அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9224 topics in this forum
-
இயக்கங்களின் அன்றைய இயலுமையும் இன்றைய இயலாமையும் ? - யதீந்திரா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் (ஈ.பி.ஆர்.எல்.எப்) அவர்களது, தலைவர் பத்மநாபா கொலைசெய்யப்பட்ட தினத்தை, தியாகிகள் தினமாக நினைவு கூர்ந்துவருகின்றனர். அண்மையில் 31வது தியாகிகள் தினம் நினைவு கூரப்பட்டது. நிகழ்வில் பேசுமாறு, பத்மநாபா அபிவிருத்தி ஒன்றியம் என்னும் பெயரில் இயங்கிவரும் ஒரு பிரிவினர், என்னை அழைத்திருந்தனர். இதன் போது நான் பகிர்ந்துகொண்ட சில விடயங்களையே – இங்கு கட்டுரையாக்கியிருக்கின்றேன். இதிலுள்ள கவலைக்குரிய விடயம் என்னவென்றால், தங்களின் தலைவருக்கான நினைவு தினத்தைக் கூட, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினரால், கருத்தொருமித்து, ஒருங்க…
-
- 0 replies
- 334 views
-
-
ஆசியாவின் கேவலம் ? நிலாந்தன். July 3, 2022 கோட்டாபய வீட்டுக்கு போகவில்லை. ஆனால் அவரை வீட்டுக்கு போகக் கேட்டுப் போராடிய மக்கள்தான் தமது வீடுகளுக்குள் முடங்கும் ஒரு நிலை உருவாகி வருகிறது. எரிபொருள் பிரச்சினையால் நாடு ஏறக்குறைய சமூக முடக்கம் என்ற நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.தெருக்களில் தனியார் வாகனங்களை பெருமளவுக்கு காணமுடியவில்லை.பொதுப்போக்குவரத்து வாகனங்கள்தான் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஓடுகின்றன.பொதுப் போக்குவரத்து வாகனங்கள் பிதுங்கி வழிகின்றன.சனங்கள் வாகனங்களில் எங்கெல்லாம் தொங்கலாமோ அங்கெல்லாம் தொங்கிக்கொண்டு பயணம் செய்கிறார்கள்.ஆபத்தான பயணங்கள். யாழ்ப்பாணத்தின் தெருக்களில் சைக்கிள்கள் மறுபடியும் அதிக…
-
- 1 reply
- 589 views
-
-
கூட்டமைப்புக்கு மாற்றாக ஓர் அணியை இந்தியா அனுமதிக்குமா? முக்கியமான தருணத்தில், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இந்தியப் பயணம், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில், புதியதோர் அரசியல் கட்சியின் ஊடாக அல்லது புதியதோர் அரசியல் கூட்டணியின் ஊடாக, போட்டியிடுவதற்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தும், கேள்வி-பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு விட்டே, அவர் இந்தியாவுக்குச் சென்றிருந்தார். இரண்டு வாரங்கள் இந்தியாவில் தங்கியிருந்து, ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்வதாகக் கூறியிருந்தாலும், அதைப் பலரும் நம்பத் தயாராக இருக்கவில்லை என்பதே உண்மை. வடக்கு மாகாணசபைத் தேர்தலில், கூ…
-
- 0 replies
- 410 views
-
-
விடுதலைப் புலிகளை அழிக்க சர்வதேசத்தால் உருவாக்கப்பட்ட விசேட படை! என்ன நடந்தது? ஸ்ரீ லங்காவின் விசேட அதிரடிப் படை (STF) பிரிவானது தற்பொழுது பிரமுகர்களின் பாதுகாப்புக்கென ஒதுக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் நாட்டில் தோன்றுகின்ற எந்தவொரு கலவரங்கள் கிளர்ச்சிகள் என்பனவற்றை முறியடிக்கவேண்டிய நிலையில் இருந்து செயற்படுகின்றது. பொலிஸ் மா அதிபரின் கீழ் இயங்குவதால் விசேட அதிரடிப்படை (STF) ஒன்றும் பொலிஸார் கிடையாது. இராணுவத் தளபாடங்களோடு இயங்குவதால் விசேட அதிரடிப்படை ஒன்றும் இராணுவமும் கிடையாது. ஆனால் இராணுவத்தின் சில முக்கியமான அதிகாரங்களும் பொலிஸாரின் முக்கியமான அதிகாரங்களும் ஒருங்கே பெற்ற ஒரு துணை இராணுவக் குழு என்றே சொல்லமுடியும். அவற்றை வைத்து சந்தர்ப்பத…
-
- 0 replies
- 691 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம்? - யதீந்திரா படம் | Tamilguardian தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் என்ன? இது ஒரு நெடுநாள் கேள்வி. ஆயினும், தொடர்ந்தும் உச்சரிக்கக் கூடியதாக இருப்பதுதான் இதன் சிறப்பம்சமாகும். ஏன் இது தொடர்ந்தும் முற்றுப்புள்ளியை தொட்டணைக்க முடியாக் கேள்வியாக தொடர்கிறது? முப்பது வருடங்களுக்கும் மேலாக தமிழர் அரசியலுக்கான தலைமைத்துவத்தை வழங்கிக் கொண்டிருந்த பிரபாகரனின் வீழ்சியைத் தொடர்ந்து, அவரால் வனையப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான தலைமைத்துவத்தை பொறுப்பேற்றது. அந்த வகையில் கூட்டமைப்பு தமிழ் மக்களின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்று ஜந்து வருடங்கள் ஆகின்றன. இந்த ஜந்து வருடங்களாக அவ்வப்போது ஒரு கேள்வியும் தலைநீட்டியவாறே இருக்…
-
- 1 reply
- 535 views
-
-
அரசியல் கட்சிகளின் புதிய இலக்கணம் சல்லிக்கட்டுக்காக நடைபெற்ற ‘மெரினா’ போராட்டத்துக்குப் பிறகு, தமிழ்நாடு அரசியல் களம், போராட்டக் களமாக மாறிக் கொண்டிருக்கிறது. மாணவர்களும் மக்களும், தன்னெழுச்சியாக நடத்திய போராட்டம் ‘சல்லிக்கட்டு’ என்றால், அதன் பிறகு, மக்களும் அரசியல் கட்சிகளுமாக நடத்தும் போராட்டங்கள் பல இடம்பெற்று வருகின்றன. அந்த வரிசையில், முதலமைச்சரின் சொந்த மாவட்டத்தில், எட்டு வழி பசுமைச் சாலை அமைக்கும் பணியை எதிர்த்து, அரசியல் கட்சிகளும் சம்பந்தப்பட்ட மாவட்ட விவசாயிகளும் போராடி வருகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மாவட்ட ரீதியிலான போராட்டங்கள் என்றால், பாட்டாளி…
-
- 0 replies
- 238 views
-
-
மைத்திரி; ராஜபக்ஷக்களின் முடிவு(?) மைத்திரிபால சிறிசேனவின் புதிய அவதாரம் ராஜபக்ஷ சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி பற்றிய பேச்சுக்களை ஆரம்பித்து வைத்திருக்கிறது. பெரும் ஆதரவோடும் ஆரவாரங்களோடும் ஆரம்பித்து கோலொச்சிய சாம்ராஜ்யங்களின் சோகமான முடிவுகளை உலகம் கண்டிருக்கிறது. இலங்கைக்கும் அப்படியான வரலாற்றுப் பக்கங்கள் உண்டு. அது, ஒவ்வொரு ஆரம்பத்திற்கும் ஒரு முடிவு உண்டு என்ற உலக நியதியின் அடிப்படைகளில் தோற்றம் பெறும் எண்ணம். ராஜபக்ஷ சாம்ராஜ்யத்திற்கும் அந்த நியதி பொருந்தும் என்று பலரும் நம்புகிறார்கள். உலக நியதி, எதிர்பார்ப்புக்களைத் தாண்டி இலங்கையின் பெரும்பான்மை அரசியல் சூழல் நம்பிக்கைக்கும், நம்பிக்கையீனத்துக்கும் மத்தியில் உழன்றுகொண்டிருக்கிறது. ஏனெனில், ராஜபக்ஷக்களின் மீது ந…
-
- 0 replies
- 794 views
-
-
தமிழர்களின் ஐக்கியத்தை வலியுறுத்திய முல்லைத்தீவு நிலமீட்புப் போராட்டம் மூல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்ற நில அபகரிப்பு மற்றும் சிங்களக் குடியேற்றங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கட்சி பேதமின்றி ஒன்று கூடித் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறாதென அரசதலைவர் தெரிவித்துள்ள நிலையிலும், இந்தப் போராட்டம் நடந்து முடிந்துள்ளது. தெற்கின் பல பிரதேசங்கள் மகாவலி கங்கையின் நீரால் செழிப்புடன் காணப்படுகின்றன. ஆண்டு தோறும் நீர் கிடைப்பதால் மூன்ற…
-
- 0 replies
- 373 views
-
-
நவதாராளவாதத்துக்கு எதிரான இறையாண்மையைப் பரப்புதல் Editorial / 2018 நவம்பர் 20 செவ்வாய்க்கிழமை, மு.ப. 05:22 Comments - 0 - அகிலன் கதிர்காமர் மூன்று வாரங்கள் நீடித்த பரிகாசமான அரசாங்கமும் நாடாளுமன்றத்துக்குள் காணப்பட்ட மூர்க்கத்தனமான செயற்பாடுகளும், பாரதூரமான அரசியல் நெருக்கடிக்குள் நாட்டைத் தள்ளியுள்ளன. நாடாளுமன்ற ஜனநாயகம், அரசமைப்புச் சட்டபூர்வத்தன்மை ஆகியன தொடர்பான கேள்விகளிலேயே, ஊடகங்களின் கவனமும் பொதுமக்களின் கலந்துரையாடலும் கவனஞ்செலுத்துகின்ற போதிலும், இந்த நெருக்கடியின் அடிப்படையான காரணங்களாக, பல தசாப்தங்களாகத் தொடர்ந்த நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகள் மூலமாக உருவாக்கப்பட்ட ஸ்திரமற்ற நிலைமையும் உடைமையழிப்பும் காணப்படுகின்றன. கடந்த சில வா…
-
- 0 replies
- 500 views
-
-
எதிர்பார்த்துக் காத்திருத்தல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜனவரி 03 வியாழக்கிழமை, மு.ப. 12:52 இன்னோர் ஆண்டு எம்முன்னே விரிகிறது. எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் நிறைந்ததாக அது இருக்கிறது. நடக்கும் என்பார் நடக்காது; நடக்காது என்பார் நடந்துவிடும். எதிர்காலத்தை எதிர்வுகூற விளையும் ஒவ்வொரு தடவையும் இந்தச் சொற்றொடரை நினைத்துக் கொள்வது உண்டு. எதிர்காலத்தைக் கணிப்பது கடினம். அதிலும், அரசியலில் எதிர்காலத்தைக் கணிப்பது இன்னமும் சிரமம். நிச்சயமின்மைகளால் நிரம்பி வழியும் ஒன்றன் திசைவழிகள் குறித்து, நிச்சயமாகச் சொல்வது சவால் மிக்கது. ஆனால், அது முடியாத காரியமுமல்ல. சாத்தியங்களையும் சாத்தியமின்மைகளையும் கணிக்கவியலும்; ஆய்வறிவாளனின் கலையும் திற…
-
- 0 replies
- 1.1k views
-
-
CTC அதனது செயற்பாடுகளை சீர் செய்தால் இப்புதிய கூட்டின் தேவையிருக்காது….கனேடியத் தமிழர் கூட்டு
-
- 1 reply
- 505 views
-
-
தமிழ்க் கட்சிகளை ஐக்கியப்படுத்தும் அரசாங்கம்? நிலாந்தன். ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வாய்மூல அறிக்கை அண்மையில் வெளிவந்தது.அதில் கூறப்பட்ட விடயங்கள் ஊடகங்களில் வெளிவந்தன.சில காணொளிகளும் அது தொடர்பாக வெளிவந்தன.அதற்கும் அப்பால் அது பற்றிய உரையாடல் பெரிய அளவில் நடக்கவில்லை. ஏனென்றால் தமிழ் மக்களுக்கும் தமிழ் கட்சிகளுக்கும் பல சோலிகள். எத்தனை விடயங்களைப் பற்றி தமிழ் மக்கள் சிந்திப்பது? ஒருபுறம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தீர்வு இல்லை. இன்னொரு புறம் மேய்ச்சல் தரையை மீட்பதற்காக மட்டக்களப்பில் பண்ணையாளர்களும் செயற்பாட்டாளர்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அது ஒப்பீட்டளவில் புதிய போராட…
-
- 0 replies
- 269 views
-
-
எல்லோராலும் தூண்டப்படும் இனமுரண்! May 10, 2024 — கருணாகரன் — வன்முறையானது துப்பாக்கி, கத்தி, வாள், தடி போன்றவற்றால் தாக்கப்படுவதோ தீயினால் எரியூட்டப்படுவதோ மட்டுமல்ல, கடுமையான சொற்கள், ஒரு தரப்பு இன்னொரு தரப்பின் மீது செலுத்தும் அதிகாரம், பிழையான சிந்தனையைத் திணித்தல் போன்றவற்றாலும் நிகழ்வதாகும். அதாவது நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தப்படுமானால் அது வன்முறையே ஆகும்! இலங்கையில் இனவாதச் சிந்தனையே அரசிடமும் பெரும்பாலான அரசியல், ஊடகத் தரப்பினரிடத்திலும் உண்டு. இனவாதச்சிந்தனை என்றாலே அது வன்முறையைக் கொண்டதுதான். அதன் உள்ளீடாக இருப்பது, தமக்கு அப்பாலான தரப்பின் மீது சந்தேகம், அச்சம், எதிர்ப்புணர்வு – பகைமை போன்றவையாகும். …
-
- 2 replies
- 380 views
- 1 follower
-
-
11 SEP, 2024 | 04:48 PM கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு டலஸ் அழகப்பெருமவுக்கு தமது ஆதரவை தெரிவித்தபோது, மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் அந்த முடிவு தவறானதென நான் நேரடியாகவே சுட்டிக்காட்டியிருந்தேன். அதற்கான நியாயபூர்வமான ஆதாரங்களையும் நான் அவருக்கு சொல்லியிருந்தேன். அதிலே மிக பிரதான விடயமாக நான் கூறியிருந்த காரியம் ரணில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுகிறபோது ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு அவரோடு இணைந்து செய்துவந்த கருமங்களில் சிலவற்றை உடனடியாக செய்து முடிக்க இயலும் என்பதாகும். ஏனெனில், ரணில் தனக்கு ஆதரவு தருபவர்களின் கோரிக…
-
- 4 replies
- 439 views
- 1 follower
-
-
ஜனாதிபதியானால் சிறையிலுள்ள கைதிகளை விடுதலை செய்வேன் - கோத்தா உறுதியளித்தாக நல்லை ஆதினம் தெரிவிப்பு Published by T. Saranya on 2019-10-28 15:40:24 முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்தால் சிறையில் உள்ள அனைத்து கைதிகளையும் புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்வேன் என தம்மிடம் உறுதியளித்ததாக நல்லை ஆதின குரு முதல்வர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு இன்று தேர்தல் பிரசாரத்துக்காக வருகை தனத்திருந்த பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச முதலாவதாக நல்லூர் ஆலயத்திற்கு பின்பாக உள்ள நல்லை ஆதின குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றதுடன் அவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்த கலந்துரையாடலின் பின்னர் குரு முதல்வர் ஊடகங்க…
-
- 1 reply
- 586 views
-
-
இலங்கையின் ஏழாவது சனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார். வடக்கு கிழக்கு பெரும்பான்மை தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்காத போதும் தெற்கின் பெரும்பான்மையின மக்களின் பெரும் ஆதரவு கோத்தபாய ராஜபக்சவுக்கு கிடைத்துள்ளது. தேர்தலில் வாக்களிக்கப்பட்ட மக்களின் மனநிலையை காட்டும் இலங்கை சனாதிபதித் தேர்தல் 2019 வரைபடம், பல சேதிகளை சொல்லியுமுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில் தமிழ் மக்களின் வாக்குகளின் உதவியுடன் ரணில் – மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவியேற்றது. எனினும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை, இறுதியுத்த மீறல்கள் தொடர்பான விடயங்கள், காணிப் பிரச்சினைகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் முதலியவை தொடர்பில் அர்த்தபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் நிறைவு பெறாத நி…
-
- 3 replies
- 1.2k views
-
-
கேட்பதற்குத் தமிழ் மக்கள் இருக்கிறார்கள் -இலட்சுமணன் தமிழர் அரசியல் வரலாற்றில், உரிமைப் போராட்டம் அஹிம்சையில் தொடங்கி, ஆயுதப் போராட்டமாகப் பரிணமிப்பதற்கு அடிப்படைக் காரணங்களில் முதன்மையாக, தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழகத் தரப்படுத்தல், அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு போன்றவை காணப்பட்டன. இவை இளைஞர்களிடையே பலத்த விவாதங்களுக்கு உட்பட்டிருந்தன. இவற்றில், சம உரிமை, அத்துமீறிய குடியேற்றங்களை நிறுத்துதல் என்பவையும் முக்கியத்துவம் பெற்றிருந்தன. இந்த வகையில், பல்கலைக்கழகத் தரப்படுத்தல் என்பது, அன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரையில் குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்ட மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியை, மட்டுப்படுத்துவதாக இருந்தது. ஆனால், மறுபுறத்தில், பின்தங்கிய பிரதேச மாணவர்களு…
-
- 0 replies
- 833 views
-
-
கோட்டபாய அரசு ஜெனிவாவை எவ்வாறு எதிர்கொள்ளும்? -யதீந்திரா கோட்டபாய ராஜபக்சவிற்கும் இலங்கையின் முன்னைய ஜனாதிபதிகளுக்கும் அடிப்படையிலேயே ஒரு வித்தியாசமுண்டு. அதாவது, கோட்டபாய ஒரு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி. 1971இல் இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்ட கோட்டபாய, விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முக்கிய தாக்குதல் நடவடிக்கைகளில் நேரடியாக பங்குகொண்ட ஒருவர். உதாரணமாக ஓப்பிரேசன் திரிவிட பலய, ஓப்பிரேசன் லிபரேசன் (வடமாராட்சி ஒப்பிரேசன்) போன்றவற்றை குறிப்பிடலாம். வடமாராட்சி ஓப்பிரேசன் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கூட்டு இராணுவ நடவடிக்கை. யாழ்குடாநாட்டை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒன்று. இந…
-
- 1 reply
- 635 views
-
-
புதிய பரிமாணம் ! காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் புதிய பரிமாணத்துக்குள் பிரவேசித்திருக் கின்றது. முடிவின்றி தொடர்கின்ற இந் தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும் என்பதற்கான போராட்டங்கள் வருடக் கணக்காகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. நிலைமாறுகால நீதியின் அடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புக் கூறுவதற்காக உருவாக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் என்ற பொறிமுறை செயல் வல்லமை அற்ற நிலையில் தேங்கி நிற்கின்றது. இத்தகைய பின்னணியில்தான் காணா மல் ஆக்கப்பட்டோர் விவகாரம் புதிய பரி மாணத்துக்குள் பிரவேசித்திருக்கின்றது. காணாமல் போனவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள் என…
-
- 0 replies
- 819 views
-
-
புள்ளடிக்குக் காத்திருக்கும் கங்காரு ப.தெய்வீகன் ஸ்திரமற்ற அரசியல்சூழல் என்பது, இன்றைய திகதியில் நாடுகளுக்கு இடையிலான தொற்றுநோய் என்று கூறலாம். எங்குமே, அரசியல் நிம்மதியென்பது பற்றாக்குறையாகவே காணப்படுகிறது. இன்றிருக்கும் அரசாங்கம், நாளை நிலைக்கும் என்ற உறுதியில்லை. இன்று ஆளும் ஜனாதிபதியோ, பிரதமரோ, நாளை காலையில் பதவியிலிருப்பர் என்று உத்தரவாதம் இல்லை. 'ஆட்டுவிப்பார் யாரொருவர் ஆடாதோரா கண்ணா'என்பதுபோல, அரசியல் என்பது இப்போதெல்லாம் முழுமையாகவே திரைமறைவிலிருந்து ஆட்டுவிக்கும் வஞ்சக நாடாகமாகிவிட்டது. இந்த ஈடாட்டத்தின் ஓர் அங்கமாக, அவுஸ்திரேலியா, கடந்த மூன்று வருடங்களாக அரசியல் ஸ்திரமற்ற நிலையில் அகப்பட்டு அல்லாடிக் கொண்டிருக்கிறது. அந்த ஈடாட…
-
- 0 replies
- 468 views
-
-
போர்க் குற்ற விசாரணையை மேற்கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டால் சிறிலங்காவில் இராணுவச் சதி ஒன்று ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்பது அமெரிக்காவிற்கு நன்கு தெரியும். இந்தியாவும் இதையொத்த எண்ணப்பாட்டையே கொண்டுள்ளது. இவ்வாறு சிலோன் ருடே ஆங்கில நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது தொடர்பாக, சிறிலங்காவிற்கான சீனத் தூதுவர் ஜி ஷியான்லியாங் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சிறிலங்காவின் உள்விவகாரங்களில் வெளிச்சக்திகள் தலையீடு செய்வதை சீனா எதிர்ப்பதாக தூதுவர் ஜி ஷியான்லியா…
-
- 0 replies
- 406 views
-
-
வேடன்;வாகீசன்;முருகப்பெருமான் - நிலாந்தன் சில மாதங்களுக்கு முன் கேரளாவை சேர்ந்த வேடனின் Rap – ரப் பாடல்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பரவின. இப்பொழுது வாகீசனின் பாடல். வேடன் யாழ்ப்பாணத்து தாய்க்கும் மலையாளத்து தகப்பனுக்கும் பிறந்தவர். வாகீசன் யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்தவர். இருவருமே குறுகியகால இடைவெளிக்குள் தமிழ் சமூகவலைத் தளங்களில் லட்சக்கணக்கானவர்களைக் கவர்ந்திருக்கிறார்கள். வேடன் 2020ல் இருந்து பாடுகிறார். அவர் வாகீசனிடம் இருந்து வேறுபடும் இடங்களில் ஒன்று, அவர் அதிகம் ஒடுக்கப்படும் சமூகங்களின், மக்களின் குரலாக ஒலிப்பதுதான். அவருடைய முதலாவது முயற்சி “குரலவற்றவர்களின் குரல்” என்ற தலைப்பின் கீழ்தான் வெளிவந்தது. அவர் ஈழத் தமிழர்களின் அரசியலில் தொடங்கி சிரியா,பாலஸ்தீன…
-
- 0 replies
- 259 views
-
-
தேர்தல்களின் போது மக்கள் ஏன் ஏமாறுகிறார்கள்? எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 ஜூலை 01 வருகிறது, மற்றொரு தேர்தல். ஆனால், எமக்குத் தெரிந்த காலத்தில் இருந்து, ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாற்றப்பட்டே வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் சில கட்சிகள், முக்கிய சில வாக்குறுதிகளை முன்வைத்து, தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளனவே தவிர, நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆக்கபூர்வமான திட்டமொன்றை முன்வைத்து, எந்தவொரு கட்சியும் ஆட்சியைக் கைப்பற்றியதில்லை. சில சந்தர்ப்பங்களில்,சில கட்சிகள் அளித்த வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்றிய போதிலும், அதன் மூலம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அதாவது, எந்தவொரு கட்சியும் ஆட்சிக்கு வந்த…
-
- 0 replies
- 556 views
-
-
எழுக தமிழ்: தமிழ் மக்கள் தற்காப்பு அரசியலை விட்டு வெளிவர வேண்டும் - நிலாந்தன்:- தமிழ் மக்களின் அரசியல் ஒருவித தற்காப்புப் பொறிக்குள் சிக்குண்டிருக்கிறது. இப்பொழுது கொழும்பு அல்லது வெளித்தரப்புக்கள் ஏதாவது ஒரு நகர்வை மேற்கொண்டால் அதற்கு பதில்வினையாற்றும் ஒரு தரப்பாகவே தமிழ்த்தரப்பு காணப்படுகிறது. ஆனால் ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் நிலைமை வேறாகவிருந்தது. தமிழ்த்தரப்பு மேற்கொள்ளும் ஒரு தாக்குதலுக்கு எதிர்த்தரப்பும் வெளித்தரப்புக்களும் பதில்வினையாற்றும் நிலைமை அப்பொழுது காணப்பட்டது. இவ்வாறு தமிழ்த் தரப்பானது பதில்வினையாற்றும் ஒரு தரப்பாக மட்டும் சுருங்கிக் காணப்படுவது என்பது கடந்த ஏழாண்டுகளாக மட்டும்த்தான் …
-
- 0 replies
- 476 views
-
-
பிரிட்டனின் திட்டம்.-யூதர்களின் நம்பிக்கை துரோகம். பிரிட்டனின் திட்டம். நிலமெல்லாம். ரத்தம் - பா. ராகவன். பாலஸ்தீன் யாருடையது? யூதர்களுக்கும் அரேபிய முஸ்லிம்களுக்கும் சொந்தமான பூமி அது. நல்லது. பாலஸ்தீனில் யார் பெரும்பான்மையானோர்? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யூதர்கள் பெரும்பான்மையானோராகவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிட்டத்தட்ட இரு தரப்பினரும் சம அளவினராகவும், நவீன காலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையானோராகவும் அங்கே இருந்திருக்கிறார்கள். இதனை இந்தத் தொடரின் பல்வேறு அத்தியாயங்களில் இடையிடையே பார்த்திருக்கிறோம். இப்போது மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டியது அவசியமாகிறது. காரணம், இந்தக் குழப்பத்தால்தான் பாலஸ்தீனை எப்படிப் பிரிப்பது என்று பிரிட…
-
- 0 replies
- 1.1k views
-