விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
ரியோ பாராலிம்பிக்ஸ்: ஒலிம்பிக் வீரரை மிஞ்சிய பாராலிம்பிக் வீரர்கள்! ஒலிம்பிக் போட்டிகள் ரியோவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்த கையோடு பாராலிம்பிக்ஸ் போட்டிகள் ரியோவில் துவங்கின. இதில் நேற்று பார்வையற்றோர்கான டி13 1500மீ ஒட்டப்பந்தையம் நடைபெற்றது. இதில் நிகழ்த்தப்பட்ட சாதனை உலகையே தரும்பி பார்க்க வைத்துள்ளது. அல்ஜீரியாவின் போவுட் பகா பந்தய தூரத்தை 3 நிமிடம் 49.84 நொடிகளில் கடந்தார். இது ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றவர் ஓடிய நேரத்தை விட குறைவான நேரமாகும். ஒருவேளை இவர் ஒலிம்பிக்கில் ஓடி இருந்தால் இவருக்கே தங்கம் கிடைத்திருக்கும். ஏனேனில், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமேரிக்காவின் மத்தியு சென்ட்ரொவிட்ஸ்-ஏ 1500மீ தூரத்தை கடக்க 3 நிமிடம் 50 நொடிகள்…
-
- 1 reply
- 609 views
-
-
யாழ். இந்துக் கல்லூரி மாணவர்களின் வீதியோட்டம் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் 2015ஆம் ஆண்டுக்குரிய இல்ல மெய்வல்லுநர் போட்டியின் பிரதான நிகழ்வான வீதியோட்டம் வெள்ளிக்கிழமை(06) நடைபெற்றது. இந்நிகழ்வு இளநிலைப் பிரிவு முதுநிலைப் பிரிவு எனும் இரு பிரிவுகளாக நடைபெற்றது. இப் போட்டிக்கு இரு பிரிவுகளிலிருந்தும் சுமார் 250 மாணவர்கள் பங்குபற்றினர். வீதியோட்டத்தை யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் சண்.தயாளன் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். இப்போட்டியில் இளநிலைப்பிரிவில் முதலாமிடத்தை வி.சஜீவன் இரண்டாமிடத்தை நி.ஆதவன், மூன்றாமிடத்தை ந.பானுஜன் ஆகியோர் பெற்றுக்கொணடனர். முதுநிலைப்பிரிவில் முதலாமிடத்தை எஸ்.சுபராஜ் இரண்டாமிடத்தை எஸ்.ஜெசிந்தன் மூன்றாமிடத்தை தோ.நிரோஜன…
-
- 3 replies
- 609 views
-
-
அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் பிரமோதைய விக்ரமசிங்க ஆகிய இருவரும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கிரிக்கெட் சபை தலைவர் திலங்க சுமதிபால எம்.பி கூறிய விடயங்கள் முழுப்பொய் என தெரிவித்த முன்னாள் தலைவரும் தற்போதைய அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க, நான் ஒருபோதும் அவர்களுக்கு எதிராக முறையிடவில்லை என்றும் கூறினார். சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை நடத்த முடியாது. அதற்கு சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் விசாரணை பிரிவே விசாரணைகளை நடத்த வேண்டும். இலங்கையில் இந்த பிரிவை உருவாக்க சர்வதேச கிரிக்கெட் சபை வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் இந்த மூன்று ஆண்டுகளில் தான் இவ்வாறான நிலைமைகள் உருவாகியுள்ளது. அதுவும் சிம்பாவே இலங்கை போட்டியில் தான் இவ்வா…
-
- 0 replies
- 609 views
-
-
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டியில் இன்று காலை குறித்த நேரத்துக்கு (பாகிஸ்தானில் காலை 10.15 மணி) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் 10 வருடங்கள், 10 மாதங்களின் பின்னர் பாகிஸ்தானில் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பமானது. பாகிஸ்தானில் வரலாற்று முக்கியம்வாய்ந்தாக அமைந்த இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணி தீர்மானித்தது. இலங்கை அணியில் ஆரம்ப வீரராக லஹிரு திரிமான்னவுக்குப் பதிலாக ஓஷத பெர்னாண்டோ ஆரம்ப வீரராக பெயரிடப்பட்டார். தனது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 3ஆம் இலக்க வீரராக விளையாடிய ஓஷத பெர்னாண்டோ, ஆரம்ப வீரராக விளையாடுவது இதுவே முதல் தடவையாகும். இன்றைய போட்டியில் இலங்கை அணியி…
-
- 2 replies
- 609 views
-
-
டில்ஸ்கூப் மன்னன் டில்ஷானின் ஓய்வு அறிவித்தல் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவா? (ஆழமான அலசல்) டில்ஸ்கூப் மன்னன் டில்ஷானின் ஓய்வு அறிவித்தல் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவா? (ஆழமான அலசல்) இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி நாயகனும், ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான திலகரட்ன டில்ஷான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுப்பதாக இன்று அறிவித்துள்ளார். 1999 இல் சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தை மேற்கொண்ட டில்ஷானின் 17 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வு இந்த திடீர் ஓய்வு அறைவிப்பு மூலமாக முடிவுக்கு வருகிறது. கிரிக்கெட்டில் சாதிக்க தெரிந்த சாதனையாளர்கள் பலருக்கு தாங்கள் உச்சத்தில் இருக்கும் போதே, சர்சைகளில் சிக்காமல் ஓய்வு அறிவித்தலை வெளியிட்டிருக்க முடிவதில்லை …
-
- 0 replies
- 608 views
-
-
செய்தித்துளிகள்: லண்டனுக்கு சென்ற உலகக் கோப்பை டிராபி! சென்னையில் நடைபெற்று வரும் மெக்பெரன் கோப்பைக்கான தேசிய கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை எப்சி பி - பெங்களூரு அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் ஜெரின் 2 கோல்களும், தவா ஒரு கோலும் அடித்தனர். இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் ஜகார்த்தா நகரில் இன்று தொடங்குகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, இந்தோனேஷியாவின் ஹன்னா ரமாதினியுடன் மோதுகிறார். ஆடவர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், மலேசியாவின் ஜூல்பட்லி ஜூல்க…
-
- 0 replies
- 608 views
-
-
இம்மாத இறுதியிலிருந்து ஹத்துருசிங்க இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை சந்திக்க ஹத்துருசிங்க இம்மாத இறுதியில் ஏற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் தலைமைப் பயிற்சியாளராகவிருந்த கிரஹம் போர்ட், சம்பியன்ஸ் கிண்ணத் தொடருடன் இராஜினாமா செய்ததையடுத்து நிரந்தர தலைமைப் பயிற்சியாளர் இல்லாமல் இலங்கை அணி தொடர்களில் பங்கேற்று வருகிறது. இந்நிலையில் பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சந்திக்க ஹத்துருசிங்கவை இலங்கை அணுகியது. தற்போது ஹத்துருசிங்கவும் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் இம்மாத இறுதியில் அவர் பொறுப்பேற்றுக் கொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது.…
-
- 1 reply
- 608 views
-
-
பிராட்மேன், லாரா, சச்சினை பின்னுக்குத்தள்ளி விராட் கோலி சாதனை! இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தில்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கி நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய், விராட் கோலி ஜோடி 3- வது விக்கெட்டுக்கு 283 ரன்கள் குவித்தது. முதல்நாள் ஆட்டநேர இறுதியில் முரளி விஜய், 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அப்போது கோலி 156 ரன்களுடன் களத்தில் நின்றார். இதையடுத்து 2-ஆம் நாளில் தொடர்ந்து பேட் செய்த…
-
- 2 replies
- 608 views
-
-
கிரிக்கெட் உலகில் பந்து பறித்த முதல் இந்திய உயிர்: ராமன் லம்பா பற்றிய சில தகவல்கள்! இந்திய கிரிக்கெட் உலகை அதிர வைத்த இந்த துர் சம்பவம் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி நிகழ்ந்தது. மிகச்சிறந்த பீல்டரான ராமன் லம்பாவிடம் ஒரு கெட்ட பழக்கமும் இருந்தது. அதாவது பேட்ஸ்மேனுக்கு வெகு அருகில், ஹெல்மெட் போடாமல் பீல்டிங் செய்யும் அந்த பழக்கம்தான் அவரது உயிரையும் பறித்தது. டாக்காவில், அபாகானி கிரிரா சக்ரா அணிக்காக ராமன் லம்பா விளையாடி வந்தார். வங்க தேச பிரீமியர் டிவிஷன் இறுதி ஆட்டத்தில், முகமதன் ஸ்போர்ட்டிங் அணியுடன் ராமன் லம்பாவின் அணி மோதியது. முகமதன் ஸ்போர்ட்டிங் பேட்ஸ்மேன், மெக்ராப் ஹொசைன் அடித்த பந்து, ஃபார்வட் லெக் திசையில் நின்றிருந்த ராமன் …
-
- 0 replies
- 608 views
-
-
பதில் சொல்ல முடியாத அளவுக்கு ஆஸி நிருபரை கலாய்த்த தோனி (வீடியோ) இரண்டாவது போட்டியில் தோற்ற பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தோனி. தோல்விக்கான காரணங்களை கூறினார். இடையில் ஒரு ஆஸி நிருபர் 'ரோஹித் ஷர்மா எட்ஜ் ஆனதற்கு அவுட் வழங்கப்படவில்லையே என கேட்க தோனி கூலாக '' நீங்கள் சொன்ன ஸ்லாங் எனக்கு புரியவில்லை மீண்டும் கூறுங்கள் என கேட்டார். நிருபரும் திரும்ப அதே கேள்வியை கேட்க ''ஓ! எட்ஜ் குறித்து கேட்கிறீர்களா? நான் உங்களுக்கு இந்த கேள்விக்கு பதில் சொல்ல மாட்டேன், காரணம் சென்ற முறை ஜார்ஜ் பெய்லி குறித்து என்னிடம் நீங்கள் இதே கேள்வியை என்னிடம் கேட்கவில்லை' என நக்கலாக சென்ற போட்டியில் பெய்லிக்கு அவுட் வழங்கப்படாததை சுட்டி காட்டி கலாய்த்தார். அந்த ஆஸி நிருபரும…
-
- 0 replies
- 608 views
-
-
டி20 கிரிக்கெட்: விராட் கோலிக்கு ஓய்வு; தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளார். இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விளையாடி வந்த விராட் கோலிக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையி…
-
- 1 reply
- 608 views
-
-
பரிசுத்தொகையில் ஒரு பகுதியை அன்னை தெரேசா இல்லத்திற்கு வழங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி மேற்கிந்தியத் தீவுகள் அணி இறுதிபோட்டியில் கிடைத்த பரிசுத்தொகையின் ஒரு பகுதியை கொல்கத்தாவில் அமைந்துள்ள அன்னை தெரேசா இல்லத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் வழங்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக் கிண்ண இருபதுக்கு - 20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட்டால் வெற்றிபெற்று சம்பியனானது. இந்நிலையில் ஐ.சி.சி. சம்பியனான அணிக்கு ஒருதொகை பணப்பரிசு வழங்கி கௌரவித்தது. அதில் ஒரு பகுதியை மேற்கிந்தியத் தீவுகள் அணி கொல்கத்தாவில் அமைந்துள்ள அன்னை தெரேசா தொண்டு இல்லத்திற்கு வழங்கியுள்ளது. இதனை மேற்கிந்திய…
-
- 2 replies
- 608 views
-
-
தென் ஆப்ரிக்க அணி வெற்றி: டிவிலியர்ஸ், டுமினி அசத்தல் அக்டோபர் 21, 2014. பே ஓவல்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் டிவிலியர்ஸ், டுமினி ஜோடி மிரட்ட தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பே ஓவலில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் ‘பவுலிங்’ தேர்வு செய்தார். நழுவிய சதம்: நியூசிலாந்து அணிக்கு கப்டில் (5), நீசம் (16) மோசமான துவக்கம் தந்தனர். பின் வந்த பிரவுன்லி (24), கேப்டன் பிரண்டன் மெக்கலம் (16) நீடிக்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோரி ஆண்டர்சன் ‘டக்–அவுட்’ ஆனார். அடுத்து லதாம் (29…
-
- 2 replies
- 608 views
-
-
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகும் இந்திய வீரர் December 18, 2015 ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரை அந்த அணி நிர்வாகம் நியமித்துள்ளது. இந்திய அணியில் பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக செயல்பட்டவர் மனோஜ் பிரபாகர். வேகப்பந்துவீச்சாளரான இவர், ஒருநாள் ஆட்டத்தில் 96 விக்கெட்டுகளும் டெஸ்டில் 157 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார், மேலும் முதல் தர கிரிக்கெட்டில் 385 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்துள்ள இவரை தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக அந்த நாட்டின் கிரிக…
-
- 0 replies
- 607 views
-
-
முரளீதரன் இலங்கையை மோசமாக சித்தரித்துள்ளார் ; தயாசிறி சீற்றம் அரசியல்வாதிகளின் தலையீட்டினால் இலங்கை கிரிக்கெட்டிற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கருத்து தெரிவித்துள்ளதன் மூலம் இலங்கையை முன்னாள் வீரர் முத்தைய முரளீதரன் மோசமாக சித்தரித்துள்ளார் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தான் ஒப்சேவரிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. நான் விளையாட்டு அமைச்சராக இல்லாதபோதிலும் இலங்கையின் விளையாட்டு வீரர்களிற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பேன். அரசியல்வாதிகள் விளையாட்டில் ஆர்வம் காட்டுவது இலங்கையை பொறுத்தவரை புதிய வி…
-
- 0 replies
- 607 views
-
-
முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா இன்று மோதல் பெர்த்தில் இன்று நடக்கும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. #ODI #SouthAfrica #Austrialia #Perth பெர்த்: தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி குறுகிய கால சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. அங்கு மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் பங்கேற்கிறது. இதன்படி தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் இன்று நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் செயல்பாடு மோசமாக இருந்து வருகிறது. அதுவும் …
-
- 3 replies
- 607 views
-
-
இலங்கை டுவென்டி டுவென்டி அணியின் தலைவர் டினேஷ் சந்திமால் தனக்கான இந்தியன் பிரீமியர் லீக் வாய்ப்பை நிராகரித்துள்ளார். மேலதிக பயிற்சிகளைப் பெற விரும்பியதன் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இலங்கையின் டுவென்டி டுவென்டி அணியின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட அவர், இன்றையதினம் தனது முதலாவது போட்டியில் பங்குகொள்ளவுள்ளார். இந்நிலையில் காயமடைந்துள்ள டெல்லி டெயாடெவில்ஸ் அணி வீரர் கெவின் பீற்றர்சனுக்குப் பதிலாக டினேஷ் சந்திமாலை அவ்வணி அணுகியதாகவும் எனினும் அந்த வாய்ப்பை டினேஷ் சந்திமால் நிராகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளுக்காக ஐ.பி.எல் இடம்பெறவுள்ள 2 மாதங்களில் கடுமையான பயிற்சிகளில் ஈடுபடவுள்ள…
-
- 4 replies
- 607 views
-
-
உலகக் கிண்ண தொடரை வெற்றிக் கொள்ளும் அணிக்கு அதிர வைக்கும் பரிசுத் தொகை இங்கிலாந்து மற்றும் வெல்ஸில் இவ் வருடம் நடைபெறவுள்ள பத்து நாடுகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வழங்கப்படும் மொத்தப் பணப்பரிசுத் தொகை 10 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். (ஒரு அமெரிக்க டொலர் இலங்கை நாணயப்படி 175.95 ரூபா) சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்றைய தினம் (வெள்ளி) பணப்பரிசு விபரங்களை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. கிரிக்கெட்டின் தாயகமான லோர்ட்ஸ் அரங்கில் எதிர்வரும் ஜூலை 14ஆம் திகதி உலக சம்பியனாகும் அணிக்கு உலகக் கிண்ணத்துடன் 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணப்பரிசாகக் கிடைக்கும். 46 வருட உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இதுவே சம்பியன் அணிக்கு வழங்கப்…
-
- 0 replies
- 607 views
-
-
மெஸ்ஸியின் குடும்ப பேரங்காடி மீது சூடு: வீரருக்கு அச்சுறுத்தல் செய்தி கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் உறவினருக்கு சொந்தமான ஆர்ஜன்டீனாவில் உள்ள பேரங்காடி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதோடு அங்கு மெஸ்ஸிக்கு எச்சரிக்கை விடுக்கும் அறிவிப்பு ஒன்றையும் தாக்குதல்தாரிகள் விட்டுச் சென்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை (02) இடம்பெற்றிருக்கும் இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆர்ஜன்டீனாவின் மூன்றாவது மிகப்பெரிய நகரான ரொசாரியோவில் இருக்கும் யுனிகோ பேரங்காடி ம…
-
- 0 replies
- 607 views
-
-
பிரபல பெண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வீதி விபத்தில் பலி இந்தியாவின் முன்னணி பெண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான ஜெய்பூரைச் சேர்ந்த வேணு பலிவால் வீதி விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 44 வயதான வேணு பாலிவால் மத்திய பிரசேத மாநிலம் விதிஸா மாவட்டத்தில் உள்ள கையாராஸ்பூர் அருகே தனது ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த அவர் வீதியில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளார். இவ்விபத்தில் பலத்த காயமடைந்த அவர், அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக விதிஸா மாவட்ட மருத்துவமனைக்கு க…
-
- 0 replies
- 607 views
-
-
(நெவில் அன்தனி) அங்குரார்ப்பண லங்கா ப்றீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் சம்பியனான ஜவ்னா ஸ்டாலியன்ஸ் அணியின் உரிமையாளர்கள், அதன் உரிமைத்துவத்திலிருந்து கனத்த இதயத்துடன் விலகிக்கொண்டுள்ளனர். 'இது ஒரு கவலை தரும் செய்தியாகும். எமது பணியை மீண்டும் செயல் உருவாக்குவதற்கு நாங்கள் எங்களால் ஆன அதிகபட்ச முயற்சியில் ஈடுபட்டோம். ஆனால், அது சாத்தியப்படவில்லை. சுருங்கச் சொல்லின் இப்படி ஒரு முடிவுக்கு வருவோம் என நாங்கள் நிச்சயமாக எண்ணவில்லை' என ஜவ்னா ஸ்டாலியன்ஸ் ஸ்தாபனத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'யாழ்ப்பாணத்தை நேசிப்பதாலும் இலங்கையில் எமது பணி அர்த்தம் மிக்கதாக அமைய வேண்டும் என்பதாலும் எமது உரிமைத்…
-
- 1 reply
- 607 views
-
-
இலங்கையை சொந்த மண்ணில் மோதவுள்ள மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் குழாம் அறிவிப்பு By Akeel Shihab இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியின் 15 பேர் கொண்ட இன்று (03) மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவர் ரோஜர் ஹார்ப்பரினால் வெளியிடப்பட்டுள்ளது. இருதரப்பு தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச ஆகிய இரு தொடர்களில் இல…
-
- 0 replies
- 607 views
-
-
குடும்ப வன்முறை, வறுமை ஆகிய தடைகளை வென்று இந்திய ரக்பி அணியில் இடம் பிடித்த சுமித்ரா நாயக் அது 2008ஆம் ஆண்டு. எட்டு வயது மதிக்கத்தக்க அந்த சிறுமி ஒடிஷாவில் ஒரு மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் ஒரு முட்டை வடிவ பந்தை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருப்பதை கண்டார். முதலில் அவர் அது டைனோசர் முட்டைபோல உள்ளது என நினைத்தார். முதன் முதலில் ரக்பி போட்டியை பார்த்துக் கொண்டிருந்த அந்த சிறுமிதான் சுமித்ரா நாயக். தற்போதைய இந்தியாவின் பெண்கள் ரக்பி அணியின் முக்கிய வீராங்கனை. புவனேஷ்வரில் உள்ள கலிங்கா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் மைதானத்தில் தன் சிறு வயதில் இந்த விளையாட்டை தொடங்கிய சுமித்ராவின் இளமைக் காலம் சவால்கள் ந…
-
- 1 reply
- 606 views
-
-
ஆறாவது ஐபிஎல் போட்டியின் தொடக்க விழா கோலாகல கொண்டாட்டத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடக்க நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான், காத்ரினா கைஃப் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சியில் சீன இசை வாசிக்கப்பட உள்ளது. ரசிகர்களைக் கவரும் வாணவேடிக்கைகளும் நிகழ்த்தப்பட உள்ளன. தொடக்க நிகழ்ச்சி குறித்து கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் கூறுகையில், "இதுபோன்ற தொடக்க நிகழ்ச்சிகளை இதுவரை இந்தியாவில் எங்கும் கண்டிருக்க முடியாது. அந்த அளவு சிறப்பாக இருக்கும்' என்றார். இப்போட்டியில் 9 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகவும் பி…
-
- 1 reply
- 606 views
-
-
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பவுலிங்! ஹராரே: ரஹானே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் இரு டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று டாசில் வென்ற ஜிம்பாப்வே முதலில் ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. டோணி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் வங்காளதேசத்துக்கு எதிராக ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதனால் ஜிம்பாப்வே தொடரில் அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இந்திய அணிக்கு உள்ளது. அவ்வாறு வெற்றி பெற்றால்தான் ஒருநாள் தரவரிசையில் இந்தியாவால் 2வது இடத்தில் நீடிக்க முடியும். ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணியில், வழக்கமான கேப்டன் ட…
-
- 17 replies
- 606 views
-