Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. கோட்டா பேணும் இராணுவ ஒழுங்கு புருஜோத்தமன் தங்கமயில் / 2020 செப்டெம்பர் 03 , மு.ப. 08:58 ஒன்பதாவது நாடாளுமன்றத்தைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆற்றிய அக்கிராசன உரை, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட பல தரப்பினருக்கும் தெளிவான அறிவுறுத்தல்கள் சிலவற்றை வழங்கியிருக்கின்றது. அதில், முதலாவது, இந்த ஆட்சியில் எந்த ராஜபக்‌ஷ தீர்மானங்களின் நாயகனாக இருப்பார் என்பது; இரண்டாவது, எதிர்க்கட்சிகளோ, சிறுபான்மைத் தரப்புகளோ எந்தவொரு தருணத்திலும், அரசாங்கத்தினதும் நிர்வாகத்தினதும் தீர்மா…

  2. http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-08#page-14

  3. கூட்டமைப்பின் ‘கையறு’ நிலை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் கடந்த 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மீது நடத்தப்படவுள்ள வாக்கெடுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறது என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. இந்த வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக ஜே.வி.பி ஏற்கெனவே அறிவித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஆதரவுக் கூட்டு எதிரணியைச் சேர்ந்த 52 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்தே வாக்களிப்பர் என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டியதில்லை. அதேவேளை, அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக…

  4. இராணுவத்தை காப்பாற்றுவதில் அக்கறை காட்டும் அரசாங்கம் குற்­றச்­சாட்­டுகள் மற்றும் போர் தொடர்­பான ஐ.நாவின் பரிந்­து­ரைகள் விட­யங்­களில், சர்­வ­தேச சமூ­கத்தின் ஆத­ர­வில்­லாமல், இலங்கைப் படைகள் தமது பெயரைக் காப்­பாற்றிக் கொள்­வது மிகவும் கடி­ன­மா­னது.” இந்தக் கருத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னதான் கடந்த வாரம் கூறி­யி­ருந்தார். சபு­கஸ்­கந்­தையில் உள்ள பாது­காப்புச் சேவைகள் கட்­டளை மற்றும் அதி­கா­ரிகள் கல்­லூ­ரியின் பட்­ட­ம­ளிப்பு விழாவில் உரை­யாற்­றி­ய­போதே அவர் இந்த விட­யத்தைக் குறிப்­பிட்­டி­ருந்தார். இப்­போ­தெல்லாம், ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் பாது­காப்புத் துறை­சார்ந்த உயர்­நிலைப் பிர­மு­கர்கள் படை அதி­கா­ரி­க­ளைய…

  5. தேசியவாத எழுச்சியின் பின்னாலுள்ள செய்தி - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா உலகம் முழுவதிலும், தேசியவாதத்தைக் கக்கும் கடும்போக்கு வலதுசாரிகளின் எழுச்சி, அச்சம் கொள்ள வைக்கிறது; இந்த அச்சத்தை, பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலிலும் பார்க்கக் கூடியதாக உள்ளது. இவ்வாறான வாக்கியங்களை, அண்மைக்கால அரசியல் அலசல்களில் கண்டிருக்க முடியும். இந்த அச்சமொன்றும், பொய்யானதோ அல்லது தவறானதோ கிடையாது. இது, தற்போது நடந்து கொண்டிருக்கும் யதார்த்தத்தையே வெளிக்காட்டுகிறது. இந்த யதார்த்தத்தை வெளிப்படுத்தும் கண்ணாடியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த, பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது சுற்று வாக்களிப்பு அமைந்தது. இதில், கடும்போக்கு வலதுசாரித்துவத…

  6. வைரஸ் தொற்றுக்குள்ளும் ஓயாத வாட்கள் ? நிலாந்தன்! July 11, 2021 அண்மையில் பிரபல ஈழத்து இசையமைப்பாளர் ஒருவரோடு கதைத்த்துக்கொண்டிருந்தேன். “அண்மையில் நீங்கள் இசையமைத்த ஒரு பாடலைக் கேட்டேன். நீங்கள் முன்பு இசையமைத்த பாடல்களின் தரத்துக்கு அது இல்லை. ஏன் இப்பொழுது உன்னதமான பாடல்களை எங்களால் உருவாக்க முடியவில்லை” என்று கேட்டேன். 1980களில் 90களில் நாடகங்களுக்கும் அரசியல் தேவைகளுக்கும் பாடல்களை உருவாக்கிய பலரும் இசையமைப்பாளர்களை உறங்க விடுவதில்லை. அவர்கள் உருவாக்கித்தரும் மெட்டுக்களை எடுத்த எடுப்பில் ஏற்றுக் கொள்வதுமில்லை. இது போதாது இது போதாது இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று கேட்டு தொடர்ச்சியாக நச்சரித்து ஒரு பாடல் அதன் உன்னதமான உ…

  7. அலாரம் அடிக்கிறது - மொஹமட் பாதுஷா மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடும் அளவுகடந்த கனவுகளோடும் நிறுவப்பட்ட நல்லாட்சியின் ஆட்சிப் பரப்பெங்கும் அண்மைக் காலமாக இடம்பெற்று வருகின்ற களநிலை மாற்றங்கள், கருத்தியல் அதிர்வொன்றை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. கூட்டு அரசாங்கத்துக்குள் கட்சிசார் ‘முன்னிலைப்படுத்தல்கள்’ ஏற்கெனவே இருக்கத்தக்கதாக, இனவெறுப்பு நடவடிக்கைகளும் கூட்டு எதிரணியின் செயற்பாடுகளும் தீவிரமடைந்திருக்கின்றன. ஓர் அரசாங்கம் ஆட்சியமைத்து பல வருடங்களுக்குப் பிறகு ஏற்படுகின்ற ஸ்திரமற்ற நிலைமைகள் அல்லது அதுபோன்ற ஒரு மாயத்தோற்றம் இப்போது உருவாகி வருகின்றது. தனிக் குடித்தனங்களில் ஏற்படும் பிரச்சினைகள் வெளியில் தெரிவ…

  8. 8884 சதுரகிலோமீற்றர் பரப்பளவான வடக்கு மாகாணத்தில் உள்ள 300 கிலோமீற்றர் நீளமுள்ள கிளிநொச்சி – முல்லைதீவு கரையோரத்தின் இரண்டு பக்கத்திலும் அரைவாசி எரிந்த நிலையிலுள்ள பனைமரங்கள், கூரைகளற்ற வீடுகள், குண்டுகள் துளைக்கப்பட்ட கட்டடங்கள், சேதமாக்கப்பட்ட வாகனங்கள் போன்ற பல்வேறு காட்சிகளைக் காணமுடியும். இவ்வாறு இந்தியாவில் இருந்து வெளியாகும் The Week சஞ்சிகைக்காக Lakshmi Subramanian எழுதிய கட்டுரையில் தெரிவித்தள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாதி. நளாயினி பெரும்பாலான நாட்களில் வீறிட்டுக் கத்தியவாறே கண்விழிக்கிறார். இவரைப் பாதிக்கின்ற அந்தச் சம்பவம் இடம்பெற்று நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட, நளாயினி பயங்கரக் கனவுகளால் பாதிக்கபட்டுள்ளார். இவரது …

  9. இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் அதிகரித்துச் செல்கிறதா? - யதீந்திரா இலங்கையின் மீதான மூன்றாவது பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இலங்கையின் மீதான அமெரிக்க பிரேரணையை அரசாங்கம் எதிர்ப்பதில் ஆச்சரியம் கொள்ள எதுவுமில்லை. ஆனால் குறித்த பிரேரணையை, தமிழ் தரப்பினரில் ஒரு பகுதியினரும் எதிர்ப்பதுதான் ஆச்சரியமானது. அமெரிக்க பிரேரணையை ஒரு தேவையற்ற தலையீடாக அரசாங்கம் கருதுகிறது. இதனை ஒருவர் விளங்கிக் கொள்ளலாம். அவ்வாறாயின் குறிப்பிட்ட புலம்பெயர் தரப்பினரும் தமிழ் நாட்டில் உள்ளவர்களும் ஏன் எதிர்க்கின்றனர். பதில் மிகவும் இலகுவானது. தாங்கள் விரும்பிய விடயங்கள் குறித்த பிரேரணையில் இல்லை என்பதாலேயே அவர்கள் எதிர்க்கின்றனர். இவ்வாறானதொரு பின்புலத…

  10. ஆட்சி மாற்றங்களும் தமிழர் பிரச்சினைக்கான தீர்வும்? - யதீந்திரா ஆட்சி மாற்றமொன்று தேவை – அதன் மூலம்தான் பிரச்சினைகளை தீர்க்க முடியுமென்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். சம்பந்தன் எந்தப் பிரச்சினைகளை பற்றிப் பேசுகின்றார்? ஒரு வேளை அவர், பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் பேசினால், ஆட்சி மாற்றம் தேவையென்னும் வாதம், சரியானதுதான் – ஏனெனில், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமாயின், ஒரு ஸ்திரமான அரசாங்கம் இருக்க வேண்டியது கட்டாயமானது. தற்போதுள்ள அரசாங்கம் தடுமாறிக் கொண்டிருக்கின்றது. ஒரு புறம் ராஜபக்சக்கள் வீழ்சியுற்றாலும் கூட, மறுபுறமாக, அவர்கள் பொதுஜன…

  11. பங்காளிக் கட்சிகள் இனியும் சம்பந்தனை நியாயப்படுத்திக் கொண்டிருக்க முடியுமா ? யதீந்திரா ஆசனப்பங்கீடு தொடர்பான இழுபறிகள் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பலவீனத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும். கூட்டமைப்புக்குள் தமிழரசு கட்சியின் ஆதிக்கம் ஆச்சரியத்துக்குரிய ஒன்றல்ல ஆனால் அந்த ஆதிக்கம் எந்தளவிற்கு நீளக்கூடியது என்பது தற்போதுதான் தெட்டத் தெளிவாகியிருக்கிறது. உள்ளுராட்சித் தேர்தலில் தமது கட்சிக்கான ஒதுக்கீடுகள் இவ்வாறுதான் அமைந்திருக்க வேண்டுமென்று பங்காளிக் கட்சிகளான டெலோவும், புளொட்டும் வலியுறுத்தியிருந்தன. அது பற்றி பேசலாம் என்று தமிழரசு கட்சியும் உறுதியளித்திருந்தது. இது தொடர்பில் கொழும்பில் கூடிய கூட்டமைப்பு கட்சிகளின் தலைவர்கள் …

  12. ரணில்:- பலமடைகிறாரா? பலவீனமடைகிறாரா? -நிலாந்தன்.- நாட்டுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது ஒரு தேசிய அரசாங்கம்தான். பொருளாதார நெருக்கடி போன்ற நிலைமைகளின்போது உலகின் உயர்ந்த ஜனநாயகங்கள் அவ்வாறான தேசிய அரசாங்கங்களைத்தான் உருவாக்கின.ஆனால் இலங்கைத்தீவின் ஜனநாயகம் அத்துணை செழிப்பானது அல்ல. இலங்கைத்தீவில் தேசிய அரசாங்கம் அல்லது அதைவிட குறைவாக சர்வ கட்சி அரசாங்கம் போன்ற உரையாடல்கள் எப்பொழுது தொடங்குகின்றன என்றால், அரசாங்கம் தன் தோல்வியை ஏனைய கட்சிகளின் தலையில் சுமத்திவிட எத்தனிக்கும் பொழுதுதான்.அதாவது தோல்விக்கு எதிர்க்கட்சிகளை பங்காளிகளாக்கும் ஒரு தந்திரமாகத்தான் சர்வ கட்சி அரசாங்கங்கள் உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக தேசிய அரசாங்கம் என்பது தமிழ் நோக்கு நிலையில் சிங்கள பௌத்த த…

  13. வடகொரிய - ஐ.அமெரிக்கப் பேச்சுவார்த்தை: நிழல் யுத்தமொன்று - ஜனகன் முத்துக்குமார் ஐக்கிய அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறக்கூடும் என வடகொரியா அச்சுறுத்தும் போதிலும், ஐ.அமெரிக்க - வடகொரிய பேச்சுவார்த்தை, வரலாறு காணாத முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடப்பட வேண்டியதாகும். ஜனாதிபதி ட்ரம்பின் ‘கடுமையான கொள்கைக்கு’ கிடைத்த வெற்றி என தென்கொரியா இதைக் கருதும் போதிலும், இந்நிலையானது பலமட்ட சர்வதேச அரசியல் நிலைகளினாலேயே சாத்தியமானது எனலாம். ஐ.அமெரிக்க - வடகொரியா மோதலானது, 25 வருட வரலாற்றைக் கொண்டிருந்ததுடன், இது ஐ.அமெரிக்காவின் அன்றைய ஜனாதிபதிகளான ஜிம்மி காட்டர், பில் கிளின்டன் ஆகியோரின்…

  14. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எத்தகைய ஒரு முடிவை எடுப்பார்கள்? நிலாந்தன்:- 02 நவம்பர் 2014 2005 இல் ஜனாதிபதித் தேர்தல் நடந்த போது இக்கட்டூரையாளர் வீரகேசரி வார இதழில் ஒரு கட்டூரை எழுதியிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிந்தனாமுறை பற்றியது அக்கட்டூரை. யார் ஜனாதிபதியாக வருவதை புலிகள் இயக்கம் விரும்பும் என்பதை அந்த இயக்கத்தின் வழக்கமான சிந்தனா முறைக்கூடாக அக்கட்டூரை கணித்திருந்தது. அதன்படி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வருவதை விடவும் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருதையே அந்த இயக்கம் விரும்பும் என்றும் அந்த கட்டூரை கூறியிருந்தது. மேற்கின் விசுவாசியாகிய ரணில் முன்னெடுக்கும் சமாதானத்தை புலிகள் இயக்கம் ஒரு தர்மர் பொறியாகவே பார்த்தது. எனவே மேற்கிற்கு…

  15. புதிய அரசியல் அணிசேருகைகள் August 28, 2023 —- வீரகத்தி தனபாலசிங்கம் —- கடந்த வருடத்தைய பொருளாதார நெருக்கடியும் மக்கள் கிளர்ச்சியும் நவீன இலங்கை அதன் வரலாற்றில் முன்னென்றும் கண்டிராதவை. அதே போன்றே அவற்றுக்கு பின்னரான அரசியல் நிகழ்வுப் போக்குகளும் கட்சிகளின் புதிய அணிசேருகைகளும் கூட முன்னர் எவரும் நினைத்துப் பார்த்திராதவை. அண்மையாநாட்களாக அரசியல் கட்சிகள் புதிய கூட்டணிகளை அமைக்கும் முயற்சிகளில் தீவிர அக்கறை காட்டத் தொடங்கியிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதி தேர்தலை தவிர வேறு எந்த தேர்தலையும் அண்மைய எதிர்காலத்தில் எதிர்பார்க்கமுடியாது என்பதே யதார்த்த நிலையாக இருக்கும்போது சில முக்கிய எதிரணி கட்சிகளின் கூட்டணி அமைக்கு…

  16. கூட்டமைப்பின்ஆதரவு -பி.மாணிக்கவாசகம் December 1, 2018 வரலாற்று காலம்தொட்டே இன ரீதியாகப் பிளவுபட்டுக் கிடந்த இலங்கையை ஆங்கிலேயர் தமது ஆட்சி முடிவின்போது ஒன்றிணைத்துவிட்டுச் சென்றிருந்தனர். ஆயினும், ஒரு தேசம் என்ற அடிப்படையில் நிலவழியாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்தத் தீவில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், ஐக்கியத்தையும் நிரந்தரமாக நிலைத்திருக்கச் செய்வதற்கான அரசியல் வழிமுறையொன்றை அவர்கள் வகுத்திருக்கவில்லை. இலங்கைக்கு சுதந்திரத்தை அளித்த அவர்கள் விட்டுச் சென்ற அரசியலமைப்பு இன ரீதியான பிளவுகளை ஆழமாக்குவதற்கு வழி வகுத்திருந்தது. ஆங்கிலேயர்கள் நாட்டைவிட்டுச் சென்ற பின்னர், இலங்கையில் பௌத்தமத மயமாக்குவதற்கான அத்திவாரம் மிக ஆழமாகவும், உறுதியாகவும்…

  17. அல்ஜசீரா இலங்கையில் தமிழர்களின் கலை கலாசராம், அவற்றின் இன்றைய சீர்கேடுகள், அவற்றுக்கான காரணங்கள் பற்றிய ஒரு காணொளி ஒன்றை இலங்கையின் விதவைகள் எனும் பெயரில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியிருந்தது. அதில், கணவன்மார்களை சிறையில் சென்று பார்க்கும் பெண்கள் தொடர்பாக அவர்களில் ஒருவரிடம் கேட்டறிந்தது அல்ஜசீரா. அதில் அப்பெண் தனது கணவனை சிறையில் பார்க்க செல்லும் போது, “உனது கணவருடன் கதைக்க வேண்டுமென்றால் என்னுடன் ஒரு தடவை உறவு கொள்ளவேண்டும்” என இராணுவ அதிகாரிகள் தன்னை கஸ்டப்படுத்தியதாக கிளி நொச்சியில் வாழும் அப்பெண் கூறியுள்ளார். இது எனக்கு மட்டுமல்ல எல்லா பெண்களும் எதிர்கொள்கின்ற பிரச்சினைதான். நாம் எமது துணைவர்களைத்தேடி சிறைச்சாலைகளுக்கும், இராணுவ முகாம்களுக்கும் செல்கின்ற…

  18. இந்தியா அமெரிக்காவின் கூட்டு கடற்படை போர் ஒத்திகை மதியம் செவ்வாய், செப்டம்பர் 04, 2007 ... இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இணைந்து வங்காள விரிகுடாவில் விசாகப்பட்டினத்திற்கும், அந்தமான் தீவுகளுக்கும் இடையே ஒரு மிகப் பெரிய இராணுவ போர் ஒத்திகைகளை "மலபார் 07 (Malabar 07)" என்ற பெயரில் இன்று நடத்த தொடங்கியிருக்கின்றன. இந்தியாவின் இடதுசாரிக் கட்சிகள் இதனை கடுமையாக எதிர்த்து வருகின்றன. சுமார் 26 போர் கப்பல்கள், அணுசக்தி மூலம் இயங்கும் விமனம் தாங்கி கப்பல், 160 போர் விமானங்கள் போன்றவை கொண்டு நடத்தப்படும் இந்த போர் ஒத்திகை இது வரையில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய இந்திய-அமெரிக்க கூட்டு போர் ஒத்திகை ஆகும். ஒரு காலத்தில் இராணுவ …

    • 0 replies
    • 2.2k views
  19. பாரதி இராஜநாயகம் மூத்த பத்திரிகையாளர் (இந்தக் கட்டுரையில் இடம் பெற்றிருப்பவை கட்டுரையாளரின் பார்வைகள். இவை பிபிசி தமிழின் பார்வை அல்ல - ஆசிரியர்) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நான்கு மணி நேர இலங்கை பயணம் மிகவும் குறுகியதாக இருந்தாலும், அதிகளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தத…

  20. எழுக தமிழ்; சீரழிந்த அரசியலின் கதை Editorial / 2019 செப்டெம்பர் 05 வியாழக்கிழமை, மு.ப. 09:09 Comments - 0 எதிர்வரும் 16ஆம் திகதி நடக்கவுள்ள ‘எழுக தமிழ்’ நிகழ்வு பற்றி, மக்கள் மத்தியில் இல்லாத எதிர்பார்ப்பைத் தமிழ் ஊடகங்களும் எல்லாமறிந்த அரசியல் ஞானிகளும் ஏற்படுத்தி வருகிறார்கள். ‘எழுக தமிழ்’ என்பது தொடக்கமல்ல; சீரழிந்த மக்களை ஏமாற்றும், அரசியல் தலைமைகளின் கூத்துகளின் தொடர்ச்சி ஆகும். ‘எழுக தமிழ்’ என்ன சாதித்தது என்ற வினாவுக்கு, நியாயமான பதிலை எந்தத் தமிழ்த் தேசியவாதியாலும் வழங்கவியலாது. வேலைத்திட்டங்கள் அற்ற மக்கள் தேவைகளை முன்னிலைப்படுத்தாத உணர்ச்சிகர கோச அரசியலின் தொடர்ச்சியே ‘எழுக தமிழ்’. இன்று பிரதேச சபைகளாலும், மாநகராட்சி…

  21. பேரம் பேசும் பலம் கூட்டமைப்புக்கு உள்ளதா? DEC 12, 2015 | 3:05 தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பேரம் பேசும் பலத்தைக் கொடுங்கள், அதனைக் கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவோம் என்று, நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரியிருந்தார். இதன் தொடர்ச்சியாக நடந்த தேர்தலில், நாடாளுமன்றத்தில் 16 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும், வகையிலான பேரம் பேசும் பலத்தை வடக்கு கிழக்கில் உள்ள வாக்காளர்கள் கூட்டமைப்புக்குக் கொடுத்திருந்தனர். ஆனால், அந்தப் பேரம் பேசும் பலத்தை கூட்டமைப்பு இதுவரை பயன்படுத்தியிருக்கிறதா? – அந்த பலத்தை வைத்து இதுவரை எதனைச் சாதித்துள்ளது? என்ற கேள்விகள் பரவலாக எழுந்திருக்கிறது. சில…

  22. இலங்கையில் தேர்தல் திரிசங்கு நிலை Published by Priyatharshan on 2019-10-28 12:51:34 -மீரா ஸ்ரீனிவாசன் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 50 இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இன்னும் 3 வாரங்களில் வாக்களிக்கவிருக்கிறார்கள். மொத்தம் 35 வேட்பாளர்கள் களமிறங்கியிருக்கும் இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையிலேயே பிரதான போட்டி நிலவுகின்றது. ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி) அநுரகுமார திஸாநாயக்கவும் சிவில் சமூக அமைப்புக்களின் ஆதரவிற்கு இணங்க முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவும் அடுத்த இரு முக்கிய வேட்பாளர்களாவர். பிரதான கட்சிகளுக்கு ஒரு …

    • 0 replies
    • 531 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.