அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
நாட்டைக் காப்பாற்ற இரட்சகர்களைத் தேடுதல் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan இலங்கை தீவு மிகப்பாரதூரமான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து நிற்கிறது. இதனை நெருக்கடி நிலை என்று விளிப்பது, அதன் பாரதூரத்தன்மையை குறைத்துக் குறிப்பிடுவதாகவே அமையும். நிலைமை அவ்வளவு மோசமாகவுள்ளது. எரிபொருளுக்கு வரிசை, எரிவாயுவுக்கு வரிசை, உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு, மருந்துகளுக்கு தட்டுப்பாடு, உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் அபார விலையேற்றம் என, ஒட்டுமொத்த இலங்கையரும் தப்பிப்பிழைக்கவே தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையர்கள் அனைவரும் எல்லா இடங்களிலும் இந்த நெருக்கடியின் தாக்கங்களை உணர்கிறார்கள். மளிகைக் கடைகளில், எரிபொருள் நிலையங்களில் உள…
-
- 1 reply
- 566 views
-
-
ஜனாதிபதி தேர்வில் தமிழ்த் தேசிய கட்சிகளின் வெளிப்பாடு புருஜோத்தமன் தங்கமயில் புதிய ஜனாதிபதியை தேர்தெடுப்பதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில், தமிழ்த் தேசிய கட்சிகள் மூன்றும், மூன்று விதமான தீர்மானங்களை எடுத்திருந்தன. டளஸ் அழகப்பெரும - சஜித் பிரேமதாஸ அணியை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரித்திருந்தது. ரணில் விக்கிரமசிங்கவை, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆதரித்திருந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ, பாராளுமன்ற வாக்கெடுப்பை புறக்கணித்திருந்தது. தமிழ் மக்களைப் பொறுத்தளவில், ராஜபக்ஷர்களின் சுவடு இல்லாத ஆட்சிக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி ஆராய்ந்து, புதிய ஜனாதிபதியை தேர்தெடுப்பதற்கான வாக்கெடுப்பில், தமிழ்த் தேசிய கட்சிகள் தீர்மானங்களை மேற்கொள்…
-
- 3 replies
- 596 views
-
-
திமுக ஆட்சியமைக்க காங் நிபந்தனையற்ற ஆதரவு பாண்டிச்சேரியில் காங் ஆட்சிக்கு திமுக ஆதரவு மே 12, 2006 சென்னை: திமுக அமைக்கவுள்ள புதிய ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதையடுத்து பாண்டிச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக திமுக அறிவித்துள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. திமுக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 96 இடங்களில் வென்றுள்ள அக்கட்சி, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளது. முதல்வராக கருணாநிதி நாளை பதவியேற்கவுள்ளார். திமுக ஆட்சியில் சேர மாட்டோம், வெளியிலிருந்து ஆதரவு கொடுப்போம் என்று பாமக, கம்யூனிஸ் …
-
- 2 replies
- 1.4k views
-
-
குளிர்கால ஒலிம்பிக்ஸ்: உறையும் பனியில் முகிழ்த்த உறவு கோடைகால ஒலிம்பிக் போட்டியை அறியும் அளவுக்கு நாம், குளிர்கால ஒலிம்பிக் போட்டியை அறிவதில்லை. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகளுக்கு வெளியே பலவற்றைச் சாதித்திருக்கின்றன. இம்முறையும் அதற்கு விலக்கல்ல. தென்கொரியாவின் பியோங்சாங் நகரில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி, அதன் போட்டிகளுக்காகவன்றி, அதைச் சூழ நிகழும் அரசியல் விடயங்களுக்காக மிக்க கவனிப்புக்கு உள்ளாகிறது. தென்கொரியாவில் நடைபெறும் போட்டிகளுக்கு வடகொரியா கொடுத்த முக்கியத்துவம் இவற்றுள் ஒரு முக்கிய விடயமாகும். குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க அணிவகுப்பில், போரால் ப…
-
- 0 replies
- 228 views
-
-
மாறி வரும் உல அரசியல் ஒழுங்கில் சீன நகர்வுக்குள் முடங்கும் இந்தியா- சுயமரியாதையையும் இழந்தது மேற்கின் அணுகுமுறையில் பகைமை நாடுகளான இந்தியா -பாக்கிஸ்தான், ஈரான் - சவுதியை இணைக்கும் சீன உத்தி புதுப்பிப்பு: ஒக். 22 22:24 உலக அரசியல் ஒழுங்கில் பிராந்திய நாடுகளிடையே ஏற்படுகின்ற போட்டிகள் மற்றும் முரண்பாடுகளை தீர்த்துத் தமது புவிசார் அரசியல் - புவிசார் பொருளாதார நலன்களை மையமாகக் கொண்டு அமெரிக்கா போன்ற மேற்குலகமும் ஐரோப்பிய நாடுகளும் மேற்கொண்டு வந்த காய் நகர்த்தல்களைத் தற்போது சீனா தனதாக்கி வருகின்றது. உஸ்பெகிஸ்தான் தலைநகர் சமர்கண்ட் நகரில் செப்ரெம்பர் மாதம் நடைபெற்ற சங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்ட…
-
- 0 replies
- 359 views
-
-
இருப்பதைவிட்டு பறக்க ஆசைப்படுமா தமிழ்க்கட்சிகள்! பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது எதிர்வரும் புதன்கிழமை 12 மணி நேர விவாதம் நடத்தப்படவுள்ளது. காலை 9.30 மணிக்குத் தொடங்கும் இந்த விவாதம், இரவு 9.30 மணிவரை நீடிக்கும் என்றும், அதனைத் தொடர்ந்து 9.30 மணிக்கு மேல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் பாராளுமன்றத் தகவல்கள் கூறுகின்றன. இரகசிய வாக்கெடுப்பு நடக்குமா - பகிரங்க வாக்கெடுப்பு நடக்குமா என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகரமாகத் தோற்கடித்து விடுவோம் …
-
- 0 replies
- 521 views
-
-
தொங்கு நிலை மகிந்தரும் தாங்கு நிலைத் தமிழரும் விடுதலைப்புலிகள் புரட்டாதி 2006 - க.வே.பாலகுமாரன் - தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு முக்கிய பரிமாணமாக பரிணாம அரசியல் போக்கின் விளைவாக அரங்கேறிய போர் நிறுத்த ூ அமைதிப்பேச்சுக் காலகட்டம் தனது வேலையை முடுக்கிவிட்டுள்ளது. இதன் உரிய உச்ச விளைவுகளுக்கு எம் மக்கள் இப்போது நிலையின் காவலர்களான மேற்குலகிற்கோ தமது நீண்டகால நட்பு நாடொன்றினை எவ் விதம் கையாள்வதென்கிற இக்கட்டு. இந்தியா விற்கோ எதிர்பாராத அதிர்ச்சி: இப் பிராந்தியத் தில் தனது உண்மை நண்பன் யார் என்பதை மீளாய்வு செய்யும் நெருக்கடிநிலை. இவ்வாறா நிலை நோக்கி நகர்வதைத் தடுக்கும் வேளை இது. முதலில் சருவதேசத்தின் கதையை நோக்கலாம். கடந்த ஓகஸ்ட்ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
இனப்பிளவை இல்லாமல் செய்ய ஜனாதிபதிக்கு இருக்கும் காலஎல்லை இதுவே January 26, 2023 — கலாநிதி ஜெகான் பெரேரா — பெருமளவு தாமதத்துக்கு பிறகு இறுதியில் தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி தேர்தல்கள் மார்ச் 9 நடத்தப்படும் என்று தீர்மானித்திருக்கிறது. இந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் சட்டத்தினால் அனுமதிக்கப்பட்டதன் பிரகாரம் ஏற்கெனவே ஒரு வருடத்தினால் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. ஒரு வருடத்துக்கும் அப்பால் தேர்தல்களை ஒத்திவைத்தால் அது சட்டவிரோதமான ஆட்சிமுறைச் சிக்கலுக்குள் நாட்டைத் தள்ளிவிடும் என்பதுடன் அதன் விளைவாக சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலை தோற்றுவிக்கும். நாடு இப்போது தேர்தல் திசை நோக்கி நகர்த்தப்படுகிறது. இது ஒன்றும் …
-
- 0 replies
- 815 views
-
-
வித்தியா முதல் றெஜினா வரை.... சமுதாய சம்பிரதாயங்களை மூட்டை கட்டிவிட்டு, நாகரிக அலங்கோலங்களின் அவஸ்தைக்குள் பலர் தங்களைத் தாங்களாகவே தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் அல்லது பிறரால் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவற்றின் விளைவுகள் சமகாலத்தில் பல சமூகப் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. சமூக விரோதச் செயற்பாடுகளையும் அவை தூண்டியிருக்கின்றன. ஆன்மீக ரீதியில் உள்ளத்தை அடக்கி ஆளவேண்டிய ஆறறிவு கொண்ட மனிதன் உள்ளத்தால் அடக்கி ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறான். ஒரு சில வினாடித்துளிகளில் எழுகின்ற உணர்ச்சிக் கோளாறுகளுக்கு அடிமையாகி, அதன் வழியே பலரின் வாழ்க்கையில் விளையாடி, அவர்களும் அழிந்து ம…
-
- 0 replies
- 622 views
-
-
ராஜபக்ஸவும் – சீனாவும் – இலங்கையின் துறைமுகத்தை சீனா பெற்றுக்கொண்டது எப்படி? மரியா அபி-கபீப்- நியூயோர்க் ரைம்ஸ் – மொழியாக்கம் – குளோபல் தமிழ்ச் செய்திகள்… இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஸ தனது பதவிக்காலத்தில் தனது நட்பு நாடான சீனாவிடம் கடன் மற்றும் உதவிகளைப் பெறுவதற்காக ஒரு துறைமுக நிர்மாணத் திட்டத்துடன் போகும் சீனாவிடமிருந்து ஆம் என்ற பதில்களே வந்தது. அதன் சாத்தியப்பாடு குறித்த ஆய்வுகள் இத் துறைமுகத் திட்டம் சரிவராது என்று கூறிய போதும், அடிக்கடி இலங்கைக்குக் கடன் கொடுக்கும் இந்தியாவே இந்தத் திட்டத்துக்கு கடன் கொடுக்க மறுத்துவிட்ட போதும், ராஜபக்ஸாவின் காலத்தில் இலங்கைய…
-
- 1 reply
- 824 views
-
-
தமிழ் மக்களும் ராஜதந்திரிகளும்! நிலாந்தன். சில ஆண்டுகளுக்கு முன் இந்திய வெளியுறவுச் செயலர் யாழ்ப்பாணம் வந்திருந்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட கைக்கடக்கமான தொகையினரை அவர் திண்ணை விருந்தினர் விடுதியில் சந்தித்தார்.சந்திப்பு முடிந்து வெளியே வரும் பொழுது சிவாஜிலிங்கம் என்னிடம் கேட்டார்…. “அடுத்த கிழமை இதுதான் கட்டுரையா?” என்று. நான் சொன்னேன் “இல்லை இது பகிரங்கச் சந்திப்பு அல்ல. மூடிய அறைக்குள் நடந்த சந்திப்பு. இங்கு நான் ஒரு ரிப்போர்ட்டராக வரவில்லை. ராஜதந்திரிகளுடனான சந்திப்பு மூடிய அறைக்குள் நடக்கின்றது என்றால் அதன் பொருள் எல்லாவற்றையும் வெளியே கதைப்பதற்கு அவர்கள் தயாரில்லை என்பதுதான்” என்று. ஏற்கனவே விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலத்தில், கனேடியத் …
-
-
- 4 replies
- 797 views
-
-
அரசமைப்புச் சபை சட்டபூர்வமானது. ஆனால், சட்டத்தின் நோக்கத்துக்கு முரணானது எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 பெப்ரவரி 27 புதன்கிழமை, மு.ப. 01:16 Comments - 0 நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தி, நாட்டில் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காகவென உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சபை, பெரும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் இரத்துச் செய்யப்பட்ட அரசமைப்புச் சபையை, 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம், மீண்டும் கொண்டு வருவதற்காக, 2015ஆம் ஆண்டு, பெரிதும் முயன்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே, அதை இப்போது, கடுமையாகச் சாடி வருகிறார். அதேவேளை, 2010ஆம் ஆண்டு, பழைய அரசமைப்புச் சபையை இரத்துச் செய்வதற்கு, மஹிந்த ராஜபக்ஷவுக்கு…
-
- 0 replies
- 649 views
-
-
ஜேவிபி பதில் கூறுமா? நிலாந்தன்! அனுரகுமார கவர்ச்சியாகப் பேசுகிறார். மேடையைத் தனது பேச்சினால் கட்டிப்போடவல்ல ஒரு பேச்சாளராக அவர் தெரிகிறார். இனப்பிரச்சினை தொடர்பாக, இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக அவர் கவர்ச்சியாகப் பேசுகின்றார். கனடாவிலும் அவர் அப்படித்தான் பேசினார். யாழ்ப்பாணத்திலும் அவர் அப்படித்தான் பேசினார். ஆனால் அவர் இதுவரை பேசிய அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால், ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. என்னவெனில், அவர் இனப்பிரச்சினையை, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை, எல்லாவற்றையும் மனிதாபிமானக் கண் கொண்டுதான் பார்க்கின்றார். மாறாக அவற்றுக்குரிய அரசியல் அடர்த்தியோடு, அரசியல் பரிமாணத்தோடு, அவற்றை விளங்கி வைத்திருக்கிறாரா என்று கேட்கத்தக்க விதத்தில்தான் இனப்பிரச்ச…
-
- 4 replies
- 449 views
-
-
தமிழரசுக்கட்சியை தொலைத்த வடக்கும், தேடியெடுத்த கிழக்கும்…! November 15, 2024 — அழகு குணசீலன் — தமிழ்த்தேசிய அரசியல் வடக்கில் மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ், வன்னி மாவட்டங்களில் தமிழரசு(2), காங்கிரஸ் (1), ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு(1), இணைந்து நான்கு ஆசனங்களை பெற்றுள்ளன. கிழக்கில். இதற்கு மாறாக மக்கள் பெரும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். தமிழரசு மட்டும் தனித்து ஐந்து ஆசனங்கள். இந்த முடிவு தமிழ்த்தேசிய அரசியலின் காப்பாளர்கள் யார்? என்ற கேள்வியை எழுப்புகிறது. வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், வன்னி தேர்தல் மாவட்ட முடிவுகளை பாருங்கள். யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் பழம்பெரும் தமிழரசுக்கட்சி வரலாற்றில் முதல் தடவையாக தென்னிலங்கை கட்சி ஒன்…
-
-
- 26 replies
- 1.3k views
-
-
88 வயதாகும் ஈழத்து வரலாற்று நாயகர் எசு. ஏ. தாவீது மறவன்புலவு க. சச்சிதானந்தன் தளரா நெஞ்சம். மருத்துவமனை கண்டிராத உடல். செருப்பணியாத கால்கள். திருமணமாகாத வாழ்க்கை. 1970 முதலாகக் காய்கறி உணவு. முகத்தை மூடும் வெள்ளை மீசையும் தாடியும். 88 வயதிலும் இரு மாடிகளுக்கும் படியேறி என் வீட்டுக்கு இன்று, புலர் காலை 0600 மணிக்கு வந்தவர், பெரியார் எசு. ஏ. தாவீது என நான் அழைக்க விரும்பும் எஸ். ஏ. டேவிட். 1970களில் வவுனியாவில் காந்தீயம் அமைப்புத் தொடங்கிய காலங்கள். மலைநாட்டில் துணை மருத்துவப் பணிகளில் ஈடுபட்டிருந்த இராசசுந்தரம், கொழும்பில் என்னிடம் வருவார். அவருடன் டேவிட் ஐயாவும் வருவார். கொழும்பு வைஎம்சீஏ விடுதியில் டேவிட் ஐயா தங்கியிருப்பார். அந்தக் கட்டட வரைபடத்த…
-
- 10 replies
- 1.5k views
-
-
ஒரு பரந்த ஜக்கிய முன்னணிக்கான சாத்தியப்பாடு இருக்கின்றதா? - யதீந்திரா ஒரு பரந்த ஜக்கிய முன்னணி தேவையான ஒன்றா என்று கேட்டால் – அதற்கான பதில் நிச்சயம் தேவை என்பதுதான். ஆனால் அதற்கான சாத்தியப்பாடு இருக்கின்றதா என்று கேட்டால், அதற்கான பதில் தெளிவற்றதாகவே இருக்கும். பெரும்பாலும் நம்பிக்கையீனமே வெளிப்படும். இதுதான் இன்றைய தமிழ் அரசியல் நிலைமை. ஏன் இவ்வாறானதொரு நிலைமை என்று கேட்டால் அதற்கு பதில் பலரிடடும் உண்டு ஆனால் அதனை எப்படி மாற்றியமைக்கலாம் என்று கேட்டால் எவரிடமும் பதிலில்லை. 2009இற்கு பின்னரான கடந்த ஒரு தசாப்தகால தமிழ் அரசியல் அணுகுமுறை முற்றிலுமாக தோல்வியடைந்துவிட்டது. 2009இற்கு பின்னரான தமிழ் அரசியல் அணுகுமுறையை இரண்டு காலகட்டங்களாக நோக்கலாம். ஓன்று, 2010 ஜனாதி…
-
- 0 replies
- 518 views
-
-
வரதரின்(2025) புதிய முயற்சிகள் July 19, 2025 — கருணாகரன் — ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளும் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இருவரும் ஒரு காலத்தில் பத்மநாபா தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ் என்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இயக்கத்தில் பொறுப்பான பதவிகளில் செயற்பட்டவர்கள். 1988 இல் வடகிழக்கு இணைந்த மாகாணசபையில் கூட முதன்மைப் பொறுப்புகளில் இருந்தவர்கள். பின்னாளில் வெவ்வேறு நிலைப்பாடுகளால் இருவேறு அணிகளாகியிருந்தனர். இப்போது கூட வெவ்வேறு அணிகளாக இருந்தாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இந்தச் சந்திப்பு தனிப்பட்டதல்ல. அ…
-
- 0 replies
- 153 views
-
-
தந்தை செல்வாவின் சரித்திரம் உணர்த்தும் உண்மை! தந்தை செல்வா நினைவுதினம்!! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் இன்றைக்கு தந்தை செல்வாவின் நினைவுநாள். தந்தை செல்வா காலமாகி முப்பத்தொன்பது வருடங்கள் ஆகிவிட்டது. 1977 ஏப்ரல் 26 அன்று தந்தை செல்வா காலமானார். இன்னும் ஒரு வருடத்தில் அவர் இறந்து நான்கு தசாப்தங்கள் ஆகப் போகின்றன. ஆனால் இப்போதுள்ள காலம் தந்தை செல்வாவின் காலத்தில் இடம்பெற்ற பேச்சுக்களும் சூழல்களும் கொண்டதுபோன்ற காலம். ஒரு வகையில் தந்தை செல்வாவின் காலம் என்றே இதனைச் சொல்லலாம். தந்தை செல்வா என்று ஈழத் தமிழ் மக்களால் அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் ஒரு அரசியல்வாதி மாத்திரமல்ல. அவர் ப…
-
- 0 replies
- 4.9k views
-
-
[size=4]மக்களோ, ஊடகங்களோ, அரசியல் வாதிகளோ இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பாகப் பெரிதாக அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை.[/size] [size=2] [size=4]அரசு சில குற்றவியல் கோவைகளைத் தூசி தட்டி மேசையில் போட அனைவரும் அவை பற்றிய வாதப் பிரதிவாதங்களில் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றனர். ஒரு நாட்டின் வரவு செலவுத் திட்டமென்பது அந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜை மீதும் ஏதோ ஒரு விதமான தாக்கத்தைச் செலுத்தும் என்பதை நாமறிவோம்.[/size][/size] [size=2] [size=4]இப்படியான திட்டங்கள் தயாரிக்கப்படும்போது பெரும்பாலான நாடுகள் வரவையும் செலவையும் சமன் செய்ய முடியாமல் திண்டாடுவதும் அவற்றைச் சரி செய்ய உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களை நாடுவத…
-
- 0 replies
- 593 views
-
-
முள்ளிவாய்க்கால் போன்ற பல துயர சம்பவங்கள் நடந்தேறியுள்ள நிலையில், தமிழர்களுக்கு விடுதலை வேண்டும் என குரல் கொடுக்கும் உலகெங்கிலும் உள்ள தமிழ் அமைப்பினைச் சார்ந்தவர்கள் நமது IBC தொலைக்காட்சி தளத்தில் ஒரே மேடையில் இணைந்து தங்களது கருத்துக்களை பதிவு செய்த நிகழ்வே நேருக்கு நேர்.
-
- 0 replies
- 552 views
-
-
இலங்கையால் ஜக்கிய நாடுகள் சபையிலிருந்து வெளியேற முடியுமா? - யதீந்திரா அண்மையில் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவித்திருந்த கருத்துக்கள் சர்வதேச ஊடகங்களில் அதிக கவனத்தை பெற்றிருந்தது. யுத்த வெற்றி நாயகர்களான இராணுவத்தினர் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதை தனது அரசு ஒரு போதும் அனுமதிக்காது. பலம்பொருந்திய நாடுகள் தங்களின் யுத்த வெற்றி வீரர்கள் மீது எவரும் அழுத்தங்களை பிரயோகிக்க அனுமதிக்க முடியாது என்று கூறகின்றன. எங்களைப் போன்ற சிறிய நாடுகளின் இராணுவத்தினர் அழுத்தங்களுக்கு ஆளாகின்றனர். அதனை எங்களால் அனுமதிக்க முடியாது. அவ்வாறு அழுத்தங்களை பிரயோகிக்கும் உலக அமைப்புக்களிலிருந்து விலகுவதற்கும் தான் தயங்கப் போவதில்லை என்று கோட்டபாய தனது உரையில் தெரிவித்திருந்தார். விடுதலைப…
-
- 0 replies
- 452 views
-
-
அடுத்த மாதம் அமெரிக்காவின் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விடயத்தில் கொண்டுவரவிருக்கும் பிரேரணை - கடந்த வருடம் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையைப் பார்க்கிலும் சற்று காரமானதாக அமையும்போல் தான் தெரிகிறது. இதுவரை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் ஐ.நா.வின் தீர்மானங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் வெளியிட்டு வரும் கருத்துக்களால் இது புலனாகிறது. தாம் இலங்கை தொடர்பாக இந்த வருடமும் ஐ.நா. மனித உரிமை பேரவையில் பிரேரணையொன்றை முன்மொழியவிருப்பதாக அமெரிக்கா இவ்வாரம் மீண்டும் வலியுறுத்தியிருந்தது. அத்தோடு அண்மையில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை - இலங்கை தொடர்பாக வெளியி…
-
- 1 reply
- 593 views
-
-
மாவீரர் வார அரசியல் தெய்வீகன் தமிழர் தாயகமெங்கும் ஆண்டுதோறும் மிகமுக்கிய வாரமாக அனுஷ்டிக்கப்படும் நவம்பர் 21 முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியை இப்போது மட்டுமல்ல எப்போதும் மாவீரர்களின் வாரமாகக் கடைப்பிடிப்பதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். அதனை எதிர்த்து, மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்கப்போவதாக வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அறிவித்திருக்கிறார். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகால கட்டங்களில், முக்கியமாக இந்திய இராணுவக் காலகட்டங்களில்தான் ‘மாவீரர் வாரம்’ என்ற இறந்த வீரர்களை நினைவு கூரும் முறையை விடுதலைப்புலிகள் அறிமுகம் செய்தார்கள். இறந்தவர்களை நினைவு கூருவது, அ…
-
- 0 replies
- 373 views
-
-
இன்னமும் தொடரும் மாவீரர் நாள் நடுக்கம் இன்று மாவீரர் நாள். ஆயுதப் போராட்டத்தில் உயிர்நீத்த, தமது போராளிகளை நினைவு கூருவதற்காக விடுதலைப் புலிகளால் 1989ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதே, இந்த மாவீரர் நாள். பிற்காலத்தில் விடுதலைப் புலிகள், தம்முடன் இணைந்து செயற்படாமல், தமிழரின் விடுதலைப் போராட்டத்துக்காக உயிர்நீத்த பலரையும் மாவீரர்களாக அங்கீகரித்திருந்தனர். ரெலோ அமைப்பை ஆரம்பித்த குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் போன்றவர்களும், ஈரோஸ் அமைப்பில் இருந்து போராடி உயிர்நீத்த போராளிகளையும் கூட விடுதலைப் புலிகள் மாவீரர்களாக அங்கீகரித்திருந்தனர். 1989ஆம் ஆண்டு தொடங்கி, விடுதலைப் ப…
-
- 0 replies
- 490 views
-
-
கொரோனாவுக்கு அரசியல் சிகிச்சை -எம்.எஸ்.எம். ஐயூப் புதிய மருந்துகளைக் கண்டு பிடிப்பதில், இலங்கைக்கும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் இடையே, பாரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. அபிவிருத்தியடைந்த நாடுகள், பல மாதங்களாக ஆய்வுகூடப் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர், களப் பரீட்சைகளிலும் ஈடுபட்டதன் பின்னரே, மருந்துகளைப் பொதுமக்கள் பாவனைக்கு அனுமதிக்கின்றன. இலங்கையில், புதிய மருந்துகள் முதலில் பொதுமக்கள் பாவனைக்கு விடப்பட்ட பின்னரே, ஆய்வுகூடப் பரிசோதனைக்கு விடப்படுகின்றன. இது, அரசாங்கம் எந்தளவு கவலைக்குரிய நிலைமையில் இருக்கிறது என்பதையே காட்டுகிறது. அமெரிக்காவில் ‘பைஸர்’ என்ற பல்தேசிய மருந்துக் கம்பனி, ஜெர்மனியில் ‘பயோஎன்டெக்’ எனும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இ…
-
- 0 replies
- 666 views
-