Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. மிக விரைவாக 10 ஆயிரம் ரன்களை கடந்த 2வது வீரர் திலகரத்னே தில்ஷன்! ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை அடித்து இலங்கை வீரர் திலகரத்னே தில்ஷன் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை எட்டிய 11வது வீரர் இவர் ஆவார். ஹம்பான்தொட்டாவில் இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதும் 5வது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் இலங்கை வீரர் திலகரத்னே தில்ஷன் 55 ரன்கள் எட்டிய போது ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். இலங்கை வீரர்களில் ஜெயசூர்யா, மகிலா ஜெயவர்த்தனே, சஙகக்காரா ஆகியோருக்கு பிறகு இந்த மைல்கல்லை எட்டிய வீரர் இவர். தற்போது 39 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் தில்ஷன் 318 சர்வதேச போட்டிகளில் விளையாடி 293வது இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்களை அடித்துள்ளார். அந்த வகையி…

  2. தொடர்ந்து விளையாடி வரும் வீரர்களின் உடல்நிலை குறித்து அணி நிர்வாகம் எவ்வித அக்கறையையும் வெளிப்படுத்துவது இல்லை என்று ஷர்துல் தாக்கூர் வேதனை தெரிவித்துள்ளார். கடந்த 11 மாதங்களாக இடைவெளியின்றி பல்வேறு போட்டிகளில் விளையாடி வரும் ஷர்துல் தாக்கூர், வீரர்களின் உடல் தகுதி விஷயத்தில் கவனம் செலுத்தும் அணி நிர்வாகம் தொடர்ந்து விளையாடும் வீரர்களின் உடல் நிலை குறித்து கவனம் கொள்வதில்லை என வேதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர், "ஆண்டு முழுதும் பல்வேறு தொடர்களில் ஆடுகிறோம். எனவே ஒரே மாதிரியான உடல்தகுதியினை பராமரிப்பது கடினம். பெரும்பாலான நேரங்களில் நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படுகிறோம். நிர்வாகம் உயர்ந்த மட்டத்தில் இல்லை. பல மாதங்கள் ஆடிய பிறகும் கூட எங்கள் உடல் நிலை என்ன? எப்படியி…

  3. சந்திக்க ஹதுருசிங்க பங்களாதேஷை விட்டு இலங்கை அணிக்கு வருவாரா? பங்களாதேஷ் தலைமைப் பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க தனது ராஜினாமா கடிதத்தை பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு (BCB) கையளித்துள்ளார். அவரது ஒப்பந்தக் காலம் 2019ஆம் ஆண்டு வரை நீடிக்கும் நிலையிலேயே இந்த ராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஜுன் மாதம் கிராஹம் போர்ட் ராஜினாமா செய்தது தொடக்கம் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி காலியாக உள்ள நிலையில், ஹதுருசிங்க 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மூன்று வருட காலத்திற்கு இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கவிருப்பதாக நம்பகமான வட்டாரங்கள் மூலம் ThePapare.com க்கு தெரியவருகிறது. இலங்கை அண…

  4. தேசிய கால்பந்து அணிக்கான தேர்வு வடக்கு, கிழக்கு வீரர்களுக்கு வெவ்வேறாக இடம்பெறவுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது. இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு வீரர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்வுகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்ற நிலையில், இம்முறை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வீரர்களுக்கான தேர்வுகள் வெவ்வேறாக இடம்பெறவுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது. இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், சர்வதேச அனுபவம் கொண்ட பயிற்றுவிப்பாளருமான பக்கீர் அலி கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி இலங்கை தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், பக்கீர் அல…

    • 1 reply
    • 245 views
  5. ராணுவ சீருடையில் பத்மபூஷண் விருது பெற்ற மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் மற்றும் வீரர்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து உயரிய பத்மபூஷண் விருது பெற்றார். இந்திய அரசால் வழங்கப்படும் மிகப்பெரிய 3-ஆவது நிலை கௌரவமாக பத்மபூஷண் விருது உள்ளது. இதன்மூலம் இந்திய அளவில் பத்மபூஷன் பெறும் 11-ஆவது கிரிக்கெட் வீரர் எனும் பெருமையைப் பெற்றார். இந்த விழாவில் ராணுவ சீருடையில் வந்த மகேந்திர சிங் தோனி, ராணுவ அணிவகுப்பில் சென்று குடியரசுத் தலைவரிடம் இருந்து இவ்விருதை பெற்றார். புதுதில்லி குடியரசுத் தலைவர் மாளிகைய…

  6. நடுவர் டேரல் ஹேருக்கு பித்து பிடித்து விட்டது: ஹர்பஜன் காட்டம் ஹர்பஜன், முரளி, சக்லைன் ஆகிய பவுலர்களை பந்து வீச அனுமதித்திருக்கக் கூடாது என்று ஆஸி.முன்னாள் நடுவர் டேரல் ஹேர் கூறியதற்கு ஹர்பஜன் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். ஐசிசி.யின் முன்னாள் உயர்மட்ட நடுவர் டேரல் ஹேர், பந்துவீசாமல் த்ரோ செய்பவர்களை 20 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியேற்றிருக்க வேண்டும் என்று கூறிய கருத்திற்கு ஹர்பஜன் சிங் காட்டமாக பதில் அளித்துள்ளார். ஆஸ்திரேலிய ஊடகமான சிட்னி மார்னிங் ஹெரால்ட் நேர்காணலில் நடுவர் டேரல் ஹேர் கூறியது: 1990-ஆம் ஆண்டுகளின் இறுதியிலேயே நான் கூறினேன், த்ரோ செய்பவர்களை அனுமதித்தால் ஒரு காலத்தில் த்ரோ செய்பவர்களே பவுலர்களாக உருவாகிவிடுவார்கள் என்று எச்சரித்தேன். சக்லைன் முஷ…

  7. துபாயில் மோதும் இந்தியா, பாகிஸ்தான் - ஆசியக் கோப்பை அட்டவணை வெளியீடு! ஆசியக் கண்டத்தில் இருக்கும் நாடுகள் மோதும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும். கடந்த முறை டி20 போட்டியாக நடைபெற்ற தொடர் இந்த ஆண்டு ஒரு நாள் போட்டி வடிவில் நடைபெற உள்ளது. கடந்த முறை ஆசியக் கோப்பையை தொடர்ந்து நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பைத் தொடரை மனதில் கொண்டு டி20 போட்டிகளாக நடத்தப்பட்டது. மேலும், ஆசியக் கோப்பைத் தொடரை டி20 மற்றும் ஒருநாள் போட்டி வடிவங்களில் தொடர்ந்து நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு நடைபெற உள்ள …

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES 8 ஆகஸ்ட் 2024, 01:46 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் பிரபல மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகாட், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இம்முடிவை அவர் எடுத்துள்ளார். ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் 50 கிலோ பிரிவில் வினேஷ் போட்டியிட்டார். ஆனால் நேற்று காலை எடையை அளவிடும் போது, அவரது எடை அனுமதிக்கப்பட்ட வரம்பை விட 100 கிராம் அதிகமாக இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இந்தியக் குழு கூடுதல் …

  9. சினிமா நட்சத்திரங்கள் அடங்கிய 6 அணிகள் பங்கேற்றுள்ள செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக்' என்ற பெயரில் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சனிக்கிழமை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த அரைஇறுதியில் தமிழக நடிகர்கள் அடங்கிய சென்னை ரைனோஸ் அணியும், தெலுங்கு வாரியர்ஸ் அணியும் மோதின. டாஸ் ஜெயித்த வாரியர்ஸ் முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதன்படி உள்ளூர் ரசிகர்கள், நடிகர் நடிகைகளின் உற்சாகமான ஆதரவுடன் சென்னை ரைனோஸ் பேட்டிங் செய்தது. விஷ்ணு (45 ரன், 25 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), ஜீவா (27 ரன்), விக்ராந்த் (24 ரன்) ஆகியோரின் குறிப்பிடத்தக்க ஆட்டத்தால் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. …

  10. தந்தையின் அதிரடியை தொடரும் டில்ஷானின் மகன் ஓய்வு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரட்ன டில்ஷானின் மகன் ரேசாந்து திலகரட்ன அண்மையில் இடம்பெற்ற 13 வயதிற்குற்பட்டோர் கிரிக்கெட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 114 ஒட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார். கொழும்பு ரோயல் கல்லூரியை பிரதிநிதித்துவம் படுத்தும் ரேசாந்து திலகரட்ன கோட்டை புனித தோமஸ் கல்லூரிக்கு எதிரான போட்டியிலேயே இவ்வாறு சதம் அடித்து, அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார். சிறுவயதிலேயே இவ்வாறு திறமைகளை கொண்டுள்ள ரேசாந்து எதிர்காலத்தில் டில்ஸ்கூப்பை ஞாபகப்படுத்துவார் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/11895

  11. ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன்! வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. Photo Courtesy: Afghan Cricket Board 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று கோலாலம்பூரில் நடந்தது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. முதலில் பேட் செய்த …

  12. மகளிர் ஆசிய கிண்ண இருபது - 20 கிரிக்கெட் : இலங்கையை வெற்றிகொண்டது இந்தியா By VISHNU 02 OCT, 2022 | 10:48 AM (என்.வீ.ஏ.) பங்களாதேஷின் சில்ஹெட் விளையாட்டரங்கில் 01 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமான மகளிர் ஆசிய கிண்ண இருபது 20 கிரிக்கெட் தொடரின் 2ஆவது போட்டியில் இலங்கையை 41 ஓட்டங்களால் இந்தியா வெற்றிகொண்டது. ஜெமிமா ரொட்றிகஸ் குவித்த அபார அரைச் சதம், ஹேமலதா, பூஜா, தீப்தி ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சு என்பன இந்தியாவுக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தன. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது. முதல் 4 ஓவர்களுக்குள் …

  13. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் பங்கேற்ற டி20 தொடரில் 120 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2022 ஆம் ஆண்டு பல்கேரியா மற்றும் செர்பியா நாடுகளுக்கு இடையேயான போட்டியில் 97 சிக்சர்கள் அடிக்கப்பட்டது சாதனையாக இருந்து வந்தது. இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடியது. இந்த இரண்டு தொடர்களிலும் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும், டி20 தொடரை 3-2 என்ற கணக்கிலும் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்ற…

  14. [size=4]ரியோ டி ஜெனிரோ: வரும் 2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ள ரியோடி ஜெனிரோ நகரத்திற்கு லண்டனில் இருந்து ஒலிம்பிக் கொடி சென்றடைந்தது. [/size] [size=4]வரும் 2016ல் 31வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலில் நடக்கவுள்ளது. இதற்கான கொடியை, ஒலிம்பிக் நிறைவு விழாவில் லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன், ரியோ டி ஜெனிரோ மேயர் எட்வர்டோவிடம் வழங்கினார். இந்தக் கொடி, இப்போது பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோ சென்றடைந்தது.[/size] [size=4]http://tamil.yahoo.com/ப-ர-ச-ல்-ச-132400211.html[/size]

  15. Started by nunavilan,

    வர்மக்கலை வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது. டிராகன் டி. ஜெய்ராஜ் அவர்களின் வர்மக்கலை மர்மங்கள் 108 விளக்கப் படங்களுடன் இக் கலையை விளக்குகின்றது. வர்மம் என்றால் என்ன? உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே வர்ம…

    • 1 reply
    • 1.9k views
  16. 2017 சாம்பியன்ஸ் டிராபி வர்ணனையாளர்கள் குழு: ஐசிசி அறிவிப்பு கங்குலி. | கோப்புப் படம்.| கே.ஆர்.தீபக். 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரும்பும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறுகிறது, இதற்கான வர்ணனையாளர் குழுவை ஐசிசி அறிவித்துள்ளது. பிரண்டன் மெக்கல்லம், ரிக்கி பாண்டிங், கிரேம் ஸ்மித், குமார் சங்கக்காரா ஆகியோர்.சாம்பியன்ஸ் டிராபி தொடர் வர்ணனையில் அறிமுகமாகின்றனர். பாண்டிங், ஸ்மித் இருதரப்பு தொடரில் வர்ணனை செய்துள்ளனர், சாம்பியன்ஸ் டிராபியில் இதுவே முதல் முறை. மேலும் சஞ்சய் மஞ்சுரேக்கர், சவுரவ் கங்குலி, இயன் பிஷப், ஷான் போலக், ஷேன் வார்ன், ரமீஸ் ராஜா, அதார் அலி கான், மைக்கேல் ஸ்லேட்டர், ந…

  17. சச்சின் ஏன் இப்படி உட்கார்ந்திருக்கிறார்? லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் போட்டியை காண உலகம் முழுக்க உள்ள விளையாட்டு நட்சத்திரங்கள், ஹாலிவுட், பாலிவுட் சூப்பர் டூப்பர்கள் எல்லாம் இங்கிலாந்தில் குவிந்துள்ளனர். இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர், தனது மனைவி அஞ்சலியுடன் லண்டனில் முகாமிட்டுள்ளார். அதுபோல் விராட் கோலியும் அனுஷ்காவுடன் விம்பிள்டன் பகுதியில் சுற்றித் திரிகிறார். இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) சச்சின் தனது ட்விட்டர் தளத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்வு செய்தார், அதில் கிரேட் ஹாஸ்ல்லி ஆக்ஸ்போர்ட் பேருந்து நிலையத்தில் சச்சின் அமர்ந்திருப்பது போல 3 படங்கள் வெளியிடப்பட்டிருந்தன. “ நான் கிரேட் ஹாஸ்ல்லி ஆக்ஸ்போர்ட் பகுதியில் இருக்கிறேன். கடைசி…

    • 1 reply
    • 406 views
  18. நடராஜரே அசந்துபோகும் அளவுக்கு அவரது போஸில் அருமையா ஆடும் இந்திய வீரர்கள்.! இந்திய வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி ஆகிய மூவருமே வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடராஜா ஷாட்டை அபாரமாக ஆடினர். ஷார்ட் பிட்ச், பவுன்ஸர் பந்தை ஒற்றை காலை தூக்கிக்கொண்டு, நடராஜரின் போஸ் போல ஆடும் ஷாட்டுக்கு பெயர் "நடராஜா ஷாட்". இந்த ஷாட்டை அடிக்கடி அபாரமாகவும் நேர்த்தியாகவும் ஆடக்கூடியவர் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் பிரயன் லாரா. வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவானுக்கு மிகவும் பிடித்த இந்த நடராஜா ஷாட்டை வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக மிகவும் நேர்த்தியாக ஆடினர் இந்திய வீரர்கள். நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா வெறும் 18 ரன்கள் மட்டுமே அடித்தார். அதில் ஒரு ஷாட் நடராஜா ஷாட். ரோஹித…

    • 1 reply
    • 764 views
  19. மெஸ்சி போலவே ஆடி மெஸ்சியை வீழ்த்திய டிபாலா..! #BarcelonaVsJuventus டிபாலா - அடுத்த மெஸ்சி! இதுதான் ஐரோப்பிய கால்பந்து உலகின் தற்போதைய பேச்சு. மெஸ்சியின் கண் முன்னே, மெஸ்சியைப் போலவே பக்கவாக இரண்டு லெஃப்ட் ஃபுட் கோல் அடித்ததில் இருந்தே இந்த ஒப்பீடு சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. இருவரும் அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர்கள். தங்கள் நாட்டுக்காக விளையாடிய முதல் போட்டியில் சிவப்பு அட்டை பெற்றவர்கள் என பல ஒற்றுமைகள். இத்தாலியின் டியூரின் நகரில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முதற்கட்ட காலிறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில் ஸ்பெயினை சேர்ந்த கிளப் பார்சிலோனா, இத்தாலியைச் சேர்ந்த கிளப் யுவென்டஸ் மோதின. இந்த இரு அணிகளும் மோதிய 2…

  20. ஒரே போட்டியில் இரண்டு உலக சாதனைப் படைத்து தல டோனி அசத்தல் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் விக்கெட் கீப்பர் தல டோனி இரண்டு உலக சாதனைப் படைத்து அசத்தியுள்ளார். #WorldCup2018 இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்டோலின் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 8-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரின் …

  21. இன்னும் ஓராண்டில் இந்த இந்திய அணி திறமைகளை எங்கும் நிரூபிக்கும்: ரவி சாஸ்திரி இந்த இளம் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்த ஓராண்டில் பலமாக எழுச்சியுறும் என்று அணி இயக்குநர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸில் அவர் கூறியதாவது: ”2-0 என்று தொடரை இழந்தது பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனெனில் இந்த அணி வெளிப்படுத்திய ஆட்டத்திறமைதான். கடந்த காலங்களில் நாம் வீழ்ந்திருக்கிறோம், நெருக்கடியில் எந்த வித சவாலையும் அளிக்காமல் தோற்றிருக்கிறோம். ஆனால் தற்போது எதிரணியினரிடம் தாக்குதல் ஆட்டத்தை கொண்டு சென்றுள்ளோம். இந்த அணி வீரர்களின் சராசரி வயது 26. ஆனால், இது தோல்விக்கான சாக்குபோக்கு அல்ல. இந்த அணிக்கு நான் முன்னமே கூறியது போல் இன்னும் 12 மாதங்கள் கொடுங்கள்,…

  22. ரஞ்சி கிரிக்கெட் போட்டி... திண்டுக்கல் மைதானத்தில் பந்து தாக்கியதால் மயங்கி விழுந்த ஆஸி. நடுவர் திண்டுக்கல்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய நாட்டு நடுவர் ஜான்வாட் மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். அவருக்கு திண்டுக்கல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி சுற்றுப் போட்டிகள் இன்று நாடு முழுவதும் பல மைதானங்களில் நடைபெறுகின்றன. இதில் தமிழகம்- பஞ்சாப் இடையேயான கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அருகே நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் தமிழக வீரர் சந்திரசேகர் வீசிய பந்தை பஞ்சாப் வீரர் பல்விந…

  23. உலக சாம்பியன் ஜெர்மனிக்கு நெருக்கடி கொடுத்த ஸ்காட்லாந்து கடந்த ஜூலையில் அர்ஜெண்டீனாவை வீழ்த்தி உலகக் கோப்பைக் கால்பந்து சாம்பியனான ஜெர்மனி அதன் பிறகு முதல் சர்வதேசப் போட்டியில் நேற்று விளையாடியது. யூரோ 2016 கால்பந்து போட்டிகளுக்கான தகுதிச் சுற்று போட்டியில் நேற்று டார்ட்மண்டில் ஸ்காட்லாந்து அணியை எதிர்கொண்டது ஜெர்மனி. ஸ்காட்லாந்து கடும் நெருக்கடி கொடுக்க மீண்டும் தாமஸ் முல்லரின் அபாரமான 2 கோல்களினால் ஜெர்மனி 2-1 என்று வெற்றி பெற்றது. இடைவேளைக்கு முன்பாக தாமஸ் முல்லர் முதல் கோலை அடித்து முன்னிலை கொடுக்க, ஸ்காட்லாந்தின் இகேச்சி அன்யா என்பவர் 66வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்து ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்தார். உலக சாம்பியன்களின் இறுக்கமான தடுப்பு உத்திகளை கேள்விக…

  24. கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டி நாளை ஆரம்பம் வடக்கு, கிழக்கு உட்­பட நாட்டின் சகல பாகங்­க­ளி­லி­ருந்தும் 138 தங்கப் பதக்­கங்­க­ளுக்கு குறி­வைத்து 2,500க்கும் மேற்­பட்ட வீர, வீராங்­க­னைகள் பங்­கு­பற்றும் 56ஆவது கனிஷ்ட தேசிய மெய்­வல்­லுநர் போட்­டிகள் கொழும்பு சுக­த­தாச விளை­யாட்­ட­ரங்கில் நாளை ஆரம்­ப­மா­க­வுள்­ளது. சுக­த­தாச விளை­யாட்­ட­ரங்கில் 250 மில்­லியன் ரூபா செலவில் புதி­தாக பதிக்­கப்­பட்­டுள்ள ஓடு­பா­தையில் முத­லா­வது போட்­டி­யாக இப் போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன. இன்னும் ஒரு வாரத்தில் இதே அரங்கில் நடை­பெ­ற­வுள்ள கனிஷ்ட தெற்­கா­சிய மெய்­வல்­லுநர் போட்­டிக்­கான திறன்காண் போட்­டி­யாக கனிஷ்ட தேசிய மெய்­வல்­லுநர் போட்­டிகள் அமை­வதால் மெய்­வல்­லு­நர்­…

  25. தேசியமட்ட கோலூன்றிப்பாய்தலில் தமிழ் மாணவிகள் அசத்தல் October 12, 2015 தேசியமட்ட கோலூன்றிப் பாய்தலில் பெண்கள் பிரிவில் கணிசமான பதக்கங்கள் யாழ். மாவட்டத்துக்கு கிடைத்துள்ளன. 21வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் அருணோதயக் கல்லூரியைச் சேர்ந்த மேரி பெளசினா 2.8 மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தையும், எம்.கமலினி 2.8 மீற்றர் உயரம் பாய்ந்து வெண்கலப்பதக்கத்தையும், 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் மகாஜனக் கல்லூரியைச் சேர்ந்த ஜெ.அனித்தா 3.2 மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர். அனித்தா கடந்த வருடம் நடை பெற்ற கோலூன்றிப் பாய்தலில் 3.3 மீற்றர் உயரம் பாய்ந்து தேசியமட்ட சாதனையைச் சமப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/spo…

    • 1 reply
    • 364 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.