Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. 2009 இனப்படுகொலை யுத்தத்தில் மிகவும் கோரமாக அழிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு நகரம் உயிர் பெற்றுக் கொண்டிருந்தாலும் இன்னமும் அதன் முகத்திலிருந்து பேரழிவின் காயங்கள் மாறவில்லை. ஆங்காங்கே குண்டுகள் சல்லடையாக துளைத்த வீடுகளும் கடைகளும் கொடும் யுத்தத்தின் சாட்சிகள் போல நிற்கின்றன. ஆனாலும் பேரழிவிலிருந்து அந்த நகரம் மீண்டது என்ற அல்லது மீண்டு வருகிறது என்று சொல்லத் தக்க வகையில் புதுக்குடியிருப்பு நகரம் மெல்ல மெல்ல உயிர்த்தெழுந்து வருகிறது. புதுக்குடியிருப்பிலிருந்து கேப்பாபுலவுக்கு செல்லும் வழி ஆரம்பித்ததும் நகரத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் இருக்கிறது மலரம்மாவின் வீடு.வீடு என்று சொல்ல முடியாது. மீள்குடியேற்றத்தின் தொடக்கத்தில் கட்டப்பட்ட கூடாரம். அது உக்கி உடைந்து கல…

  2. ஒட்டுக்குழுக்களால் கொலைசெய்யபட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் நினைவில்... பி.பி.சி. வானொலியின் தமிழ்-சிங்கள சேவைகளின் குடாநாட்டுச் செய்தியாளர் 19.10.2000 அன்று ஆக்கிரமிப்பாளர்களின் அடிவருடிகளால் அவரது இல்லத்தில் வைத்துக் கொல்லப்பட்டுள்ளார். பத்துவருடகாலமாக பத்திரிகைத்துறையில் பணியாற்றி சிறந்ததொரு செய்தியாளராகப் பரிணமித்த அவர், தனது பணியில் காட்டிய கடமையுணர்விற்கும் நேர்மைப்பண்பிற்கும் வெகுமதியாக, கொலைஞர்கள் அவருக்கு மரணத்தைப் பரிசளித்துள்ளனர். பத்திரிகையாளர் நிமலராஜன் கொல்லப்பட்ட செய்தி தமிழ்மக்களுக்கு அதிர்ச்சியையும் ஆழ்ந்த மனவேதனையையும் அளித்துவிட்டது. கடந்த ஐந்து வருடங்களாக சிங்கள இராணுவத்தின் கிடுக்கிப்பிடிக்குள் சிக்கி அவலவாழ்வை அனுபவித்துவரு…

  3. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அன்புக்கும் அபிமானத்துக்குரியவருமாக விளங்கிய தமிழ்த் தேசிய உணர்வாளரும் தீவிர செயற்பாட்டாளருமான வைத்தியகலாநிதி பொன்.சத்தியநாதன் அவர்கள் இன்று அவுஸ்திரேலியாவில் இயற்கை எய்தியுள்ளார். தமிழ் மக்கள் மீதும் தமிழீழ மண் மீதும் தீவிர பற்றுறுதியுடன் செயற்பட்டுவந்த பொன்.சத்தியநாதன் அவர்கள் 1988 ஆம் ஆண்டு தொடக்கம் உயிர் பிரியும் நேரம் வரையில் எண்ணிலடங்கா சேவைகளைப் புரிந்துவந்திருக்கின்றார். தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பிற்கான பல்வேறு தேவைகளை தொடர்ந்தும் புரிந்துவந்த ஒருவராகவே காணப்பட்டிருக்கின்றார். அமைப்பிற்கு கணனி போன்ற இலத்திரனியல் பொருட்களை வழங்கி தொழிநுட்பரீதியாக தமிழர்களின் வளர்ச்சியில் அளப்பரிய பங்காற்றினார். …

  4. இந்திய அகதி முகாமில் இருந்து இலங்கை திரும்பி இன்று சாதனை படைக்கும் பெண் முயற்ச்சியாளர். A motivation story about a woman entrepreneur who returns to Sri Lanka from an Indian refugee camp.

  5. குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் இலங்கை வன்னிப்பகுதியின் பிரதான மாவட்டமாகிய கிளிநொச்சியில் பாரிய நில ஆக்கிரமிப்பை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு தரப்பினரின் படைப் பரம்பலை இந்த உத்தியோகபூர்வ புள்ளிவிபரம் காட்டுகிறது. இந்தப் புள்ளிவிபரம் இலங்கை அரசாங்க அதிகாரிகளால் பெறப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட புள்ளிவிபரம். அதன்படி கரச்சி பிரதேச செயலர் பிரிவில் 3.492He, 557.5Ac, 05Root, 23Pe காணியையும், பச்சிலைப் பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 133.75Ac காணியையும், காண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 196Ac, 07root, 59Pe காணியையும் படையினர் ஆக்கிரமித்துள்ளமை உறுதியாகி உள்ளது. இவற்றில் பெருமளவு காணிகள் தனியாருடையது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. எனினும் பொதுமக்களின்…

  6. பள்ளிக்கூடங்கள் கட்டடங்களால் மாத்திரம் ஆனவையல்ல?: கவிஞர் தீபச்செல்வன். நான் கல்வி கற்றகாலத்தில் மாத்திரமல்ல, இன்றைக்கு கல்வி கற்பிக்கும் காலத்தில்கூட படிக்க முடியாமல் இடைஞ்சலுகின்ற மாணவர்களை திட்டுகி தண்டிக்கிற ஆசிரியர்களைப் பார்த்தே வருகிறேன். பள்ளிக்கூடம் என்பது கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு மாத்திரமல்ல. கற்க முடியாமல் மெல்ல நகருகின்ற மாணவர்களுக்கும் உரியதுதான். ஒரு ஆசிரியராக பாடசாலைக்குள் நுழைகின்ற போது நிறையப் பாடங்களைக் கற்க முடிகிறது. கொரேனா பேரிடர் காலத்தில் முடப்பட்ட பாடசாலைகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தது ஈழக் கல்விச் சமூகம். எதிர்வரும் 29ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. அதிபர்கள், ஆசிரியர்கள் முதல் பெ…

  7. Srilankan Tamil Refugees' Condition in Tamilnadu நன்றி - யூரூப்

    • 1 reply
    • 502 views
  8. அதிகரித்த தொலைபேசிப் பாவனையும் மறைக்கப்பட்ட தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களும் 61 Views இன்று எம் அனைவரின் மனங்களிலும் எமது பாரம்பரிய விளையாட்டுக்கள் நினைவிருக்கின்றனவா என்பது தெரியவில்லை ஆனால், “ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா ” என்ற பாரதியின் பாடல் வரிகள் நிச்சயமாக நினைவில் இருக்கும். காலத்தால் மறைக்கப்பட்ட எமது பாரம்பரிய விளையாட்டுக்கள் இன்று ஒரு தொலைபேசிக்குள் அடங்கி விட்டது. காலை எழுந்ததில் இருந்து இரவு தூக்கத்தை கூட மறந்து தொலைபேசி விளையாட்டுக்களில் மூழ்கிப்போகின்றனர். விடுமுறை தினங்களிலும், மாலை நேரங்களில் தெரு ஓரங்களிலும் வீட்டு முற்றங்களிலும், திண்ணைகளிலும், நண்பர் வீடுகளிலும் பெரியவர்…

  9. தையிட்டி – இலங்கையில் ராணுவம் இறுதியாக விடுவித்த பகுதியில்

  10. இலங்கையின் கொலைகளங்களிற்கு நாங்கள் திரும்பிச் சென்ற அதே காலப்பகுதியில் இரு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன. முதலாவது இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகளில் சர்வதேச பங்களிப்பு எதுவும் காணப்படாது என ஜனாதிபதி அறிவித்தது. யுத்தத்திற்கு பின்னர் இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பப்பட்ட பல வீடியோக்கள் மூலம் யுத்தகுற்றங்கள் இடம்பெற்றது உறுதிசெய்யப்பட்டிருந்தது. இரண்டாவது காணமற்போனவர்கள் என தெரிவிக்கப்படுபவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என அப்பட்டமாக தெரிவிப்பதற்காக பிரதமர் ரணில்விக்கிரமசிங்க இந்து பண்டிகையொன்றை தெரிவுசெய்தது. இரண்டு அறிக்கைகளும் தமிழ் சமூகத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளதுடன் ப…

  11. சந்திரிக்கா மாமி, அவ சரண்டைஞ்ச ஆமி! "முள்ளிவாய்க்கால் தினத்தில் சந்திரிக்கா ஏற்றியிருந்த ஒளியில் சந்திரிக்காவின் வேறு முகமூடிகள் ஏதேனும் கீழே ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றனவா என்பதைக் கூட நாம் இந்தத் தருணத்தில் தேடியாக வேண்டும்" 😂

  12. விடுதலைப்புலிகள் தூர நோக்கோடு பொருண்மிய துறையினால் மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட கிரான் #திலிபன் மருத்துவமனை, ஆயித்தியமலை அரிசி ஆலையும் நெசவு கைத்தறி நிலையமும் தற்போது அநாதையாய் காட்சியளிக்கின்றது. இதில் திலிபன் மருத்துவமுனை எம்மால் ஊடகத்திற்கு வெளிப்படுத்தியதையடுத்து அப்பகுதியில் இரு இடங்களில் மருத்துவ சேவையை மீள வழங்கி வருகின்றார்கள் #மட்டக்களப்பு தமிழ் சமூகத்தின் அர்ப்பணிப்பாளர்கள். இதே போன்று ஆயித்தியமலையில் புதிய தொழில் நிறுவனங்கள், படுவான்கரை பகுதியில் உற்பத்தி நிலையங்கள் பெரியளவில் உருவாக்கப்படாத நிலையில் இப்படியான பழமை வாய்ந்த எமது தமிழர் பொருளாதர மறுமலர்ச்சியின் திணைக்களங்களை நவீன தொழினுட்ப உபகரணங்களையும் உள்வாங்கி இவ் நிலையத்தை திட்டமிடலுடன் செயற்படுத்த…

  13. Sunday, December 6, 2009 நள்ளிரவு நேரம். அடர்ந்த மலைக் காடு. சோவென்று அடைமழை. "அய்யோ அம்மா... வலி தாங்க முடியலையே' -அடிவாரத்தி லுள்ள ஒற்றைக் குடிசையிலுள்ள பிரசவப் பெண்ணின் அலறல். மலையின் மறு ஓரத்தில் டெண்டிற்குள்ளிருந்த "சீருடை மனிதரின்' காதுகளில் விழ, ஓடோடிப் போய் அப்பெண்ணை அள்ளி இரு கைகளால் சுமந்து வந்து தனது ஜிப்ஸியில் கிடத்துகிறார். அடுத்தநொடி ஒற்றை மண் ரோட்டில் நிலவொளி சாட்சியாக பனிக்காற்று மழையை கிழித்தபடி பறந்தது ஜிப்ஸி. ஐந்தாவது நிமிடம் வண்டி மருத்துவமனையை அடைய, மூடப்பட்ட கண்ணாடி கதவுகளுக்கு மறுபுறம் கண்ணைக் கசக்கியபடி வந்த மருத்துவர் கதவுகளைத் திறக்க, பிரசவ பெண்ணை கையில் சுமந்தபடி நிலைமையை விவரிக்கிறார் சீருடை மனிதர். பரபரப்பை புரிந்து கொண்ட மருத்துவர் மள …

  14. வணக்கம் தாய்நாடு... கல்விளான்...சுழிபுரம்

  15. திருகோணமலை கடற்கரையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட, தனது மகன் உட்பட ஐந்து மாணவர்களுக்காக நீதி கோரி போராடிய வைத்தியர் மனோகரன் பற்றிய நினைவு வணக்க நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நேற்று 6 ஆம் திகதி திங்கட்கிழமை பகல் 10 மணிக்கு தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில், நான் உரை நிகழ்த்தியபோது எடுக்கப்பட்ட படங்கள் இவை. ”நீதி கோரலுக்கான சாட்சியங்களை பெறும் வழி முறைகளும், சாட்சியங்களை மையப்படுத்திய நாடாளுமன்ற உரைகளும்“ என்ற தலைப்பில் எனது உரை இடம்பெற்றது. நாடளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் நிகழ்வில் பங்குபற்றினர். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசியல்…

  16. மாதிரிக் கிராம பொறியில் சிக்கிய கேப்பாப்பிலவு மக்கள் JAN 01, 2016 திருச்செல்வன் கேதீஸ்வரன் தனது குடும்பத்துடன் முல்லைத்தீவிலுள்ள கேப்பாப்பிலவு என்கின்ற கிராமத்திற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய வாழ்வை ஆரம்பிப்பதற்காக சென்றபோதிலும் அவரது நம்பிக்கைகள் எல்லாம் சிதைந்துள்ளன. சிறிலங்கா இராணுவத்தினரின் மாதிரிக் கிராமமாக கேப்பாப்பிலவு தெரிவு செய்யப்பட்டு அங்கு மக்கள் குடியேற்றப்பட்டனர். போரின் பின்னர் சிறிலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட மீள்குடியேற்றத்தில் உள்வாங்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான மக்களுள் கேதீஸ்வரனும் ஒருவராவார். இவரது சொந்தக் கிராமம் 1-2 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளதால் அங்கு இவரால் செல்ல முடியவில்லை. விவசாயக் குடும்பம் ஒன்ற…

  17. வடக்கு மாகா­ண­ச­பையில் நயி­னா­தீவு தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம், அர­சியல் அரங்கில், சர்ச்­சை­களை ஏற்படுத்தியிருக்கிறது. நயி­னா­தீவின் பின்­னணி, வடக்கு மாகா­ண­ச­பையின் தீர்­மானம் இந்த இரண்­டையும் சரி­வரத் தெரிந்து கொள்­ளா­ம­லேயே, சிங்­கள, தமிழ் அர­சியல் தலை­வர்கள் சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர். நாக­பூ­சணி அம்மன் ஆல­யத்­தினால் வர­லாற்று ரீதி­யாகப் பிர­பல்யம் பெற்­றி­ருந்த நயி­னா­தீவு, இப்­போது நாக­வி­கா­ரை­யினால், “நாக­தீப” என்று மாறும் நிலையை எட்­டி­யி­ருக்­கி­றது. இலங்­கைக்கு இரண்­டா­வது தடவை வருகை தந்­த­போது நாக­தீ­பவில் புத்தர் ஓய்­வெ­டுத்தார் என்று மகா­வம்சம் போன்ற சிங்­கள, பௌத்த வர­லாற்று நூல்கள் கூறு­கின்­றன. …

  18. வணக்கம் தாய்நாடு..... பேராசிரியர் துரைராஜா அவர்களின் நினைவுடன் வணக்கம் கிளிநொச்சி

  19. தேசத்தின் புயலான- நெருப்பு மனிதர்கள்!! “மற்­ற­வர்­கள் இன்­புற்­றி­ருக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கத் தன்னை இல்­லா­தொ­ழிக்­கத் துணி­வது தெய்­வீ­கத் துற­வ­றம். அந்­தத் தெய்­வீ­கப் பிற­வி­கள்­தான் கரும்­பு­லி­கள்.”- தேசி­யத் தலை­வர் – தமி­ழீழ விடு­த­லைப் போராட்ட வர­லாற்­றின் ஞாப­கப் பக்­கங்­க­ளுள், தமிழ் மக்­கள் மறந்­தி­ருக்க முடி­யாத சாவுக்கு விலங்­கிட்ட மனி­தர்­க­ளின் நினை­வு­களை தந்த மாதம் ஜூலை.பல சம்­ப­வங்­கள் நினை­வாக நீண்டு விரிக்­கின்ற போதும் 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 05 ஆம் திகதி, ஒப்பற்ற திருநாளாய் விளங்கி, தேசப் புயல்­க­ளின் வீர வ…

  20. இறுதிக்காலம்வரை தமிழ் மக்களின் விடுதலை பற்றியே சிந்தித்துச் செயலாற்றிய மாமனிதர் சத்தியமூர்த்தி .! Last updated Feb 26, 2020 வெண்புறா நிறுவனர் மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்கள் நினைவு 7 ஆம் ஆண்டு நனைவு நாள் …! மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியதுடன்,பள்ளிப் பருவம் முதல் இறுதிக்காலம்வரை தமிழ் மக்களின் விடுதலை பற்றியே சிந்தித்துச் செயலாற்றிய தமிழீழ மக்களாலும், தலைமையாலும் ஆழமாக நேசிக்கப்பட்ட ஒரு மாமனிதர். இலங்கைச் சிறையில் அடைக்கபட்டு கை, கால்கள் அடித்து முறிக்கப்பட்ட பின்னரும், பல இளைஞர்களின் உயிர்களைக் காக்கும் மருத்துவப் பணியையும், கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால் பொருத்துதல்…

  21. வணக்கம் தாய்நாடு.... அரசபுரம்.. பூநகரி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.