அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
ஜெனீவாத் தொடர் கதை -எம்.எஸ்.எம். ஐயூப் எதிர் வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டம், நெருங்கி வரும் நிலையில், இலங்கையில் மனித உரிமை விவகாரமும் சூடு பிடித்து வருகிறது. சகல தமிழ் அரசியல் கட்சிகளும், ஒருமித்த நிலைப்பாட்டில் இருந்து, மனித உரிமைப் பேரவையை எதிர்கொள்ள வேண்டும் என்ற தொனிப் பொருளிலேயே இந்தக் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. மனித உரிமைப் பேரவையின் 45 ஆவது கூட்டத்தில், சகல தமிழ்க் கட்சிகளும் கூட்டாகச் செயற்பட வேண்டும் என்பதை, அக்கட்சிகள் வலியுறுத்திக் கூறுகின்றன. ஆனால், கூட்டாக என்ன செய்ய வேண்டும் என்பதில், அவற்றுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லை என்பதாகவே தெரிகிறது. அந்த ஒருமித்த கருத்து என்ன என்பது தொடர…
-
- 0 replies
- 559 views
-
-
மன்னாரில் கண்வைத்துள்ள அவுஸ்திரேலிய நிறுவனம் – ஆபத்தில் தமிழர் தேசத்தின் வளங்கள்! BharatiDecember 30, 2020 சுதன்ராஜ் மன்னார் தீவுக்கடலில் பெற்றோல் உண்டு என்ற கதையாடல் மட்டுமல்ல, பெட்ரோலிய ஆய்வுகளுக்கு வெளிநாட்டு நிறுவனங்களை இலங்கை அரசாங்கம் அழைந்திருந்தமை எல்லாம் நாம் அறிந்த செய்தி. ஆனால் மன்னார் தீவின் கனியவளங்கள் மீது வெளிநாட்டு நிறுவனங்கள் குறிப்பாக அவுஸ்திரேலிய நிறுவனமொன்று ‘கண்’ வைத்திருப்பது மட்டுமல்லாது அவ்வளங்களை சத்திமில்லாமல் ஏற்றுமதி செய்துவருவதான தகவல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. 26 கி.மீ நீளமும் 8 கி.மீ அகலமும் கொண்ட மன்னார்தீவின் மணலில் இல்மனைட் என்ற கனிய வளங்கள் உள்ளன. இக்கனிமம், வண்ணப்பூச்சுகள், மை, பிளாஸ்டிக் மற்ற…
-
- 1 reply
- 1k views
-
-
புதிய வழமை’ இதுதானா? 2020 இல் பெற்றதும்; கற்றதும்! – அகிலன் 73 Views உலக நாடுகள் அனைத்தையும் போலவே ஈழத் தமிழர்களுக்கும் 2020 என்பது கொடூரமான ஒரு வருடமாகவே கடந்து சென்றிருக்கின்றது. 2020 மார்ச் நடுப்பகுதியில் இலங்கைக்குள் பிரவேசித்த கொரோனா, தீவின் பொருளாதாரத்தை ஸ்தம்பிதமடையச் செய்து விட்டது. நாட்டின் அசைவியக்கத்தையும் இது பெருமளவுக்குப் புரட்டிப் போட்டு விட்டது. புதிய அரசியல் குழப்பங்களுக்கும் இது காரணமாகி விட்டது. கொரோனாவின் மரண அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், பேரினவாதம்தான் இலங்கையை ஆட்சி செய்யப் போகின்றது என்பது 2020 இல் நாம் கற்றுக்கொண்ட பாடம். 2020 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், சிறுபான்மையினரை முற்றாக …
-
- 0 replies
- 431 views
-
-
தமிழர் மனித உரிமைகள் செயற்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஸ் 141 Views எதிர்வரும் வருடத்தின் முற்பகுதியில் ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் சிறீலங்கா மீதான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் முயற்சிகள் தொடர்பில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், தாயகத்தில் உள்ள தேசிய நலன்சார் அரசியல் கட்சிகளும் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அதேசமயம், 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 30/1 என்ற தீர்மானத்திற்கு மனித உரிமைகள் அணைக்குழுவின் செயல் அமர்வுகள் தொடர்ந்து கால அவகாசம் வழங்கியபோதும், சிறீலங்காவின் புதிய அரசு அதில் இருந்து விலகியுள்ளது. சிறீலங்கா அரசு விலக…
-
- 2 replies
- 467 views
-
-
ஜெனீவாவை நோக்கிய ஒரு கூட்டுப் பொறிமுறை? – நிலாந்தன் நிலாந்தன் அடுத்த ஜெனிவாக் கூட்டத் தொடரையொட்டி தமிழ் அரசியல் வட்டாரங்கள் வழமைக்கு மாறாக முன்கூட்டியே நொதிக்கத் தொடக்கி விட்டன. வழமையாக பெப்ரவரி மாதமளவிற்தான் நாட்டில் ஜெனிவாவை நோக்கிய ஒரு நொதிப்புண்டாகும். ஆனால் இம்முறை சற்று முன்னதாகவே அது தொடங்கிவிட்டது. அதற்கு காரணங்களில் ஒன்று கடந்த மாதம் அமெரிக்க தமிழ் அமைப்பு ஒன்றினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மெய்நிகர் சந்திப்பில் சுமந்திரன் கூறிய “ரோல் ஓவர் பிரேரணை” என்ற சொற்பிரயோகம்தான். அச்சந்திப்பில் அடுத்த ஜெனிவாக் கூட்டத்தொடரையொட்டிக் கருத்துக் கூறும்போது அவர் அந்த வார்த்தையைப் பிரயோகித்தார். அதன்படி ஏற்கனவே உள்ள தீர்மானத்தை கூட்டமைப்பு மாற்ற…
-
- 1 reply
- 849 views
-
-
ஜெனீவாவில் புதுப்பிக்கப்பட்ட விளைவுகளை அறுவடை செய்யும் காலம் அருகில்.! ராஜபக்ஷக்களின் ஆட்சியை ஒரு தென்னிலங்கை விமர்சகர் மெரிடோகிரசி (Meritocrazy) என்று அழைப்பார். கொழும்பு டெலிகிராப் இணையத் தளத்தில் எழுதிய ஒரு கட்டுரையில் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். மெரிட்டோகிரசி என்பது ‘மெரிட்’ அதாவது தகமை அடிப்படையில் அல்லது தகுதி அடிப்படையில் ஒருவர் ஆட்சியைப் பிடிப்பது. தகுதி என்றால் என்ன? யுத்தத்தை வென்றதால் கிடைத்த தகுதிதான். அதுதான் யுத்த வெற்றி வாதம். அது சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தின் 2009இற்குப் பின்னரான புதுப்பிக்கப்பட்ட வடிவம். யுத்த வெற்றிதான் ராஜபக்ஷக்களின் அரசியல் முதலீடு. அதை வைத்தே கோட்டாபய ஜனாதிபதியாக வந்தார். 2018 ஈஸ்டர் குண்டுவெடிப்பு அவர்க…
-
- 0 replies
- 472 views
-
-
நீதிமன்றம் நிராகரிப்பினும், உயிர்ப்புறும் ஒப்புதல் வாக்குமூலம் – பி.மாணிக்கவாசகம் December 29, 2020 40 Views தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் மிகமோசமான நிலைமைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் இது ஓர் எரியும் பிரச்சினை. அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் உயிர்களுடனான விளையாட்டு. அதுவும் பூனைகளுக்குக் கொண்டாட்டம். எலிகளுக்குத் திண்டாட்டம் என்ற அரசியல் ரீதியான வலிகள் நிறைந்த விளையாட்டாக மாறியிருக்கின்றது. மாற்றப்பட்டிருக்கின்றது. சட்ட ரீதியாக நீதிமன்றத்தின் ஊடாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு. ஆனால் நீதிமன்றச் செயற்பாடுகள் நத்தை வேகத்திலும் முக…
-
- 0 replies
- 557 views
-
-
பயங்கரவாத தடுப்புச்சட்டம்: நெருக்கடியில் இலங்கை சிறை கைதிகள் அம்பிகா சற்குணநாதன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் 28 டிசம்பர் 2020 (இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துகள். பிபிசியின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.) பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கைதிகள் நடத்தப்படுகின்ற முறை மற்றும் அவர்களின் நிலைமைகள் குறித்து முதன்முதலான தேசிய ஆய்வொன்றை 2018 பெப்ரவரி தொடக்கம் 2020 ஜனவரி வரை எனது தலைமையில் நடத்தியது. அந்த ஆய்வின் அறிக்க…
-
- 1 reply
- 485 views
-
-
இலங்கையின் மீதான அமெரிக்க அழுத்தங்கள் – இரண்டாம் பாகம் ? - யதீந்திரா இலங்கையின் அரசியல் கடிகாரம் மீளவும் பழைய காலத்தை நோக்கித் திரும்பக் கூடிய நிலைமை காணப்படுகின்றது. ஜ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் மீதான மனித உரிமைகள் விவகாரம் மீளவும் கூட்டான விவாதங்களை ஏற்படுத்தலாம். இதற்கான காரணம் மிகவும் தெளிவானது. அதாவது, மீளவும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் ராஜபக்சக்களின் அரசாங்கமானது, ஜ.நா மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துப் போகும் முடிவை நிராகரித்திருக்கின்றது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவின் வார்தையில் கூறுவதனால், முன்னைய அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருந்த மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை இறந்துவிட்டது. அதனை இனி உயிர்ப்பிக்க முடியாது. உண்மையிலேயே அந…
-
- 0 replies
- 526 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் உறுப்பினர்களை.. நினைவு கூறுவதற்கு நான் தடையில்லை
-
- 0 replies
- 587 views
-
-
-
- 0 replies
- 663 views
-
-
எம்.சி.சி. ஒப்பந்தம் ரத்தானது ஏன்? வேறொரு வடிவில் அல்லது இலங்கை கேட்கின்ற வேறு விடயதானங்களுக்கு அமெரிக்கா விட்டுக் கொடுக்கக்கூடிய ஏது நிலையும் உண்டு 0 அ.நிக்ஸன் திருகோணமலை நகரை கொழும்பு நகரின் உப நகரமாக மாற்றுவது உட்பட இலங்கைத் தீவின் அபிவிருத்தித் திட்டங்களை மையமாகக் கொண்ட அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் (Millennium Challenge Cooperation -MCC) இலங்கையோடு செய்யவிருந்த ஒப்பந்தத்தைக் கடந்தவாரம் ரத்துச் செய்துள்ளது. 480 மில்லியன் டொலர் நிதி உதவிக்கான இந்த ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவது தொடர்பாக 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையோடு இணக்கம் ஏற்பட்டிருந்தது. ஆனால் கோட்டாபய ராஜபக்ச 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதியா…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழ்த் தலைமைகளின் பேசாப்பொருள் ‘பொருளாதாரம்’ -என்.கே. அஷோக்பரன் சர்வதேச அங்கிகாரம்மிக்க கடன் மதீப்பீடுகளான ‘பிட்ச் ரேடிங்ஸ்’, ‘ஸ்டான்டர்ட்ஸ் அன்ட் புவர்ஸ்’, ‘மூடீஸ்’ ஆகியன, மீண்டும் இலங்கையின் கடன் மதிப்பீட்டைக் குறைத்துள்ளன. இதன் அர்த்தம், சுதந்திர இலங்கை அரசு, தனது கடனை மீளச் செலுத்த முடியாத, வங்குரோத்து சூழலை எதிர்கொள்ள வேண்டி வரலாம் என்பதாகும். முன்னாள் மத்திய வங்கி ஆளுநரும், இந்நாள், பணம் மற்றும் மூலதனச் சந்தை, மற்றும் அரச முயற்சியாண்மை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சருமான அஜித் நிவாட் கப்ரால், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இயக்குநருமான பசில் ராஜபக்ஷ ஆகிய இருவரும், இலங்கை வங்குரோத்தாகும் என்ற கருத்தை முற்றாக மறுத்து வருகிறார்கள். மேற்குறித்த நிறுவனங்களி…
-
- 0 replies
- 420 views
-
-
கொரோனாவுடன் வாழப்பழகச் சொல்லும் தலைமைத்துவமும் குடும்பத்துடன் வாழ விடாத வடக்கு சுகாதாரத் துறையும் தாயகன் இலங்கையில் கொரோனாவின் ஆட்டத்தினால் பலியானோர் எண்ணிக்கை 200 ஐ நெருங்கி வரும் நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40000ஐயும் தாண்டி விட்டது . கடந்த பெப்ரவரி மாதம் இலங்கையில் காலடி எடுத்து வைத்த சீன நாட்டுக் கொரோனாவையும் பின்னர் கடந்த ஒக்டோபர் மாதம் வந்த ஐரோப்பிய கொரோனாவையும் எதிர்த்து நின்று இலங்கை அரசும் சுகாதாரத்துறையும் போராடிக் களைத்து இறுதியில் நாட்டின் ஜனாதிபதியான கோத்தபாய ராஜபக்சவே ” கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் மக்களே ” என அறிவித்தும் விட்டார். அதனால் தற்போது இலங்கையில் ”தாய் வீட்டுக்கு செல்லும் பிள்ளை” போல் கொரோ…
-
- 0 replies
- 420 views
-
-
-
- 0 replies
- 648 views
-
-
ஜெனிவா பட்டிமன்றம்...! (ஆர்-ராம்) முள்ளிவாய்க்கால் பேரவலத்துடனான முடிவு தமிழர்களின் உரிமைகளை பெற்றெடுப்பதற்கானதொரு ‘பெரு’ வாயிலை அகலமாக திறந்து விட்டிருந்தது. இலங்கையில் அன்று ஆட்சியில் அமர்ந்திருந்த ராஜபக்ஷ தரப்பின் சீனா தழுவிய பிரதிபலிப்புக்களால், அயல்நாடான இந்தியா மற்றும் சர்வதேசத்திற்கு தமது நலன்கள் சார்ந்த அச்சங்களும் ஐயங்களும் வெகுவாக வலுத்திருந்தன. இந்த தருணத்தில் தான் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான தமிழர்களின் நீதிக்கோரிக்கை இந்திய, சர்வதேச தரப்புக்களை முழுமையாக மையப்படுத்திச் சென்றது. தமிழர்கள் விடயத்தினைப் பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்தினை தமது ‘பிடிக்குள்’ வைத்திருக்கும் மூலோபய தளமாக ஜெனிவை அத்தரப்புக்கள் மாற்றியமைத்துக்கொண்டன. அதன…
-
- 0 replies
- 527 views
-
-
-
- 2 replies
- 1k views
-
-
எனது அரசியல் நகர்வுகளை சிறையில் இருந்தே திட்டமிட்டேன் – ‘தினக்குரல்’ பிரத்தியேகப் பேட்டியில் பிள்ளையான் 0 போரட்டத்தில் என்ன நடந்தது? போரட்டத்தின் போக்கு இறுதியில் தோல்விக்கான காரணம் என்ன? என்பது குறித்து நூல் ஒன்றை எழுதுகன்றேன். 0 சிறைச்சாலை வாழ்க்கை ஒரு கடினமான வாழ்க்கை. 61 மாதங்கள் சிறையில் இருந்திருக்கின்றேன். சுமார் மூன்றறை வருடங்கள் தனி அறையில் இருந்துள்ளேன்! 0 தமிழ் தேசிய கூட்டமைப்பு பிள்ளையானை அழிக்க பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தியது வேடிக்கையான விடயம். காயத்திரி நளினகாந்தன் “என்மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுக்கள் உண்மைக்கு புறம்பான அரசியல் பழிவாங்கல். ஆகையால் இதனை என்னால் முழுப்பிரயத்தனம் வழங்கி…
-
- 0 replies
- 836 views
-
-
தனி நாடு கோரிக்கை வெற்றி பெற என்ன வழி? 8 ஆகஸ்ட் 2017 பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் பிரிந்து தனிநாடாக வேண்டும் என்பது பலூச் மக்களின் கோரிக்கை உலகின் பல நாடுகளில் தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கைகளும், மோதல்களையும் பார்க்கமுடிகிறது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் வசிக்கும் பலூச் மக்கள், 'பலுச்சிஸ்தான்' என்ற தனிநாடு வேண்டும் என்று விரும்புகின்றனர். பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் வசிக்கும் பட்டான் சமூகத்தினர், 'பக்தூனிஸ்தான்' கோருகின்றனர். பல தசாப்தங்களாக தொடரும் காஷ்மீர் விடுதலைக்கான போராட்டங்கள், சீனாவின் ஷி…
-
- 14 replies
- 2.1k views
-
-
-
- 0 replies
- 510 views
-
-
இலங்கை ஒற்றையாட்சி அரசைப் பாதுகாக்க ஜெனீவா 30/1 தீர்மானத்திற்கு மீண்டும் சாயம் பூச முற்படும் அரசசார்பற்ற நிறுவனங்கள் கோட்டாபய தன்னைச் சிறந்த தலைவராக நிறுவலாம் என்கிறார் ஜெகான் பெரேரா கொழும்பை மையமாகக் கொண்டு செயற்பட்டு வரும் மாற்றுக்கொள்கை மையம் (Centre for Policy Alternatives-CPA) மற்றும் தேசிய சமாதானப் பேரவை (National Peace Council-NPC) போன்ற சில தன்னார்வ நிறுவனங்கள் சர்வதேச சக்திகளோடு சேர்ந்து 2015 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்த்து மைத்திரி - ரணில் அரசாங்கத்தை அமைப்பதற்குப் பாடுபட்டிருந்தன என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. சிங்கள அரசியல்வாதிகள் பலர் அவ்வாறு…
-
- 0 replies
- 697 views
-
-
கோவிட் -19 உடன் கடந்து செல்லும் 2020 ஏற்படுத்தப் போகும் புதிய உலக ஒழுங்கு – வேல்ஸ் இல் இருந்து அருஸ் 83 Views கோவிட்-19 என்ற உலகளாவிய தொற்றுநோயின் தாக்கதினால் மிகப்பெரும் பொருளாதார, உயிர் மற்றும் சமூக பாதிப்புக்களை உலகம் சந்தித்த ஆண்டாக 2020 கடந்து செல்கின்றது. இரண்டாம் உலகப்பேருக்கு பின்னர் குறுகிய காலத்தில் அதிக பொருளாதார மற்றும் உயிரிழப்புக்களை உலகம் சந்தித்தது இந்த வருடம் தான். இந்த தாக்கத்தின் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதே தற்போதுள்ள கேள்வி. எதிர்வரும் வருடங்களில் பூகோள அரசியலில் இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதுடன் இது உள்நாட்டு அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்றால், அந்த மாற்றத்திற்கு முத…
-
- 0 replies
- 378 views
-
-
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு கையளிக்கும் தீர்மானம் - ஜெனீவாவை கையாளும் உத்தியா.? இலங்கையின் இந்திய அரசியல் களம் மீளவும் ஒரு உரையாடலுக்குள் நகருகின்றது. அதனை இந்திய ஆட்சித்துறையின் நலனுக்கான வாய்ப்புக்கள் என்றும் இன்னோர் பக்கம் இலங்கை ஆட்சியாளரின் நலனுக்கான வாய்பான களம் என்றும் வாதிட முடியும். வெளிப்படையாகப் பார்த்தால் இரு தரப்பும் தமது நலன்களை நோக்கி நகர்வதாகவும் அதில் சமபலமுடையவையாகவும் தெரியும். ஆனால் உள்ளார்ந்த அர்த்தத்தில் பார்த்தால் எத்தகைய போக்கு நிலவுகிறது என்ற தெளிவாகும். எப்போதும் இலங்கை இந்தியத் தரப்புக்களுக்கிடையே நிலவும் அரசியல் நகர்வுகள் இரு தரப்புக்கும் ஏற்றமும் இறக்கமும் உடையதாகவே தெரிகிறது. சில சந்தர்ப்பங்களில் ம…
-
- 0 replies
- 529 views
-
-
கால அவகாசம் என்னும் துரோகத்திற்கு தயாராகிறதா கூட்டமைப்பு.? பொதுவாழ்வில் இருப்பவர்கள், எப்போதும் விமர்சனங்களை செவிமடுக்க வேண்டும். கீழிலிருந்து வரும் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் உள்ளீர்க்க வேண்டும். அவைகளிலிருந்து தமது கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தி கொள்ளுதல் வேண்டும். மாபெரும் தலைவர்களும் பெரும் மாற்றங்களை உருவாக்கிய மனித ஆளுமைகளும் மக்களின் மனங்களிலிருந்தே சாதனைக்கும் மாற்றங்களுக்குமான தீரக்கதரிசனங்களை உருவாக்கியிருக்கிறார்கள். அதுவே வாழ்வுக்கான கற்றலும் அடிப்படையுமாகும். இன்று நம் சூழலில் இச்சிந்தனை எப்படி இருக்கிறது? இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் நாடாளுமன்றத் தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் …
-
- 30 replies
- 2.8k views
- 1 follower
-
-
தமிழ்மக்களுக்கு எதிர்ப்பு அரசியல் ஏன் தேவைப்படுகின்றது?
-
- 0 replies
- 293 views
-