எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3795 topics in this forum
-
(ஜெரா) இலங்கையின் வடபாகத்தின் தனித்துவங்களுக்குள் முதன்மையானவை எவை எனக் கேட்டால், யாழ்ப்பாண நகரம், ஆரியகுளம் சந்தி, யாழ்ப்பாணக் கோட்டை, நல்லூர் கோவில், வல்லிபுரம், பருத்தித்துறை, மாதகல், கந்தரோடை எனப் பல இடங்களைக் குறிப்பிடலாம். ஆனால், எம்மில் எவருக்கும் இலகுவில் நினைவுக்கு வராத வட பாகத்தின் தனித்துவ அடையாளங்கள்தான், யாழ்ப்பாணத்தைச் சூழக் காணப்படும் தீவுக் கூட்டங்கள். மண்டைதீவு, புங்குடுதீவு, நயினாதீவு, நெடுந்தீவு, காரைநகர் என நீளும் தீவுக்கூட்டங்களுக்குள்தான், வட பாகத்தின் மனித நிலவுகைக்கான தொடக்கம் நிகழ்ந்ததென்பார், பேராசிரியர் பொ. ரகுபதி. அவரின் தொல்லியல் ஆய்வு நூலான “Early Settlement of Jaffna” (யாழ்ப்பாணத்தின் ஆரம்பகாலக் குடியேற்றம்) என்பதில், இந்த விடயம் ஆதாரபூ…
-
- 0 replies
- 538 views
-
-
யாழ்.வல்வையிலிருந்து வேப்ப மரத்தினாலான கப்பல் ஒன்று அமெரிக்காவுக்கு தமிழர்கள் சென்றார்கள், என்றால் நம்பமுடிகிறதா...? கோடிக்கணக்கில் உருவான டைடானிக்கே பாதித் தூரத்தில் மூழ்கிய போது.. ஈழத்தமிழன் உருவாக்கிய பாய் மரமான அன்னபூரணி கப்பல் புயலுக்கும், மழைக்கும் தப்பி ...அமெரிக்கா சென்றது தமிழனின் சாதனை எத்தகையது. அன்னபூரணி அம்மாளின் அமெரிக்கப்பயணம் - 1938 வல்வெட்டித்துறையில் உள்ள மேற்குத்தெரு வாடியில் வைத்து, 1930ஆம் ஆண்டில்> சுந்தரம் மேத்திரியாரினால் உள்ளுர் வேப்ப மரத்தில் தயாரிக்கப்பட்ட “அன்னபூரணி அம்மாள்” என்ற பெயரி லான இரட்டைப்பாய்மரக் கப்பல் 89 அடி நீளமும், 19 அடி அகலமும் கொண்ட ஒரு பாரிய கப்பலாக அந்த நாட்களில் விளங்கியது. அன்னபூரணி என்பது இமய…
-
- 8 replies
- 4.2k views
-
-
யாழ் இடப்பெயர்வு ஒக்ரோபர் 30 – 1995 – 23 வருடங்கள் October 30, 2018 (ஒக்டோபர் 30உடன் யாழ்ப்பாண இடப்பெயர்வு நடந்து 23 வருடங்கள் ஆகின்றன. ஈழத் தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத அந்த இடப்பெயர்வு அவலத்தை பற்றிய இந்தப் பதிவை குளோபல் தமிழ் செய்திகள் மீள் பிரசுரம் செய்யப்படுகிறது) அன்று கந்தசஷ்டி விரதத்தின் கடைசி நாள். விடிந்த போது சாதாரணமாத்தான் விடிந்தது. பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தி வருவதும், அன்றைக்கு சில நாட்கள் முன்பாக அந்த நடவடிக்கையை முறியடிக்க புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியைத் தராமல் போனதும் அப்போதைய பரபரக்கும் செய்திகள். யுத்த முனையில் இராணுவத்தினரின் கைகள் ஓங்கியிருப்பது பலருக்…
-
- 0 replies
- 490 views
-
-
https://m.youtube.com/watch?v=YRSa2XOThTM இரணைமடு இலங்கைத்தீவில் 7வது பெரிய நீர்த்தேக்கமாக இரணைமடு உள்ளது. இரணைமடு என்ற பெயர் அது இயற்கையாக கனகராயன் ஆறு பண்டைக்காலத்தில் இரு குளங்களாக இருந்ததன் அடிப்படையில் வந்தது. மடு என்பது நீர்த்தேக்கம். சிறந்த ஒரு வண்டல் வெளியான இரணைமடு படுகை தொல்லியல் மையமாகவும் உள்ளது. 3000 ஆண்டுகள் தொன்மையான தொல்பொருட்களும் இரணைமடு படுகையில் உள்ளன. ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில் இரணைமடு படுகையில் கனடா- பிரிட்டிஷ் அதிகாரியான சேர்ஹென்றிபாட் 1885ல் அப்போதைய பிரிட்டிஷ் அரச அதிபர் டேக்கிற்கு இரணைமடு நீர்த்தேக்கத்தை அமைக்கும் ஆலோசனையை முன் வைத்தார்.1866ல் பிரிட்டிஸ் நீர்ப்பாசன பொறியிலாளரும் தொல்பொருள் தேடலாளருமான ஹென்றி பாக்கர் இரணைமடு…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஞாபக நடை தந்த சில ஞாபகச் சிதறல்கள் – கணபதி சர்வானந்தா… October 26, 2018 யாழ். சர்வதேசத் திரைப்பட விழா தந்த வித்தியாசமானதொரு அனுபவம். சிறிய சிறிய விடயங்கள்தான் அவை. இருந்தும் வாழ்க்கையை அவை எப்படி அர்த்தப்படுத்துகின்றன. சதா அந்த இடத்தைக் கடந்து செல்லுகிறோம். இருந்தும் அவை பற்றி நாம் வலுவாகச் சிந்திப்பதில்லை. அவை எப்படி சமூகத்தோடு ஒன்றிப் போயிருந்தன என்பது போன்ற விடயங்களில் நாம் அக்கறை கொள்வதுவுமில்லை. ஆனால் அவை ஒரு கல்விசார் விடயமாக முன்னெடுக்கப்படும்போது அவற்றின் பெறுமதிகள் உயர்ந்து கொள்ளுகின்றன. அப்படி யாழ்.மண்ணில் நடைபெற்ற ஒரு நிகழ்வினைப் பற்றிய விபரங்களை இவ்வாரம் உங்களுக்காகத் தருகிறோம். கடந்த ஓக்டோபர் மாதம் யாழ். மண்ணில் முன்னெடுக்கப்பட்ட யா…
-
- 0 replies
- 549 views
-
-
மரணத்தின்போதும் எதிர்ப்பை வெளிப்படுத்திய பூரணலட்சுமி! 28வது ஆண்டு நினைவு "ரகு இல்லையெண்டதால வாறத நிப்பாட்டியிடாதீங்க: எங்கட வீட்டுக்குத்தான் முதல் முதல் வந்தனீங்கள். தொடர்ந்து வராமல் விட்டிடாதீங்க" - வீரச்சாவடைந்த ஒரு மாவீரரின் வீட்டுக்குப் போனபோது அவனது தாயார் பூரணலட்சுமி அழுகையினோ டே ஒரு போராளியிடம் விடுத்த வேண்டுகோள் இது. அந்தப் போராளியிடம் "இந்தாங்க இவன் ரகுவை இயக்கத்துக்கு கூட்டித்துப்போங்க" என்று மகனின் கையைப்பிடித்து ஒப்படைத்தவர் அவர்.குடும்பத்தின் ஒரேயொரு ஆண்மகன் ரகு. அவனுக்கு இரு அக்காமார் இருந்தனர்.இருவருக்கும் திருமணமாகவில்லை. எனினும் தன்மகனைக் குடும்பத்துக்காக உழைக்காமல் இனத்துக்காக அனுப்பி வைக்கிறாரே என்று அந்தப்போராளி வியந்தார். ஓரிரு நாட்களில் …
-
- 0 replies
- 781 views
-
-
ஒல்லாந்தர் காலத்து நாணயம் கண்டெடுப்பு. மூதூர் மத்திய கல்லூரியில், ஒல்லாந்தர் காலத்து VOC நாணயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவன் ஒருவன் பாடசாலை பிரதான வாயிலிற்கு அருகில் குறித்த நாணயத்தை கண்டெடுத்துள்ளான். திருகோணமலை, மூதூர் மத்திய கல்லூரி அமைந்துள்ள இடத்தில், இலங்கையில் ஒல்லாந்தர்களின் முதலாவது கோட்டை அமைக்கப்பட்டிருந்தது என்பதை, இந்நாணயக் கண்டுபிடிப்பும் ஊர்ஜிதப்படுத்துவதாக வரலாற்று ஆய்வாளரும், கல்லூரியின் பிரதி அதிபருமான ஜனாப்.எஸ்.எம்.பிஸ்ரி தெரிவித்துள்ளார். VOC என்பது ஒல்லாந்தர் கால “கிழக்கிந்திய கம்பனி” எனும் பெயரைக் குறிக்கும் சுருக்கக் குறியீடாகும். இந் நாணயம் 1750 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டுள்ளது. மூதூர், மத்திய கல்லூரி தேசிய பாடச…
-
- 0 replies
- 717 views
-
-
"போதைப் பொருள் பாவனையை ஒழிப்போம்" சிறப்புரை, மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை - களுவாஞ்சிகுடி, பிரபாகரன் லிசாகரி
-
- 0 replies
- 388 views
-
-
1987 இந்தியப்படைகளின் பவான் இராணுவ நடவடிக்கையும் மறக்க முடியாத துயரங்களும் -: October 11, 2018 குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்… இலங்கை அரசின் இன ஒடுக்குமுறைக்கு எதிராக நடந்த ஈழத்து விடுதலைப் போராட்டத்திற்கான தீர்வு முயற்சிகளுக்கு உதவுகிறோம் என்று முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் இந்திய தன்னலமாக செயற்பட்டது என்பதற்கும் இனப்பிரச்சினைக்கு உகந்த முறையில் தீர்வு காணத் தவறியது என்பதற்கும் 1987இல் நடைபெற்ற பவான் இராணுவ நடவடிக்கை மிகச் சிறந்த உதாரணமாக நினைவுகூறத்தக்கது. இந்திய அரசு தன் நலன்களுக்கு ஏற்பவும் ஈழம் மற்றும் தமிழக மக்களின் நலன்களுக்கு மாறாகவும் இலங்கை அரசுக்கு சாதகமாகவும் காய்களை நகர்த்தி வருவதுடன் வடக்கில் ஆதிக்கம் கொள்வதை அன்…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 1 reply
- 798 views
-
-
இற்றைக்கு 33 வருடங்களுக்கு முன்பு 1985 இன் இறுதிக் காலாண்டில் ஒரு நாள், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு அண்மையாகப் பரமேஸ்வரா சந்தியில் அமைந்திருந்த முடி திருத்தும் கடையில் எனது தலை மயிரின் வழமையான வடிவத்தை மாற்றியமைக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. நீண்ட தூரம் ஒரு முக்கிய வேலைக்காக பேரூந்தில் போகவேண்டி இயக்கத்தால் பணிக்கப்பட்டிருந்தேன். இக்காலத்தில் நான் ஹுசைன் என்ற பெயரில் ஒரு தேசிய அடையாள அட்டை வைத்திருந்தேன். பஷீர் என்ற பெயரில் உள்ள அடையாள அட்டை பாவிக்காமையால் கிடைக்கும் பாதுகாப்பு முக அடையாளயாத்தால் பறி போய்விடக் கூடாது என்ற அக்கறையில் எனது முடி திருத்த வேலை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்பிரயாணத்தின் போது என்னை எவரும் அடையாளம் கண்டுகொள்ளாதிருக்கச் செய்யப்பட்…
-
- 0 replies
- 786 views
-
-
அப்பா இருக்கிறதாலதானே அம்மா இப்பவும் பொட்டு வைக்கிறார் அவர் வருவார்….. October 7, 2018 அம்மா இப்பவும் பொட்டு வைக்கிறதால அப்பா இருக்கிறார் காணாமல் ஆக்கப்பட்டவரின் மகள் கனியிசை– மு.தமிழ்ச்செல்வன் அப்பா எப்ப வருவார்?, அவர் வருவரா? ஏன் என்ர அப்பாவை இன்னும் விடவில்லை? அப்பா இருக்கிறார்தானே? அப்பா இருக்கிறதாலதானே அம்மா இப்பவும் பொட்டு வைக்கிறா? எனக் கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றால் கனியிசை. 2006 ஆம் ஆண்டு பிறந்த கனியிசை தற்போது ஏழாம் தரத்தில் கல்வி கற்கின்றாள். இவளது தந்தையும் காணாமல் ஆக்கப்பட்டோர்கள் பட்டியலில். 2009.05.16 அன்று உறவினர்களுடன் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் ஊடாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இலட்சக்கணக்கான பொத…
-
- 0 replies
- 745 views
-
-
மீண்டும் புத்துயிர் பெற நினைக்கும் முன்னாள் போராளிகளின் சோக கதை !
-
- 1 reply
- 796 views
-
-
வளங்களுக்காய் ஏங்கும் விநாயகபுரம் பாடசாலை|
-
- 8 replies
- 1.1k views
-
-
என் இனமே என் சனமே... களத்தில் போராடியவர்கள் வறுமையின் பிடிக்குள் வசித்து வரும் நாச்சிக்குடா!! கிளஸ்டர் குண்டு தாக்குதலில் கால்களை இழந்த முன்னாள் பொறுப்பாளர்!! 1991ம் ஆண்டு பலாலி சண்டையில் முள்ளந்தண்டில் காயப்பட்ட முன்னாள் பொறுப்பாளர், 2009 இறுதி யுத்தத்தின்போது கிளஸ்டர் குண்டு தாக்குதலில் இரண்டு கால்களையும் இழந்தார். சுயமாக நடமாட முடியாமல் வறுமையின் விளிம்பில் தவித்துக்கொண்டிருக்கும் இந்த உறவின் அவலங்களைப் பதிவிட்டுள்ளது ஐ.பீ.சி. தமிழின் என் இனமே என் சனமே நிகழ்ச்சி. இந்த உறவை தொடர்புகொள்வதற்கு அல்லது உதவுவதற்கு விரும்பும் புலம்பெயர் உறவுகள் தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி இல: 0094212030600
-
- 1 reply
- 803 views
-
-
வணக்கம் தாய்நாடு.... வெடுக்குநாறி மலை ஒலுமடு அற்புதங்கள்
-
- 0 replies
- 733 views
-
-
முல்லைத்தீவு நகரில் காணாமலாக்கப்பட்ட உறவுகளால் நடத்தப்பட்டுவரும் போராட்டத்தின் மத்தியில் வெள்ளைப் பையை தனது மடியில் வைத்தவாறு பிளாஸ்ரிக் கதிரையில் 70 வயதான யோகரதி உட்கார்ந்திருக்கிறார். நெற்றி முழுவதும் விபூதி. வெற்றிலை சாப்பிட்டு நன்கு சிவந்த வாய், கூடவே கையில் வெற்றிலை நிரப்பிய பையும். ஆனால், அவருடைய கண்கள் கண்ணீர் கறையேறி கருப்பு வளையங்களைக் கொண்டிருக்கின்றன. கண்பார்வையும் அவ்வளவாகத் தெரியவில்லை. அருகில் சென்றுதான் பேசவேண்டும், காதும் அவ்வளவாகக் கேட்காது. அவரது வெள்ளைப் பையில் காணாமலாக்கப்பட்ட பேரனுடைய படமும் ஆவணங்களும் நிறைந்திருக்கின்றன, முறைப்பாடுகள், அழைப்புக் கடிதங்கள், அனுப்பிய கடிதங்கள் என்று பல்வேறுபட்ட கடிதங்கள் நிறைந்திருக்கின்றன. போராட்டம் நடத்தப்படும் …
-
- 2 replies
- 872 views
-
-
வணக்கம் தாய்நாடு.... ஆதரவற்ற முதியோர்களுடன் ஓர் நாள் | யோகர் சுவாமிகள் முதியோர் இல்லம்
-
- 2 replies
- 1.5k views
-
-
குளோரின் என்றவுடன் அது தண்ணீரை சுத்திகரிக்கும் பொருள் என்றுதான் எம்மில் அதிகம் பேர் நினைக்கின்றனர். அது மக்களுக்கும் சூழலுக்கும் நன்மை பயக்கும் உற்பத்தி என்றுதான் நினைக்கிறோம் ஆனால் உண்மை அது அல்ல உயர் செரிவு நிலையில் அதுவோர் கொடூரமான இரசாயனமாகும். முதலாம் உலகப் போரின் போது போர்க்களத்தில் குளோரின் ஒரு நச்சு வளிமமாக ஐரோப்பாவில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது இன்றைய செய்திகளில் இரசாயன தாக்குதல் என்று குறிப்பிடப்படும் அனேக தாக்குதல்களில் குளோரின் வாயு நிலையிலோ அல்லது திரவ நிலையிலோ பயன்படுத்தப்படுகின்றது. இரசாயன ஆயுதங்களின் பிரதான மூலப்பொருள் செரிவூட்டப்பட்ட திரவக் குளோரினாகும். வழமையாய் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீரை சுத்திகரிக்கவென 10ஆயிரம் லிட்டருக்கு ஒரு வ…
-
- 1 reply
- 703 views
-
-
குழந்தைகயைக் கால்களால் மிதித்தும் கழுத்தைத் திருகியும் கொன்றனர். அவர்கள் பேசமுடியாத ஊமையாக இருந்த நடக்கமுடியாது முடமாக இருந்த அந்த வலது குறைந்த 4 பிள்ளைகளையும் விட்டுவைக்கவில்லை. அவர்களை முந்திரிகை மரத்தில் போட்டு துண்டு துண்டாக வெட்டிக் கொன்றனர். 25வயதுடைய ஜீவமலர் என்ற பெண்ணின் கையில் இருந்த மூன்று மாத குழந்தை பிரியாவை பறித்தெடுத்து வெட்டி வீசிய படையினர் அப்பெண்ணை இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த பின் வெட்டி கொன்றனர். இது மட்டக்களப்பில் நடந்த மிகப்பெரிய படுகொலையின் சாட்சியாக இருந்தவரின் வாக்கு மூலம். அன்று உன்மையில் நடந்தது என்ன இந்த படுகொலை எங்கு நடந்தது போன்ற உண்மைகளை ஆராய்கிறது இந்த கட்டுரை. மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் 1990ம் ஆண்டு ச…
-
- 1 reply
- 1.2k views
-
-
மதத்தை வழிபட தடுப்பது முள்ளிவாய்க்கால் அவலத்தை தாண்டிய பெரிய அவலமே
-
- 0 replies
- 377 views
-
-
வணக்கம் தாய்நாடு.... யாழில் பொன் விளையும் பூமி, சிறுப்பிட்டி
-
- 1 reply
- 1k views
-
-
செம்மணிப் படுகொலைகளும், புதைகுழிகளும், கிரிசாந்தி குமாரசாமியின் நினைவுகளும்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் இனப்படுகொலை செய்யப்படவில்லை. அதற்கு முன்பாகவே பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் ஈழத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அப்படியான ஒரு நிகழ்வே செம்மணிப்படுகொலை. இன்றைய நாள் செம்மணிப்புதைகுழி அம்பலமான நாள். செம்மணிப் படுகொலைப் புதைகுழி எவரலாறும் மறக்க முடியாத இனப்படுகொலைப் புதைகுழி. 1999ஆம் ஆண்டு செப்டம்பர் ஏழாம் திகதியே, இலங்கை அரச படைகளின் கொடுஞ்செயலான செம்மணிப் புதைகுழியை அம்பலமாக்கும் கிளர்ச்சிக்குரிய நிகழ்வொ…
-
- 0 replies
- 817 views
-
-
அம்பாறை திராய்க்கேணி தமிழின படுகொலை-06.08.1990
-
- 0 replies
- 357 views
-
-
அடுத்தது சில நாள்களுக்கு முன்னர், யூட்யூபில் முள்ளிவாய்க்கால் போர் நாள்களில் அங்கே பணிபுரிந்த மருத்துவர் டி.வரதராஜாவுடைய செவ்வியைப் பார்த்தேன். அது போர் மும்முரமாக நடந்த இறுதி நாள்களில், 2009 மே 15 அன்று எடுக்கப்பட்டது. போர் முடிவுக்கு வருவதற்கு மூன்றே நாள்கள் இருந்தன. முள்ளிவாய்க்காலில் அவர் கொடுத்த கடைசி நேர்காணல். அதிலே ஒரு கேள்வி. “உங்களுக்குச் சாவுக்குப் பயமில்லையா?” அவர் பதில் சொல்கிறார், “சாவுக்குப் பயமில்லாமல் இருக்குமா? நேற்று இரவு நான் வழக்கம்போல பதுங்குக் குழிக்குள் இரவைக் கழித்தேன். சாவு எந்த நேரமும் வரலாம். அடுத்த 10 நிமிடத்தில் ஒரு குண்டு விழுந்து நான் இறக்கலாம். இன்று இரவை நான் காண்பேனோ தெரியாது.” இந்தச் செவ்வியைக் கொடுத…
-
- 0 replies
- 837 views
-