அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
வடக்கிலும் கிழக்கிலும் தீவிரவாதப் போக்கின் செல்வாக்கு எம்.எஸ்.எம். ஐயூப் / “தற்போதைய தலைமை போய், மாற்றுத் தலைமை உதித்தால், மீண்டும் கூட்டமைப்பின் சார்பில், முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்குச் சாத்தியம் உள்ளது” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியதாக, ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதாவது, “விக்னேஸ்வரனை இனி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்குவதில்லை” என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ சுமந்திரன் கூறி வருவதைப் போலவே, “இனி, கூட்டமைப்பின் கீழ், தேர்தலில் நிற்கப் போவதில்லை” என விக்னேஸ்வரனும் கூறுகிறார். …
-
- 0 replies
- 679 views
-
-
ஐ.அமெரிக்காவின் சிறிசேன தான் ட்ரம்ப் Gopikrishna Kanagalingam / 2019 ஜனவரி 03 வியாழக்கிழமை, மு.ப. 01:24 கடந்தாண்டின் நவம்பர் மாதத்தின் இறுதிப் பகுதியில், இப்பத்தியாளரால், “இலங்கையின் ட்ரம்ப் தான் சிறிசேன” என்ற தலைப்பில் பத்தியொன்று பிரசுரிக்கப்பட்டது. இருவருக்குமிடையிலான ஒற்றுமைகள் குறித்தும் அதிகாரவய ஆட்சி குறித்தும், அதில் அலசப்பட்டது. ஆனால், அப்பத்தி பிரசுரிக்கப்பட்டுச் சில வாரங்கள் ஆகியுள்ள நிலையில், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மேலுமதிகமான குழப்பங்களை ஏற்படுத்தி, குழப்பங்களை விளைவிக்கும் தலைவர்களில் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறார். இச்சூழ்நிலையில், “ஐக்கிய அமெரிக்காவின் சிறிசேன தான் ட்ரம்ப்” என்று இப்போது சொல்லக்கூடியதாக இருக்கிறது. …
-
- 0 replies
- 484 views
-
-
விக்னேஸ்வரனின் முள்ளிவாய்க்கால் உரை அரசின் மீது மட்டுமல்ல கூட்டமைப்பின் மீதும் விரல் சுட்டுகின்றதா? யதீந்திரா படம் | AP Photo/Eranga Jayawardena, NEWSOBSERVER முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கான அஞ்சலி நிகழ்வின் போது வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆற்றிய உரையில், அவர் பல்வேறு விடயங்களை அடையாளப்படுத்தியிருக்கின்றார். போர் முடிவுற்று ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் கூட, போரில் உயிரிழந்த பொது மக்கள் தொடர்பான உண்மைநிலை இன்னும் வெளிக்கொணரப்படவில்லை என்று தெரிவித்திருக்கும் விக்னேஸ்வரன், மக்களின் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை கண்டறிவதற்கான உண்மையான – நம்பகமான விசாரணை பொறிமுறை ஏற்படுத்தப்பட்டமையானது, தமிழ் மக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்திய…
-
- 0 replies
- 933 views
-
-
அதிகார பேராசை பிடித்து மகிந்த இராஜபக்சவும் அவருடைய கூஜா தூக்கிகளும் குட்டையைக் குழப்பிக் கொண்டேயிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இவர்களுடைய திட்டங்களையெல்லாம் பொடிப்பொடியாக்குவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருப்பவர் தீட்டக் கூடிய சதித் திட்டங்கள் பலவுண்டு. அதிலொன்றுதான் Giving a long enough rope to hang himself என ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற முறையாகும். அதாவது நல்ல நீட்டான கயிறு திரித்துக்கொடுத்து அக்கயிறைக் கொண்டே ஒருவர் தன்னைத்தானே தூக்கிலிட வைப்பது என இதற்குப் பொருள்படும். மகிந்த இராஜபக்ச மெதமுலனவில் ஏற்பாடு செய்யும் ஒவ்வொரு கூட்டத்திலும் கட்சித் தலைவர் தனது ஆதரவாளர்களையும் தனக்கு ஆதரவான அமைச்சர்களையும் மகிந்த ஆதரவாளர்களாக பாசாங்கு பண்ணி அனுப்பி வைப்பதி…
-
- 0 replies
- 264 views
-
-
எல்லா போர்களிலும் வென்ற இஸ்ரேலை முடக்கிய ஈரான் | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்
-
- 0 replies
- 623 views
-
-
தமிழர்கள், முஸ்லிம்கள் ஜனாதிபதியாக வர முடியுமா? இலங்கைத்தீவின் வடகிழக்கில் வாழும் ஈழத் தமிழர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு விருப்பம் தெரிவிக்கின்றனர். மக்களின் இந்த விரும்பங்களுக்கு ஏதுவாக சிவில் சமூக அமைப்புகள் ஒன்று கூடி கலந்துரையாடி வருகின்றன. இது 95 சதவிகிதம் இணக்கமாகத் தெரிகிறது. யாழ்ப்பாணம் - மட்டக்களப்பு உள்ளிட்ட வடக்கு கிழக்கிலிருந்து மொத்தம் 46 சிவில் அமைப்புகள் இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்து வருகின்றன. ஆரம்பக் கலந்துரையாடல்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைத்துக் கொள்ளப்படவில்லை. 'பொது பொறிமுறை'யை அமைத்த பின்னரே சிவில் அமைப்புக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளைச் சந்தித்து தமிழ் பொது வே…
-
- 0 replies
- 296 views
-
-
இவ்வாண்டு ஜனவரி 8 இற்குப் பின்னிருந்து இலங்கைத் தீவின் ஒட்டுமொத்த மனித உரிமைச் சூழலானது ஒப்பீட்டளவில் தேறி வருகிறது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை இம்மாற்றங்களில் அதிகமானவை மேலோட்டமானவையே. ஆனால் சிங்கள முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை குறிப்பிடத் தக்களவுக்கு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஜனவரி 08 இற்குப் முன்பிருந்த நிலைமைகளோடு ஒப்பிடுகையில் கடந்த பத்து மாதங்களாக தென்னிலங்கையில் மனித உரிமைச் சூழலானது ஒப்பீட்டளவில் மேம்பாடடைந்து வருகின்றது. இந்த வளர்ச்சியை சிங்கள மக்கள் மட்டும் போராடிப் பெறவில்லை. தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவர்களும் சேர்ந்து பெற்ற வெற்றி இது. தமிழ் வாக்குகள் இல்லை என்றால் மாற்றம் நிகழ்ந்திருக்காது. அதாவது தமிழ் மக்கள் வாக்களித்திருக்காவிட்டால் …
-
- 0 replies
- 241 views
-
-
மறக்கப்பட்ட தென் மாகாணத் தமிழர்கள் – ஓர் அடையாளத் தேடலுக்கானப் பயணம் படம் | UNHCR “எங்களுக்குக் குழந்தைகளை தொட்டிலில் இட்டுத் தமிழில் தாலாட்டுவதற்குக்கூட உரிமை கிடையாது” – இது மாத்தறை மாவட்டத்தில் சமூகப் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு இளம் யுவதியின் ஆதங்கம். “என் அம்மாவின் பெயர் புஷ்பகலா, அப்பாவின் பெயர் விஸ்வநாதன், எனது வீட்டுப் பெயர் அனுஷா, பாடசாலையில் எனது பெயர் திலினி” – இது ஒரு சிறுமியின் பதில். “என் அம்மாவின் பெயர் சரோஜா, அப்பாவின் பெயர் பெருமாள், எனது வீட்டுப் பெயர் ஷோபா, பாடசாலைக்கு கிஷானி” – இது மற்றொரு சிறுமியின் பதில். “அம்மாவின் பெயர் குமாரி, அப்பா செல்லமுத்து, மஞ்சு என என்னை வீட்டில் அழைப்பார்கள், ஆனால், பாடசாலையில் நான் தேஷாணி” – இது இன்ன…
-
- 0 replies
- 918 views
-
-
2019: காலம் கலைத்த கனவு தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 டிசெம்பர் 26 காலம் கனவுகளையும் கற்பனைகளையும் சாத்தியங்களையும் எதிர்பார்ப்புகளையும் தன்னுள் உட்பொதிந்து வைத்திருக்கிறது. காலத்தின் விந்தையும் அதுவே. கடந்தகாலத்தின் மீதான ஏமாற்றங்களும் நிகழ்காலத்தின் மீதான நிச்சயமின்மைகளும் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளை உருவாக்கி விடுகிறது. இது புதிதன்று. ஆனால் மனித மனம் நம்பிக்கையென்னும் பிடியை இறுகப் பற்றியபடி நூலில் நடக்கும் ஆபத்தான விளையாட்டில் இறங்கி விடுகிறது. இதன் பலன்கள் நாமறிந்ததே. இதையே கடந்து போகும் இவ்வாண்டும் சொல்லிச் செல்கிறது. கடந்து போகும் இவ்வாண்டு, வாலறுந்த பட்டம் போல் அனைத்துத் திசைகளிலும் அலைக்கழிந்து அலைக்கழித்து தனது முடிவை எட்டுகிறது. கன…
-
- 0 replies
- 902 views
-
-
[size=4]முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் அன்னை இட்ட தீ அடி வயிற்றிலே விஜயன் இட்டதீ எங்கும் மூளவே[/size] [size=2] [size=4]காலம் முழுதும் கண்ணீரை உற்பவிக்கும் கரும்புகை போல எந்தப் பயனும் இல்லாமல் அலைபடுவதை விடவும் கணப்பொழுதேனும் தீப் பொறியாய் மின்னி பிறர்க்கு ஒளி கொடுத்துவிட்டு மறையும் ஆன்மாக்கள் இன்னமும் இருக்கவே செய்கின்றன. இந்த ஆன்மாக்களுக்கு, ஒரு மணிநேர உண்ணாவிரதத்தோடு தன் வாரிசுகளுக்கு அமைச்சுப் பதவி கேட்கத் தெரியாது. பணத்துக்காக உடலில் பெற்றோலை ஊற்றுவது போல பாசாங்கு பண்ணத் தெரியாது. அரசியல் தலைவர்களின் சுயநல ஊளையிடல்களுக்காக வாலாட்டத் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் பிறர் துன்பத்தைப் போக்கத் தன்னை ஆகுதியாக்குதல் மட்டுமே.…
-
- 0 replies
- 681 views
-
-
இந்தியாவை நோக்கிச்செல்லும் தமிழ்க் கட்சிகள் – நிலாந்தன்! அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மீனவர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடல் தொழில் அமைச்சரின் இணைப்பாளராகிய ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை அகற்றி, சீனத் தூதரகத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டிருந்தார். ஓர் அமைச்சருடைய இணைப்பாளர், அதிலும் குறிப்பாக ஆளுங்கட்சியின் வேட்பாளராக பிரதேச சபைகளில் போட்டியிட்டவர், அவ்வாறு பகிரங்கமாக பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுகிறார். அதுதொடர்பாக அவர் சார்ந்த கடல் தொழில் அமைச்சரோ அல்லது அரசாங்கமோ இதுவரை உத்தியோகபூர்வமாக மறுப்பு எதையும் தெரிவித்திருக்கவில்லை.. அரசாங்க அமைச்சரின் இணைப்பாளர் அவ்வாறு கூறிய அடுத்தடுத்த நாள், ஈழ மக்கள…
-
-
- 2 replies
- 277 views
- 1 follower
-
-
கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் மத்தியில் உள்ள பிளவுகளும் முரண்பாடுகளும் கூட, ‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பதாகத்தான் உள்ளது. வடக்கு, கிழக்கில் இதுவரை காலமும் கோலோச்சி வந்த தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் வலுவான நிலைக்கு, இந்தப் பொதுத் தேர்தல், ‘சாவுமணி’ அடித்து விடுமோ என்ற கலக்கம், தமிழ் மக்கள் பலரிடம் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளுடன், சுயேட்சையாகப் போட்டியிடும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் போன்றனவே, இப்போது தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பதில், கவனம் செலுத்தக் கூடியனவாக உள்ளன. இத்தகைய கட்சிகள் மத்திய…
-
- 0 replies
- 510 views
-
-
ஈழப்படுகொலை ஓர் ஊடகவியலாளரின் சாட்சியம் ஃபிரான்ஸிஸ் ஹாரிசன் தமிழில்: என்.கே. மகாலிங்கம் அதிபயங்கரமான படுகொலைகள் நடந்த அந்தப் பொன்னிற மணல் பிரதேசத்திலிருந்து தப்பி வருகிறார் லோகீசன். ஆறு அடி உயரம். மழிக்கப்படாத தாடி. நீண்ட குழம்பிய தலைமுடி. இருபத்தேழு வயது. தன் தந்தையை ஒரு குழந்தையைப் போல் தூக்கி வருகிறார். தன் தலைக்கு மேலாகப் பறந்துகொண்டிருக்கும் துப்பாக்கிக் குண்டுகளை அவர் கவனிக்கவில்லை. காலடியில் கிடக்கும் செத்த உடல்களைக் கவனிக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவருக்கு இப்போது தண்ணீர்த் தாகம். பயங்கரமான தண்ணீர்த் தாகம். அது மட்டுந்தான் அவருக்கு இப்போது நினைவிலிருக்கிறது. அது 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம். கொடுமையான வெயில் எரிக்கும் பின் மதியம். …
-
- 8 replies
- 1.9k views
-
-
9/11: 19 ஆண்டுகளின் பின்னர் இலங்கை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 செப்டெம்பர் 11 , மு.ப. 09:12 - 0 - 38 AddThis Sharing Buttons இன்றைக்கு 19 ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், உலகையே புரட்டிப் போட்டது. அதன் பின்னரான உலக ஒழுங்கில், உருவான சொல்லாடல்கள் இன்னும் வலிமையானதாக இருக்கின்றன. அத்தாக்குதலின் பின்னர், அமெரிக்கா உருக்கொடுத்த ‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்’ என்ற எண்ணக்கரு, உலகெங்கும் எதிரொலித்தது; விடுதலைப் போராட்ட இயக்கங்களைத் தின்…
-
- 0 replies
- 479 views
-
-
பிரிட்டிஷ் வரலாற்றிலேயே நடந்த மிக மோசமான சம்பவம் இதுதான். இதைப்பற்றி அப்போதே வின்ஸ்டன் சர்ச்சில் மிகச்சரியாக ‘அசுரத்தனமான செயல்’ என்று கண்டித்திருந்தார். இங்கே நடந்ததை நாம் எப்போதும் மறக்கக்கூடாது. அமைதிப் போராட்டங்களுக்கான உரிமையை பிரிட்டன் எப்போதும் காக்கக்கூடிய நிலைக்கு நாமெல்லாம் உறுதி ஏற்க வேண்டும். - ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் வருகையாளர் பதிவேட்டில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரான், பிப். 20, 2013 அன்று எழுதியது... “அமிர்தசரஸ் நகரம் அன்று இருந்த நிலையை உணர்ந்த பலர் நான் செய்தது சரியென்று சொல்கிறார்கள். நிறைய பேர் நான் மாபெரும் தவறு இழைத்து விட்டதாகவும் கூறுகிறார்கள். நான் இப்போது சாக விரும்புகிறேன். மேலுலகம் சென்று என்னை படைத…
-
- 4 replies
- 936 views
-
-
கூட்டமைப்புடன் முட்டி மோதிக்கொள்ளும் சுவாமிநாதன் அரசியல் களத்தில், அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முரண்பாடுகளும், முட்டுப்பாடுகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. ஐ.தே.க.வின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம். சுவாமிநாதன், அமைச்சராகப் பதவியேற்ற பின்னர், வடக்கில் 65 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைக்கும் பாரிய திட்டம் ஒன்றை முன்வைத்தார். இங்கு தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், அமைச்சர் சுவாமிநாதனுக்கும் இடையில் மோதல் உருவானது. இந்திய வம்சாவளி வர்த்தகரான லக்ஸ்மி மிட்டலின், ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்துடன் இணைந்து, 65 ஆயிரம் உலோக…
-
- 0 replies
- 296 views
-
-
சிக்கலில் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் மிகுந்த பரபரப்புடனும், எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியிலும் கடந்த .14ஆம் திகதி இரவு கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. ஹஸனலிக்கு அதிகாரங்களுடன் கூடிய செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று பெரும்பாலான உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதாகவும், அவரைத் தூக்கி வீச நினைப்பது அவர் இக்கட்சிக்கு செய்த அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவிப்பதாக இருக்காதெனவும் இந்த உயர்பீடக் கூட்டத்தில் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. இதனால், ஹஸனலிக்கு அதிகாரங்கள் கொண்ட செயலாளர் பதவி வழங்க வேண்டுமென்ற தீர்மானம் எடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆயினும், ஏற்…
-
- 0 replies
- 628 views
-
-
தமிழர்களின் பிரச்சினைக்கு உலகளாவிய ரீதியில் பேசலாம் என்ற நிலைக்கு தமிழர்கள் மாறியிருப்பது முன்னேற்றகரமானதொன்று – இராமு.மணிவண்ணன் 100 Views சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொதுநிர்வாகத் துறை தலைவர் பேராசிரியர் இராமு.மணிவண்ணன் அவர்கள் ஐ.நா. கூட்டத்தொடரில் தமிழரின் நிலைப்பாடு குறித்து ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் வடிவம் கேள்வி இன்று இலங்கை, இந்தியா, இந்தோபசுபிக் பிராந்தியம், மற்றும் உலகளவில் நிலவும் அரசியல், பொருளாதார தந்திரோபாய நகர்வுகளையும், ஐ.நா உட்பட பன்னாட்டு நிறுவனங்களின் நிலைப்பாடுகளையும் தமிழினம் எவ்வாறு தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்? பதில் இன…
-
- 0 replies
- 314 views
-
-
மே தினம் யாருக்கு? சடங்காதலும் சங்கடங்களும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஆண்டுதோறும் மே தினம் வந்துபோகிறது. அந்நாள் ஒரு விடுமுறை நாள்; அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் என்ற படிமங்களே, இலங்கையர் மனதில் ஆழப்பதிந்துள்ளது. மே தினத்துக்கு என்று உன்னதமான வரலாறு உண்டு. உலகெங்கும் உழைக்கும் மக்களின் ஒரே தினம், மே தினம் மட்டுமே என்ற உண்மை, எம்மில் பலருக்கு உறைப்பதில்லை. உலகளாவிய ரீதியில், உழைக்கும் மக்கள் போராடிப் பெற்ற சுதந்திரமே, மே தினமெனப்படுகின்ற சர்வதேச தொழிலாளர் தினமாகும். நீண்ட போராட்டங்களின் பின்னரே, உழைக்கும் மக்கள் தங்களைக் கொண்டாடுதற்கும் தங்கள் உரிமைகளுக்கான குரலை எழுப்புவதற்குமான தினமாக, இது அங்கிகரிக்கப்பட்டது. எனினும், பல நாடுகளில் மே தின…
-
- 0 replies
- 714 views
-
-
திணறும் ஆளுங்கட்சி; திக்குத் தெரியாத எதிர்க்கட்சி என்.கே. அஷோக்பரன் எரிபொருள் விலை அதிகரிப்புத்தான் இந்த வாரத்தின் மிகப்பெரிய பரபரப்பு. இலங்கையின் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களின் விலை அதிகரிப்பு பற்றி அண்மையில் அறிவித்திருந்தார். விலை அதிகரப்பு எனும் போது, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் அதிகரிப்பு அல்ல. பெட்ரோல் விலை ஒரேயடியாக, 20 ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு, உதய கம்மன்பில தரப்பு சொல்லும் நியாயம் வினோதமானது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகளின் எரிபொருள் விலையைவிட, இலங்கையில் எரிபொருள் விலை குறைவு என்பதாகும். இந்த அபத்தமான வாதம் ஒருபுறமிருக்க, மறுபுறத்தில், இந்த விலையேற்றத்துக்கான உண்மை…
-
- 0 replies
- 479 views
-
-
யாழில் சிறீலங்காப் படையினரால் வளங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுவது தொடர்பாக இப்பகுதியில் பல தடவைகள் வெளியாகியிருந்தன. கடந்தவாரமும் இப்பகுதியில் சிறீலங்காப் படையினரின் ஏற்பாட்டில் வலி வடக்கில் சட்டவிரோத சுண்ணாம்புக்கல் அகழ்வது தொடர்பிலான தகவல்களைத் தந்திருந்தோம். இந்நிலையில் யாழ்குடாவுக்கே தனித்துவம் மிக்க பனை வளமும் சிறீலங்கா படையினரின் பாராமுகத்துடன் தொடர்ந்து அழிக்கப்படுவதாக பனை அபிவிருத்திச் சபையினர் குற்றம் சாட்டியுள்ளனர். சட்டவிரோதமான முறையில் பனை மரங்கள் தறிக்கப்படுவதற்கு எதிராக சிறீலங்கா காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என பனை அபிவிருத்திச் சபையினர் கவலை வெளியிட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் பனை மரங்கள் சட்டவிரோதமான முறையில் அழிக்கப்படுவது தொடர்பில் க…
-
- 0 replies
- 455 views
-
-
இனவாத முற்றுகை அரசியல் ரீதியாகவும் மத ரீதியாகவும் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்களான தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் அடக்கியொடுக்கி வைத்திருக்க வேண்டும் என்ற ரீதியிலேயே இதுவரையில் காரியங்கள் இடம்பெற்று வந்திருக்கின்றன. நாட்டில் இனவாதத்தையும் மத ரீதியாக இனக் குழுமங்களுக்கிடையில் வெறுப்பையும் ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. அது மட்டுமல்லாமல், முஸ்லிம்களுக்கு எதிராக இனத்துவேசத்தை ஏற்படுத்தியமைக்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுக்கள…
-
- 0 replies
- 569 views
-
-
மாகாண அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான வியூகங்கள் அதிகாரத்துக்கான போட்டி என்பது மிகவும் முக்கியமானது. அதிலும், அரசியல் அதிகாரம் மற்றும் அதன் வழிவந்த பதவிகள் மீதான வேட்கை, பல சூட்சுமங்களைக் கொண்டது. ஏனெனில், ஆட்சியதிகாரமும் பதவியும் ஒருவிதமான போதை. ‘அது’ இல்லாமல் பயணித்தால், சம்பந்தப்பட்டோருக்கு தள்ளாடுவது போலிருக்கும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசமைப்பில் 18ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்ததும், உரிய காலத்துக்கு முன்னர், தேர்தலை நடத்தியதும், இப்போது நல்லாட்சி அரசாங்கம் தேர்தல்களை நடத்துவதற்கு பின்னிற்பதும், ஏன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “படைக்குத் திருநங்கைகளையும் ஆட்சேர்ப்பு செய்யத் தடை” போன்ற அரசியல் சார்பற்ற விடயங்களைக் கூற…
-
- 0 replies
- 502 views
-
-
குரங்கு பிடிக்க முயன்ற ரெலோ; திட்டத்தை மாற்றிய தமிழரசுக் கட்சி! தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆரம்பித்த தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து இந்தியப் பிரதமருக்கு கோரிக்கைக் கடிதம் எழுதும் முயற்சி தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கின்றது. கடந்த வருடத்தின் இறுதி மாதங்களில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த இந்தப் பயணம், அடுத்த வாரமளவில் கோரிக்கைக் கடிதத்தை இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் இந்தியத் தூதுவரிடம் கையளிப்பதோடு முடிவுக்கு வரும். அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தினை இலங்கைக்கு இந்தியா வழங்கக் கோரும் கடிதத்தைத் தயாரிக்கும் முயற்சியையே தமிழ் பேசும் கட்சிகளை இணைத்துக் கொண்டு ரெலோ முன…
-
- 1 reply
- 514 views
-
-
சம்பந்தனின் தலைமைத்துவத்தின் மீதான நெருக்கடிகள் - யதீந்திரா இன்று ஈழத்தமிழர் அரசியல் என்றால் - அது சம்பந்தன் என்னும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. சமீபத்தில் வாசித்த ஆங்கில கட்டுரை ஒன்றில் தமிழர் அரசியல் திருகோணமலையை மையப்படுத்தியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கட்டுரையாளர் திருகோணமலை என்று குறிப்பிட்டிருப்பது, இரா.சம்பந்தன் திருகோணமலையை சேர்ந்தவர் என்னும் பொருளிலாகும். அந்தளவிற்கு சம்பந்தனின் தலைமைத்துவம் இன்று உற்று நோக்கப்படுகிறது. எனவே இன்றைய அர்த்தத்தில் சம்பந்தனை தவிர்த்து எவராலும் தமிழர் அரசியலை கையாள முடியாது. எவ்வாறு 2009இற்கு முன்னர் பிரபாகரனை தவிர்த்து எவராலும் தமிழர் அரசியலை கையிலெடுக்க முடியவில்லையோ, அத்தகையதொரு நிலைமையே தற்போது சம்பந்தன் விடயத்தில் …
-
- 1 reply
- 649 views
-