எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3759 topics in this forum
-
வீரம் விளைந்த வன்னி மண்ணில் வலிகள் சுமந்த அந்த நாட்களை, அந்த ஒவ்வொரு மணித் துளிகளையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. வெள்ளையரிடம் அடிபணிய மறுத்த பண்டாரவன்னியன் காக்கை வன்னியனின் காட்டிக் கொடுப்பினால் வெள்ளையரால் தோற்கடிக்கப்பட்டதுதான் வன்னிராச்சியம் என்கின்றது வரலாறு. தங்களிடம் அடிபணிய மறுத்த தமிழர் சேனையை உலக நாடுகளின் ஆதரவோடும் ஒத்துழைப்போடும் காட்டிக்கொடுக்கும் எட்டப்பர்களின் துணையோடும் வெற்றிகொண்டதாக சிங்களம் மமதையில் துள்ளுகின்றது. இந்த வெற்றியைப் பெறுவதற்காக சிங்களம் அரங்கேற்றிய கொடூரம், மனித இனம் என்றுமே சந்தித்திருக்காதது. அந்த அவலங்களின் கதையினை உங்களிடம் சொல்லவும் என்னிடம் சொற்கள் இல்லை. அந்த நாட்களை நினைவு மீட்கையில் நெஞ்சம் உறைகிறது. தமிழன் குருதி உ…
-
- 0 replies
- 220 views
-
-
முள்ளிவாய்க்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை ‘சமூக சிற்பிகள்‘ அமைப்பினர் [The Social Architects -TSA]* கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர். அவ்வாறு வெளியிடப்பட்டிருக்கின்ற 09 உண்மைக்கதைகளில் ஒரு கதையின் மொழியாக்கம் இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது.[சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 'போர் வலயமற்ற' பகுதியில் தாய் தந்தையரை இழந்த சிறுவர்களைப் பராமரிக்கும் விடுதியைச் சேர்ந்த சில எண்ணிக்கையான சிறார்களை பராமரிக்கும் பணியில் இராசதுரை ஈடுபட்டிருந்தார். அவர் கூறுகிறார், நாங்கள் கிளிநொச்சியை விட்டு இடம்பெயர்த்தப்படுவதற்கு முன்னர் தேவாலய வளாகத்தில் நான் ஆறு பத…
-
- 0 replies
- 48 views
-
-
நான்கு பக்கமும் இராணுவம் முன்னேறி வந்துகொண்டிருந்தான். சிறிய நிலப்பரப்பில் பல்லாயிரக் கணக்காக மக்கள் நிரம் பிவழிந்தார்கள். நடப்பதற்குக் கூட முடியாது தள்ளுப்பட்டு ஒருவர்பின் ஒருவர் சென்றுகொண்டிருந்தோம். முள்ளிவாய்க்கால்போல் வட்டுவாகல் எமக்கு சாதகமாய் அமைந்திருக்கவில்லை. காடும் சேறும் சகதியுமாகவே இருந்தது. ஈரநிலத்தில் சிறுவர்கள் பெரியவர்கள் என படுத்திருந்தார்கள். இராணுவம் முன்னேறிவர எமது பொருட்களையும் முன்னகர்த்திக் கொண்டே சென்று கொண்டிருந்தோம். விடுபட்ட பொருட்கள் எடுப்பதற்கென்று மீண்டும் திரும்பிச் சென்று எடுத்துவருவதும், மீண்டும் போவதுமாக இருந்தோம். இரண்டு கால்களிலும் காயப்பட்டு நடக்கமாட்டாத எம் உறவொருவரை தூக்கிச் சென்றுகொண்டிருந்தோம். ஆனால், எம்மால் அவரைத் தூக்கிச்செல்ல …
-
- 0 replies
- 56 views
-
-
அவன் முகம் எனக்கு நினைவில்லை. அவன் தன்னுடைய முகத்தைக்கூட காட்ட விரும்பவில்லை என்றே நினைக்கிறேன். 2009 மே 18 அதிகாலை 2.45. முள்ளிவாய்க்காலின் இறுதி அத்தியாயங்கள் உன்னத உயிர்த்தியாகங்களின் மத்தியில் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் அந்தக் கணப்பொழுது. எங்கும் பிணக்குவியல் பிணங்களைப் பார்ப்பதற்கு கூட வெளிச்சம் இல்லை. ஆங்காங்கே வீழ்ந்து வெடிக்கும் எறிகணைகளின் கந்தகத்தீயின் வெளிச்சத்தில் பிணங்களை மக்கள் கடந்து கொண்டிருக்கின்றனர். எனது குடும்பமும், இன்னும் மூன்று குடும்பங்களையும் நான் ஓரிடத்தில் வைத்துக்கொண்டிருக்கிறேன். மக்கள் கூட்டமாக எங்களை கடந்து சென்று கொண்டிருக்கின்றனர். புதுக்குடியிருப்பு முல்லை வீதி மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. அடிக்கு மேல் அடி வைத்து நகரும் மக்கள் கூ…
-
- 1 reply
- 77 views
-
-
இறுதி நாட்களில்...2009:மே:12 கப்பல் ரோட்டு எனப்படும் ஜோர்தான் கப்பல் கரையொதுங்கிய இடத்திற்குச் செல்லும் வீதியை அண்மித்தே எமது நிலைகள் அன்று பின்னகர்த்தப்பட்டிருந்தன. இரவுபகல் பாராது சண்டை நடந்தவண்ணமிருந்தது. அன்று மாலைதான் தெரிந்தது காலையில் நாம் இருந்த இடத்தையும் இராணுவம் கைப்பற்றிவிட்டதென்று. பரந்தன் முல்லை பிரதான வீதியில் நந்திக்கடலை அண்மித்த பகுதியை ஒட்டியிருந்த மக்களும் கடுமையான ஷெல்வீச்சின் காரணமாகவும் ரவைகளின் சூடுகள் அதிகமாக இருந்ததாலும் வட்டுவாகல் நோக்கி நகர்ந்து செல்வது ஓய்ந்துகொண்டிருந்தது. நாம் இருந்த இடத்தின் தரையமைப்பு மேட்டுப்பகுதி என்பதனால் எவரும் வெளியே நடமாடக்கூடாது என்று பொறுப்பாளர் சொன்னதால் எங்கும் போகாது பதுங்ககழிக்கு உள்ளேயே முடங்கினோம். சண்டை நட…
-
- 0 replies
- 52 views
-
-
ஆண்டு 2009 இன் இறுதி யுத்த காலத்தில் சிறிலங்காப் படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்துவதை (வீடியோ) ஒளிப்பதிவு செய்த ஊடகவியலாளர்களில் அன்பரசனும் முக்கியமானவர். "சனல்-4" தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப்படத்தில் “எறிகணைத்தாக்குதல் இடம்பெறும் சமயத்தில் நீங்கள் 'வீடியோ' எடுக்கவேண்டாம், படுங்கோ” என்று சொல்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த ஒளிப்பதிவுக் காட்சியை அன்பரசனே எடுத்திருந்தார். அன்பரசனின் அனுபவங்களை இங்கே பதிவுசெய்கின்றேன். அன்றைய நாட்களில் ஒரு வீடியோவை தரவேற்றுவது என்பது மிகவும் கடினமான காரியமாக இருந்தது. உழவு இயந்திரத்தின் மேல் மண் மூட்டைகள் அடுக்கி, அதற்கு கீழே படுத்துக்கொண்டு ஒரு மடிக்கணனியில் தான் எல்லா ஒளிப்பதிவுக் காட்சிகளையும் நான் வெளிநாடுகளுக்கு அனுப…
-
- 0 replies
- 159 views
-
-
போருக்குப் பின்னரான ஈழத்தமிழர் வாழ்வு என்பது, ஒரு தேசத்தின் நீடித்த போர் ஏற்படுத்திய ஆழமான காயங்களையும், அதிலிருந்து மீண்டுவர ஒரு சமூகம் மேற்கொள்ளும் அசாதாரணமான முயற்சிகளையும் ஒருசேரப் பிரதிபலிக்கிறது. 2009 ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டம் முடிவடைந்த பின்னர், வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்ச் சமூகங்கள் பல்வேறு சமூக, பொருளாதார, உளவியல் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. இவை குறித்த ஆழமான புரிதலுக்கு, நம்பத்தகுந்த தரவுகள் மற்றும் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இங்கே முன்வைக்கிறேன். 1. காணாமல்போனோர் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வலியும் நீதிக்கான தேடலும்: போருக்குப் பின்னரான மிக முக்கியமான மற்றும் ஆழமான சமூகக் காயங்களில் ஒன்று, காணாமல்போனோர் பிரச்சினை ஆகும். இலட்சக்கணக…
-
- 0 replies
- 105 views
- 1 follower
-
-
எதிர்த்துப் போராடினாலே வாழ்வு எனகளமுனைக்கு வந்த சிவம் அண்ணர்! Vhg ஆகஸ்ட் 13, 2025 (-பசீர் காக்கா -) "ஒரு செய்தி நூறு வீதம் உண்மையானது என நீங்கள் நம்பும் வரையில் அதனை ஊடகங்களுக்குச் செய்தியாகவோ கிசுகிசுப்பாகவோ தேவையற்ற சந்தேகங்களை உருவாக்கும் வகையிலோ வெளியிடக் கூடாது." இது தமிழ் ஊடகத்துறையில் ஜாம்பவானாகத் திகழ்ந்த எனது வழிகாட்டி கோபு ஐயா(எஸ் .எம் கோபாலரெத்தினம்) எனக்கு கற்பித்த பால பாடம். இதனைச் சொன்னால் பரபரப்புச் செய்தி அரசியல்தான் வடக்கில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரையே உருவாக்கி விட்டது.இதனையே நாமும் செய்வதில் என்ன தவறு? என இன்றைய youtube காரர்கள் கேட்கக்கூடும். இன்று வரை சிங்களவர்களுக்கு நிகராக இல்லாவிட்டாலும் வட கிழக்கில் தமிழர்கள் தமது உழைப்புக்கு கேற்றவகையில் பெ…
-
- 0 replies
- 1k views
-
-
வீரமுனை படுகொலையும் மறுக்கப்பட்ட நீதியும்.! கிருஷ்ணகுமார் ஆகஸ்ட் 13, 2025 வீரமுனை என்பது கிழக்கு மாகாணத்தில் மிகவும் பழமையானதும் பாரம்பரியமானதுமான பிரதேசமாகும். சோழ இளவரசிகளில் ஒருவரான சீர்பாத தேவியினால் 08ஆம் நூற்றாண்டில் அபிவிருத்திசெய்யப்பட்ட மிகவும் பாரம்பரியத்தினைக்கொண்ட கிராமமாகும். நூறு வீதிம் இந்துக்களைக்கொண்ட இக்கிராமத்தின் ஆலயமானது வரலாற்றுசிறப்பு மிக்கது மட்டுமல்ல கண்டியை தளமாக கொண்டு ஆட்சிசெய்த வாலசிங்கன் மன்னனின் மகன் இராஜசிங்கனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பொன் விளையும் விவசாய காணி பட்டயம் செய்யப்பட்டிருந்தது. இதன்காரணமாக சம்மாந்துறையினை சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல சிங்கள பேரினவாதிகளுக்கும் இந்த ஆலயத்தின் மீது தொடர்ச்சியான பார்வையிருந்தேவந்தது. நானும் வீ…
-
-
- 1 reply
- 509 views
-
-
பாகம் ஒன்று சஷ்டியை நோக்க சரவணபவனார்.. சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்.. கந்த சஷ்டி கவசத்தை இருந்த சூரிய மின்கலத்தில் ஓடவிட்டபடி ராணி அம்மா, மகன் நேசனை தட்டி எழுப்பினாள். இன்று தான் அவன் அந்த வீட்டில் தூங்கும் கடைசி நாள் என்று கூட தெரியாமல். "தம்பி இண்டைக்கு பாரணை.. அவர்கள் வருவார்கள். நீ நேரத்துக்கு எழும்பி சாப்பிட்டுவிட்டு ஆயத்தமாக இரு". ராணி அம்மாவின் குரல் நேசனுக்கு விட்டு விட்டு தான் கேட்டது. இருந்தாலும் அவர்கள் வருவார்கள் என்பது அவனை முழிக்க வைத்துவிட்டது. யார் அவர்கள்..?? காலத்தின் தேவை கருதியும் தாய் மண்ணை காக்க வேண்டிய கட்டாயத்தின் நிமித்தமும், நாட்டுக்காக வீட்டுக்கு ஒருவரை இணைத்து கொண்டிருந்த காலம் அது. சென்ற வாரம் அவர்கள் வந்திருந்த போ…
-
-
- 99 replies
- 33.5k views
-
-
இலங்கையில் வதைமுகாம்கள், சித்திரவதைகள் நீண்டகால வரலாற்றைக் கொண்டது June 26, 2025 சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), என்பது உலகெங்கணும் உடல் உள முறையில் பல்வேறு சித்திரவதைகளுக்கு (துன்புறுத்தலுக்கு) ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையினால் ஆனி 26ம் (26 June) நாளன்று விழிப்புணர்வூட்டும் ஒரு சிறப்பு நாளாகும்.மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதன் மூலமே உலகில் விடுதலை, அறம் நீதி, மற்றும் அமைதி ஏற்பட வாய்ப்புண்டு என்பதை இத்தீர்மானம் எடுத்துக்காட்டுகின்றது. இன்றைய நாளில் சித்திரவதையினால் பாதிப்பட்டவரகளுக்கு அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து உளச்சமூகப் பணியாற்றிவரும்…
-
- 1 reply
- 233 views
-
-
- asian rebels navy
- eelam navy
- eelam tamil navy
- eelam tigers
-
Tagged with:
- asian rebels navy
- eelam navy
- eelam tamil navy
- eelam tigers
- ltte miraj class boat
- ltte navy
- ltte sea tigers
- maritime armed wing of ltte
- naval wing of ltte
- naval wing of tamil tigers
- rebel navy
- sea tigers
- sri lankan navy
- tamil navy
- tamil new tigers
- tamil rebels navy
- tamil tigers
- tamil tigers navy
- ஈழப் புலிகள்
- கடற்கலன்
- கடற்புலி
- கடற்புலிகள்
- தமிழரின் கடற்கலங்கள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- தமிழீழக் கடற்கலங்கள்
- தல்ராஜ்
- புலிகள்
- மிராஜ்
- விடுதலைப் புலிகள்
- விடுதலைப்புலிகள்
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை (warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வாசகர்களே! ஏதேனும் பிழை இருந்தால் உடனே சுட்டிக்காட்ட தவற வேண்டாம்.. கடற்புலிகளோ இல்லை அவர்களை அறிந்தவர்களோ யாரேனும் இதைப் வாசிக்க நேர்ந்தால் இதில் உள்ள தவறுகளை உடனே சுட்டிக்காட்டுங்கள்; திருத்திக்கொள்ள அணியமாய் உள்ளேன். எமது வரலாற்றை எழுத உதவி செய்யுங்கள்.../\... முக்கிய சொற்கள்:- கதுவீ = RADAR கலவர் = crew அணியம் - bow உருமறைப்பு = camouflage வெளியிணைப்பு மின்னோடி= out board motor அ = அ…
-
-
- 9 replies
- 4.5k views
- 1 follower
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழர்களால் உருவோட்டப்பட்ட Wave Rider வகுப்புக் கலங்கள் பற்றியே. இவ்வாணத்தில், இவை பற்றி நானறிந்த செய்திகளை எழுதி வைத்துள்ளேன். '2005 ஆண்டு முல்லைத் தீவுக் கடலில் ஓடும் கடற்புலிகளின் படகுகள். இப்படத்தில் 2 விதமான மொத்தம் 4 படகுகள் காணப்படுகின்றன.' இவைதான் கடற்புலிகளின் முதன்மை கடற்சண்டைக் கலங்கள் ஆகும். இவை உலகத்தால் சுடுகலப் படகு (GB) என்ன…
-
- 7 replies
- 3.2k views
- 1 follower
-
-
01.11.1990 மணலாறு முந்திரிகைக்குளத்தில் அமைக்கப்பட்ட சிறிலங்காப்படைமுகாம் தாக்கியழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான ஒரு பார்வை…. தமிழீழத்தின்.இதயபூமியான மணலாற்றில் தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்பிலிருந்து தமிழர்களை விரட்டிவிட்டு அதாவது வடக்குகிழக்கு மாகாணங்களைப் பிரிப்பதற்காக தமிழர்களின் தொடர் நிலப்பரப்பினைச் சிதைப்பதிற்கான நோக்கத்திற்காகவும் சிங்களபௌத்த பேரினவாதத்தின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை அதாவது சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்காகவும் அச்சிங்கள மக்களைப் பாதுகாப்பதற்காகவும் அமைக்கப்பட்ட பல மினிமுகாம்களில் மணலாறு முந்திரிகைக்குள மினிமுகாமும் ஒன்றாகும்.இம்மினிமுகாமில் நூற்றிற்க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இருந்தனர்.1990 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இப்பகுதியில் பெருமளவான ச…
-
- 0 replies
- 210 views
-
-
முஸ்லிம்களின்/ இஸ்லாமியத் தமிழர்களின்/ சோனகர்களின் பக்க நியாயப்பாடுகளை தமிழர்களாகிய நாம் அறிந்து கொள்ள கீழுள்ள நூலினை வாசித்து அறிதல் இன்றியமையாததொன்றாகும். அவர் தம் நியாயப்பாடுகளை அறிய நான் தேடி திரிந்த பொழுதில் நான் கண்டெடுத்த முக்கிய இனவாதமற்ற வரலாற்று நூல் இதுவாகும். நூலின் பெயர்: ஈழத்தின் இன்னுமொரு மூலை (1992,சம்மாந்துறை வெளியீட்டுப் பணியக வெளியீடு) https://noolaham.net/project/121/12037/12037.pdf இந்நூலில் 1954 இல் நடந்த தமிழர்களின் வீரமுனை ஊர் எரிப்புத் தொடக்கம் 1991 வரை நடைபெற்ற கெட்ட நிகழ்வுகள் தொடர்பான அவர்தம் பக்க நியாயப்பாடுகள் எழுதப்பட்டுள்ளன. வீரமுனையை எரித்தமைக்கு நூலாசிரியர் மன்னிப்புக் கோரவில்லையாகினும் அங்கிருந்த முஸ்லிம்கள் அக்காலத்திலேயே அழுது மன்னிப்ப…
-
- 0 replies
- 219 views
-
-
- eelam aircrafts
- eelam airforce
- eelam cessna
- ltte aircrafts
-
Tagged with:
- eelam aircrafts
- eelam airforce
- eelam cessna
- ltte aircrafts
- ltte cessna
- ltte cessna 152
- ltte cessna 172
- ltte choppers
- ltte gyroplane
- ltte helicopters
- ltte improvised bombers
- ltte light aircrafts
- ltte planes
- ltte zlin143
- rebel airforce
- rebel airunit
- rebel airwing
- srilankan airunit
- tami lairforce
- tamil airforce
- tamil eelam airforce
- tamil sky army
- tamil tiger airwing
- tamileelam airforce
- ஈழ வான்படை
- ஈழ விமானப்படை
- குண்டுதாரி
- சிறிலங்கா வான்படை
- சிறீலங்கா வானேபடை
- சீறிலங்கா
- செசுனா
- தமிழரின் வானுர்திகள்
- தமிழரின் வான்படை
- தமிழரின் விமானங்கள்
- தமிழர்
- தமிழர் வானூர்திகள்
- தமிழீழ செசுனா
- தமிழீழ வான்படை
- தமிழீழ விமானப்படை
- தமிழ் வான்படை
- புலிகளின் வான்படை
- புலிகளின் வான்பிரிவு
- புலிகளின் விமானங்கள்
- புலிகளின் விமானப்படை
- வானூர்திகள்
- வான்படை
- வான்பிரிவு
- வான்புலி ஆய்வுக் கட்டுரை
- வான்புலிகள்
- வான்புலிகள் செசுனா - 152
- வான்புலிகள் செசுனா - 172
- வான்புலிகள் தாக்குதல்
- விமானங்கள்
- விமானம்
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ வான்படையான வான்புலிகளிடம் இருந்த வானூர்திகளைப் பற்றியே. இங்கு நான் எழுதும் அனைத்தும் இறுதிப்போரில் சிங்களப்படைகள் வெளியிட்ட படங்கள், மற்றும் ஓர் நெடும்தொடராக வெளிவந்த கட்டுரை ஆகியவற்றில் இருந்து கிடைக்கப்பெற்ற செய்திகளை அடிப்படையாகக் கொண்டே எழுதுகிறேன். இற்றைய தேதிவரை உலகில் இருந்த எ இருந்துள்ள அனைத்து அமைப்புகளிலும் எ நடைமுறையரசுகளிலும் தமிழீழ நிழலரசை நடாத்திய த.வி.பு. மட்…
-
-
- 12 replies
- 6.9k views
- 1 follower
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! இதற்குள் புலிகளால் உள்நாட்டில் உற்பத்திசெய்யப்பட்ட பல்வேறு வகையான கண்ணிவெடிகள் தொடர்பான தகவல்கள் உள்ளன. முதலில் கடற்கண்ணிவெடிகள் பற்றிப் பார்ப்போம். கடற் கண்ணிவெடி (naval mine) 1)நங்கூரமிடப்பட்ட தொடுகை கடற் கண்ணிவெடி ( moored contact sea mine) அ. பெயர்: கிட்டு 93 மொத்த எடை: 65.5kg ஆ. கீழ்வரும் கண்ணிவெடிகளில் ஒன்றனது பெயர் கொலின் கடற் கண்ணிவெடி என்பதாகும். அது கப்டன் கொலின்ஸ் அவர்களின் நினைவாக விடுதலைப…
-
- 1 reply
- 258 views
-
-
செம்மணி : புதைந்து கிடக்கும் தமிழனின் இரத்தக்கறை காணாமல் போனவர்களும் செம்மணியும் Jun 26, 2025 - 12:57 0 355 "அடேய் சோமரத்ன மண்வெட்டியை எடுத்து வாடா " சொன்னது இராணுவ கப்டன் லலித் ஹேவா சோமரத்ன மண்வெட்டியோடு போன போது அங்கே ஒரு பெண் நிர்வாணமாக நிற்கிறாள் . பக்கத்தில் அவள் கணவன். அந்தப் பெண்ணை கப்டன் லலித் ஹேவா ஏற்கனவே ரேப் பண்ணியிருந்தான். சோமரத்ன கெண்டுபோன மண்வெட்டியை வாங்கிய லலித் ஹேவா அந்த மனைவியையும் கணவனையும் மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்கிறான். பின் அந்த உடல்களை மண்தோண்டி புதைக்க சோமரத்ன உதவுகிறான். புதைக்கப்பட்ட இடம் செம்மணி! இதை சொன்னது வேறு யாருமல்ல சோமரத்ன ! சோமரத்ன கிருசாந்தி கொலை வழக்கின் பிரதான குற்றவாளி . 1995-96 இராணுவம் யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பறுக…
-
- 1 reply
- 262 views
-
-
https://www.facebook.com/share/r/1Ao1i3ENjC/?mibextid=wwXIfr தலைவரின் தாய்பற்றி வாலியின் கவிதை.
-
- 0 replies
- 167 views
- 1 follower
-
-
-
இந்திய புலனாய்வு முகவரகத்திற்கு உதவியும் திறந்த வேண்டுகோளும் வணக்கம். ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கும் இந்தியர்களாகிய உங்களுக்கும் இடையில் இருக்கும் பிணைப்பு வரலாற்றுக்கும் முந்தியது. நீங்களும் நாமும் ஒரு பொது மரபுரிமைக்கு சொந்தமானவர்கள். ஆங்கிலத்தில் long lost cousins என்பார்களே…அதைப்போல் இந்தியர்களின் long lost cousins இந்த உலகில் யார் எனப்பார்த்தால் அது நாமும், சிங்கப்பூர், மலேசியா, ரியூனியன், பர்மா, கயான, டிரினிடாட், தென்னாபிரிக்கா மற்றும் மேற்குலகு எங்கும் பரந்து வாழும் தமிழ் வம்சாவழியினருமே ஆகும். நம்மை இணைக்கும் மிக பெரும் பொதுக்காரணி இந்து சமயம் ஆகும்; அதில் எங்களில் பெரும்பான்மையானோர் சைவ உட் பிரிவைச் சார்ந்தோர் எனிலும் எம்மை இந்துக்கள் என்றே அடையாளம் செய்வதோடு வைஸ…
-
-
- 8 replies
- 736 views
-
-
-
-
- 3 replies
- 636 views
-
-
தமிழீழத்தை முதலில் கோரியவரும் தமிழீழம் என்ற சொல் பிறந்த கதையும் இக்கட்டுரையானது மொத்தம் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு எழுதப்படுகிறது. இதன் முதல் பாகத்தில் யார் தனிநாட்டை முதலில் கோரினார்கள் என்றும் இரண்டாவது பாகத்தில் யார் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பின்னர் அக்கொள்கையை தூக்கிப் பிடித்தார்கள் என்றும் இறுதிப் பாகத்தில் தமிழீழம் என்ற சொல் எவ்வாறு பிறந்தது என்றும் காணலாம். இதை எழுதுவதற்கான முதற் காரணம், எமது மக்கள் நடுவணில் மேற்கொள்ளப்படும் தவறுத்தகவல் பரப்புரையின் தாக்கத்தை இயன்றளவு தணித்தலே ஆகும்.
-
-
- 4 replies
- 798 views
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! "புதிய வரலாறு எழுதும் புலிவீரர் புகழை உலகெங்கும் கூவு - அவர் உதிரம் சொரிகின்ற உணர்வைக் கவியாக்கி உரத்த குரலெடுத்து பாடு, பாடு, பாடு!" --> நெய்தல் இறுவட்டிலிருந்து பண்டைய காலத்தில் தமிழ் மக்களின் வாழ்வு எவ்வாறு இலக்கியங்களில் செய்யுள் வடிவத்தில் வடிக்கப்பட்டிருந்ததோ அதே போன்று தற்காலத்திய ஈழத்தமிழர…
-
-
- 233 replies
- 20.5k views
- 1 follower
-
-
எனக்கு ஏற்பட்டுள்ள நேர வசதி இன்மையால் எழுத்தாவணங்கள் படைப்பதை இந்தாண்டு முடிவுடன் நிறுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளேன். ஆயினும் ஏற்கனவே படைத்தவற்றை தொடர்ந்து இற்றைப்படுத்த மட்டும் செய்வேன். எனினும் படிமங்களை தொடர்ந்தும் ஆவணப்படுத்துவேன். இதற்கு முதல் - நான் செய்ய வேண்டும் என்று எனது மனதில் எண்ணி வைத்திருந்த அத்தனை ஆவணத் தலைப்புகளையும் அதனை செய்ய வேண்டிய முறை மற்றும் தகவல் திரட்டும் வழி ஆகியவற்றை இங்கே எழுதி வைத்துச் செல்கிறேன். என்பின் அதனை செய்ய எண்ணுவோர் இதனை வாசித்து இதில் வழிகாட்டப்பட்டுள்ளவாறோ அல்லது அதை விட மேம்பட்ட முறையிலோ ஆவணத்தை படையுங்கள். எவர் குத்தினும் அரசியானால் சரியே! இந்த வழிகாட்டல்கள் யாவும் உரையாடல் முறையில் அறிவுறுத்தலாக எழுதப்பட்டுள்ளன. இதனை எடுத்துச் செ…
-
- 2 replies
- 698 views
- 1 follower
-