எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
மே 17. மறக்கமுடியாத இன்றைய நாள். 2009 ஆம் ஆண்டின் மே 15ஆம் திகதி நான் முற்றாக தனித்துப் போனேன். சுதந்திரபுரத்தில் மயிரிழையில் உயிர்தப்பிய என்னை தம்முடன் அரவணைத்து முள்ளிவாய்க்கால் வரை அழைத்து வந்த குடும்பம் ஒன்று இனி உங்கள் வழியை பார்த்துக்கொள்ளுங்கள் என உணர்த்திப் பிரிந்தனர். நான் ஓரளவுக்கு பிரபலமானவள். ஊடகங்களில் அறியப்பட்டவள் என்பதால் என்னால் தமக்கு ஆபத்து ஏற்படலாம் என அவர்கள் எண்ணியிருக்கலாம் என இப்போது உணர்கிறேன். அது தவறுமில்லை. அன்று அவர்கள் என்னிடம் காட்டிய அன்பிற்கு என்றும் தலைவணங்குகின்றேன். பதினைந்தாம் திகதி இரவு முள்ளிவாய்க்காலில் ஆயுத சேமிப்பு கிடங்கு ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகி வெடித்துக்கொண்டிருந்தது. இரவு முழுவதும் போராளிக் குடும்ப…
-
- 6 replies
- 723 views
-
-
என்ர ஒரு கை எங்கயம்மா ? ஆயிசா வீட்டு படலையை தாண்டுகையில், “காயப்பட்ட வேறயும் யாரும் பிள்ளையள் இங்கால இருக்கினமோ” என்றேன். “ஓம். இந்த சந்தியால திரும்பினவுடன் முதலாவதா வாற மண் வீட்டில ஒரு பிள்ளை இருக்கிறா. கஸ்ரப்பட்ட பிள்ளை..“ அவாவும் பாவம்..” என்றாள் ஆயிசா. ஆயிசா சொன்ன மண்வீட்டின் முற்றத்தில் சிறுமிகள் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட 80 வயதைத் தாண்டிய அம்மா ஒருவர் எட்டிப்பார்க்கிறார். அவரிடம் தான் போகிறேன் என்பதையறிந்து, என்னிடம் வருகிறார். அறிமுகம் பெறுகிறார். “இண்டையோட 7 வயசு முடியுது. நாளைக்கு 8 வயசு. ஆள் பள்ளிக்கூடத்தால வந்ததில இருந்து ஒரே கோவம். வகுப்பு பிள்ளையளுக்கு நாளைக்கு குடுக்க கண்டோசுப் பெட்டி வேணும் எண்டாள். நானும் ஒரு பெட்டி வாங்…
-
- 0 replies
- 416 views
-
-
அனைவரும் பகிருங்கள்..உலகம் அறியட்டும்.. இப்படியும் வீர குழந்தைகள் உள்ளனர்..
-
- 2 replies
- 452 views
-
-
போரின் வலியை, அது விட்டுச்சென்ற மானுட பேரவலத்தை இனி வரும் நாட்களின் நினைவேந்துவோம். எனவே இந்த நாட்கள் கனதியானவையாக, தியாகக் கொந்தளிப்புள்ளவையாக இருக்கும். பொழுதுகள் வலிக்கும். “இண்டைக்குத்தான் அவர் செத்தார்… “ “இண்டைக்குத்தான் நான் காயப்பட்டனான்…” “இண்டைக்குத்தான் ஆமியிட்ட சரணடைஞ்ச நாங்கள்.. .” “இண்டைக்குத்தான் என்ர பிள்ளைய ஆமியிட்ட குடுத்தனான்…” என நீளும் நினைவுப் பேச்சுக்களில் மாத்தளன் – புதுமாத்தளன், வலைஞன்மடம், முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் ஆகிய இடங்களும் கட்டாயமாக இருக்கும். ஆனால் இந்நினைவுகள் நிலைத்துநிற்கக்கூடியவையல்ல. காலவோட்டத்தில், நினைவுமங்கும். காட்சிகள் மாறும். ஆட்சிகள் மாறமாற முள்ளிவாய்க்கால் வருடத்துக்கு ஒரு முறை மட்டும் தூ…
-
- 2 replies
- 611 views
-
-
மட்டக்களப்பில் கண்ணகி வழிபாட்டு முறைகள் - மூனாக்கானா கடல்சூழ் இலங்கைக் கயவாகு மன்னனால் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட கண்ணகி வழிபாடானது இலங்கையின் கிழக்குக் கரையோரக் கிராமங்களில் தான் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கண்ணகி கோயில்கள் உண்டு. இவற்றில் ஆரையம்பதி கிராமமும் ஒன்றாகும். கண்ணகி பற்றிய பழைய காவியங்கள் தோத்திரப் பாடல்களிலும், குயில் வசந்தன் பாடல்களிலும் ஆரைப்பற்றை என்ற பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் மண்முனை என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இங்கு கண்ணகி கோயிலில்லை. இதற்குக் காரணம் பல நூற்றாண்டுகளுக்கு முன் உலக நாச்சியாரின் இராச தானியாக இருந்த மண்முனையில் சில நூற்…
-
- 0 replies
- 1k views
-
-
-
- 1 reply
- 634 views
-
-
“கடைசியில புள்ள சாகும் வரைக்கும் வேலை செஞ்சிக் கொடுத்ததே… சாகும் வரைக்கும் செஞ்சிக் கொடுத்தானே… சாகுறதுக்கு 5 நாளைக்கு முதல் கூட புள்ள வேல செய்தானே. “2009 வைகாசி மாசம் 15ஆம் திகதி பின்னேரம் 4 மணியிருக்கும். “இப்படியொரு நிலம வந்திட்டதே…” ஓர் உண்மையான ஊடகப்பணியாளரின் – ஊடகவியலாளரது தாயின் இடைவிடா கதறல் இது. கொல்லப்பட்ட, காணாமல்போன, தாக்கப்பட்ட, அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர்களின் பெயர்கள் எங்காவது பதியப்பட்டிருக்கும். அவர்களுக்காக நீதிகேட்டு எங்காவது, எப்போதாவது குரல் எழுப்பப்பட்டுவரும். விசாரணைகளும் நடத்தப்படும், ஒரு சிலருக்கு நன்கொடைகளும், ஏன் ஒரு சிலர் வெளிநாடுகளில் தஞ்சமும் அடைந்திருக்கின்றனர். ஆனால் இவர்கள் செய்த அதே சேவையை – வேலையை செய்துவந்த ஊடகப் ப…
-
- 0 replies
- 432 views
-
-
-
- 0 replies
- 559 views
-
-
-
- 0 replies
- 394 views
-
-
-
- 51 replies
- 4.6k views
- 1 follower
-
-
TELO இயக்கப் போராளிகள் அழிக்கப்பட்டு 30ஆண்டுகளின் பின் : சபா நாவலன் 04/30/2016 இனியொரு. ஈழ விடுதலைப் போராட்டத்தில் தனி நபர்களைப் படுகொலை செய்வதனூடாக அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதென்பது 80 களில் பொதுவான கலாச்சாரமாக மாற்றமடைந்திருந்தது. ஒரு புறத்தில் அறிதலுக்கான தேடல்கள் நிறைந்த இளைஞர்கள் மத்தியதர வர்க்கங்களிலிருந்து உருவாகியிருந்தனர். மறுபுறத்தில் தனி மனிதத் தாக்குதல்கள், தனிமனிதப் படுகொலைகள் போன்றன சமூகத்தின் அங்கீகாரம் பெற்ற பொதுப் புத்தியாக மாற்ரமடைந்திருந்தது. தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தின் ஒரே முழக்கம் அரசுக்கு எதிராக ஒன்றிணையுங்கள் என்பது மட்டும்தான். அதற்குமேல் அவர்களிடம் குறிப்பான சமூகப் பார…
-
- 53 replies
- 3.5k views
-
-
-
- 2 replies
- 650 views
-
-
-
- 1 reply
- 506 views
-
-
எமது இனத்தைப் பல வல்லூறுகள் ஒரே நேரத்தில் மென்று தின்று கொண்டிருக்கின்றன! அவற்றை வரிசைப் படுத்தினால், வரிசை நீண்டுகொண்டே செல்கின்றது! எல்லோரும் அங்கலாய்க்கிறோம்! ஆதங்கப் படுகின்றோம்! ஆனால்..எங்களில் எத்தனை பேருக்கு...எமது உண்மையான வரலாறு தெரியும் என்று கேட்டால் , ஒருவரிடமும் சரியான பதிலிருக்காது என்பதே உண்மை! இதில் வெட்கப் பட எதுவுமேயில்லை! ஏனெனில் எமது வரலாறு வேண்டுமென்றே பல சந்தர்ப்பங்களில் எரிக்கப்பட்டும், திரிக்கப் பட்டும் வந்துள்ளது! பின் வரும் காணொளியை..ஒரு முறை நேரம் கிடைக்கும் போது,,கேட்டுப் பாருங்கள்! எமது வரலாறு கொஞ்சமாவது தனது தனது முகத்திரையை விலக்கும் என்பது எனது கருத்து! இயலுமாயின் தொடர்ந்தும் இணைக்க முய…
-
- 0 replies
- 866 views
-
-
Jaffna Kingdom Documentary - Part 01 (யாழ்ப்பாண இராச்சியம் - பகுதி 1)
-
- 2 replies
- 2.5k views
-
-
-
- 1 reply
- 327 views
-
-
-
- 9 replies
- 10.5k views
-
-
-
- 0 replies
- 631 views
-
-
திட்டமிட்ட அழிப்பின் பின்புலம் : நீதிமன்றத்திலிருந்து… சுன்னாகம் நிலத்தடி நீர் கழிவு எண்ணெயால் நஞ்சாக்கப்பட்டமை இனஅழிப்பு மல்லாகம் நீதிமன்றில் பொதுச் சுகாதார பரிசோதகரால் தெரிவிப்பு சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவெண்ணை கலந்து வலிகாமப்பகுதி நீர்வளம் நஞ்சாக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் நலன் சார்ந்து மல்லாகம் நீதிமன்றில் தெல்லிப்பழை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் இராஜமேனகனால் 2014.10.30 அன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் (19.04.2016) அழைக்கப்பட்ட போது பிரசன்னமாகயிருந்த வடமாகண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் வடமாகாண சபையால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவானது ஐங்கரநேசன் என்ற தனிநபரால் அமைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் ஐங்கர…
-
- 0 replies
- 539 views
-
-
ராஜதானி நிலையத்திலிருந்து செய்தி வெளியீடு. யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய சேதங்கள். யாழ்ப்பாணத்து அருங்காட்சியகமானது மிகவும் ஏழ்மையான நிலையில் பல விலை மதிக்கமுடியாத பொருட்கள் யாவும் புறக்கணிக்கப்பட்டு பராமரிப்பின்றி உள்ளது. எவருமே முன்வந்து நமது சரித்திர ஆவணங்களை பாதுகாக்கவோ அவற்றை விலையேறப்பெற்றதாக காண்பிக்கவோ ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தம்பகொலபட்டுன, நாகதீப விகாரை கந்தரோடை என இத்தகைய இடங்கள் யாவும் பழுதுபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு இராணுவங்களினால் பாதுகாக்கப்பட்டும் வருகின்றது. ஆனால் நம் சரித்திர ஆவணங்களோ மற்றும் இடங்களோ பலர் மத்தியில் புறக்கணிக்கப்பட்டு நம் சரித்திர தடயங்கள் யாவும் வருங்காலங்களில் அழிந்துபோகும் அபாயம் உள்ளது. …
-
- 0 replies
- 657 views
-
-
யாழ்ப்பாண நூலகமும் பரோபகாரி செல்லப்பாவும் தமிழருவி த. சிவகுமாரன் பரோபகாரி செல்லப்பாவின் 120ஆவது பிறந்தநாளை (24.02.2016) ஒட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு நூலகம் தேவை என்ற சிந்தனை 1933ஆம் ஆண்டில் புத்தூர் மேற்கைச் சேர்ந்த 'சக்கடத்தார்' கே.எம்.செல்லப்பா என்ற படித்த கனவான், பரோபகாரியின் மனதில் உதித்தது. தென் கிழக்காசியாவிலேயே குறிப்பிடத்தக்க கலைக்கோவிலாக இலங்கைக்கு குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கே பெருமை சேர்ப்பதாக ஒரு காலத்தில் விளங்கியது. யாழ்ப்பாணப் பொதுசன நூலகம். 1981 ஜூன் முதலாந்திகதி தீமூட்டி எரிக்கப்பட்டு பேரழிவுக்குட்பட்டது. இந்த கலைக்கோவில். சாதி, இன, மத, வேறுபாடின்றி அனைவருக்கும் இரவு பகலாக சேவையாற்றிய, சகலரது அறிவுப்பசி…
-
- 0 replies
- 598 views
-
-
(படுவான் பாலகன்) அம்பிளாந்துறையில் சித்திரைப் புத்தாண்டை சிறப்பித்து ஊஞ்சல் விழாவும் கலாசார விளையாட்டு நிகழ்வும் வியாழக்கிழமை கதிரவன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. அம்பிளாந்துறை கதிரவன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மிகவும் நீண்டகாலமாக கிராமத்தில் அமைந்துள்ள வாகை மரத்தில் ஊஞ்சில் இட்டு தேங்காய் உடைக்கப்பட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஊஞ்சலினை ஆரம்பித்து வைத்தார். பின் பெரியவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் பாரம்பரிய பாடல்களைப்பாடி ஊஞ்சல் ஆடி மகிழ்ந்தனர். விளையாட்டு கழகத்தின் தலைவர் கு.நமசிவாயம் தலைமையில் இடம்பெற்ற ஊஞ்சல் நிகழ்வினை தொடர்ந்து மிட்டாய் ஓட்டம், முட்டி உடைத்தல், கிடுகு பின்னுதல், தேங்காய் திர…
-
- 0 replies
- 940 views
-
-
இரு இளைஞர்கள் , ஒருவர் சிறைசாலை உத்தியோகத்தர் (வயது 23) மற்றவரும் அரச சேவையில் இருந்து கொண்டு பண்டைய கலையை அழிய விடாமல் இந்த சிறு வயதில் சிறப்பாக பாடுகிறார்கள். இவர்கள் பிரபல நாட்டுபுற பாடகர் தில்லையம்பலம் சிவலிங்கம் அவர்களிடம் பயிற்ச்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இவர்களின் கலைப் பணி மேலும் வளர வாழ்த்துக்கள் நீங்களும் கேட்டு மகிழுங்கள்
-
- 0 replies
- 955 views
-
-
அமரர் T .பத்மநாதன் தோற்றம் : 10.02.1934 மறைவு : 06.11.1992 (உதைபந்தாட்டப் பயிற்சியாளர், நூலகப்பொறுப்பாளர். தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி) மகாஜனாக்கல்லூரியின் உதைபந்தாட்டப் பயிற்சியாளர் திரு .T.P.பத்மநாதன் 06.11.1992 அன்று மாரடைப்பால் காலமானார். "மகாஜன" என்கின்ற கிராமத்துப் பாடசாலையை உதைபந்தாட்டவெற்றிகளின் மூலம் அகில இலங்கையிலும் புகழ் பரவி நிற்கச் செய்தவர், திரு.T.பத்மநாதன். 1960ஆம் ஆண்டிலிருந்து மகாஜனாவின் நூலகப்பொறுப்பாளராகவும், உதைபந்தாட்ட, கொக்கி பயிற்சியாளராகவும் சேவையாற்றி ஒய்வுபெற்றவர் T.P. கட்டுடை மானிப்பாயை பிறப்பிடமாகக் கொண்டாலும் தெல்லிப்பழையைத் தன் சொந்தக்கிராமமாக ஏற்று 30 ஆண்டுகளுக்கு மேலாக கல்லூரிக்கும், கிராமத்துக்கும் என்றும் வற்றாத புகழினை…
-
- 0 replies
- 578 views
-
-
தமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே தமிழர்களுக்கான விடிவு சாத்தியம் அதனை அடைவதற்கு தாயகம்,புலம்பெயர் தமிழர்,தமிழகம் என மூன்று தளங்களும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதன் ஊடாகவே தமிழர்களுக்கான ஒரு விடிவை பெற்றுக்கொள்ள முடியும் என அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான நிலாந்தன் அவர்கள் கனடாவில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் தெரிவித்துள்ளார். கனடாவில் இடம்பெற்ற புலம்பெயர் உறவுகளுடனான கலந்துரையாடலின் போது கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியபோதே தாயக அரசியல் நிலவரம்,மற்றும் போர்க்குற்ற விசாரணையினை எவ்வாறு அரசால் கொண்டுசெல்லப்படப்போகின்றது என்பது தொடர்பிலும் நீண்ட உரை ஒன்றினை ஆற்றியிருந்தார் அந்த உரையினை உங்களுக்காக இணைக்கிறோம். …
-
- 6 replies
- 1.1k views
-