுத்து வைக்கும் தீபாவுக்குக் கிடைத்த பிறந்த நாள் பரிசு இது. இந்தியா முழுக்க இன்று தீபா கர்மகர்தான் ‘talk of the nation'! இத்தனைக்கும் அவர் இன்னும் ஒலிம்பிக்கில் பதக்க கணக்கை துவங்கவில்லை. ஆனால், இந்தியாவின் வடகிழக்கு மாவட்டத்திலிருந்து வந்து, இந்தியாவுக்கு அந்நியமான ஜிம்னாஸ்டிக்கில், ஒலிம்பிக் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாவது என்பது... சில போட்டிகளின் தங்கப் பதக்கத்தை மிஞ்சிய சாதனை! ரியோ ஒலிம்பிக் போ…
-
- 0 replies
- 647 views
-
-
துயரம் தரும் கணங்கள்: உலகக் கோப்பை தோல்வியை அசைபோடும் டிவில்லியர்ஸ் ஏ.பி.டிவில்லியர்ஸ். | கோப்புப் படம். 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதியில் கடைசி தருணத்தில் தோல்வியடைய நேரிட்ட தென் ஆப்பிரிக்க அணியின் மனநிலை குறித்து ஏ.பி.டிவில்லியர்ஸ் தற்போது தெரிவித்துள்ளார். ஐசிசி இணையதளத்தில் டிவில்லியர்ஸ் கூறும்போது, “மீண்டும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் குறித்து பேசுவதில் எனக்கு தயக்கம் எதுவுமில்லை. சில துயரம் தரும் கணங்கள் ஏற்பட்டன. ஆனால் எங்களிடம் நல்ல அதிர்வு இருந்தது. நாங்கள் கடைசி நேரத்தில் பலவீனமடைபவர்கள் அல்ல. நாங்கள் சில அபாரமான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். எங்களுக்கும் அரையிறுதியில் வாய்ப்பு கிடைத்தது, துரதிர்ஷ்டவசமாக நாங்கள் கிடைத்த வாய்…
-
- 0 replies
- 647 views
-
-
ஜெர்மனி கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த தமிழர்! (படங்கள்) அஸ்வின், தினேஷ் கார்த்திக், முரளி விஜய், பாலாஜி ஆகியோருடன் ஜூனியர் மற்றும் லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய தமிழக வீரர் வெங்கட்ராமன் கணேசன், ஜெர்மனி கிரிக்கெட் அணியில் தற்போது இடம்பிடித்துள்ளார். கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல் தகவல் தொழில்நுட்பத்துறையிலும் பணியாற்றி வரும் 32 வயது கணேசன், பணி காரணமாக 2012-ல் ஜெர்மனிக்கு மாற்றலானார். அங்குத் தொடர்ந்து கிரிக்கெட்டைத் தொடர்ந்தவர் தற்போது ஜெர்மனி கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார். ஐரோப்பிய சாம்பியன்ஷிப் டிவிஷன் ஒன் ஐசிசி போட்டியில் பங்குபெறும் ஜெர்மனி அணிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்…
-
- 0 replies
- 647 views
-