Jump to content

88 வயதாகும் ஈழத்து வரலாற்று நாயகர் எசு. ஏ. தாவீது


Recommended Posts

88 வயதாகும் ஈழத்து வரலாற்று நாயகர் எசு. ஏ. தாவீது

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

தளரா நெஞ்சம். மருத்துவமனை கண்டிராத உடல். செருப்பணியாத கால்கள். திருமணமாகாத வாழ்க்கை. 1970 முதலாகக் காய்கறி உணவு. முகத்தை மூடும் வெள்ளை மீசையும் தாடியும்.

88 வயதிலும் இரு மாடிகளுக்கும் படியேறி என் வீட்டுக்கு இன்று, புலர் காலை 0600 மணிக்கு வந்தவர், பெரியார் எசு. ஏ. தாவீது என நான் அழைக்க விரும்பும் எஸ். ஏ. டேவிட்.

1970களில் வவுனியாவில் காந்தீயம் அமைப்புத் தொடங்கிய காலங்கள். மலைநாட்டில் துணை மருத்துவப் பணிகளில் ஈடுபட்டிருந்த இராசசுந்தரம், கொழும்பில் என்னிடம் வருவார். அவருடன் டேவிட் ஐயாவும் வருவார்.

கொழும்பு வைஎம்சீஏ விடுதியில் டேவிட் ஐயா தங்கியிருப்பார். அந்தக் கட்டட வரைபடத்தைத் தயாரித்துக் கொடுத்ததால், அதற்குக் கட்டணம் வாங்காததால், அவருக்கு எப்பொழுதும் அங்கே ஓர் அறை.

1972 இலங்கை அரசியலமைப்பு, அதைத் தொடர்ந்த தமிழர் நிலை, இவை எம்மை இணைக்கும் பாலம்.

மலைநாட்டுத் தமிழரை வன்னியில் குடியேற்றும் காந்தியத்தின் முயற்சி. இராசசுந்தரம், டேவிட் இருவரின் இடையறா ஈடுபாடு, இதில் என் சிறிய பங்களிப்பு.

1977 இனக் கலவரத்துடன் கொழும்பைவிட்டு வெளியேறினேன். யாழ்ப்பாணத்தில் 1978இல் தந்தை செல்வா நினைவுத் தூண் கட்டியெழுப்பும் குழுவின் செயலாளராக நான். திராவிடத் தூணாக 80அடி உயரத்தில் அமையும் வரைபடத்தைத் தந்தவர் வி. எஸ். துரைராசா. மொட்டையாக நிற்காமல் கூம்பாக்கிக் கலசத்தில் முடிக்குமாறு டேவிட் ஐயா கருத்துரைத்தால் 100 அடியாக அத் தூண் உயர்ந்தது. கட்டி முடிக்கும் வரை யாழ்ப்பாணத்தில் இருந்தேன்.

1979இன் பின் இலங்கையை விட்டகன்றேன்.

வன்னியில் காந்தியம் டேவிட், இராசசுந்தரம் இருவரின் இடையறா முயற்சி. வன்னி நிலத்தில் வன்முறைசார் இளைஞர்களின் பயிற்சி நிலையங்கள். வெளிநாட்டில் வாழ்ந்த இவை எனக்குச் செய்திகள்.

1983 வைகாசியில் டேவிட் கைதாகிறார். இலங்கை அரசின் பனாகொடைப் படைமுகாமில் தடுத்து வைக்கின்றனர். காந்திய வாதி, காந்தியம் இதழின் ஆசிரியர் எனினும் கொழும்பு அரசுக்கு டேவிட் வன்முறையாளர்.

இரு மாதங்கள் பனாகெடையில், பின்னர் கொழும்பு, வெலிக்கடைச் சிறைச் சாலையில்.

1983 ஆவணியில் இனக் கலவரம். வெலிக்கடைச் சிறைச் சாலையில் கொடுமைகள். யாவும் டேவிட் கண் முன்னே. மயிரிழையில் உயிர் தப்புகிறார் டேவிட்.

வெலிக்கடையிலிருந்து மட்டக்களப்புக்கு மாற்றம். அங்கு இரு மாதங்கள். மட்டக்களப்புச் சிறைச்சாலையை உடைத்துக் கைதிகளைத் தப்பவைத்தவர்களுள் உள்ளிருந்த டக்ளசு தேவானந்தாவும் ஒருவர்.

தப்பிய இளைஞர் யாவரும் விரைந்து படகில் தப்ப, வயதான இவர் மட்டும் தனித்து நின்றதால், 20 நாள்கள் தலைமறைவு வாழ்க்கை. திருகோணமலை, கேரதீவு எனக் கரந்து பயணித்துத் தலைமன்னாரில் இருந்து தனுக்கோடி வந்தடைகின்றனர் டேவிட்டும் வேறு பயணிகள் பதினொரு பேரும்.

மார்பளவு தண்ணீருக்குள் இறங்கிய டேவிட், கரையேறி நடந்து இராமேச்சரம் வருகிறார். மாலைகள் சூட்டி வரவேற்பு. சென்னை வருகிறார். 28 ஆண்டுகள் சென்னை வாழ்க்கை.

1986இல் சென்னைக்கு நான் வந்தேன். மீண்டும் டேவிட் ஐயாவுடன் என் தொடர்பு. தொடக்கத்தில் சென்னையிலும் அவர் உயிருக்கு ஆபத்து. எனவே சில நாள்கள் அவர் தலைமறைவு வாழ்க்கை.

கடந்த சில ஆண்டுகளாகச் சென்னை திருவல்லிக்கேணியில் ஆனைமுத்து ஐயாவுடன் இணைந்து பணிபுரிகிறார். Periyar Era என்ற ஆனைமுத்து ஐயாவின் ஆங்கில இதழுக்கு மாதந்தோறும் இலங்கை நிலவரத்தை எழுதி வருகிறார்.

கடந்த பல ஆண்டுகளாக அவர் மாதமிருமுறை கட்டாயமாக எனதில்லம் வருவார். காலை உணவுக்கு வருவார். ஓட்சுக் கஞ்சியை அவருக்காக வைத்திருப்பேன்.

இன்றும் காலை வந்தார். அமெரிக்கரான பேராசிரியர் போயில் ஈழத் தமிழருக்கு ஆற்றி வரும் நன்மைகளை எடுத்துரைத்தார். இரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார், உணவருந்தினார்.

என் வீட்டுக்கு எதிர்ப்புறமாக உள்ள கன்னிமாரா நூலகத்துக்குச் செல்வதாகச் சொல்லி விடைபெற்றார். வரலாற்று நாயகன் அவர். 38 ஆண்டுகாலத் தொடர்பு. ஈழத் தமிழரின் நன்மையே நம் இருவரின் அடித்தள நாதம். 2012 ஏப்பிரல் 24இல் தனது 88 ஆவது பிறந்த நாள் எனக் கூறிச் சென்றார். மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்கிறேன். அவரது சந்திப்பைப் பதிந்தேன், பார்க்க, பகிர்க.

http://www.vallamai....articles/18680/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகோதா, இவர் பற்றிய செய்திக்குறிப்பை கடந்த பல வருடங்களுக்கு முன்பு இந்திய வாரப்பத்திரிகை ஒன்றில் வாசித்திருந்தேன். அண்ணாநகரில் ஒரு சிறிய அறையில் உலகின் பல தலைநகரங்களில் கடிடங்களுகான வரைபடங்களைத் தயாரித்தவர் என்ற தகவலும் கிடைத்தது தாயகத்தில் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகக்கொண்டவர். இறுதியாக கென்யாவில் (அனேகமாக) சிலபிரதேசங்களை அபிவிருத்திக்காக வடிவமைத்தவர்களில் இவரும் ஒருவர் எனவும் அந்த வேலையிலிருந்து விலத்திவரும்போது பெரும்தொகையினைப் பணமாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருந்தும் சிறிய ஒரு தொகையுடனேயே வெளியேறியதாகவும் அச்செய்தியில் வாசித்த ஞாபகம். குமுதம் அன்றேல் விகடன் இவற்றில் ஒன்றில் இவர்பற்றிய செய்தி வந்தது நிச்சயம். அனைத்தும் நினைவுச் சிதறல்களாகவே மனதில் பதிவாகி இருக்கின்றது. திரு சச்சி ஐயாவர்களுக்கு இன்னமும் இவரது விபரம் தெரியும். கூடிய விரைவில் அறியத்தருவார் என எதிர்பார்க்கிறேன். இணைப்புக்கு நன்றி அகோதா.

Link to comment
Share on other sites

எஸ். ஏ. டேவிட்

http://tawp.in/r/34j4

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். அருளானந்தம் டேவிட் (எஸ். ஏ. டேவிட்) கட்டடக் கலைஞர். இலங்கையில் மருத்துவர் இராஜசுந்தரத்துடன் இணைந்து காந்தியம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர்[1]. வவுனியாவில் 12 நவீன பண்ணைகள், நடமாடும் வைத்தியசாலைகள், பெண்களிற்கான பயிற்சி நிலையங்கள், சிறுவர்களிற்கான பால், திரிபோசா மா விநியோகம், சிறுவர்களுக்கு பாடஞ்சொல்ல ஆசிரியர்கள் எனப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர். மலையகத்திலிருந்த சில தொண்டர் நிறுவனங்களுடாக மலைநாட்டுத் தமிழரை வன்னியில் குடியேற்றுவதற்கு இவரது காந்தியம் அமைப்பு முன்னின்று உழைத்தது. ஏறத்தாழ 5000 மலையக மக்கள் வவுனியா, திருகோணமலை போன்ற தமிழ்ப் பிரதேசங்களில் இவ்வாறு குடியமர்த்தப்பட்டனர். புலம் பெயர்ந்து சென்னையில் வாழ்ந்து வருகிறார்.

1983 ஏப்பிரல் 7ஆம் திகதி ஈழப் போராளிகளான உமாமகேஸ்வரன், சந்ததியார் ஆகியோரைச் சந்தித்ததற்காகவும், இந்தியாவிற்கு அவர்களை தப்ப வைத்ததற்காகவும் டேவிட், மற்றும் மருத்துவர் இராஜசுந்தரம் ஆகியோரை இலங்கை இரகசியப் பொலிஸ் பிரிவினர் கைது செய்து பனாகொடை தடுப்பு முகாமில் தடுத்து வைத்தனர்[2]. இரு மாதங்கள் பனாகொடையில் தங்கியிருந்த டேவிட் பின்னர் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். சூலை 1983 இல் கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் போது வெலிக்கடைச் சிறையில் இடம்பெற்ற படுகொலைகளை நேரில் கண்டவர். மயிரிழையில் உயிர் தப்பினார்[1].

மட்டக்களப்பு சிறை உடைப்பு

வெலிக்கடையிலிருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார் டேவிட். இரு மாதங்கள் தங்கியிருந்த அவர் சிறைச்சாலை உடைக்கப்பட்டு தமிழ் அரசியல் கைதிகள் பலர் தப்ப வைக்கப்பட்ட போது இவரும் அவர்களுடன் வெளியேறினார். இவர்களுடன் வெளியேறிய இளைஞர்கள் அனைவரும் படகில் தப்பிச் செல்ல, வயதான இவர் மட்டும் தனித்து நின்றதால், கிட்டத்தட்ட 20 நாள்கள் திருகோணமலை, கேரதீவு எனத் தலைமறைவாக திரிந்து, இறுதியில் தலைமன்னாரில் இருந்து வேறு 11 பேருடன் தனுக்கோடி வந்தடைந்தார்.

தமிழ்நாட்டில் புகலிடம்

1983 ஆம் ஆண்டில் இருந்து சென்னையில் வாழ்ந்து வரும் இவர் சென்னை திருவல்லிக்கேணியில் ஆனைமுத்து அவர்களின் Periyar Era என்ற ஆங்கில இதழுக்கு மாதந்தோறும் இலங்கை நிலவரத்தை எழுதி வருகிறார்[1].

மேற்கோள்கள்

88 வயதாகும் ஈழத்து வரலாற்று நாயகர் எசு. ஏ. தாவீது, வல்லமை இதழ், மறவன்புலவு சச்சிதானந்தன்

www.tamilsguide.com

Link to comment
Share on other sites

சச்சிதானந்தம் ஐயா,

டேவிற் ஐயா பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி. அவர் மீது ஒரு உயர்ந்த நன்மதிப்பும் கௌரவமும் வைத்திருப்பவர்களில் நானும் ஒருவன். அவரோடு காந்தியத்தில் ஒன்றாக நாம் வேலை செய்த நாட்கள் மிகப் பசுமையானவை. காந்தியம் தொடங்கப் பட்டபோது டேவிட் ஐயா தலைவராகவும் இராசசுந்தரம் அமைப்புச் செயலாளராகவும் அடியேன் நிர்வாகச் செயலாளராகவும் கடமையாற்றினேன். அவரது அர்ப்பணிப்புக்கு இணையாக நான் இன்றுவரை வேறு யாரையும் இதுவரை சந்திக்கவேயில்லை.

அவரது கைதிற்குப் பின்பு நான் இது வரை அவரைச் சந்திகவேயில்லை. பல தொல்லைகளால் நானும் சாந்தி அக்காவுடன் லண்டன் சென்றிருந்த சமயம் டாக்டரின் தந்தை பிள்ளைகளுடன் நானும் இருந்தேன். அப்போதுதான் 1977 கலவரம் தொடங்கி அகதிகள் வந்திருந்தார்கள். அவர்களை டேவிட் ஐயாவின் வழிகாட்டலில் முதலில் பாலமோட்டைப் பண்ணையில் குடியேற்றினோம். ஐயாவின் தூரநோக்குச் சிந்தனை அபாரமானது. முன்பு ஒருமுறை கயவர்களால் அவர் மூர்க்கமாகத் தாக்கப்பட்ட செய்தியறிந்து கண்ணீர் விட்டேன். வேறு என்ன எம்மால் செய்ய முடியும். இன்று அவரை வீடியோவில் பார்த்ததிலும் கண்ணீர் விட்டேன். அவர் வாழுகின்றார் என்று சந்தோஷமும் அடைந்தேன். நான் இந்தியா அவரைச் சந்திக்க வேண்டும். தயவு செய்து எனது செய்தியை அவரிடம் தெரியப் படுத்தவும். அவரது விலாசமும் தொலைபேசி இலக்கமும் தந்தால் அவரோடு தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும். அவர் இன்னும் நீடு வாழ்ந்து எமது இனத்திற்குச் சேவைசெய்ய இறைவனை வேண்டுகின்றேன்

.

மு.பாக்கியநாதன்

Link to comment
Share on other sites

அற்புதமான ஒரு மனிதரைப்பற்றிய பகிர்வு. நன்றி அகூதா. முதலில் 'தாவீது' என்ற பெயரைப் பார்த்ததும்

யாழ். St. Patrick's கல்லூரியில் பணிபுரிந்த பன்மொழி அறிஞர் கலாநிதி தாவீது அடிகளாரின் நினைவு வந்தது.

அறிவார்வமும் எளிமையும் மிகுந்த அவருடன் பழகும் வாய்ப்பு பெற்றிருந்தேன். யாழ்நூலகம் எரிக்கப்பட்ட

அன்று அவரும் காலமானார்.ஒருவேளை, இவர் அவரின் உறவினராக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பதிவுக்கும் வரலாற்றிற்கும்

இவர்களின் காலத்தில் வாழ்ந்த பெருமை எமக்கு.

Link to comment
Share on other sites

டேவிட் ஐயா, சிறையிலிருக்கும் பொழுது அவரைப் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வரும்.

அகதிகளை வன்னியில் குடி அமர்த்துவதிலும் போராளிகளுக்கு பண்ணைகள் அமைப்பதிலும் முன்னின்றவர்.

'புளட்' இற்குள் நடந்த உற்கொலைகளின் பொழுது சந்ததியாருடன் சேர்த்து டேவிட் அய்யாவும் கொலை செய்யப்பட்டார் என்று சொன்னார்கள்.

அவரா இவர்?

Link to comment
Share on other sites

டேவிட் ஐயாவையும் சுடலை வரை கொண்டுபோய் பின் விட்டார்கள் படுபாவிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டேவிட் ஐயாவையும் சுடலை வரை கொண்டுபோய் பின் விட்டார்கள் படுபாவிகள்.

அப்ப..., அவர் உயிருடன் இருக்கிறாரா?

சந்தோசமான செய்தி அர்ஜூன்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

S_A_David_200.jpg

Solomon Arulanandam David (S.A. David), popularly known as Gandhiyam David, who presided the Gandhian movement which spread simple agriculture, self-sustenance, and importance to early education as a way of life in the deprived villages of Tamil Eelam for nearly a decade from 1972, reaches 88-years Tuesday as he spends his older years among his friends in Chennai. TamilNet extends its wishes to Mr David as it recognizes his unique and selfless contribution to Northeast Tamils and the hill-country Tamils displaced by Sinhala intimidation, riots and pogroms in the 1970s and 80s. David was assisted by another humanist of the 70s, the late Dr Rajasundaram. Rajasundaram was killed in the Welikade prison massacre in 1983, whereas his friend, David, escaped, re-incarcerated in Batticaloa jail to escape again in the famous Batticaloa jail break.

David's contribution in the history of the struggle of Eezham Tamils is that at the inception of the armed struggle he had conceived the importance of a grassroot civil movement to accompany it.

Threatened by the popularity of the spreading Tamil cultural consolidation and self-reliance in the most underdeveloped areas of the Northeast, and the opportunities presented to fleeing hill-country Tamils to begin life anew in the Northeast, Colombo framed charges against Mr David and Dr Rajasundaram under the Prevention of Terrorism Act (PTA) and jailed both, according to reports.

Dr Rajasunderam was killed in the Welikade Prison massacre of June 1983. Mr David escaped Welikade massacre, but was later taken to Batticaloa prison. Tamil prisoners decided to break out of the prison, and in the successful jail break, twenty prisoners escaped first, and Mr David was taken by a supporter through the jungles to Poonakari from where he found his way to Rameswaram by boat.

David has been living in exile in Anna Nagar in Chennai. He has been critical of how the Tamil refugees, who fled violence and repression in Sri Lanka, are being treated in India being denied of freedom of movement and right to citizenship.

Talking to TamilNet from his Anna Nagar Residence, Mr David said, "I appeal to the expatriate Tamils to continue the struggle in the Gandhian way to impose the moral responsibility on the leading Governments of the West to facilitate the birth of Tamil Eelam. There is no question in my mind that Tamils have the right to live freely in their own homeland.

"Studying Thirukkural is a must for the future generations of Eezham Tamils," Mr David said, reflecting his solid grounding on the Gandian principles that motivated his work with the Tamil people in Vanni in the 1970s.

Mr. David added, "I salute Professor Francis Boyle's contributions to our struggle, and when the time is appropriate I am certain that he will help our people to fight the legal battle in the International Court of Justice (ICJ), and in the International Criminal Court (ICC), if the Security Council accepts to take our case."

http://tamilnet.com/art.html?catid=13&artid=35117

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டேவிட் ஐயாவையும் சுடலை வரை கொண்டுபோய் பின் விட்டார்கள் படுபாவிகள்.

ஆதரங்களுடன் தகவல் தெரிந்தால்.............

யார் எப்போது எங்கே என்பவற்றையும் எழுதுவதுதான் ஒரு கருத்தோ அன்றி தகவலோ ஆகும்.

மலம் தின்ற பன்றிபோல் எந்த தலைப்பை போட்டாலும் வந்து வாந்தியுடுத்துவிட்டு. படிப்பு பற்றி பறை தட்ட வெட்கம் இல்லை?

ஒரு கருத்து களத்தின் அடிப்படை விதி கூட தெரியவில்லை. இந்த மிருக நிலை வாழ்விற்கு வக்காலத்து வாங்க படிப்பை இழுத்து எதற்கு அதை அசிங்கம் செய்யவேண்டு என்பது தெரியவில்லை.

ஒருவனுடைய நடத்தைதான் அவனது பண்பை பறைசாற்றும். இந்த வாந்தி பிழைப்பிற்கு இது தேவையா?

முடிந்தால் ஒரு கருத்து கள விதிகளுக்கு அமைந்து கருத்து எழுதலாம். அதுக்கு வாக்கு இல்லை என்பது எழுத தொடங்கிய போதே யாவரும் கண்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.